Showing posts with label kanchi mutt. Show all posts
Showing posts with label kanchi mutt. Show all posts

Monday, January 10, 2011

மகா பெரியவா Vs முன்னாள் மந்திரி : டகுலு மாமே!



கல்கி "சிறப்புப்பக்கங்கள்"ள முன்னாள் மந்திரி ராஜாராம் மகா பெரியவா பத்தி ஒரு டகுலு விட்டுக்கிறாரு பாருங்க. சிரிச்சு சிரிச்சு வவுறே நோவெட்த்துக்கிச்சி.இவரு விவசாய மந்திரியானப்ப மழையே இல்லையாம். இவுரு உடனே மகாபெரியவா கிட்டே போய் மேட்டரை அவுத்து வுட்டாராம். உடனே பெரியவுக பக்கத்துலருந்த ஐயருமாரை நாளைக்கே யாகம் பண்ணுங்கோன்னுட்டாராம்.

மந்திரி ரிட்டர் ஆவுறாராம்.ஸ்ரீ பெரும்புதூர் கிட்டயே மழை பிச்சிக்கினு ஊத்துதாம். அடங்கொய்யால உங்க லாஜிக் பிரகாரம் பார்த்தாலும் யாகம் பண்ணபிறவுதானே மழை ஊத்தனும்.

தாளி.. அவ்ளோ பவர் இருக்கிற பார்ட்டிய வச்சுக்கிட்டு இன்னாத்துக்கு வானிலை ஆராய்ச்சி மையம்லாம் ஊத்தி மூடிட்டு மகா பெரியவாளுக்கே கோவணம் துவைச்சுப்போட்டுக்கிட்டிருந்திருக்கலாமே.

ஆமாங்கண்ணா இப்ப உள்ள பார்ட்டிய (ஜெயேந்திரா) பத்தி இந்த மாதிரி டகுலு கூட வர்ரதில்லையே ஏன்?

சிறப்புப்பக்கங்கள்னா குறிப்பிட்ட இஷ்யூவுக்கு விளம்பரம் கொடுத்தவுக மனோபீஷ்டப்படி போடற பக்கங்கள்னு அர்த்தம் தெரியுமோ?

Wednesday, February 17, 2010

சங்கராச்சாரியாரின் மொ.மா. தனம்

மதவாதிகள்,சாமியார்கள், ச(ன்)னியாசிகளின் அரசியல் ஆர்வம் எந்த காலத்திலுமே பெரிதாய் பலன் தந்ததில்லை.உண்மை நிலை இப்படியிருக்க இந்த கலிகாலத்தில் தம் முதுகு நிறைய அழுக்கை வைத்திருக்கும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி தெலுங்கானா விசயத்தில் திருவாய் மலர்ந்தருளி வாங்கிக்கட்டிக்கொண்டுவிட்டார்.

" நுணலும் (தவளை) தன் வாயால் கெடும்"
"ஆப்பசைத்த குரங்கு"
"வாயை கொடுத்து .... ஐ புண்ணாக்கிக்கொள்ளுதல்"

எதிர்காலத்தில் மேற்படி சொலவடைகள்,பழமொழிகளையெல்லாம் கஷ்டப்பட்டு சொல்ல தேவையில்லை. தெலுங்கானா விசயத்துல சங்கராச்சாரி மாதிரி என்று சிம்பிளாக சொல்லலாம்.

அட கருத்தை சொன்னதோடு நிறுத்திக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை. ஏதோ அவசர குடுக்கை என்று விட்டிருக்கலாம். தம் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பை கண்டு உடனே யு டர்ன் அடித்து அந்தர் பல்டியில் அரசியல் வாதிகளையே தோற்கடித்துவிட்டார் சங்கராச்சாரியார்.

முதல் கருத்து:
வென்யூ: ஆந்திர மானிலம் குண்டூர்
தனி தெலுங்கானா வந்தால் நக்சல் பிரச்சினை வரும். இதர மதங்களின் பிராபல்யம் பெருகும். உலகத்தையே குடும்பமாய் கருதுவதே நம் கலாச்சாரம்.தனிதெலுங்கானா கோருவது நம் மதம்,கலாச்சாரத்துக்கு விரோதம்

எதிர்ப்பு அலை:
ஏற்கெனவே தெலுங்கானா வாதிகள் நவத்வாரத்திலும் புகையுடன் இருக்க ஜெ.சரஸ்வதியின் கருத்து பெட்ரோல் ஊற்றியது போலாகிவிட சங்கராச்சாரியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி "சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்" என்று சொல்லிவிட்டனர்.மடத்தில் நடை பெற்ற கொலை ( சங்கர்ராமன்) , தலை மறைவு (அதாருங்க டக்குனு ஞா வரமாட்டேங்குது) ,வங்கி மோசடி (இது ஆரோ ஒரு தாய்குலம்னு நினைக்கிறேன் .கரெக்டா?) எல்லாவற்றையும் தூக்கி வீசினர்.

சங்கராச்சாரி குடுமி ஆட காரணம்:
ஏற்கெனவே ஒரு பதிவில் விவரித்ததை போல ஸ்வாமிகள் மடம் சார்பில் திருப்பதியில் மெடிக்கல் காலேஜ் கட்ட இருக்கிறார். சமக்யவாதிகளின் பிராபல்யம் உள்ள திருப்பதியில் தலைவர்களை லைனில் வைக்க மேற்படி கருத்தை அள்ளித் தெளித்துவிட்டார் போலும். தெலுங்கானா வாதிகள் ரவுண்டு கட்டி சவுண்ட் விட அந்தர் பல்டி அடித்து விட்டார்.

யு டர்ன்:
வென்யூ: குண்டூர்
" நான் தெலுங்கானா கூடாதுன்னு சொல்லல. தலைவர்கள் ஹைதராபாத்ல இருக்க கூடாது .கிராமத்துக்கு போகனும். மாணவர்களை போராட்டத்துல இழுக்க கூடாதுனு தான் சொன்னேன்"

அந்த காலத்துலயே:
ராமாயண காலத்தை ஆகா ஓகோனு புராணங்கள் சொல்லுது.அன்னைக்கே இந்த சாமியார்களால ஒரு காசுக்கும் உபயோகமில்லேனு தெரியுது. தசரதன் தலை வார்ரப்ப தலைல ஒரு வெள்ளை முடிய பார்க்கிறார்.பார்த்ததுமே "அடடா நமக்கு வயசாயிருச்சு. ராமனுக்கு முடி சூட்டிர வேண்டியதுதான்னு முடிவு பண்ணி அரசவை கருத்தை கேட்கிறார். வசிஷ்டர் தான் ராஜ குரு. "பேஷா பண்ணலாமே"ன்னு சொல்லிர்ரார்.அப்புறம் நடந்ததுதான் தெரியுமே. ராமன் காட்டுக்கு போகவேண்டியதாயிருச்சு.

தசரதன் இந்த ப்ரபோசலை சொன்னதுமே " த பாருப்பா .. நீ கைகேயிக்கு குடுத்த ரெண்டுவரத்தை அவள் கேட்க போறாள் . ராமன் காட்டுக்குதான் போகப்போறான். பரதன் தான் நாட்டை ஆளப்போறான்"னுவசிஷ்டர் முன் கூட்டியே சொல்லியிருக்கலாம்லியா !

இதை விடுங்க ராம் தேவ் பாபானு ஒரு பார்ட்டி. இவரு ஒரு யோகா குரு. இவர் தன்னோட ஆயுர்வேத மருந்து தொழிற்சாலைல மருந்து தயாரிப்புக்கு மிருக எலும்பு ,மனித எலும்பெல்லாம் உபயோக்கிறார்னு பெரிசா அகுடாகி ( புரளி கிளம்பினு அர்த்தம்) ஒரு மாதிரியா புழுதி அடங்கியது. இப்ப அவர் சொல்றார் " லஞ்சத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கனுமாம் இல்லேன்னா அவரோட ஆட்கள் அவர் இயக்கம் சார்பா தேர்தல்ல நிப்பாகளாம்.

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுடாங்கனு புலம்பாதிங்க. நம்ம ஜெயேந்திர சரஸ்வதியை விட பாபா பெட்டரில்லையா தேர்தல்ல நிக்கறேங்கறார். நம்ம பார்ட்டிக்கு அந்த தில்லு கூட இல்லியே.

நான் என்ன சொல்றேன்னா.. நீ சாமியாரோ இல்லியோ .. நல்லவனோ கெட்டவனோ உன்னையும் மதிச்சு நாலு ஐஏஎஸ்,ஐபிஎஸ், எம்,எல்,ஏ, எம்பி, மந்திரி, வராங்கல்ல அவியளுக்கு நல்லது கெட்டது சொல்லி அவிக மூலமா மக்களுக்கு நாலு நல்ல காரியம் நடக்கறாப்ல பண்றத விட்டுட்டு அரசியல்வாதி கணக்கா ஏன் ஸ்டேட்மென்ட் கொடுப்பானேன் ,பல்டி அடிப்பானேன்.

நினப்புதானே பொழப்பகெடுக்குது. சங்கராச்சாரிக்கு என் அட்வைஸ்
1.முதல்ல மடத்து சொத்து கணக்கை வெளியிடுங்க ( மடத்துக்கான வெப்சைட்லயே வைக்கலாம்)

2.மேற்படி சொத்துக்களையெல்லாம் (மக்களுக்கு பயனின்றி உள்ள ) விற்று தொலைத்து மத்திய அரசின் கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீமில் இன்வெஸ்ட் செய்யுங்கள். வரும் வட்டியில் எம்.ஜி.ஆர் வேலைகள் செய்யலாம். முதலீட்டுக்கும் உரிய வட்டி கிடைத்து கொண்டே இருக்கும். நிர்வாகத்தை உலக அளவில் புகழ் பெற்ற மாசு மருவற்ற சேவை நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டு ஒழுங்கு மரியாதையாக ஒரு மடாதிபதியின் கடமைகளை மட்டும் ஆற்றுங்கள்

3.இந்து மதம் என்றால் விக்கிரக ஆராதனையும், சுய நல அரசியல் பிசாசுகள் செய்யும் யாகங்களும் தான் என்ற இமேஜ் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. இதை மாற்ற இந்துமத சாரத்தை, யோக ரகசியங்களை வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்யுங்கள்


4. இன்னும் மனமிருந்தால் கலவைக்கு போன சந்தர்பம், சங்கர்ராமன் கொலை, எவளோ அப்ஸ்காண்டட் ஆன கதை இத்யாதியில் "உண்மையில் நடந்ததென்ன" என்று வாக்கு மூலம் தந்து மக்களிடம் மன்னிப்பு கோருங்கள்

அதை விடுத்து வேலியோரம் போறதையெல்லாம் எடுத்து காதில் விட்டுக்கொண்டு ஏனய்யா நாளிதழின் பக்கங்களை வீணாக்குகிறீர்.

Thursday, November 5, 2009

கம்போடியாவில் 1016 இந்து கோவில்கள்

பிராமணீயம் குறித்து என்னதான் மென்மையாக எழுதவேண்டும். முடிந்தவரை எழுதவே கூடாது என்று நினைத்தாலும் அதுகுறித்த செய்திகளே என்னை இர்ரிட்டேட் செய்கின்றன. முடிந்தவரை இது போன்ற செய்திகள் கிட்டக்கூடிய ஊடகங்களை தவிர்ப்பதே என் வழக்கம். ஆனாலும் என்ன செய்ய

ஜெயேந்திரர் இன்று திருப்பதி வந்து ஒரு நூலை வெளியிட இருக்கிறார். அந்த நூலின் உள்ளடக்கம் என்ன ? காம்போடியாவில் 1016 இந்து கோவில்கள் இருக்கிறதாம். அந்த கோவில்களின் விவரம் மற்றும் அவை குறித்த டூரிஸ்ட் தனமான விவரங்கள் அடங்கியது அந்த நூல் ( நாட்டுக்கு ரொம்ப தேவை பாருங்க.. ஒரு டாஸ் மாக் திறந்தாலும் நாலு சூத்திரனுக்கு பிழைப்பு நடக்கும் கோவில் திறந்தால் ? ஒரு பார்ப்பானுக்கு நடக்கும் ‍ இதற்காக நான் டாஸ்மாக்கை ஆதரிக்கிறேன் என்று வக்ர பாஷ்யம் கூற வேண்டாம்)

விஷ‌யம்தான் இப்படி என்றால் அதை எழுதின பார்ட்டி சித்தூர்முன்னாள் எம்.பி. வெங்கடேஸ்வர சவுதரி. கம்மவார் வகுப்பை சேர்ந்தவர். ஏற்கெனவே ஒரு முறை பிராமணீய குணங்களில்பாதிவரை உள்ள வகுப்புகள் என்று ஒரு பட்டியல் வெளியிட்டிருந்தேன் அதில் இந்த வகுப்பும் ஒன்று.

இந்த ஒரே குடும்பம் சித்தூர் பாராளுமன்ற தொகுதி அரசியலை தன் கையில் வைத்திருந்தது. ராமசந்திரன் என்று ஒரு வன்னிய குண்டனை கைக்குள் வைத்துக்கொண்டு இவர்கள் போடாத ஆட்டமில்லை. என்.டி.ஆரும் கம்மவார் வகுப்பை சேர்ந்தவராயினும் அவர் என்றுமே பிராமணீயத்துக்கு தலை வணங்கியவர் அல்லர். (திருமலையில் அவர் அய்யர்களுக்கு வைத்த ஆப்பு ஒன்று போதும்) ஆனால் அவர் வந்த புதிதில் அவரை எப்படியோ வளைத்து தெலுங்கு தேச அரசியலையும் ஹைஜாக் செய்தனர்.

ஆனால் சி.கே.பாபு என்ற ரெட்டி வகுப்பை சேர்ந்தவர் தமிழர்களை, பி.ப, தா.ப.மைனாரிட்டி வகுப்பினரை அணைத்து பிடித்து இவர்களின் ஆதிக்கத்துக்கு வைத்தார் ஆப்பு.

அவர் மட்டும் இவர்களை எதிர்த்து அரசியல் செய்யாதிருந்திருந்தால் இவர்கள் ஜெயேந்திர சரஸ்வதியை வைத்து புத்தகம் என்ன மாவட்டத்தில் காஞ்சி மடத்தின் கிளையையே நிறுவியிருப்பார்கள் . (இப்போது கம்மவார் அரசியல் ஓய்ந்து பலிஜா அரசியல் ஓங்கி, அதுவும் இன்டென்ஸிவ் கேரில் இருப்பது வேறு விஷயம்)

நான் கேட்பது ஒரே கேள்விதான். தாளி புஸ்தவம் எழுத விசயமா இல்லே (இந்த முன்னாள் எம்.பி. இப்போ பாஜக ல இருக்காருங்கோவ்)போட்டது போட்டாங்க அதை வெளியிட இந்த பார்ப்பான் வரனுமா. சரி நீ என்ன பால குமாரன் தம் நாவல்களில் ஆதர்ச பிராமண குணங்களாக வருணித்துள்ளவற்றில் ஒன்றையேனும் பெற்றிருக்கிறாயா?

ஆஸ்பத்திரி இல்லாம , ஸ்விம்ஸ் மருத்துவமனைய காட்டி மெடிக்கல் காலேஜ் கட்டி கல்லா கட்ட வந்த நாயி ..உனக்கு காம்போடியால கோவிலிருந்தா என்ன காங்கோல கோவில் இருந்தா என்ன ?

பலரும் நினைப்பது என்னவென்றால் ஜெயேந்திரர் தான் கேப்மாறி மகா பெரியவாள் உத்தமர். நான் ஏதும் வக்ரித்து கூறவில்லை. இந்த அமுத சுரபிலதான் ரமணி அண்ணாங்கறவர் எழுதின தொடர்ல படிச்ச விஷயத்தை சொல்றேன்.

ஒரு மிராசு ருத்ர யாகம் பண்றார். அதுல ஒரு கிழவாடி அய்யர் மந்திரம் சரியா சொல்லலை. மிராசு அதட்டறார். சம்பாவனை (ஃபீஸ்) கொடுக்கும்போது எல்லாருக்கும் 10ரூ, இவருக்கு 7 ரூ கொடுக்கிறார். பந்தி நடக்கும்போது கிழவாடி அய்யர் சர்க்கரை பொங்கலுக்கு ஜொள்ளு விட இவர் கண்டுக்காம போறார்.

பிறகு பிரசாதம் எடுத்துக்கிட்டு பெரியவாளை தேடிவரார். பெரியவாள் அங்கு நடந்ததை எல்லாம் சொல்றார். அதுக்கப்புறம் என்னாச்சு தெரியுமா கிழவாடி அய்யர் கோவிலுக்கு போய் சபதம் போட்டுட்டாராம் இனி ஸ்வீட்டே சாப்பிடமாட்டேனு.

மிராசுக்கு பேதியாகி பரிகாரம் கேட்க அதை நான் சொல்லமாட்டேன்.போய் கிழவாடிய பிடி. உனக்கு பிராப்தமிருந்தா கிடைக்கும்னிட்டாரு பெரியவரு. மிராசு ஓடோடிபோனாராம் கிழவாடி அய்யரை தேடி அவர் அதுக்குள்ள எமலோகத்துக்கு டிக்கட் வாங்கிட்டாராம்.

மிராசு திவாலாகி செத்துப்போனாராம்.மிராசு செய்தது ஐபிசி படி குற்றமா? யாகங்கறதே அன் ப்ரொடக்டிவ். அதுக்கு மந்திரம் சொல்ல வந்துட்டு தூங்கி வழிஞ்சா ஏன்னு கேட்க கூடாதா? இது எந்த செக்ஷன்படி குற்றம். இன்னும் சொல்லப்போனா கிழவாடிய வேணம்னா கன்ஸ்யூமர் ஃபோரத்துக்கு இழுக்கலாம்.

இந்த இழவெடுத்த சம்பவத்தை 4 பக்கம் எழுதியிருக்காங்க. அதை காட்டை அழிச்சு தயாரிச்ச காகிதத்துல அச்சிட்டு அதுவும் 2009 ல இது எத்தனையாவது பதிப்பு தெரியலை..

நாம ஏதாச்சும் கேள்வி கேட்டா அபிஷ்டு, அம்பாள் சபிச்சுருவா இத்யாதி. அட டுபாக்கூருங்களே..

Tuesday, November 3, 2009

ஆந்திரத்தில் மெடிக்கல் காலேஜ் காஞ்சிமடம் கொள்ளை


ஓம்கார் அய்யா வணக்கம்,
வேதம் பவித்ரம். வேத கால வாழ்க்கை மறுபடி வரணுங்கறிங்க. ஏதோ கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம் வேதகாலத்துக்கு வாய்தா பூட்ச்சி. ஏதோ குத்துயிரும் குலை உயிருமா ஜன நாயகம் இருக்கு. ராஜா விஷ்ணு ரூபம், பார்ப்பான் விஷ்ணு ரூபம். ராஜா பெண்டாட்டிக்கு குழந்தை பிறக்கலைன்னா யாகங்கற பேர்ல சுத்தி துணிய கட்டிட்டு அய்யர்மாரே வேலை முடிச்சுருங்க. உலகத்தின் முதல் ஃபெர்ட்டைல் சென்டர் உங்களுதுதானே. சரி விஷயத்துக்கு வரேன் . இந்த ஜன நாயக யுகத்துல உலகம் போற்றும் ஜெயேந்திர சரஸ்வதி அய்யர் என்னா மாதிரி கேப்மாரி வேலை செய்திருக்காருனு இந்த பதிவில் சொல்றேன். திருப்பதி விமான நிலையத்துக்கு பக்கத்துல ஒரு 150 ஏக்கர் நிலம் இருந்துச்சு . காஞ்சி மடம் காரனுங்க திருப்பதில மெடிக்கல் காலேஜ் வைக்கிறோம்னு வந்தாங்க. ஒய்.எஸ்.ஆர் சரி ஓஞ்சு போங்க அந்த 150 ல ஒரு 60 ஏக்கர் நிலம் இலவசமா தரேன் மிச்சமுள்ள 90 ஏக்கர் மார்க்கெட் ரேட்டுக்கு தரேன்னாரு.

அஸ்கு புஸ்கு பூணுலை போட்டுட்டு இருக்கிற எவனாவது எதையாவது காசு குடுத்து வாங்கினா அதைவிட அவமானம் ஏதுமில்லே . 150 ம் ஃப்ரீயா கொடுத்தாதான் ஆச்சுனு கோச்சிக்கினு பூட்டாங்க. ஒய்.எஸ்.ஆர் பீடையே போச்சுனு 60 ஏக்கரை அப்படியே பெண்டிங் வச்சுக்கிட்டு மிச்சமிருந்த 90 ஏக்கரை ஸ்விம்ஸ் மருத்துவமனை அட்மின் பில்டிங்குக்கு ஒதுக்கிட்டாரு.


திருமலை தேவஸ்தானம் நிதியில் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கறதா சொன்னார். தாளி சந்துல என்ன சிந்து பாடினானுங்களோ தெரியாது. இப்ப தேவஸ்தானம் பேக் ஆயிருச்சு. மடம் மறுபடி நுழைஞ்சுருச்சு. எவனை பிடிச்சானுவளோ, எவனுக்கு எவளை படுக்க போட்டானுவளோ தெரியாது. இப்போ 60 ஏக்கரே போதும்னிட்டு மெடிக்கல் காலேஜ் கட்ட வந்துட்டானுங்க.

மெடிக்கல் காலேஜ் வைக்கனும்னா அந்த நிர்வாகத்துக்கு சொந்தமா ஒரு ஹாஸ்பிட்டலும் இருக்கனும் . அப்பத்தானே மாணவங்க ஹவுஸ் சர்ஜன் பண்ண முடியும் .

இவனுங்களுக்கா ஆஸ்பத்திரி என்ன பீ மூத்திரம் டெஸ்ட் பண்ற லேப் கூட கிடையாது. என்னா பண்ணியிருக்கானுங்க ஸ்விம்ஸ்லயே ஹவுஸ் சர்ஜனை முடிச்சுருவாங்களாம்.

என்னங்கடா நியாயம் இது . ஸ்விம்ஸ் ஆஸ்பத்திரிக்கு தேவஸ்தானம் வருசத்துக்கு 70 கோடி செலவு பண்ணுது அரசாங்கம் வேற விதவிதமான க்ராண்ட் எல்லாம் கொடுக்குது.

இவனுங்க குட்டி சுவத்துல ஒன்னுக்கடிச்சிட்டு போற மாதிரி உபயோகிச்சுக்குவானுங்களாம்.

மெடிக்கல் காலேஜை கட்டிட்டா டி.எம் காரியாலஜி சீட்டை 1 கோடிக்கும், எம்.சி.ஹெச் சீட்டை 2 கோடிக்கும், எம்.பி.பி.எஸ் சீட்டை 50 லட்சத்துக்கும் வித்து கல்லா கட்டிப்பானுங்க . வேறுமனே ஒரு கட்டிடம் கட்டிட்டு வருசத்துக்கு 500 கோடி வரை மூட்டை கட்டிட்டு போவானுங்க.

இன்னும் நாலு அய்ய மாரை கோவில்ல வச்சே போட்டு தள்ளுவானுங்க . காபரே ஆடுவானுங்க.

நாங்க வாய்ல விரல் போட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கனும். அய்யா ஓம்கார் சாமீ ! இந்த காலமே இவ்ளா கொடுமைன்னா வேதகாலம்லாம் வேணாம்யா.. உங்க பொழப்ப நீங்க பாருங்க எங்க பொழப்ப கெடுத்திராதீரய்யா.

அம்மா புர்ச்சி தலைவி ! எங்கேம்மா இருக்கே .. கொட நாட்ல இருந்து சென்னை வந்துட்டயா.. சொந்த பகைல போட்டயோ / சட்டப்படி போட்டயோ இந்த நாய்களை உள்ள போடவாவது நீ இருக்கனும் தாயே !

முடிஞ்சா இப்படி ஆந்திரா பக்கம் வந்துரு. ஒரு நாள் சி.எம்மாச்சும் இருந்து இந்த நாய்ங்க கதைய முடி

புரட்சி தலைவி வாழ்க