Tuesday, March 30, 2010
ஜானகியை பின்னியெடுத்த எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் தன் மனைவி ஜானகி எம்.ஜி.ஆரை பின்னியெடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார்.இது தொடர்பாக ஒரு மூன்றாவது நபர் தலையிட்ட போது அவருக்கு என்ன நேர்ந்தது இத்யாதி விசயங்கள் சர்வ நிச்சயமாக இந்த பதிவில் உள்ளன. பொறுமையாக படிக்கவும்.
மனிதர்கள் யாவரும் சமம் என்பது அவர்களின் அத்யாவசிய தேவைகள் நிறைவேற்றப்படும் வரையிலும்,உயிர் பாதுகாப்பு,செக்ஸ் தேவைகள் நிறைவேற்றப்படும் வரை மட்டுமே. பலருக்கு இவற்றை பெறும் தகுதி கூட இல்லாதிருக்கும். என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் இவை அவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே என் பரிந்துரை.
மற்ற படி மனிதர்கள் யாவரும் சமம் என்பது உட்டாலக்கடி. பீலா. மனிதர்களில் பல்வேறு வகையினர் உள்ளனர்.சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் ஒரு தொடரை பார்த்தேன். மனிதர்களை தாவர வகை, மிருக வகை, தாதுவகை என்று பிரித்து ஆய்ந்திருந்தார் கட்டுரையாளர். இதுவும் ஒரு கோணம் மட்டுமே. இதுவே முடிவானது அல்ல.
மனிதர்களில் பல்வேறு இழி குணங்கள் கொண்டவர்கள் உள்ளனர். அவர்களின் பிறப்பு,வளர்ப்பு,படிப்பு,பதவி,ஹோதா இவற்றிற்கும் அவர்களது இழி குணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. மேலும் இந்த குணங்கள் பகலில்,மக்கள் மத்தியில் வெளிப்படாது. அனைவரிடத்திலும் வெளிப்படாது.எவனொருவன் இவர்களை எதிர்க்கவே முடியாத நிலையில் உள்ளனரோ , எவனொருவன் திருப்பி அடிக்க முடியாத நிலையில் உள்ளானோ அவன் மீது இந்த இழிகுணங்கள் பாயும்.
எம்.ஜி.ஆரை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சட்டசபையில் கலைஞர் ஏடாகூடமாக கேள்விக்கேட்டு லொள்ளுபண்ணிவிட்டாலோ அல்லது தலைவரின் மனசு பாதிக்கும்படி ஏதேனும் சங்கதி நடந்துவிட்டாலோ வீட்டுக்கு வந்து ஜானகி எம்.ஜி.ஆரை பின்னி எடுத்துவிடுவாராம்.
ஒருதடவை ஜானகி மதுரை முத்துவிடம் இந்த குணத்தை சொல்லி அழுதாராம்."வயசாயிருச்சுப்பா அடி தாங்க முடியல"
அதிர்ந்து போன மதுரை முத்து வாத்தியார் மதுரை போனப்போ லேசா சப்ஜெக்டை தொட்டுக்காட்டி உங்களுக்கிருக்கிற இமேஜுக்கு இதெல்லாம் தகாது வாத்யாரே என்று சொல்லியிருக்கிறார்.
உடனே வாத்தியார் " நானே உங்கிட்ட இது பத்தி பேசனும்னு இருந்தேன் . நீ ஒரு தரம் சென்னை வா பேசிரலாம்"னு சொல்லியிருக்கார். முத்துவும் உற்சாகமா போனார்.
வாத்தியார் கேட் கிட்டே நின்னு முத்துவை வரவேற்றிருக்கார். வீட்டுக்குள்ளே கூட்டிப்போனார். தனியறைக்கு போனாங்க. வாத்தியாரோட பாதுகாவலர்கள் இருந்தாங்க. முத்துவை போட்டு புரட்டி எடுத்துட்டாங்க. மூஞ்சி, முகம், உடம்பு, வேட்டி,சட்டை ,அண்டர் வேர் எல்லாமே நார் நாரா கிழிஞ்சுருச்சு. அடுத்த அறைக்கு வாத்தியார் கூட்டிப்போனாரு. அங்கே புது வேட்டி,சட்டை,அண்டர்வேர், எல்லாம் இருக்கு. "முத்து ! குளிச்சுட்டு வாப்பா.. சாப்பிடலாம்"னாரு வாத்யாரு.
டைனிங் டேபிள்ள வாத்தியார் கவனிச்ச கவனிப்பு முத்துவுக்கு மாமனார் வீட்ல கூட கிடைச்சிருக்காது. இப்போ வெளிய போய் முத்து என்ன சொல்வாரு. அடி உதை வாங்கினத சொல்வாரா? இல்லே வாத்தியார் விழுந்து விழுந்து கவனிச்சதையா?
இது எந்த அளவுக்கு நிஜம்னு யாமறியோம் பராபரமே. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தா ஆச்சரியமே படமாட்டேன். ஏன்னா நம்ம எக்ஸ்பீரியன்ஸ் அப்படி..
சிலரில் சில குணங்கள் மேஜராய் இருப்பதால் அதை அடிப்படையாக கொண்டு அவர்களை தனி குழுவாய் பிரித்து வைத்து வர்ணிப்பது எளிதான வேலை .ஆனால் இது தவறு என்பது என் கருத்து.
பின்னே நீ மட்டும் சூரிய,சந்திர மனிதர்கள்னு பதிவை ஆரம்பிச்சிருக்கியேப்பானு க்ராஸ் பண்ண துடிக்காதிங்க. இந்த சூரிய, சந்திர குணாம்சங்கள் மனிதர்களில் கலந்தே வெளிப்படுகின்றன.
ஒரு குணம் ஒரு பிரிவினரில் தூக்கலாகவும், மற்றொரு பிரிவில் மங்கலாகவும் தெரிந்தாலும் மேற்படி குணங்கள் ஒரே நிலையில் இருப்பதில்லை. தலைகீழாய் மாறிவிடுகின்றன. சூரிய மனிதன், சந்திர மனிதனாயும், சந்திர மனிதன் சூரிய மனிதனாகவும் மாறிவிடுகிறான். இந்த மாற்றத்துக்கு சில நேரங்களில் சில நிமிடங்கள் கூட போதுமானதாக உள்ளது.
சூரிய மனிதர்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல். பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல். தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் ஆண்மை நிரம்பிய குணம். ஃபாதர்லி நேச்சர்.
சந்திரமனிதர்கள்:
ஒருவித குளுமை, தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும். தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும். எவரேனும் போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம். பெரிய பிரச்சினை வந்துவிட்டால் நம்பியவரை கைவிட்டு தப்பித்துக்கொள்ளுதல் இந்த சந்திரமனிதர்களின் இயல்பு. சிக்கனம். இன் செக்யூரிட்டி , சந்தேகம் இவர்களுடன் பிறந்தவையாகும். .குடும்பபாசம், க்ஷணிக காதல்கள் (கண்டதும் காதல்?). பெரிய மனிதர் வீட்டு பெண்கள் இவர்களால் சீக்கிரம் கவரப்படுவார்கள். சுருக்கமாய் சொன்னால் பெண்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.
இந்த குண நலன்கள் அமைய அவரவர் ஜாதகங்களும் ஓரளவு காரணமாகின்றன.
சந்திரன் கெட்டவர்கள் ( நீசம், 6,8,12 ல் நிற்க பிறந்தவர்கள், கேதுவுடன் சேர்ந்திருக்க பிறந்தவர்கள் ) சூரிய குணம் கொண்டவர்களாக வளருகின்றனர்.
சூரியன் கெட்டவர்கள் ( நீசம், 6,8,12ல் நிற்க பிறந்தவர்கள், ராகுவுடன் சேர்ந்திருக்க பிறந்தவர்கள். சந்திர குணம் கொண்டவர்களாக வளருகின்றனர்.
சூரிய சந்திரர்கள் இரண்டு பேருமே கெட்ட நிலையில் பிறந்தவர்கள் சிறையில், தலைமறைவு வாழ்வில் இருப்பர்.
ஆமா இந்த குணங்கள் எப்படி ஒரு நிமிடத்தில் மாறிவிடும் என்றால் சுவாசம் மாறும்போது. அதென்ன சுவாசம் மாறுவது?
அது மட்டுமே அல்லாது சூரிய சந்திரர்கள் ராசி மாறும்போதும், ராகு,கேதுக்களுடன் இணைவது உள்ளிட்ட பல காரணங்களாலும் இந்த குணங்களில் ஏத்த குறைச்சல் இருக்கும்.
உலக மக்களனைவரையுமே இந்த இரண்டு பிரிவில் அடக்கி விடலாம்.
இவர்களால் நாட்டுக்கு நன்மை ஏற்பட என்ன செய்யவேண்டும்.?
அவரவர் தனிப்பட்ட வாழ்வில் தோல்வியை தவிர்த்து வெற்றியை பெற என்ன செய்யவேண்டும்.?
இந்த கேள்விகளுக்கெல்லாம் அடுத்த பதிவில் பதிலை காண்போம்.
Labels:
Janaki MGR,
married life,
MGR,
சோதிடம்,
பாலியல்,
மனவியல்