Saturday, November 7, 2009

ஓம்கார் ரீலு யுவன் பிரபாகரன் டீலு

முன் குறிப்பு:
இந்த சர்ச்சைய விட்டுரனும்னு தான் பார்க்கிறேன். ஆத்தாள் வேற மாதிரி நினைக்கிறா நான் என்ன செய்யட்டும். இதுக்கு பின்னாடி மழை வருது மழை வருது நெல்லு வாருங்கோனு ஒரு சுமாரான சமூக பொறுப்போட ஒரு பதிவு போட்டிருக்கேன் அதையும் படிச்சு கருத்து சொல்லுங்கண்ணா !


ஓம்கார் சுவாமி நீங்க விட்டது ரீலுனு ஆதார பூர்வமா எழுதியிருக்காரு ஒரு அன்பர் இதை படிங்க. அப்புறம் வாங்க ஒரு ரவுண்டு மோதிக்கலாம். யுவன் பிரபாகரன் மாதிரி ஆட்களுக்கு குற்ற மனப்பான்மை தருவித்தது தவிர நீங்கள் சாதித்தது ஏதுமில்லை.

நீங்க மறுமொழிய நீக்கினதுலருந்து நான் எந்த பதிவுல மறுமொழி போட்டாலும் முன் ஜாக்கிரதையா என் வலைப்பூவுல ஏதோ ஒரு இடத்துல செருகிர்ரதை வழக்கமா வச்சிருக்கேன் .

உஙகளுக்கு வக்காலத்து வாங்கின யுவன் பிரபாகரனுக்கு என் மறுமொழி இங்கே !
யுவன் பிரபாகரன் அவர்களே !
எவனும் பசுக்கூட்டத்தை கள்ளத்தனமாக ஓட்டிச்சென்று/கடத்திசென்று வெட்டிக்கொல்வதில்லை. அந்தபசுவால் பயன் பெற்றவன் இனி பயன் பெறமுடியாது என்ற நிலை வரும்போது அதை நான் ஃபங்க்ஷனிங் ப்ராப்பர்ட்டியாககருதி விற்று விடுகிறான். அதை வாங்கி சென்றே வெட்டுகிறான். வித்தவனுக்கு கோவணம் அவுக்கிறத விட்டுட்டு வாங்கினவனை சத்தாய்க்கிறது, திங்கிறவனுக்கு சாபம் விடறது. பூச்சி காட்றது, வேதம் வேதகாலம்னு பீலா விடறதுல்லாம் டுபுக்கு . விட்டா அவங்க பலதும் சொல்வாங்க. அவுக வெங்காயம் சாப்பிடமாட்டாங்க உங்களையும் சாப்பிடாத சாப்டா அறுந்து விழுந்துரும்னுவாங்க விட்ருவிங்களா? அவுங்க விடறதெல்லாம் ரீலு. நீங்க ஆகாதிங்க டீலு. பீஃப் பிரியாணி விக்கிறவனுக்கு ஆல்ட்டர்னேடிவ் தொழில் இருந்தா அவன் ஏன் அதை செய்யப்போறான். நீங்க இந்த பார்ப்பானுங்க டகுலுக்கு பயந்து பிரியாணியை விட்ராதிங்க. தேடிப்பிடிச்சு சாப்பிட சொல்லலே. இதர மருத்துவ காரணங்கள், சுத்தம் சுகாதார காரணங்கள் இருந்தாலே ஒழிய இதுக்காக ஃபீல்பண்ணவும் தேவையில்லை. இதுக்கொரு மறுப்பு மொழியும் போடத்தேவையில்லை

ச்சும்மா வந்த பணத்துல அமுதம் வாங்கி குடிச்சாலும் அது விஷமாதான் வேலை செய்யும். உழைச்சு வாங்கின பணத்துல நீங்க பீஃப் பிரியாணி சாப்பிட்டா எந்த சாமியும் கண்ணை குத்திராது. அப்படி வந்தா எனக்கு ரீடைரக்ட் பண்ணுங்க. தாளி எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லே . இவனுக ஃப்ராடு மட்டும் சக்ஸஸ் ஆகக்கூடாது. ஓகே



சின்ன வயதில் மழை வந்தால் போதும் மழை வருது மழை வருது நெல்லு வாருங்கோ என்று கத்திக்கொண்டே தெரு தெருவாக ஓடுவோம். என்றால் அப்போது விவசாயமொன்றே பிரதான தொழிலாக இருந்தது என்று பொருள் அல்ல. நான் சொல்வது 1974 என்று வைத்தால் அப்போது எனக்கு 7 வயது இருக்கலாம். அப்போதைக்கும் டவுன் என்பது நான்கு தெருதான். அப்போது இன்றைய கங்கன பல்லி (தமிழ் செதியாளர்கள் பள்ளி என்று குறிப்பிடுகிறார்கள். இது தவறு தெலுங்கில் பல்லெ என்றால் கிராமம் என்று பொருள்

அது பல்லி என்று மருவியுள்ளது அவ்வளவே. தமிழகத்தில் எப்படியோ தெரியாது ஆந்திரத்து கிராமங்களை மட்டும் பல்லெ என்றுதான் குறிப்பிடவேண்டும்) காலனியில் கூட , லட்சுமி தியேட்டர் சமீபத்தில் கூட, மிட்டூர் உட்பகுடியில் கூட வயல்கள் இருந்தன. இன்று எல்லாமே நகரமயம். தாளி நூறு வீடு இருக்காது ஒரு சூப்பர் பஜார்,செல் ரீசார்ஜ் , ஜூஸ் லாண்ட் எல்லாப்பயல்களும் கடை போட்டு இருக்கிறவன் வாய்ப்பை எல்லாம் ஒழிச்சு வியாபாரத்தை கெடுத்து அஞ்சு வட்டி, பத்து வட்டிக்கு வந்துட்டானுவ.

நிற்க மழை வந்தது, வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்த செய்தி வராத பத்திரிக்கையே கிடையாது.வெள்ளம் கண்மாய்லயோ, கால்வாய்லயோ ஓடனும்,ஏரிக்கோ குளத்துக்கோ, ஆத்துக்கோ போய் சேரனும். அது ஏன் வீடுகள்ள புகுது ?
வடி நீர் கால்வாய் எல்லாம் ஆக்கிரமிச்சு வீடு கட்டியாச்சு. ஏரி குளம் எல்லாம் தூர்த்தாச்சு. சித்தூர்லயே ஏரியை தூர்த்துதான் பெரீ பஸ் ஸ்டாண்ட் கட்டியிருக்கானுவ. நீவா நதினுஒன்னு இருக்கு.. அடச்சே.. இருந்தது.இப்போ அதுல கூவத்தோட போட்டி போடற ரேஞ்சுல சாக்கடை ஓடுது. ஆத்துக்கு ரெண்டு பக்கமும் ஆக்கிரமிப்பு. மாடியே கட்டியிருக்கானுவ. ஆத்து பொறம்போக்குல பட்டா கொடுக்க ப்ரெசிடென்ட் ஆஃப் இண்டியாவுக்கே அதிகாரம் கிடையாது. பட்டா கிடையாதுதான். ஆனால் எப்படி கட்டினானுவ. இவனுகளுக்கு சிமெண்ட் ரோடு, வீதி விளக்கு, நகராட்சி குழாய் கெனெக்ஷன்.. எவன் கொடுத்தான். இது ஒருபக்கம்னா

அதே நீவா நதியில ஒருகாலத்துல அய்யருங்க காவிரி கணக்கா குளிச்சு சந்தியாவந்தனம் பண்ண‌தா பேசிக்கிறாங்க. இன்னைக்கிருக்கிற நிலைமைல ஆய்கூட போ முடியாது. இன்னைக்கு திதிதே சேர்மனா இருக்கிற பார்ட்டி மெட்ராஸ் கூட்டு ரோட்ல ஒரு சாராய ஃபேக்டரி வச்சி அந்த கழிவையெல்லாம் ஆத்துல விட்டு நீவா நதி நெடுக்க போரிங் போட்டா தாளி மஞ்சளா வருது தண்ணி. அதையும் குடிக்குது சனம். மஞ்சகாமாலை ,சொறி, சிரங்கு, ப்ராங்கடைஸ்,ஆஸ்மா இன்னும் என்னென்ன இழவோ வருது. அவரு புட்டபர்த்தி சாய்பாபா படம் போட்டு ஃப்ரீ டாங்க்ல தண்ணி கொடுக்கிறார்.

ஒரு கால்வாய்லயும் (கழிவு நீர் கால்வாய் உட்பட) தண்ணி ஓடறது அப்பறம் நடக்கவே முடியாத நிலை. பிளாஸ்டிக் எல்லாத்த்துக்கும் பிளாஸ்டிக் குடிக்கிறவன், கூத்தடிக்கிறவன் எல்லாரும் பிளாஸ்டிக். இதெல்லாம் போய் அடைச்சுக்குது. தாய்குலம்னு பெருமையா பேசறோம் இந்த பீடைங்க குப்பைய பெருக்கி காவாய்ல தள்ளுதே தவிர குப்பை தொட்டில கொண்டுகொட்டாதுங்க. நகராட்சி இருக்கிறது டேக்ஸ் வசூல் பண்ணதானே. அப்படியும் ஆடிக்கோ அமாவாசைக்கோ கணக்குகாட்டவோ காவாய் எடுக்க ஆளனுப்பினா எங்கன எடுக்கிறது. ஓட்டு வீட்ல இருந்து , ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வரை காவாயை ஆக்கிரமிச்சு வீடு, கடை கட்டியிருக்கான். காவாய் மேல போட்ட ஸ்லாப்ஸ்ல ஒரு ஸ்லாப எடுக்க போனா உடனே வி.ஐ.பிங்க கிட்டருந்து போன் . ஏன் புகாது வெள்ளம் ?