Monday, December 27, 2010

லீனா மணி மேகலையின் கவிதையில் ஆபாசம்?

இந்த பதிவை எழுத தூண்டியது வினவு.காம் லீனா மணி மேகலையின் கவிதையை கிழி கிழி என்று கிழித்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்ல நினைத்ததை கமெண்டாக போட்டுவிட்டேன். என்றாலும் கவிதை07 வாசகர்களுக்காக இங்கே..

ஒரு சோகம் என்னன்னா அறிவு ஜீவிகள்ங்கற இமேஜ் இருக்கிற ஆண்கள் கூட பெண்ணை,அவள் எழுத்தை மெலிதான அலட்சியம்,மற்றும் நக்கீரத்தனத்துடனேயே அணுகுகிறார்கள்.

நான் உங்கள் விமர்சனத்துக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை.

எப்பவோ என் ப்ளாக்ல எழுதின ஒரே ஒரு வரி உங்களுக்கு பதிலாகட்டும்.

உலகத்துல எந்த மாற்றம் ,முன்னேற்றம், ஏற்றம்,இறக்கம் வந்தாலும் மொதல்ல பெண் மட்டும்தான் பாதிக்கப்படறாள்.

இதைத்தான் அந்தம்மா வயிறெரிஞ்சு
எழுதியிருக்காய்ங்க.

புரிஞ்சுக்கப்பாருங்க துரை

இப்ப கவிதைக்கு போலாமா?

//நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்//

கவிதாயினி உலகமெங்கும் வாழும் பெண்களின் நிலை ஒன்றே போல் இருப்பதை இங்கே பதிவு செய்கிறார். இதை ஸ்தூல ரூபத்துல பார்த்தா ஒரு ம...ரும் புரியாது.

//என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது//

இது தரும் நேரடி அர்த்தம் விபரீதமாக இருக்கும். ஆனால் இந்த வரிகளுக்கு பின்னுள்ள உண்மை ஆணாதிக்க சமுதாயம் பெண் கிட்டே இதைத்தான் எதிர்பார்க்குதுங்கறதே.

//நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்//

ஆக்சுவலா உலகத்தோட மேல் ( ஆண்) பாப்புலேஷன் மொத்தத்தையும் இங்கே சொல்லியிருக்கனும். ஆனால் சாமானியனை விட மேற்சொன்ன கேட்டகிரி பார்ட்டிங்கல்லாம் ரெம்ப ரேஷ்னலா ,ஹ்யூமனா இருப்பாய்ங்கனு சமுதாயத்துல ஒரு ஃபீலிங் ஒரு பிரமை இருக்கு. ஆனா அவிகளுக்கும் "பொட்டப்புள்ளைக்கு வாசப்படில என்னடி வேலை"ன்னு எரிஞ்சு விழற சாமானியனுக்கும் மேற்சொன்ன சம் திங் ஸ்பெஷல் பார்ட்டிகளுக்கும் எந்த வித்யாசமும் இல்லைனு கவிதாயினி சொல்றாய்ங்க.

//வன்புணர்வதற்கு ஏதுவாய்//

கவிதையோட மொதல் பாராவ ஸ்தூலமா எடுத்துக்கிட்டு கிழி கிழினு கிழிச்சிருக்காய்ங்க. அந்த பாராவுக்கு பஞ்ச்சே இதான். வண்புணர்வதற்கு
( ரேப்புங்கண்ணா)

எந்த பெண்ணும் உடலுறவுக்கே சுமுகமா இருக்கிறதில்லை. இளமையில சமூக பயம் -கர்ப பயம் -வெப் காம் பயம் -ப்ளாக் மெயில் பயம் -எய்ட்ஸ் பயம் ( தெனாலி ஞா வருதா)

அதுலயும் கண்ணாலங்கட்டியோ அ அசர்ந்தர்ப்பமாவோ உடலுறவுன்னா என்னனு தெரிஞ்சிக்கிட்ட பெண் உடலுறவுன்னாலே "தலைவலி -டேட்ஸு- இடுப்பு வலி -வெள்ளிக்கிழமைன்னு தப்பிச்சுக்கத்தான் பார்க்கிறாள்.

காரணம் என்னனு மறுபடி விவரிக்க தேவையில்லை 7 Vs 23 ஞா இருக்கில்லை. இதுல வன்புணர்ச்சிங்கறதும் அதுக்கு சித்தமா இருக்கிற நிலையும் எந்த அளவுக்கு கொடுமைன்னு புரிஞ்சிக்கிடனும்.

//யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்//

கவிதாயினி என்ன நினைச்சு இதை எழுதினாய்ங்களோ நமக்கு தெரியாது. எனக்கு ஸ்ட்ரைக் ஆறது என்னன்னா பெண்ணுறுப்புல க்ளிட்டோரிசுக்கு அடுத்து ஓரளவுக்காச்சும் உணர்வு மயமானது உதட்டுப்பகுதி தான். அதை அரிந்து போடச்சொல்றாய்ங்கன்னா என்ன அர்த்தம்?

நீ மனுஷ ஜன்மமே கிடையாது. உயிரின் அடிப்படை உரிமையான உடலுறவோ - அதிலான ஆர்காசமோ உனக்கு கிடையாது. எனக்கு தேவை நீ ஜஸ்ட்

உன்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

//அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே//

இங்கனதான் கவிதாயினி டாப் கீர்ல எகிறியிருக்காய்ங்க. பெண்ல அவுசாரி, பத்தினி,பிராமணத்தி,தலித், பணக்காரி,ஏழைங்கற வித்யாசமெல்லாம் இல்லை. பெண் எத்தனை உயர்ந்த சிகரத்துல இருந்தாலும், எத்தனை அதல பாதாளத்துல இருந்தாலும் பெண் பெண் தான். உண்மையான தலித் பெண்தான்.ஏன்னா தலித் ஆண் கூட தன் இனத்து பெண்களை பிராமணனை விட கொடுமையாத்தான் நடத்தறான்.

//அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்//

இங்கே யோனிங்கறது பெண் மனதையும் விந்துங்கறது பெண்ணோட மனசுல தேங்கிக்கிடக்கிற வன் கொடுமை குறித்த கசப்பான நினைவுகளையும் காட்டுது. கவிதாயினி கொஞ்சமா பெரியமனசு பண்ணி "அவ்வப்போது"ங்கற வார்த்தையை உபயோகிச்சிருக்காய்ங்க. ஆனால் ப்ராக்டிக்கலா பார்த்தா மரணத்துக்கு கூட தூர் வாரும் சக்தி இருக்கிறதா நான் நம்பலை.

//எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்//

இங்கே குறிங்கற வார்த்தை குறி (AIM) ங்கற வார்த்தைய குறிக்கிறதா தான் நான் நினைக்கிறேன்.

// தந்தை, சகோதரன், மகன்// எல்லாரையும் இந்த பட்டியல்ல சேர்த்தது வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக இருக்காதுனு நம்பறேன். தாளி அப்பன் அம்மாவை , சகோதரன் அண்ணியை , மகன் மருமகள் கிட்டே எதிர்பார்க்கிறது கூட இதைத்தான்னு பொட்டிலடிச்ச மாதிரி பதிவு செய்திருக்காய்ங்க(ன்னு நான் நினைக்கிறேன்)

//எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்//

மேற்படி பட்டியல்ல உள்ள எதுனா ஒரு இழவாச்சும் பெண்ணை ஒரு மனித ஜன்மமா பார்த்து நடத்தியிருந்தா மணக்கலைன்னாலும் நாறாது. நம்மாளுங்க பண்ண கொடுமை கொஞ்சமா நஞ்சமா? இதெல்லாம் நாறாம என்ன செய்யும்?

//என் உதிர வீச்சமடிக்கும்// செலவில்லாத செருப்படி.

//பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்//

மேற்சொன்ன அம்சங்கள் எல்லாம் ஆணாதிக்க சமுதாயம் பீய்ச்சிய விந்துத்துளிகள். அவை பெண்ணுக்குள் புகுத்தப்பட்டு கலைக்க முயன்றும் (கலையாமல்) சூலகத்தில் தங்கிவிட்ட கருக்களாய் உள்ளதா கவிதாயினி சொல்றாய்ங்க.

ஒரு கருவை பத்து மாசம் சுமக்கிறதே நரகம் .இதுல யுகம் யுகமா சுமந்துக்கிட்டிருக்கிற இனத்தின் பிரதி நிதி இதை இந்த அளவுக்கு நாகரீகமா சொன்னதே சாஸ்தினு நான் நினைக்கிறேன்.

//அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை//

பிணமான பின்பும் தமிழ்பெண்களின் உடலை இலங்கை ராணுவத்தினர் வன் புணர்ந்ததா செய்திகள் வருதே அதை இங்கன நினைச்சுப்பாருங்க. உடல் செத்தாலும் யோனிக்கு சாவில்லைன்னா இதான் சிக்குனு பொருந்துது.

இந்த கவிதைய ஆபாசம்னு சொல்றாய்ங்கன்னா என்ன சொல்ல? ஒரு அரை மணி நேர கடுப்பு/காத்திருப்பு/டென்ஷன்/வெறுப்புல நீங்க இருக்கிறச்ச நான் வந்து டைம் இன்னா சார்னு கேட்டா வெளிப்படக்கூடிய உங்க வார்த்தைய விட இதுல ஒன்னும் ஆபாசமில்லையே.

தாளி யுகம் யுகமா குமுறிக்கிட்டிருந்த எரிமலை வெடிச்சு லாவாவை துப்புது. தட்ஸால்.

இதை போய் ஆபாசம் வெங்காயம்னு மொக்கை போட்டா மேட்டர் ரெம்ப சிக்.......கலாயிரும். ஆமாம் சொல்ட்டேன்.

இதை ஆபாசங்கறவுக மனசுல தான் ஆபாசம் இருக்கு.

வார்த்தைக்கு பொருள் அகராதியில் இருக்கிறது. கவிதைக்கு பொருள் வாழ்க்கையில் இருக்கு

-வைரமுத்து