Monday, March 29, 2010

கிராமத்துல வளர்ந்த குட்டி

மாயா ஒரு குழந்தைக்கு தாயானதுமே அவளுக்குள்ள தந்தை பாசத்துக்கு ஏங்கற சிறுமி காணாம போயிட்டா. ஏற்கெனவே மதர்லி ஃபீச்சர்ஸ் இருந்த மாயா இப்போ எங்கப்பாவுக்கு கூட ஏன் பாட்டிக்கு கூட அம்மாவாவே பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. அதை அவிகளும் ரெகக்னைஸ் பண்ணதுதான் ஆச்சரியம். பாட்டி சதா தன் மகளையே தியானம் பண்ற பார்ட்டி. அட ஒரு கருவாடு செய்தா கூட "ஹும்.. அந்த ராணி பொண்ணுக்கு நெத்திலி கருவாடுன்னா உயிரு .அதுக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்"னு புலம்பற பார்ட்டி. ஆனால் போகபோக அதுவும் வீடு துர்கா காலனிக்கு மாறின பிறகு மகளோட வருகை குறைஞ்சிக்கிட்டே போயிருச்சு. ஆட்டோவுக்கு இருபது ரூபா கொடுத்தா வீட்டண்டை விடுவான். அஞ்சு ரூபா கொடுத்தா காலனி என்ட் ரன்ஸ்ல விட்டுருவான். ஆனா அரை கி.மீ நடக்கனும். அத்தை சுகவாசி. நடக்க மாட்டாள். போக வர நாற்பது ரூபா ஆயிருமே.. மிஞ்சி போனா பாட்டி காய்,கறி அது இதுனு குடுத்து அம்பது ரூபா கொடுப்பாள். வரவும், செலவும் சமானமுன்னு நினைச்சாளோ இல்லே தன்னால முடிஞ்சவரை என்னென்னவோ சகுனி வேலையெல்லாம் பார்த்தும் பத்த வச்சது எதுவும் எரியாத போயிட்டதேனு வெறுப்போ தெரியாது தன் என்ட் ரிய குறைச்சுக்கிட்டே வந்துட்டா. மேலும் அத்தைக்கு வாயா வார்த்தையா பேசத்தான் தெரியுமே தவிர கையால ஒரு வேலையும் செய்ய தள்ளாது.

மாயா கிராமத்துல வளர்ந்த குட்டிங்கறதால அஞ்சரைக்கெல்லாம் எந்திரிச்சுருவா. பரபரனு வீட்டு வேலைகளை சூப்பர் வைஸ் பண்ணிக்கிட்டே தானும் குளிச்சு ரெடியாயிருவாள். இது என் வேலை, இது என் வேலையில்லைங்கற பாவத்து எல்லாம் இல்லை. மரியாதையா ஒரு தடவை சொல்லிப்பார்ப்பா இல்லேன்னா தானே களத்துல குதிச்சுருவா. உடனே அப்பாவோ நானோ அலறியடிச்சுட்டு செய்யனும். இதையெல்லாம் பார்த்து பார்த்து பாட்டிக்கு அத்தை மேல அத்துப் போச்சு. எப்பயாச்சு வந்தா "மாயா! ராணி வந்திருக்கா என்னன்னு பாரும்மான்னிட்டு ஸ்ரீராமை கொஞ்ச ஆரம்பிச்சுருவா.

நானும்,மாயாவும் காலைல ஆஃபீஸ் போனா ராத்திரி எட்டரை வரையாவது இருந்து ஸ்டுடியோ, டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ், பத்திரிக்கை வேலை எல்லாத்தையும்
பார்த்து செட் ரைட் பண்ணிக்கிட்டே இருப்போம். எல்லாம் சுமுகமா ஓடிக்கிட்டிருந்தது.

அரசியல்ல பார்த்தா சந்திரபாபு கவர்ன்மென்டை ஏதோ ப்ரைவேட் லிமிட்டட் கம்பெனி மாதிரி நடத்த ஆரம்பிச்சாரு. ( சந்திரபாபுவோட ஆட்சி அவலத்தை பத்தி நாளைக்கு தனிப்பதிவே போட்டுர்ரேன். ஏன்னா அது பெரிய க(வ)தைங்கண்ணா)


1999 தேர்தல் வந்தது .லோக்கல்ல இருக்கிற தெ.தே லீடர்ஸ் ஜகனை பத்தி கண்டதையும் சொல்லி பாபுவை கிளப்பி விட்டுட்டாங்க போல. மேலும் கடந்த தேர்தல்ல மாவட்டத்துக்கெல்லாம் சேர்த்து எதிர்கட்சிலருந்து ஜெயிச்ச ஒரே எம்.எல்.ஏ வா இருந்ததால ஆட்டோமேட்டிக்கா இவரை ஸ்டேட் ப்லிட் பீரோலயே டார்கெட் பண்ணாங்க.

தேர்தல் நேரத்துல ஸ்பெஷலா போலீஸை குவிச்சு, ஷேடோ பார்ட்டி அந்த பார்ட்டி இந்த பார்ட்டினு செமர்த்தியா லொள்ளு பண்ணிட்டாரு. தேர்தல் நேரத்துல கூட அவரா பாக்கெட்ல இருந்து பத்து ரூபா எடுத்து செலவு பண்ணதில்லை. எல்லாமே ஃப்ரெண்ட்ஸ் ,ஃபாலோவர்ஸ்தான் பார்த்துப்பாங்க. அதையெல்லாம் மீறி ஜெயிச்சு வர்ரதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. ஜகன் பாடு தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்ங்கற மாதிரி ஆயிருச்சு. இருந்தாலும் ஜெயிச்சுட்டாரு.மேலும் ஜகன் ஃபுல் டைம் பொலிட்டிஷியன். அவருக்குன்னு எந்த தொழிலோ வியாபாரமோ கிடையாது. அப்பா காலத்து மாவு மிஷின் ஒன்னிருக்கு அப்பா காலத்துலருந்து .மார்க்கெட் கேட் கலெக்சன் காண்ட் ராக்டிருக்கு. அதை கூட வேற யாரோ தான் பார்த்துக்கறாங்க. இருபத்து நாலு மணி நேரமும் ஜனம் ஜனம்னு ஜனம் நடுவுலயே கழிக்கிற பார்ட்டி. ஏதோ பூர்விக சொத்துக்கள் மட்டும் இருந்ததாலே அரசு தரப்புல சந்திரபாபு வால கூட அவருக்கு பெரிசா பிரச்சினை கொடுக்க முடியலை.


அதுக்குள்ள நம்ம பர்சனல் லைஃப் டப்பா டான்ஸ் ஆடற கண்டிஷன் ஆயிருச்சு. அப்பா ரெண்டாவது தடவையா ரிட்டையர் ஆகியிருந்தாரு. பாட்டிக்கு வீல் சேரே உலகம். மாயாவுக்கு ஸ்ரீராமே உலகம். ஸ்டுடியோவ பார்த்துக்கற சந்தீப், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை பார்த்துக்கற மீரா, தன்ராஜ் எல்லாமே அவங்க வேலைய மட்டும் கரெக்டா பார்க்கிற பார்ட்டிங்க. அதுக்கு மேல அவிகனால ரோசிக்க முடியாது. லோக்கல் பேப்பர் விஷயத்துல மட்டும் அதீத கவனம் செலுத்தி பிரச்சாரத்துக்கு சகட்டு மேனிக்கு உபயோகிச்சுக்கிட்டேனே தவிர மத்ததெல்லாம் க்ரோத் ரேட்டே இல்லாம ஃப்ரீஸ் ஆயிட்டிருந்தது.ஒரு நார்த் இண்டியா டூர் ப்ரோக்ராம் போட்டதுல அமாவாசைனு நினைச்சு அமாவாசைக்கு மறு நாள்ள இருந்து ஸ்டார்ட் ஆறாப்ல போட்டுட்டிருக்காங்க. 52 சீட்டுக்கு 21 சீட்டுதான் ஃபில் அப் ஆகி, குட் வில் அடிவாங்கிரக்கூடாதுனு பிடிவாதமா போய் டூர் கண்டக்ட் பண்ணதுல 1 லட்ச ரூபா காலி. ட்ராக்ஸ் அனுப்பியிருக்காங்க. புக் பண்ண பசங்க ரோக்ஸ். ட்ரைவரை அடிச்சி போட்டுட்டு ட்ராக்ஸை எடுத்து கிட்டு கண்டபடி சுத்தி ரோட்டோர மரத்துல இடிச்சு ஆக்சிடெண்ட் பண்ணி அது தனி கதை.


தேர்தலுக்கு முன்னான இந்த 3 மாச இடைவெளில மாயாவுக்கும், எனக்கும் இடையிலே ரொம்பவே இடைவெளி. செக்ஸுங்கறது ஏதோ உடல் சூட்டை , டென்ஷனை தணிக்கிற உபாயமாவோ குற்றமனப்பான்மைல இருந்து ரிலீவ் ஆறதுக்கான செயலாவோ இருந்ததே தவிர பழைய இன்டிமசி எல்லாம் இல்லை. என்னமோ பெரிசா சாதிக்கனுங்கற வெறில செய்த முயற்சியெல்லாம் தோத்து போய் டீலாயிட்ட பிறகு தான் எதையெல்லாம் இழந்து திரிஞ்சோம்னு உறைச்சது. மாயாவும் ரொம்பவே ஏங்கி போயிருந்தாள். மாயாவா, கடமையானு கொஞ்சம் ஊசலாடி சரி முதல்ல கடமைய முடிப்போம்னு வரிஞ்சு கட்டி இறங்கினேன்.

ஸ்டுடியோ,ரூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் விவகாரங்கள்ள புகுந்து வந்ததுல பதினஞ்சு நாள் போனதே தெரியலை. எல்லாத்தயும் செட் ரைட் பண்ணிரனுங்கற வெறி. அப்பா கூட "ஏண்டா உனக்கு நார்மலா ஒர்க் பண்ணவே தெரியாதாடா.. ஒன்னு கண்டுக்கவே மாட்டே இல்லேன்னா ஒரேயடியா இறங்கி குட்டைய குழப்புறது ..டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் கண்ணா"ன்னு கமெண்ட் அடிச்சாரு.

என் மனசுக்குள்ள ஒரு பிக்சர் வந்துருச்சு. ஸ்டுடியோ வேணம்னா கேல்குலேட்டட் ரிஸ்க். ஆனா டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல எல்லாமே ரிஸ்க் தான்.

அப்பாவுக்கு சொன்னேன்

"அப்பா! டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை ஊத்தி மூடிரலாம்னு இருக்கேன்."
"என்னடா திடீர்னு ஓகோ அந்த ஒரு லட்ச ரூபா நஷ்டத்துக்கு பயந்துட்டியா?"
"பயமா? அதுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது. சின்ன தப்புக்கு ஒரு லட்ச ரூபா நஷ்டம்னா யோசிக்க வேண்டிய விசயமில்லியா?"
"எவனோ ஏரிக்கு பயந்து கழுவாம போனானாம் . அந்த கதையா இருக்கு"
"அதுக்கு இல்லப்பா .. இத்தனை நாள் நீ இருந்தே நீ ஃப்ரண்ட் ஃபார் ஆல். எனிமி டி நன். ஆனால் நான் ஒரு கலரை பூசிக்கிட்டேன். நம்ம சொத்தை ரோட்டு மேல அனுப்பிட்டு வயித்துல நெருப்பு கட்டிக்கிட்டிருக்க முடியாது "
"பின்னே என்ன பண்ண போறே எல்லாத்தயும் வித்துட்டு பேங்க்ல போட்டுட்டு வட்டி வாங்கி சாப்பிட போறியா?"
"அந்தளவுக்கு நான் கோழையில்லேப்பா.. பேசாம அப்பார்ட்மெண்ட் ஒன்னு கட்டி வாடகைக்கு விடப்போறேன்."
"அப்பார்ட்மெண்டா? உனக்கென்ன பைத்தியமா? இது சித்தூர்ரா"
" எல்லா சிற்றூரும் ஒரு நாள் நகரமாகித்தான் தீரும். நாம கொஞ்சமா முந்திக்கனும் தட்ஸால்"
" நீ அப்பார்ட்மெண்ட் கட்டறப்ப மட்டும் எதிர்கட்சி ஆளும்கட்சியாயிருமா?'
"நகராட்சி இன்னும் காங்கிரஸ் கைலதானே இருக்கு"

"எப்படியோ போய் தொலை. ஸ்டுடியோவ வச்சிக்கிரமாதிரிதானே"
"அதுல என்னப்பா ரிஸ்கிருக்கு. என்ன கொஞ்சம் கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரானு அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்"
"சரி சரி .. அப்படியே இந்த பேப்பர் விஷயத்துல உன் ஆஸ்தான ப்ரிண்டர் கிராஃபிக் ரவி நிறையவே திருடறான். அவனாலயே ரொம்ப டென்ஷனாயிருதுனு மாயா சொல்றா"
"அந்த விஷயத்துலயும் கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டியிருக்குப்பா. லெட்டர் ப்ரஸ் எல்லாம் அவுட் டேட்டட் ஆகிட்டு வருது . அதையும் ஆஃப்செட் ப்ரிண்டுக்கு மாத்திர வேண்டியதுதான். வேணம்னா ஜாப் வொர்க் கூட செய்யலாம்"
"எல்லாம் சரி . மறுபடி நீ தேர்தல் பிரச்சாரம்னு போயிட்டா எப்படி?"
"அதுக்கு இன்னம் அஞ்சு வருஷம் இருக்கில்ல"

அப்பாகிட்டே க்ரீன் சிக்னல் வாங்கி என் பிரப்போசலையெல்லாம் மெட்டீரியலைஸ் பண்றதுக்குள்ள ரெண்டு 4 வருஷம் ஓடியே போயிருச்சு. அப்பார்ட்மெண்ட் விஷயத்துல ஆறு மாசம் வரை கொஞ்சம் உதறலாவே இருந்தது. கண்டுக்கற நாய்களே இல்லை. முத முதல்ல கிருஷ்ணா ஜுவெலர்ஸ் காரர் அட்வான்ஸ் பண்ணாரு. அதற்கடுத்து படபடனு புக் ஆயிருச்சு. நமக்கு ஜோசியம், வாஸ்துல இருக்கிற பரிச்சயம் பத்தின பிரச்சாரமும் இந்த பிசினஸுக்கு நல்லாவே உதவுச்சு. உற்சாகமா அடுத்த வென்சரை ஆரம்பிக்கலாமானு யோசிக்கிற சமயத்துல மாயா தடை போட்டா.

"இந்த வியாபாரம் வேணான்டா.."
"ஏன் மாயா?"
"அப்பார்ட்மெண்ட் கட்ட ஆரம்பிக்கிறப்ப கட்டிட வேலைக்கு வந்தாங்களே. ஆணும்,பெண்ணும், குஞ்சும் குளுவானுமா அவங்களுக்கு வீடு வாசல் எல்லாம் யார் கட்டி வைப்பாங்க. கட்டி வச்சாலும் அதை வாங்க அவிக கிட்ட காசு ஏது?"
"அது அவிக தலையெழுத்து .. ஒவ்வொரு மேஸ்திரி என்னா கூலி வாங்குறான் தெரியுமா? எல்லாத்தையும் குடிச்சே அழிச்சுர்ரான்"
"அதுல குடிக்காதவங்க எத்தனை பேர் இருப்பாங்க தெரியுமா? எத்தனை நாள் வேலையில்லாம இருப்பாங்க தெரியுமா? மேலும் நீ என்ன அவங்களை டைரக்டா வேலைல சேர்த்துகிட்டயா? இல்லியே. காண்ட் ராக்ட் தான் விட்டே. காண்ட் ராக்டர் என்ன கூலி தருவான்னு உனக்கு தெரியுமா?"
"இது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.."
"வெறுமனே யோசிச்சா போதாது முகேஷ் எதாச்சும் செய்யனும்"
"என்ன செய்யலாம் சொல்லேன்?"
"அவங்களுக்குனு ஒரு அப்பார்ட்மெண்ட் கட்டேன். சின்னதா,சிங்கிள் பெட் ரூம் இருந்தாலும்.. எல்லா வசதியும் இருக்கிறாப்ல கட்டேன்"
"கட்டலாம் ... அதுல ட்ரங்கர்ஸ் இருப்பாய்ங்க. அவனுகளோட எவன் ஏகறது?"
"ஏன் ஜகன் சாரை கன்சல்ட் பண்ணேன். அவர் ஏதாச்சும் ஐடியா கொடுப்பாரு"

ஜகனை சந்திச்சு இந்த பிரப்போசலை சொன்னேன். திகைச்சு போயிட்டாரு. ஐடியா என்னவோ சூப்பர் ஐடியா தான் . இதுல நான் என்னப்பா செய்யமுடியும்? என் கிட்டே காசு கீசு கிடையாதே"

"அய்யய்யோ உங்க கிட்டே காசு கேட்கலை சார். என் கிட்டே இருக்கிற இன்வெஸ்ட்மென்ட்ல முதல் கட்டமா 500 குடும்பத்துக்கு ப்ளேஸ்மெண்ட் கொடுக்கலாம். இதுக்கு நீங்க செய்யவேண்டியது என்னன்னா உங்களுக்கிருக்கிற பப்ளிக் ரிலேஷன்ஸை வச்சு டவுனுக்கு அஞ்சாறு கிலோ மீட்டர் தூரத்துல மலிவான விலைல சைட் ஏற்பாடு பண்ணலாம். கட்டிட தொழிலாளர்களை மொபிலைஸ் பண்ணி ஒரு சங்கமா ஏற்படுத்தி அந்த சங்க நிர்வாகிகளே பெனிஃபிஷியரீஸை செலக் பண்ணி லிஸ்ட் தராப்ல பண்ணலாம்."

"இதெல்லாம் நான் செய்யறேன்பா இல்லேங்கலை. ஆனால் நான் எதிர்கட்சி. அரசாங்க எனக்கு தொல்லை கொடுக்கிறதா நினைச்சு உனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிச்சுட்டா தாங்குவயா?"

"இதெல்லாம் நகராட்சி சம்பந்தப்பட்டது. அது உங்க கைல தானே இருக்கு"

"அதெல்லாம் அதிகாரிங்க பார்த்துக்கறாங்க"

" நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. "

"பரவால்ல சொல்லு"

"நீங்க முதல் தடவை சுயேச்சையா ஜெயிச்சப்ப பம்பர் மெஜாரிட்டி, ரெண்டாவது தடவை கட்சி டிக்கட் கொடுத்தப்ப என்.டி.ஆர் அலைலயும் சுமாரான மெஜாரிட்டி வந்தது . ஆனா இப்போ ?"

" நீயே பார்த்தல்லப்பா..நம்மாளுங்களை போட்டு பிசிஞ்சு எடுத்துட்டாங்க.."

" நீங்க சொல்றதும் நிஜம் தான். ஆனால் ஃபைனான்ஷியலா கூட நிறைய பிராப்ளம் ஃபேஸ் பண்ண வேண்டியிருந்தது.."

"கரெக்டுதான் அந்த நேரம் பார்த்து நம்மாளுங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை"

"அப்படினு நீங்க நினைக்கிறிங்க.. நீங்க ஒரு ரேஸ் குதிரை மாதிரி. உங்க மேல பணம் கட்டினவங்க அப்படித்தான் நினைச்சாங்க. ஜெயிச்சு வந்தா ஜாக் பாட் அடிக்கலாம்னு
ஆனால் நீங்க முத தடவை சுயேச்சை. ரெண்டாவது தடவை எதிர்கட்சி,உங்களுக்காக தேர்தல் செலவை செய்தவங்களுக்கு எந்த லாபமும் கிடையாது. இப்பவும் எதிர்கட்சிதான். இந்த தடவையே அவனவன் கையை பின்னால கட்டிக்கிட்டு தான் பிரச்சாரத்துக்கு வந்தான் . அடுத்த தேர்தலுக்கு நிலைமை ரொம்ப மோசமாயிரும்."

"அப்போ என்னை லஞ்சம் வாங்க சொல்றியா ?"

" நான் அப்படி சொல்லலே.. இப்போ நான் அப்பார்ட்மெண்ட் கட்டனும்னு வந்தேன். என்னதான் கட்டிட தொழிலாளிக்குனு கட்டினாலும், என் மார்ஜி எனக்கு இருக்கும், அதுலருந்து ஒரு 10%உங்களுக்கு தரேன்"

"அப்போ நான் உன் அடியாளா?"

"அப்படினு ஏன் நினைக்கிறிங்க. பிராண்ட் அம்பாசிடர் மாதிரி வச்சுக்கங்க. நம்மாளுங்கள்ள எவனெவன் உண்மையிலேயே போண்டியாயிட்டான். இருந்திருந்தா செலவு பண்ணியிருப்பான்னு ஒரு லிஸ்ட் எடுங்க. அவிகளுக்கும் பிழைக்க ஒரு வழி பண்ணுங்க. அஃபிஷியலாவே ஒரு 10% ஷேர் கொடுக்க சொல்லுங்க"

"இந்த பணத்துல இருந்து அடுத்த தேர்தலப்போ ஓட்டுக்கு இவ்ளோனு செலவு பண்ணி ஜெயிக்க சொல்றே"

" நான் ஓட்டுக்கு இவ்ளோனு கொடுக்க சொல்லலே. உங்க மேல இருக்கிற மரியாதைல உங்க பின்னாடி வந்தவன் போண்டியாயிர கூடாது. தேர்தல் நேரத்துல வண்டி வாடகைக்கும், டீசலுக்கும் நாம கைய பிசைய கூடாதுனு சொல்றேன்"

"மக்கள் மத்தில கெட்ட பேரு வந்துருமேப்பா"

"சுத்தமான தங்கத்துல நகை செய்ய முடியாது. வெறுமனே நல்ல பேரை வச்சி ஜெயிக்கிறாப்பல இருந்தா காமராஜ் ஏன் தோத்தாரு, அண்ணாதுரை ஏன் தோத்தாரு. எம்ஜிஆர் கட்சி ஏன் தோத்து போச்சு"

ஜகன் யோசனைல ஆழ்ந்தார். என் திட்டத்தை விவரிக்க ஆரம்பிச்சேன். அவர் இந்த திட்டத்துக்கு சம்மதிச்சது அந்த நேரத்துக்கு அற்புதமா இருந்தாலும், அவரோட செல்வ செழிப்பை பார்த்து வளர விட்டா இனி இவன் தான் வாழ் நாள் பூரா எம்.எல்.ஏ னு ஆளுங்கட்சி காரவுக வச்ச ஆப்பு இருக்கே ..அதை இப்ப நினைச்சா கூட திகிலா இருக்கு.

(தொடரும்)