Sunday, March 7, 2010

உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதை

"பேசாம நீயே ஒரு கல்யாணம் பண்ணிக்கயேன்" என்ற என் பேச்சுக்கு பின்னாடி நிஜமாவே குண்டூசிய போட்டா கூட சத்தம் கேட்கும் போல அமைதி .அப்பா நிதானமா கை கழுவி வாஷ் பேசின்ல போய் வாய் கொப்பளிச்சு குழாயை மூடிட்டு டவல்ல வாய துடைச்சிக்கிட்டே வந்து தன் சேர்ல உட்கார்ந்துகிட்டார்.

"என்னடா சொன்னே?" அப்பா கேட்ட விதம் கொஞ்சம் வில்லங்கமாவே இருந்தாலும் மாயா முன்னாடி டம்மியாயிரக்கூடாதுங்கறதுக்காக  என் டயலாகை ரிப்பீட் பண்ணேன்.

"ஏண்டா.. உன்னை எல்லாரும் மேதை கீதைங்கறாங்க..  பெரிய்ய சைக்காலஜிஸ்டு மாதிரி பேசறே இந்த சின்ன விஷயம் உனக்கு புரியலையா?

ஏண்டா நீ பிகாம் டிஸ்கன்டின்யூடுதான்.. அதுக்காக மறுபடி பத்தாங்கிளாஸ்ல போய் சேருவியா.. வர்ஜியா வர்ஜியமில்லாம கண்டதையும் முண்டதையும் படிக்கிறேல்ல. என்ன பிரயோஜனம்  ? ஒரே ஒரு பேச்சுல நீ அரைவேக்காடுதான்னு நிரூபிச்சுட்ட. 

என் தாம்பத்ய  வாழ்க்கைய பத்தி உனக்கென்னடா தெரியும்?  நீ ஒன்னும் குழந்தையில்லை. ஆம்பள தானே. மாயா ! நீயும் தெரிஞ்சுக்க.  இவன் கூட எங்கப்பன் உணர்ச்சியில்லாத ஜடம். எங்கம்மாவுக்கு இந்தாளு லாயக்கே இல்லேனு கூட சொல்லியிருப்பான்.

என் மனைவிக்கு நான் ஒன்னுமே செய்யலன்னு கூட புகார் பண்ணியிருப்பான். எங்களுக்குள்ள ஒருத்தருக்கு இன்னொருத்தர் ஏதோ செஞ்சாகனும்ங்கற நிலை இல்லேம்மா. எனக்காக .. எனக்காக மட்டும் அவள் எல்லாத்தயும் சகிச்சுக்கிட்டா .

 என் மூக்குப்பொடி வாசனை, முரட்டு பிடிவாதம், குடும்பத்தையே பிரிச்சு,என்னை மாவட்டம் மாவட்டமா  வறுமைல வாட்டின ஹானஸ்டி, எதையும் ஆணித்தரமா கேள்வி கேட்டு வெட்டு  ஒன்னு துண்டு ரெண்டுன்னு தீர்க்கமுடியாத ஃபேட்டல் வீக்னெஸ்  இப்படி எல்லாத்தயும் எனக்காக, ஜஸ்ட் எனக்காக சகிச்சுக்கிட்டா. நானும் இந்த கம்னாட்டி மாதிரி என்னென்னவோ செய்து பெண்டாட்டிய அசத்திரலாம்னு துடிச்சிருக்கேன். ஆனால் அவள்.........

................ ,எனக்கு என்னங்க செய்றது.. நீங்க யாரு ... நான் யாரு. நாம யார்  யாரோவா இருந்தா செய்ய வேண்டியதுதான்.  நீங்க யாருக்கும் செய்தாலும் எனக்கு செய்த மாதிரிதாங்க. நீங்க என் கண் முன்னாடி இருக்கனும்,  என்னோட இருக்கனும்ங்கற அவசியம் கூட இல்லிங்க.

எங்கயோ இருக்கிங்க.. என்னை நினைக்கிறிங்கன்ற நினைப்பு ஒன்னு போதுங்க. நீங்க எங்கயிருந்தா என்னங்க?  நான் உங்க மனைவியா இருக்கேன் அதுவே போதுங்க .  நீங்க வெளியூர்ல இருக்கிங்க, வருஷத்துக்கு ரெண்டு தடவைதான் வர்ரிங்கன்னு பசங்க கூட அப்பப்ப ஃபீல்பண்றாங்க..ஆனால் நீங்க எப்ப வருவிங்கன்னு காத்திருக்கிற சுகமிருக்கே .. எல்லாருக்கும் வாழ்க்கைல ஒரு தடவை தான் முதலிரவு, ஒரு தடவை தான் தேனிலவு. ஆனா எனக்கு வருஷத்துக்கு 3 தடவை  நடக்கறத விட வேற என்னங்க செய்துர முடியும் உங்களால என் ப்ராப்தம் எப்படியோ அப்படித்தான் நடக்கும்.............

 நான் ஏதோ அர்ரியர்ஸ் பணம் வந்தப்ப அதை வாங்கிக்க இதை வாங்கிக்க உனக்கு ஒன்னுமே செய்யலை அது இதுன்னு நச்சரிச்சேன். அப்பதான் தன் மனசை வெளிப்படுத்தினாள். பைபிள்ள சொல்லியிருக்காம் விதைக்க ஒரு  நேரம் அறுக்க ஒரு நேரம்னு. விதைக்கிற நேரத்துல விதைக்கனும்,அறுக்கற நேரத்துல அறுக்கனும். பத்தாங்கிளாஸ் படிக்கறப்ப பத்தாங்கிளாஸை ஒழுங்கா படிக்கனும். அப்பத்தான் காலேஜ் ஸ்டடீஸுக்கு போக முடியும். 

பிரம்மச்சர்யம், க்ருஹதாஸ்ரமம்,வானபிரஸ்தம், சன்னியாசம்னு சொல்வாங்களே.. அப்படி பிரம்மச்சரியத்தை ஒழுங்கா கடை பிடிச்சிருந்தா க்ருஹதாஸ்ரமத்தை நல்லா எஞ்ஜாய் பண்ண முடியும். க்ருஹதாஸ்ரமத்து  கடமைகளை காலா காலத்துல முடிச்சி தொலைச்சா வானப்ரஸ்தம் போலாம். அதுக்கப்புறம் சன்னியாசம்.

நான் இப்ப வான பிரஸ்தத்துல இருக்கேன். என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றியா? உனக்கொன்னு சொல்லவா.. நான் உங்கம்மாவோட வாழ்ந்ததைவிட அந்த வயசு, ரத்தச்சூடு, ஓட்டமெல்லாம் முடிஞ்சு அவளோட வாழ்ந்ததை  நினைச்சு பார்க்கிறேன் பாரு இதுதான்டா எனக்கு ரொம்ப திருப்திய கொடுக்குது. ஆமா உன்னை ஒன்னு கேட்கனும் ..ஏண்டா பெண்டாட்டி செத்துப்போய்ட்டா ஆம்பளை  உடனே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனுமா?

 சரி ஒரு வேளை நான் செத்துப்போயிருந்தா உங்கம்மாவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச்சொல்லியிருப்பியா? ஊ ஹூம்.. அவள் மட்டும் தமிழ் சினிமால அம்மா கேரக்டர் மாதிரி ஒத்தமரமா வாழ்ந்து சாகனும். அப்பன் மட்டும் 60 வயசுல இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிடலாம்.

 ஏன்னா  அவன் ஆம்பள..போடாங்க..

உனக்கு பயாலஜிக்கல் ட்ரூத் ஒன்னு சொல்லவா.. ஒரு பொம்பள ஒரே ராத்திரில 23 தடவை ஆர்காசம் அடைய முடியும். ஆனா ஆம்பள ? மிஞ்சி போனா 3 இல்லை 4.. இந்த கணக்குப்படி பார்த்தா ஒரு பொம்பளை ஒரே நேரத்துல 23 ஆம்பளைகளை கல்யாணம் பண்ணிக்கனும். ஆனால் பொம்பள ஏதோ இந்த உலகத்து மேல இருக்கிற கருணையோட ஓஞ்சு போ.. உன்னால முடிஞ்சது இதான். எனக்கு கொடுத்து வச்சது இதான்னு போய்க்கிட்டிருக்கா..இன்னொரு கல்யாணமாம். இன்னொரு கல்யாணம் "

அப்பா பேச பேச மாயா முகத்துல என்னென்னவோ வர்ணக்கலவைகள். தொடர்ந்து கேட்கிறதா எழுந்து போயிரனுமா, தலை குனிஞ்சிக்கனுமான்னு வித விதமான ஃபீலிங்ஸ். ஆனால் தலை குனியல. எந்திரிக்கலை. அப்பா பேசி முடிச்சதும் எந்திரிச்சு  நின்னு கை தட்டினாள். டைனிங்க் டேபிளுக்கு போய் அப்பா சாப்பிட்ட தட்டை கழுவி வச்சுட்டு குட் நைட் அங்கிள்னு சொல்லிட்டு ரூமுக்கு போயிட்டா..

நான் அப்பாவோட முகத்தை பார்த்தேன். செவ செவன்னிருந்தது.  வெள்ளை முள் தாடியையும் மீறி ஒரு ஜொலிப்பு. ஈஸ்வரன் தட்ச யாகத்தை ஹதம் பண்ணி யோகத்துல ஆழ்ந்திருந்து சனத் குமாரர்களோட வேண்டுகோளுக்கு செவி சாய்ச்சி உபதேசம் பண்ணப்ப தட்சிணா மூர்த்தியா காட்சியளிச்சாராம். அந்த காட்சிய நேர்ல பார்க்கிற மாதிரி இருந்தது. யாராவது டாக்டர்  பக்கத்துல  இருந்திருந்தா "ப்ச் பி.பி ஏறிட்டாப்ல இருக்கு டாப்லெட் போட்டுக்க மறந்துராத"ன்னிருப்பாரோ என்னவோ?

என் அப்பாவ அந்த போஸ்ச்சர்ல பார்க்கிறதுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கவே
" ஹூம்.. வருஷத்துக்கு மூனு தேனிலவு.. மச்சம்தான்" னேன்.

எங்கப்பா " டே.. என்ன புள்ளடா நீ ..உன்னை எந்த பட்டில அடைக்கிறதுன்னே தெரியலடா.. ஓடிப்போயிரு .. இல்லன்னா எதையாச்சு தூக்கி எறிஞ்சுருவன்"ன்னாரு

சிரிச்சிக்கிட்டே. மாடிக்கு போய் படுக்கைல விழுந்தப்ப மணி 12 . எப்ப தூங்கினேன்னு எனக்கே தெரியலை.. காலைல எந்திரிச்சு பால்கனிய பார்த்தப்ப மாயா குளிச்சுட்டு பால்கனிய ஒட்டியிருக்கிற  துளசி செடிக்கு மஞ்ச குங்குமம் வச்சிக்கிட்டிருந்தா.. துளசி மாடத்து பிறைல இருந்த அகல் விளக்கை ஏத்த போற சமயம் " ஏய் மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்"னேன்.

மாயா, "முகேஷ் !காலங்கார்த்தால வம்பு பண்ணாதே.. உனக்கு தீப்பெட்டி வேணம்னா கீழே போய் உன் பாட்டிய கேளு.. இல்லன்னா கடைல வாங்கிக்க. நான் முதல்ல விளக்கேத்தனும்."னா.

நான்" அட .. என்ன நீ என்னமோ பாட்டி மாதிரி பில்டப் கொடுக்கறே.இன்னொரு நாள் நீ தீப்பெட்டிய  எடுத்துட்டு வர  மறந்து என் அறைக்கதவை தட்டி  என் கிட்டே தீப்பெட்டி கேட்டா கொடுக்கமாட்டேனா.. ஏதோ ..ராத்திரிலன்னாலும் பரவாயில்லை  பட்டப்பகல்ல இப்படி விளக்கேத்த வேண்டிய அவசியமென்ன ? ராத்திரில மாத்திரம் எதுக்கு ? அதான் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிச்ச குண்டு பல்பு இருக்குல்ல ஸ்விட்ச் போட்டா எரிஞ்சுட்டு போவுது" என்று கலாய்க்க ஆரம்பித்தேன். மாயா புகை போக்கி அருகே போய் " பாட்டீ,,,,,,,,,,"ன்னு குரல் கொடுக்க சமையலறைல இருந்து பாட்டியோட குரல்

"என்னம்மாச்சு..விளக்கேத்திட்டு வரவேண்டியது தானே"
"இதோ வந்துட்டன் பாட்டி.."ன்னு சடார்னு திரும்ப போனாள் மாயா. நான் அவள் புடவை கொசுவத்து மேல கைய வச்சு தீப்பெட்டிய கொடுக்காம நீ போக முடியாதுன்னேன்.

மாயா, " டே வேணான்டா.. மிச்ச பொம்பள மாதிரி கிடையாது. உன்னோட பலகீனமெல்லாம் தெரிஞ்சவ நானு .. என் கிட்டே மோதாதே"ன்னா சீரியஸா.

  நானு "அடப்போடி'ன்னிட்டு எதோ சொல்லப்போக படக்குனு என் லுங்கிய உருவி தூர எறிஞ்சிட்டா. காலை நேரம்.. சுத்து பக்கத்து மாடிகள்ள பல் தேய்க்கிறவன், பவர் கட் சமயத்துல செல்ஃப் ஷேவ் பண்ண வந்தவன், நடை பயிற்சிக்கு மாடியேறினவனெல்லாம் இருக்கிற நேரம். யோசிக்க நேரமே இல்லை. அலறி புடைச்சி என் ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டேன். கொடி மேல இருந்த டவலை சுத்திக்கிட்ட பிறகுதான் உயிரே வந்த மாதிரி இருந்தது.

அடிப்பாவி ! உன் பலகீனமெல்லாம் எனக்கு தெரியும்னு சொன்னப்பவே நான் சுதாரிச்சிருக்கனும். நான் சாதாரணமா லுங்கிய ஜாயிண்ட் பண்ணி தைக்கமாட்டேன். இதுக்கு பல காரணம் உண்டு. முக்கியமான சமாச்சாரம் ஜட்டியே போட மாட்டேன். இதையெல்லாம் மாயாகிட்டே எப்பவோ உளறியிருக்கனும். வாழ்க்கையே வெறுத்துட்டன்.

வலி,பசி,தாகம் இத்யாதியோட நிர்வாணம் குறித்த ஆண்.பெண் உணர்வுகளும் ஒன்றேதான்னு அப்போ ஞானோதயம் ஆச்சு. கீழே சமையலறைக்கு  போய்  பாட்டி அந்த பக்கமா திரும்பினப்போ தீப்பெட்டிலருந்து நாலு குச்சிகளை பிக்கப் பண்ணி டஸ்ட் பின்லருந்து காலி பெட்டிய பிக்கப் பண்ணிக்கிட்டு படியேறவும்,மாயா  மாடிப்பபடி கீழே இருக்கிற அப்பாவோட பூஜை ரூம்ல இருந்து  வெளிய வரவும் சரிய்யா இருந்தது. புடவைக்கும், ப்ளவுஸுக்கும் இடையில இருக்கிற மடிப்பு பளிச்சுன்னு கண்ல பட அட கையாலே ஒரு பிடி பிடிச்சு  கிள்ளிட்டு மாடிப்படியேறி ஓடினேன்.

தமிழ்ல கண்ணதாசன்,வாலி மாதிரி வேட்டூரி சுந்தரராமமூர்த்தின்னு தெலுங்குல  சூப்பர்  லிரிக் ரைட்டர் ஒருத்தர் இருக்காரு. அவரோட பாட்டு ஒன்னு ஞா வர அதை முனுமுனுத்திக்கிட்டே சிகரட் அடிச்சு விட்டு எல்லாத்தயும் முடிச்சு  குளிச்சு முடிச்சேன்.

" நீ கோக நச்சிந்தி .. நீ ரைக்க நச்சிந்தி
 கோகா ரைக்கா கலவனி சோட்ட சோக்கு நச்சிந்தி"

இதான் அந்த பாட்டு. இதுக்கு அர்த்தம் " உன் புடவை பிடிச்சுபோச்சு. உன் ரவிக்கை பிடிச்சி போச்சு. உன் புடவையும் ரவிக்கையும் சந்திக்காத இடத்து அழகு புடிச்சி போச்சு" கீழே வந்தும் உதட்டுல தொத்திக்கிட்ட அந்த வரிகள் இடுப்பை விட்டு இறங்க மறுக்கும் கைக்குழந்தை மாதிரி இறங்க மறுத்தது.

மாயாதான் ப்ரேக் ஃபாஸ்ட் எல்லாம் ப்ரிப்பேர் பண்ணாப்ல இருக்கு. டைனிங்க் டேபிள்ள அப்பா, சின்ன அண்ணன், தம்பி எல்லாம் இருக்க ஹம்மிங்க் தொடர்ந்தது. மாயா புடவை முந்தானையை இழுத்து இழுத்து செருகி இடுப்பை  மறைக்கறா. ஆனால் அந்த புடவையின் வழவழப்பாலயோ, இல்லே  அந்த பிரதேசத்தின்  வழவழப்பாலயோ நழுவிக்கிட்டே இருந்தது. இடையிடையே ஒரு முறைப்பு. ஆனால் பரிமார்ரதுலயோ, உபசரிக்கிறதிலயோ எந்த வித தடுமாற்றமும் இல்லே. அப்பாதான் "ஏம்மா நேத்து நான் பேசினதுல உனக்கு எதுனா தப்பா பட்டுதா?" " நீ ஒன்னும் வருத்தப்படலியே"ன்னு பேசிக்கிட்டு இருந்தார்.

"ஏம்மா இதுக்கு முன்னே நேரு தெருவுல இருந்தே.. ட்ராவல்ஸ் ஆஃபீஸ் கிட்டக்க இருந்தது.  இப்ப ரொம்ப டிஸ்டன்ஸாயிருமே.. பேசாம ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கறியா"ன்னாரு அப்பா.

எனக்கு பயங்கர கடுப்பு. "அப்பா ! இது ஆனாலும் அநியாயம்.. நான் போன வருஷம் ஒரு டிவிஎஸ் வாங்கிக்கறேன்னா சாலைபாதுகாப்பு வார விழால ட்ராஃபிக் கமிஷ்னர் மாதிரி ஸ்பீச் கொடுத்தே இப்ப இவளுக்கு மட்டும் ஸ்கூட்டி..  ஐ நெவர் எக்ஸ்பெக்டட் திஸ் டைப் ஆஃப் பார்ஷியாலிட்டி ஃப்ரம் யு. "ன்னேன்.

"டே நீ ஏற்கெனவே ஆஞ்சனேயர் மாதிரி உனக்கு டிவிஎஸ் வாங்கித்தர்ரது ஆஞ்சனேயர் வாலுக்கு நெருப்பு வச்ச மாதிரி. நீ செத்தா பரவாயில்லே தாடு தகாதா இல்லே . உன் வண்டில எவன்னா குடும்பஸ்தன் விழுந்து செத்து தொலைச்சா அவன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துருமே அதுக்குத்தான் வேணாம்னேன். வேணம்னா மாயா ஸ்கூட்டில ஆஃபீஸ் போறப்ப பின்னாடி தொத்திக்க"ன்னாரு.

எனக்கு வாழ்க்கையே வெறுத்துருச்சு. "எல்லாம் நேரம்"னு முனகிக்கிட்டே மாயாவோட புறப்பட்டேன்.  ஷேர் ஆட்டோ பிடிச்சு ஆஃபீஸ் கிட்டே  இறங்கினோம்.

கொஞ்ச நேரத்துல முனியம்மா வர ஆஃபீஸை பெருக்கி சாமி படத்துக்கு பூ போட்டு ஊதுவத்தி கொளுத்தி உட்கார்ந்தோம்.  மாயா என் பக்கம் திரும்பவே இல்லை. நான்

" மாயா! ஐம் சாரி"ன்னேன்
"எதுக்கு?"
"காலைல நடந்ததுக்கு"
" நீ எதை சொல்றே ஃபர்ஸ்ட் எபிசோடா? செகண்ட் எபிசோடா?"
" செகண்ட் எபிசோடுதான்"
"அப்ப ஃபர்ஸ்ட் எபிசோடுக்கு நான் சாரி சொல்லனுங்கறியா?"
"அப்படியில்லே  நான் சாரி அவ்ளதான்"
"அப்ப நான் செய்தது தப்பில்லயா?"
"ஆயிரம்தான் இருந்தாலும் நான் ஆம்பளை !"
"அப்ப எதுக்கு அலறியடிச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போய் பூந்துக்கிட்டே?"
"ஒரு கூச்சம் தான்"
"இங்கயும் அதுவே தான் .. வேலைய பாரு. 2200  எஃப்சிக்கு போயாகனும். எல்லாம் ரெடியா?"
"பெயிண்டர் வேலைதான் பாக்கி.. அப்ப நான் பெயிண்டரை பார்த்துக்கிட்டு ஆர்.டி.ஓ போயிர்ரன்"
"சரி"
ஆர்.டி.ஓ ஆஃபீஸ் வேலை முடிய சாயந்திரம் 5.30 ஆயிருச்சு. மாயா ஏதோ துணிக்கு எம்ப்ராய்டரி பண்ணிகிட்டிருக்க நான் ஏதோ பேசப்போக வாட்டர் ஃபில்டர்ல இருந்து   தண்ணிய  பிடிச்சி  டம்ளரை கொடுத்து" முதல்ல இதை குடி" ன்னா. குடிச்சேன். அப்புறம் ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு " இந்த காஃபிய குடி" ன்னா. குடிச்சேன்.

ஹேன்ட் பாகை திறந்து என் ப்ராண்டு சிகரட்டை எடுத்து கொடுத்தா.
" என்னம்மா கண்ணு ஓனருக்கு ஃபோன் கீன் போட்டியா வரச்சொல்லி. இல்லே அவரு ஃபோன் போட்டாரா வரேன்னு உபசரிப்பு பலமா இருக்கு "

"முகேஷ் ! பீ சீரியஸ். உங்க அப்பா ஒரு அமெச்சூர் ஃபோட்டோகிராஃபர்னு சொல்லியிருக்கே.. ஆம் ஐ கரெக்ட்?"
"ஆமாம்"
"உங்க சின்ன அண்ணன் ஒரு காலத்துல சினிமா வாய்ப்புக்காக அலைஞ்சிருக்காருன்னு சொல்லியிருக்கே ஆம் ஐ கரெக்ட்?"
"ஆமாம்"
"உங்க தம்பி காலேஜ் கோயர் .காலேஜ் ஒரு வேளைதான் இல்லையா?"
"ஆமாம்.. இதெல்லாம் எதுக்கு கேட்கிறே?"
" உங்க அப்பா ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோ ஆரம்பிச்சா எப்படி இருக்கும்?"
" என்ன மாயா நீ எங்கப்பாவுக்கு இப்ப 60 வயசு. இந்த வயசுல போய் "
" நோ நோ .. உங்கப்பாவ பத்தி அப்படி சொல்லாதே. அவருக்குள்ள ஒரு வேக்குவம்   இருக்கு.மெயின்லி இந்த ஸ்டுடியோ ஐடியாவே உன் பெரிய அண்ணன் ,சின்ன அண்ணனுக்காகத்தான். "

"தபார்ரா..பெரியவன் தான் வேலையா இருக்கானே"
"அவருக்கு அல்லையன்ஸ் பார்க்கவேணாமா?"
"க்கும் அல்லையன்ஸ் பார்க்கிறதுக்கும் ஸ்டுடியோ வைக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?"
"ஹய்யோ.. பெண்ணை பெத்தவன் பொண்ணு வயசுக்கு வந்ததும் உட்கார வச்சு ஃபோட்டோ பிடிப்பான், ஜடை தச்சு ஃபோட்டோ பிடிப்பான். பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறப்ப கொடுக்க ஃபோட்டோ புடிப்பான். ஆக கல்யாணமாகாத பெண்களோட பயோ டேட்டா ஸ்டுடியோவுக்கு வர நிறைய வாய்ப்பிருக்கு."
" ஹும்..கொக்கு தலைல வச்சி வெண்ணைய பிடிக்கிறேங்கற. அது சரி சின்ன அண்ணனுக்கும் இந்த ஸ்டுடியோவுக்கும் என்ன சம்பந்தம்?"
"பெரியவருக்கு ஆனதும் சின்னவருக்கு பார்க்கனும் இல்லியா?"
"என்னாத்த ..பா........ர்.............க்கனும்?"
"கல்யாணத்துக்கு பொ..............ண்ணு .பொண்ணை குடுக்கிறவன் வெறும்பயலுக்கு கொடுப்பானா. ஸ்டுடியோவே அவருதுன்னு சொன்னா குடுப்பான்"
"கிழிஞ்சது போ.. இப்ப உன் உத்தேசம் என்ன ? டிவி சீரியல்ல வர மாதிரி எங்க குடும்பத்தை உருப்பட வைக்கப்போறியா? அது உன்னால முடியாது"
"உன் குடும்பம் என் குடும்பம்னெல்லாம் கிடையாது. எந்த குடும்பமும் கெட்டுப்போக கூடாது. ஒரு ஸ்டுடியோன்னு வச்சா உன் தம்பியும் அப்பப்ப வந்து போவானில்லையா. ஒரு வேளை இதுல ஆர்வம் வந்ததுன்னா தொழிலை கத்துக்கலாமில்லயா?"
"அது சரி. கிழவனோட நிம்மதிய கெடுத்து குட்டிச்சுவராக்க ஏதோ சதி பண்ணிட்டு அதை மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட் மாதிரி ஃபோக்கஸ் பண்றே"
"ஷிட்.. சொல்ல மறந்துட்டனே.. உனக்கும் கதை,கவிதை ரிப்போர்ட்டிங் இத்யாதில ஆர்வமிருக்கில்லயா.. ஸ்டுடியோன்னு இருந்தா நாலு லோக்கல் ரிப்போர்ட்டர்ஸ் ப்ரோக்ராமுக்கு கூப்பிடவோ, அட்லீஸ் ப்ரிண்ட் போடவோ வருவாங்க இல்லியா அவங்களோட அறிமுகம் உனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தரலாமே"
"சரி மாயா.. இந்த ப்ரப்போசலை அப்பாகிட்ட சொல்றது யாரு?'
"ஏன் நானே சொல்றேன்.."

மாயா எப்போ சொன்னாளோ எப்படி சொன்னாளோ தெரியலை. அப்பா களத்துல குதிச்சாரு. பஸ் ஸ்டாண்ட்ல இருக்கிற  தினத்தந்தி ஏஜெண்ட் ஒருத்தரோட ஆஃபீஸ் மாடில ஒரு கடை காலியா இருக்கிறதா தெரிஞ்சு போய் பார்த்துட்டு அட்வான்ஸ் பண்ணாரு. மள மளன்னு வேலை நடந்தது. வெள்ளையடிக்கிறதுல இருந்து கார்பெண்டரி ஒர்க், கேமரா, ஃபோகஸ் லைட், டெவலப்பர் டார்க் ரூம் எல்லாம் தயாராச்சு. ஸ்டுடியோவுக்கான போர்ட் வந்து இறங்கினதை பார்த்தேன் " சுசி ஃபோட்டோ சொல்யூஷன்ஸ்"  வலது பக்கம் ப்ளாக் அண்ட் வைட்ல சரோஜா தேவி, இடது பக்கம் கலர்ல  பானுப்ரியா.  ராணி முத்து காலண்டர்ல நல்ல நேரம் பார்த்து மாயாதான் தேங்காய் உடைச்சு கற்பூரம் காட்டினாள். முதல் ஆர்டரும் மாயாதான்

 அப்பாவோட ஷெட்யூல் மாறிப்போச்சு.ஒரு நாள் கைசெலவுக்கு பணம் கேட்க வந்த  சின்ன அண்ணனை அப்பா பார்க்குக்கு கூட்டி போய் வித விதமா ஃபோட்டோ எடுத்தாரு. அந்த ஃபோட்டோஸை டெவலப் பண்ணி ப்ரிண்ட் போட்டு அவன் கைல கொடுத்தாரு. பார்த்தயா டி.பி பேஷண்ட் மாதிரி இருக்கு. உடம்பை தேத்து. எதுனா கராத்தே கிராத்தே கத்துக்க. டான்ஸ் க்ளாஸுக்கு போ. மூனு மாசம் டைம் தரேன். மாசத்துக்கு ஆயிரம் ரூபா செலவுக்கு தரேன். ப்ரிப்பேர் ஆகி என் முன்னாடி வா . நான் ரெடின்னு சொல்லு. மறுபடி ரெண்டு ரோல் ஷூட் பண்ணீ ஆல்பம் போட்டுதரேன். சென்னைல தங்க இடம் ஏற்பாடு பண்றேன். மாசத்துக்கு 2000 ரூபா தரேன். ஒரு வருஷம் டைம். ஜெயிச்சா அங்கயே இருந்துக்க. இல்லே ஜெயிக்கலாயா சித்தூர் வந்துரு ஸ்டுடியோவ பார்த்துக்க"ன்னாரு. இப்படி சின்ன அண்ணனோட ஷெட்யூலும் மாறிப்போச்சு.

கடைசில தம்பி. அவனுக்கு என்னைக்குமே ஒரிஜினாலிட்டி இருந்தது கிடையாது. சின்ன வயசுல  எனக்கு நகலா இருந்தான்.ஸ்கூலுக்கு டுப்கி அடிச்சுட்டு  நான் கிணற்றுக்கு போய் நீச்சலடிச்சா அவனும் அடிப்பான். மாங்கா தோப்புக்கு போய் மாங்கா அடிச்சு தின்னா அவனும். பரீட்சைக்கு ஒரு மாசம் இருக்கும்போது பகல்லயே வெள்ளமா டீ குடிச்சிக்கிட்டு பாடம் படிச்சா அவனும் படிப்பான். எங்க உறவு எப்ப அறுந்து போச்சோ சரியா சொல்ல  முடியல. சின்ன அண்ணனுக்கு நகலா தயாராயிட்டான். இப்போ அவன் ஏதோ ஒரு லட்சியத்தோட செயல்பட ஆரம்பிச்சிட்டதால இவன் சும்மா இருக்கமுடியாம டைப்ரைட்டிங்க், ஷார்ட் ஹாண்ட் க்ளாஸுக்கு போனான். லீஷர் அவர்ஸ்ல ஸ்டுடியோல இருப்பான். கொஞ்சம் கொஞ்சமா அவுட்டோர் ப்ரோக்ராம்ஸ் வந்தா அட்டெண்ட் பண்ணவும், டார்க் ரூம்ல டெவலப் பண்ணி ப்ரிண்ட் போடவும் கத்துக்கிட்டான்.

முதல் மாசம் பெரிசா ஒன்னும் வியாபாரம் இல்லே . அடுத்த மாசம் பீடை மாசம். எதுவும் நடக்கிற மாதிரி இல்லே. அப்போ மாயா ஐடியா கொடுத்தா

"அங்கிள் ! இந்த காலத்துல (1988லயே) விளம்பரம்ங்கறது ரொம்ப முக்கியம். அதுக்காக பேப்பர்ல விளம்பரம் பண்றது வீண் வேலை. நமக்கு வித் இன் தி டவுன் விளம்பரம் போதும். நாமே  ஒரு பேப்பர் ஆரம்பிச்சா என்ன?"