மாயாவோட கவனம் அந்த புது பிரஜை மேல திரும்பிருச்சு. இது ஒருவித ஜெலஸ கொடுத்தாலும் நான் என் ஆராய்ச்சியை தொடர்ந்துக்கிட்டே இருந்தேன்.இதென்னடா எவனோ ஒரு அரசியல் தலைவன் தோத்துப்போயிட்டா இவன் என்னத்த அந்த தோல்வியை ஆராய்ச்சி பண்றதுனு நீங்க கடுப்பாகலாம்.
இதே கேள்வி ஒரு தடவை மாயா கிட்டே இருந்து கூட வந்தது. அன்னைக்கு ஏறக்குறைய எங்களுக்குள்ள ஒரு விவாதமே நடந்தது.
அப்போ மாயாவுக்கு மூணாவது மாசம். சாதாரணமா மனுஷன் ஒரு பொருளோ,மனிதரோ அவெய்லபிளா இருக்கிற வரை அது மேல/அவர் மேல அந்த அளவுக்கு அக்கறை காட்டமாட்டான். அதை இழந்த பிறகோ அது லேசா ஸ்பாயில் ஆனப்பவோ /அந்த மனிதரோட ரிலேஷன் டிஸ்டர்ப் ஆனப்பவோ அதை நெக்லெக்ட் பண்ணிட்டமோனு ரொம்பவே ஃபீல் ஆயிருவாங்க. அதுக்கப்புறம் அதுமேல கொஞ்சம் எக்ஸ்ட் ரா கேர் எடுத்துக்குவாங்க.
அதுலயும் என்.டி.ஆர் வந்து என் ரத்தம்,சதைல , நரம்புல, ஏன் ஒவ்வொரு அணுவுலயும் கலந்துட்ட பார்ட்டி. இதெல்லாம் ஸ்தூலமான விஷயம் கிடையாது. சைக்கலாஜிக்கல்.
அதனால ஒரு வித கில்ட்டில எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கிட்டேன்.. என் உத்தேசம் ஒன்னுமில்லே அவரோட தோல்விக்கான காரணங்களை தோண்டி எடுத்து அவருக்கு அனுப்பிரனும். அவ்ளதான் என் மைண்ட்ல இருந்தது. இது அவருக்கு செய்யற உதவிங்கற எண்ணமில்லே. அவர் ஜெயிச்சுரனும். அவ்ளதான்.
அவர் நடிகரா இருந்தப்பவோ, அவர் கட்சி ஆரம்பிச்சு ஜெயிச்சு வந்தப்பவோ அவரை பத்தி முழுக்க தெரிஞ்சிக்கனுங்கற எண்ணமெல்லாம் கிடையாது. அவர் ஒரு லெஜண்ட். அவர் சரித்திரத்துல தோல்விங்கறது கிடையாதுங்கற எண்ணத்துல ஓரளவு நெக்லெக்ட் பண்ணேனு கூட சொல்லலாம் .
அவரோட தோல்விய அனலைஸ் பண்ற சாக்குல அவரை முழுக்க தெரிஞ்சிக்கனுங்கற துடிப்பு வந்து பக்கத்து மாவட்டங்கள்ள இருக்கிற லைப்ரரிங்க மேல யெல்லாம் படையெடுக்கிறது. என்.டி.ஆர் பத்தின செய்திகளை சேகரிக்கறதுமே வேலையா இருந்த காலம். அதுக்காக ரொட்டீனை விட்டுட்டு போற பாவத்தெல்லாம் கிடையாது. வாரத்துல ஒரு நாள். சேகரிப்பு. தினசரி ராத்திரி ஒரு மணி நேரம் சார்டிங். அனலைசிங் அவ்ளதான்.
மாயாவோடது லேட் ப்ரக்னன்ஸி+ ஃபர்ஸ்ட் ப்ரக்னன்சிங்கறதால அவளுக்குள்ள எனென்னமோ பயங்கள் ,சந்தேகங்கள் நானும் என்னால ஆன மட்டும் தைரியம் சொல்லிக்கிட்டுதான் இருந்தேன். ஆனால் நாளுக்கு நாள் அவளோட கேள்விகள் அதிகமாச்சே தவிர குறையற மாதிரி காணோம். பெட் ரூம்ல நைட் லேம்ப் வெளிச்சத்துல நான் ஏதோ பழைய பேப்பரோட ஜெராக்ஸை சீரியசா படிச்சு குறிப்பெடுத்துக்கிட்டிருக்கிற நேரம் மாயா , முகேஷ்! முகேஷ்! னு கூப்டுக்கிட்டே இருந்தாள். நான் "மாயா! வில் யு ஷட் அப்"னேன்.
அவ்ளதான் மாயா பயங்கர கடுப்பாயிட்டா ' என்னடா நீ என்ன நினைச்சிட்டிருக்கே உன் மனசுல ? என்.டி.ஆர்னா ஒரு நல்ல நடிகர் நானும் ஒத்துக்கறேன். கட்சிய ஆரம்பிச்ச சில மாசத்துல ஆட்சிய பிடிச்சு கின்னஸ் புக்ல கூட இடம் பிடிச்ச பார்ட்டி ஒத்துக்கறேன். அந்தாளு தோத்துப்போனதுல எனக்கும் வருத்தம் தான். அதுக்காக கட்டின பெண்டாட்டி வாயும் வயிறுமா இருக்கேன். முகேஷ்.. முகேஷ்னு கூப்டுக்கிட்டே இருக்கேன் .பதில் பேசமாட்டேங்கறே .. மறுபடி கூப்டா வில் யு ஷட் அப்ங்கறே..அப்போ நீ இத்தனை நாள் காட்டின அன்பு,காதல் எல்லாம் பொய்யா"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டா.
எனக்கும் பயங்கர கடுப்பு நான் படிச்சிக்கிட்டிருந்த விஷயம் அப்படி..அதை கடைசில சொல்றேன். முதல்ல சிகரட் பாக்கெட்டை தேடி ஒரு சிகரட்டை எடுத்து பத்த வச்சுக்கிட்டேன். ஆழமா ஒரு தம் இழுத்துட்டு பேசஆரம்பிச்சேன்.
"த பாரு மாயா ! நான் தமிழ்காரன். நீ தெலுங்குக்காரி. என் கூட பழக ஆரம்பிக்கறதுக்குமுந்தி உனக்கு சுட்டு போட்டாலும் தமிழ் வராது. ஏதோ என் கூட பழகி தமிழ்ல டபுள் மீனிங் டைலாக் பேசினா கூட புரிஞ்சிக்கிற ரேஞ்சுக்கு தேறிட்ட. நம்மை சேர்த்து வச்சது நான் கத்துக்கிட்ட தெலுங்கு. என் தெலுங்கு அவர்கிட்டே இருந்து வந்தது,, என்னடா இவ நம்மை விட பெரிய வயசா இருக்காளே இந்த காதல் கல்யாணத்துல முடியுமானு யோசிக்காம ப்ரொசீட் ஆனேனே.. அந்த தன்னம்பிக்கை வந்தது அவர் கிட்டே இருந்து தான். உன்னை கவர்ந்த என் சுய கவுரவம், ஓரளவாவது விடா முயற்சி, ஓரளவுக்காவது டிசிப்ளின் இதெல்லாம் வந்ததும் அவர் கிட்டே இருந்துதான்.
ஒரு நாள் உங்கப்பாவ பத்தி ஒரு விஷயம் சொன்னே.உன்னை பெண் பார்க்க வர இருந்தவங்களுக்கு உன் காதலன் ஏதோ கச முசானு லெட்டர் போட்டுர அவிக வராமயே போயிட்டாங்க. நீ கொல்லைப்புறம் போய் துணி துவைக்கிற கல் மேல உட்கார்ந்து அழுதுக்கிட்டிருந்தே. அப்போ உங்கப்பா வந்து உன் தலை மேல கைய வச்சு "யம்மாடி நீ அழாதடா.. நான் செத்து பிறந்துவரதுக்கு லேட்டாயிரும் . அதனால ஒன்னு பண்றேன் . நான் செத்து ஒரு நல்ல பையன் மனசுல புகுந்து உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு தரேன்னு சொன்னாருன்னே. பேசிக்கிட்டே இருக்கும் போது என் கைய எடுத்து உன் தலை மேல வச்சிக்கிட்டு ஆனந்த கண்ணீர் விட்டே. உன்னை எனக்குள்ள உங்கப்பாவ ஃபீல் பண்ண செய்த மெச்சூரிட்டி, ஃபாதர்லி நெஸ் இதையெல்லாம் கொடுத்தது என்.டி.ஆர். இப்போ படிச்சிக்கிட்டிருக்கேனே அவரோட வாழ்க்கை இதுதான் என் ஆன்மீகத்துக்கு கூட பிள்ளையார் சுழி போடப்போகுது . சிம்பிளா சொன்னா ஏற்கெனவே பல தரம் சொன்னமாதிரி என்னோட ஐடியல் ஹி. சின்னப்பசங்களுக்கு சூப்பர் மேன் மாதிரி, ஜெய் ஹனுமான் மாதிரி என்.டி.ஆர் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் தோத்து போவாருனு நான் கனவுல கூட நினைக்கலே. அவர் தோத்த் போனதை என்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியலை.
யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நான் என்.டி.ஆரா மாறி பல காலமாச்சு. அவரோட ஃபார்முலாதான் என் ஃபார்முலா. அவர் வெற்றி என் வெற்றினு ஆகிப்போச்சு. அவர் ஜெயிச்சே ஆகனும். இல்லேன்னா சைக்கலாஜிக்கலா நான் நொறுங்கி போயிருவன். அப்படி நான் நொறுங்கி போனா பரவாயில்லேன்னா இன்னும் கத்து.. என் பிரச்சினை உனக்கு சைல்டிஷா தோணலாம். இருந்தாலும் அதை புரிஞ்சிக்கிட்டு என்னை என் போக்குல விட்டுரனும் . அதான் காதல். . உன்னோட கற்பனை பயங்களை நான் ஒதுக்கி தள்ளலையே மூணுமாசமா மூவாயிரம் தடவை அதே கேள்விகளை கேட்டாலும் புதுசா கேட்ட மாதிரி பாவிச்சு உனக்கு பதில் சொல்லிட்டு தானே இருந்தேன். உன் குரலுக்கு நான் ரெஸ்பாண்ட் ஆகலன்னா என்னையும் மீறி, உன் மேலான ஈர்ப்பையும் மீறி வேறு ஏதோ கான்செப்ட் என்னை கட்டிப்போட்டிருக்குன்னு புரிஞ்சிக்கிட வேணா . "
மூச்சு விடாம நிதானமான குரல்ல நான் பேசினதை மாயா கண் சிமிட்டாம பார்த்துக்கிட்டே இருந்தா. மெதுவா என்னை நோக்கி நடந்துவந்து "ரியலி சாரிடா"ன்னாள்.
"மாயா யு டின்ட் ஹேவ் கமிட்டட் எனி சின்.யு நீட் நாட் பெக் ஃபர் சாரி. நான் இவ்ள நேரம் பேசினதெல்லாம் ஜஸ்ட் என்னை புரிஞ்சிக்க சொல்லி நான் வச்ச வேண்டு கோள். இந்த சமுதாயம் வேணம்னா என் பெர்சனாலிட்டிய மட்டும் மட்டும் பார்க்கலாம். இந்த வார்த்தை முகமூடிங்கற அர்த்தத்தை தரக்கூடிய ஒரு வேர் சொல்ல இருந்து வந்த வார்த்தை. ஆனால் நீ என்னோட பெட்டர் ஹாஃப் இல்லியா உனக்கு என்னோட அசலான முகம் தெரியனுமில்லியா. என் நொய்மை, பலகீனங்கள் தெரியனும்லியா அதனாலதான் இவ்ள நீளமா பேசினேன்.. "
மாயா தன்னிச்சையா என் மார்ல முகத்தை புதைச்சுக்கிட்டாள். இந்த சம்பவத்துக்கப்புறம் இந்த விசயத்துல எங்க ரெண்டு பேருக்குள்ள எந்த விவாதமும் வந்ததில்லே.
சில சமயம் கலாய்ப்பதுண்டு. "ஆமாடா அன்னைக்கு என்னவோ யத்பாவம் தத்பவதி நான் தான் என்.டி.ஆர் அது இதுனு டயலாக் பேசினே. அவர் விடியலுக்கு முந்தி ரெண்டரைக்கு எந்திரிச்சு யோகா பண்ணுவாராம். நீ என்னடான்னா எட்டரைக்கு தானே எந்திரிக்கிறே."
"அந்த நேரத்துல குருவுக்கும் சிஷ்யனுக்கு வித்யாசமிருக்கனும்ல அதான் விட்டு வச்சிருக்கேன்"னு கழண்டுக்குவேன்.
தமிழ் சினிமாலன்னா காலண்டர் காகிதங்கள் படபடத்திருக்கும். ஒரே சீன்ல எங்க பையன் ஸ்ரீராம் கான்வென்ட் வேன்ல ஏறிக்கிட்டு டாட்டா சொல்லியிருப்பான்.
ஆனால் வாழ்க்கைனு பார்க்கறப்ப கால சக்கரம் ரொம்ப நிதானமாதான் சுழலுது. நாலு வருஷங்கள் ஓடினது நாலு யுகம் மாதிரி தெரிஞ்சது.
நம்ம டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல ரெண்டு பஸ் நாலு பஸ்ஸாச்சு. மக்கள்ள ஒரு க்ரூப் 52 பேரோட சேர்ந்து போறத விட தங்கள் குடும்பம் மட்டும் சேர்ந்து போனா போதும்னு நினைக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு டாட்டா சுமோ, ரெண்டு ட்ராக்ஸ் வாங்கி சேர்த்தோம். மேனேஜ்மென்டுக்கு ஆள் தேவைப்பட ஸ்டுடியோல ஒர்க் பண்ற சந்தீப் தன் அப்பாவை ரெகமண்ட் பண்ணான்.. கொஞ்சம் அதிகமா பேசினாலும் பழைய ட்ரைவர்ங்கறதால நல்ல சர்க்கிள் இருக்குனு தெரிஞ்சது. அவரோட பொறுப்புல விட்டோம்.
இதற்கிடைல சந்தீப்போட காதல் எபிசோட் . சின்னதா பஞ்சாயத்து பண்ணி கல்யாணம் செய்து வச்சோம். ட்ராவல்ஸ்ல ரிசப்ஷனின்ஸ்டா சேர்ந்த மீரா கொஞ்சமா பணம் சேர்த்து வச்சிருக்கிறதா சொல்லி வீடு வாங்க உதவி கேட்க மாயா ஸ்ட் ராங்கா ரெகமண்ட் பண்ண ஒரு லட்ச ரூபா ஒரு ரூபா வட்டிக்கு கொடுக்க ஏற்பாடு செய்தேன் .மீரா இன்னும் சின்சியரா வேலை செய்ய ஆரம்பிச்சா.
லோக்கல் பேப்பரும் சிக்கலில்லாம போய்க்கிட்டிருந்தது.ஆமுதால முரளி முதல்ல இதென்னடா ஓசி பேப்பருன்னு அசால்ட்டா இருந்தது நிஜம்தான். ஆனால் பிஸினஸ் டெவலப் ஆக ஆக ஸ்டேட்டஸ் ஜாஸ்தியானதால பெரிய சர்க்கிள் எல்லாம் நம்ம பேப்பர்ல விளம்பரம் தர ஆரம்பிச்சாங்க. வருமானம் கூட என்.டி.ஆர் என் ஞான தந்தைனு ஒரு சீரியல ஆரம்பிச்சோம். கட்சி சர்க்கிள்ளயும் நம்ம பேப்பர் பிரபலமாக ஆரம்பிச்சது. ஏம்பா .. உங்க பேப்பரை ஃப்ரீயா வாங்கிக்க கில்ட்டியா இருக்குப்பா .. ஒரு ரூபா விலை வைக்கலாமில்லையானு நிறைய பேர் சொல்ல ஆரம்பிச்சாங்க.
அதையும் அப்ளை பண்ணோம். பேட்டை சரவணன்னு ஒருத்தர் அறிமுகமாக அவரை சர்க்குலேஷனுக்கு அப்பாயிண்ட் செய்தேன். அவர் ஜில்லா ஜில்லாவ போய் ஒர்க் அவுட் பண்ண சர்க்குலேஷன் பிச்சிக்கிச்சு. மேஜர் டெய்லீஸ்ல விளம்பரம் தர சந்தாவும் நல்லாவே சேர ஆரம்பிச்சாங்க. இந்த கான்செப்ட் சக்ஸஸ் ஆனத பார்த்து நிறைய பேரு ஸ்டார்ட் பண்ணி பாதில விட்டாங்க.
ஸ்ரீராம் பிறந்து 3 மாசம் ஆகறதுக்குள்ளயே அப்பா "டே முகேஷு.. இதுக்கு முன்ன மாதிரி இப்ப தள்ளல. ரவுண்ட் தி க்ளாக்கெல்லம் என்னால ஆஃபீசுல இருக்க முடியாது"ன்னிட்டாரு. பாட்டியும், அப்பாவும் ஸ்ரீராம பார்த்துக்கறதாவும் மாயா பழைய படி ஆஃபீஸ் வரதாவும் அரேஞ்ச் பண்ணிக்கிட்டோம்.
மானில அரசியல் கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிக்க ஆரம்பிச்சது. சப்சிடி ரைஸோட விலை ஏறுச்சு. என்.டி.ஆரோட ஸ்கீம்ஸ் எல்லாம் உடைப்புக்கு போக ஆரம்பிச்சது. என்.டி.ஆரும் தான் எம்.ஜி.ஆருக்கு டூப்ளிக்கேட் இல்லேன்னு நிரூபிக்கிற விதமா எதிர்கட்சி தலைவரா கூட தன் முத்திரைய பதிக்க ஆரம்பிச்சாரு. கூடவே ரெண்டு படம் கூட பண்ணாரு. ஆனால் எதுவும் பேர் சொல்லல. மறுபடி பழைய அத்யாயம் அரங்கேறுச்சு. முதல்வர் மாறினாரு. புது முதல்வர் சப்சிடி ரைஸ் வாங்கறவன்லாம் ஏழையில்லே போலி ரேஷன் கார்டுகள் அதிகமா இருக்குனு சொல்லி சர்வேக்கு ஆர்டர் போட்டு ரேஷன் கார்டுகளை பறிமுதல் பண்ணாரு .மக்கள் மத்தில ஆளுங்கட்சி மேல அதிருப்தி அதிகமாச்சு. என்.டி.ஆர் நல்லாவே கீர் போட ஆரம்பிச்சாரு.
இதுக்குள்ள என்.டி.ஆர் தோல்விய பத்தின என் ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது. நீட் ரிப்போர்ட் ஒன்னு ப்ரிப்பேர் பண்ணி வீட்டு விலாசத்துக்கு ரெஜிஸ்தர் தபால்ல அனுப்பினேன். மறுதபால்ல " என் மேலும், கட்சி மேலும், மானில முன்னேற்றத்தின் மேலும் அக்கறை கொண்டு தாங்கள் மேற்கொண்ட ஆய்வும், முயற்சியும் பாராட்டுக்குரியன. முதல் கட்டமாக தாங்கள் தெரிவித்திருக்கும் யோசனைகளில் சிலவற்றை அமல் செய்கிறோம். பிற யோசனைகளை நேரம் வரும்போது நிச்சயம் அமல் செய்வோம்னு என்.டி.ஆர் கையெழுத்தோட லெட்டர் வந்தது.
இந்த கடித பிரதியை பத்திரிக்கைகளுக்கும் கொடுத்தோம். விஷயம் தெரிஞ்சு ஜகன் (சுயேச்சை எம்.எல்.ஏ) கூப்பிட்டனுப்பினார். நீ யாருக்கு டெடிக்கேட்டடா இருக்கேங்கறது முக்கியமில்லப்பா. ஐ பௌ டு யுவர் டெடிகேஷன். காலம் வரும். நிச்சயம் நீ என் பக்கத்துல இருப்பேனு வாழ்த்தினார்.
என்.டி.ஆர் லோக்கல் பார்ட்டி மெஷினரிக்கும் ஏதோ சிக்னல் கொடுத்தாப்ல இருக்கு அவிக கூப்டு அனுப்பினாங்க. பிரச்சார கமிட்டில ஏதோ மெம்பர் மாதிரி ஏதோ சப்பயான போஸ்டிங் போட்டாங்க. நமக்கு கட்சி,கட்சி பதவியா முக்கியம். தலைவரோட வெற்றிதான் முக்க்கியம்னு ஏத்துக்கிட்டேன். தொகுதிக்குள்ள சுத்தி வந்து லோக்கல் வி.ஐ.பி களோட போக்கால ஹர்ட் ஆகி கட்சில இருந்து ஒதுங்கியிருந்தவுகள எல்லாம் மொபிலைஸ் பண்ணேன். ஜகன் சாருக்கே ஒரு கட்டத்துல எரிச்சலாயிருச்சுன்னா பார்த்துக்குங்களேன்.
அப்பதான் வளையாபதினு என் அண்ணனோட ஃப்ரெண்ட் ஒருத்தர் என்.டி.ஆர் மறுபடி சி.எம் ஆகனும் அவ்ளதானே வா நாம கே.வி சார் கிட்டே போலாம்னாரு.
போய் பார்த்தா அவர் ஒரு ஜோசியர். எனக்கு புஸ்ஸுனு ஆயிருச்சு. அவர் முகத்துல மூக்குதான் பிரதானமா இருந்தது.
(தொடரும்)