"ஏய்.. ஏய் என்ன இது அம்மா ஆச்சி, அக்கா ஆச்சு, காதலி ஆச்சு, இப்ப அண்ணியா?"ன்னிட்டு மாயா சீறினா.
"மொத்தத்துல நீ ஒரு சரியான ட்யூப் லைட் சாரி வாழைத்தண்டுன்னு நிரூபிச்சிட்ட. ரெண்டு பெண்கள் அவங்களுக்கிடையிலான உறவு எதுவானா இருக்கட்டும். அந்த உறவோட எல்லையை தாண்டி அவங்களுக்குள்ள நெருக்கம் ஏற்பட்டுதுன்னா அவங்க சப்கான்ஷியஸா லெஸ்பியனாதான் இருப்பாங்க. இரண்டு ஆண்கள் அவங்களுக்கிடையிலான உறவு எதுவானாலும் சரி அந்த உறவோட எல்லையை தாண்டி அவங்களுக்குள்ள நெருக்கம் ஏற்பட்டுதுன்னா அவங்க சப்கான்ஷியஸா ஹோமோவாதான் இருப்பாங்க. அதே மாதிரி ஒரு ஆண்,பெண் அவங்களுக்குள்ள எந்த உறவு வேணம்னா இருக்கட்டும் சப் கான்ஷியஸா அவங்களுக்கிடையில் உடலுறவுக்கான இச்சை இருக்கும். நீ என் அம்மாவானாலும் சரி, அக்காவானாலும் சரி, அண்ணியானாலும் சரி இதே கான்செப்ட்தான்.என்ன ஒரு சின்ன வித்யாசம்னா நீ என் காதலியா இருந்தா அந்த சப்கான்ஷியஸ் இச்சை கான்ஷியஸுக்கு வந்து வெளிப்பட்டு செயல்வடிவம் பெறும் தட்ஸால் "
"என்ன நீ வர வர ரொம்ப மோசமா போயிட்டே இருக்கே.. நீ என்ன பெரிய ஸ்காலரா கண்டதையும் சொல்லி இதான் இவ்ளதாங்கறே.."
"ஒரு தடவை ஏதோ அரசு நிகழ்ச்சில ஒரு ஸ்காலர் பேசிக்கிட்டிருந்தாராம். அவர் சொன்னார் , இவர் சொன்னார்னு பேசிக்கிட்டே இருந்தாராம். அப்போ மேடைல இருந்த காமராஜர் அவிக சொன்னதெல்லாம் கிடக்கட்டும். நீ என்ன சொல்றே அதை சொல்லுன்னாராம். ஸ்காலர்ங்க பொசிஷனெல்லாம் இதான்."
"முகேஷ் ஆனாலும் நீ சொல்றதெல்லாம் அநியாயமா இருக்கு.. இதெல்லாம் உண்மையா இருந்தா என்ன பண்றதுன்னு குலை நடுங்குது."
" எந்த குடும்பத்த வேணம்னாலும் பாரு அப்பனுக்கு பெண் குழந்தை மேல அஃபெக்சன் அதிகமா இருக்கும். அம்மாவுக்கு ஆண்குழந்தை மேல அஃபெக்சன் அதிகமா இருக்கும். "
"இதை எங்கயோ படிச்ச மாதிரி ஞா."
"படிச்சிருப்பே .. நான் என்ன இது என் கண்டுபிடிப்புன்னா சொன்னேன்"
தற்செயலா வாட்சை பார்த்த மாயா "முகேஷ் ! டைம் 9 ஆகுது. இதுதான் உங்க வீட்ல எனக்கு முதல் நாள். முத நாளே லேட்டா போனா பேஜாராயிரும் வா போகலாம்"ன்னு ஒரு ஆட்டோவை நிறுத்தி தான் வாங்கின குப்பை கூளங்களையெல்லாம் அதில திணிச்சா . நான் ஆட்டோ ட்ரைவர் பக்கத்துல செட்டிலாக வேண்டியதாயிருச்சு.
வீட்டுக்கு போனா பாட்டி, தம்பிதான் இருந்தாங்க. நான் மணிரத்தினம் சினிமா மாதிரி. "இது மாயா - ட்ராவல்ஸ்ல என் கொலிக் - தெரு ரூம்ல குடிவந்திருக்கிறது இவங்கதான்"னு அறிமுகப்படுத்தினேன் . அவன் விரோதமா பார்த்து "ஹாய்"ன்னான். மாயா" ஹலோ"ன்னிட்டு பாட்டிய பார்த்து இன்னைக்கு என்ன மெனு.. மதியம் உங்க ப்ரிப்பிரேஷன் சூப்பர். இப்ப என்ன பண்ணியிருக்கிங்க சாப்பிடலாமா ன்னாள்
பாட்டி என்னாத்த மெனு.. கை கால் கழுவிக்கிட்டு வந்து சாப்பிடுங்க"ன்னாள். மாயா சின்ன குழந்தை மாதிரி ஒவ்வொரு கண்டெயினரா திறந்து பார்த்து வாவ்னாள்.
பாட்டியோட கை பாகத்தை பத்தி சொல்ல ஆரம்பிச்சா நொந்துருவிங்க..இதுன்னுல்ல எத பண்ணாலும் அதுல பாட்டியோட டச் இருக்கும், எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும் அடிச்சிக்க முடியாது. ரெகுலர் ஐட்டம்ஸோட ஸ்டேண்ட் பை ஐட்டம்ஸ் நிறைய இருக்கும். அதுல நிறைய ரீ சைக்கிளிங்க் தான் . உதாரணமா ரசத்துல போட்டு தூக்கி எறிஞ்சுருவமே காஞ்ச மிளகா அத வச்சு ஒரு சட்னி அரைப்பா பாருங்க. அப்படியே கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்க தோணும். அதை வச்சுக்கிட்டு ஒரு டஜன் இட்லிய உள்ள தள்ளியிருக்கன்."
சாப்பிட்டு முடிச்சம். நான் கைய துடைச்சிக்கிட்டு மாயாவை பின் தொடர்ந்தேன். பாட்டி , என் தம்பிய கண்ணால சுட்டிக்காட்டிக்கிட்டே"த.. எங்க போற ..கொஞ்சம் இரு இதையெல்லாம் மூடி வச்சுட்டு நானும் வரேன்"ன்னாள். நான் புரிஞ்சிக்கிட்டு பாட்டிக்கு டைனிங்க் டேபிளை சுத்தப்படுத்தறதுல உதவ ஆரம்பிச்சேன். என் தம்பி நட்ட நடு ஹால்ல பாய போட்டுக்கிட்டு டி.வி ரிமோட்டை கையில எடுத்துட்டான்.
இங்கே எங்க வீட்டோட ஜியாக்ரஃபிய கொஞ்சமா சொல்லிட்டா இனி வர சந்தர்ப்பங்களை புரிஞ்சுக்க ஏதுவா இருக்கும்னு நினைக்கிறேன். கிழக்கு பார்த்த வாசல். அகலம் கம்மி. நீளம் ஜாஸ்தி (64 அடி) . தலை வாசலை திறந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டா கட்டக்கடைசில இருக்கிற புழக்கடை கதவுதான் தெரியும். லெஃப்ட் சைடெல்லாம் பேசேஜ். உள்ளாற நுழைஞ்சதும் ஒரு வராண்டா அங்கே தான் சைக்கிள்ஸ் நிக்கும். அங்கே ஒரு இரட்டை கதவு . அதை தாண்டி போனா ரைட் சைட்ல ஒரு சின்ன ஹால் ஹால் உள்ள போயி தான் தெரு ரூமுக்கு போக முடியும். அங்கே தான் மாயாவுக்கு ஏற்பாடாயிருக்கு. சரி வெளிய வந்துருங்க மறுபடி பேசேஜை பிடிங்க இப்ப மறுபடி ரைட் சைட்ல கதவிருக்கும் அது மாடிப்படிக்கானது. படிகளுக்கு கீழே எங்க அப்பாவோட பர்சனல் பூஜை ரூம். ஜேஜியெல்லாம் பார்த்தாச்சுல்ல கன்னத்துல போட்டுக்கிட்டு வெளிய வந்துருங்க.மறுபடி பேசேஜை பிடிச்சா ரைட் சைடு பெரிய ஹால். இதுக்கு கதவு கிதவெல்லாம் கிடையாது.. என்ட்ரன்ஸ்ல ஒரு டேபிள் சேர் அதுலதான் எங்கப்பா சதா ஏதாச்சும் படிச்சுக்கிட்டு எழுதிக்கிட்டு இருப்பார். ஹால்ல குபேரமூலைல இருக்கிற மூலப்பலகை மேல டிவி, வடக்குச்சுவரை ஒட்டிக்கிட்டு டைனிங்க் டேபிள் ..ஹால்லருந்து மேக்கால ஒரு கதவு உள்ள நுழைஞ்சா பெரிய பூஜையறை. சுவத்துக்குள்ளயே குடவரை கோவில் மாதிரி பிள்ளையார் மாடம். பூஜையறைல இருந்தும் கிச்சனுக்கு ஒரு கதவு. இல்லாட்டி மறுபடி பேசேஜை பிடிச்சு நாலு தப்படி வச்சா ஒரு கமான் வளைவு அதுல நுழைஞ்சாலும் கிச்சன்.கிழக்கை பார்த்து சமைக்கறாப்ல சமையல் மேடை. வடக்கு சுவத்துல பெரிய அலமாரி. பாட்டி நிர்வாகம். கொஞ்சம் கச கசன்னு தான் இருக்கும். வெளிய வந்துருங்க.. மறுபடி பேசேஜை பிடிச்சா இன்னொரு இரட்டை கதவு. இதை தாண்டி உள்ற போனா லெஃப்ட் கார்னர்ல ஒர் அட்டாச்ட், அது பக்கத்துலயே தனித்தனியா ஒரு கக்கூஸு ,ஒரு பாத்ரூம்.
இப்ப மாயா தங்கபோற தெரு ரூம்லயும் ஒரு அட்டாச்ட் கட்டியாச்சு. பாட்டி இரு வரேன்னதும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு பாட்டியோட மாயா அறைக்குள்ள நுழைஞ்சேன். மாயா நைட்டிக்கு மாறியிருந்தாள். மறு நாளைக்கு தேவையான உள்ளாடை , புடவை,ப்ளவுஸ் எடுத்துவச்சிக்கிட்டிருந்தப்ப முதல்ல பாட்டியும், பாட்டிய தொடர்ந்து நானும் நுழைஞ்சோம். மாயா முதல்ல கொஞ்சம் போல திணறினாலும் பாட்டி கைய பிடிச்சிக்கிட்டு வா.. வாங்க பாட்டி உட்காருங்கன்னு தன் பெட் மேல உட்கார வச்சுக்கிட்டா . நான் தயங்கி நிற்க பாட்டி என் கைய பிடிச்சு இழுத்து உட்காரேண்டான்னு உட்கார வச்சா.
அந்தகதை இந்த கதை பேசிக்கிட்டிருந்ததுல நேரம்போனதே தெரியலை. "கெய்வீ ..ஏ கெய்வீ .. எங்க செத்தா இந்த கிழவி"ன்னு சின்ன அண்ணன் குரல் கேட்டுது. பாட்டி குரல் கொடுத்தா.." யப்பா நீ என்றும் பதினாறாவே இருப்ப ஆவட்டும் .. நாய்க்கு வேலையில்லயாம் நிக்க நாழியில்லயாம் .. போய் சாப்ட்டு படு.. ஊட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க"ன்னா. யாரதுன்னு ஹால் வரை வந்துட்டவன் கதவு கொஞ்சம்போல சாத்தியிருக்கிறத பார்த்துட்டு "இப்ப இன்னன்றே நீ வந்து சோத்த போடமாட்டியா" ன்னான். பாட்டி இப்ப இன்னா சம்ஸ்கிருதத்துலயா சொன்னென்.. சாப்டு போ செத்த பேசிக்கினு வரேன்னாள்.
கொஞ்ச நேரத்துல அப்பா வந்துட்டாரு. அவர் செருப்பு விடற சத்தத்தை கேட்டுட்டு ரெண்டு பேரும் வெளிய வந்தோம். பின்னாடியே மாயா.." என்ன அங்கிள் லேட்டு?"ன்னா.
அப்பா பேண்ட் சட்டைய கழட்டி , கழுத்து மாலைய கழட்டி வேட்டிக்கு மாறிக்கிட்டே " ஹும்.. என்னம்மா பண்றது இந்த காலத்து புள்ளைங்க அப்பன் சம்பாதிச்ச சொத்து மட்டும் வேணும்ங்கராங்க. அப்பன் சேர்த்துக்கிட்டு பொம்பள மட்டும் வேணாங்கறாங்க.. என் ஃப்ரெண்ட் ..அதான் உன் ரூமை ஆல்ட்டர் பண்னானே ஏ.சி நாயக்கர் அவன் வீட்லதான் பஞ்சாயத்து. சின்ன இடமும் அப்படியே இருக்கு. பெரிய இடமும் அப்படியே இருக்கு.. நம்ம சி.எம். கதைய பாரேன். அவ்ளோ பெரிய ஸ்டார். ராட்சச மெஜாரிட்டியோட ஜெயிச்சு வந்தாரு. இந்தபயலுவ அனாவசியமா அந்த பொம்பளய அதான் லக்ஷ்மி பார்வதிய டார்கெட் பண்ணி பெரியவருக்கு ஆப்பு வச்சிட்டானுங்க.."ன்னாரு.
பொதுவா எல்லாரையும் பார்த்து"எல்லாம் சாப்டாச்சுல்ல .. போய் படுங்க"ன்னிட்டு.. மாயாவ பார்த்து "தபாருமா உன் டைமிங் எப்படியோ அப்படியே மெயின்டெயின் பண்ணிக்க. இந்த வீட்ல நாங்க தூங்க ராத்திரி 12 ஆயிரும். கிழவி காலைல 4 மணிக்கெல்லாம் எழுந்து அதை இதை உருட்டிக்கிட்டு கிடக்கும் . இதையெல்லாம் பார்த்து தயங்கிக்கிட்டிருந்தா உன் ஹெல்த் ஸ்பாயிலாயிரும். போம்மா போய் படுத்துக்க"ன்னாரு.
மாயா, பரவால்ல அங்கிள் டூர் பஸ் டூருக்கு கிளம்பறாப்ல இருந்தாதான் விடியல்ல போக வேண்டியிருக்கும் . மத்தபடி பத்துமணி டைம்தான். இனி இங்கேதானே இருக்கப்போறேன். உங்க டைமிங்க் தான் என் டைமிங்கும்னாள். டிவில காமெடி டைம் ஓட அப்பா .. "ஹும் பார்த்தயாம்மா பொழப்பே சிரிப்பா சிரிக்க போவுது இவனுக காமெடி டைம் பார்க்கிறானுங்க. (அப்பா பேச பேச சின்ன அண்ணன் கோவமா எழுந்து சட்டைய மாட்டிக்கிட்டு மாடிக்கு போனான். தம்பி சேனல் மாத்தி ந்யூஸ் சேனலுக்கு வந்து வால்யூமை குறைச்சான்.) என் வைஃப் போயி ரெண்டு வருஷமாச்சு. ஒரு வீட்ல எதுனா துக்கம் நடந்தா உடனே ஒரு சுப காரியம் நடக்கனும்பாங்க .. நான் என்னத்தை சுப காரியம் பண்றது. பெரியவன் ஹைதராபாத்ல இருக்கான். பெத்த அப்பனுக்கு லெட்டர் எழுதறான். வெல் அண்ட் விஷ் டு நோ தி செம் ஃப்ரம் யு. ஹ்யர் தி வெதர் ஈஸ் ஸோ ஹாட். என்னய்யா பொண்டாட்டி செத்துப்போயிட்டாளே .. எனக்கு ஒரு பொண்ணை பாரு .. கல்யாணம் பண்ணிக்கிறேன் விளக்கேத்த ஒரு பொண்ணு வரட்டும்னு எழுதலாமே..அட அப்பன்னா அத்தனை மரியாதையா.. கல்யாணம் பத்தி எத்தனை கடிதாசு போட்டிருப்பேன் ...ஒன்னுத்துக்காவது பதில்? ஊஹூம்................." (அப்பா பேச்சை நிறுத்தற மாதிரி இல்லே மாயா முகத்துல ஒருவித குழப்பம். அந்த இறுக்கமான சூழ்நிலைய என் ஸ்டைல்ல மாத்த " பேசாம நீயே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கயேன்பா..பிரச்சினை படக்குனு தீர்ந்து போவுமில்லை"ன்னேன்.