Friday, March 19, 2010

இயற்கையோட அடி நாதமே செக்ஸ்

கே: முருகேசன் ! எப்பயாச்சும்  நாட்டு நடப்பை விமர்சிச்சி நல்ல பதிவா போட்டுட்டிருந்திங்க. இப்ப ஏதோ தொடர்கதைனு ஆரம்பிச்சுட்டு பெரிய்ய கேப் கொடுத்துட்டாப்ல இருக்கே
ப: விமர்சிக்கிறதுனு இறங்கிட்டா சம்பவங்களை  தான் விமர்சிக்கனும்.ஆனால்  லைஃப்ல சம்பவங்களுக்கு முக்கியத்துவம் தர்ரது முட்டாள்தனங்கறது என் கருத்து. சின்ன சின்னதா கலர் பந்துகளை ஸ்டிக்கால தள்ளி விளையாடுவாங்களே அந்த விளையாட்டு மாதிரி தான் வாழ்க்கையும்.ஸ்டிக் பச்சை பந்தை இடிக்கும், பச்சை ஆரஞ்சை இடிக்கும்,ஆரஞ்சு வெள்ளைய இடிக்கும் கடைசில பாக்கெட்ல விழறது கருப்பு பந்தா இருக்கும். அதே மாதிரி ஒரு சம்பவத்துக்கு மூலம் அதுக்கு முன்னாடி நடந்த எத்தனையோ சம்பவங்களுக்கு பின்னால இருக்கும். அப்படி இன்னைக்கு விமர்சனத்துக்குள்ளாகிற எத்தனையோ அம்சங்களுக்கு காரணமும் நீங்க எதிர்பார்க்கவே முடியாத ஒன்னா இருக்கு.மாடு கட்ட தெறிச்சிக்கிட்டு ஓடுது நீங்க மூக்கணாங்கயிறை பிடிக்கனும் அப்பத்தான் மாடு நிக்கும். வாலை பிடிச்சிக்கிட்டா அது பின்னாடி நீங்க ஓடனும். விமர்சிக்கிறதும் அப்படித்தான்

கே: விமர்சிக்கிறதே வேஸ்டுங்கறிங்களா?

ப: எனக்கு போரடிச்சிருச்சு சார். இந்த நாட்ல நிலவற எல்லா பிரச்சினைகளுக்கும் மூலத்தை நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே பிடிச்சிட்டேன். எரியறத பிடுங்கினாதான் கொதிக்கிறது அடங்கும்.

கே: அது இந்த தொடர்கதையால முடியும்ங்கறிங்களா?

ப: பார்க்க தானே போறிங்க.தினம் தினம்  உதிரியா எழுதி ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கண்டம். திடீர்னு  ஹிட்ஸு விழுந்துரும். அதை தூக்கி நிறுத்த பலான ஜோக் எழுதனும். எதுக்கு இந்த லொள்ளுன்னுதான் ரிஸ்க் எடுத்து இந்த தொடரை ஆரம்பிச்சேன்.

கே:இதுல என்ன சொல்லவரிங்க. இந்த கதை எப்படி பிரச்சினைகளோட மூலத்தை சொல்லும்?

ப:இத்தனை பிரச்சினைகளுக்கு மூலமே மனிதன் இயற்கைலருந்து விலகி வந்துட்டதுதான். இதுக்கு தீர்வா அவனை இயற்கைக்கு திரும்பி போக வைக்கப்போறேன்.

கே: இந்த கதைல அப்படி ஏதுமில்லியே. ஏதோ ஒரு இடத்துல ஹீரோயின் மண்பாண்டத்துல சமைக்க போறேங்கறாங்க.. தட்ஸால்

ப: நீங்க சரிய்யா புரிஞ்சிக்கல. பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி. இயற்கையின் பிரதி நிதி. பெண்ணை புரிஞ்சிக்கிட்டா இயற்கைய புரிஞ்சிக்கிடலாம்.  இயற்கைய க்ளோசா அப்சர்வ் பண்ணா பெண்ணை புரிஞ்சிக்கிடலாம்.
இயற்கைய அப்சர்வ் பண்ணனும்னனா அதை ப்ரிசர்வ் பண்ணியிருக்கனும். எந்த அளவுக்கு அதை குழப்பிவிடனுமோ,சீரழிக்கனுமோ அந்த அளவுக்கு செய்த பிறகு அதை அப்சர்வ் பண்ண சொன்னா கடுப்பு தான் மிச்சமாகும். அதனால வேற வழியில்லாம பெண்ணை அப்சர்வ் பண்ணி பிரச்சினைய  விளக்கறேன்.பெண்ணை  அப்சர்வ் பண்ண சொல்றேன். புரிஞ்சிக்க சொல்றேன்.

கே: நீங்க சொல்றதெல்லாம் நிஜம்னு வச்சிக்கிட்டா இயற்கைய போலவே பெண்ணும் குழம்பி போயிருக்கனுமே

ப: யெஸ். ஆனால் இயற்கைய அவ்ளோ ஈஸியா இன்ஸ்டன்டா மாத்த முடியாது. ஆனால் பெண்ணை அதிலும் ஜெனடிக் காரணங்களால  க்ளெவரா  இருக்கிற பெண்ணை ஓரளவுக்கு கன்வின்ஸ் பண்ண முடியும்.  அதுக்கு முன்னாடி ஆண்கள் பெண்ணை டோட்டலா புரிஞ்சிக்கனும். அப்பதான் அவளை கன்வின்ஸ் பண்ண முடியும். அதனால தான் உனக்கு 22 எனக்கு 32  தொடர ஆரம்பிச்சேன் .ஆக்சுவலா இயற்கை அ பெண்/  பெண்மனம் அ தாய்மனம்/ னு டைட்டில் வச்சிருக்கனும். மறுபடி அவள் டைட்டிலே பெரிசா ரீச் ஆகலே அதனால தான் உனக்கு 22 எனக்கு 32ன்னு மாத்தினேன்.

கே:ஓகே ஓகே நீங்க சொல்றத கேட்க நல்லாதான் இருக்கு. ஆனால் தொடர்ல தொடர்ந்து சீப் மேட்டர் தான் ரிப்பீட் ஆகுது.

ப: சீப் மேட்டர்னா நீங்க சொல்றது செக்ஸா?

கே:யெஸ்.

ப: சீப் மேட்டர்னு எப்படி சார் சொல்றிங்க. இந்த இயற்கையோட அடி நாதமே செக்ஸ் தான். இயற்கையோட மீனியேச்சர் தான் மனிதன். மனித உடலின்,மனதின் மையமே செக்ஸ்தான். எல்லாமே செக்ஸுல இருந்துதான் ஆரம்பிக்குது. எல்லாமே செக்ஸை சுத்தி தான் நடக்குது.எல்லாமே செக்ஸுல தான் முடியுது

கே: எப்படி ? எப்படி?

ப: உங்க கேள்விகளையே எடுத்துக்குங்க. உங்க சப்கான்ஷியஸ்ல இந்த மாதிரி கதையை யெல்லாம் லேடீஸ் விரும்பமாட்டாங்க. நாம இந்த மாதிரி வில்லங்கமான கேள்வியெல்லாம் கேட்டா அவிக மத்தில பாச்சா ஆயிரலாம்னு ஒரு எண்ணம் இருக்கும்.

கே: நீங்க இந்த கதைய எழுத என்ன காரணம்?

ப: உண்மைய கண்டறியறதும், உண்மைய வெளிச்சம் போடறதும் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி பார்க்கிற மாதிரி த்ரில்லான விஷயம் சார்.

கே: என்னவோ போங்க.. நீங்க எல்லாத்தயும் செக்ஸோட முடிச்சு போட்டுர்ரிங்க.

ப: நான் புதுசா முடி போடல சார். முடிச்சு இருக்கிறத சுட்டி காட்டறேன். அதை சுமுகமான அணுகுமுறையோட தாண்டி வந்தாதான் இயற்கை மேல மனிதனுக்கு நன்றி உணர்வு ஏற்படும். அப்போதான் பெண்ணையும் அவன் புரிஞ்சிக்க முடியும்.

கே: அப்போ எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இதாங்கறிங்களா ?

ப: இது தீர்வுனு சொல்லல. பிரச்சினைகளுக்கு மூலம் இதுனு புரிஞ்சிக்கிட்டு பிரச்சினையை  தீர்க்க பார்க்கனுங்கறேன்.

கே:  நாட்ல தலைவிரிச்சாடற ஊழலுக்கும்  செக்ஸா காரணம்?

ப: ஆமா சார். செக்ஸ் பவர் இருந்து அதை ஆழமா அனுபவிக்கிற டெக்னிக் தெரிஞ்சிருந்து , வாய்ப்பு இருந்தா எந்த ஆணும் செக்ஸுக்கு மாற்றா பணத்தை,வன்முறையை  தேர்வு செய்யமாட்டான். ஆழமான செக்ஸ் அவெய்லபிலா இருக்கிற பெண் கணவனை ஊழல் செய்யச்சொல்லி மறைமுகமா கூட தூண்ட மாட்டாள். இவனுக டம்மி பீசுங்க. இவங்களால "முடியல". உன்னாலதான் முடியல இல்லே சரி வைர நெக்லசாவது வாங்கிட்டு வாங்கறா மனைவி. அழுத்தி வைக்கப்பட்ட நிறைவேறாத செக்ஸ் ஆசைதான் கொல்லச்சொல்லுது, சாகச்சொல்லுது. ஊழல் பண்ண என்கரேஜ் பண்ற மனைவி மறைமுகமா அவனை கொல்றா. ல.ஒ.போலீஸ் கிட்டே மாட்டற வரை கணவன் இவள் கேட்டதையெல்லாம் வாங்கி தந்து இவள கொல்றான்.

கே:அய்யய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஆள விடு சாமி..