Showing posts with label ராசிபலன். Show all posts
Showing posts with label ராசிபலன். Show all posts

Tuesday, April 2, 2013

ஹை அலர்ட் : மேஷம் TO கன்னி


அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல ஏப்ரல் 12 முதல் மே 23  சனி செவ்வாய்க்கிடையில் பார்வை ஏற்படப்போறதாவும்  அல்லாரும் ஹை அலர்ட்ல இருக்கிறது நல்லதுன்னும் சொல்லியிருந்தேன்.
இந்த பதிவுல மேஷம் டு கன்னி ராசிக்காரவுகளுக்கு டீட்டெய்ல்ட் ப்ரிடிக்சன்ஸ் கொடுத்திருக்கேன். கன்னி டு  மீனம் நாளைக்கு தரேன். உடுங்க ஜூட்டு.

1.மேஷம்:
இவிகளுக்கு செவ் 1/8 க்கு அதிபதி . இவரு இவிக ஜன்ம ராசியிலயே நிக்கப்போறாரு.  ஒரிஜினாலிட்டி, உற்சாகம் ,செல்ஃப் கான்ஃபிடன்ஸ் எல்லாம் ஓகே தான். ஆனால் கூடவே கொஞ்சம் கோவம் சாஸ்தியாயிரும். சூட்டுக்கோளாறு வரும். கூர்மையான ஆயுதங்களோட,மின்சாரத்தோட  டீல் பண்ணும் போது ரத்த சேதம் நடக்கலாம். டேக் கேர்.
இவர் 7ல வக்ரமா இருக்கிற சனிய பார்க்க போறாரு. 7 ல சனியிருந்தா காதலி/மனைவி மேட்டர்ல சொதப்பும். அவர் வக்ரமானது பெட்டர் சாய்ஸ் தான். பேட் அப்புக்கு சான்ஸ் இருக்கும். ஆனால் ஒரு வக்ர கிரகம் ஜன்மத்தை பார்க்கும் போது வக்ர சிந்தனை ஏற்படலாம். சிந்தனைக்கு ப்ரேக் போட வாராஹி அம்மன், வராஹ மூர்த்தி அ கிராமதேவதையை தியானம் செய்யவும்.
சிலருக்கு கட்டி,கொப்புளம் ,ரணம் ஏற்பட்டு  வயிறு, முக பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். 10-8 அதிபதிகள்  பார்வை காரணமா வேலையில் அழுத்தம் ஏற்படும். 11-8 அதிபதிகள் பார்வை காரணமா மூத்த சகோதரம் பாதிக்கலாம். வேட்டை பொருளை வீட்டுக்கு கொண்டு வர்ரதுல சிக்கல் ஏற்படலாம்.
2.ரிஷபம்:
செவ் இவிகளுக்கு 7-12 க்கு அதிபதி .இவரு தான்  நிற்கக்கூடாத 12 ஆமிடத்துல ஆட்சியா  வர்ராரு. டெம்ப்ரரியா செவ் தோஷம் ஏற்பட்டாப்லதான். பூமி,கோபம், மின்சாரம், கூர்மையான ஆயுதங்களால்,அதி உஷ்ணத்தால் பிரச்சினை ஏற்படும்.ரத்தம்,எரிச்சல் தொடர்பான நோய் கூட பாதிக்கலாம். செலவுகள் கழுத்தை நெறிக்கும். "முக்கியமான" நேரத்துல பொஞ்சாதியோட முட்டிக்கும். மாமனார் என்னம்மா சத்தம்னு கேட்க "ச்சொம்மா பேசிக்கிட்டிருக்கம் மாமா"ன்னு கூட சொல்லவேண்டி வரலாம்.
காதலி,மனைவி மேட்டர்ல அடக்கி வாசிங்க. பிரிவுக்கும் வாய்ப்புண்டு. கு.ப உப்புமாவாச்சும் செய்ய தெரியுமா? டீ ,காபி?
சனியா 9,10 க்கு அதிபதி இவர் 6 ல வக்ரம். ஒரு வகையில இது நல்லதுதான். அப்பா,சொத்து,முதலீடு,சேமிப்பு வகையறாவுல  லைன் க்ளியராகும் .என்ன நீங்க கொஞ்சம் வளைஞ்சு கொடுக்க வேண்டி வரும். தொழில்,உத்யோகம்,வியாபார வகையிலும் இதே தான் நிலை.
7-9 பார்வை காதலி,மனைவிக்கு டென்ஸ் கூட்டும். அவிக திடீர்னு உங்க அப்பா கிட்டே காச் மூச்னு  கத்தி சண்டை கூட போடலாம். 7-10 பார்வை காரணமா மனைவி உங்க தொழில்,உத்யோகம்,வியாபாரத்துல மூக்கை நுழைக்கலாம்.12-10 பார்வை காரணமா நீங்க சேல்ஸ்  லைன்ல இருந்தா பிழைச்சிங்க. இல்லின்னா அவசரத்துக்கு எதை விக்கலாங்கற யோசனைல்லாம் வந்துரும்.

3.மிதுனம்:
செவ் உங்களுக்கு 6-11 க்கு அதிபதி .இவர் 11ல் ஆட்சி பெறுவதால் கடன் அதிகமாகும்.  செவ் காரக நோய் தலை காட்டலாம்.( ரத்தம்,உஷ்ணம்,எரிச்சல்). மூத்த சகோதரத்தின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். அதுக்காகவும் நீங்க கடன் பட வேண்டி வரலாம்.
சனி 8-9 க்கு அதிபதி. இத்தனை காலம் இந்த நாற பொளப்புக்கு இருக்கிறதை விட போய் சேர்ந்தா நல்லாருக்கும்னு கூட புலம்பற  நிலையில இருந்த நீங்க ஒரு கை பார்த்துரவேண்டியதுதான்னு கோதாவுல குதிப்பிங்க.
சமீபத்துல சொத்து, வெளி நாடு பயணம், அல்லது ஒரு முதலீடு விஷயமா தேவர் ஃபிலிம்ஸ் படம் போல "வெற்றி வெற்றி"ன்னு இருந்தது தலை கீழா போயி அடியை பிடிடா பரதப்பட்டான்னு மாறும்.
6-8 பார்வை காரணமா சாரி சாரியா கிளம்பிட்டிருந்த சத் ரு,ரோக ,ருண உபாதைகளுக்கு ரெட் சிக்னல். அடிச்ச ஜாக்பாட்டை ட்ரா பண்ண கிளம்பினப்போ ஏடிஎம் காணாம போன மாதிரி ஒரு நிலை வரலாம் அப்பா மேட்டர்ல திடீர்னு காபரா ஆயிரும். ஒரு அட்வான்ஸ் ஜெனரல் செக்  அப் நல்லது.
4.கடகம்:
செவ் உங்களுக்கு 5/10 க்கு அதிபதி .இவர் 10 ல வர்ரது நல்லதுதான். உங்க எதிரிகளோட திட்டங்களே உங்க வெற்றிக்கு உதவியா இருக்கும். பிசியாயிருவிங்க.அதே நேரம் அந்த டென்ஸ் காரணமா உங்களை சேர்ந்தவுகளே உங்களை வெறுக்க வச்சிருவிங்க.அடக்கி வாசிங்க. செய்தொழில்ல எப்பவோ செய்த முயற்சிகளுக்கான பலன்லாம் இந்த ஒன்னரை மாசத்துல கதவு தட்டி வந்து சேரும். மகள்/மகன் உங்களுக்கு உதவியா இருப்பாய்ங்க.
சனி உங்களுக்கு 7-8 க்கு அதிபதி. இவர் 4 ஆமிடத்துல வக்ரமாறதால "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா"னு சந்தோசம் கொண்டாட ஆரம்பிச்சுருவிங்க. ஜில்லுனு ஒரு பீர் ,ஒரு பலான படம்னா பரவால்லை .வேற மேட்டர்லாம் மாணாம். மாட்டிக்குவிங்க.
வீடு,வாகனம்,கல்வி தொடர்பாக இருந்த டெட் லாக்  காபரே கணக்கா படக்குனு அவுந்து விளுந்துரும். மனைவியின் பிஹேவியர் ரெம்ப டிஃப்ரன்டா இருக்கும். கலீஞரு அண்ணா கிட்டே இரவல் வாங்கின இதயம் கிடைச்சா பாருங்க. நேர் மறை எண்ணங்கள் அதிகமாகும்.
5.சிம்மம்:
செவ் உங்களுக்கு 4/9க்கு அதிபதி இவர் 9 ஆம் இடத்துல ஆட்சி பெறுவது நல்லதுதான். ஆனால் கடந்த கால மிஸ்மேனேஜ்மென்ட்ஸ் காரணமா ஒரு எஃப்.டியோ ,சொத்தோ பைசலாயிரக்கூடிய வாய்ப்புமிருக்கு. அப்பா /மாமனார் எரிஞ்சு  விழுவாரு. அவருக்கு செவ் காரக நோய் பாதிக்கலாம். தூர பயணத்துல சின்ன ..மிக சின்ன  விபத்து நடக்கலாம். மேலதிகாரி/பெரிய மனிதர் ஒருவரோடு உரசல் ஏற்படலாம்.
இந்த காலகட்டத்துல உங்க அம்மா ஃபாதர்லி குணங்களை வெளிப்படுத்துவாய்ங்க. அது உதவிகரமா கூட இருக்கும். ஒரு சிலர் வீடு /வீட்டு மனை வாங்குவிங்க.
சனி 6/7 க்கு அதிபதி .இவர் 3 ல் இருப்பது நல்லதில்லை தான்.ஆனால் இவர் வக்ரம் பெற்றதால ப்ரதர்ஸோட இருந்த கிரைசிஸ் செட்டில் ஆகலாம். சின்ன சின்ன பயணங்களையும் தள்ளிபோட்டுக்கிட்டிருந்த நிலை மாறும். மனைவிக்கு இருந்த அல்லல் அலைச்சல் குறையும்.
4- 6  அதிபதிகளிடையிலான  பார்வை காரணமாக தாய்க்கு நோய் பாதிப்பு,கடன் தொல்லை ஏற்படலாம்.அவிக நல்லதுக்கு சொல்றதை நீங்க புரிஞ்சுக்காம காச் மூச்சுன்னு கத்தலாம். 9-6 அதிபதிகளிடையிலான  பார்வை காரணமாக தந்தைக்கும் மேற்சொன்ன சத்ரு ரோக உபாதைகள் அவருடன் முட்டல் மோதல் ஏற்படலாம்.
அதே நேரம் இந்த முட்டல் மோதல் அவிகளுக்கும் உங்களுக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகர்க்கும்.
6.கன்னி:
செவ் உங்களுக்கு 3/8க்கு அதிபதி.இவர் எட்டாமிடத்தில ஆட்சி  பெறுவது இளைய சகோதரத்துக்கும் -உங்க சவுண்ட் பாக்ஸுக்கும் ஆப்பு. சிலர் தம்பி அ தங்கையோடு முட்டிக்க வேண்டி வரலாம்.
மேலும் பூமி,கோபம், மின்சாரம், கூர்மையான ஆயுதங்களால்,அதி உஷ்ணத்தால் பிரச்சினை ஏற்படும்.ரத்தம்,எரிச்சல் தொடர்பான நோய் கூட பாதிக்கலாம்.
சனி 5-6 க்கு அதிபதி.இவர் ரெண்டாமிடத்துல நின்னதால ஏறக்குறைய ஒரு சூதாடி போலவே மாறியிருப்பிங்க. அதாவது பணம் எப்ப வரும் -எவ்ள வரும் -எப்ப போகும் எவ்ள போகும்னு தெரியாத நிலை. ஆனால் இந்த நிலை இப்பம் மாறும் பேச்சு,கொடுக்கல் வாங்கல்,குடும்பம் இப்படி எல்லா மேட்டர்லயும் ஒரு நெதானம் வந்துரும்.டோன்ட் ஒர்ரி.
3-5 அதிபதிகளிடையில் பார்வை ஓகே. லாஜிக்கே இல்லாம இளைய சகோதரத்தால நல்லதும் நடக்கலாம்.கெட்டதும் நடக்கலாம். ஆனால் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு பஞ்ச் பேசிக்கிட்டு சலம்பாதிங்க. லோக்கல்ல ட்ரைவிங்ல சாக்கிரதையா இருங்க.
6-8 அதிபதிகளிடை பார்வை காரணமா ஒரு எதிரியை வெற்றிகரமா ஃபேஸ் பண்ணுவிங்க. ஒரு கடன் பைசலாகும். ஒரு உடல் நல பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Wednesday, June 22, 2011

2011 சனிப்பெயர்ச்சி பலன் : எக்ஸ்க்ளூசிவ்

இந்த ஆண்டு இறுதியில் சனி கன்னியிலிருந்து துலாவுக்கு பெயர்கிறார்.அதுவரை கன்னியில் உள்ள சனி தரும் பொதுப்பலனையும் - மேஷம் முதலான 12 ராசிக்காரர்களுக்கு நடைபெற கூடிய பலனையும்  பார்ப்போம்

என்ன இன்னம் 6 மாசம்தானே இருக்கு இதுக்கு ஒரு பதிவு தேவையான்னு சலிச்சுக்காதிங்க பரீட்சைக்கு வருசம் முழுக்கவா படிக்கிறோம். கடேசி 3 மாசத்துல படிச்சு கிழிச்சுரலை. அதே மாதிரிதான் இதுவும். விவரம் புரியாம சனிப்பெயர்ச்சி காலத்தை வீணடிச்சுட்டவுக இந்த ஆறுமாசம் ஒரு பிடி பிடிச்சா போதும் தூள் பண்ணலாம்.

என்ன பதிவுக்கு போயிரலாமா?

பொதுப்பலன்:
கன்னி என்பது புதனுடைய ராசி. ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து செயல்படும் விவகாரங்கள், பிறரின் விவகாரங்களை அவர்களது பிரதி நிதிகளாய் இருந்து நடாத்தி கொடுக்கும்  நிறுவனங்கள் கம்பெனிகள் அனைத்துமே புத காரகத்வம் கொண்டவைதான் என்றாலும் சிறப்பாக கல்வி,மருத்துவம்,மீடியா,ஸ்டேஷ்னரி,போஸ்டல், டெலி கம்யூனிகேஷன், அக்கவுண்டிங், ஆடிட்டிங், ஏஜென்சி,டீலர்ஷிப் ஆகியன் புத காரகத்வம் கொண்டவையாகும்.

சனி இங்கு நின்றதால் தான் போர்டு,ஏஜென்ஸி,கம்பெனிகள்,டெலிகம்யூனிகேஷன் தொடர்பான ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன .உ.ம் கல்மாடியின் காமன்வெல்த், அம்பானிகளின் கேஜி பேசின் இவை இந்த ஆண்டு இறுதி வரை தொடரக்கூடும். பத்திரிக்கையாளர் கொலைகளுக்கும் இதுவே காரணம். மத்திய கணக்குக்குழு ஒவ்வொன்றாய் அதிர்வேட்டுகளை போட்டுவரவும் இதுவே காரணம். மருந்து ஆயுவு பெயரில் ஆந்திரத்தில் நடந்துவந்த ஃபார்மா கம்பெனிகளின்  முறைகேடுகள் ஆந்திரத்தில் பெரும்புயலை கிளப்பி உள்ளன.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி உண்டா இல்லையா என்ற விவாதத்துக்கும் - தனியார் கல்வி கட்டண முறைப்படுத்தல் தொடர்பான விவாதங்களுக்கும் இதுவே காரணம். கலைஞர் டிவி கூட புத காரகத்வமே.

இவ்ளோ எதுக்கு ஐ.நா சபை கூட புத காரகத்வம் தான்.யுனைட்டட் ஸ்டேட்ஸ் எனப்படுவதால் அமெரிக்காவும் புத காரகத்வமே.இவை இந்த ஆண்டு இறுதி வரை தொடரக்கூடும்.

புதனுடயகாரகத்வங்கள் என்னனு புதனே சொல்றார். இந்த காரகங்களில் கன்யா புதன் எப்படியெல்லாம் ஆப்பு வச்சிருக்காருனு கமெண்ட்ல சொல்லுங்க (இதான் ஹோம் ஒர்க். இதை  செய்யாதவுகளுக்கு அனுபவ ஜோதிட ரத்னா விருது நிச்சயம் கிடையாது)

புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.

இந்த கன்யா புதன் மேஷாதி மீன ராசிகளுக்கு என்னவிதமான பலன் தருவாருனு சுருக்கமா பார்ப்போம்.

சனி அவரவர் ராசிக்கு 3,6,10,11 ராசிகளில் இருந்தால் நன்மையை தருவார் என்பது பொதுவிதி.தற்போது சனி வந்து அமர்ந்துள்ள கன்னி  கடகத்துக்கு  3 ஆமிடம். மேஷத்துக்கு 6  ஆமிடம். தனுசுக்கு 10 ஆமிடம். விருச்சிகத்துக்கு 11 ஆமிடமாகும்.

ஆக கன்யா  சனி பொதுவிதிப்படி கடகம், மேஷம்,தனுசு,விருச்சிக ராசிகளுக்கு நன்மை தரும் நிலையில் உள்ளார். மற்ற ராசியினருக்கு தீமை செய்யு நிலையில் உள்ளார் என்று கொள்கை அளவில்(?) கூறலாம்.


ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது இது மிக மிக தவறானதாகும். பொது விதி எனும்போதே சிறப்பு விதியும் இருப்பதாகத்தான் பொருள்.சிறப்பு விதியின் படி பார்க்கும் போது பலன் தலை கீழாய் மாறவும் வாய்ப்புள்ளது.

சனிப் பெயர்ச்சி பலன்கள் என்றதுமே ஒவ்வொரு ராசிக்கும் தனி தனியாக பலன் எழுதிவிடுவது தான் வழக்கமாக உள்ளது. அப்படி எழுதும்போது ஒவ்வொரு வாசகரும் 12 ல் ஒரு பாகத்தை மற்றுமே படிக்கிறார். மற்ற 11 பாகங்களை அலட்சியப்படுத்திவிடுகிறார்.


ஆகவே அனைவரும் சனி குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொதுவில் சொல்லி விட்டு பிறகு வேண்டுமானால் ராசி வாரியாக பலன்களைப் பார்ப்போம். (சனியே சொல்கிறார்)

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

நான் பொதுவிதி+சிறப்புவிதிகளின் படி அனுகூலமான நிலையில் சஞ்சரிக்கிற போது  மேற்சொன்ன எனதுகாரகத்வங்களில் நல்ல பலனை தருகிறேன். பிரதிகூலமான நிலையில் சஞ்சரிக்கிற போது மேற்சொன்ன காரகத்வங்களில் தீய பலனை தருகிறேன்.

என் தன்னிலை விளக்கம் (சனி ஸ்பீக்கிங்)

செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்
பொதுவித்ப்படி ஓகே - சிறப்புவிதிப்படி நாட் ஓகேன்னா 35% ரிசல்ட் எதிர்பார்க்கலாம். பொதுவிதிப்படி நாட் ஓகே சிறப்பு விதிப்படி ஓகேன்னா 65% வரை ரிசல் எதிர்பார்க்கலாம்.

சனி அனுகூலமானால்:
நீங்கள் சுதந்திரர் - அடிமைத்தொழிலில் இருந்தாலும் உங்களை கண்டுக்கற நாயே இருக்காது. மலச்சிக்கல் இருக்காது. நீங்க ஆரம்பிக்கிற வேலை ஒன்னு பத்தா டெவலப் ஆகும். ( நல்ல +கெட்டவேலைகள்) உ.ம் ஒரு கடன் வாங்கினா அது இன் டைம் பைசலாகும் பத்து கடன் வாங்குவிங்க. ஒரு பொய் கேஸு போட்டா பத்து கேஸு போடுவிங்க.

ஆப்போசிட் செக்ஸ் அட் ராக்ட் ஆகும் அவிக கோ ஆப்பரேஷன் கிடைக்கும். சிஸ்டர் டைம் என்னனு கேட்டதுக்கு ஈவ் டீசிங் கேஸெல்லாம் தரமாட்டாய்ங்க. அகால போஜனம்,அகால நித்திரை,முகத்துல எண்ணெய் வழியறது, முடி உதிர்ரது மாதிரி லொள்ளெல்லாம் இருக்காது. என்றும் 16 கணக்கா வலம் வருவிக. நிமிர்ந்த நடை பழகும். நீங்க சம்பளமே தரலின்னாலும் தொழிலாளர்கள் கோ ஆப்பரேட் பண்ணுவாய்ங்க.

சனி பிரதிகூலமானால்:

சொந்த தொழிலிலே இருந்தாலும் கண்ட நாய்க்கு பயந்து நடக்கவேண்டியதாயிரும். வேலைகாரவுகளே ஆப்புவச்சிருவாய்ங்க. துவங்கின வேலை ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு  நின்னுரும். ஆப்போசிட் செக்ஸால லோள்ஸ். அகால போஜனம் -அகால நித்திரை -பகல் கொட்டாவில்லாம் உண்டு.குடல் கல் குடலாயிரும். முகத்துல எண்ணெய் வழியும் முடி உதிரும் .சின்னவயசா இருந்தாலும் வெள்ளை முடி வரும். முகத்துல கிழட்டுத்தனம் வந்துரும். கூன் போட ஆரம்பிச்சிருவிக.

12ராசிக்காரவுகளுக்கும் ஒரு எச்சரிக்கை :

2011 இறுதியில் நடக்க விருக்கும் சனிப்பெயர்ச்சிக்கு ஜூன் மாதம் பலன் எழுதறதால சின்ன சிக்கல். இது சந்தியா காலம் மாதிரி. ஸ்தூலமா சனி கன்னியில இருந்தாலும் சூட்சுமமா பார்த்தா அவரோட கிரணங்கள் அடுத்த ராசியான துலாவை டச் பண்ண ஆரம்பிச்சுருச்சு. ( சனிப்பெயர்ச்சிக்கு 6 மாசம் முந்தியே இது துவங்கிரும் -இந்தகணக்குப்படி துவங்கியாச்சு)

ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வாங்கிட்ட ஐ.ஏஎஸ் அதிகாரி ரேஞ்சுல இப்பம் சனி வேலை செய்வாரு. சினிமா பாஷையில சொன்னா இன்னொரு ப்ராஜெக்ட்ல கமிட் ஆயிட்ட டைரக்டர் கணக்கா. பேட்ச் ஒர்க் எல்லாம் வேகமா நடக்க ஆரம்பிக்கும்.

ஏற்கெனவே நற்பலன் பெறும் நிலையில் இருந்து பெற்றுவிட்டவர்களுக்கு நற்பலனில் மந்தத்தன்மை ஏற்படும்.  சனி செய்த லொள்ளால நாறி நலிஞ்சவுகளுக்கு ரிலீஃப் கிடைக்க ஆரம்பிச்சுரும்.

ஒரு சில சிறப்புவிதிகள் காரணமா நற்பலன் பெறும் நிலையில் இருந்தும் பெறாது போனவர்களுக்கு இந்த 6 மாதத்தில் நற்பலன் கிட்டலாம்.

1.மேஷம்:
இவிகளுக்கு சனி 10,11 க்கு அதிபதி. இவர் 6 ல நின்னது பொதுவிதிப்படி ஓகேன்னாலும் சிறப்புவிதிகளின் படி நல்லதில்லை. ஆனாலும் சத்ருஜயம்,ரோக நிவர்த்தி ருணவிமுக்தி நிச்சயம் கிடைக்கும். அடுத்தவுகளை  இம்சை பண்ணி பார்க்கனுங்கற எண்ணம் வந்திருக்கும் .அதை விட்டுட்டு / குறைச்சுக்கிட்டு  கன்ஸ்ட் ரக்டிவா செயல்படறது நல்லது. மூத்த சகோதரம் நோய்வாய்படலாம்./அவிகளோட சண்டை சச்சரவு ஏற்படலாம்.


சடன் ட்விஸ்ட்:

இந்த பதிவை படிச்ச உடனே நம்ம லைன் அப் என்னனு உங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கும்.ஆர்வமுள்ளவர்கள் மிச்சமிருக்கிற 11 ராசிகளுக்கு சனிப்பெயர்ச்சி பலன் எழுதி பதிவா போடலாம். அ எனக்கு மெயில் பண்ணலாம்.  பலனை நீங்க எழுதிட்டா நம்ம ஸ்பெஷல் ஃபீச்சரான நவீன பரிகாரங்களை நான் எழுதிருவன், ஓகேவா உடுங்க ஜூட்.

Thursday, December 16, 2010

உங்க கேரக்டர் இதுதான்

1.மேஷம்:
இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா மேஷ ராசிக்காரங்க தான். (உங்க கொலிக்ஸ் உங்களை சரியான பிட்பிட் சமாசாரம்/ அலிகிரி/ஆத்திரம் பிடிச்சவருனு கிண்டலடிப்பாய்ங்க)
போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க.வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது.முன்னணில, முன்னுதாரணமா திகழனும்னு பார்ப்பாய்ங்க. உலகம் பிழைக்க விடுமா? விடாது. ச்சோ போராட்டமயமான வாழ்க்கை. நல்ல தலைமை குணங்கள் உள்ள  எம்.டி, மேனேஜர், பிறவித்தலைவர்கள் கண்ல நீங்க பட்டிங்கனா  உங்க மாதிரி பார்ட்டிங்கள  விடவே மாட்டாய்ங்க. ஒரே அமுக்குத்தான்.
2.ரிஷபம்:
இவிக குழந்தை மாதிரி .அல்ப்ப சந்தோஷி. எதிராளி   கொஞ்சம் போல அக்கறையோட பேசினா போதும்   மனசுல  எதுவும் வச்சிக்காம உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி வம்பில் மாட்டிப்பாய்ங்க. ஆனா போக போக மித பாஷியாயிரவும் வாய்ப்புண்டு. (முக்கியமா பெண்கள்)  கொடுத்த பேச்சை காப்பாத்தனும்னு  துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பாரு. . தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லனாக  பெயரெடுக்கலாம். மாற்றங்களை விரும்பாத ராசி இது. செக்கு மாடு மாதிரி ரொட்டீனுக்கு பழக்கப்பட்டவுக.  பணம், பேச்சு, குடும்பம்னால்  வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே  இந்த  விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்ப உறவுகளில்  அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்
3.மிதுனம்:
மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். அதே போல் உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம். இவிக வாழ்க்கைல மரண சமானமான ஒரு  துக்கமோ, நஷ்டமோ வந்தா  உடனே  ஒரு சொத்து வாங்கற அமைப்பு ஏற்படும். பட்டுனு ஒரு லிஃப்ட் கிடைக்கும். தூர தேசத்துலருந்து உதவி வரும்.
4.கடகம்:
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார்.
5.சிம்மம்:
ஜாதகரில் லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், தாய் மீது அதீத பற்று இருக்கலாம். பற்றுனு கூட சொல்ல முடியாது டிப்பெண்டன்ஸ். இந்த குணத்தால எதிர்காலத்துல அம்மாவுக்கும் மனைவிக்கும் தகராறு வரச்ச ரெம்ப குழம்பி போவாங்க ( நாம எப்பவும் பெண்டாட்டிக்கு ஜே தானே)  .சிலர் தாய்க்காக மனைவியையே பிரியவும் ப்ரிப்பேர் ஆயிருவாய்ங்க. இவிக பணமோ காசோ கடனா கொடுத்தா திரும்பறது கஷ்டம்.
தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின்  புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . அதுக்கேத்தாப்ல இவிகளை கேள்வி கேட்கிற நிலைல உள்ளவுக சீக்கிரமே மொக்கையாயிருவாய்ங்க. கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும். சூரியனை பற்றி சைண்டிஃபிக்காக எடுத்து சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கனும். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார். இவிக குடியுள்ள வீட்டுக்கு எதிர்க்க வீடு இருக்காது. இருந்தாலும் பூட்டிக்கிடக்கும்.திறந்திருந்தா எ.வீட்டுக்காரன் ஷெட்.
6.கன்னி:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் பெண்ணாயிருந்தால் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். கணிதம், ஜோதிடம்,மருத்துவ துறைகள்ள ஆர்வமிருக்கும்.பப்ளிக் ரிலெசன்ல புலிங்க.ஆனால் புலி தன் குட்டியை தானே தின்னுர்ராப்ல தன் செட்டுக்குள்ள இருக்கிறவகளையே லொள்ளு பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
7.துலாம்:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர்இளமையில் வறுமை வாட்டினாலும்  மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. ( சித்தூர் பாஷைல சொன்னா உட்டாலக்கடி பட்டாபி) எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. இவரது பேச்சு எதிராளிக்கு  மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.விருச்சிகம் அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம். இன்னொரு விஷயம் பப்ளிக் லைஃப்ல மட்டும் வராதிங்கண்ணா. பிஹைண்ட் தி ஸ்க்ரீன் பெட்டர்.
9.தனுசு:
ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். நீங்க எதிர்காலத்துல குரு ஸ்தானத்துல இருந்து  நாலு பேருக்கு நல்லது சொல்லவேண்டிய பார்ட்டி. அதனால இளமைல கெட்ட ஆட்டம் போடவும் வாய்ப்புண்டு. சிலர் மத்திம வயசுல கூட டபுள் ஆக்டு கொடுப்பாய்ங்க. ஒரு பஞ்சாயத்து கெட்டுப்போகனும்னா இவிகளை விட்டா போதும் வெகண்டையா பேசி விவகாரத்தை முதலுக்கு கொண்டு வந்துருவாய்ங்க. இவிக லைஃப்ல தந்தை,தந்தை வழி சொத்து ,இவர் சேமிப்பு, இவர் வாங்கின சொத்து,தீர்த்த யாத்திரைகள்,தூரபிரயாணங்கள், தூர தேசத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இதுக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கும். இவிகளுக்கு ரெண்டாமிடத்ததிபதி சனிங்கோ. அதனால இந்த வருசம் வந்த லாபத்தை இந்த வருசம் சாப்பிடற யோகம் கிடையாது. எட்டுவருசம் கழிச்சு அழுது புரண்டு  ரிட்டர்ன் வாங்கி  சாப்பிடுவாய்ங்க.
10. மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள்.அதே சமயம் ஏதோ ஒரு கலையில் ஆர்வம், திறமை இருக்கும். பேச்சு குறைவாகவே இருக்கும். கணவருடனான இவரது நெருக்கம் ஏற்ற இறக்கங்களுடன்  இருக்கும். ஒற்றைத்தலைவலி,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். சாஸ்திர சம்பிரதாயங்களை தன்னிச்சையாக (பிரத்யேக ஆர்வமோ, பிடிப்போ இல்லாமலே)  கன்டின்யூ பண்ணுவாய்ங்க.
11.கும்பம்:
என்னைக்கும் எதுவும் சுத்தமா தீர்ந்து போகாது (செல்வம்,செல்வாக்கு முதலியவை) எவ்ள கஷ்ட காலம் வந்தாலும் கொஞ்சமாச்சும் மிஞ்சும். ரகசியங்கள் இருக்கும். எதை செய்தாலும் நமக்கென்ன லாபம்னு பார்த்து செய்யற நேச்சர் இருக்கும். (இளமைல இதுக்கு மாறா இருந்திருக்கலாம்) கொஞ்சம் போல சோம்பல் இருக்கலாம். வெட்டி பந்தா, நாவல்ட்டீஸ்,ஃபேன்சி, காஸ்மெடிக்ஸ்ல விருப்பம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆகுதானு மட்டும் பார்க்கிற குணம் இருக்கும். வாழ் நாள் முழுக்க இரும்பு,ஆயில், எண்ணெய் கறை உங்களை விடாது. அல்லது யூனிஃபார்ம் போடற வேலை . நீங்க என்னதான் லாபம் பார்த்து இறங்கினாலும்  நேரம் கெட்டதா இருந்தா நஷ்டம் வரத்தானே செய்யும். உங்க லைஃப்ல உங்க மூத்த சகோதரன்,சகோதிரியோட ரோலுக்கு ரெம்ப முக்கியத்துவம் இருக்கும். எவன் எக்கேடுகெட்டுப்போனா என்ன என் கூலி எனக்கு கிடைச்சதாங்கற மென்டாலிட்டி இருக்கும். இருந்தாலும் படக்குனு அதிகாரி, சூப்பர் வைசர்கிட்ட முட்டிக்குவிங்க.
12.மீன ராசி:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பிரயாணங்கள்ள ஆர்வமிருக்கும் (அதுவும் டெஸ்டினேஷன் இல்லாத பயணம், நோக்கமில்லாத பயணம், ரிட்டர்ன் ஃபேருக்கு பணமில்லாத பிரயாணமாவும் இருக்கலாம்).இவிக பாதம் / நடை கொஞ்சம் விசித்திரமா இருக்கும்.  பிடி கொடுத்து பேச மாட்டாய்ங்க. எதுலயும் பட்டும் படாமயே இருப்பாய்ங்க(குடும்ப விஷயத்துல கூட)

Wednesday, January 6, 2010

ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மேலதிக தகவல்கள்

என் கவிதை 07 வலைப்பூவிலான என் பதிவுகளை படித்து இன்ஸ்பைர் ஆகி தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற இந்த பக்கம் வந்திருக்கும் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்!

நான் வெறுமனே ஜோதிடனா இருந்தா ஷார்ட்டா ஒரு கட்டண அட்டவணை போட்டுட்டு முடிச்சுரலாம். பேசிக்கலா நான் ஹ்யுமேனிஸ்ட். மனிதகுலத்து மேல உள்ள கருணையாலதான் எழுத்தாளனானேன். உங்களை எஜுக்கேட் பண்ணி ஜோதிஷம்ங்கற பொக்கிஷத்தை முழுக்க முழுக்க கொள்ளையடிக்க ரூட் போட்டு கொடுக்கிறதுதான் என் உத்தேசம். அதனால பொறுமையா இந்த நாலு வரியை படிச்சுருங்க.

ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி!


ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்

ஆமாங்க ஜோதிஷத்துல உங்க உடல் நலம், வருமானம், உங்களை சேர்ந்தவுங்களோட லைஃப்,அவிகனால உங்களுக்கு லாபமா நஷ்டமா ? படிப்பு,தொழில்,வேலை,உத்யோகம்,காதல்,கல்யாணம் ,பிள்ளை பேறு இப்படி லௌகீகமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறாய்ங்க.

ஆனால் உங்க ஜாதக சக்கரத்தை வச்சி உங்க முன் பிறவி, அடுத்த பிறவி, கடந்தபிறவியிலான உங்க ஆன்மீக முயற்சிகள்,அதுக்கு தடையா இருந்த அம்சங்களை பத்தியெல்லாம் சப்ஜாடா தெரிஞ்சிக்கிடலாம்.


தெரிஞ்சுக்கிட்டு லௌகீக வாழ்க்கைல மட்டுமில்லை ஆன்மீக வாழ்விலும் சக்ஸஸ் ஆக ஜோதிஷம் உதவுது.


லௌகீகம் எல்.கே.ஜின்னா ஆன்மீகம் டாக்டரேட் மாதிரி. டாக்டரேட் வாங்கனும்னா னுலும் மொதல்ல நீங்க எல்.கே.ஜி படிச்சாகனும். இந்த கணக்குப்படி நீங்க லௌகீகமாவும் ஜெயிச்சாகனும்.


என் பதிவுகளை படித்துநான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் , ஆராய்ச்சியாளன் என்ற விஷயங்களை ஏற்கெனவே கிரகிச்சிருப்பிங்க.


என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்களது அஃபிஷியல் நேம் (வித் இனிஷியல்) , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்க.



தங்களுக்கான பலன் மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் ரிச் டெக்ஸ் ஃபார்மெட் ஃபைலாகவும், நீங்கள் சிறப்பாக குறிப்பிட்டு கோரினால் ஆடியோ ஃபைலாகவும் மெயில் மூலம் அனுப்பப்படும். ஆடியோ ஃபைல் எனில்

ஒரே தவணையில் 24 மணி நேரத்தில் அனுப்பப்படும். டெக்ஸ்ட் ஃபைல் எனில் மூன்று நாட்கள் தொடர்ந்து தவணைகளில் அனுப்பப்படும்.


பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :

swamy7867@gmail.com

s_murugesan_67@yahoo.com


ஆலோசனை கட்டணம்:

தனியொருவருக்கு பொதுப்பலன் (100 கேபி வரை) + 10 கேள்விகளுக்கான ப‌திலுக்கு ரூ. 250 /-மட்டும்

ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்

கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 30333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.

எம்.ஓ அனுப்புவோர்:

எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-210,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)

எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.


என்னை பார்க்க வராதீக
வெறுமனே பேச வந்தா பரவால்லிங்கண்ணா சோசியம் பார்த்துக்கிட்டு அப்படியே பேசிட்டு போகலாம்னு வந்துராதீக. ஏன்னா அதுக்கு பல காரணம் இருக்கு. நஷ்டம் உங்களுக்குத்தேன்.
நேரில் வந்து சந்திப்பதால் உங்களுக்கு நிறைய நஷ்டங்கள். போக்குவரத்து செலவு, களைப்பு, பிரயாண நேரம், என் எளிய தோற்றம், பின்னணி ஆகியன‌ என் பேச்சின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். மேலும் நேரில் எனும்போது வாயா வார்த்தையாதான் பலன் சொல்ல முடியும். அப்போ பெரிசா கமிட்மென்ட் வராது. த்ரூ மெயில் அனுப்ப வேண்டி வரும்போது அது ரிக்கார்ட் ஆயிருது. ஸோ ஒரு கமிட்மென்டும் வரும். உங்களுக்கு ஃப்ர்தர் ரெஃபரன்ஸுக்கும் உதவும்.

நேரில் சொல்லும் பலன் காற்றோடு போய் விடும். மேலும் அந்த நேரத்து என் மூட் கூட பலனின் தரத்தை குறைக்கலாம். த்ரூ மெயில் என்றால் எனக்கு எப்போ மூட் இருக்கிறதே அப்போது மட்டும் தட்டச்சினால் போதும். மூன்று தினங்களில் . வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்க ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க . நான் பலனை அனுப்பிர்ரன். அதுக்கப்புறமும் உங்களுக்கு நேரிடையா வந்து சந்திக்கனும்னு இருந்தா வாங்க. நோ ஃபீஸ்.

உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சய‌மாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும்,
நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்

மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:




1.பெயர்:

2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :

3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :

4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:

5.கட்டண விவரம்(தொகை) :

6.பலன் அனுப்பவேண்டிய முறை:

7.பலன் அனுப்ப வேண்டிய மொழி:

8.முக்கியமான 10 கேள்விகள்:

9.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது:





இப்ப‌டிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்