Monday, March 22, 2010

உடலுறவும் கான்சரும்

.உடலுறவும் கான்சரும் என்ற தனிப்பதிவை படிக்க வந்த பார்ட்டி, அவசரப்படற பார்ட்டின்னா இதே பதிவுல சிவப்பு எழுத்துல உள்ள விஷயத்தை மட்டும் படிச்சுட்டு போயிருங்கண்ணா.


கொஞ்சம் பொறுமையுள்ள பார்ட்டி , அதிலயும் உனக்கு 22 எனக்கு 32 தொடரை தொடர்ந்து படிக்கிற பார்ட்டின்னா மொத்த பதிவயும் படிச்சுருங்கண்ணா. ஏன்னா இதுதான் மேற்படி தொடரோட லேட்டஸ்ட் அத்யாயம்
 பாமரன் கூட என்னை............காய்ச்சி ங்கற தலைப்புல  தனிப்பதிவையும் (?)போட்டிருக்கேண்ணா.. அதை படிக்க இங்கே அழுத்துங்க‌

ஜோசியருன்னதும் எனக்கு புஸ்ஸுனு ஆயிருச்சு. இதுக்கு காரணம் இல்லாம இல்லே. எங்கப்பா வீடு கட்டிக்கிட்டிருந்தப்போ மார் வரை தாடியும், உச்சிக்குடுமியுமா ஒரு பார்ட்டி அடிக்கடி வரும். அப்பா  அந்தாளு பேச்சை கேட்டுக்கிட்டு வீடு கட்டி முடிஞ்ச பிறகு யக்னம்,யாகம்லாம் கூட செய்தாரு. ஆனாலும் என்ன எங்க அம்மா போய் சேர்ந்துட்டாங்க. பெரிய அண்ணன் ஹாஸ்டல் வாசத்தால ஐசோலேட் ஆயிர, சின்ன அண்ணன் சினிமா பைத்தியத்துல எந்த வேலைலயும் ஸ்திரமா இல்லாம போயிட்டான். ஏதோ மாயா வந்து என்ட்ரி கொடுத்த பிறகு மாமனார் வச்சு குடுத்த ஹார்ட் வேர் கடைய பார்த்துக்கிட்டு வீட்டோட மாப்பிள்ளையாவாச்சும்  இருக்கான். தம்பி முதலிரவன்னைக்கே ஹார்ட் அட்டாக்ல போய்ட்டான்.

இருந்தாலும் வளையாபதியோட திருப்திக்காக கே .வி சாருக்கு ஒரு வணக்கம் போட்டேன்.  நமக்கு முன்னாடி டஜனுக்கு மேல சனம் வெய்ட்டிங். ஒரு மூலைல போய் உட்கார்ந்தோம். ஆள் ஏதோ மெஸ்ஸுக்கு வந்து ஃபுல் மூல்ஸும், மட்டன் சிக்கனுமா  சாப்டுட்டு மேல் பைல இருக்கிற  பணம் போதாம வேட்டிய விலக்கி பட்டா பட்டி ட்ராயர்ல இருந்து பெரிய நோட்டா உருவி தர்ர கிராமத்தான் மாதிரிதான் இருந்தார். நாலு முழ வெள்ளை வேட்டி, அதே நிறத்துல சாதாரண துணில அரைக்கை சட்டை . நெத்தில விபூதி குங்குமம் எதுவுமில்லே.

அவர் பிறருக்கு சொல்றத உன்னிப்பா கவனிச்சிட்டிருந்தேன்.அவரோட வியூகம் ரொம்ப சிம்பிள். முதல்ல பாஸ்ட். அதுலருந்து ரெண்டு சமாச்சாரத்தை அவுத்து விடறது. அப்புறம் ப்ரசண்ட் பத்தி ரெண்டு பாயிண்ட். ஃபைனலா இன்னம் இத்தன மாசம் இத்தனை நாளுக்கு இப்படித்தான் இருக்கும். பலான கோயில் இத்தனை நாள் சுத்துங்க.

அந்த அறைய ச்சும்மா அப்படி PAN  பண்ணா எவனோ கம்ப்யூட்டர் ஜாதக காரன் கொடுத்த வால் க்ளாக்.ஏ4 சைஸ்ல ஒரு சாமி படம். பிள்ளையார்,லட்சுமி,சரஸ்வதி டூ இன் ஒன். பக்கத்துல விவேகானந்தர் கைய மார்ல குறுக்கால கட்டியிருக்கிற படம். ஒரு சின்ன அலமாரி. ஏதோ புக்ஸ். இடது கை பக்கமா ஒரு பிளாஸ்டிக் தண்ணி ஜக். ஒரு அம்பாரம் வெத்திலை ,பாக்கு. அடடா நாம வாங்கிட்டு வரலையேனு வளையாபதிக்கு சைகை காட்டினேன். அவரு ஒன்னும் பிரச்சினையில்லை ..ன்னு சைகை காட்டினார்.


அரை மணி நேரத்துல டஜனுக்கு மேல இருந்த சனம் ஓடிப்போயிருச்சு.  எங்க டர்ன் வந்ததும்  மறுபடி ஒரு வணக்க்ம் போட்டேன். அவரு லேசா கைய உயர்த்திட்டு ஜாதகம் எதாவது கொண்டு வந்திருக்கிங்களான்னாரு.

 நான்," இல்லிங்க சார் . டேட் ஆஃப் பர்த் தெரியும் சொல்லட்டுமா"ன்னேன். தலையாட்டினார். சொன்னேன். பொன்னியின் செல்வன் கலெக்ஷன் பைண்டிங் மாதிரி இருந்த புக் ஒன்னை எடுத்து ச்சும்மா அப்படி பார்த்தார். அதை மூடி வச்சுட்டு

பட படனு என் கடந்த காலத்தை பத்தி நாலு பாயிண்ட் விட்டு யெஸ் ஆர் நோனு கேட்டார். நாலும் எஸ் தான். எனக்கு ஷாக் !

"நீங்க எழுத்தாளரா?"
"ஆமாம் சார்!"
"அரசியல்ல ஆர்வமுண்டா?"
"முதல்ல இல்லே சார். சமீபகாலமா இருக்கு"
"நீங்க உங்களை விட வயசுல பெரிய்ய பெண்ணை மணந்திருக்கனுமே?"
"ஆ.........மா சார்'
"உங்களுக்கு அடுத்து பிறந்தவர் இப்ப இல்லிங்களா?"
"ஆமாம் சார்"
"இப்ப உங்க கேள்விகளை கேளுங்க"
சார்! என் வாழ்க்கைல எனக்குனு ஒரு லட்சியமும் கிடையாது சார் . என்னை  நான் ஒரு மனுஷனா மோல்ட் பண்ணிக்க உதவின என்  தலைவனோட படைல அணி வகுக்கனும் அவ்ளதான்"
அது வரைக்கும் தலைய குனிஞ்சிக்கிட்டு மூக்கை தடவிகிட்டே சொல்லிட்டிருந்தவரு நிமிர்ந்து பார்த்துட்டு "அதாருங்க உங்க தலைவரு"ன்னாரு "என்.டி.ஆர்"னேன். உடனே அவர் முகத்துல பிரகாசம்.

" இப்ப உங்க உதவியெல்லாம் அவருக்கு தேவையில்லிங்க. அதிகபட்சம்  பிரதமராவே ஆனாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. குறைஞ்ச பட்சம் அவர் கை காட்டற ஆசாமிதான் பி.எம். ஆனால் உங்க உதவி தேவைப்படற நேரம் ஒன்னு வரும் ஆனால் அப்ப அவர் இருக்கமாட்டார்"

"வேற ஏதாச்சும் சொல்வாரானு வெயிட் பண்ணேன். ஊஹூம்.. ஒன்னும் பேரல.

மறுபடி ஒரு வணக்கம் போட்டுட்டு வந்துட்டோம். வளையாபதி "என்.டி.ஆர் பேரை சொன்னதுமே அவர் முகத்துல ஒரு பிரகாசம் வந்துருச்சி பார்த்தியா ? ஏன் சொல்லு பார்க்கலாம்"னாரு. அவரும் "என்.டி .ஆர் ஃபேவரட்டா?" இல்லே "இவரும் என்.டி.ஆர் கேஸ்ட் தான்"

அதுவரைக்கும் அவர் மேல என் மனசுல உருவாகியிருந்த மரியாதை ஃபணாலாயிருச்சு. வளையாபதியோட ஒரு டீ,சிகரட் சாப்டுட்டு ஆஃபீஸுக்கு போயிட்டேன்./

மாயாவுக்கு விஷயத்தை சொன்னதும் " நம்ம ஸ்ரீராம் பத்தி என்ன சொன்னாரு"னு பதைப்போட கேட்டா..

"அவங்கம்மா மாதிரியே பொறுமை, அன்பு, சைல்டிஷ் பிஹேவியரோட இருப்பான்"னாரு

"ஏய் நான் கேட்டது அவனோட எதிர்காலம் பத்தி?"

"அதெல்லாம் சூப்பரா இருக்குமாம்"

"இவ்ளதானா சொன்னாரு?"

"இவ்ளதான் அது கூட வளையாபதியோட போனதால. இல்லேன்னா இது கூட பேராது"

"முகேஷ்.. முகேஷ் நாளைக்கு என்னையும் கூட்டு போயேன்"

" நோ .. சுஜாதா  நாவல் மாதிரி எதையும் ஒரு முறை தான் செய்யனும்"

"என்ன முகேஷ் .. நீ அவர் தான் பாஸ்ட்,ப்ரசண்ட்  எல்லாத்தயும்ம் கரெக்டா சொன்னாருன்னியே. இன்னும் ஒரு தடவை எனக்காக ..ப்ளீஸ் ப்ளீஸ்"

" நோ மாயா! அவர் என் மனசுல புதிய கேள்விகளை விதைச்சுட்டாரு. ஐ ஹேவ் டு சர்ச் ஃபார் தி ரைட் ஆன்சர்"

"அப்படி என்ன கேள்வி? "

"எங்கயோ இருக்கிற கிரகம் என் எதிர்காலத்தை நிர்ணயிக்குதுன்னா அது எனக்கு மட்டுமில்லே. என்னை படைச்ச அந்த கடவுளுக்கும் அவமானம். என்னை பொருத்தவரை லைஃப் மீன்ஸ் ஆப்ஷன்ஸ். எவ்ரி செகண்ட் ஈஸ் அ ஜங்ஷன் பாயிண்ட். மனுஷனுக்கு தன் எதிர்காலத்தை தான் வடிவமைச்சுக்கற வாய்ப்பு இருக்கும்னு நம்பறேன். ஏன்னா சரித்திரத்தை புரட்டினா எத்தனையோ பேர் எப்படியோ முடிஞ்சி போயிருக்க வேண்டிய  தங்கள் வாழ்க்கைய மாத்தி காட்டியிருக்காங்க. மனித வாழ்க்கைய எத்தனையோ விஷயங்கள் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது .அதுல இந்த கிரகங்களும் ஒன்னுனு சொன்னா ஐ வில் அக்ரி. வெறுமனே கிரகம்தான்னா .. நோ ..ஐ கெனாட் ..இது என் சுயமரியாதையை பாதிக்கிற விஷயம்"

"த பார்ரா..மறுபடி ஆராய்ச்சியா? வேண்டாம் முகேஷ்..லைஃப்ல எவ்ள குறைவா தெரிஞ்சிக்கறமோ அந்த அளவுக்கு நிம்மதி. நீ வேணா இனி அஸ்ட் ராலஜர்ஸ் கிட்டே போகாம இருந்துரு. இது எலக்சன் இயர். நீ தேர்தல் வேலைய பார்ப்பயா ? இல்லே ஜோசியத்தை ஆராய்ச்சி பண்ணுவயா?"

"என்.டி.ஆர் தோத்துப்போறதுக்கு வெறுமனே கிரகம்தான் காரணம்னா நீயே ஆராய்ச்சின்னதும்  சலிச்சுக்கற அளவுக்கு  அத்தனை மாச தேடலே தேவையில்லே. கர்ணன் சாவுக்கு எத்தனை காரணங்கள் இருந்ததோ என்.டி.ஆரோட தோல்விக்கு அத்தனை காரணங்கள் இருந்தது. என் ரிப்போர்ட்டை நீயும் தானே படிச்சே"

"அதுக்கில்லே முகேஷ்!  அப்பாவும் வீட்டோட இருந்துர்ரார். எப்பயோ ஒரு தடவை தான் ஆஃபீஸ் வரார்.ஸ்ரீராம் பிறந்த பிறகு என்னாலயும் 100% கான்சன்ட் ரேட் பண்ண முடியல. நீ எப்படி இதுக்கெல்லாம் டைம் ஸ்பெண்ட் பண்ணமுடியும்?"

"நீ நக்கலடிப்பே இல்லே. உன் தலைவன் 2.30 க்கு எந்திரிச்சு 4 மணிக்கு ஃபுல் மீல்ஸ் அடிக்கிறாரு. நீ மட்டும் எட்டரைக்குதான் எந்திரிக்கிறேன்னு.. ஒரு ரெண்டு மணி நேரம் முன்னாடி எந்திரிச்சிட்டா போச்சு. ஜஸ்ட் 6 மாசம் ஐ வில் கம் அவுட் வித் எ ரிப்போர்ட்"

"ஏன் முகேஷ் நீ மட்டும் இவ்ளோ சென்சிடிவா இருக்கே. ஒரு வேளை நாளைக்கு உன் ஆராய்ச்சில மனுசங்க எல்லாம் ஜஸ்ட் ஃபுட்பால் தான் . கிரகங்க உதைச்ச திசைல ஓடித்தான் ஆகனும்னு தெரிய வந்தா என்ன பண்ணுவே"

"மாயா கண்ணு! நீ பார்க்கிற உடம்பு முகேஷோட தா இருக்கலாம். ஆனால் மைண்ட் எல்லாம் என் தலைவன் தான் இருக்கான். சின்ன ஃப்ளாஷ் பேக் ஒன்னு சொல்றேன் கேட்டுக்க. சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகத்தையே கூட்டிக்கிட்டு தார் பாலைவனத்துக்கு போயிட்டாரு. குருக்ஷேத்திரம்ங்கற பேர்ல மகாபாரதத்தை படமா எடுக்கிறதா ப்ளான். தலைவரு காத்தால மட்டும் ஒரு சுருட்டு அடிப்பாராம். அப்படி புகை போட்டுக்கிட்டிருந்தப்ப ஏதோ ஸ்பார்க் ஆச்சு போல . தான வீர சூர கர்ணானு ஒரு படம் எடுக்க டிசைட் பண்ணாரு. சொந்த காசு போட்டு கிருஷ்ணாவால பேக் பண்ணிட்டு போக முடியாத ஒன்னு ரெண்டு ஆக்டர்ஸ், அவரால ரிஜெக்ட் பண்ணப்பட்ட ஆக்டர்ஸ், தன்னோட ஃபேமிலி மெம்பர்ஸ். இவிகள வச்சு ஒரு படம் எடுத்து உட்டாரு . இன்னைக்கு குருக்ஷேத்திரம்னு ஒரு படம் வந்ததானு கேட்டா எவனும் யோசிப்பான். ஆனால்  தான வீர சூர கர்ணா சரித்திரத்துல நின்னுருச்சு. வில் பவர் தான் முக்கியம். காந்தி கூட யு ஃபைண்ட் அ வில். தி வில் ஃபைண்ட்ஸ் தி வேன்னாரு. விவேகானந்தா என்ன சொன்னாரு தெரியுமா? உன்னை விட உயர்ந்த பொருள் இந்த படைப்புலயே கிடையாது. அப்படி ஏதாவது உனக்கு உயர்வா பட்டா உன் மனசு வீக்கா இருக்குனு அர்த்தம்"

"என்னவோ போ.........வர வர கிழவாடி ஆயிட்டிருக்கே. எப்ப பாரு ஆராய்ச்சி"

"ஆராய்ச்சின்னா என்ன ? உண்மைய மறைச்சிருக்கிற திரைய கிழிக்கிறது. கன்னித்திரைய கிழிக்கிறதுல இருக்கிற த்ரில்லை விட  உண்மைய மறைச்சிருக்கிற பொய்திரைய கிழிச்சு உண்மையான உண்மைய தரிசிக்கிறதுதான் உண்மையான ஆண்மை "

"ச்சீ .. என்ன பேசிட்டிருந்தோம் .. நீ எந்த சப்ஜெக்டுக்கு தாவறே பாரு..செக்ஸ விட்டா வேற சப்ஜெக்டே கிடையாதா?"

"இதான் ஹிப்பாக்ரசி. மனுஷ உடம்போட மையம் செக்ஸ், மனுஷன் மனசோட மையம் செக்ஸ். ஆணோட உடல்ல தயாராகிற உயிரணு செக்ஸ்ல வெளிப்பட்டே ஆகனும். இல்லேன்னா கான்சர் வந்துரும்"

"ஏய்.. இது உன் கண்டுபிடிப்பா?"

" நத்திங் டூயிங்க். விஞ்சானிங்க உண்மைஅ கண்டு பிடிப்பாங்க. முகேஷ்  அதை ப்ராக்டிக்கல் லைஃப்ல உபயோகத்துக்கு கொண்டுவருவான். ஆணுக்கு எரக்சன்ல (குறி விரைத்தல்) பிரச்சினை வர்ரதுக்கும் , இதய கோளாறு வர்ரதுக்கும் சம்பந்தமிருக்குனு ஒரு கண்டுபிடிப்பு. உபயோகிக்காட்டா மூளை ,மூட்டு, ஜன்ய பாகமெல்லாம் உபயோகமில்லாம போயிரும்னு ஒரு கண்டு பிடிப்பு. ஆண்களுக்கு விந்து வெளிப்படற குழாய்ல விந்துவை வெளித்தள்ள  ஒரு ஏற்பாடு இருக்கு.அதோட பேரு ப்ராட்டஸ்டட்டோ என்னமோ சரியா ஞா வரலை. வயசான காலத்துல அது ஏகத்துக்கு வளர்ந்துருமாம். அதனால தாத்தாக்களுக்கு சதா யூரினல்ஸ் போகனும் போலவே இருக்குமாம். அங்கயும் கான்சர் வர வாய்பிருக்கு. பெண்களுக்கு மார்பகம், கருப்பை வாய்ல கான்சர் வர வாய்ப்பிருக்காம். கான்சனா என்ன ஒழுங்கில்லாத வளர்ச்சி. மனித உடல்ல குறுகிய காலத்துல வேகமா வளர்ர பார்ட்ஸ் என்னெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் கான்சர் அட்டாக் ஆக  வாய்ப்பிருக்கு. மனிதன் வெறுமனே மாமிசமா ,மாமிச ஆசைகளோடவே வாழ்ந்துட்டுருந்தா கூட பரவாயில்லே. அதது கரெக்டா வேலை செய்துட்டுருக்கும். மனசுல காமமிருந்து,உடம்புல தெம்பிருந்து அந்தந்த வயசுக்கு ஏத்தாப்பல அதது நடந்து போக அனுமதிச்சா நோ ப்ராப்ளம்.  ஜஸ்ட் ஹிப்பாக்ரசியால வேஷம் போட்டுட்டிருந்தா கான்சர் என்ன ஜுஜுபி. மன நலமே மட்டாஷ். பைத்தியம்தான். உனக்கு தான் அந்த பிரச்சினையே கிடையாதே லேசா ஹீட் தெரிஞ்சா போதும். யு.எஸ்.ஏல சாம்பிராணி புகைக்கே ஃபயர் இஞ்சின் வந்த்ர்ர மாதிரி முகேஷ் வந்துர்ரான்.."

"சீ சீ ..........என்ன இது என்ன தான் நம்ம சேம்பருக்கு  கண்ணாடி டோர் இருந்தாலும்
இப்படியா பேசறது"

"நீ ஏன் ஓவரா ரியாக்ட் பண்றே . என் பேச்சு வெளிய கேட்காது. ஆனால் உன் கன்னத்து சிவப்பு தெரியும். முதல்ல இந்த கண்ணாடிக்கு ஃபிலிம் ஒட்டச்சொல்லனும்"

"ஸ்ரீ ராமுக்கே அஞ்சு வயசு . கியாபகம் வச்சுக்கோ..'

" அதை பத்தி நீ கவலைப்படாதே கண்ணு.. பையனுக்கும் அப்பனுக்கும் ஒரே முகூர்த்தத்துல முதலிரவு நடக்கும்"

மாயா வெட்கமும் கோபமுமா சேம்பர் கதவை திறந்துக்கிட்டு வெளிய போனாள்.

அன்னைலருந்து  15 நாள் முன் போலவே லைப்ரரிங்க மேலயும் ,பப்ளிகேசன்ஸ் மேலயும் படையெடுத்தேன். ஒரு பக்கம் ஜோதிஷம் தொடர்பான புக்ஸ். இன்னொரு பக்கம் மனிதனோட எதிர்காலத்தை அதுலயும் டெசிஷன் மேக்கிங்கை  நிர்ணயிக்கிற கான்செப்ட்ஸ் எதுவா இருந்தாலும்
அது தொடர்பான புக்ஸ். ஜெனட்டிக் இஞ்சினீரிங், தியரி ஆஃப் கர்மா, சைக்காலஜி, மெடிசின் இப்படி சகல சாதிலயும் வாங்கினேன். ஜோதிஷம் சம்பந்தப்பட்ட புக்ஸை மூட்டை கட்டி வச்சுட்டேன்.

மத்ததையெல்லாம்  விடியல்லயும், ஓய்வு  நேரங்கள்ளயும் படிச்சி பார்த்தேன். ரஃபா ஒரு ஐடியா வந்தது. பேரன்ட்ஸ்,டீச்சர்ஸ்,கொலிக்ஸ், என்விரான்மென்ட், க்ளைமேட், ஒலி,ஒளி,ஸ்மெல், தொடுகை இப்படி ஹ்யூமன் மைண்டை பாதிக்கக்கூடிய கான்செப்ட்ஸ் என்னென்னனு ஒரு லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணேன். ஏண்டான்னா நாளைக்கு ஜோதிஷம்ங்கற கலர் என் மைண்ட்ல ஒட்டிக்கிட்டா இதெல்லாம் பெரிசா தோணாம போயிட  கூடாதுல்லயா.