Monday, March 1, 2010

திரைப்பாடல்கள் இலக்கியத்தில் சேர்த்தியா?

வேதம்,புராணம், கோவில்,கோபுரம்,அரசு ,அரசியல் சாசனம், காவல் துறை,காவல் நிலையம் மாதிரி இலக்கியம் கூட மனிதனுக்காகத்தான். ஆனால் வேதம்,புராணம், கோவில்,கோபுரம்,அரசு ,அரசியல் சாசனம், காவல் துறை,காவல் நிலையம் இதெல்லாம் எப்படி மனிதர்களுக்கு அதீதம்னு சில அதி புத்திசாலிகள் நினைச்சு நாஸ்தி பண்ணிட்டாங்களோ அதே மாதிரி இலக்கியத்தை கூட ஒரு இனம் மனிதர்களுக்கு அதுவும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதீதமானதா ஒரு பிரமைய உருவாக்கிட்டாங்க. என்னடா இவன் எல்லாத்துக்கும் ஒரு இனம்னு ஆரம்பிக்கிறான்னு சலிச்சுக்கிராதிங்க.

அவிக கோவில்,கோபுரம்,புராணம்,இதிகாசம், இதையெல்லாம் நமக்கு மறுத்ததை கூட நான் மன்னிக்க தயாரா இருக்கேன். ஆனால் அவிக கல்விய கூட மறுத்துட்டாங்க. கல்வியில்லாததால குருட்டு பிறவிகளா  நின்னுட்டோம்.ரெஃபர் டு குறள் ரிட்டன் பை  வள்ளுவர். எப்போ நமக்கு கல்வி மறுக்கப்பட்டதோ எதிர்காலம் மட்டுமில்லே முக்காலமும் மறுக்கப்பட்டுருச்சு. மனிதனுக்கும் ,விலங்குக்கும் இருக்கிற வித்யாசமே மாரத்தான் ரேஸ்தான். மனித இனத்துல கடந்த தலைமுறையோட முயற்சிகள்,வெற்றி தோல்விகள் எல்லாம் சமூகத்தால பதிவு செய்யப்படுது. அடுத்த தலைமுறை கடந்த தலைமுறையோட முயற்சிய விட்ட இடத்துல இருந்து தொடர்ந்தா போதும். ஆனால் கல்வி மறுக்கப்பட்டதால் பிராமணரல்லாதோர் வளர்ச்சிய ஒவ்வொரு தலைமுறைலயும் புதுசா துவங்க வேண்டியதாயிருச்சு.

இன்னொரு லொள்ளு என்னடான்னா அவிக என்ன விலை கொடுத்தும் ஆளூம் வர்கத்துக்கு நெருக்கமா இருந்துக்கிட்டு நமக்கு ஆப்பு வைக்க என்னென்ன செய்யனுமோ அதையெல்லாம் செய்து கிட்டிருந்தாங்க. ஒரு வகைல பிராமணரல்லாதோர் வளர்ச்சிக்கு வழி வகுத்ததே அன்னிய படையெடுப்புகள் தான். அவிக இவுக காட்ற யாகம்,யக்னம், பஞ்சாங்கம் , இத்யாதி புல்க்குங்களுக்கு மயங்கல. இது மாதிரி அன் ப்ரொடக்டிவ் சர்வீசசை கொடுக்க அவிகளுக்குனு தனியா ஆள் இரு
ந்ததால போடாங்கோத்தானிட்டானுங்கோ . இவிக அவிக பாஷைய கத்துக்கிட்டு துபாஷிகளா, அடிமைகளா ( அதாங்க அரசு ஊழியர்கள்) மாற வேண்டியதாயிருச்சு. அந்த காலமாற்றத்தை ஜீரணிச்சுக்க பல காலம் பிடிச்சது. இதுல இவிக வர்ணாசிரம் தர்மமா பிரச்சாரம் பண்ணி அமல் படுத்திக்கிட்டு வந்த இன  வாதத்தை ,பிரிவினை வாதத்தை லவுடா (கெட்ட வார்த்தையில்லிங்கன்னா Loud-ஆனு படிங்க) பேசமுடியாம போயிருச்சு.

வந்தேறிக தானே. அந்த வந்தேறி மனோ தத்துவம் அவிக ஜீன்லயே இருந்தது.

புதுசா எந்த கலை பிறந்தாலும், எந்த துறை லெமன் லைட்டுக்கு வந்தாலும் அதுல கர்சீஃப் போட்டுவைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த ரூட்ல நீங்க எந்த துறையோட வரலாற்றை பார்த்தாலும் ப்ளூ ப்ரிண்ட் அவாள்துதான். நம்ம சூத்திர பயல்களும் குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரம்னு அவிக போட்ட ரூட்லயே போயிட்டே இருக்கோம்.

இதே வரிசைல திரையுலகம், திரை இசை ,திரைப்படப்பாடல்களும் அவிக போட்ட ரோட்லயே போனது . போயிட்டிருக்கு, அதனால திரைப்பாடல்கள் இலக்கியத்தில் சேர்த்தியா?ங்கற கேள்விக்கு பதில் தேட அவிகள்ள யாரோ ஒருத்தர் கொடுத்த டெஃபனிஷனை தான் அளவு கோலா வச்சு ரோசிக்கற ஆபத்தும் இல்லாம இல்லை. அதுக்காக அவிக சொல்லி வச்ச எல்லாத்தயும் தப்பு தவறுன்னு தள்ளி விட்டுர்ர அளவுக்கு நாம முட்டாளாவும் இருக்க தேவையில்லை.

மாற்றான் தோட்டத்து மல்லிகை, எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் தினுசுல கொட்டேஷன்ஸ் விட்டுக்கிட்டே போனா இன்னொரு தொடர்பதிவு போட வேண்டி வந்துரும்.ஸோ அம்பேல்.

முதல்ல இலக்கியம்னா என்னனு பார்ப்போம். அது பிறக்கறது மனுஷனுடைய மனசுல. ஹ்யூமன் மைண்ட் ஈஸ் தி பை ப்ராடக்ட் ஆஃப் தி  சொசைட்டி.அதாவது மனுஷனுடைய மனசு சமுதாயத்தால தான் வடிவமைக்கப்படுது. ஸோ இலக்கியம் ங்கறது அது உருவான காலத்து சமுதாயத்தை அவதானிக்கனும்,விமர்சிக்கனும் ,பதிவு செய்யனும் ,குறைஞ்ச பட்சம்  பிரதிபலிக்கனும்.

பெரியார் மாதிரி ஆளுக விஷயத்துல இந்த விதி நாலு காலை தூக்கிரும். ஏன்னா பெரியார் சமூகத்தை வடிவமைச்ச பார்ட்டி. அவரோட பேச்சே இலக்கியம். அது அவர் காலத்து சமூகத்தை விமர்சிக்க மட்டும் செய்யல.. வருங்கால சமுதாயத்தை கனவு கண்டது. அதுக்கு விதை போட்டது. ஆனால் பெரியார் மாதிரி கேரக்டரை எல்லாம் விரல் விட்டு எண்ணிரலாம்.

ஸோ இலக்கியங்கறது அது தோன்றும் காலத்து சமூகத்தை விமர்சிக்கனும் அ அவதானிச்சு பதிவு செய்யனும் குறைஞ்ச பட்சம்   பிரதிபலிக்கனும்.அதுதான் இலக்கியம். அது உருவாக மனம் சார்ந்த காரணங்கள் இருக்கனும். அப்பத்தான் அதுல எழுத்தாளனோட  மனதை வடிவமைச்ச சமூகத்தோட பிரதிபலிப்பையாவது பார்க்க முடியும்.

இலக்கியங்கறது மனம் சார்ந்த ஒன்று. புத்தி சார்ந்த ஒன்று அல்ல.  மனசுக்கும் புத்திக்கும் என்ன வித்யாசம்? மக்களுக்கும் மக்கள் பிரதி நிதிகளுக்கும் உள்ள வித்யாசம் தான். எம்.எல்.ஏன்னா என்ன ஆகாசத்துல இருந்து குதிச்சாரா? இல்லயே. பேசிக்கலா அவர் ஒரு பிரஜை. வாக்காளர். அவரை இதர பிரஜைகள் தேர்ந்தெடுத்ததால எம்.எல்.ஏ ஆனார். மக்கள் சொல்றது சட்டமாகாது. ஆனால் எம்.எல்.ஏ சொல்றது சட்டமாக வாய்ப்பு இருக்கு.

மனித மனங்கறது அவனோட அனுபங்களின் தொகுப்பு. புத்திங்கறது அந்த அனுபவங்கள்ள இருந்து அவன் கத்துக்கிட்ட பாடங்களோட தொகுப்பு. ஸோ இலக்கியங்கறது மனம் சார்ந்து உருவானா அது சமூகத்தை பிரதிபலிக்கும். புத்தி சார்ந்து உருவானா ? என்னாகும்.......

அதுல அவன் காலத்து சமூகம் குறித்த பதிவு இருக்குமா ? நோ இருக்காது.வைரமுத்து "ஃபிஃப்டி கேஜி தாஜ் மஹல் எனக்கே எனக்கா"ன்னு எழுதினா அது அவர் புத்தியோட ப்ராடக்ட். அது இலக்கியமாகாது.  பஸ்ஸ்டாண்ட்லயே, டாஸ்மாக்லயோ ரெண்டு யூத் பேசும்போது தங்கள் காதலிகளை வர்ணிக்க என்ன வார்த்தை உபயோகிப்பாங்கனு வை.மு சாருக்கு தெரியாது. பாவம் அவருக்கு கலைஞரோட காத்து வாங்கவும், அவர் புகழ் பாடவுமே டைம் போதாதே..

அவரே " நானே எனக்கு நண்பன் இல்லையே உன்னால் ஒரு சொந்தம் வந்ததே "ன்னு எழுதினா அது மனம் சார்ந்தது. அது நிச்சயம் இலக்கியம் தான். இலக்கியத்தோட வடிவம் முக்கியம் கிடையாது. அது வெண்பாவா? மரபுக்கவிதையா,புதுக்கவிதையா, ஹைக்கூவா, கதையா கட்டுரையாங்கறதெல்லாம் இரண்டாம் பட்சம்.  அதுல மனுஷன் இருக்கனும், மனித மனம் இருக்கனும், மனித உணர்வுகள் இருக்கனும். "ஒரு பேச்சு பேச ஒரு வருசம் காத்திருந்தேன்"னா இது எல்லா காதலனுக்கும்/காதலிக்கும் பொருந்தற அம்சம். வாசகன் இலக்கியத்துல தன்னை உணரனும். அதுதான் இலக்கியம். அதுல  இலக்கணமிருக்கா இல்லையா? அது மக்கள் மொழில எழுதப்பட்டிருக்கா ? பண்டித பாஷைல எழுதப்பட்டிருக்காங்கறதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.

"முடியற வாளுக்கு எப்பவும் முடியும்"னு லாசரா ஒரு கதைல  சொல்வாரு.  அதை லேசா மாத்தி சொல்றேன். "முடியறவாளுக்கு எதுலயும் முடியும்" வடிவம் முக்கியமில்லே.

இலக்கியங்கறது மனிதனோட உடல் மேலயோ உறுப்பு மேலயோ வேலை செய்ய கூடாது, மனசு மேல வேலை செய்யனும்.இப்ப நிறைய திரைப்பாடல்கள் மனித உடல் மேலதான் வேலை செய்யறதா பேசிக்கறாங்க. நான் படம் பார்த்து பல வருஷமாயிருச்சு. பாட்டு கேட்கனும்னு கேட்டும் அதுவே.

கண்ணதாசன் எழுதுவாரு " ஓராயிரம் பார்வையிலும் உன் பார்வையை நான் அறிவேன்.. உன் காலடி ஓசையிலே உன் காதலை நான்  அறிவேன்"

எப்படிப்பட்ட கல் மனசும் கரையும். பார்வைலயாவது காதல் தெரிய வாய்ப்பிருக்கு. (பஞ்சேந்த்ரியானாம் நயனம் ப்ரதானம்) ஆயிரம் பார்வைல அவ பார்வை மட்டும் தனியா தெரியுதாம். சரி இதுல கூட லாஜிக்கிருக்கு. பார்ட்டியோட கண்ணு அவளோட பார்வைக்காக தபஸே பண்ணிக்கிட்டிருக்கும் போது ஆயிரம் பார்வை என்ன கோடி பார்வைல கூட அவளோட பார்வை தெரிஞ்சுரும். அதென்னய்யா அது காலடி ஓசைல காதல் தெரியறது.

நல்லா கவனிக்கனும் உன் கால் கொலுசு ஓசையிலேனு கூட எழுதல காலடி ஓசைலனு எழுதறாரு. அம்மா தன் குழந்தைய முத நாள் கான்வென்ட்ல விட்டுட்டு வந்தா. கடுமையான வெயில் .இவ அலுத்து போய்  தூங்கறா. ஸ்கூல் ஆட்டோல குழந்தை வந்து இறங்கி கதவை தட்டுது. அம்மா எழுந்து நடந்து போய் கதவை திறப்பா. அப்போ அவளோட காலடி ஓசைய ரிக்கார்ட் பண்ணிக்கங்க.

கொஞ்ச நேரத்துல பால் பாக்கெட்ட போட்டுட்டு பெல் அடிக்கிறான் பையன். இவள் எழுந்து போறா. அப்போ அவளோட காலடி ஓசைய ரிக்கார்ட் பண்ணிக்கங்க.

இன்னம் கொஞ்ச நேரம் கழிச்சு டிஷ் காரன் பெல்லடிக்கிறான். இவ போய் அஞ்சாம் தேதி வாப்பானு சொல்றதுக்காக  போறா..அப்போ அவளோட காலடி ஓசைய ரிக்கார்ட் பண்ணிக்கங்க.

இப்போ போட்டுக்கேளுங்க.. காலடி ஓசைல காதல் எப்படி தெரியும்னு அனுபவபூர்வமா தெரியும்.

தெலுங்குல ஒரு சொலவடை உண்டு " ரவி காஞ்சனி சோட்ட கவி காஞ்சுனு" சூரியன் பார்க்க முடியாத இடத்த கூட கவிஞன் பார்ப்பான்"னு அர்த்தம்.

இப்படி சூரியன் பார்க்க முடியாத இடத்த கூட கவிஞன் பார்த்து எழுதினான்னா அது கானாப்பாட்டா இருந்தா கூட இலக்கியம்தான் தலை !