தலைப்புக்கேத்த சேதி மட்டும் போதும்னா இதே பதிவுல சிகப்பு நிறத்துல இருக்கிற பார்ட்டை மட்டும் படிச்சிருங்கண்ணா. காலச்சக்கரம் பத்தி ஒரு வினோதமான விதிய விவரிச்சு தனி பதிவு ஒன்னு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க
மாயா வெட்கமும் கோபமுமா சேம்பர் கதவை திறந்துக்கிட்டு வெளிய போனாள்.
அன்னைலருந்து 15 நாள் முன் போலவே லைப்ரரிங்க மேலயும் ,பப்ளிகேசன்ஸ் மேலயும் படையெடுத்தேன். ஒரு பக்கம் ஜோதிஷம் தொடர்பான புக்ஸ். இன்னொரு பக்கம் மனிதனோட எதிர்காலத்தை அதுலயும் டெசிஷன் மேக்கிங்கை நிர்ணயிக்கிற கான்செப்ட்ஸ் எதுவா இருந்தாலும் அது தொடர்பான புக்ஸ். ஜெனட்டிக் இஞ்சினீரிங், தியரி ஆஃப் கர்மா, சைக்காலஜி, மெடிசின் இப்படி சகல சாதிலயும் வாங்கினேன். ஜோதிஷம் சம்பந்தப்பட்ட புக்ஸை மூட்டை கட்டி வச்சுட்டேன்.
மத்ததையெல்லாம் விடியல்லயும், ஓய்வு நேரங்கள்ளயும் படிச்சி பார்த்தேன். ரஃபா ஒரு ஐடியா வந்தது. பேரன்ட்ஸ்,டீச்சர்ஸ்,கொலிக்ஸ், என்விரான்மென்ட், க்ளைமேட், ஒலி,ஒளி,ஸ்மெல், தொடுகை இப்படி ஹ்யூமன் மைண்டை பாதிக்கக்கூடிய கான்செப்ட்ஸ் என்னென்னனு ஒரு லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணேன். ஏண்டான்னா நாளைக்கு ஜோதிஷம்ங்கற கலர் என் மைண்ட்ல ஒட்டிக்கிட்டா இதெல்லாம் பெரிசா தோணாம போயிட கூடாதுல்லயா.
அப்புறம் தான் ஜோஸ்ய புஸ்தவங்களை எடுத்தேன். இந்த நட்சத்திரமா இதான் பலன் புடி, பலான ராசியா இதான் பலன் படி, இப்படியே லக்னத்தை பொருத்தும், கிரகங்கள் நின்றது பொருத்தும்,கிரகங்கள் சேர்ந்தது பொருத்தும் ஏராளமான பலன்கள், யோகங்கள், அரிஷ்டங்கள், சமஸ்கிருதம் நனைந்த சொல்லோவியிங்கள்.முதலில் அந்த ஒகாபலரியே புடிபடலை.
புது சப்ஜெக்ட்ல இறங்கரச்ச, புது பாஷை கத்துக்கறச்ச ஒரு டெக்னிக் யூஸ் பண்ணுவேன். அதுல பலான விஷயங்களை முதல்ல தேடிக்கிட்டே போவேன். அதே மாதிரி ஜோசியத்துலயும் பலான விஷயங்களை தேடி படிக்க ஆரம்பிச்சேன்.
சேம்பிளுக்கு ஒன்னு ( நீங்க நம்பமாட்டிங்க ஆனாலும் இது உண்மை) எந்த ராசி பெண் எந்த இடத்துல வயசுக்கு வருவானு ஒரு கான்செப்ட். நொந்து போனேன். இதை போய் எவ கிட்டே கேட்டு உறுதி படுத்திக்கறது. மாயாவ வேணம்னா கேட்டுரலாம் . பாட்டிய கேட்டா கட்டையால அடிப்பா.
ஜொள்ளு பார்ட்டிகளுக்காக மேலும் ஒன்னு ஒரு குறிப்பிட்ட கிரக நிலையில் பிறந்த பெண் எத்தனை ஆண்களூடன் கூடினாலும் திருப்தியடைய மாட்டாளாம். ஆண் உறுப்பின் வடிவத்தில் செய்யப்பட்ட கருவியை கொண்டே திருப்தியுறுவாளாம்.
ஜாதகத்தை வச்சு எவன் சுய இன்பம், எவன் ஹோமோ, எவன் ஓரல் செக்ஸு,எவன் அடுத்தவன் பெண்டாட்டியயே பார்ப்பான் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் விலாவாரியா இருந்தது.
எல்லாம் ஓகே. ஆனால் புஸ்தவம் சொல்ற பலன் எப்படி மெட்டிரியலைஸ் ஆகுது, எப்படி உண்மையில நடக்குதுங்கறதுக்கு தர்க ரீதியான ஒர்க் அவுட் எங்கேயும் கிடைக்கல.
நானும் உலகத்தலைவர்களோட பிறப்பு விவரங்களையெல்லாம் சேகரிச்சு ஆராஞ்ச்சிட்டேன். அக்கம் பக்கம், நம்ம கிட்டே வேலை செய்யறவன் இப்படி ஆராஞ்சி பார்த்ததுல கடந்த காலம் மட்டும் 70 சதவீதம் வரை உண்மைனு தோனுச்சு. ஆனால் முப்பது சதவீதம் பல்லை இளிக்குது. அதே நேரத்துல ஃப்யூச்சர் பத்தின கணிப்புகள் வெறும் முப்பது சதவீதம்தான் உண்மையாறத அடுத்த 6 மாசத்துலயே என்னால உணரமுடிஞ்சது. இந்த பரிகாரங்கள் விஷயமும் அதேதான்.
கிரக பலன் உண்மையாறதையே எப்படி உண்மையாகுதுனு அதுக்கான ப்ளூ ப்ரிண்டை கொடுக்க முடியாத பட்சத்தில் பரிகாரங்கள் எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு எப்படி எக்ஸ்ப்ளெயின் பண்ண முடியும்?
ஜோசிய புஸ்தவங்களை மறுபடி தூரவச்சேன். கண்ணுக்கு தெரியாத கிரகங்களை பக்கத்துல வச்சிட்டு சூரிய சந்திரர்களை பத்தி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன்.
சூரியனை பார்த்து தாமரை மலருது ஓகே. சூரியகாந்தி பூ சூரியனிருக்கிற திசைய நோக்கி திரும்புது. சரி.. தாமரைக்கும், மனித உடலுக்கும் எதுனா ஒற்றுமை இருக்கா? சூரிய காந்தி பூவுக்கும் மனித உடலுக்கும் எதுனா ஒற்றுமை இருக்கா?
சூரியன்ல இருந்து சோலார் பவர் கிடைக்குது, மாலை வெய்யில்லருந்து விட்டமின் இ கிடைக்குது, டெம்பரேச்சர் கிடைக்குது. கிருமிகள் சாகுது.மாலை வெய்யில் மாமருந்துங்கறாய்ங்க. இப்படி எத்தனையோ இருந்தாலும் டைரக்டா மனித உடல், மனிதனுடைய டெசிஷன் மேக்கிங் மெல சூரியனுடைய இம்பேக்ட் என்ன?
சூரிய ஒளி கிடைக்காதப்ப மனித உடல்,மனதோட செயல்பாடு என்ன?
சந்திரனை பார்த்தா அல்லி மலருதுங்கறாங்க. ஜோசியப்படி அவரு மனோகாரகர். சந்திர ஒளில (அதுலயும் பவுர்ணமி நிலவுல) காதல் ஊற்றெடுக்கும்ங்கறாங்க. படுத்த படுக்கையா இருக்கிற பேஷண்ட்ஸ், மன நிலை பாதிக்கப்பட்டவங்க பவுர்ணமி அமாவாசை சமயத்துல எப்படி இருக்காங்க.. அதுக்கு முன்னே பின்னே என்ன நிலைமை? இப்படி எத்தனையோ கேள்விகள். இந்த கேள்விகளுக்கு பதில் பெற நான் ரொம்பவே மெனக்கெட வேண்டி வந்தது.
(இந்த தொடர் இதே ரேஞ்சுல போனா மொக்கையாயிருங்கண்ணா! அதுனால ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ணி உடைச்சி திருப்பறேன் - சித்தூர்.எஸ்.முருகேசன்)
சூரிய சந்திரர்களை பற்றின ஆராய்ச்சில ஸ்தூல உலகத்தை வச்சே , சைன்ஸை ஆதாரமா காட்டியே நிறைய விஷயங்களை நிரூபிக்க முடிஞ்சது. மற்ற கிரகங்கள் சாயா கிரகங்களை பொருத்தவரை அந்த கிரகங்களோ எஃபெக்ட்ஸ் மனித உடல் மேல, மனசு மேல எப்படி வேலைசெய்யுதுனு தர்க ரீதியா, கெஸ் பண்ண முடிஞ்சது. உ.ம்: ராகு கேதுன்னா விஷம் . மனுஷ உடம்புல விஷம் எப்படி வரும்? அந்த விஷம் ராகு,கேது நல்ல நிலையில உள்ளவுகளை ஏன் பாதிக்கறதில்லை. சர்ப்பதோஷம் உள்ளவுகளை மட்டும் ஏன் பாதிக்குது எப்படி பாதிக்குது . செவ்வாய்க்கும் கோபத்துக்கும் என்ன சம்பந்தம்/ இப்படி நிறைய கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்க , ரிஷிகள்,மகரிஷிகள் தங்களோட தவப்பயனால அறிஞ்சு போட்டு வச்ச கோட்டோவியங்களுக்கு வண்ணம் பூச முடிஞ்சது. அது ஒரு புது உலகமா என் முன்னாடி விரிஞ்சது. ஓரளவு மருத்துவம், மனோதத்துவம், ஆந்த்ரபாலஜி மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத சப்ஜெக்ட்ஸ்ல எனக்கிருந்த மினிமம் பேலன்ஸ் தனமான் அறிவு இந்த ஆராய்ச்சிக்கும் ரொம்ப உதவுச்சு.
அதே சமயத்துல மனுசன் கிரகங்கள் கையில பொம்மை இல்லைன்னு ஸ்தாபிக்கவும், வெற்றிக்கு தனி மனிதனோட முயற்சி, போராட்டம் கூட தேவைனு நிரூபிக்கவும். மனிதன் நினைச்சா கிரகங்களுக்கே பாய்லா காட்டி ஏமாத்தி சாதிக்கமுடியும்னு ருசுப்படுத்தவும் அனேக ஆதாரங்கள் எனக்கு கிடைச்சது.
இந்த ஹடாவுடில ( அடாவடிங்கற பிரயோகம் தப்பு. அர்த்தமும் தப்பு தம்பிங்களா! ஹடாவுடின்னா வேகம், பரபரப்புனு அர்த்தம்) மாயாவுக்கு எனக்கும் லேசா கேப் விழ ஆரம்பிச்சுருச்சு.
நான் பிளாட்ஃபாரங்கள், அமரராகிவிட்ட போன தலைமுறை ஜோசியர்களின் வீடுகள் இந்த மாதிரி இன்னும் பல பாயிண்ட்ஸ்ல இருந்து பிக் அப் பண்ண புஸ்தவங்களை சரோஜா தேவி நாவல் மாதிரி படிச்சிக்கிட்டு குறிப்பெடுத்துக்கிட்டிருக்கிறத பார்த்து
மாயா அப்பப்போ கலாய்ப்பா.
"ஆராய்ச்சில உனக்கு இருக்கிற இன்டரஸ்ட் எனக்கு ஏன் வரமாட்டேங்குது?"
" நான் தான் சொன்னேனே ஆராய்ச்சிங்கறதென்ன உண்மைய சுத்தி இருக்கிற ஆடைய உருவறது. நிர்வாணப்படுத்தறதுல ஆணுக்கிருக்கிற இன்டரஸ்ட் பெண்ணுக்கு இருக்காது கண்ணு.. உடலுறவு சமயத்துல கூட ஆண்தான் பெண்ணை நிர்வாணப்படுத்தி பார்க்க துடிப்பான். அவன் நிர்வாணமாவே இருந்தாலும், தன்னை நிர்வாணப்படுத்தினாலும் பெண் எந்த நிர்வாணத்தையும் பார்க்கிறதில்லை. கண்ணை மூடிக்கிறா.."