Showing posts with label செவ்வாய். Show all posts
Showing posts with label செவ்வாய். Show all posts

Sunday, December 30, 2012

செவ்வாய் தோஷம்: ஆண் பெண் வித்யாசம்

நான்: வணக்கம் தலை !

செவ்:
வணக்கம் . தலைக்கு சூரியன் காரகம். நான் எல்லாம் ரத்தம் , எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜைக்கு காரகம்

நான்: ஐம் சாரி பாஸூ.. ஒரு ஃப்ளோல வந்துருச்சு..

செவ்:
நான் பாஸ் இல்லை. பாஸ் ஆகனும்னா சூரியபலம் தேவை. நான் ஜஸ்ட் கமாண்டர் தான்.

நான்:
அடடா.. என்னங்ணா இன்னைக்கு இப்படி கேட்டை போடறிங்க?

செவ்:
இது கரெக்டு .. ஏன்னா நான் சகோதர காரகன்

நான்:
சார்..  நீங்க ஒரு ஜாதகத்துல கெட்டிருந்தா தோஷ ஜாதகம்னு ஓரங்கட்டிர்ராய்ங்களே.. இந்த தோஷம் ஆண் பெண் விஷயத்துல ஒரே மாதிரியா வேலை செய்யுமா? இதுல வித்யாசம் எதுனா இருக்குமா?

செவ்: நிச்சயமா இருக்கும். அதுலயும் இந்திய பெண்ணுக்கும் -அமெரிக்க பெண்ணுக்கும் இடையில கூட வித்யாசம் இருக்கலாம்.

நான்: மொதல்ல ஆண் பெண் வித்யாசத்தை சொல்லுங்க

செவ்:
ரத்தம்ங்கறது ஆண் பெண் ரெண்டு பேருக்கும் பொதுன்னு நினைக்கிறிங்க. பெண் உடலில் ரத்தம் கொஞ்சம் "தின்" ஆ இருக்கும். கிரகண சமயத்துல ஆண் ரத்தமும் பெண் ரத்தம் போல மாறுதாம். ஜெனரலாவே பெண் ரத்தத்துல ஹீமீக்ளோபின் குறைவா இருக்கும். மேலும் பெண்ணின் உடலில் மென்ஸ்ட் ருவல் சைக்கிள்னு ஒன்னிருக்கில்லை.  அதனால பெண்ணோட பாடிக்கு எஃபெக்ட் சாஸ்தி.

நான்:
புரியுது புரியுது.. அப்போ ஆண் ஜாதகத்துல நீங்க கெட்டிருந்தாலும் எஃபெக்ட் குறைவுங்கறிங்க?

செவ்:
ஒடனே மேல் சேவனிசம் ! பெண்ணுக்கு அந்த மேட்டர்ல பிரச்சினை அதிகம்னா ஆணுக்கு கோபம் கோபம்னு ஒன்னிருக்கில்லை. அந்த ரூட்ல ஆப்படிச்சுருவன்ல

நான்:
கிளிஞ்சுது ..எந்த ஆண் கோபத்திய ரோட்ல காட்டறான். காட்டினா கிளிஞ்சுரும்ல..முக்காவாசி ஆம்பளை ஊட்டு பொம்பள மேலதானே கோவத்தை காட்டறான்.

செவ்:
அது கூட கரெக்டுதான்..அதுக்கு தானே கரண்டு, நெருப்பு,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகள்னு ஆப்ஷன்ஸ்  வச்சிருக்கன். அதை வச்சு பல்பு கொடுத்துருவனே..

நான்:
அண்ணா ! ஒரு மேட்டர் ஸ்பார்க் ஆகுது. தாய்குலம் எப்பயும் நெருப்போடயே விளையாடறாய்ங்கல்ல..இதனால தோஷம் குறையுமோ?

செவ்:
நிச்சயமா குறையும். அடுப்புல ஒவ்வொரு தாட்டி ஏத்தி இறக்கறப்பயும் சூடுபட்டுக்கிறது, கொதிக்கிறது தெறிச்சு விழுகுறதுன்னு தோஷம் இன்ஸ்டால்மென்ட்ல தீரும். அதே சமயம் அவிக சூப்பரா சமைச்சு பேர் வாங்கினா தோஷம் கூடும்.

நான்:
அப்போ ..இதே ரூட்ல இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது..ஆண்கள் உங்க காரகத்துல வேலை செய்துக்கிட்டிருந்தாலும் தோஷம் குறையும் அப்டித்தானே..

செவ்:
குறையலாம்.ஆனால் அந்த தொழில்,உத்யோகம்,வியாபாரத்துல லாபம் சம்பாதிச்சாலும், பேர் புகழ் பெற்றாலும் தோஷம் அதிகரிக்கும்.

நான்:
மொத்தத்துல கணக்கு கணக்கு தான்..
செவ்:
இல்லையா பின்னே..

நான்:
சார்.. உங்களை ஒரு கேள்வி கேட்கறேன்..வேற எதுனா கேளுன்னு நசிகேதனை டைல்யூட் பண்ண எமன் மாதிரி டைல்யூட் பண்ணப்படாது..

செவ்:
ச்சொம்மா கேளு கண்ணா..

நான்:
உங்களோட பலம் இல்லாத ஜாதகத்துல பிறந்து அவதிபடனும்னு ஆரு எளுதி வச்சாய்ங்க?

செவ்:
நீங்க தான் கண்ணா.. கடந்த பிறவியில என் (செவ்)  காரகமுள்ள சனத்தை டார்ச்சர் பண்ணி ,சட்டம் நியாயத்துக்கு புறம்பா என் (செவ்) காரகமுள்ள பொருட்களை லவட்டிக்கிட்டவுக அந்த கருமத்தை தொலைக்க நான் பலமிழந்த ஜாதகத்துல பிறந்து அவதி படறிங்க..

நான்:
அடடா.. இப்பத்தேன் கணக்கு டாலி ஆகுது. நம்ம ஜாதகத்துல நாலமிடத்துல நின்னுருக்கிங்க. போன ஜன்மத்துல அம்மாவோட அருமை தெரியாம அவமதிச்சிருக்கனும். அடுத்தவன் வீட்டை ,வாகனத்தை கொளுத்தியிருக்கனும்.இந்த காலத்து அரசியல் வாதிங்களை போல நில ஆக்கிரமிப்பெல்லாம் செய்திருக்கனும். அண்ணன் தம்பிகளுக்கு உரிய பங்கை கொடுக்காம ஆப்படிச்சிருக்கனும். அதனாலதேன் இந்த ஜன்மத்துல இப்படி ஒரு ஜாதகத்துல பிறந்து நாயடி பட்டேன்னு நினைக்கிறேன்.

செவ்:
கரெக்டு..

நான்:
இதுக்கு பரிகாரம்?

செவ்:
என்  காரகமுள்ள சனத்துக்கு  என் காரகமுள்ள பொருட்களை ஃப்ரீயா கொடுத்துட்டிரு .. ஒரு கட்டத்துல கணக்கு டாலி ஆனதும் மேட்டர் ஓகே ஆயிரும்.

நான்:
ரெம்ப நன்றிங்ணா.. இன்னம் நிறைய கேள்விகள்ளாம் இருக்கு. நாளைக்கு கேட்கிறேன்.
செவ்:
அப்படியே ஆகட்டும்.

Tuesday, December 25, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: செவ்வாய்

அண்ணே வணக்கம்ணே !

நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ல சூ,சந்  ஓவர். இன்னைக்கு செவ்வாய். தினசரி ஒருத்தருக்கு அவிகளோட எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கு இலவசமா பதில் தரப்போறோம். இது ஜனவரி  1 முதல் 100 நாளைக்கு அமல்ல இருக்கும். இதுக்கு என்ன பண்றது ஏது பண்றது தெரியனும்னா பக்கத்துல உள்ள விட்ஜெட்டை க்ளிக் பண்ணுங்க. விட்ஜெட்னா என்னானு தெரியலியா? இங்கே க்ளிக் பண்ணுங்க.

பதிவுக்கு போயிரலாமா?

செவ்வாய் 2012 டிசம்பர் 19 முதல் 2013  ஜனவரி 25 வரைக்கும்  மகரத்துல தன் உச்ச ராசியில உட்கார்ந்திருப்பாரு. இவரை பேட்டி எடுக்கனும்னா  நாமளும் மகரத்துக்கு போக வேண்டியதுதான்.

நான்:வணக்கம் சார் !
செவ்: வணக்கம்.  வாய்யா ! என்னடா இன்னம் ஆளை காணோமேன்னு நினைச்சேன் வந்துட்ட. திங்க் ஆப் எ டெவில் மாதிரி ..

நான்:
பாஸூ .. நமக்கு அன்னதாதாவே நீங்க தானே .. உங்களை விட்டுர முடியுமா என்ன?

செவ்:
ஓஹோ ..ஜீவனாதிபதின்னு சொல்றியா? சரி நான் கொடுக்கிற தொழில் அமைப்பை சொல்லு பார்க்கலாம்.ஒரே வார்த்தையில சொல்லனும்.

நான்:
தர்கத்துக்கு இடமுள்ள எல்லா தொழிலுக்கு உங்க பலம் தேவையாச்சே தலை.. இந்த முட்டாள் உலகம் எல்லாத்துலயும் தர்கத்தை தானே தேடுது ஷேர் மார்க்கெட் உள்பட.

செவ்:
அப்போ தர்கம் தேவைப்படாத இடத்துல என் பலம் உதவாதுங்கறியா?

நான்:
இல்லையா பின்னே..

செவ்:
செல்லம் ! வாளை தூக்கி வீச தெரிஞ்சவனுக்கு  அதை தூக்கி வீசவும் தெரியுமில்லை. தர்கத்தை முழுக்க அறிஞ்சவனுக்கு அதை தூக்கி வீசறதும் ஈஸிதானே .  அரை குறைங்கதான் நடுக்கத்துல  கக்கா போறச்ச கூட கத்தி வச்சுக்கிட்டிருக்கும்.

நான்:
அப்போ .. நீங்க ஆல் இன் ஆல் அழகுராஜாங்கறிங்க..

செவ்:
லேசா மாத்தி சொல்லு. என்னோட பலம் உள்ளவன் ஆல் இன் ஆல் அழகுராஜா..

நான்:
நம்முது கடகலக்னம். ஜாதகத்துல  நாலாமிடத்துல நின்னிருக்கிங்க.  ஜீவனாதிபதி 4 ல் நின்று 4 க்கு அதிபதி 2 ல  நின்னா நிட்சேப யோகம்னு எங்கயோ படிச்சன். அதாவது  புதையல் எடுக்கனுமாம். அங்கங்கே புதையல் எடுக்க க்ரூப்பா அலையறானுவ . எனக்கு மட்டும் அந்த எண்ணமே அருவறுப்பா இருக்கே ஏன் பாஸூ..

செவ்:
என்னை கிண்டி விட்டு மேட்டர் வரவழைக்க பார்க்கிறே..நடக்கட்டும் நடக்கட்டும்.  ஜீவனம்ங்கறது பொளப்பை காட்டற இடம் . 4ங்கறது வித்யாஸ்தானம் . அதாவது உன் பொளப்பே லெர்னிங். ச்சொம்மா படிச்சுக்கிட்டே இருந்தா கண்ணு தான்  டப்ஸாகும். முதுகு வலிக்கும். பைல்ஸ் வரும். படிச்சதை செரிச்சுக்கிட்டு வாயா வார்த்தையா நாலு பேருக்கு சொன்னா தானே நாலு காசு பார்க்கலாம்.  அதனாலதேன் 10 க்கு அதிபதி 4 ல நின்னு  அதுக்கு அதிபதி  2 ல நின்னா புதையல் யோகம்னு சொல்லியிருக்காய்ங்க.

நான்:
அது சரி 4 ங்கறது தாய்,வீடு,வாகனம் இத்யாதிய கூட காட்டுதில்லியா?  அந்த மேட்டர்ல ஏன் ஒர்க் அவுட் ஆகலை?

செவ்:
கொய்யால ஒங்க வீடே உன் அம்மா பேர்ல தானே இருந்தது. அதை வித்து உன் ஷேரா கொடுத்த லட்சத்து ரெண்டாயிரத்தை நாசமாக்கினதை மறந்துட்டியா?

நான்:
ஓ இப்படி வரிங்களா? வந்தது ஓகே.அது ஏன் நாசமா போச்சு?

செவ்:
நான் 4 ஆமிடத்துல நின்னா தரித்திரயோகம்னு ஒரு விதி இருக்குல்ல. அதான்

நான்:
என்ன பாஸூ .. 4 ஆமிடத்துல செவ் இருந்தா (விஷய ஞான) புதையல் எடுக்கனுங்கறிங்க.அப்பாறம் பார்த்தா தரித்திர யோகம்ங்கறிங்க? குழப்பமா இருக்கே.

செவ்:
கண்ணா .. 4ங்கறது வித்யாஸ்தானம். நான் தர்க்கத்துக்கு அதிபதி . எல்லா வித்தைகளுக்கும் தர்கம் தான் அடிப்படை . அதனால  விஷய ஞானத்துல புலி ஆயிட்டே. பையில பைசா இருக்கிறச்ச நீ எத்தீனி மேட்டரை தெரிஞ்சுக்கிட்டே. வவுத்துல பசி இருக்கிறச்ச எத்தீனி மேட்டரை தெரிஞ்சுக்கிட்டே கணக்கு போட்டு பாரு.. கும்பி காஞ்சாதான் மேட்டர் உள்ள போகும் அம்பீ !

நான்:
இப்படி வர்ரிங்க .ஓகே ஓகே.. உலக ஞான விஷயங்கள்ள தர்க்கம் ஓகே. 120 வயசு கிழவாடில்லாம் ஆன்மீகத்தோட சில்லி வேரை பிடிச்சு சிங்கியடிச்சுக்கிட்டிருக்காய்ங்க.ஆனால் நமக்கு மட்டும் அசால்ட்டா ஆணிவேரே மாட்டிக்கிச்சே .ஆன்மீகத்துல தர்க்கமே கிடையாதில்லியா? இது எப்படி சாத்தியமாச்சு?

செவ்:
நாலாமிடத்துல நான் மட்டுமா இருக்கேன். என்னோட கேதுவும் இருக்காரில்லை. கேதுதானே ஞானகாரகம் -மோட்ச காரகன்.

நான்:
அது சரி நீங்க 3,6,10,11 தவிர எங்கன இருந்தாலும் தோஷம்ங்கறாய்ங்க. அப்போ நாலாமிடத்துல நீங்க இருந்தா  தோஷத்தை தானே தரனும். அது எப்படி ஆன்மீகம் -லௌகீகம்னு ரெண்டு மேட்டர்லயும் நன்மைய தந்திருக்கிங்க?

செவ்:
நைனா ..சினிமா ஷூட்டிங்ல லைட்ஸ் ஆன் பண்ணதும் வெறும் வெளிச்சம் மட்டுமா வருது. சூடு கூட பரவுதில்லை.  அப்படித்தேன் இதுவும். 4ங்கறது தாயை காட்டற பாவம். அம்மாவுக்கு உன்னோட 17 வயசுலயே டிக்கெட் போட்டுட்டம்.

4 ங்கறது வித்யா ஸ்தானம் 20 வயசுல படிப்பு க்ளோஸு. ஒடம்பெல்லாம் ப்ரெய்னனை வச்சிருந்தாலும் ஹால் டிக்கெட்டை காணாம போக்கி ஆப்படிச்சமா இல்லியா?

4ங்கறது வீட்டை காட்டற இடம் . 24 வயசுலயே ஒன்னை வீட்டை விட்டு வெளியேத்தி அங்காடி நாயா அலைய விட்டமில்லை. வாடகை வீடுகள்ள அல்லாடினியா இல்லியா?  3 நாள்லயெல்லாம் வீட்டை மாத்தியிருக்க இல்லியா? 30 வயசுல ஏகமா வீட்டை ஆட்டைய போட்டுட்டம். அதை வித்து வந்த பணத்தை கூட எரிச்சுட்டமில்லை. மேசை நாற்காலில்லாம் கூட வித்து தின்னிருக்கல்லியா? இதான் தோஷம்.

நான்:
அது சரி.. அப்பம் செவ்வாயோட கேது சேர்ந்தா தோஷம் பரிகாரங்கறாய்ங்களே..

செவ்:
கண்ணா .. நீ மட்டுமில்லை. நாட்ல நிறைய பேரு தோஷ பரிகாரம்னா தோஷத்தை காக்கா தூக்கிட்டு போயிரும்னு நினைக்கிறாய்ங்க. தோஷம்னா டேமேஜஸ். பரிகாரம்னா டெமரேஜஸ். தமிழ்ல சொன்னா தோஷம்ங்கறது நஷ்டம். பரிகாரம்ங்கறது நஷ்ட ஈடு. ஒன்னையே எடுத்துக்க அம்மாவுக்கு டிக்கெட் போட்டம் . ஆனால் ஆத்தா அந்த இடத்தை ஃபில் அப் பண்றாள். வீட்டை காலி பண்ணிட்டம். இந்திய நாடு என் வீடுங்கற ரேஞ்சுக்கு ஒன்னை  கொண்டு வந்துட்டம் . அடுத்து வாகனம்னா பாரதி சொன்னாப்ல ஞான ரதத்தோட ஸ்டீரிங்கையே கையில கொடுத்துட்டம் .  கூட கேது மட்டுமில்லாம இருந்திருந்தா போனதை நினைச்சே நாறியிருப்பே. கூட கேது இருந்ததால எது போனாலும் - இதை பாலன்ஸ் பண்ண  எதுவரும்னு கெஸ் பண்ண ஆரம்பிச்சுட்ட.

சுந்தர சைதன்யானந்தா சொல்றாப்ல கடவுள் எதையாச்சும் கொடுத்தா பிரசாதம் -எடுத்துக்கிட்டா காணிக்கைங்கற மன நிலைக்கு வந்துட்ட. இதுக்கு மிஞ்சின பரிகாரம் என்னா வேணம்ங்கறே..

(செவ்வாயுடன் பேட்டி தொடரும்)

Friday, October 21, 2011

2011, அக்டோ.30 முதல் 2012,மார்ச் ,22 க்குள் ???????


அண்ணே வணக்கம்ணே !

நேத்து 45 நாள்ள ஒரு ராசிய விட்டு காலி பண்ண வேண்டிய செவ் அக்டோ 30 முதல் 158 நாள் சிம்மத்துல கேம்ப் அடிக்கிறாரு. இதுல 2012 ஜனவரி 23 வரை சாதா சஞ்சாரம், மார்ச் 22 வரை வக்ர சஞ்சாரம்.

இதனோட எஃபெக்ட் மேஷம் முதலான 12 ராசியினருக்கு எப்படியிருக்கும்னு இந்த பதிவுல சுருக்கமா பார்ப்போம்.

பொதுவா செவ் பாபகிரகம் என்பதால் 3,6,10,11 ல இருந்தா நல்லதுங்கறது ஒரு விதி. இதன் படி மிதுனத்துக்கு 3 ல் , மீனத்துக்கு 6 ல் , விருச்சிகத்துக்கு 10 ல் ,துலாமுக்கு 11 ல் செவ் நிற்பார் என்ற வகையில் இவிகளுக்கு நல்லதுன்னு சொல்லனும். மத்தராசிக்காரங்க கொஞ்சம் போல எச்சரிக்கையாத்தான் இருக்கனும்னும் சொல்லனும். இருந்தாலும் இன்னம் கொஞ்சம் டீப்பா பார்க்கறச்ச இந்த பலன் தலைகீழா மாறவும் வாய்ப்பிருக்கு.

அதனால டீப்பா பார்த்து ஒவ்வொரு ராசிக்கும் ரெண்டு காலகட்டத்துக்கான பலனை தனித்தனியா கொடுக்க வேண்டியிருக்கு. சாக்கிரதையா படிச்சு ஃபாலோ ஆயிக்கங்க. பெஸ்ட் ஆஃப் லக்.

ORU SOL:

செவ்வாய்னா ஏதோ ஆயா ராம் கயாராம்னு நினைச்சுராதிங்க. செவ் சரியில்லைன்னா தோஷ ஜாதகம்னு தனியா தூக்கிவச்சுர்ராய்ங்க. ஏன்னா அந்த அளவுக்கு செவ்வாய்ல மேட்டர் கீது. ராசி சக்கரத்துல எந்த கிரகம் செவ்வாயை பீட் பண்ணமுடியாம பின் தங்கி இருக்கோ அந்த கிரகத்தை கிரகயுத்தத்தில் தோற்ற கிரகம்னு சொல்வாய்ங்க. அது ஏறக்குறைய நம் மன்மோகனார் மாதிரி சோனியா இருக்கும்.

செவ்வாயை பத்தி சொல்லனும்னா இன்னைக்கெல்லாம் சொல்லலாம். அவரே சொல்றதை கேட்க இங்கே அழுத்துங்க.

1.மேஷம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

செவ் உங்களுக்கு 1/8 க்கான அதிபதி. சிம்மம் உங்களுக்கு அஞ்சாவது இடம் . ஆகவே செவ் காரகத்வத்துல யோக பலனையும் எதிர்பார்க்கலாம். அதே சமயம் சின்ன அவமானம், கோபம், அதி உஷ்ணம் இத்யாதியையும் ஃபேஸ் பண்ண வேண்டியதுதான். குறிப்பா குறை பிரசவம் நடக்க சான்ஸ் இருக்கு. சம்பந்தமே இல்லாம ஏதோ நினைப்புல தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா கதையா நெருப்பு,மின்சாரம்,கூர்மையான ஆயுதத்தால் அபாயம் கூட நேரலாம். டேக் கேர்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்கண்ட யோக பலனும் கோவிந்தா. அபாயம்,ஆபத்துகளும் பைபாஸ் ஆயிரும்.லக்னாதிபதியே வக்ரமாறதால உங்க இயல்புக்கு மாறா வாழ் நாள்ள நெனச்சு கூட பார்க்காத காரியத்தை எல்லாம் செய்ய துணிஞ்சுருவிங்க. காரியம் நல்லதா இருந்தா சரி. இல்லின்னா ஆப்புதேன்.

2.ரிஷபம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

செவ் உங்களுக்கு 12/7 க்கான அதிபதி. சிம்மம் உங்களுக்கு நாலாவது இடம். தாய்,வீடு வாகனம்,கல்வி வகையறாவில் பிரிவு, சிக்கல்,நஷ்டம் வரலாம். இதய நோய் உள்ளவர்கள் ஜாக்கிரதை. வறுமை தாக்கலாம். ஒரு சிலருக்கு ஒரு சில தகராறுகளுடன் திருமணம் ஏற்பாடாகலாம். அதிலும் ஒரு சிலருக்கு தாய்வழியில் ஏற்கெனவே விரோதமுள்ள உறவில் பெண் அமையலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்படி திருமணம் தொடர்பான வில்லங்கங்கள் முடிவுக்கு வந்து சுபகாரியம் நடக்கலாம்.


3.மிதுனம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

உங்களுக்கு செவ் 11/6 க்கு அதிபதி. சிம்மம் 3 ஆவது ராசி. சகோதர வர்கம் பாதிப்படையும்,அவர்களுடனான உங்கள் கம்யூனிகேஷன் பாதிப்படையலாம். உங்களுக்கு குருட்டு தைரியத்தால் கடன் கூடலாம், விரோதம் ஏற்படலாம். வில்லங்கத்தில் சிக்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்படி கெடுபலன் மாறும். சகோதரவகையில் உதவி கிட்டலாம்.

4.கடகம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
உங்களுக்கு செவ் 10/5 க்கு அதிபதி. இவர் ரெண்டுல வர்ரது விசேஷம் தான். இதனால் தொழில் முன்னேற்றம் காணும். வாக்குத்திறமை பளிச்சிடும். சிலருக்கு வாக்பலிதமும் உருவாகலாம். செவ் காரகத்தில் அதிர்ஷ்டம் வரிக்கும். உங்களையும் அறியாம சுடு சொல் வந்துராம பார்த்துக்கங்க. இதனால குடும்பத்துல சினன் கலகம் வந்து போகலாம். கண்கள் சிவக்கும்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

யோகத்துக்கு லீவு. மேற்சொன்ன தீயபலனும் பைபாஸ் ஆயிரும்.


5.சிம்மம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
உங்களுக்கு செவ் 9/4 க்கு அதிபதி. இவர் ஜன்மராசியிலயே வர்ரது நல்லதுதான். பெற்றோரால் நன்மை ஏற்படும். சில சமயம் ப்ரஷரை ஏத்தி விடுவாய்ங்க. அஜீஸ் பண்ணிக்கனும்.நெருப்பு,மின்சாரம்,கூர்மையான ஆயுதம், முன் கோபத்தால் கஷ்ட நஷ்டங்கள் வரலாம்.

முதலீடு,சேமிப்பு குறித்த சிந்தனை அதிகரிக்கும். நல்ல முடிவா எடுப்பிங்க.மனை,வீடு தொடர்பான வேலைகளும் நடக்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன நற்பலன் குறையலாம். தீயபலன் பை பாஸ் ஆயிரும்.

6.கன்னி:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
செவ் உங்களுக்கு 8 /3 க்கு அதிபதி .சிம்மம் விரயஸ்தானம். 8 க்கு அதிபதி -12ல் மறையறது நல்ல அம்சம்தேன். இது உங்களுக்கு பிராண ஹிம்சையா இருந்த அனேக விஷயங்களை செட் ரைட் பண்ணும். ஒரு சிலர் வீடு அ மனையை விற்று இந்த வேலைய செய்யவேண்டி வரலாம். சகோதர வர்கத்துக்கு கொஞ்சம் செலவழிக்கவேண்டி வரலாம். போட்டி சேலஞ்சுன்னு போகாதிங்க விரயம் தப்பாது.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன நல்ல பலன் குறையும். தீய பலன் பை பாஸ் ஆயிரும்.

7.துலா:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

7/2 க்கு அதிபதி 11 ல வர்ராரு. நல்லதுதான். இதனால் பூமி லாபம் ,பூமியால் லாபம்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கு.செவ் காரகம் நல்லாவே கை கொடுக்கும். ஆனா 7 -11 தான் வில்லங்கமானது. கண்ணாலமாகாத பார்ட்டின்னா பரவால்லை. கண்ணாலமான பார்ட்டியா இருந்தா சின்னவயசு பொண்ணு ஒன்னு ரெம்பவே டிஸ்டர்ப் பண்ணும் அவாய்ட் பண்ணிருங்க.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்கண்ட பலன்களில் வேகம் மெத்தகுறையும். டிஸ் அப்பாய்ண்ட் ஆயிராதிங்க. ஃப்ரீயா உடுங்க.


8.விருச்சிகம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
6/1 க்கு அதிபதியான செவ் 10 ல வர்ராரு. தொழில்,உத்யோகம் வியாபாரத்து மேல ஆர்வம் அதிகரிக்கும். கடனோ ஒடனோ வாங்கிப்போட்டு கூட ஃபாஸ்ட் அப் பண்ண ட்ரை பண்ணுவிங்க .பெஸ்ட் ஆஃப் லக். அதே நேரம் உடம்பையும் பார்த்துக்கங்க. இல்லாட்டி முடக்கிரும். ( முக்கியமா ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள்)

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
தொழில் ஆர்வம் -கடன் குறையும். அதே நேரம் ஹெல்த் ட்ரபுள் கொடுத்துரலாம். லக்னாதிபதியே வக்ரமாறதால உங்க இயல்புக்கு மாறா வாழ் நாள்ள நெனச்சு கூட பார்க்காத காரியத்தை எல்லாம் செய்ய துணிஞ்சுருவிங்க. காரியம் நல்லதா இருந்தா சரி. இல்லின்னா ஆப்புதேன்.


9.தனுசு:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

5/12 க்கு அதிபதியான செவ் 9 ல வர்ராரு. பூர்விக சொத்தை விற்கமுடியாம இருந்தவுக - ஃபிக்சட் உடைக்கலாமா வேணாமான்னு ரோசிச்சிட்டிருந்தவுக துணிஞ்சி ஒரு முடிவை எடுப்பிங்க. ஆனால் டிசம்பர் 25 வரை உங்க லக்னாதிபதியான குருவும் வக்ரம். அதனால் நாலு தாட்டி - நாலு கோணத்துல ரோசிச்சு டிசைட் பண்ணுங்க. சிலர் குறைஞ்ச விலைக்கு ஒரு சொத்தை வாங்கலாம். சிலர் பழைய வீட்டை இடிச்சு கட்டலாம். சிலர் வாங்கிப்போட்டிருந்த மனையில வீடு கட்ட ஆரம்பிக்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

அகல கால் வச்சுட்டமோன்னு ரெம்பவே நொந்துக்கற கால கட்டம்.



10 .மகரம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

4/11 க்கு அதிபதியான செவ் 8 ல வர்ராரு. தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையறாவுல நோய் விரோதம்/ கலகம், நஷ்டம்,வீண் விரயம்/ சிறு விபத்து /தடை வர வாய்ப்பிருக்கு டேக் கேர். மூத்த சகோதரர்/சகோதிரிக்கும் தீங்கு நேரலாம். அ அவிகளால உங்களுக்கு.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்கண்ட தீய பலன் மாறும்.ரிலீஃப் கிடைக்கும்.


11.கும்பம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

3/10 க்கு அதிபதி செவ் . இவர் 7 க்கு வர்ராரு. இது மனைவிக்கு/மனைவியால் அல்லல் அலைச்சலை தரலாம். சகோதர வர்கம் உதவிக்கரம் நீட்டலாம். தொழில் உத்யோகம் வியாபாரத்துல புதிய தொடர்புகள், ஒத்துழைப்பு கிடைக்கலாம். அந்த தொடர்பு போலீஸ்/மிலிட்டரி./ரயில்வே தொடர்பானதா இருந்தா குறுகிய கால ப்ராஜக்ட்னா ஓகே. அதாவது ஜன 22 க்குள்ள ஐசா பைசா தீர்ந்துரனும். இல்லாட்டி இமிசை தான்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன தொடர்பு / ஒத்துழைப்பு தேய ஆரம்பிக்கும்.

12.மீனம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

2/9 க்கு அதிபதி செவ். இவர் 6 க்கு வர்ராரு. கடன் வாங்க வேண்டி வரலாம், உங்க பேச்சுல சூடு கூடும். குடும்பத்துல சலசலப்பு வரும். கண் நோய் வரலாம். சொத்து/ முதலீட்டின் மேல் கடன் வாங்க வேண்டி வரலாம். தூர பயணம் தள்ளிப்போகலாம். அ அது வீண் விரயமாக முடியலாம். தூர தேச தொடர்புகளால் கடன் விரோதம் ஏற்படலாம். ஒரு சிலர் சொத்தை அடகு வச்சும் கடன் வாங்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன தீய பலன் குறையும்.டிசம்பர் 25 வரை உங்க லக்னாதிபதியான குருவும் வக்ரமா இருக்கிறதால உசாரய்யா உசாரு .ஓரஞ்சாரம் உசாரு.

Monday, September 5, 2011

செவ்வாய் தோஷம் : அசலான பரிகாரம்


அண்ணே வணக்கம்ணே !
முக்கியமா மணி அண்ணன், கிருஷ்ணா ,சுதர்சன் மற்றும் மெயில் அனுப்பின நண்பர் ஆகியோருக்கு சாரி. இன்னைக்கும் குரல் பதிவு தேன்.இதுல உள்ள அனுகூலங்களையும் சொல்லியிருக்கேன். உங்களுக்கும் வேணா எனக்கும் வேணா பேசாம ஓட்டிங் வச்சுருவம்.

நம்ம சைட்டுக்கு கிடைக்கிற ஹிட்ஸ் மேக்சிமம் 1000 இதுல பாதி பேர்..மாணா மாணா அதுல பாதிபேர் (250) அது கூட மாணா பட்டுன்னு 25பேர் குரல் பதிவு வேணான்னு ஓட்டுப்போட்டுட்டா டெக்ஸ்டுக்கு மறிர்ரன்.

நம்ம ஜா.ராவுக்கு இது ஒரு சான்ஸ்.தான் வச்சிருக்கிற டுபாகூர் மெயில் ஐடிங்களை வச்சு டெக்ஸ்டுக்கு ஓட்டுப்போட்டுட்டா நமக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். இன்னைக்கு செவ் துவாதச பாவங்களில் எந்தெந்த பாவங்களில் நின்னா (அது பிரதிகூலமான பாவமா இருந்தா) என்னமாதிரி பரிகாரங்களை செய்துக்கனும்னு விவரிச்சுருக்கேன். இதை செவ் தோஷம்னு சொன்னா நல்லா புரியும்னு நினைக்கிறேன்.

நேற்றைய கருத்து மழைக்கு கமெண்ட் மழை பொழியலை. இப்பம் டெக்ஸ்ட் பதிவுதான்னு நமக்கு ஆப்படிக்கிற கமெண்ட் மழையாவது பொழியுதா பார்ப்போம்.

கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளேபட்டனை அழுத்தி செவ்வாய்க்கான பரிகாரங்களை கேளுங்க

Tuesday, February 8, 2011

செவ்வாயும் கில்மாவும்



இன்னாபா இது யுத்தகிரகத்தை போயி கில்மாவோட அநியாயத்துக்கு சேர்க்கிறேனு உ.வ பட்டுராதிங்க. பல யுத்தங்கள் வரதுக்கு கில்மாதான் காரணமா இருந்திருக்கு. யுத்தத்துல வேற்றி கிடைச்சாச்சுன்னா கில்மாவுக்கு குறைவே இருக்காது.

செவ்வாய்னா ரத்தம். பலான இடத்துக்கு ரேப்பிட் ஃபோர்ஸ் மாதிரி ரத்தம் பாயலைன்னா அதை அல்பசங்கியைக்கு மட்டும் தான் உபயோகிக்கமுடியும்.

ஆண்,பெண்கள் சுய இன்பம் இத்யாதியில் இறங்காம, பெண்கள் சாகசங்கள் புரியாம இருந்தா முதல் உறவின் போது கருமுத்துக்களை பார்க்கலாம். ( இது எல்லாருக்கும் கட்டாயமில்லிங்கோ) சிவப்புதுளிகள் ஜீரோ வாட்ஸ்ல கரு முத்தாதான் தெரியும்.

பெண்கள் விசயத்துல ஒவ்வொரு மாதவிலக்குக்கப்பாறம் தான் புதிய எக் செல் ஓவரிலருந்து புறப்பட்டு வந்து கருப்பையில தன் காத்திருப்பை துவங்குது . அப்பத்தேன் அவிக "உணர்ச்சிகள்" தீட்டப்பட்டிருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்துல சிவந்திருக்க வேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்டே இருக்கு. இதனோட அடிப்படை என்ன? ரத்த ஓட்டம் கரீட்டா நடக்குதா இல்லியாங்கறதுதேன்.

(ஜாதகததை வைத்து உடல் அமைப்பை சொல்வது போல் (உ.ம் : லக்னம் = தலை,முகம்) உடல் அமைப்பை வைத்து சாதகம் சொல்லமுடியாதா என்பதே சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படை போலும். ஆனால் பாவகிரகங்கள் ஜஸ்ட் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மனதையும் பாதிக்கின்றன.

சிலர் விஷயத்தில் பாவ கிரகங்கள் உடலை பாதிக்காது (இவர்கள் பார்க்க சுந்தர புருஷர்களாய் இருப்பர்) ஆனால் மனதை கோரமாக பாதித்திருக்கும். ( சாடிஸ்டிக் சார்மிங் வில்லனாக இருப்பார்கள்)

எச்சரிக்கை: இதெல்லாம் என் கருத்து /ஊகம்/அனுபவம் மட்டுமே



இவ்ளோ டீட்டெயில்டா போவானேன் செவ்.......வாய்ங்கற பேரை பாருங்க. ஒடனே சால்னா கடையில நமீதா கணக்கா ஒரு கேரக்டர். வெற்றிலை போட்டு சிவந்த வாய் ஞா வரலை. மத்த கிரகங்கள் செரியில்லைன்னா அது சரியில்லை இது சரியில்லைனு தான் சொல்வாய்ங்க. இவரு சரியில்லைன்னா மட்டும் ( லக்னம் முதற்கொண்டு 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருத்தல்) செவ் தோஷம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.

இன்னாபா இது அக்குறும்புனு பொங்கி எழுந்துராதிங்க. மேட்டர் கீது வாத்யாரே. மன்சனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர்ரது வெள்ளயணுக்கள். அது உற்பத்தியாகிறது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜையில. அந்த மஜ்ஜைக்கு காரகன் செவ்வாய். தாளி நோ.எ.ச இல்லாத பார்ட்டிக்கு எந்த ரோகம் தான் வராது?

மேலும் செவ் சரியில்லின்னா ரத்த சுத்தி சரியா இருக்காது. சொறி சிரங்கு கட்டி எல்லாம் வரும். இப்படி காட்பாடியா போன பாடி கொண்டவன் பலவீனனாதான் இருப்பான். கோபத்துக்கு காரணம் இயலாமை. பலவீனனுக்கு இயலாமை அதிகம். கோபமும் அதிகம்.

இப்ப கில்மாவுலயே பாருங்க. எத்தினியோ சந்தர்ப்பத்துல விட்டுக்கொடுக்கவேண்டி வரும். " விளக்கை அணை" "அம்மா தூங்கட்டும் - ஆட்டுக்குட்டி தூங்கட்டும்" செவ் தோஷமுள்ளவன் சீக்கிரத்துல கோபப்படுவான். கோபப்பட்டவனுக்கு காரியம் நடக்காது.

செவ்வாய் காரகத்தின் கீழ் வரும் அம்சங்களையும் அதனால கில்மாவுக்கு வரக்கூடிய ஆப்பையும் இப்ப பார்ப்போம்.
வயதில் இளையவர்கள்:
ஜாதகத்துல செவ் நல்ல இடத்துல உட்கார்ந்தா ஆண்டொன்று கூடுமே தவிர வயதொன்று கூடவே கூடாது. பார்ட்டி சொம்மா நச்சுனு இருப்பாப்டி. சப்போஸ் பார்ட்டி ஜாதகத்துல செவ் சரியில்லைனு வைங்க. சின்னப்பசங்களை எல்லாம் தனக்கு போட்டியா நினைக்கிற சைக்காலஜி வந்துரும். டிஷ் பையன், பால் பாக்கெட் போடற பையன் மேல கூட சந்தேகம் வரும்.( காரணம் உற்சாகத்தை தர்ரது செவ். உற்சாகம் குறைஞ்சிக்கிடக்கறச்ச துடியா இருக்கிற பசங்களை பார்த்தா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வருமா வராதா?)
போலீஸ், மிலிட்டரி, ரயில்வே:
செவ் நல்ல இடத்துல இருந்தா இந்த மாதிரி டிப்பார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும். ( செவ் சரியில்லாத ஜாதகத்துல பிறந்து லஞ்சம் கொடுத்து இந்த வேலையெல்லாம் வாங்கினா செவ்வாயின் இதர காரகங்களான ஆயுதங்கள், வெடி பொருட்கள், அறுவை சிகிச்சை, விபத்து, தீ விபத்து இத்யாதிக்கு பலியாகவேண்டி வரும்ங்கோ. மேற்படி உத்யோகங்கள்ள இருந்தா கண்ணாலம் கன்னா (சீக்கிரமா) ஆகும். அப்பாறம் என்ன கில்மாதான்.
எரிபொருள், மின்சாரம்:
வீட்ல கியாஸ் ஆயிருச்சு. கெரசின் இல்லை. எலக்ட்ரிக் ஓவன்ல ஆக்கி முடிச்சுரலாம்னு பார்த்தா வீராசாமி புண்ணியத்துல கரண்டு வாரா சாமி ஆயிருச்சு. சமையல் எப்படி முடியும். பெட் ரூமுக்கு எப்படி போகமுடியும். செவ் நல்லா இருந்தாதான் எல்லாமே கணக்கா முடியுங்கோ. எரிபொருள் தொடர்பான துறையில வேலை,தொழில் அமைஞ்சாலும் சுராங்கனிக்கா சேக்குதேன். தினம் தினம் அல்வா மல்லிப்பூதேன்..
தர்க்கம், வியூகம்:
அட என்ன பாஸ் எதுலதான் தர்க்கம் பார்க்கிறதுனு விவஸ்தையே இல்லையானு கேப்பிக சொல்றேன். ஆன்மீகத்துல மட்டும் தேன் தர்கம் நாலு காலை தூக்கிரும். உ.ம்: இழப்பவன் பெறுவான். காப்பவன் இழப்பான்.
கில்மாங்கறது உலகியல் வாழ்க்கையில ஒரு அங்கமே. அதனால ஜஸ்ட் ஒரே ஒரு தர்கத்தை கேட்ச் பண்ணினா ஊடல் கீடலையெல்லாம் ஊதித்தள்ளிட்டு காம் நகர்ல அப்பார்ட்மென்டே கட்டிரலாமுங்கோ.
அடுத்தது வியூகம். இதென்ன யுத்தமா வியூகம் வகுக்கனு கேப்பிக சொல்றேன். அச்சம், நாணம்,மடம்,பயிர்ப்பு அது இதுனு சொல்றாய்ங்கல்ல இதெல்லாம் என்னவாம் ஒவ்வொன்னும் ஒரு கோட்டை .இந்த கோட்டைகளுக்கெல்லாம் வேட்டு வைக்கலைன்னா நோ கில்மா. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு வியூகம் வகுத்து டமார் பண்ணாதான் கில்மா.
அறுவை சிகிச்சை:
செவ் சரியில்லைன்னா அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படுது. போதாதகுறைக்கு அவருக்கு சனியோட பார்வை தொடர்பு ஏற்பட்டுதுனு வைங்க அது எவ்ள தூரத்துக்கு போவும்னு சொல்லமுடியாது. அட ஒரு சிசேரியனை எடுத்துக்கங்க. லேடி டாக்டர் " ஒரு ஆறு மாசத்துக்கு பொஞ்சாதிய தங்கச்சி மாதிரி பார்த்துக்கங்க"னு சொல்ட்டா கில்மாவாவது வேறொன்னாவது. இன்னம் ஓவரிய தூக்கறது, யூட் ரஸை தூக்கிர்ரதுனு கதைபோச்சுன்னா ஹார்மோன் சுரப்புலயே பிரச்சினை வந்து சம்சாரத்துக்கு மீசை தாடியெல்லாம் வர ஆரம்பிச்சுரும்.
சமையல்:
யுத்த காரகனான செவ்வாயை சமையலுக்கும் காரகம்னு சொல்லியிருக்காய்ங்க.ரெண்டுக்கு என்ன சம்மந்தம்? யுத்தம்னா மொதல்ல எதிரி நாட்டை வேவு பார்க்கனும், எதிராளியோட படைபலம் ,வியூகம் தெரியனும். அதுக்கேத்தமாதிரி நம்ம படைய பலப்படுத்தனும். சமையல்னா நாம யாருக்கு சமைக்கப்போறோம், அவிக காஞ்சு கிடக்காய்ங்களா?, ஓஞ்சு கிடக்காய்ங்களா? பசியேப்பமா? புளியேப்பமா தெரிஞ்சிக்கிடனும். அப்பாறம் கிச்சன்ல என்ன இருக்கு என்ன இல்லைனு (முக்கியமா கியாஸ்/கரண்ட்) பார்த்துக்கனும்.
யுத்தம்னா மொதல்ல ஏர் பாம்பிங்கா, காலாட்படையா, கடல் வழி தாக்குதலா முடிவு பண்ணனும். சமையல்னா மொதல்ல கொறிக்க ஏதாச்சும் கொடுத்துரலாமா? இல்லை அவசர அடியா பிரியாணி பண்ணி அதுக்கு தயிர் சட்னி கொடுத்துட்டு அதுக்குள்ளாற கோழிகுருமாவ ஒப்பேத்தமுடியுமானுல்லாம் ஸ்கெட்ச் பண்ணனும்.
இப்படி யுத்தத்துக்கும் சமையலுக்கும் நிறைய சம்பந்தமிருக்குங்கோ. சமைக்கிற கணவன் மாரை வச்சு நிறைய ஜோக்கெல்லாம் எழுதறாய்ங்க. ஆனால் சமைக்க தெரிஞ்ச கணவனா இருக்கிறதுல நிறைய லாபம் இருக்கு பாஸ்.
பொஞ்சாதி ஏகத்துக்கு பில்டப் கொடுக்கமுடியாது ( ஸ்டவ்வு கிட்டே நின்னு பாருங்க தெரியும்) - நெஜமாலுமே பொஞ்சாதிக்கு முடியாத சமயம் கோதாவுல இறங்கி கேட்டு கேட்டு செஞ்சா அவிகளுக்கும் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன் ஆகும். மனசுல நன்றி உணர்ச்சி பொங்கும். அது கில்மாவுல கூட முடியலாம்.
ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள்:
செவ் சரியில்லைன்னா இதெல்லாம் வந்து கழுத்தறுக்க ஆரம்பிக்கும். லோ பிபி,ஹை பிபி உள்ளவுக,அல்சர் ,பெப்டிக் அல்சர் உள்ளவுக கில்மாவுக்கும் இந்த வியாதிகளுக்கும் என்ன தொடர்புனு சொல்லலாம்.
மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்:
இதுல வெறி கொண்டு ,வெற்றியே குறியா உள்ளவுகளுக்கு மைண்ட் கில்மா பக்கம் போகவே போகாது. உடம்பு கெட்டுரும்ங்கறதெல்லாம் சொம்மா சாக்கு. மனுஷன் பேசிக்கலா பண்றது ரெண்டுதேன். கொல்றது,கொல்லப்படுவது.இது செக்ஸுல சாத்தியம். ஆனால் இது ரெண்டுமே மேற்படி மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்ல சைக்கலாஜிக்கலா -சுத்தி வளைச்சு நடந்துருது -அதனாலதான் மேற்படி ஃபீல்டுல உள்ள பார்ட்டிங்க கில்மா பக்கம் திரும்பறதில்லை. ஆனால் தமாசு என்னடான்னா அதுகள்ள சாதனை பண்ணி முடிஞ்ச பிற்பாடு பலான மேட்டர்ல ஆர்வம் பீறிட்டு கிளம்பும். சில பிக்காலிங்க (முக்கியமா கோச்சுங்க) "ஏடாகூடமா"பிஹேவ் பண்றாய்ங்கனு கேள்வி. இதுக்கு காரணம் அவன் வெறி கொண்டு ,வெற்றியே குறியா செயல்படலைங்கறதுதேன்.
பால்:
மேட்டருக்கு மின்னாடி ஒரு தம்ளர் பால் (முடிஞ்சா ஒரு சில மசாலாக்கள் சேர்த்து) அடிச்சா தெம்பா இருக்கும்.
கொம்புள்ள பிராணிகள்:
மஞ்சு விரட்டு தெரியும்ல. மஞ்சு விரட்டுல குடல் சரியாம தப்பிச்சா குட்டிக மேலாடை சரிக்கும்னு சரித்திரம் சொல்லுதுல்ல .
மாமிசம்:
இது காம உணர்வை தூண்டும்.

ஆக ஒடனே உங்க குடும்ப ஜோதிடரை சந்திச்சு சாதகத்துல செவ் சாதகமா இல்லியானு ஒடனே தெரிஞ்சிக்கிடுங்க. சாதகமா இல்லாட்டி கீழ்காணும் பரிகாரங்களை ஆரம்பிச்சுருங்க.


1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.