பெண்களுக்கு சட்ட சபைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மதியம் 3 மணிக்கு ராஜ்சபையில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த நேரத்துல இந்த பதிவை எழுதறேன். அது நிறைவேறுமோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் இதை எதிர்க்கிற லாலு, முலாயம் & இதரரின் வாதம் சரியானதே என்பது என் கருத்து. அவிக என்ன பெண்களூக்கு இட ஒதுக்கீடு கூடாதுன்னா சொல்றாங்க. இல்லையே மகளிர் ஒதுக்கீட்ல தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கனும்னு தான் கேட்கிறாங்க. ஆணாதிக்க வாதினு தாய்குலம் மண்ணள்ளி தூத்தினாலும் சரி என் கருத்தை இங்கே சொல்லியே உடறேன்.
பெண்களுக்கு நன்மை செய்யறோம்னு வந்த சட்டங்கள்ள நூத்துக்கு 90 சதவீதம் அவிகளுக்கு கெட்டதாதான் முடிஞ்சிருக்கு. அட கருவில் உள்ள குழந்தையின் பால் அறியும் சோதனைக்கான தடைய பாருங்க. என்ன போச்சு தெரிஞ்சிகிடட்டுமே. என்ன பண்ண போறான். கருக்கலைப்பு செய்ய போறான். செய்யட்டுமே. இதனுடைய விளைவு என்னாகும்?
பெண் ஜனத்தொகை ஏகத்துக்கு குறைஞ்சு போயிரும். டிமாண்ட் சப்ளை தியரி படி பார்த்தால் சப்ளை குறைய குறைய டிமாண்ட் ஜாஸ்தியாகும். வரதட்சணை ஒழிஞ்சு போகும். கன்யா சுல்க்கம் முறை திரும்பும். பெண்ணுக்கு பணம் கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிற தகுதி இல்லாத ஆணினனம் சோடி கிடைக்காம சுய இன்பம், ஹோமோன்னு அல்லாட வேண்டி வரும். அல்லாடட்டுமே.
இப்போ ஆண்,பெண் குழந்தைகள் இடையே உணவு விஷயத்துல கூட பாரபட்சம் காட்டப்படுது.(ஏன்னா ஆண் குழந்தைக்கான மெஸ் பில் வரதட்சிணை வடிவத்துல ரீ எம்பர்ஸ்மென்ட் ஆயிருமில்லயா.. )பெண் ஜனத்தொகை குறைஞ்சா , பெண் குழந்தைக்கு கன்யா சுல்க்கம் மூலமா பணம் வரும்ங்கற நிலைமை இருந்தா சரியான உணவாவது கிடைக்கும்.
பெண் குழந்தைக்கும் கட்டாய கல்வி கொடுக்க சட்டம் வந்தது. என்ன லாபம் சின்னஞ்சிறு பிஞ்சுகள் கூட ஆண் ஆசிரியர்களின், காமக்கொடூரத்துக்கு இலக்காகி சாகுதுங்க. சரி விவரம் தெரிஞ்சு கல்லூரி போற நாட்கள்ள (முக்கியமா மேத்ஸ்,சைன்ஸ் மாதிரி இன்டர்னல் மார்க் இருக்கிற சப்ஜெக்ட் படிக்கிற மாணவிகள்) லெக்சரர்கள், டிபார்ட்மென்டல் ஹெட்ஸ்,கல்லூரி நிர்வாகத்தோட செக்ஸ் டார்ச்சருக்கு இலக்காக வேண்டி வருது. இதுல சிட்டி பஸ் கண்டக்டர், இடி மன்னர்கள் இவிக லொள்ளு. சரி நம்ம வேதனைய அந்த தெய்வத்துக்கிட்டன்னா கொட்டிக்கலாம்னு கோவிலுக்கு போணா தேவ நாத குருக்கள் மாதிரி பூசாரிங்க இம்சை, ரோட் சைட் ரோமியோக்கள், ஈவ் டீசர்ஸ், காதலிச்சே ஆகனும்னு ஆசிட் அடிக்கிற பார்ட்டி, கத்தில குத்தற பார்ட்டி ஒன்னா ரெண்டா எல்லாமே இம்சைதான். அந்த குழந்தை எவ்ள பெரிய படிப்பு படிச்சா அதைவிட பெரிய படிப்பு படிச்ச மாப்பிள்ளைய பெரிய விலை கொடுத்து வாங்கனும்.
சரி படிப்பு முடிஞ்சு போச்சு பொண்ணு வேலைக்கு போனா கல்யாண மார்க்கெட்ல டிமாண்ட் ஜாஸ்தியாகுமே, வரதட்சிணைக்கு கொஞ்சம் பணமாவது சேருமேன்னு வேலைக்கு போனா அங்கயும் டார்ச்சர். சில குடும்பங்கள்ள பெண்ணோட சம்பளம் ஒரு அடிஷ்னல் இன்கம்மா இருந்து அதுக்கேத்த கமிட்மென்ட், செலவுகளை இழுத்து விட்டுக்கிட்டு வருமானம் போயிருமேனு கல்யாணத்தை டிலே பண்ற கொடூரமும் நடக்கு.
படிச்சதாலதானே இந்த இம்சை. வேலைக்கு போறதால தானே இந்த டார்ச்சர். சரி கல்யாணம் நடந்துருச்சு. ஏதோ மானமா மரியாதையா ஒருத்தனுக்கு முந்தி விரிச்சு வாழலாம்னு வந்தா சில குடும்பங்கள்ள மாமனாருக்கும், மைத்துனர்களுக்கும் சேர்த்து கற்பை காணிக்கையாக்க வேண்டியிருக்கு.
அத்தனை விலை கொடுத்து வாங்கின இந்த காஸ்ட்லி வைப்ரேட்டர்ஸ் சரியா வேலை செய்யுதான்னா அந்த இழவும் கிடையாது. பேட்டரி வீக், மோட்டர் ஃபங்க்ஷனிங்க் சரியில்ல, சிலது வைண்டிங்கே எரிஞ்சி போயிருக்கும். என்னடா இது பெண்ணினத்துக்கு வந்த வேதனை.
இவனுக என்னவோ நேபாள் மன்னர் , எட்டயபுரம் ஜமீந்தார் பரம்பரை பரந்து விரிஞ்ச ராஜ்ஜியம் இருக்காப்ல அந்த ராஜ்ஜியத்தை கட்டி யாள வாரிசு வேணம்னு ஒரே பரபரப்பு, பதை பதைப்பு வேற. நாய்குட்டிய கடா குட்டியா,பொட்ட குட்டியானு பார்த்து செலக்ட் பண்றாப்ல கர்பத்துலயே ஸ்கேன் வேற.
என்னைக்கேட்டா இத்தனை பிரச்சினைக்கும் ஒரே தீர்வு பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் தான்.
1.அவனவன் கறந்த பசுவா மடி ஒட்டிக்கிடக்க பஸ்ல, ரயில்ல,ரோட்ல பெண்ணை பார்த்தாலும் போஸ்ட் பாக்ஸ பார்த்த மாதிரி போயிருவான். தப்பித்தவறி ஃபீலிங்க் வந்தாலும் "என்னடா இது .. வீர்யம் புரளுது இன்னைக்கு போயிர வேண்டியதுதான்னு முடிவு பண்ணிக்குவான்.
2.வெறும் செக்ஸுக்காக கல்யாணம் பண்ணிக்கிற பன்னாடையெல்லாம் ஒழுங்கா மேன்சன் ஹவுஸ்லயே வாழ்ந்து சாவான். சனத்தொகை குறையும்
(பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தால் விளையக்கூடிய அனைத்து நன்மைகளை பற்றி அறிய இங்கே அழுத்தவும்)
நிற்க .. மகளிர் மசோதா ஆண்வர்க சதின்னியே அதெப்படின்னு கேட்கிற பார்ட்டிங்களுக்கு என் பதில் இதோ:
பால் நிர்ணயம் செய்யும் க்ரோமோசோம் தான் கேரக்டரையும் நிர்ணயிக்குதுங்கற கண்டுபிடிப்பை பற்றி ஏற்கெனவே விவரமா ஒரு பதிவு போட்டிருக்கன் . அதையும் ஒரு பாட்டம் படிச்சுட்டா நல்லது. ஆக ஆணுக்கு ஒரு கேரக்டர், பெண்ணுக்கு ஒரு கேரக்டர் இருக்கு. ஆணுக்கு ஒரு களம். பெண்ணுக்கு ஒரு களம் இருக்கு. இதைத்தான் பகவத் கீதை சுதர்மம்னு சொல்லுதுன்னு நினைக்கிறேன்.( சில அய்யர்மாரு செருப்பு தைக்கிறதுதான் உங்க சுதர்மம்ங்கறாங்க அவங்களை பாம்பு பிடுங்கட்டும்)
பரதர்மம் எவ்ளோ உயர்ந்ததா இருந்தாலும் சுதர்மத்தை கைவிடாதேங்கறது கீதை. பெண் ஆணின் பாத்திரத்தை ஏற்று செயல்பட முடியாதான்னா முடியும். முடியறதே. ஆனால் அவளோட தாய்மை வறண்டு போகுது. சில கேஸ்ல பெண்மையே ஆவியாயிருது.
யதார்த்தத்துல அவ ஒரு ராணுவ அதிகாரியாவோ, டெர்ரரிஸ்டாவோ சக்ஸஸ் ஆனாலும் அவளோட சப்கான்ஷியஸ்ல தன்னை தோத்த கேஸாவே பார்ப்பான்னு நினைக்கிறேன்.
கல்வி,வேலை,தொழில் விஷயத்துல பெண் ஈடுபடும்போதே இதுதான் நடக்குது. ஒரு ஆண் பெண்ணின் பாத்திரத்தை ஏற்று செயல்படும்போது அது அவனுக்கு ஒரு அடிஷ்னல் குவாலிஃபிகேஷனா மாறுது. ஆத்ம திருப்திய தருது. ஆனால் பெண் ஆண் பாத்திரத்தை ஏற்று செயல்படும்போது அவளுடைய தாய்மை,பெண்மை எல்லாம் வறண்டு போய் கடுமையான அதிருப்திக்கு ஆளாயிர்ரா.( நிறைய கேஸ்ல மென்ஸ் ட்ருவல் சைக்கிளே டிஸ்டர்ப் ஆயிருது. மலட்டு தன்மை அதிகரிக்குது. மேலுதட்டுல மீசை முளைக்கலன்னாலும் அவள் ஆணா மாறிர்ரா) இது அவளை மென்டலா, ஃபிசிக்கலா ரொம்பவே பாதிக்குது.
நான் கூட ஆண்மையின் தாக்கம் கொண்ட பெண் சூப்பர்னு எழுதியிருக்கேன். சூப்பர் தான் அந்த குடும்பத்துக்கோ, நிறுவனத்துக்கோ ,சமுதாயத்துக்கோ சூப்பர் தான். ஆனால் தனிப்பட்ட வகைல அவளுக்கு என்ன ஆகுதுங்கறது மனித உரிமை தொடர்பான ஆராய்ச்சிக்கு தகுதி படைத்ததுன்னு நான் நினைக்கிறேன்.
பெண்ணுக்கு ஆண் வர்கத்துல இருந்து இருக்கிற ஒரே மிரட்டல் அவள் கற்புக்கானதுதான்னு நினைச்சா அது தவறு. என்னதான் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி பேட்டை பேட்டையா வேசிகளை போஷிச்சாலும் பல நூற்றாண்டு கால செக்ஸ் வேட்கை தன் சுயரூபத்தை இழந்துட்டதால அது வெவ்வேறு வடிவத்துல( தன தாகம், வன்முறை,அதிகார வெறி) வெளிப்பட்டுக்கிட்டுதான் இருக்கும்.
ஆண் முழுமையான ஆணா இருந்தா பெண்ணை பெண்ணா மட்டும் பார்த்து அவள் கற்புக்கு மட்டும் கன்னம் வைக்க பார்ப்பான். ஆனால் ஆண்கள்ள ஆண்மை சதவீதம் வேகமா குறைஞ்சுக்கிட்டே வரதால நிறைய ஆண்கள் ஆண் பெயர் தாங்கிகளாக இருக்கிறார்களே தவிர ஆண்களாக இல்லை.
இவர்கள் பெண்களை தங்களுக்கு போட்டியாகவும், தங்கள் வாய்ப்புகளை பறிக்க வந்தவர்களாகவும் நினைத்து அவர்களை நக்கல் செய்யவும், சிக்கலில் மாட்டிவிடவும்,அவமானப்படுத்தவும் காத்திருக்கிறார்கள்.
வெற்றிப்பெற்ற பெண்ணை சுற்றி இருக்கிற ஆண்கள் எல்லாம் மெதுவாக மாறி பெண்மையுடன் மிளிர்வதை பார்க்கலாம். ஆனால் தப்பி தவறி அந்த பெண் தோற்றுப்போனால் அவர்கள் மீண்டும் ஆண்பிள்ளை சிங்கங்களாக மாறி " நான் அப்பவே நினைச்சேன் .. நீ இப்படி மாட்டிக்கிட்டு முழிப்பேன்னு இப்பவாச்சும் நான் சொல்றத கேட்டு வீட்டோட இரு "ன்னு டயலாக் சொல்ல காத்திருக்கிறார்கள்.
பெண் தன் பேசிக்கல் கன்டென்ட்ஸை இழந்து ( பெண்மை,தாய்மை) இந்த ஆண் ஆதிக்க உலகில் வென்றாலும் அவள் தலை மீது துரோக கத்தி தொங்கிக்கொண்டே இருக்கிறது.
சரி பெண் ஆண் பாத்திரம் தரிக்கிறாள் என்றே வையுங்கள். அதற்காக அவளிலான பெண் பாத்திரம் ஓய்வு பெற்று உறங்க போய்விடுவதில்லை. உதாரணமாக : ஒரு பெண் எஸ்.ஐ தன் கணவனுக்கோ ,பிள்ளைகளுக்கோ சாப்பாடு பரிமாறாவிட்டாலும் அசந்தர்ப்பமாக ஸ்டேஷனுக்கு வரும் எஸ்.பி க்கோ , கெஸ்ட் ஹவுஸில் அகாலமாய் தங்க வரும் ஹோம் மினிஸ்டருக்கோ உணவு பரிமாறவேண்டி வருகிறது.
அவள் மானசிகமாக ஆணாகவே மாறிவிட்டாலும் ( இது போன்ற பெண்கள் அதிக பட்சம் பாப் வெட்டியிருப்பார்கள் ) உள்ளுக்குள் ஒரு இளகிய பகுதி உருக காத்திருக்கிறது. இதனால் ட்யூயல் ரோல் செய்யவேண்டி வருகிறது. ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியாகவே மாறவும் வாய்ப்பிருக்கிறது. இரண்டு பக்கம் எரியூட்டப்பட்ட மெழுகு வர்த்தியாய் மாறுகிறாள் பெண்.
சுதர்மத்தை கை விட்டு பர தர்மத்தில் ஈடுபட்டதால் , அவளில் இயல்பாகவே உள்ள பலகீனங்கள்(இன்செக்யூரிட்டி, சந்தேகம் இத்யாதி) அதிகரிக்கின்றன. அதனால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த மன அழுத்தத்தில் அவள் அதிகாரத்துக்கு கன்னம் வைக்கும் தம்பி, மச்சினன் போன்ற கேரக்டர்களை அவளால் கவனிக்கவோ,அவர்களை கட்டுப்படுத்தவோ முடிவதில்லை.
இதுவரை சொன்னதெல்லாம் அரசியல் தவிர்த்த இதர துறைகளில் ஈடுபடும் பெண்களை பற்றி மட்டும்தான்.அரசியல் பற்றி அதுவும் இன்றைய திருமங்கலம் ப்ராண்ட் அரசியல், தினகரன் அச்சக எரிப்பு , தா.கி கொலை பற்றியெல்லாம் தனியே சொல்ல தேவையில்லை. என்னதான் இயந்திரமயம், தனியார் மயம், உலக மயம், கன்ஸ்யூமரிசம் எல்லாம் தேவைகளை பெருக்கி , மனித மனங்களை குறுக்கி கல்லாக்கியிருந்தாலும் , போட்டி பொறாமை தலை விரித்தாடினாலும் பெண்ணினத்தில் இன்னமும், இன்னமும் ஒரு வித புனிதத்தன்மை மிச்சமிருக்கிறது. அம்புலிமாமாத்தனம் ,அப்பாவித்தனம், பாசத்துக்கு ஏங்கி, பாசத்தை கொட்டும் தன்மை கொஞ்சமேனும் மிஞ்சியே இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தல்களில் 33 சதம் ஒதுக்கீடு கொடுத்தாலும் பெண் இயல்பாகவே தன் அதிகாரத்தை கணவனுக்கோ, தம்பிக்கோ தத்தம் செய்துவிட்டு தன் சுதர்மத்தை பின்பற்றுவதிலேயே திருப்தியடைகிறாள். (இதை பத்திரிக்கைகள் கிண்டலடித்து எத்தனை கவர் ஸ்டோரி எழுதினாலும் நிலைமையில் மட்டும் மாற்றமில்லை)
சட்டமன்றங்களில் ஒதுக்கீடு கொடுத்தாலும் இதே நிலைதான் தொடரும் . அதில் சந்தேகமில்லை. ஒரு சிலர் (ஆண் தன்மை /இயல்புக்கு மாறான அரிதான ஆக்கிரமிப்பு குணம் உள்ள பெண்கள் ஆண் பாத்திரத்தை ஏற்று அதில் வாழ்ந்து பெண்ணாக செத்தும்போகலாம். அது வேறு விஷயம். உங்க/எங்க ஊர் கவுன்சிலரில் இருந்து இந்திரா காந்தி வரை ஒரு பெண்ணாக தன் பெண்மையை , தாய்மையை பலி கொடுத்துதான் அரசியல்ல சாதனை படைச்சிருக்காங்க.
இப்ப அறிவிச்சிருக்கிற ஒதுக்கீட்டு மசோதால மொட்டையா பெண்களுக்கு ஒதுக்கீடுன்னு இருக்கிறதால இந்த வாய்ப்பை உயர் சாதி குடும்பங்களும், செல்வத்தில் புரள்வோரும், அதிகாரத்தை பரம்பரை பரம்பரையாய் அனுபவித்து வரும் ஆண்கள் மட்டுமே உபயோகித்துக்கொள்வார்கள். மேற்படி குடும்பங்கள்ள உள்ள பெண்கள் அனுபவிக்கிற அடிமைத்தனத்தை விட தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட இனப்பெண்கள், ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்கள் நிலை எவ்வளவோ பெட்டர். இந்த ஒதுக்கீட்ல உள் ஒதுக்கீட்டை அமல் செய்யலன்னா இதன் பலன் உயர் சாதி குடும்பங்களுக்கும், செல்வத்தில் புரளும் குடும்பங்களுக்கும் அதிகாரத்தை பரம்பரை பரம்பரையாய் அனுபவித்து வரும் குடும்பங்களுக்கும் மட்டுமே போகும். அதை பெண்களின் பெயரால் ஆண்கள் மட்டுமே அனுபவிப்பார்கள்.
ஒரு பத்து வருஷத்துக்கு பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி ஆண்கள் அனைவரையும் முழு ஆண்களாக்கி, அவர்களது காம கொடூரங்களில் இருந்து பெண்ணுக்கு முழு பாதுகாப்பு வழங்கி , ஆண்களில் பெண்ணை வெறும் துளையாக பார்க்காது சக பயணியாக பார்க்கும் முதிர்ச்சியை தோற்றுவித்தபிறகு 33 சதவீதம் என்ன 50 சதவீதம் கூட கொடுக்கட்டும்.( சனத்தொகைல பாதியிருக்காங்கல்ல பாதி இடத்தை ஒதுக்கறதுதானே நியாயம்) அப்போத்தான் அந்த ஒதுக்கீடு பெண்ணினத்துக்கு பயன் படும். பயன்படுத்திக்கிற பெண்ணுக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.
இல்லேன்னா இந்த சட்டத்தால கட்சி பதவிக்காகவோ, தேர்தல்ல டிக்கெட்டுக்காகவோ , ஊழல் குற்றச்சாட்டுல இருந்து காபபத்திக்கவோ ஆண் நாய்களின் காலடியில் நாய் பிஸ்கட்டாய் விழுந்து கிடப்பதை தவிர பெண்ணின் நிலையில் வேறு ஏதும் மாற்றம் இருக்காது. இது உறுதி.