அப்பா மாயாவ விசாரிச்சாரு "உங்க வீட்ல இருக்கிறவங்களோட பேசனும்மா..எப்படி பண்ணலாம் நான் வந்து பேசனுமா, இல்லை அவங்க யாராச்சும் வந்து பேசுவாங்களா இல்லே வெட்டு குத்து கொலை எதாச்சும் நடக்குமா?"
அதுக்கு மாயா "என் அக்காவுங்க பத்தி கவலையில்லே அங்கிள்,, தகவல் சொன்னா வந்துட்டு போவாங்க. ஆனால் எங்க மாமனுங்களுக்கு மட்டும் வயிறெரியும்"ன்னா.
"ஏன்மா அப்படி?"
"எனக்கு வயசாயிட்டே போறதால விதியில்லாம அவங்கள்ள யாரோ ஒருத்தரை நான் ரெண்டாந்தாரமா கட்டிக்குவேன்.. என் பேர்ல இருக்கிற ஃபிக்ஸட் டிப்பாசிட்டை ஸ்வாஹா பண்ணிரலாம்னு இருந்தவுங்களுக்கு நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டா எரியாதா அங்கிள்?"
"சரிம்மா.. நீ உன் அக்காங்க்களுக்கு தகவல் சொல்லிரு. நல்ல நாளா பார்த்து வரச்சொல்லிரு"
நாலாவது நாளே மாயாவோட சிஸ்டர்ஸ் வந்தாங்க. பேசினாங்க. கல்யாணத்துக்கு தம்பதி சமேதமா வரோம்னு சொன்னாங்க.
3 மாசம் கழிச்சு எனக்கும்,என் தம்பிக்கும் ஒரே முகூர்த்தத்துல கல்யாணம்னு தேதி முடிவு பண்ணி மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு.
ஆல்ரெடி ஃபீல்ட் தெரியுங்கறதால ட்ராவல்ஸ்னால பிரச்சினை இல்லே. லோக்கல் பேப்பர்லயும் பிரச்சினை கிடையாது. ஸ்டுடியோ விஷயத்துல தான் அப்பாவுக்கு ஸ்ட்ரெயின் அதிகமா இருந்தது. இத்தனைக்கும் அவுட் டோர் ப்ரோக்ராம்ஸ் எல்லாம் அடெண்ட் பண்றதில்லை. இந்த சந்தர்ப்பத்துல தான் சந்தீப் அறிமுகமானான். வேற ஒரு பிரபல ஸ்டுடியோல ஒர்க் பண்ணிகிட்டிருந்தான். அவங்கப்பாவுக்கு ரெண்டு சம்சாரம். முத சம்சாரம் டெத் ஆன பிறகு அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாராம். இவன் முதல் சம்சாரத்து பையன். புதுப்பெண்டாட்டி மோகத்துல அப்பன் காரன் சந்தீபை சுத்தமா கழட்டிவிட்டிருக்க அவன் தன் பாட்டியோட ஒட்டிக்கிட்டு இருந்தான். ஏம்பா இது நிலைமை எங்க ஸ்டுடியோவுக்கு வந்துர்ரியான்னேன்.. ஓகே சார்னிட்டு மறு நாளே ஜாயின் பண்ணீட்டான்.
மாயாதான் ஐடியா கொடுத்தாள். வர்ர பார்ட்டி, அவங்க ப்ரிஃபெரன்ஸை பொறுத்து வெறுமனே ட்ரைவைரோட பஸ்ஸை அனுப்பறத விட நாமே ஒரு வருஷத்துக்கு டூர் ப்ரோக்ராம் ஃபிக்ஸ் பண்ணி டூர் கண்டக்ட் பண்ணா என்ன? அப்பா "இடம் பொருள் ஏவல்னு எதையெதையோ சொல்லி.. பஞ்சாங்கம் வாங்கிட்டு வரச்சொல்லி சிவராத்திரிக்கு ஸ்ரீசைலம், ஸ்ரீ ராம நவமிக்கு பத்ராச்சலம், ஆடி கிருத்திகைக்கு திருச்செந்தூர், மார்கழில சபரிமலை இப்படி என்னென்னவோ கணக்குபோட்டு ஒரு அஜெண்டா தயாரிச்சார்.அதை ஒரு ஆயிரம் காப்பி ரோனியோ போடச்சொல்லி இதுவரை எங்க கிட்டே பஸ் புக் பண்ண பார்ட்டிங்களுக்கெல்லாம் நேர்ல போய் கொடுத்து பேசச்சொன்னார். அவிக ஒப்பீனயனையும் கேட்டுக்கிட்டு, ஒரு சில கரெக்சன்ஸோட பக்கா ப்ரோக்ராம் ரெடி பண்ணோம். 1989 ஜனவரி 1 ஆம் தேதிக்கு ஸ்டுடியோ,லோக்கல் பேப்பர் விளம்பரங்களோட இந்த அஜெண்டாவையும் சைன் போர்ட்ல பெயிண்ட் பண்ணச்சொல்லி வெளியூர் பஸ்ஸுங்க டவுனுக்குள்ள என்டர் ஆகற சாலைகள், கோர்ட்டு, கலெக்டரேட், கானிப்பாக்கம் வினாயகர் கோவில், போய கொண்ட கங்கம்மா, மொகிலி ஈஸ்வரன் கோவில் மாதிரி சென்டர்ஸ்ல பக்காவா போல்ஸ் நட்டு ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்தோம். அதே போர்டுல ராகுகாலம், எமகாலம்,குளிகன் மாதிரி நேரங்களை கழிச்சுட்டு ஒவ்வொரு நாளும் நல்ல நேரம்ங்கற தலைப்புல மேட்டர் கொடுத்திருந்தோம்.
அப்பாவே ப்ரஸ் மீட் வச்சு புது ப்ராஜக்ட் பத்தி விவரிச்சார். இது இல்லாம மல்ட்டி கலர்ல ப்ராஸ்பெக்டஸ் தயாரிச்சு பிரிண்ட் பண்ணி வைக்க சொன்னார். என் கொய்ரிக்குனு தனி கவுண்டர் போட்டு ஒரு பொண்ணை அப்பாய்ண்ட் பண்ணச்சொன்னார். அப்படி வந்தவதான் மீரா. ஸ்கூல் டேஸ்ல என் ரசிகை. மா நிறமா இருந்தாலும் களையான முகம், நாள் முழுக்க சலிக்காம பேசற கேரக்டர். மீராவுக்கு அவிக சாதி வழக்கப்படி இண்டர் முடிஞ்சதுமே கல்யாணம் பண்ணிட்டானுங்க. புருசங்காரன் வாய் செத்தவன். மச்சினனுங்கல்லாம் கட்டிமேய்க்க , இவளையும் வேலைக்காரி கணக்கா பெண்ட் எடுக்க இவ புரட்சி பண்ணிட்டு பாகம் பிரிக்க வச்சு வந்த காசை பேங்குல போட்டுட்டு வீட்டு வாடகை,சோத்துக்கு பஞ்சமில்லைனு இருந்த காலகட்டத்துல இன்னொரு க்ளாஸ்மெட் ஒருத்தியோட கல்யாணத்துல மீட் பண்ணப்ப ஜாப் ஆஃபர் பண்ணதும் சந்தோஷமா ஒத்துக்கிட்டா.
லைப்ரரில நடந்த ஒரு ஃபங்க்ஷன்ல முரளிங்கற தெலுங்கு கவிஞர் ஒருத்தர் அறிமுகமாக அவரை பிடிச்சு லோக்கல் பேப்பருக்கு இன்சார்ஜ் ஆக்கிட்டன். "அப்பா கூட "என்னடா கல்யாணமே நடக்கலை அதுக்குள்ள பெண்டாட்டிக்கு பர்டன் இருக்ககூடாதுனு ப்ளான் பண்றியா"னு நக்கலடிச்சார்.
"இல்லப்பா பெண்டாட்டி செத்த பிறகுதான் கல்யாண நாள் ஞா வருங்கற மாதிரி வாழ்க்கைய வாழக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.. உன் லைஃபை பார்த்திருக்கேனே"ன்னேன்.
"வெரி குட்ரா கண்ணா.. நான் முதல் பதிப்பு. நீ என்னோட மறுபதிப்பு. திருத்திய பதிப்பா வெளிவரனும் .. லைஃப்ல நான் பண்ண தப்புகளை நீ பண்ணாதே. அண்ணன்,தம்பி, தங்கச்சினு பார்த்து சில காலம், அடிமை வேலைங்கறதால ட்ரான்ஸ்ஃபர்ஸ்னால பல காலம் மனைவிய பிரிஞ்சிருந்தேன். வீட்டு ஞா வரக்கூடாதுன்னு எனக்கு சம்பந்தமில்லாத வேலைகளை கூட இழுத்து போட்டு செஞ்சேன், பேரென்னவோ பெத்த பேருதான். வேலை மெல கவனத்துல வயித்த கவனிக்கலை கான்ஸ்டிபேஷன், கேஸ் ட்ரபிள் ,அல்சர், எல்லாப்பயலும் சார் நல்ல மாதிரி கோபமே வராதுனு உசுப்பேத்த கோவத்தை அடக்கி அடக்கி பி.பி, கடப்பால இருக்கிறப்பனா அந்த காரத்துக்கும், அனலுக்கும் பைல்ஸே வந்துருச்சு. தெலுங்குல "கொத்த டாக்டர் கன்னா பாத ரோகி நயம்"னு ஒரு பழமொழி உண்டு. அதைப்போல நானே பாதி டாக்டராயிட்டன்"
அப்பா "இன்னும் ஏதோ சொல்லப்போக அப்பா ! நீங்க ஏன் ஒரு சின்ன அளவுல ஒரு சித்தா ஃபார்மசி ஆரம்பிக்க கூடாது. ஸ்டுடியோலயே ஒரு அலமாரிய ஒதுக்கினா கூட போதுமேன்"னேன்.
அதுக்கு அவர்," செய்தா போச்சு வேலூர்ல டாக்டர் கண்ணப்பர்னு ஒரு ஃப்ரெண்ட் இருக்காரு தெரியுமில்லயா மூலிகை மணின்னு ஒரு பத்திரிக்கை கூட நடத்தறார். ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருந்தாரு இப்படி எதுனா செய்ப்பா"ன்னு என்றார்.
அந்த வேலையும் முடிச்சோம். கல்யாண நாளும் வந்தது. மாயா மாமனுங்க ஒவ்வொருத்தனும் தெலுங்கு சினிமால வில்லன் மாதிரி இருந்தானுங்க. மாயாவோட ஒருதலை காதலனும் வந்திருந்தான். முதலிரவை கல்யாண மண்டபத்துலயே அரேஞ்ச் பண்ணிரலாம்னாரு அப்பா.
வேணாம்பா.. எனக்கு நம்ம வீட்ல தான் முதலிரவுன்னிட்டேன். தம்பி சிந்து டவர்ஸ்லன்னிட்டான்.
எங்க முதலிரவை வீட்லயே ஏற்பாடு பண்ணிட்டாங்க. மாயா பட்டுச்சேலைல இன்னும் குண்டா தெரிஞ்சா. குனிஞ்ச தலையோட , பால் சொம்போட உள்ளே வந்தா..அதை வாங்கி அலமாரில வச்சுட்டு..
"ஏய் .. என்ன இது அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி . நான் யாரு? ஜஸ்ட் யுவர் ஸ்வீட் ஹார்ட் முகேஷ்... ரிலாக்ஸ் கண்ணு. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே எதுக்கு தெரியுமா?"
"நான் எதுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தெரியுமா?"
"சரி லேடீஸ் ஃபர்ஸ்ட் .. நீயே சொல்லு"
" வாழ் நாளெல்லாம் உன்னை பிரியாம ஆத்தரைஸ்டா உன்னோட சேர்ந்திருக்க தான்"
"த பார்ரா.. நானும் இதைத்தான் சொல்ல இருந்தேன். எப்பவும் உன் கூடவே இருக்கனும்னு இருக்குமே தவிர இந்த தாலிகட்டறது எட்ஸெட்ரா மேல ஐடியாவே இல்லை. ஆனா பாரு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி எங்க வீட்லயே உன்னை திருட்டுத்தனமா சந்திக்க வேண்டிய நிலைமை.ஆனா இப்ப பாரு எங்கப்பா, பாட்டி எல்லாம் ஹால்ல இருக்கிறச்ச ரைட் ராயலா ஒரே ரூம்ல .. இந்த த்ரில்தான் எனக்கு தேவை"
"இதோடா அப்ப உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டே தேவையில்லயா ? சரி அந்த பக்கம் திரும்பி படுத்துக்க"
"பார்த்தயா இதானே வேணாங்கறது. லட்டு மாதிரி இருக்கே ..உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டு அந்த பக்கம் திரும்பி படுக்கறதா? அந்த விஷயத்துல நான் எப்படின்னு வெறும் தியரிதான் சொல்லியிருக்கேன். இன்னைக்கு ப்ராக்டிக்கல்ஸ்ரா கண்ணு"
"அப்ப ..சரி வா.."
"இதென்னடா இழவா போச்சு. என்னவோ தம்பி காரனை சாப்பிட கூப்ட மாதிரில்ல இருக்கு. வெட்கப்படனும், முதல்ல வேணாம் .. வேணாம்னு தள்ளனும் அப்புறம் அது மட்டும் வேணாம் இது மட்டும் வேணாம்னிட்டு ஸ்டே விதிச்சிட்டே இருக்கணும். ஸ்டேவ வெக்கேட் பண்ணிக்கிட்டே போகனும்.. இன்னும் எவ்ளோ இருக்கு"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்ல எனக்கு மனசு வராது.. "
" சரியா போச்சு.. நமக்கு இந்த தானம் தர்மம் எல்லாம் வாங்கி பழக்கமில்லயே.. பூட்டுக்கு மேல பூட்டா தொங்கனும். ஒவ்வொன்னையும் திருட்டு சாவி போட்டு திறக்கனும். கொள்ளையடிக்கனும்.. அதுல தான் த்ரில்"
"ச்சை.. பொம்பளை என்ன இரும்பு பொட்டியா பூட்டு மேல பூட்டு தொங்க?"
"மாயாக்குட்டி..இட்லி பாப்பா மாதிரி ஆள் வளர்ந்திருக்கயே தவிர அறிவு வளரலடா கண்ணம்மா.. "
"யேய் இன்னொரு தடவை என் ஃபிசிக் மேல கமெண்ட் பண்ணே .. அப்புறம் நீ அய்யோ அப்பா.. அய்யோ பாட்டினு கத்தறாப்ல கடிச்சு வச்சுருவன்"
" நீ கத்தினா .. பரவால்ல பொண்ணு குதிராட்டம் இருந்தாலும் பையன் கதிராட்டம் இருந்துக்கிட்டு வெளுத்து வாங்கறான்னு பெருமையா நினைச்சிப்பாங்க. நான் கத்தினா உனக்குத்தான் அவமானம்.."
"தபாரு உன்னோட மல்லாட என்னால முடியாது.. இந்த பட்டுப்புடவை ரொம்ப அன் ஈஸியா இருக்கு முதல்ல நான் புடவை மாத்திக்கறேன்"
"அட்றா சக்கைன்னானாம் . நைஸா புடவை மாத்திக்கற மாதிரி நீங்க அவுப்பிங்க.. நான் காஞ்சான் பாரு உடனே படக்குனு வந்து கட்டிப்பிடிச்சிக்குவன் அதான உன் ப்ளான்? நான் பல பட்டறை .. டோன்ட் கண்டம் செக்ஸ் யூஸ் கேண்டோம்ங்கறது நம்ம பாலிசி. நீ தாராளமா புடவை மாத்திக்கிட்டே வா.. "
"கருமம் கருமம் .. ஹால்ல அப்பா பாட்டி இருக்காங்க அவங்க காதுல எங்கனா விழுந்துர போவுது.. கொஞ்சம் மெள்ள பேசேன்"
" அப்படி போடு அரிவாளை எது வேணம்னா பேசலாம். ஆனால் அப்பாபாட்டி காதுல விழக்கூடாது அவ்ளதானே"