Saturday, March 20, 2010

சில பதிவுகளுக்கான எதிர்வினை

அண்ணே வணக்கம் ! அக்கா வணக்கம் ! இன்னைக்கு "உனக்கு 22 எனக்கு 32" தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் போட்டிருக்கேன். அதை இங்கே க்ளிக் பண்ணி படிச்சுருங்க.. உங்க எதிரிவினைகளுக்காக திறந்த மனதுடன் காத்திருக்கிறேன்.

நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மலேசிய பேச்சின் ஆடியோ கேசட்டை இளமையிலேயே கேட்டிருக்கிறேன். அதில் ஒவ்வொரு வார்த்தையும் ஞா இல்லாவிட்டாலும் என் நினைவு தனக்கென்று ஒரு ஸ்பீச்சை தயாரித்து சேகரித்து வைத்துள்ளதோடு அவ்வப்போது ரீவைண்ட் செய்து கேட்டும் களிக்கிறது. வலையுலகத்தில் கூட அதற்கான சுட்டியை பார்த்ததாய் ஞா. என்னடா மிஸ்டர். முருகேசன் எதிர்வினைனு தலைப்ப வச்சுட்டு சொதப்புறாருனு பல்ல கடிக்கிறது கேட்குது. வயசாகுதுல்லியா பாயிண்டுக்கு வர பத்து லைனாவது பிடிக்குது.

மேற்படி பேச்சுல ஒரு வரி. ஒரு நாய் எங்கயோ குலைக்குமாம். அதை கேட்டுட்டு இன்னொரு நாய் குலைக்குமாம்னு வரும். இதுக்கு சோடாபுட்டிகண்ணாடிகள் உலகத்துல எதிர்வினைனு பேரு.

வினைங்கற வார்த்தைக்கு செயல்னு நேரடி அர்த்தம் கொள்ளலாம். இலக்கணத்துல கூட இதே அர்த்தத்துல தான் புழங்குது.

வினைன்னா வில்லங்கமான அர்த்தம் கூட இருக்கு. தன் வினை தன்னை சுடும் வீட்டப்பம் ஓட்டைச்சுடும்னு ஒரு பிரயோகம் கூட இருக்கு. அதனாலதான் விளையாட்டு வினையாச்சும்பாங்க. அவனா ..அவன் உடம்பெல்லாம் வினைப்பா.ம்பாங்க.

வினைன்னா செயல். எதிர்வினைன்னா ? ஊஞ்சல்ல உட்கார்ந்து ஆடியிருக்கிங்களா? நீங்க முன் நோக்கி உந்தி தள்ளினிங்கன்னா அது தானா பின்னோக்கி வரும்.இதை ஊஞ்சலின் எதிர்வினைன்னு சொல்லலாமா? அல்லது அதை முன் நோக்கி உந்தி தள்ளின உங்க செயலின் எதிர் வினைன்னு சொல்லலாமா?

(உந்தின்னா தொப்புள்னு கூட ஒரு அர்த்தம் இருக்கு. பெண்களுக்கு கருப்பை வாய்ல கான்சர் அட்டாக் ஆவுற மாதிரி இருந்தா தொப்புள்ள இருந்து திரவம் கசியுமாம். தொப்புள்னா என்ன? நாம தாயோட கருப்பைல இருந்தப்ப நமக்கு உணவு கொடுத்த சப்ளை சேனல் தட்ஸால். அதை எப்படி செக்ஸ் சிம்பலாக்கினாங்கனு புரியல. இல்லே நம்ம ஊருக்கு முந்தின ஸ்டாப் வந்ததுமே ஒரு பரபரப்பு வருமே அந்த மாதிரியா என்ன புரிய்லை.)

எதிர்வினை பத்தி பேசிட்டிருந்தோம். ஓஷோ வினையாற்று. எதிர்வினையாற்றினா வினையாற்றினவனோட அடிமையாயிர்ரங்கறார். இந்த ஸ்ட்ராட்டஜியை எல்லார் விஷயத்துலயும் எப்பவும்(சதா, கான்ஸ்டன்டா) ஃபாலோ பண்ணலன்னாலும் அப்பப்போ ட்ரயல் பார்த்திருக்கேன்.

எதிராளி நாயேங்கறது வினை. நீங்க பேயேங்கறது எதிர்வினை. நாயேங்கறவனை கேஷுவலா "சொல்லுங்க சார்..அப்புறம்.."னா அது வினை.

இத்தீனி பில்டப் கொடுத்தது சமீபத்துல நான் படிச்ச சில பதிவுகளுக்கு எதிர் வினை யாற்றலாமானு யோசிக்கதான். (வினைங்கறது அவ்ளோ சூடா இருக்குமா அதை என்ன ஆத்தறது?)

இந்த எதிர்வினைங்கற வார்த்தைக்கு தெலுங்குல "ஸ்பந்தனா"ன்னு ஒரு அழகான வார்த்தை இருக்கு. உங்க காதலி உங்க காதுல ஏதோ சொல்லவர்ராங்கனு வைங்களேன் அப்போ உங்க உடம்பு எதிர் வினையாற்றும். ஒரு மாதிரி சிலிர்க்கும். அதை உடம்போட எதிர்வினைங்கலாம்.

தமிழ்ல எதிர் வினையாற்றினார்ங்கறத தெலுங்குல ஸ்பந்திஞ்சாருனு சொல்லலாம்.இதை இங்கிலீஷ்ல ரெஸ்பாண்டட், ரெஸ்பான்ஸ்னு சொல்வாய்ங்க. ரெஸ்பான்ஸ்பிலிட்டி (பொறுப்பு) ரெஸ்பாண்டட், ரெஸ்பான்ஸ் இந்த 3 வார்த்தைக்கும் உள்ள தொடர்பை பாருங்க.

அதாவது (சமூக) பொறுப்பிருக்கிறவன் ரெஸ்பான்ஸ் கொடுப்பான் . ரெஸ்பாண்ட் ஆவான். உணர்ச்சியிருக்கிற உடம்பு ரெஸ்பாண்ட் ஆகும். உணர்வுகள் உள்ள மனம் ரெஸ்பாண்ட் ஆகும். பொறுப்புள்ளவன் எதிர்வினையாற்றுவான்.

இந்த மொக்கை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா? எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணனோட ரைட்டிங் ஸ்டைல் இதான்னு நினைக்கிறேன்.

ஆர். சதீஷ் குமார் என்னை அடிக்கடி வியந்து பாராட்டற பார்ட்டி.அவரு ஜாதக யோகங்களை பத்தி ஒரு பதிவு போட்டிருந்தார். பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டு பொறுப்பா வெண்பா எல்லாம் கலெக்ட் பண்ணி போட்டிருந்தார். வெண்பா எழுதின பார்ட்டிக்கே பொறுப்பு கிடையாது. இதுக்கு சதீஷ் குமாரை எப்படி பொறுப்பாக்க முடியும்.

ஜோதிஷமும் அல்ஜீப்ராவும் ஒன்னு. ரெண்டுக்கும் நிறைய ஒத்துமை உண்டு. அதை ஒரு உதாரணம் மூலம் விளக்க ட்ரை பண்றேன்.

அல்ஜீப்ரால ப்ளஸ்ஸும் ப்ளஸ்ஸும் சேர்ந்தா மைனஸாயிரும்.

ஜாதகத்துல உச்சமான கிரகத்தை உச்சமான கிரகம் பார்த்தா ரெண்டு கிரகமும் ஃபணால்.

அல்ஜீப்ரால மைனஸும் மைனஸும் சேர்ந்தா ப்ளஸ்ஸாயிரும்.

ஜாதகத்துல நீசமான கிரகத்தை நீசமான கிரகம் பார்த்த நீசம் பங்கமாயிரும்.

(ஒரு கிரகம் நீசத்தில் நின்று - கால் வலிக்காதோ? - அது நின்ற இடத்ததிபதி உச்சம் பெற்றாலும் யோகம்தானு சொல்றாங்க. அதாவது ஸ்டேட்ல நம்ம பார்ட்டி ஃபணாலாயிட்டாலும் சென்டர் கொய்லிஷன்ல நாம இருக்கறாப்ல)

பஞ்ச மஹா புருஷ யோகம்னு ஒரு கான்செப்ட் இருக்கு. கிரகங்கள் ஆட்சி,உச்சம் பெறுவதால் வரும் யோகங்களை விவரிக்கிறாங்க.

உம்: குரு ஆட்சி ,உச்சம் பெற்றால் ஹம்ச யோகம், செவ்வாய் ஆ..உ பெற்றால் ருசக யோகம், புதன் ஆ.உன்னா பத்ர யோகம், சனி ஆ.உன்னா சச யோகம்,சுக்கிரன் ஆ.உ பெற்றால் மாளவ்ய யோகம்.

இது ஒரு கவர்ன்மென்ட் ஆர்டர்ல கொடுக்கப்படற முதல் பாரா மாதிரிதான். அடுத்த பாராவையும் முழுக்க படிச்சா தான் மேற்படி ஜி.ஓனால நமக்கு பெனிஃபிட் உண்டா இல்லையானு டிசைட் பண்ண முடியும்.

நம்ம ஆளுங்க அவசர குடுக்கைங்களா? நுனிப்புல் கேஸுங்களா? இல்லை என் வொக்காபலரிப்படி சுக்லாம்பரதரம் கேசுங்களானு தெரியலை. பெரிய பெரிய ஜூரிங்க உட்பட ஜி.ஓல முதல் பாராவ அப்ளை பண்ணிட்டு ஆகா ஓகோன்னிர்ராங்க.

ஆட்சியோ உச்சமோ பெற்ற கிரகம் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு லக்னாத் சுபனா? நைசர்கிக சுபனா? கூட யார் இருக்கிறது? இதையெல்லாம் பார்த்துட்டுதான் யோகத்தை டிசைட் பண்ணனும்.

உ.ம் குரு. இவர் ஆட்சில இருந்துட்டா போதாது. இவர் சுபரா இருக்கனும்( நைசர்கிக சுபத்வ,பாபத்வத்தைவிட லக்னாத் சுபத்வ,பாபத்வமே முக்கியம்னு நம்ம அனுபவம் சொல்லுது. மேலும் அவர் சூரியனோட சேர்ந்து அஸ்தமிக்கிறது, சனி,ராகு,கேதுவோட சேர்ந்திருக்கிறது, அல்லது அவர் ஆ..உ பெற்ற இடம் 6,8,12 ஆ இல்லாம இருக்கிறதுனு ஆயிரத்தெட்டு நிபந்தனை இருக்கு.

இதையெல்லாம் கூட்டி கழிச்சு டிசைட் பண்ற யோகம் தான் ஒர்க் அவுட் ஆகும்.

யோகம்னா சேர்க்கைனு ஒரு அர்த்தம் இருக்கு. உடலுறவுக்கு சம்யோகம்னு ஒரு ஆல்ட்டர் நேட்டிவ் வார்த்தை கூட இருக்கு. சம் ங்கறது திரு,திருமதி மாதிரி அடைமொழி. முருகேசன், திரு முருகேசன் மாதிரி.

ப்ராப்திஞ்சுனு - சம்ப்ராப்திஞ்சுனு
பந்தம் - சம்பந்தம்
கீதம் - சங்கீதம் (சம் +கீதம் )

ஆக சேர்க்கை நடந்துட்டா போதாது அது அம்சமாவும் இருக்கனும் அப்பதான் அது உண்மையான யோகம். ஓகேவா மிஸ்டர் சதீஷ்குமார். தொடர்ந்து எழுதுங்க. நாம எழுதறது சில நூறுபேருக்காகத்தான்னாலும் இன்னம் கொஞ்சம் டீப்பா ,ஷார்ப்பா எழுதுவமே.

இன்னொரு பார்ட்டி திருமண பொருத்தங்களை நக்கலடிச்சும், இன்னொரு பார்ட்டி எண் கணிதத்தை நக்கலடிச்சும் எழுதியிருக்காங்க. நானேதும் ஜோதிஷத்துக்கு அஃபிஷியல் ஸ்போக்ஸ் மேன் கிடையாதுதான். இருந்தாலும் நமக்கு தெரிஞ்சத சனங்க முன்னாடி கொட்டி வைப்போம்னு ஒரு சொறி.

திருமண பொருத்தம்:

நம்மாளுங்க (முன்னோர்கள்) எந்த அளவுக்கு ப்ராக்டிக்கல் பர்சன்ஸ்னா ஜாதகங்களை பொருத்தவும், நட்சத்திர பொருத்தங்கள் பார்க்கவும் ரூல்ஸ் எல்லாம் கொடுத்துட்டு இந்த பொருத்தங்களை விட வது,வரர்களின் மனப்பொருத்தமே முக்கியம்னு சொல்லியிருக்காங்க. இது எத்தனை பேருக்கு தெரியும்?

மனப்பொருத்தமில்லாம கல்யாணம் பண்ணி தொலைச்சா அது எப்படி நிலைக்கும். அதுக்கும் பழி ஜோசியம் மேலதானா?

பத்து பொருத்தம்லாம் ஜுஜுபி. முதல்ல ஜாதகங்கள்ள இருக்கிற தோஷங்களை உன்னிப்பா கவனிக்கனும்.

தோஷமுள்ள ஜாதகத்துக்கு தோஷமுள்ள ஜாதகத்தை கட்டி வச்சுட்டா தோஷத்தை காக்கா கொண்டு போயிராதுங்கண்ணா.

சுத்த ஜாதகர்கள் பாதிக்கப்படாம, சமூக சிக்கல்கள் வந்துராம இருக்க சின்ன ஏற்பாடு.
உ.ம்
ஒரு பெண் ஜாதகத்துல 7ல் செவ்வாய். புருசன் திடீர் மரணத்துக்கு இலக்காகனும்னு இருக்கு.

அந்த பெண்ணை ஜாதகத்துல 7ல் செவ்வாய் உள்ளவனுக்கே கட்டி வச்சுட்டா ரெண்டு பேரும் முன்னே பின்னே போயிருவாங்க. விதவையா வாழறதோ, மனைவிய இழந்து வாழறதோ நடக்காது. இதனால செக்ஸ் குற்றங்கள்,கள்ள உறவுகள் கண்ட்ரோல் ஆகும்.

தோஷம்னா செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்தான் பிரபலமாயிருக்கு. இதுல எத்தனையோ வகையிருக்கு. மணமக்கள்ள ரெண்டு பேருக்கும் ஒரே தோஷமிருந்துட்டா போதாது ஒரே வகை,ஒரே அளவு தோஷமிருக்கனும். இல்லன்னா பொருத்தம் பார்த்ததே வீணாயிரும்.

செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம் பார்க்கிறதுக்கு முன்னாடி ரெண்டும் உருப்படற ஜாதகமா இல்லியானும் பார்க்கனும்.

உருப்படாத ஜாதகங்கள்:
லக்னாதிபதி 6,8,12ல மாட்டறது. ராகு,கேதுவோட சேர்ந்துர்ரது, சூரியன்ல அஸ்தமிக்கிறது. நீசமாறது இப்படி எத்தனையோ அம்சங்கள் இருக்கு.

இதர தோஷங்கள்:
களத்திர தோஷம்,சுக்கிர தோஷம் இப்படி எத்தனையோ பார்க்க வேண்டியிருக்கு.

எதிர்கால வாழ்க்கை துணையின் லட்சணங்கள்:
அதே போல ஆண்,பெண்ணின் ஜாதகங்களை தனிதனியே பார்த்து அவிகளூக்கு எப்படிப்பட்ட வா.துணை அமையனும்னு பார்க்கனும். அந்த அம்சங்கள் இப்ப ப்ரபோஸ் பண்ணி இருக்கிற பையன்/பொண்ணுக்கு இருக்கா பார்க்கனும்.

ஆரூடம்: ஒவ்வொருத்தர் ஜாதகத்துலயும் ஏழாவது ராசிய லக்னமா வச்சு எதிராளியுடைய ஜாதகமா பாவிச்சு அதிலான கிரக நிலையையும்,அவருடைய வாழ்க்கை நிலையையும் பொருத்தி பார்க்கனும்.

இப்டி மஸ்தா வேலை பார்க்க வேண்டியிருக்குங்கண்ணா. அதுக்கப்புறம்தான் பத்து பொருத்தம் கான்செப்ட் வருது. இதுல கூட ரஜ்ஜு நாடி தான் மெயின். நான் மேலே சொன்ன அம்சங்கள் ஓகேன்னா , இந்த பத்துல ரஜ்ஜு நாடி ரெண்டு பொருத்தம் மட்டும் இருந்தா கூட டும் டும் பீ பீ. இல்லேன்னா நாஸ்திதான்.

எண் கணிதம் பத்தி இன்னொரு நாளைக்கு பார்ப்போம்ணா. உடு ஜூட்