Thursday, March 18, 2010

உனக்கு 22 எனக்கு 32 - தொடர் கதை

திருமணமாகி பத்து நாட்களுக்கு பிறகு சிக்கன் சென்டர் மாடி அறையில் முதலிரவுக்கு பின் தொடர் கதை தொடர்கிறது

" நீ முதல்ல போய் நீ போட்டுட்டிருந்த ஜீன்ஸ், ஷர்ட் எல்லாத்தயும் தண்ணில ஊறவச்சிட்டு குளிச்சுட்டுவா. உனக்கு ஒன்னு சொல்றேன்"

"  மாயா .. நீ சின்னப்பசங்களுக்கு ஆசை காட்டி வேலை வாங்கற மாதிரி ரொம்பவே இம்சை பண்றே.. வேணாம்.. நமக்கு ஏ சமாச்சாரம்னா தான் இன்டரஸ்ட். அதுக்கு குளிச்சுட்டு வரத்தேவல்ல, என்னவோ பாட்டிங்க சமாச்சாரம்தான் சொல்லப்போறே அதுக்கு ஏன் இத்தனை பில்டப்"

"த பார் நீ போய் குளிச்சிட்டு வரே. இல்லேன்னா உன் கிட்டே நான் பேசவே மாட்டேன்"

மாயாவோட குரல்ல தெரிஞ்ச உறுதி என்னை பணிய வச்சது. சூட் கேஸ்ல இருந்து ஒரு லுங்கிய எடுத்துட்டு போய் குளிச்சுட்டு அதாலயே துவட்டிக்கிட்டு மார் வரைக்கும் கட்டிக்கிட்டு வந்து உட்கார்ந்தேன்.

"ச்சீ என்னடா இது விடிய காலம் குளிர்ல கூலிக்காரன் மாதிரி. ஒழுங்கா கட்டு அப்பதான் சொல்வேன்"

"அடடா இதென்னாடா பாதி ராத்திரி இம்சை"ன்னு போலியா சலிச்சுக்கிட்டே லுங்கிய இறக்கி கட்டிக்கிட்டு கிட்டே போனேன்.

மாயா கட்டில்ல சப்பணங்கட்டி உட்கார்ந்துக்கிட்டு தன் மடிய காட்டி "இப்படி வந்து படு"ன்னா

எனக்கு ஒன்னுமே புரியல. இருந்தாலும் என்னை ஈ ஸி பண்ணிக்க "என்ன கொஞ்சம் கூட ரசனையே இல்லாம இருக்கியே இப்படி சுத்தி வச்ச குர்ல் ஆன் பெட்டுக்கு கவர் போட்ட மாதிரி நைட்டிய போட்டுக்கிட்டு மடில படுத்து என்ன பண்றது, இதுவே சேலையா இருந்தா.. வேட்டூரி எழுதினப்பாட்டுக்கான அர்த்தத்தை யோசிக்கலாம்"னேன்.

" அதென்ன பாட்டு?"

அபஸ்வரமா பாடினேன்." நீ கோக நச்சிந்தி நீ ரைக நச்சிந்தி கோகா ரைகா கலவனி சோடா சோகு நச்சிந்தி"

( உன் சேலை பிடிச்சிருக்கு, உன் ரவிக்கை பிடிச்சிருக்கு. சேலையும்,ரவிக்கையும் சந்திக்காத இடத்துல அழகு பிடிச்சிருக்கு)

ஒரு செகண்ட் என்னையே பார்த்த மாயா என்னை இழுத்து நெத்தில முத்தமிட்டு தன் நெஞ்சோட சேர்த்து அணைச்சிக்கிட்டா. என் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்துட்டு "முகேஷ்!. நான் ஒன்னு சொன்னா கோச்சுக்கமாட்டியே"ன்னா.

"இந்த பொசிஷனை டிஸ்டர்ப் பண்ணாம நீ அல்ஜீப்ரா கூட சொல்லு கேட்கிறேன்"னேன்

"உன்னாட்டமே ஒரு பையன் வேணும் எனக்கு"

"இது ரொம்ப மோசம். எவளோ அரச மரத்தை சுத்திட்டு அடி மடிய தொட்டு பார்த்துக்கிட்டாளாம் அந்த கதையால்ல இருக்கு. இப்பத்தானே முயற்சி பண்ணியிருக்கோம். பொறு மகளே பொறு .."

"இல்லடா உன்னை என்னென்னமோ பண்ணனும்னு தோணுது. ஆனால் நீ அஞ்சு வயசுல எனக்கு கிடைச்சிருக்கனும். நௌ டூ லேட்"

"  என்ன நீ அல்ஜீப்ரா வேணம்னா சொல்லுன்னேன். அதுக்காக இப்படி குழப்பறதா?
அஞ்சு வயசுலல்லாம் ஒன்னும் செய்யமுடிஞ்சிருக்காதும்மா. வேணம்னா மடில படுத்து தூங்கியிருக்கலாம் . தட்ஸால்"

"சரி இப்ப உனக்கே அஞ்சு வயசுனு வச்சுக்கயேன். பேசாம என் மடில படுத்து தூங்குவியாம்"

"உனக்கொன்னு சொல்லட்டா.. இதே பேச்சை நானா கேட்கறதா இருந்தேன். "

"  என்ன சொல்றே"

"ஆமாம் .மாயா.. என்னமோ கரு கட்டிக்கிட்டு உன்னை கலைச்சேனே தவிர. அந்த சமயத்துல கூட எதுக்கு இந்த இம்சை பேசாம இவ மடில படுத்துக்கிடக்காமனு ஒரு செகண்ட் தோணுச்சு"

"அதுக்குதான் போல ஆம்பளய விட பொண்ணுக்கு வயசு கம்மியா இருக்கனும்னு ஒரு சிஸ்டம் வச்சாங்களோ என்னமோ?"

"அய்யய்யோ ஆரம்பிச்சுட்டயா... ஒரு மனைவி தன் கணவனுக்கு தாயா கூட இருக்கலாம் தெரியுமா? சமஸ்கிருதத்துல ஒரு ஸ்லோகமே இருக்கு. போஜேஷு மாதானு. என்னடா ஒரு லொள்ளுன்னா சயனேஷு ரம்பான்னிட்டான். சாப்பாடு போடறப்ப அம்மாவா இருக்கனுமாம். படுத்துக்கறப்ப மட்டும் வேசியாயிரனுமாம். எனக்கு 23 மணி நேரம் அம்மாவா இரு . ஒரு மணி நேரம் மட்டும் சும்மா இரு மிச்ச கதைய நான் பார்த்துக்கறேன். புதுக்கவிதை சினிமால வர பாட்டு மாதிரி நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை. ஸோ நாமா ஒரு இலக்கணத்தை ஏற்படுத்திக்கிடலாம். என்ன சொல்றே டீலா நோ டீலா"

"இது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்டா.. ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி மாதிரி மன நோய் ஏதாச்சும் வந்துர போவுது. ஒன்னு பண்ணுவமா 6 நாள் அம்மா . ஒரு நாள் ச்சும்மா"

"ச்சும்மா இல்லே உம்மா  "

"சரி தொலையட்டும்."

" இப்ப நீ அம்மாவா உம்மாவா"

"அம்மா"

"கஷ்ட காலம்டா சாமி .. பரவாயில்லை . இன்னைக்கு போட்ட ஆட்டமே 6 நாள் தாங்கும்.அந்த பக்கம் எப்படினு தெரியலை. சரி  இப்ப நான் உன் மகனா? நான் என்ன பண்ணனும் சொல்லு"

"என் மடில படுத்துக்கனும்"

மாயா மடியில் படுத்துக்கொண்டேன். அவள் மெல்ல முன்னுச்சி மயிரை கோதிவிட்ட படி

" முகேஷ்.! உன் கிட்டே ஸ்பார்க் இருக்கு. நீ பெரிய ஆளா வளர்ந்து வரனும்"
"இனிமே டெய்லி காம்ப்ளான் சாப்பிடவா.. காம்ப்ளான் வளரும் பிள்ளைகள் வளருகிறார்கள் இரண்டு மடங்கு"
"இந்த வால்தனம் எனக்கு பிடிச்சிருக்கு.இல்லேங்கலை. வால் தனம் விளையாட்டுங்கறதுல்லாம் டயர்டாயிட்டப்ப ரிலாக்ஸ் பண்ணிக்க. இப்ப நீ என்னத்த கிழிச்சிருக்கேனு ரிலாக்ஸேஷன்"
"பார்த்தயா இந்த 23 வயசுக்கு டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ரன் பண்றேன். ஸ்டுடியோ வச்சிருக்கேன். லோக்கல் பேப்பர் நடத்தறேன். இன்னும் என்ன சாதிக்கனும்"

"இது எல்லாம் வெறும் பொழப்பு ராஜா!  ..வாழ்க்கைல பெரிசா எதுனா சாதிக்கனும். "யானை படை கொண்டு சேனை பல வென்று ஆள பிறந்தாயடா..புவி ஆள பிறந்தாயடா."

"படைன்னு சொல்ல முடியாது. ஏதோ ஒன்னை மாத்திரம் தேத்தி வச்சிருக்கன். அதுவும் குட்டிதான்.............ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கிள்ளாதே சீரியஸ். என்னதான் பண்ணனுங்கறே. சொல்லி தொலையேன்"

"அது என்னன்னு எனக்கும் தெரியலை..ஆனால் நீ பெருஸ்ஸா சாதிக்கனும். இந்த நாட்டுக்கே ராசாவாகனும்.."

"கிழிஞ்சது போ.. ராசான்னா யு மீன் பி.எம்? ஒரு எம்.பிஆகனும்னாலே சாதாரண தொகுதியிலயே ரெண்டு கோடி வைக்கனும்.(கதை 1988ல நடக்குதுங்கண்ணா). இதுல பி.எம்மா?"

"தத் ! எடுத்ததுமே அச்சாணியமா பேசிக்கிட்டு. நானென்ன நாளைக்கே ஆயிரனும்னா சொல்றேன் -ஆயிரம் ஆண்டுகள் போகட்டுமே .. நம் பொறுமையின் பெருமை விளங்கட்டுமே"

"ஆத்தாடீ.. மனுஷன் ஆயுசே 100 வருஷம் தான். எவனும் நூறு வருஷம் வாழறதில்லை. 50 இல்லன்னா 60. இதுல 23 வருஷம் ஃபணாலாயிருச்சு. மிச்சம் மீதி காலத்தை ச்சும்மா நிம்மதியா இந்த மாதிரி ஒரு நாட்டுக்கட்டை மாட்டியிருக்கே.. என்னதான் என்னதான் வாரத்துல ஒரு நாள்தான்னாலும் .. தூள் பண்ணலாமில்லே. அதை விட்டுட்டு சா............திக்கறதாம்.. என்னத்த சாதிக்கிறது?"

" நீ ஒன்னத்தயும் சாதிக்க வேண்டாம். உனக்கு கிடைச்ச இந்த வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கிற மாதிரி செய்யனும்"

"அதாவது எல்லாரும் பத்து வயசு மூத்தவளா பார்த்து பிக் அப் பண்ணுங்கனு பிரச்சாரம் பண்ணனுமா?"

"தூ.. நான் அதை சொல்லலே..நீ எத்தனையோ பெண்கள் கூட பழகியிருக்கே.. அதுல பல விதமான பெண்கள் இருந்திருப்பாங்க . ஆனாலும் நீ இதுவரை பெண்ணினத்தை வெறுக்கல"

"யம்மாடி.. எவளோ ஒருத்தி 'கை' கொடுத்ததுக்காக எவனாச்சும் பெண்ணினத்தை வெறுத்தா அவன் சரியான ஆண் இனம் இல்லேனு அர்த்தம். சுஜாதா சொன்ன மாதிரி வீரியம் புரள்றப்ப லேடி டாக்டர் கூட அழகாதான் இருப்பா"

"இல்லே முகேஷ்! நீ சொல்ற நிலைல எவள் மேலயோ கடுப்புல கிடைச்ச பொம்பளைய  வெறுமனே பொம்மையா வச்சு உபயோகிச்சுக்கிற ஆண்கள் கூட இருக்காங்க"

"அய்யய்யோ .. உனக்கும் ஃப்ளாஷ் பேக்கா?"

"எரிச்சலை கிளப்பாதே.. எனக்கு நாலு அக்கா. அவங்க வாழ்க்கைய க்ளோஸா பார்த்திருக்கேன்"

"அவ்ளதானா.. நீ என்னவோ ஃப்ளாஷ் பேக் சொல்லப்போறேனு த்ரில்லாயிட்டேன்"

"என் மாமனுகளை அவனுக பண்ற டார்ச்சரை பார்த்து எனக்குள்ள எல்லாமே வத்தி போச்சு..  நமக்கு இனி ஆம்பள சகவாசமே கூடாதுங்கற மன நிலைக்கு வந்துட்டன்"

"அது சரி அப்ப பொம்பளைங்க கிட்டே  எனக்கு கிடைச்ச பிட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்கு
நானெல்லாம் கை மணி மாதிரி வாழ்ந்துட்டிருக்கனும்"

"இதென்ன புது பிரயோகம்? கை மணி .. காங்கிரஸ் காரரா?"

"ஹும்.. என் கூட இத்தனை வருஷம் சகவாசம் பண்ணியும் நீ கெட்டே போகலை. கை மணின்னா தன் கையே தனக்குதவினு வாழ்ந்துர்ரது. மாஸ்டர்பேஷன்"

"ச்சீ.."

"ஆமா இது ஒரு வார்த்தைய வச்சிக்கிட்டு காலத்தை ஓட்டிருங்க. ஒரு சின்ன உண்மைய சொன்னாலும் ச்சீ நீ ரொம்ப மோசம்..னிட்டு வெட்க படறது"

"ஷிட் ! நீ ரொம்பவே டைவர்ட் பண்றே.. நீயே சொன்னே பிட்டர் எக்ஸ்பீரியன்ஸஸ் இருக்குனு அதையும் மீறி பொம்பளைங்க விஷயத்துல எப்படி பாசிட்டாவாவே இருக்கே"

"சர்தான்.. மீன் சாப்பிடறப்ப கூட முள்ளு மாட்டிக்கும் அதுக்காக மீன் சாப்பிடறத விட்டுர முடியுமா என்ன? "

"முகேஷ்! டோண்ட் பி சில்லி .. சீரியஸா சொல்லு"

"நத்திங் மாயா.. இயற்கையே பெண்ணுக்கு சில விஷயங்கள்ள எதிரா இருக்கு. மேலும்  இது மேல் ஷேவனிஸ்ட் சொஸைட்டி. ஃபிசிக்கல் வீக்னெஸ் அது தர்ர அபத்திர பாவம், சர்வைவல் பிராப்ளம்ஸ், ஷி ஈஸ் டிப்பெண்டன்ட். இதெல்லாம் அவளோட முடிவெடுக்கிற திறமைய ரொம்பவே எஃபெக்ட் பண்ணுது . உண்மைய பார்க்க பயம், அதை அவாய்ட் பண்றதுக்காக ஹிப்பாக்ரஸி. இதையெல்லாம் நினைச்சி பார்த்தா பொம்பள பண்ற தப்பை அது எவ்ளோ பெரிய தப்பா இருந்தாலும் மன்னிக்கத்தான் தோணும். அப்படி மன்னிக்க அவன் உண்மையான ஆணா இருக்கனும். என்னடா சோகம்னா ஆம்பளைல நிறைய பேரு ஃபீமலிஷா இருக்கான். தன்னை அவளுக்கு சமமா நினைச்சிக்கிட்டு அவள் என்னவோ செய்துட்டா என் வாழ்க்கையே போச்சுனு அலட்டுவாங்க."

"அப்போ பொம்பளைய விட ஆம்பள உசத்திதான்ங்கறே.."

"நான் ஆம்பளனு மொட்டையா சொல்லல. சரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்யான ஆம்பளன்னேன். இப்ப  நானெல்லாம் ஆம்பளயே கிடையாது .ஆனால் சரிய்ய்ய்ய்ய்ய்ய்யான ஆம்பளைய அட்மைர் பண்றவன்.யத் பாவம் தத்பவதிங்கற மாதிரி சரிய்ய்ய்ய்யான ஆம்பளையா வாழனும்னு நினைச்சு, நடிச்சு அந்த நடிப்பே  நிஜமாகி கொஞ்சம் கொஞ்சமா மாறினவன்"

"அப்போ ஆம்பள சரிய்ய்ய்ய்யான ஆம்பளையா மாறிட்டா பிரச்சினையே வராதுங்கறே"

"ஆங் அஸ்கு புஸ்கு. பொம்பள சரிய்ய்ய்ய்ய்ய்ய்யான பொம்பளையா மாறனும்"

"அதெப்படி?"

"ஜஸ்ட் நீ இருக்கேல்ல உன்னை மாதிரி மாறனும்"

"இல்லடா பொம்பள பிறப்பு பத்தி உனக்கு தெரியாது.அவள் வயித்துல விழுந்த க்ஷணத்துல இருந்தே ஹைப்பர் டென்ஷன். இது பொட்டைக்குட்டியா இருந்தது நீ உன் அம்மா வீட்டுக்கு நிரந்தரமா பார்சலாயிரனுங்கற வாய்ஸ்ல இருந்து வாழ் நாள் பூரா துக்கம்தாண்டா. துக்கத்துல இருக்கிறவ எப்படி மத்தவகளை மட்டும் சந்தோசப்படுத்த பார்ப்பா?"

"இதுக்குத்தான் எங்க தலைவர் சொத்துரிமை கொடுத்து வச்சிருக்கார், விமன் யூனிவர்சிட்டி வச்சாரு."

"யாரு என்.டி.ஆரை சொல்றியா?"

"யெஸ்"

"இதெல்லாம் போதாதுரா கண்ணா .. ஏ பி சி டிலருந்து மாத்தனும்."

"ஒரு பொன்மொழி எடுத்து விடவா.... ஒருத்தர் கடவுள் கிட்டே வேண்டினாராம். கடவுளே!  மாத்த முடிஞ்சத மாத்தற சக்திய கொடு. மாத்த முடியாததை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போற மென்டாலிட்டிய கொடு. எதை மாத்த முடியும், எதை மாத்த முடியாதுங்கற ஜட்ஜிங் கெப்பாசிட்டிய குடு"

"அப்போ இதெல்லாம் மாத்த முடியாத விஷயங்கறியா?"

"இல்லியா பின்னே.. ஜீன்ஸ்ல மட்டுமில்லே, சரித்திரத்துல மட்டுமில்லே, புராணத்துல கூட சரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்யான ஆம்பள இல்லே. இல்லாம பண்ணிவச்சிருக்காங்க. அம்மனுக்கும் அய்யனுக்கும் நாட்டிய போட்டி நடக்குதாம். அம்மன் ஈக்வலா ஆடி தூள் கிளப்பிருச்சாம். உடனே அய்யன் என்ன பண்ணாராம் தெரியுமா ? வலது காலை இடது காது வரை தூக்கி  சர்க்கஸ் பண்ணி காதுல இருந்த கடுக்கனை கழட்டி மாட்டிக்கிட்டாராம்.அம்மன் அப்படி தூக்கமுடியாம வெட்கப்பட்டு தோத்து போயிருச்சாம். இதே இன்னைக்குன்ன்னா அம்மன் சல்வார் கமீஸ்ல இருந்திருக்கும். போடா மயிருன்னு மாறி மாறி  ரெண்டு காலையும் , ரெண்டு காது வரை தூக்கி ரெண்டு கம்மலையும் கழட்டி மாட்டியிருக்கும்.  நானே பரமசிவனா இருந்திருந்து பார்வதி என்னை போட்டிக்கு கூப்டிருந்தா - கண்ணு நீ ஆட பிறந்தவ. நான் ரசிக்க பிறந்தவன்.. நீ ஆடு நான் பார்க்கிறேன்னிருப்பேன்"


" நோ முகேஷ்! எல்லாம் மாறனும்.. மாத்தனும்.   இந்த நாட்ல எந்த பையனும் பொம்பளைய வெறுக்க கூடாது. எந்த பொண்ணும் ஆம்பளைய வெறுக்க கூடாது. நீ சொன்னயே ஈஸ்வரன்.. அவரே தன் உடல்ல பாதிய தன் மனைவிக்கு கொடுத்து வச்சிருக்காரு. அது மாதிரி  ஆண்,பெண் இரண்டற கலந்து வாழனும்"

"ஆமா .. பாதிய  குடுத்தாரு பாதிய  குடுத்தாருங்கறாங்க. இதெல்லாம் ஒரு உருவகம்டி செல்லம்!  ஒவ்வொரு ஆண்லயும் பெண்மை இருக்கு. ஒவ்வொரு பெண்லயும் ஆண்மை இருக்கு. இதை சிம்பாலிக்கா சொல்லியிருக்காங்க தட்ஸால். இந்த நிலைய  ப்ராக்டிக்கலா உணர்ந்து மக்கள் தங்களை மாத்திக்கிட்டு  நடைமுறைல ஒரு மாற்றம்  வரனும்னா ரொம்ப கஷ்டம் நாம ஜஸ்ட் இந்த டாப்பிக்கை டிஸ்கஸ் பண்ணவே இந்த எக்ஸிஸ்டன்ஸ் (நன்றி:ஓஷோ) எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கு தெரியுமா?  இப்போ எங்கம்மாவே கேரக்டர் சரியில்லாத பார்ட்டினு வை .. நான் எப்படி பொம்பளைய வெறுக்காத இருப்பேன் .உன் கிட்டே இந்த டாபிக்கை டிஸ்கஸ் பண்ணுவேன்.  இப்ப உங்க அப்பாவே ஊருக்கு ஒரு குட்டிய வச்சிக்கிட்டு உங்கம்மாவ மிதிச்சிருந்தாருனு வை நீ எப்படி ஆம்பளைய வெறுக்காத இருப்பே..இந்த சப்ஜெக்டை ரெய்ஸ் பண்ணியிருப்பே  இதெல்லாம்  ஜஸ்ட் ஆக்சிடெண்ட். இதெல்லாம் வாழ்க்கைல அபூர்வம் மேடம் ! ஒரு விதி விலக்கு. இந்த விதி விலக்கே விதியாகனும்னா  ஜீரோலருந்து ஆரம்பிச்சு எல்லாத்தயும் மாத்தனும். இதெல்லாம் ஆவறதா ? சாவறதா?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீதான் மாத்தனும். "

"இதென்னடா வம்பா போச்சு. நல்ல காலம் ஃபர்ஸ் நைட் முடிஞ்சுருச்சு. நீ எல்லாத்தயும் மாத்தின பிறவுதான் முதலிரவுன்னு சொல்லியிருந்தா நான் காலமெல்லாம் அஸ்கலித பிரம்மச்சாரியா வாழ்ந்திருக்கனும்"

"தூ ..பொய் சொன்னாலு பொருந்த சொல்லனும் நீ அஸ்கலித பிரம்மசாரியா.."

"அட ஒரு பேச்சுக்கு சொன்னேம்மா.."

"சரி இப்பயே மணி பன்னெண்டாகுது . படு. காலை எந்திரிக்கனும்லியா?"

"சரி ஒரு தம் போட்டு படுத்துரலாம்"
" நத்திங் டூயிங். நீ எங்கயும் போகக்கூடாது"ன்னிட்டு என்னை இழுத்து தன் பக்கத்துல படுக்க வச்சிக்கிட்டா .

சென்னைல இருந்த பதினைஞ்சு நாளும் இதே டாப்பிக் தான். சகட்டுமேனிக்கு ஆயில் புல்லிங்க், யோகாசனம், இயற்கை வைத்தியம், பிராணயாமம், சுய முன்னேற்றம் , அது இதுனு புக்ஸ் வாங்கினா.என்னென்னவோ கருவிகள்,களிம்புகள், எண்ணெய்கள். மூலிகை பொடிகள்.

பி.ஆருக்கும் ஏனோ மாயாவ ரொம்ப பிடிச்சி போச்சு. சிக்கன் சென்டரா ப்யூட்டி பார்லரானு கன்ஃப்யூஸ் ஆயிர்ர ரேஞ்சுக்கு வால் பேப்பரும், ரூம் ரெஃப்ரெஷுமா என்னென்னவோ பண்ணி வேலைக்கார பசங்களுக்கு யூனிஃபார்ம், தொப்பி,க்ளவுஸுனு கொடுத்து அவிக கூட மாயா மேடம் மாயா மேடம்னு ஜபிக்கிற அளவுக்கு பண்ணிட்டா. சில ஹோட்டல் காரங்க சிக்கன் வாங்கின அமவுண்ட்டை செட்டில் பண்ணாம இருக்க தானே ஃபோன் பண்ணி ரிமைண்ட் பண்ண ஆரம்பிச்சா. அந்த பில்ஸும் ஒழுங்குபட ஆரம்பிச்சது. சிக்கன் வாங்க வரவங்க கூட இப்பத்தான்பா லட்சுமி கடாட்சமா இருக்குனு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இவ என்னை பண்ற ஒவ்வொரு இம்சைக்கும், சிங்க நாதத்துக்கும் பி.ஆரும் "எங்க வீட்லயும் இப்படிதான்"ன்னு இது இப்படியே கன்டின்யூ ஆகனும்னு வாயெல்லாம் பல்லா சொல்ல ஆரம்பிச்சார். ஒரு வழியா ஸ்ரீதர் தன் நார்த் இண்டியா டூரை முடிச்சுக்கிட்டு வந்தார்.

கடைல நுழைஞ்சதும் ஏம்பா நம்ப கடைதானா இது. இல்லே அட்ரஸ் மாறி வந்துட்டேனான்னிட்டே வந்தார். மாயா செய்திருந்த ஒவ்வொரு மாற்றத்துக்கும் சூப்பரா கீதுபா இதெல்லாம் நமக்கு தோணலயே. தூளா கீதுபா இதெல்லாம் ஏம்பா நமக்கு ஸ்ட் ரைக் ஆகலேன்னிக்கிட்டே இருந்தார்.

என் கிட்டே ஏம்பா முகேஷு! இனி வருஷம் ஒரு தடவையாச்சும் வந்து பத்து நாள் தங்கிட்டு போங்க என்ன? இவ்ளோ நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நானும் இங்கனே இருந்திருப்பேனே.. மாயா ! தேங்க்ஸ்மா.. இனி ஒவ்வொரு நாளும் உன்னை நினைக்காம இருக்க முடியாதும்மா.

இதோ இவனும் இருக்கான். பத்து வருசமா இருக்கான். ஒரு நாளாவது டே அப்டியில்லடா இப்படி பண்ணலாம்னு சொல்லியிருப்பானா? வந்த மாட்டை கட்டாம போன மாட்டை தேடாம பத்து வருஷம் ஓடிட்டான். அடடே அந்த ஹோட்டல் காரன் பாக்கிய காந்தி கணக்குல எழுதி வச்சிருந்தேம்மா அதை கூட வசூல் பண்ணியிருக்கே.. வெரி குட். ஊருக்கு புறப்படற நேரம் வந்துருச்சி. ஸ்ரீதருக்கு எங்களை அனுப்பவே மனசில்லே. ரொம்ப பரபரப்பா இருந்தாரு. எப்போ கடைக்கு போனாரு எப்ப வாங்கிட்டு வந்தாருனு தெரியலை மாயாவுக்கும் எனக்கும் ட்ராக் சூட்டும், ஷூசும் ப்ரசண்ட் பண்ணாரு. "என்னசார் இதெல்லாம்? அப்படியும் அவளுக்கு வாங்கி தந்தா ஒரு அர்த்தம் இருக்கு. எனக்கு எதுக்கு ட்ராக் ஸுட்டு"ன்னேன்.

"அவங்க இறங்கனும் நீ ஏறனும் வெயிட்டு"ன்னாரு . பேக்கிங் முடியறவரை காசி கயிறு, காசி தீர்த்தம், சாமி படம் அந்த பிரசாதம் இந்த பிரசாதம், வெள்ளி குங்கும பரணினு கொடுத்துக்கிட்டே இருந்தார். எவ்ள மறுத்தாலும் விடலை. மதியம் சாப்பாட்டுக்கு பிறகு பஸ் ஸ்டாண்ட் வரை வந்து பஸ் ஏத்தி பஸ் கிளம்பற வரை இருந்து டாடா காட்டிட்டுதான் ரெண்டு பேரும் போனாங்க. கடைசியா ஸ்ரீதர் திரும்பி பார்த்தப்ப அவர் கண்ணை துடைச்சிக்கிறத பார்த்தேன். பக்கத்துல உட்கார்ந்திருந்த மாயாவ புதுசா பார்த்தேன்.

பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி லகேஜுகளோட ஸ்டுடியோ போய் இறங்க அப்பா" என்னடா இது.. போறப்ப ரெண்டு சூட் கேஸுதானே கொண்டு போனிங்க. இதென்ன அதுங்க போட்ட குட்டிகளா"னு நக்கலடிச்சார். நான்" ஹும்.. இது ட்ரெயிலர் தான் . மெயின் படம் லாரி சர்வீஸ்ல வருதுன்னேன். ஸ்டுடியோ மாடிக்கு போய் ரெஸ்ட் ரூம்ல ரெஃப்ரெஷ் ஆகி வந்து ரொட்டீன்ல இறங்கிட்டோம்.இடையிடையே அப்பா ஊர் விசேஷங்களை சொல்ல நாங்க சென்னை அனுபவங்களை சொல்ல பொழுது போனதே தெரியலை. ராத்திரி எட்டரை ஆகவும் "டே.. இதுக்கு மேல ஒரு இழவும் இருக்காது.. கிளம்பலாம்"னிட்டாரு அப்பா.

வீட்டுக்கு போய் சாப்பாடு கடைய எடுத்து வச்சிட்டு மாயா ஹாலுக்கு வந்தா. பைகளை பிரிச்சு இதை அங்கே வை.. அத இங்கே வைனு ஆர்டர் பண்ணிக்கிட்டிருக்க.. அப்பாவுக்கு இதெல்லாம் புதுமையா இருந்திருக்கனும்.

"என்னம்மா இதெல்லாம்"னாரு.

மாயா," அங்கிள்.. நீங்களோ நானோ நினைக்கிற அளவுக்கு உங்க மகன் காமன் மேன் இல்லே . அவர் கிட்டே ஸ்பார்க் இருக்கு. அதை வெளிய கொண்டுவரப்போறேன்"

"பார்த்தும்மா இவன் ஆல்ரெடி ஆஞ்சனேயர் மாதிரி நீ எங்கனா ஸ்பார்க்கை ஊதி பெரிசாக்கி வாலுக்கு நெருப்பை வச்சிர போறே.. இவன் ஊரை கொளுத்திருவான்"

"அதெல்லாம் ஒன்னும் நடக்காது அங்கிள்..நீங்க அனுமதி கொடுத்தா இவனை சாரி இவரை ஒரு லெஜண்டாக்கி காட்டறேன்"

"என்னவேணா ஆக்கும்மா. என்னால முடிஞ்ச வரை முயற்சி பண்ணிட்டேன். நாய் வாலை நிமிர்த்த முடியாதுனு விட்டுட்டன்"

"அங்கிள் .. இனிமே நம்ம வீட்ல சில சிஸ்டம்ஸ் கொண்டுவரலாம்னு இருக்கேன்"

" நானும் பாட்டியும் , ஓல்டேஜ் ஹோமுக்கு போயிரனுமா?"

"ச்சீ ஏன் அங்கிள் இப்படியெல்லாம் பேசறிங்க. முகேஷ் தான் இப்படி வெகண்டையா பேசறானு பார்த்தா நீங்களும் அப்படியே இருக்கிங்க. இந்த பேச்செல்லாம் உங்க கிட்டேருந்துதான் வந்தாப்ல இருக்கு"

"சரி சரி பொறுப்பை நீ ஏத்துக்கறேங்கறே.. கோபம் வரத்தான் செய்யும். நான் அம்பேல் நீ சொல்ல வந்ததை சொல்லு"

" நம்ம வீட்ல இனி யாராயிருந்தாலும் காலைல நாலரைக்கெல்லாம் எந்திரிச்சுரனும்.
முதல்ல ப்ரஷ் பண்ணிட்டு ஆயில் புல்லிங் , பிராணயாமம், அப்புறம் யோகாசனம். நான் அடிஷ்னலா வாக்கிங். டீ,காஃபி எல்லாம் கேன்சல் . அதுக்கு பதிலா ராகி மால்ட்.இனி சமையலெல்லாம் மண் பாண்டங்கள்ளதான் செய்யனும். அரிசி கைக்குத்தலரிசிதான். அதுவும் வாரத்துல ஒரு நாள் தான் அரிசி. மத்த நாள்ள கம்பு,கேழ்வரகு,சோளம் எட்செட்ராதான். முடிஞ்சவரை எல்லாத்தயும் பச்சையா சாப்பிடனும். டால்டா, நெய் எல்லாம் பேன். முகேஷுக்கு மட்டும் ரிலாக்ஸேஷன்"

அப்பாவுக்கு ஒன்னுமே புரியலை. என்னை பார்த்து "என்னடா இதெல்லாம் என்ன ஆச்சு? கண்ட கழுதைகளோட குலாவி எல்லாத்தயும் தீர்த்துட்டயா.ன்"னாரு.சிரிச்சிக்கிட்டே.

"யப்போய் வருசத்துக்கு ரெண்டு ஹனி மூன் பார்த்த பார்ட்டிக்கு பிறந்தவன் . புலிக்கு புலிதான் பிறக்கும் ..இவள் ஒரு பைத்தியம். மண்டையெல்லாம் மண்ணு அத்தை இவ தலைல போட்ட விஷ விதை ஆளுயரத்துக்கு வளர்ந்துருச்சு. இவளுக்கும் எனக்கும் வயசு வித்யாசமிருக்கில்லே. அதனால நான் சீக்கிரமா செத்துருவனு கற்பனை பண்ணிக்கிட்டாப்ல இருக்குது. நான் சத்தியவான் ,இந்தம்மா சாவித்திரி எமனோட ஃபைட் பண்றாங்க. எமன் வெர்ஸஸ் உமன்"

அப்பா,"என்னம்மா.. இவன் சொல்றது நிஜமா?"ன்னாரு.

மாயா, " இல்லே அங்கிள்.. முகேஷ் ..பெரிசா எதுனா சாதிக்கனும். ப்ரஷ் இருந்தாதேனே பேஸ்டு. வெறுமனே பிஸ்தா மாதிரி பீத்திக்கிட்டு புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருக்க கூடாது.. இந்த ஸ்டுடியோ,டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ், லோக்கல் பேப்பரோட நின்னுர கூடாது. அதுக்கு முகேஷ தயார் படுத்தப்போறேன். அதுக்கு உதவ நானும் தயாராக போறேன். உங்களையும் தயார் படுத்தப்போறேன்"

அப்பா,"டேய்.. சீக்கிரமா இந்த பொண்ணை தாயார் படுத்திரு. இல்லாட்டி நமக்கெல்லாம் ஆப்புதான்"னார்

ஹால் சுவரெல்லாம் எங்க சிரிப்பு மோதி எதிரொலிச்சது. மாயா, "வா வெட்டறே"ன்னு சைகை காட்டினாள்