எதிர்வினைகள்
ஓஷோ என்னமோ எதிராளி வினைக்கு எதிர்வினை செய்தா நீ அவனுக்கு அடிமைனு அர்த்தங்கறார். என்ன செய்ய ? நம்மால எதிர்வினை செய்யாம இருக்க முடியமாட்டேங்குதே. நானும் ஓஷோ ஸ்டைல்ல சித்தம் போக்கு சிவன் போக்குனு தொடர் கதையும், வர்ஜியா வர்ஜியமில்லாம தனிப்பதிவுகளும் போட்டுக்கிட்டிருந்தேன். . இருந்தாலும் நாட்டு நடப்புக்கு எதிர்வினை செய்யறது ஒரு சமூக பொறுப்புங்கற உத்தேசமும் ரெஸ்பாண்ட் ஆகாம இருக்கிறதுல ஒருவித கில்ட்டியும் இருக்கறதால இந்த பதிவை போட்டுக்கிட்டிருக்கேன்.
மகளிர் மசோதா:
இதை பத்தி விரிவா ஒரு பதிவே போட்டதா ஞா. ஆண் ஆணாவும், பெண் பெண்ணாவும் வாழ்ந்தாலே போதுமானது. பெண்மை மிளிரும் ஆண்கள்,ஆண்மை மிளிரும் பெண்கள் விதிவிலக்கு. விதி விலக்குகளை மனதில் வைத்து இட ஒதுக்கீடு செய்வதெல்லாம் இயற்கையோடு விளையாடும் விபரீத விளையாட்டு.
மேலும் மசோதாவை எதிர்த்து ஓட்டு போட்ட ஒரே ஒரு ஆசாமி அயனான பாயிண்டை கொளுத்தி போட்டிருக்காரு.
ஆண் எம்பிக்கள் என்னைக்கோ ஒரு நாள் இந்த தொகுதியும் மகளிர் தொகுதியாக போகுதுனு நெக்லெக்ட் பண்ணிருவாங்கங்கறார். நிஜம் தானே!
இரட்டை உறுப்பினர்:
வேணம்னா ஒரே தொகுதிக்கு ஆண்,பெண் என்று இரண்டு எம்.பிக்களை தேர்ந்தெடுக்கலாம். ட்ரெயில் ரன் மாதிரி . யார் என்ன கிழிக்கிறாங்கனு பார்ப்பம். ஆண்,பெண் வித்யாசமெல்லாம் ரொம்ப ப்ரிலிமினரி. எஸ்.ஐன்னா எஸ்.ஐதான். பெண் எஸ்.ஐ இருக்கிற ஸ்டேஷன்லயும் லாக்கப் சாவு நடக்கலாம். எம்.பின்னா எம்பிதான். பெண் எம்பி கூட காசு வாங்கிக்கிட்டு கேள்வி கேட்கலாம்.
( எம்.பிங்க நெம்பர் டபுளாயிருச்சுன்னா செலவு இரட்டிப்பாயிருமேனு கேட்க சிலர் கமெண்ட் ஃபாரத்துக்கு போயிட்டது தெரியுது. தமிழக சட்டமன்றம்ங்கற தலைப்புல வச்சிருக்கேன் ஆப்பு. அதை பார்த்துட்டு வேணம்னா கிழிங்க.
சட்டப்படி:
நித்யானந்தா தன் மேலான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ளப்போறதா சொல்லிக்கிட்டிருக்கிற தருணத்துல சுப்ரீம் கோர்ட் லிவிங்க் டு கெதர் ( கண்ணாலம் கட்டிக்காம சேர்ந்து வாழறது ) சட்டப்படி குற்றம் கிடையாதுனு வியாக்யானம் பண்ணியிருக்கு.
நடிகை ரஞ்சிதாவோட சேர்ந்து "வாழ்ந்ததா" சொல்லிக்கிடலாம். ஆனால் அதே சுப்ரீம் கோர்ட் சேர்ந்து வாழறதை நீதிக்கு (மோரல்) புறம்பான செயலா சொல்லியிருக்கு.
நித்யானந்தா சன்னியாசி ஆறதுக்காக குறிப்பிட்ட டிப்ளமா படிச்சு டிகிரி வாங்கி சன்னியாசி ஆகலே. ஜஸ்ட் மக்களோட மோரல் கன்செர்னோட சன்னியாசியா வலம் வந்தாரு. பிரம்மச்சரியத்தை உபதேசிச்சாரு. தான் மட்டும் டீ ஷர்ட் ,ஜீன் போட்டுக்கிட்டு நைட் க்ளப்ல குத்தாட்டம் போட்டாரு. இது இம்மாரல் மட்டுமில்லே. இவர் தன் ஆகா ஓகோ கொள்கைகளை பிரச்சாரம் பண்ணித்தான் கூட்டம் சேர்த்தாரு. பைசா வாங்கினாரு. ஆனா அவர் அப்பாவி மக்களை மயக்க எடுத்துவிட்ட தத்துவத்தையெல்லாம் காத்துல விட்டுட்டாரு. ( அதுக்குதான் கதவை திற காற்று
வரட்டும்னாரு போல) . மேலும் தான் அந்த பொறம்போக்கு வேலைய செய்யலைனு
வாதம் பண்ணல. அது தப்புன்னோ,தவறுன்னோ ஒத்துக்கிடவுமில்லே. அந்த அஜால் குஜால் வேலைக்கு ஆராய்ச்சினு கலர் வேற கொடுத்து கவர் பண்றார். ஜஸ்ட் அதுக்காக வருத்தம் கூட தெரிவிக்கல.
இதெல்லாம் சட்டப்படி குற்றமில்லேனு எந்த அடிப்படைல சொல்றாருனு தெரியலை. சாமியார் மடத்துக்கு ரூ 100 நன்கொடை தந்த பார்ட்டி கூட கன்ஸ்யூமர் ஃபோரத்துக்கு போகலாம்.
சாமியார் ஆஃபர் பண்ண சர்வீஸ் என்ன? உங்களை ஸ்வர்கத்துக்கு அனுப்பறேன் சாரி.. இதெல்லாம் அந்த காலத்து சாமியாருங்க ப்ராமிஸ். இவரு உங்களுக்கு இங்கயே ஸ்வர்கத்தை காட்டறேன்னு தான் சொல்லியிருப்பாரு. கல்கியே மேல் தமிழ் சினிமால ரஜினி மாதிரி சொன்னதை செய்துட்டாரு போல (போதை மருந்து கொடுத்தாரோ பேதி மருந்து கொடுத்தாரோ அவிகள பார்த்தா ஸ்வர்கத்துல இருக்கிற மாதிரியே இருக்குது.) ஆனால். நித்யானந்தா தான் மட்டும் ஸ்வர்கத்தை பார்த்துட்டாரு. இது ரெஃப்யூசல் ஆஃப் சர்வீஸ், டெஃபிஷியன்சி ஆஃப் சர்வீஸ்.
நம்ப வச்சு ஏமாத்தனதால இது 420 செக்சன் கீழவும் வரலாம். ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்டும் வருது. குறிப்பிட்ட மத நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைய சீர் குலைச்ச செக்சன்லயும் கொண்டுவரலாம்.
ஒரு நம்பிக்கை என்னடான்னா கர்னாடக ஹை கோர்ட்டு நித்யாவோட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி பண்ணியிருக்கு.
ஆமாண்ணே ...குமுதத்தில் தொடரும் நித்யானந்தா தொடரை படிக்கிறிங்களா? ஹும்.. இதையெல்லாம் எழுதி என்ன பிரயோஜனம். ரஞ்சிதாவோட மேற்கொண்ட ஆராய்ச்சியை பத்தி எழுதினாலும் நல்லாருக்கும். நமக்கும் எதுனா லேட்டஸ்டா விஷயம் கிடைக்கும்.
வேறு ஒருத்தியை மணக்க இருந்த கள்ளக்காதலனை ஆசிட் வீசி கொன்ற திருமணமான பெண்.இப்படி ஒரு செய்தி கடந்த வாரம் தெலுங்கு நியூஸ் பேப்பர்ல வந்தது. பரவாயில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலாறதுக்குள்ளவே மிச்ச சொச்ச விஷயத்துல எல்லாம் மகளிர் தாங்களே உரிய இடத்தை பிடிச்சுருவாங்க போல.
தினமணி அடித்த அபாயமணி:
தினகரனும்,தினத்தந்தியும் போடற போடுல எத்தை தின்னா பித்தம் தெளியுங்கற ஸ்டேஜுல ஒட்டு மொத்த வலைப்பூக்களுக்கு வர்ர ஹிட்ஸை மோனோபலியா சுட்டு வெப் எடிஷனையாவது நெம்பர் ஒன் ஆக்க திட்டம் போட்டாப்ல இருக்கு. இணையத்தால் தமிழ் பாழா போகுதுனு ஐட்டம் போட்டு பதிவர்கள்+வலைய்லக கவனத்தை கவர்ந்திருக்கு தினமணி. ஒரு காலத்துல தினமணில வெளிவந்த வேலூர் டாக்டர் கண்ணப்பர் எழுதின நம் நாட்டு மூலிகைகள் தொடர் ஒரு புரட்சியையே கொண்டுவந்தது.
இப்ப ஞா இணைப்பா வர்ர தினமணி கதிரை ஒரு காலத்துல சனம் காசு கொடுத்து வாங்கிக்கிட்டிருந்தது எத்தனை பேருக்கு தெரியும்?
நல்ல நேரத்துல அடி முட்டாளுக்கு கூட அயனான யோசனைகள் வருமாம். கெட்ட நேரத்துல சித்தூர்.முருகேசனே உனக்கு22 எனக்கு 32 கதைல என்.டி.ஆரை கொண்டுவந்து மொக்கையாக்கிரலாம்.
என்ன தினமணி வலைதளத்துல உங்க வலைப்பூவை என்னை மாதிரியே பதிவு பண்ணிட்டிங்க தானே.
ஸ்டாலின் அழகிரி பஞ்சாயத்துலருந்து அரசியல் கட்சிகள் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு நீதி என்னன்னா கட்சில உள்கட்சி ஜன நாயகம்ங்கறது ரொம்ப முக்கியம். தலைவனை கட்சி தான் நிர்ணயிக்கனுமே தவிர , தலைவன் நிர்ணயிக்க கூடாது. இப்படி ஒரு பழக்கத்தை வச்சுக்கிட்டா ஸ்டாலின், அழகிரி மட்டுமே இல்லை நாளைக்கு இவிக பேரன் மார் காலத்துல கூட தொடரும்.
பென்னகரம் இடைதேர்தல். ஹும்னு ஒரு பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. பென்னகர வாசிகள் கொடுத்து வச்சவுக.
பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள் நாவலை ஞா படுத்திக்கொள்ளுங்கள். அதன் மலிவுப்பதிப்பை கண்ணன் அய்யங்காருக்கு சமர்ப்பணம் செய்திருப்பது ஞா வருதா?
பாலகுமாரன் பெயரால் (?) நண்பர்கள் ஏற்படுத்திய வலைப்பூ ஒன்னு மலர்ந்திருக்கு. ஆமாம் பாலகுமாரன் டாட் நெட்னு ஒரு வெப்சைட் இருந்ததே என்னாச்சு?
தமிழகத்தின் புதிய சட்டமன்ற வளாகம் பத்தி எல்லாரும் எழுதி கிழிச்சிட்ட நேரத்துல அச்சாணியமா ஒரு கேள்வி. இப்பத்தான் ஐ.டி துறை கொடி கட்டி பறக்குதுல்லயா?
சட்டமன்ற கூட்டத்தை பேசாம வீடியோ கான்ஃப்ரென்சிங் முறையில் நடத்தலாம்லியா? என்னத்துக்கு டம்மியா ஒரு கூரை உண்மையா ஒரு கூரைனு தண்டசெலவு?