Sunday, July 31, 2011
தொலை தொடர்பு : ஆண் பெண் வித்யாசம்
சாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் - நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் - ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.
ஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.
இந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.
அதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.
இந்த விசயங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.இந்த இடத்துல அனாவசியமா செக்ஸை நுழைக்கிறான்னு குறை சொல்லாம இருக்கிறதா இருந்தா அசலான மேட்டரை சொல்லலாம். ஆனால் அனுபவஜோதிடம் இப்பம் அய்யர் ஓட்டல் மாதிரி ஆயிருச்சு ( ஜா.ரா எப்படியாவது நான் வெஜ்ஜா மாத்திர்ரது தவிக்கிறாரு அது வேற விஷயம்) அதனால ஒரு பழைய பதிவோட சுட்டியை மட்டும் தரேன் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.
பதிவோட சாரம் ஆண் பெண் இன உறுப்புகளே -அவற்றின் அமைப்பே அவிகளோட பேசிக்கல் கேரக்டரை காட்டிருதுங்கறதுதேன். பதிவின் சுட்டி இங்கே
பெண் தன்னுள் ஒரு வித வெற்றிடத்தை உணர்ந்து அதை நிரப்ப பார்க்கிறா. அந்த வெற்றிடத்தை நிரப்ப வல்லது அன்பு..அன்பு..அன்பு . அன்பு மட்டும்தேன். அதை நிரப்பிருமோங்கற நப்பாசையில அன்பு கிடைக்காத பெண் நகை ,நட்டு,போல்ட்டு,கலர் டிவி,டிவிடி ப்ளேயர்,ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷினுன்னு வாங்கி குவிக்க நினைக்கிறா.
ஆண் நிலை வேற அவன் எதையாவது நிரப்ப துடிக்கிறான். அது தான் ஈட்டும் செல்வத்தால சாத்தியமோங்கற நப்பாசையில சம்பாதிக்கிறான். திரைக்கடலோடி திரவியம் தேடனும்னு தவிக்கிறான். அவனுக்கு தெரியாத மேட்டர் என்னடான்னா அவன் நிரப்ப துடிக்கிறது அன்பால. அது அவனுக்குள்ள பொங்கி புரளுது.
இப்படி பார்த்தா பெண் அன்புக்கு ஏங்கறா. ஆண் கொட்டிக்கவிழ்க்க துடிக்கிறான். ஆனால் சமூக சதிகளின் காரணமா பெண் ஆணை சந்தேகிக்க ,ஆண் பெண்ணை சந்தேகிக்க ரெண்டு பேரும் அன்புக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேட ஆரம்பிச்சுர்ராய்ங்க.
பெண் ஸ்தூலமான பொருட்களை ஆல்ட்டர்னேட்டிவா உபயோகிக்க ஆண் தன் விந்தை ஆல்ட்டர்னேட்டிவா உபயோக்கிறான். எவ்ள பெரிய உத்தமனா இருந்தாலும் அவன் தொலை தொடர்பு -தூர தேச பயணம்னு போகும்போது அவனோட அடி மனசுல எங்கயோ இந்த ஆசை ஒளிஞ்சிருக்கும். புதுசா எதுனா கிடைச்சா கொட்டிக்கவிழ்த்துரலாம்.
இவளா இவளுக்குள்ளே வெற்றிடத்தோட இருக்காள்.அதை நிரப்ப வல்லது ஜஸ்ட் அன்புதான். இடை அவள் உணர்ந்தே இருக்கா. அதுக்காக ஏங்கவும் செய்றா.
ஆனால் ஆண்களோட நிலைமை என்னடான்னா தன்னில் பொங்கி பிரவிகிக்கிறது அன்புதான். தன் மனசு கொட்ட நினைக்கிறது அன்பைத்தாங்கற உணர்வு இல்லே. ஒரு சில ஆசீர்வதிக்கப்பட ஜென்மங்களுக்கு அப்படி ஒரு உணர்வு இருந்தாலும் சக ஆண்களே "தூத்தேறி ..அன்பு இன்னாடா அன்பு. கோழி கிடைச்சா அடிச்சு குருமா வச்சு சாப்டமா கைய கழுவினோமான்னு இல்லாம அன்பாமில்லை அன்பு"ன்னு மொக்கை பண்ணிர்ராய்ங்க. இவனோட ஆண்மையையே சந்தேகப்பட ஆரம்பிச்சுர்ராய்ங்க.
இதனால இவனோட அன்பு பின்னடைந்து உடலுறவு இச்சையா வெளிப்படுது. ஆணுக்குள்ளான காமம் பால் மாதிரி பொங்கி வழிஞ்சுரும். ஆணா பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி கொதிச்சிட்டே இருக்கும் .அவளோட காமத்தை ஃபேஸ் பண்ற சக்தி எந்த பிக்காலிக்கும் இல்லேன்னு அவளுடைய உள்ளுணர்வுக்கு தெரிஞ்சிருந்தாலும் அன்புக்காக செக்ஸை சகிச்சுக்கவும் தயாராயிர்ரா.
என்ன ஒரு சோகம்னா அன்புக்காக செக்ஸை சகிச்சுக்க சித்தமாயிட்ட பெண்ணை ஆணே "லோலு"ன்னிர்ரான். சமூகம் வேற மாதிரி அட்ரஸ் பண்ண ஆரம்பிச்சுருது. ஆண் தன் உந்துதல் அன்பை கொட்டங்கறதை மறந்து விந்தை கொட்ட தயாராயிர்ரான்.
பெண்ணோ தனக்கு தேவை அன்புங்கறதை உணர்ந்து அதை பெற செக்ஸை சகிச்சுக்கவும் ஒரு கட்டத்துல ப்ரிப்பேர் ஆயிர்ரா. ஆணோ அதை காமம்னு மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறான். வெறுமனே காமத்தை கொடுத்து காமத்தை பெற முனையறான். இதனால பெண் தன் உள்ளுணர்வை புறக்கணிச்சு தன்னுள்ளான வெற்றிடத்தை - அன்பால் மட்டுமே நிரம்ப கூடிய வெற்றிடத்தை ஸ்தூல வஸ்துக்களால் நிரப்ப கட்டாயப்படுத்தப்படறாள்.
காமம் எங்கவேணா கிடைக்கும். கிடைச்சது தரமற்றதா இருந்தாலும் உடல்தான் பாதிக்கப்படுமே தவிர மனசு ? ஊஹூம்.
ஆனால் அன்பை பொருத்தவரை அது அரிதிலும் அரிது. அதை முன் பெண் தெரியாத தேசத்துல - முன் பின் தெரியாத ஆட்கள் கிட்டே எதிர்ப்பார்க்க முடியாது. இவளா வீக்கர் செக்ஸ்.எதுனா ஏத்தக்குறைச்சலாயிட்டா எதிர்காலமே ஃபணால். முக்கியமா இவள் மனசு அன்பின் மேலயே நம்பிக்கை இழந்துரும். இனி எந்த காலத்துலயும் இவள் அன்புக்காக ஏங்க கூட முடியாது.
அதனாலதான் பெண்கள்ள இந்த தொலை தொடர்பு, தூரதேசபயணம், சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது இத்யாதியில ஆர்வம் இருக்கிறதில்லை. அவள் இருக்கறதை விட்டு பறக்க விடறது தன் கற்பனை பறவையை மட்டும்தேன். சைக்கலாஜிக்கலா
ஸ்ட்ராங்காச்சே. ஆனால் பிராக்டிக்கல் லைஃபுன்னு வரும்போது ஒரு குறுகிய வட்டத்தைதான் தன் பாதுகாப்பு வளையமா நினைக்கிறா.
அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்ங்கறாப்ல நல்ல ஆன்டிவைரஸ் நிறுவப்பட்ட கம்ப்யூட்டர் எப்படி ஒவ்வொரு சின்னை ஃபைலையும் ஸ்கான் பண்ண பிறகே அனுமதிக்குதோ அப்படி அனுமதிக்கத்தான் பெண் மனம் விரும்புது.
இது மேக்ரோ லெவல்ல சாத்தியமில்லை. ஒரு சிறு அளவுல பெண்கள் மேற்சொன்ன ஜூரிஸ்டிக்சன்ல வந்திருக்கலாம். ஆனால் அவிக மைண்ட் மட்டும் ஒரு குறுகியவட்டத்துல மட்டும் - தங்களுக்கு அன்பை தரக்கூடியவுக ஆருன்னு ஸ்கான் பண்ணிக்கிட்டே இருக்கும்.
ஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல எந்த பாவமும் எந்த ஜாதகத்துலயும் 100% ஃப்ரூட் ஃபுல் கிடையாது. 100% ஹார்ம் ஃபுல்லும் கிடையாது. இந்த விதிப்படி பெண்ணின் ஜாதகத்தில் அப்பா,அப்பா வழி உறவு -சொத்து -சேமிப்பு - கணவன் -கணவன் வழி உறவு - சொத்து எல்லாம் ஃபணாலாகியிருந்தா அப்பம் அந்த பாவத்தின் கடைசி காரகங்களான தொலை தொடர்பு -தூர தேச பயணம் இத்யாதியில ஆர்வம் -அனுகூலம் ஏற்படுது.
ஆணை பொருத்தவரை அவன் கொட்டனும் (அன்பை சொன்னேங்க) கொட்ட நினைக்கிறவன் பறந்து பறந்து திரிஞ்சுதேன் ஆகனும். ஆனா பெண்ணை பொருத்தவரை அவள் தன்னை நிரப்பிக்க நினைக்கிறவள் .(அன்பைத்தாங்க சொல்றேன்) அதனால அவள் பறக்காம பொறுமையா காத்திருக்கத்தான் செய்யனும்.
ஆணோட ஈகோ வல்லியது (ஸ்ட்ராங்குனு சொல்லவரேன்).. இதை வளர்க்கிறதும் பேரன்ட்ஸ் & சொசைட்டிதேன். ஒனக்கென்னடா ஆம்பள சிங்கம். அதனால அவனுக்குள்ள ஒரு தொலை நோக்கு வந்ததும் சொத்து சுகம்னு செட்டில் ஆற துடிப்பு வந்ததும் தானறிந்த வட்டங்கள் விட்டு விலகி ,தன்னையறியா வட்டங்களில் புழங்க துடிக்கிறான். ஏன்னா ஈகோவை கழட்டி வச்சாத்தானே சில்லறை தேறும்.
ஆனா பெண்ணோட ஈகோ ரெம்ப மெல்லியது. ஆக்சிடென்டலா இதுக்கும் காரணம் பேரன்ட்ஸ் அண்ட் சொசைட்டிதான்.பொம்பளை சிரிச்சா போச்சு எட்செட்ரா.இதனால அவள் தானறிந்த வட்டங்களிலேயே -தன்னை அறிந்த வட்டங்களிலேயே புழங்க முடிகிறது.
குறிப்பு: தொலை தொடர்பு துறையில நிறைய பெண்கள் வேலை செய்றாய்ங்களேன்னு கட்டைய போட பார்க்காதிங்க. அவிக அந்த துறையில யாருக்காகவோ பல்லாயிரம் பேரை தொடர்பு கொள்ளலாம். ஆனால் தங்களுக்கே தங்களுக்குன்னு தொடர்பு கொள்றவுக நெம்பர் சிங்கிள் டிஜிட்டா இருக்கவே அதிகம் வாய்ப்பு.
ஒன்பதாம் பாவத்தை பொருத்தவரை வித்யாசம் முடிந்தது. அடுத்த பதிவுல 10 ஆம் பாவத்தை பார்ப்போம்.
Friday, July 29, 2011
ஆடி அ(ம்)மாவாசை ஸ்பெசல்
அண்ணே !
வணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.
வழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.
சில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.
ஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.
ஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா? தொட்டதை எழுதினேனா? படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.
இகம் விட்டு பரம்
நாடிய போதே பரவசம்
புறம் நோக்கி ஓடும் எண்ணங்கள்
அகம் நோக்கி திருப்பியபோதே
பரம் உனை விரும்பும்
பரம் பொருள் உன்னில் அரும்பும்
இலவசமாய் பெற்றதை
இலவசமாய் வழங்கவே ஆசை
அதுவாய் மதுவாய் பொழிய
கையேந்தி நிற்கிறேன்
புதிதாய் கற்கிறேன்
அவற்றை இலவசமாய் வழங்கவே
ஆசை..
ஆனால் பெறுவோர் அகந்தை
அடியுண்ட நாகமாய்
சீறுமோ என்றே சிறு பொருள்
ஏற்பது வழக்கமாச்சு
அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து
அமுதம்
வழியுது பொழியுது என்னை நனைக்குது
மனம் அவளை நினைக்குது
முழு நிலவுக்கும்
முழுதாய் தேய்ந்த நிலவுக்கும் உண்டு மரியாதை
உயர்ந்தோர் ஒரு படி தாழினும்
இழிந்தோர் ஒரு படி உயரினும்
அம்மவோ.. பெரும் தொல்லை
அதனால் தானோ என்னவோ
முழுமைக்கும் -புது நிலவுக்கும் மறு நாளை
மரு நாள் என்றனர் பெரியோர்.
அண்டை வெளியில் அவள் ...
அன்ன நடை போட
கால் தண்டை ஒலி கேட்கிறது
திருவடி பதிவதையா பேரிடி என்கின்றார்?
பிடிக்கேங்கும் களிறும்
ஆங்கே அரண்டு அலை பாயும் நேரத்திலும்
அன்னை மடி கண்டால்
பின்னை அது அல்லாடுமோ?
முதல் உயிர் முகிழ்த்தது
அந்த அலைகடலில் என்கின்றார்.
மின்னல் வெட்டுகையில்
புதிதாய் உயிர் புஷ்பித்ததென்றே
புகல்கின்றார்
அன்னை புன் சிரிக்க அவள்
எயிற்றோளி கடல் மிசை
சிந்திடவும்
முதல் உயிர் வந்ததென்பேன்
எங்கே? யாருக்கு வலி?
ஆதிசிவனுடன் ஆடிப்பார்த்த பாதம்
அரக்கர் தமை தரை மிசை அரக்கி தேய்த்தபாதம்
நினைந்தார் வாழ்வில் எல்லாம் ..எல்லாம் நிறைக்கும் பாதம்
ஆடி சிவந்த பாதம்
என் சிரசில் பதிவதாயின்
அரக்கனாகிடவும் அம்மையே நான் சித்தம்
இம்மையே மறுமையென நீ ஆக்கிட்ட பாங்கினாலே
உன்மத்தமானதடி
உன் பேரில் நான் கொண்ட பித்தம்
அண்டை வெளியினிலே
முழு நிலா நாளினிலே
நிலவில் நான் காண்பேன் அம்மை அவள் மஞ்சள் முகம்
புது நிலா வரும் முன்னே இருள் சூழ்ந்த வான்மிசை
வீணே முகம் தேடி மானே போல் நான் மருள
வானே முகமாகி கரிய முகத்தினிலே கருவிழி கலந்திருக்க
காட்சி தந்தாள் காளியாக
மரணமே போல் ஒரு தரிசன்ம்
என்ன ஒரு கரிசனம்.
கண்டவளிலும் அவளை கண்டவன்
கண்டதை விண்டவன்
விண்டதெல்லாம் அண்டை வெளி இட்ட பிச்சை
ஏழு வண்ணங்களும் ஏந்திழை வண்ணமாச்சு
அவளே யாவும் என்ற என் எண்ணம் திண்ணமாச்சு
உருவம் எதுவாயின் என்ன?
பருவம் எதுவாயின் என்ன?
அவளை தரிசிக்க அகிலத்து பெண்டிர் ஒரு கண்ணாடி
கதிரும் நிலவும் கூட
அது முழு நாள்
அறிவும் -உணர்வு கூட
அது ஆன்மா விழித்து எழு(ம்) நாள்
சொல்,வில், will யாவும் அடுக்கித்தந்தவளே
நில் உன் கரம் காட்டு
நான் தடுக்கி விழுந்த போதெல்லாம் இடையில் இடுக்கி
இதயம் முடுக்கிய கை உனதுதானா பார்க்க வேண்டும்
தாள் பிடித்தோரையெல்லாம் தள்ளி வைத்து
உனக்கெதிராய் வாள் பிடித்த என்னை
அள்ளி அணைத்தாயே அந்த கையை -உன் சொந்தக்கையை காட்டு
அதில் என்னை அரவணைத்த அத்தனை கைகளும் தெரியும்
அவற்றின் மவுன மொழி எனக்கு புரியும்
மனமருள் கொண்டு வாக்கில் தெளிவிழந்த மாந்தரிடை
அருள் வாக்காய் -ஆற்றொழுக்காய்
அமுதம் சொரிவித்தாய்
என் விலாசத்தை விசுவத்துக்கே தெரிவித்தாய்
கட்டணம் பெற்றுக்கொள்ளாத சைக்கியாட் ரிஸ்ட் நீ
என் மனம் தெளிவித்தாய் அல்லவா?
மனதை ப்ளீச் செய்தே வாக்கில்
தெளிவூட்டிய ஸ்பீச் தெரஃபிஸ்ட் நீ அல்லவா
ஊதியம் எதிர்பாராத என் PRO நீ.
என் விலாசத்தை விசுவத்திற்கு அறிவித்தாய் அல்லவா?
Thursday, July 28, 2011
சேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்
அண்ணே வணக்கம்ணே ! ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்)
அதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.
கடேசியா நாம டச் பண்ணது ஒன்பதாம் பாவம். இது அப்பா, ஆன்மீகம்ங்கற மேட்டர்களை காட்டறதால இந்த விஷயத்துல ஆண் பெண்களுக்குள்ள வித்யாசத்தை பார்த்தோம்.
9 ஆம் பாவம் அடுத்தபடியா சேமிப்பு முதலீடை கூட காட்டுதுங்கோ. இதுல ஆண் பெண் வித்யாசத்தை கண்டுக்கிடனும்னா ஆண் பெண்களுக்கிடையிலான சில அடிப்படை வித்யாசங்களை புரிஞ்சிக்கிடனும்.
ஆண் :
உடல் ரீதியா பலசாலி /மன ரீதியா பலகீனன்/ பொறுமை கம்மி/கச்சா முச்சானு ரிஸ்க் எடுப்பான்/பரபரனு இருப்பான்/மாற்றத்தை விரும்புவான்/ பரபரனு தன்னை எக்ஸ்பாண்ட் பண்ணிக்க துடிப்பான்/ இவனோட சாகும் இச்சைல்லாம் செக்ஸிலான ஆர்காசத்துல நிறைவேறிர்ரதால சாகடிக்கனும்டானு துடிப்பான்./தன் பலம் குறித்த அதீத நம்பிக்கையால தூரதேசங்கள்/ஏன் சந்திரன்ல கூட ஒரு ப்ராஞ்ச் வைக்கலாமான்னு பார்ப்பான்.
பெண்: உடல் ரீதியா வீக்கு/மன ரீதியா ரெம்ப ஸ்ட்ராங்கு/பொறுமை சாஸ்தி/ரிஸ்கே எடுக்க மாட்டாள்/தேமேனு இருப்பா/மாற்றத்தை விரும்ப மாட்டாள்/ பொறுமையா ஒவ்வொரு எல்லையா தன்னை பலப்படுத்திக்கிட்டு அப்பாறம்தேன் எக்ஸ்பேன்ஷன் எல்லாம்/ இவளோட கொல்லும் வெறியெல்லாம் செக்ஸ்ல நிறைவேறிட்டு (ஆணுக்கு ஆர்காசம் கிடைச்சு அவன் பிணமா சாயற நேரம் இவளுக்கு இது நடக்கும்) சாகும் இச்சை நிறைவேறாம தவிப்பா./சாகத்துடிப்பா
நம்ம தியரியெல்லாம் வரும் காலத்துல நமக்கு பைத்திய பட்டத்தையோ அ டாக்டர் பட்டத்தையோ வாங்கித்தரப்போறது நிச்சயம்னு நமக்கு தெரியும். ஒரு காலத்துல நான் என்ன எழுதினாலும் அதை அசால்ட்டா போட்டு வைப்பேன். எவன்/எவள் காப்பி பண்றேனு கேட்டாலும் அப்படியே தூக்கி கொடுத்துருவன்.
ஆனால் இப்ப கண்ட கண்ட ( ஜாரா.. எதுனா சாக்கடையான ஒரு திட்டு இருந்தா உபயம் பண்ணுங்களேன் ப்ளீஸ்) ..............................எல்லாம் நம்ம எழுத்துக்களை எடுத்து நோகாம நோன்பு கும்பிட்டுருதுங்க.அதனாலதேன் நமக்குனு ஒரு ஸ்டைல வச்சு - கச்சா முச்சான்னு விட்டு விட்டு உபகதைகள் எல்லாம் சேர்த்து எழுதிக்கிட்டு வரேன்.
ஒருத்தன் சைக்கிளை படுக்க வச்சு ..........அட காத்தடிச்சிட்டிருந்ததை சொன்னேங்க. ஏம்பா இப்படின்னு கேட்டேன்.
இதுக்கு மிந்தி மாட்டுக்கு லாடம் அடிச்சிட்டிருந்தேன்னான் அவன். பழக்க தோஷம்னா இதான். காப்பி பேஸ்ட் பிக்காலிங்க உள்ளாற என்ன இருக்கு ஏது இருக்குன்னு இல்லாம ஒரிஜினல் ஐயரோட எழுத்துக்களை காப்பி பேஸ்ட் பண்ண ஜா.ரா மாதிரி பண்ணீருவாய்ங்க.அப்ப படக்குன்னு பிடிச்சுரலாமில்லை.
சரி எதுக்கு இந்த பேச்சு வந்தது ? ஆங் ஆண் பெண் வித்யாசங்களை ரெம்ப அந்தரங்கமா கூட சொல்ற கப்பாசிட்டி நமக்கு இருக்குதுங்கோ. அதையெல்லாம் ப்ளாக்ல போட்டு கா.பே சனம் கா.பே செய்து தொலைச்சுட்டா தூக்குல போட்டுருவாய்ங்க.
நாம அடல்ட் ஜோக்கும் சொல்வோம்/ கில்மா மேட்டரும் சொல்வோம் ஆனால் நமக்கு அது உள்ள பில்டப்புக்கு அஜீஸ் ஆயிரும். மத்தபடி ஃபார்முலா இல்லாம /தகுதி இல்லாம போட்டா டின் கட்டிருவாய்ங்க சனம்.
என்ன ? மொக்கை போதுமா? அப்படியே.. மேட்டருக்கு வந்துர்ரன், ஆண் பெண் வித்யாசத்தை பார்த்திங்க. இப்பம் முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் உள்ள வித்யாசத்தை பார்ப்போம்.
மனித குலத்தோட பேசிக்கல் இச்சைகள் ரெண்டு (அதுக்கு காரணம் ரெம்ப ஸ்பிரிச்சுவலானது .அதை பலதாட்டி சொல்லியிருக்கேன்.ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.)
1.கொல்லுதல்
2.கொல்லப்படுதல்
பச்சையா சொன்னா அதுவும் நம்ம எம்.ஆர் .ராதா ஸ்டைல்ல சொன்னா ஒன்னு சாகோனம் அ சாகடிக்கோனும்.
இப்பம் முதலீடு சேமிப்பு பின்னாடி உள்ள இச்சைய பாருங்க. முதலீடுங்கறது ரெம்ப ரிஸ்கானது. ஆனா லாபத்தை தந்துட்டா நம்மை சுத்தி இருக்கிறவன்லாம் செத்துப்போயிருவான்.
கி.பி.2000 வருசம், ஜூலை மாசத்துல இருந்து 2009 மே மாசம் வரை பிரவுசிங்குக்காக தினசரி ஆவரேஜா ரூ.50 செலவழிச்சுட்டே வந்தேன்.
ஆனால் இப்பம் சனம் சாகுது. நம்ம பாப்புலாரிட்டி + சில்லறை புரள்றதை பார்த்து.அதுல முதலிடம் நம்ம ஜா.ராவுது.
ஆக சோற்றுக்கில்லாத நாள்ளயும் இன்வெஸ்ட் பண்ண வச்சது கொல்லும் இச்சைதேன். ஏன் சனத்தை சாகடிக்கோனம்.
ஒரு வேளை நம்ம ப்ளாக் போனியே ஆகாம போயிருந்தா? ஆப்புதேன்.
இன்னொரு உதாரணம்:
நம்ம சன்னி பைக் ட்ராகுலா கணக்கா பெட்ரோல் குடிக்கவே கார்ப்பரேட்டரை மாத்திரலாம் கொய்யால ஒரு 30 கிமீ ஆவது வரட்டும்னு நினைச்சேன். இதுவும் முதலீடுதேன். நம்ம வண்டி லட்சணத்தை பார்த்து
" ங்கோத்தா கண்ட நாய்க்கெல்லாம் அள்ளி வீசத்தெரியுது .. மொதல்ல வண்டியை மாத்து சாமி"னு இலவச ஆலோசனை தந்தவுகளை சாகடிக்கோனமே.
ஆனால் என்னாச்சு ஜாரா மாதிரி ஒரு பிக்காலி மெக்கானிக் கந்து வட்டிக்காரன் கணக்கா 70 கொண்டா -125 கொண்டா -250 கொண்டானு சுரண்டிட்டான் . இதுல அப்பப்ப பத்து இருவது தனி.
ஆனால் அவிக அம்மாவ திட்ட மனசு வரலை. ஆனால் திட்டிரலாமானு ரோசிக்க வச்சுட்டான். டுபாக்கூர் பாக்கிங் வச்சு அரைலிட்டர் பெட்ரோல் காலி. ( ஒழுகியே போச்சு) சன்னி நன்னியில்லாம நின்னுப்
போயி தள்ள வச்சிருச்சு நாக்கையும்.
ஆக முதலீடுங்கறது கொல்லும் இச்சையால் செய்யறது.
சேமிப்புனு பார்த்திங்கனா அதுல ரிஸ்கே கடியாது. உப்பு டப்பாவுல கூட சேமிக்கலாம். ( ஓடிப்போன ஃபைனான்ஸ் கம்பெனியில பணம் போட்டதெல்லாம் சேமிப்பு லிஸ்டுல வராதுங்ணா -அதெல்லாம் முதலீடுதேன்)
சேமிக்கனும்னா கன்சம்ப்ஷனை குறைக்கனும். இது தன்னை தானே கொன்னுக்கறதுதேன். பெண்ணுக்கு ஆர்காசம் என்பது ஏறக்குறைய இம்பாசிபிளா இருக்கிறதால பெண்கள் சேமிப்புக்கே ஓட்டுப்போடறாய்ங்க. (கொல்லும் இச்சை நிறைவேற) . ஆண்களுக்கு தவறாது ஆர்காசம் கிடைச்சு சாகும் இச்சை நிறைவேறிர்ரதால அவிக முதலீட்டுக்கே ஓட்டுப்போடறாய்ங்க.
தங்க விலை ஏறிட்டே போகக்காரணம் பெண்கள் சம்பாதிக்க ஆரம்பிச்சதுதாங்கறது என்னோட கெஸ்ஸிங். ஆக 9 ஆமிடம் ஆண் ஜாதகத்துல முதலீட்டையும் -பெண் ஜாதகத்துல சேமிப்பையும் காட்டுது.
எப்பவுமே விஷயத்தை மேலோட்டமா பார்க்கக்கூடாது. அப்பம் அசலான விஷயங்கள் நமக்கு ஸ்பார்க் ஆகாது
நம்ம ஜாரா கழுத்துல ருத்திராட்சை கொட்டை - நெத்தியில விபூதி பட்டைன்னு இருக்கிறதை பார்த்து நம்மாளுங்களே மொத எழுத்து ஜா.கடைசி எழுத்து ன் என்று நீங்க சொல்லியிருக்கக்கூடாதுன்னு சொன்னாய்ங்க.
கம்ப்யூட்டரையே எடுத்துக்கங்க. மேலோட்டமா குயிக் ஸ்கான் போட்டா மசாலா வெளிய வராது . சில சமயம் ஃபுல் டைம் ஸ்கான்ல கூட நான் பத்தினின்னு சொல்லும். ஆனால் பூட் டைம் ஸ்கான் கொடுத்துப்பாருங்க.. மசாலாவா கொட்டும்.
அதனால விஷயங்களை ஸ்தூலமா பார்க்காம அதுக்கான பின்னணியை பாருங்க . மேட்டரு தண்ணியில நனைஞ்ச ஹீரோயினோட .............. - அட ப்ரா பட்டைய சொல்ல வந்தேங்க - அதுமாதிரி ஃபோக்கஸ் ஆகும்.
ஓகே. நாளைக்கு ஒன்பதாம் பாவ காரகங்கள்ள இன்னும் சில அம்சங்கள் -அந்த அம்சங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையிலான வித்யாசங்க்ளை பார்ப்போம்.
உடு ஜூட்
Wednesday, July 27, 2011
ரஜினியும் ஆனந்த விகடனும்
ரஜினிக்கு ஆனந்த விகடன் என்னவோ? ஆ.விக்கு ரஜினி என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் ரஜினி நமக்கு ஆசான்.
ஆமாங்னா ரஜினி என்னோட ஆசான். ( பாஸு /குரு /தலை இப்படி என்ன வார்த்தைய போட்டுக்கிட்டாலும் பரவால்லை). அவரு ரெட்டை ஹீரோ -மல்ட்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்டுகள்ள நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலருந்தே நமக்கு ரஜினி மேல ஒரு லவ் வந்துருச்சு. இதுக்கு என் அண்ணனும் காரணம். காரணம் அவன் ரஜினி ரசிகன். ரஜினி நமக்கு ஒரு ஆசான்ங்கற மாதிரி ஃபீலிங் வந்தது "தம்பிக்கு எந்த ஊரு" படத்துல.
அதுக்கு காரணம் இருக்கு. அந்த காலக்கட்டத்துல நாம படத்துல அறிமுக காட்சி ரஜினி மாதிரி இருந்தம். ரஜினி எப்படியெல்லாம் மோல்ட் ஆகிறாருங்கற பில்டப் ரெம்ப பிடிச்சிருந்தது. ( என் ஃபேவரிட் காட்சி ரஜினி செக்ஸ் புக் படிக்கிற காட்சிதேன்)
நாம வகுத்து வச்சிருக்கிற/கண்டுபிடிச்சு வச்சிருக்கிற தியரி பிரகாரம் உலக ஆண்களையெல்லாம் ரஜினி அ கமல் கேட்டகிரியில அடைச்சுரலாம். இதுல நாம கமல் கேட்டகிரி. ஆனால் ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ்ங்கற மாதிரியோ /ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாவோ நமக்கு ரஜினி மேலதேன் ஆர்வம் வந்தது.
(அதென்னமோ எம்ஜியார் ரசிகரா இருந்தவுகல்லாம் ரஜினி ரசிகர்களா மாறிட்டாய்ங்க -என் அண்ணன் உட்பட. சிவாஜி ரசிகர்கள்? கமல் ரசிகர்களா? )
கமல் படத்துல பண்ணிக்கிட்டிருந்த "உணர்ச்சிகள்" மேட்டரையெல்லாம் நாம பிராக்டிக்கலாவே பண்ணிக்கிட்டிருந்தம் . இன்னம் பெட்டரா. மனித மனம் தன்னில் இல்லாததை /தனக்கு கிட்டாததைத்தான் கனவு காணும். அப்படி நாம ரஜினிக்கூட்டத்துல சேர்ந்துட்டம்.
நம்ம வெள்ளை தோலு/ ஜாதி காரணமாவோ .ஜீன்ஸ் காரணமாவோ மாஸுன்னாலே ஒரு உதறல் உண்டு. ஆனா ரஜினி படங்கள் -அதுல அவர் ஏற்ற பாத்திரங்கள் எல்லாமே என்னை அடுத்த இருண்ட காலத்தை சந்திக்க சைக்காலஜிக்கலா ப்ரிப்பேர் பண்ணுச்சுனு சொல்லலாம்.
ரஜினிய இன்ஸ்பிரேஷனா வச்சுக்கிட்டு கஷ்ட காலத்துல அ ஒரு த்ரில்லுக்காக கல்யாண மண்டபத்துல பூவலங்காரம் பண்ணியிருக்கன் - அட்டெண்டரா ஒர்க் பண்ணியிருக்கேன் -பஸ் செக்கிங்கா பண்ணியிருக்கேன். ரஜினி மேலான அட்மைரேஷன் இல்லாம நம்ம ஃபேமிலி பேக் கிரவுண்டு /ஜாதகம் இத்யாதிப்படி மேற்படி அட்வென்சர் எல்லாம் செய்திருக்கவே முடியாது.
ரஜினியோட ஒவ்வொரு படம் .அவர் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும் விலாசம் சரியில்லாத தபால் கார்டுல போஸ்ட் மேன் மாதிரி கச்சா முச்சான்னு முத்திரை போட்டதென்னவோ வாஸ்தவம்.
ரஜினி பக்தர்கள் சொல்ற கண்டக்டர் டு சூப்பர்ஸ்டார் சித்தாந்தம் என்னை பெருசா கவரலை. என்னை கவர்ந்தது அவரோட வேகம் - அண்டர் ப்ளே - அவர் ஏற்ற பாத்திரங்களில் இருந்த ப்ராக்டிக்காலிட்டி. (இதெல்லாம் நம்ம கேரக்டர்ல கடியாது)
மிஸ்டர் பாரத் வரைக்கும் இந்த அட்மைரேஷன் கன்டின்யூ ஆயிட்டிருந்தது. அதுல ஏதோ ஒரு காட்சியில டீப்பாய்க்கு காங்கிரஸ் பார்டர்/ காமராஜர்/ராஜீவ் கணக்கா கெட்டப்பு இத்யாதி பார்த்து
தள்ளிக்கிட்டு போன குட்டிக்கு எய்ட்ஸுன்னு பலான நேரத்துல தெரிஞ்ச கணக்கா நொந்து பூட்டன்.
நம்ம காங்கிரஸ் எதிர்ப்புக்கும் நம்ம ஃபேமிலி பேக் கிரவுண்டுதேன் காரணம். நம்ம சித்தப்பா ஒருத்தர் கலைஞர் கருணா நிதியோட ஆளு. சின்ன அண்ணன் தேன் நமக்கு ஒரு வகையில ரோல் மாடல் மாதிரி. அந்த பாவியும் Anty congress தேன். எப்படி சகிக்கும்?
அப்பத்துலருந்து ரஜினிய கொஞ்சம் எட்டி நின்னே -சந்தேகத்தோடயே ரசிக்க ஆரம்பிச்சேன். நம்ம சந்தேகங்கள் உறுதியாகவே விலகிட்டம். இங்கன சம்பந்தா சம்பந்தமில்லாம ஒரு கதை.
ஒரு குரு ஒரு சிஷ்யன். எந்த ஊரு போனாலும் ஒரு ராவுக்கு மேல தங்க மாட்டாய்ங்க.ஒரு ஊருக்கு போனப்ப ஒரு செல்வந்தர் வீட்ல தங்கறாய்ங்க. மேற்படி செல்வந்தருக்கு ஒரு பெண். நின்னு விளையாடுது. குரு ஜொள்ளிட்டாரு. செல்வந்தரும் சக்தி வாய்ந்த பேரன் பிறப்பான்னுட்டு சம்மதிச்சிட்டாரு. கண்ணாலமாச்சு. குருவுக்கு ஒரு கொளந்தையும் பிறந்துருச்சு.
சிஷ்யன் தன் குருவுக்கு அவர் சன்னியாசத்துல இருந்தப்ப எப்படி சர்வீஸ் பண்ணுவானோ அதே மாதிரி சர்வீஸ் பண்ணிக்கிட்டிருந்தான். ஒரு நா குழந்தை படுக்கையிலயே கக்கா போயிட்டு அழுதுக்கிட்டிருக்கு. குரு சிஷ்யனை பார்த்து "சிஷ்யா! என் ஆடைகளை எப்படி சுத்தம் செய்வாயோ அப்படி இந்த குழந்தைய சுத்தம் பண்ணி கொண்டா"ன்னாரு.
சிஷ்யன் குழந்தைய தலை கீழா பிடிச்சு துணிதுவைக்கிற கல்லுல துணிய அடிச்சு துவைக்கிறாப்ல அடிக்க அது ரத்தம் கக்கி செத்துப்போச்சு.
என்னடா கொல்லைப்பக்கம் போன சிஷ்யனை காணோமேன்னு குரு வந்தாரு. சீனை பார்த்து பேஸ்தடிச்சு போய் நின்னுட்டாரு. அவருக்குள்ள பூர்வ ஞானம் வேக் அப் ஆய்ருச்சு. எடுரா தண்டத்தை /எடுரா கமண்டலத்தைன்னு தேசாடனம் புறப்பட்டுட்டாரு.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்னு நான் கவிதை எழுதினாலும் கடகம் எண்ணற்ற பன்முக பரிமாணங்களை கொண்டதுன்னு சனம் சொன்னாலும் நமக்குள்ள மேஜரா இருக்கிற இன்ஃப்ளுயன்ஸ் என்.டி.ஆர் அண்ட் ரஜினிதேன்.
வெற்றி வரிச்சதா என்.டி.ஆர் கணக்கா டிசிப்ளின் -பன்ச்சுவாலிட்டி - ராஜசம் - எட்செட் ரா. கொய்யால அங்கீகாரம் கிடைக்கலை அதுக்காவ போராடறமா? ரஜினி ஸ்டைலுதேன்.
என்னடா பிரச்சினைன்னா கதையில வர்ர குரு மாதிரி ரஜினியே தான் உபதேசிச்சிட்டிருந்த ரூட்டை விட்டுட்டு "பொயப்ப " பார்க்க ஆரம்பிச்சுட்டாரு.
நாம நகலுதேன். ஆனால் ரூட்டை மாத்த முடியாம கொஞ்சம் போல தவிச்சம். கடேசியில மாத்தவேண்டிய அவசியமில்லைன்னு முடிவு பண்ணிட்டம்.
ஒரு காலத்துல நம்மை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண ரஜினியோட பிற்கால "பொயப்பு" ஃபார்முலாவும் எங்கே நம்மை கவர்ந்துருமோங்கற பயத்துலதேன் ரஜினியை கிழி கிழின்னு கிழிக்கிறது.
கதையில வர்ர சிஷ்யனுக்குள்ளே ஊசலாட்டமில்லை. குரு தனக்கு தந்ததை குரு இழந்துட்டதை -அவருக்கு தர ட்ரை பண்றான்.
ஆனால் நமக்குள்ள ஊசலாட்டம் இருந்தது. (இப்பவும் இருக்கலாம்) அதை அவாய்ட் பண்ணத்தேன் ரஜினியிடமிருந்து பெற்ற அந்த வார்த்தைக்கடங்காத உணர்வை அவரில் தூண்ட முயற்சி பண்றோம்.
அது சரி இத்தீனி நாளு ரஜினியை திட்டின திட்டு திட்டாம கொத்து பரோட்டா போட்டுட்டு இன்னைக்கு என்ன இந்த வழியல்னு கேப்பிக. சொல்றேன்.
எம்.ஜி.ஆர் ரசிகர்களை முக்கியமா ரசிகைகளை நக்கலடிச்சு ஜெயகாந்தன் எழுதின "சினிமாவுக்கு போன சித்தாளு" கதைய உல்ட்டா அடிச்சு ரஜினி ரசிகன் -கண்ணீர் கதைங்கற தலைப்புல ஒரு கதை ஆனந்த விகடன்ல வந்ததுங்ணா அதைபடிச்சேன்.
சிவசங்கரி மதுவால் சீரழியறவன் கதைய " ஒரு மனிதனின் கதை"யா எழுதினாப்ல ரஜினி மேல அபிமானத்தால ஒரு ரசிகன் சீரழியற கதை இது. இதைப்படிச்ச ஒடனே கண்ணில் நீர் வராத குறை.
பிராமண இனத்தோட ஸ்பெஷாலிட்டியே இதுதான். அவிகளோட அஜீஸ் ஆனாலும் பொலி போடற நேரத்துல போட்டே தீருவாய்ங்க. இதுல டபுள் கேம் வேற சிங்கப்பூர்ல ரஜினி எக்ஸ்க்ளூசிவும் இதே இதழ்ல வந்திருக்கு. நடு நிலை வகிக்கிறதுன்னா இதான் போல. கற்பழிச்சுட்டு -கர்பம் கலைச்சுக்க மாத்திரையும் தராப்ல இருக்கு.
அந்த கதைய படிச்ச உடனே பதிவு போட்டா ரெம்ப உ.வ பட்டுருவம்னு அடக்கி வாசிச்சு இன்னைக்கு போடறேன்.
ஒரு ஆளுமைங்கறது சூப்பர் பஜார் மாதிரி.அதுல ஆயிரம் கொட்டிக்கிடக்கும். உன்னை அது கூப்பிடறதில்லை. நீயாதான் கவரப்பட்டு போறே . போறவன் நல்லதா நச்சுன்னு நாலு ஐட்டத்தை தள்ளிக்கிட்டு வெளிய வரனும்.
அதை விட்டுட்டு கக்கூஸு பயிட்டு, டூத் பேஸ்ட் மூடிகளை பொறுக்கிக்கிட்டு வந்துட்டா அதுக்கு அந்தசூப்பர் பஜாரா பொறுப்பு.
ஆனந்த விகடன்ல போடற பொம்பள படங்கள் கூட சில சமயம் வயாக்ராவ விட பயங்கரமா வேலை செய்யுது. அதை பார்த்துட்டு கண்டவ கைய புடிச்சு இழுத்துட்டா ஆனந்த விகடன் ஆசிரியரா வந்து ஜாமீன்ல எடுப்பாரு?
Labels:
ஆனந்தவிகடன்,
சோதிடம்,
பாலியல்,
மனவியல்,
ரஜினி,
ஜெயகாந்தன்
Tuesday, July 26, 2011
கலைஞர் இதயம் மீண்டும் இனிக்கும் :"ஜெ"வுக்கு ஆப்பு?
ஆமங்கண்ணா . மாறன் அண்ட் கோ மறுபடி வந்து கோவுர்த்துக்கிட்டப்ப 'இதயம் இனித்தது. கண்கள் பனித்தன"ன்னுசொன்னாரே அதே சீக்வென்ஸ் வந்துருச்சு. ஒருத்தரோட லாபம் இன்னொருத்தருக்கு நஷ்டமா முடியறது -ஒருத்தரோட ஆனந்தம் இன்னொருத்தருக்கு துக்கமா முடியறதுதேன் வாழ்க்கை.
கடகலக்ன காரவுகளுக்கு ரகசிய டார்ச்சர் கொடுக்கவே ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு பார்ட்டி ஆஜராயிரும். ஆனால் கடகம் ஜல தத்துவமாச்சே. "கடலுக்கென்ன மூடி"னுட்டு பொங்கி எழுந்துட்டா எல்லா கச்சாடாவும் அடிச்சிக்கிட்டு போயிரும்.
இதே கான்செப்ட் தேன் தாத்தா லைஃப்லயும் நடக்குது போல (கடக லக்னம்) . பிள்ளைகள்/பொஞ்சாதி/துணைவி ,( ஏன்யா நான் கரெக்டா பேசறனா/) சோனியா,தயா, ராசா அல்லாரும் மாறி மாறி ஆளுக்கொரு பக்கம் இழுக்க பழகிட்டாய்ங்க.
நம்ம ஜா.ரா வும் இவன் நாம போடற 'உவேக்' கமெண்டையெல்லாம் முருகேசன் ரகசியமா வச்சுப்பாங்கற தகிரியத்துல ரெம்ப ஓவரா போயிட்டாரு. அதேன் மொத்தத்தையும் அப்ரூவ் பண்ணிட்டன். கருப்பு ஆடு ஜா.ராதாங்கறதுக்கு ஆயிரம் ஆதாரம் இந்த கமென்ட்ஸ்லயே கிடைக்கும். என்ன கொஞ்சம் போல மூக்கை பொத்திக்கிடனும் தட்ஸால். நாறும்.
இன்னா.............ஆது கலைஞர் இதயம் மீண்டும் இனிக்குமா எப்டின்னு மொதல்ல சொல்லுப்பாம்பிங்க சொல்றேன்.அதுக்குத்தேன் இந்த பதிவு.
சட்டமன்ற தேர்தல்ல தாத்தாவுக்கு ஓய்வு கிடைக்கப்போவுதுன்னு சொன்ன இந்த வாய்தேன் இதையும் சொல்லுது. நாம ஏடிஎம் கவுண்டர் மாதிரி செருகின அட்டையில பேலன்ஸ் சொல்றோம். அம்புட்டுதேன். நமக்கு அவிக இவிகனு வித்யாசம்லாம் கிடையாது.
ஜா.ராவுதும் நம்முதும் ஒரே கேரக்டரு. இரட்டைதன்மை. ஒரு மன நிலையில ஜெ தான் ஆதிபராசக்தின்னு தோனும். இன்னொரு மன நிலையில ச்சே தாத்தா பாவம்யான்னு தோனும்.
ஆனால் நாம டுபுக் ப்ளாக் வச்சி - அனானி பதிவு -அனானி கமெண்டெல்லாம் போடறதில்லை.அப்பப்போ என்ன தோனுதோ அதை அப்படியே போட்டு உடைச்சுர்ரம்.
என்ன? மொக்கை போதுமா? பதிவுக்கு போயிரலாமா/
இந்த பதிவுக்கு நான் ரோசிச்ச இன்ன பிற தலைப்புகள்: (ரூம் போட்டெல்லாம் ரொசிக்கிலிங்கண்ணா-ஜஸ்ட் ஸ்பார்க் ஆனதுதேன்)
1.கலைஞர் தாத்தாவுக்கு நல்ல நேரம் பொறந்துருச்சுடோய்
2.அம்மா வெற்றி ச்சும்மா போகப்போகுதா?
3." கனி " மொழி சென்னையில ஒலிக்கப்போவுது
4. அம்மா கண்ணும் தாத்தா விரலும்
இதெல்லாம் கோசார கணக்கை அடிப்படையா கொண்டதுதேன். நான் நம்பி உபயோகிக்கும் தெலுங்கு பஞ்சாங்கப்படி 2011 நவம்பர் 17 அன்று சனிப்பெயர்ச்சி நடக்க போகிறது. தாத்தாவுது ரிஷபராசி.
கடந்த கன்னி சனி:
இது 2011 நவம்பர் 17 வரை நடக்கனும். 9/10க்கு அதிபதி அஞ்சுல இருந்த காலம் வரை நெல்லாவே "தொழில்" நடத்தி நெல்லாவே சொத்து சேர்த்தாரு. ஆனால் அஞ்சுல சனிங்கற கான்செப்ட்ல அவமானமும் நடந்தது (அஞ்சு பேர் புகழை காட்டும் இடம்) கனிமொழியும் திகார் (அஞ்சு புத்ர ஸ்தானம்) தயா நிதி மாறனும் அதே ரூட்ல ( புத்ர பவுத்ரர்கள் -பேரன் கள் எல்லாம் ஒரே கேட்டகிரிங்கோ) புத்தி மந்தமா போய் (அஞ்சு புத்தி ஸ்தானம்) 1 லட்சத்து 76 ஆயிரம் கொடிக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் ஈழத்தமிழர்களை பலி கொடுத்தாச்சு.
ஆனா சனி ராசி மாறுவதற்கு 6 மாசம் முன்னாடியே அடுத்த ராசியோட பலனை தருவாருன்னு ஒரு விதி இருக்கு. அதாவது அஞ்சுல சனியே 6 ல சனியா வேலை செய்வாரு.
இந்த எஃபெக்டு மே 17 ஆம் தேதியே ஆரம்பிச்சிருச்சு. சனி இவிகளுக்கு 9 -10 க்கு அதிபதி. 9 ஆம் பாவம் தொலைதூர கார்டியனை காட்டும் (சோனியா) அதனால தேன் சோனியா அம்மா பிள்ளைய பயங்கரமா கிள்ளி விட ஆரம்பிச்சிட்டாங்க. தாத்தாவும் நான் மாத்தேன் அழ மாத்தேன்னுட்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருந்தாரு புரச்சி தலைவி எப்பம் சமச்சீர் கல்வி மேட்டர்ல வாய வச்சாய்ங்களோ அங்கனயே தாத்தாவுக்கு அடுத்துவரும் துலா சனி:எஃபெக்ட் ஆரம்பமாயிருச்சு போல.
9 ங்கறது சொத்துக்கள்,சேமிப்பு,முதலீடுகளை காட்டுமிடம் இதுங்க மேலல்லாம் வம்பு வழக்கு வரனும். வந்துக்கிட்டே இருக்கு.
பத்தாம் பாவம் செய்தொழிலை காட்டுமிடம். இவர் 6 ஐ பார்க்கிறதால "விவகாரம் பண்றதும் -எதிராளி கண்ல விரலை விட்டு ஆட்டறதும்தேன் வேலை. வல்லடி பண்ணனும். எதிராளிக்கு தூக்கமில்லாம பண்ணனும். ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா இதெல்லாம் முதல்ல ரிவர்ஸ்ல நடக்கும். அப்பறமாத்தேன் இருக்கு மெயின் பிலிம்..
6 ல சனி வந்தா சத்ரு நாசம் - ரோக நிவர்த்தி - ருண விமுக்தி நடக்கனும். இதனோட எஃபெக்டா தான் சினியுக் கடனா(?) கொடுத்த 214 கோடியை செட்டில் பண்ணாப்ல இருக்கு. ரோகம் இனி வராது போல (சின்னதா) அம்மா கதி என்ன ஆகப்போகுதோ? கர்னாடக கோர்ட்டு விவகாரம் வேற இதோ அதோங்குது. தாத்தாவோட ராசிக்கு 6 ல வந்த சனி அம்மா வெற்றிய ச்சொம்மா ஆக்கிருவாரா என்னனு பொறுத்திருந்துதேன் பார்க்கனும்.
எச்சரிக்கை:1
ஆனால் இதுல இன்னொரு பயங்கரமும் இருக்குங்ணா அம்மாவுக்கு 3 ல சனி /தாத்தாவுக்கு 6 ல சனி. அம்மா பயப்படமாட்டாய்ங்க. தாத்தா விடமாட்டாரு. தமிழகம் ரண களமாகப்போகுது.
எச்சரிக்கை;2
எங்க ஊர்ல என்.டி.ஆருக்கு அவரோட ராசிக்கு 5 ல சனி வந்தப்பதேன் பிள்ளை கணக்கா இருக்கவேண்டிய சந்திரபாபு ஆப்படிச்சிட்டாரு. அப்பம் நான் உணர்ச்சி வசப்பட்டு சனி 6 ஐ பார்க்கிற தேதிய குறிப்பிட்டு
" இன்ன தேதிக்கு அப்பாறம் உங்களுக்கு எதிரியே கிடையாது தலை"னுட்டு டெலிகிராம் கொடுத்தேன்.
ஆனால் அன்ன தேதிக்கு அப்பாறம் தலீவரு டிக்கெட் வாங்கிட்டாரு. அவரை ஈஸ்ட்மென் கலர்ல திட்டிக்கிட்டிருந்த தலைங்க எல்லாம் என்.டி.ஆர் மரணத்துக்கு அப்பாறம் அவதார புருசனு புகழ்ந்து தள்ளினாய்ங்க.
இந்த மாதிரி தாத்தா மேட்டர்ல நடக்காதுன்னு எப்படி உறுதி தரமுடியும்?
விவகார ஜெயம்:
சமச்சீர் கல்வி மேட்டரை ஏற்கெனவே சொல்ட்டன். அடுத்த மேட்டர் ராசா . நேத்து ராசா போட்ட குண்டுக்கு சோனியா - சிதம்பரத்தார் மற்றும் மன்மோகனார் அரண்டு கிடக்காய்ங்க. தாத்தா பார்கெயினிங் பொசிஷன்ல இருந்து டிமாண்டிங் பொசிஷனுக்கு வன்ட்டாருங்கோ.
ஆனால் நல்லதுல ஒரு கெட்டது மாதிரி குரு அஷ்டமாதிபதியா மறைஞ்சு நன்மை செய்ய பார்த்தாலும் -அவர் புத்ர காரகன் என்பதால் கனி திகாருக்கு போக பிரிவு ஏற்பட்டது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி குரு வக்கிரமாறதால -முந்தா நாள் ராசா விட்ட அலப்பறைக்கு சோனியா கும்பல் அரண்டு கிடக்கிறதால கனி ஆகஸ்ட் 30 க்கு அப்பாறம் வெளிய வந்துரலாமுங்கோ.
Monday, July 25, 2011
பதிவுலகை விட்டு விலகுகிறேன்
வலையுலகத்துல என்ன அட்டூழியம் வேணா பண்ணிட்டு பதிவுலகை விட்டு விலகுகிறேன்னுட்டு ஒரு பதிவு போட்டா நிறைய அனுதாபம் கிடைக்கும் போல கூகுளின் ப்ளாகர் இருக்கும் வரை - நான் உசுரோட இருந்து -என் மூளை கலங்காத இருக்கிறவரை பதிவுலகில் தொடர்வேன் என்று சொல்லி 10தினி வேஷம் போடும் ஜாராவின் அட்டூழியங்களை /அவற்றிற்கான ஆதாரங்களை தந்திருக்கேன். படிச்சு பாருங்க.
தமிழ் நாட்டு சனமே இளகின மனசா இருந்தா எப்படி? அனுதாபம் காட்டுங்க வேணாங்கலை. அருகதை உள்ளவுகளுக்கு காட்டுங்க. அளவா காட்டுங்க.
புலிகள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தப்ப சுட்டு தள்ளின சிங்கள ராணுவம் ரேஞ்சுக்கு எக்ஸ் பார்ட்டி போயிருச்சு. பாதிக்கப்பட்ட நானே "ஒழிஞ்சு போவட்டும்"னு விட்டபிற்காடும், அத்தீனி அப்பாவி சனம் "போகாதே போகாதே என் கணவா"னுட்டு பிலாக்கணம் பாடினதுக்கப்பாறமும் ஸ்பம் கமெண்ட் மல(ம்) மழை கொட்டுது.
வயாக்ரா வாங்க வசதியில்லாதவுக மெயில் பண்ணுங்க .அந்த கமெண்ட்ஸை உங்களுக்கு அனுப்பறேன். உபயோகப்படும். அதுலயும் பர்வெர்ஷன் தேன் அதிகம் . உ.ம் தம்பியோட செக்ஸ் வச்சுக்கலாமா?
கொய்யால நம்மை சுட்டிக்காட்டினதும் கமெண்ட் நின்னுப்போயிட்டா சந்தேகம் வந்துருமேங்கற லாஜிக்கோ என்ன இழவோ? இன்னைக்கு செம ஸ்பம் மழை.
அதுசரி எல்லா ஸ்பம் கமெண்டும் ஜா.ராவுக்கே வக்காலத்து வாங்குதே அது எப்படி?
ரிலாக்ஸ்டா ஆத்தாளை கேட்டேன். "அம்மா இன்னுமா பொறுமை?" ஆத்தா "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழுன்னிட்டா.
நடந்த கதை:
கோபி கிருஷ்ணன் நம்ம ஊரு ஆளு. நம்மை இஷ்டத்துக்கு கிழிச்சு (அவர் எடுத்துக்கிட்ட பாய்ண்ட் ஒன்னுதேன் : நம்மோட பிராமண எதிர்ப்பு) . நாம அடிக்கடி சொல்லுவமே .. நம்மை உரசிப்பார்த்தா "குடம் குடமா கொட்டும்"னு அப்படி அய்யருக்கு பல்ப் மாட்டிக்கிச்சு. நாம ரிலீஸ் பண்ணி விட்டோம். அய்யர் இப்ப நம்மாளு.
அய்யர் கதை எப்பவோ ந(க)டந்து போச்சு. ஆனால் பாருங்க மே மாச வாக்குல புதுசா ஒரு அய்யர் வலம் வர ஆரம்பிக்கிறாரு. அதுவும் எப்படி? எப்பவோ ஒரிஜினல் அய்யர் போட்ட பதிவுகளை ஹெடர் இமேஜை காப்பி பேஸ்ட் பண்ணி புது வலை தளம் மூலமா வலம் வர்ராரு.
ஒரிஜினல் அய்யர் கதை ஆகஸ்ட் ,26, 2010 ல துவங்குது. அக்டோபர் 3 , 2010 ல முடிஞ்சு போகுது. ( ஐ மீன் அப்டேஷன்)
டுபாக்கூர் அய்யர் கதை 8 May 2011ல துவங்குது. இன்னைக்கு வரைக்கும் ஓடுது.
அக்டோபர் 3 , 2010லயே ஆட்டம் குளோஸ் ஆயிட்ட . அந்த ஒரிஜினல் அய்யரோட கன்டென்டை வச்சுத்தேன் நம்ம ஜா.ரா விளையாட ஆரம்பிச்சாரு.
ஏங்க ஏன்......னுட்டு கேப்பிக. சொல்றேன். பார்ட்டி நம்மை ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொண்டாரு. ஃபீஸை மொபைலுக்கு ரிசார்ஜா அனுப்பறதா சொன்னாரு.
எதுக்கப்பு அம்பானிக்கு அரிசிக்கு காசில்லையா.. வேணம்னா எம்.ஓ அனுப்பு அதுவும் ரூ 100 மட்டுமேன்னு நாம மெயில் பண்ணோம். பார்ட்டி கடைசி வரை அந்த நூறை கூட அனுப்பலை அது வேற கதை . ஐம் நாட் ஃபார் மணி ( மணிகண்டன்,புரட்சிமணி கோச்சுக்கிராதிங்க நான் சொன்னது Money)
அப்போல்லாம் ஜாதக பலன் களை சனங்களுக்கு மாங்குமாங்குனு அடிச்சு 100 கேபி வரை டெக்ஸ்ட் ஃபைலாத்தான் அனுப்பிக்கிட்டிருந்தேன். இப்பம் ஏதோ "அம்மா" புண்ணியத்துல நெரிசலை சமாளிக்க ஆடியோ ஃபைல்தேன்.
அதனால அவருக்கு பலன் அனுப்ப தாமதம் ஆனாப்ல இருக்கு. ஒரே ஜாதகத்துக்கு ஆயிரம் ரூவா அனுப்பற சீமான்லாம் 10 நாள் , 20 நாள் லேட்டானாலும் கண்டுக்கிடறதில்லை. ஜென்டில் ரிமைண்டர் தேன் அனுப்புவாய்ங்க.
ஆனால் பார்ட்டி அந்த பீரியட்லயே சொந்த பேர்ல "காபூலி வாலா" கணக்கா கமெண்ட் போட்டு குடைச்சல் கொடுத்தது. இதுவாச்சும் பரவால்லை அங்சியஸ்னு அஜீஸ் பண்ணிக்கலாம்.
மார்ச் 31 ல ஜா.ரா பலன் கேட்டு அனுப்பின மெயிலுக்கு நாம மே 29 ல பலன் அனுப்பறோம்
தலீவரு மே எட்டாம் தேதியே கடுப்பாகி புது அய்யரா அவதரிக்கிறாரு.
ஒரு மாசம் போல தாமதமானதாலயோ அ பலனை "தடாலடியா" உள்ளது உள்ளபடி" தந்துட்டதாலயோ இர்ரிட்டேட் ஆயிட்டாப்ல இருக்கு.
இந்த சமயத்துல ஒரிஜினல் அய்யரோட எழுத்துக்கள் நம்மாளு கண்ல படுது. அப்படியே பத்திரப்படுத்திக்கிறாரு. ஹெடர் இமேஜ் உட்பட. படிச்சு படிச்சு சந்தோசப்பட்டாரோ அ வலையுலகத்துல கமெண்ட் வடிவத்துல பரப்பிக்கிட்டு கிடந்தாரோ தெரியாது.
அய்யரோட எழுத்துக்களை ஊரார் ப்ளாக்லல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணிட்டு படக்குனு சொந்த பேர்ல போய் இன்னொரு கமெண்டையும் போடுவாரு போல. நான் எதையும் கண்டுக்கிடலை.
கழுகு வலைச்சரத்துல நம்ம லட்சிய திட்டமான "வல்லரசு கனவுகள்" பதிவுல போய் இதே வேலைய செய்தாரு. அப்பம் மட்டும் கொஞ்சம் சிவுக்குன்னுச்சு . நாம அய்யரை கூப்டு அய்யரே அதையெல்லாம் நீக்கிருனுட்டம். அய்யர் நீக்கிட்டாரு.
உடனே திரு.ஜா.ரா புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறாரு. தான் சேகரிச்சு வச்சிருந்த பழைய அய்யரோட பதிவுகளை எடுத்து புது ப்ளாக்ல காப்பி பேஸ்ட் பண்ணிட்டாரு . புது அவதாரம் எடுத்துட்டாரு. " அய்ய நம்ம மேல சந்தேகமே வரக்கூடாது"னுட்டு திருடன் சுருட்ட வேண்டியதை சுருட்டிட்டு திருடன் திருடன்னு கத்துவானாம். கூட்டம் வந்ததும் கூட்டத்தோட கூட்டமா நழுவிருவானாம் .
அப்படி டுபாக்கூர் அய்யர் தன் பதிவை இவர் பார்வைக்கு அனுப்பினாப்ல "பீலா" விட்டு தன் "மேலான" கருத்துக்களை கமெண்டா போட்டுட்டாரு.
தமாசு இன்னாடான்னா டுபாக்கூர் அய்யர் இவரோட ப்ளாக்ல ஃபாலோவர் வேறயாம். லாஜிக்கலா பார்த்தா ஜா.ரா அய்யரை குறை சொல்லி / நம்மை தூக்கோ தூக்குனு தூக்கி கமெண்ட் போட்டிருக்காரு. அப்படியா கொத்த உத்தமரோட ப்ளாக்ல டுபுக் அய்யர் மாதிரி நாதாரி சேருவானா? ஆனா சேர்ந்தான். ஏன்னா ரெண்டு பேரும் ஒரே ஆளுதேன்.
அட இவ்ளோ எதுக்கு பாஸ்.. கதை க்ளைமேக்ஸுக்கு வந்துட்ட பிற்காடு டுபுக் அய்யர் கிட்டே போய் உங்களை வெளிப்படுத்திக்கிட்டு என்னை காப்பாத்துங்கனு கேட்கிறாரு.
நீங்க வேணா பாருங்க நாளைக்கு அய்யர் (டுபுக்) அய்யய்யோ ஜா.ரா உத்தமர் .நான் தான் அபிஷ்டுன்னு ஒரு பதிவை பொடுவாரு.
ஜா.ரா பண்ண தப்பு என்னடான்னா டுபுக் ப்ளாகுக்கு யு ஆர் எல் செட் பண்றச்ச தன் பிறவிகுணத்தை காட்டிட்டதுதேன்
ஒரிஜினல் http://www.ayyarthegreat.blogspot.com
நண்பர் உருவாக்கின தளம் : http://www.ayyerthegreat.blogspot.com
ஒரே ஒரு எழுத்துதேன் வித்யாசம். இங்கனதான் நமக்கு சந்தேகப்புள்ளி விழுந்தது. ஏன் ?ஏன்? னு கேப்பிக சொல்றேன்.
நண்பரோட வலைதளம் : http://sivaayasivaa.blogspot.com/ ஒரு நா டபுள் ஏக்கு பதிலா சிங்கிள் ஏ அடிச்சிட்டாப்ல இருக்கு வேற ஒரு வலை தளம் ஓப்பன் ஆகுது .அதனோட யு ஆர் எல் http://www.sivayasiva.blogspot.com
இதை க்ளிக் பண்ணா www.sithan.com க்கு கொண்டு போகும்.
ஒரு எழுத்தை மாத்தி டுபாக்கூர் ப்ளாக் வைக்கிறது நம்மாளு ஸ்டைல்னு புரிஞ்சு போச்சு. இந்த ஒரே ஒரு சந்தேகத்தை மனசுல வச்சுத்தேன் நம்மாளோட மெயில் ஐடிய மனசுல வச்சிருந்தேன்.
அப்பம் நம்ம கோபி கிருஷ்ணன் எங்க வீட்டுக்கு வந்தாப்ல அப்ப உன் ப்ளாகை டெலிட் பண்ணலியா அய்யரு புத்திய காமிச்சிட்டியேனு நக்கலடிச்சேன்.
அந்த தம்பி அரண்டு போயிருச்சு. ஹேக் பண்ணிட்டானோன்னு நினைச்சோம். ஆனால் நிதானமா ஸ்பார்க் ஆச்சு .
ஒரிஜினல்
ayyarthegreat.blogspot.com
நம்மாளு க்ரியேட் பண்ணது
ayyerthegreat.blogspot.com
இந்தாளோட ப்ளாக் பேரும் இப்படி தான்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்...(ஓரெழுத்து வித்யாசம்) அய்யரு ஹேக் பண்ணிர்ரனு இறங்கினாரு. நானு அட நமக்கெதுக்கு அந்த பீடையெல்லாம் ஆருனு கண்டுபிடி போதும்னேன். அப்பத்தேன் ஐ கெனாட் ஆக்சஸ் மை அக்கவுண்ட் ஆப்ஷன்ல உள்ளாற போய் மெயில் ரிக்கவரிக்காக அய்யாவோட மெயில் ஐடிய கொடுத்தோம்.
அப்ப ஜிமெயில் காரன் s.................a@yahoo.com விலாசத்துக்கு பாஸ்வோர்ட் ரிக்கவரி லிங்க் அனுப்பறோம்னு சொன்னான்.
கொஞ்சம் குழப்பமாயிருச்சு.என்னடா பார்ட்டிது ஜி மெயில் ஐடி தானே. யாஹூல அதே ஐடி இருக்குமோன்னுட்டு சந்தேகம் வந்துருச்சு.
அதை ப்ரூஃப் பண்ணிக்க " என்னங்க ஆளை காணோம்ங்கற " டோன்ல ஜா.ராவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ஜிமெயில்+யாஹுனு ரெண்டு ஐடிக்கும் அனுப்பினேன். அது அவரோட ஐடியில்லேன்னா எதுக்குங்க யாஹூ ஐடியயும் சேர்த்து போட்டிருக்கிங்க - நமக்கு யாஹூல அந்த ஐடி இல்லேனு சொல்லியிருக்கனும். ஒரு வேளை அதுமாதிரி ஐடியே இல்லின்னா மெயில் டெலிவரி ஆகலேனு தகவல் வந்திருக்கும்.
இந்த க்ளூஸையெல்லாம் நம்ம ஒரிஜினல் ஐயரு பதிவா போட்டாரா - நான் கமெண்ட்ல சொன்னேனா ஞாபகமில்லை.
எதுக்கோ மறுபடி ஐ கெனாட் ஆக்சஸ் மை அக்கவுண்ட் ஆப்ஷனை உபயோகிச்சா இப்பம் ரிக்கவரி மெயில் ஐடியா வேற ஐடி வருது. திருடனுக்கு தேள் கொட்டிருச்சுன்னுதானே அர்த்தம். இதை கூட உடுங்க.
இப்போ ஜஸ்ட் நௌ. அதே ஆப்ஷன்ல உள்ளாற போயி அய்யாவோட மெயில் ஐடிய கொடுத்தா பச்சக்குனு உட்காருது.
பந்தாவா ஃபோன் நெம்பரோட கடைசி ரெண்டு டிஜிட் வேற வருது. ஜா.ராவோட கெட்ட நேரம் நேத்துதேன் தன்னோட மொபைல் நெம்பரோட கமெண்ட் போட்டு தானே பத்த வச்சுட்டு ஊரு பத்திக்கிச்சுன்னு தகவல் சொல்ட்டு (தமிழ்10ல ஐயரோட பதிவுகள்) நான் நளாயினி, அருந்ததின்னு சென்டிமென்ட் வசனம்.
இது போலி அய்யரோட ப்ளாக் அவரோட மெயில் ஐடிய கொண்டுதான் க்ரியேட் பண்ணப்பட்டிருக்குங்கறதுக்கு ஆதாரம்:
மறுபடி ரிக்கவரி மெயில் ஐடிய மாத்திட்டாரு பாருங்க.
அய்யாவோட ஃபோன் நெம்பர்ல கடைசி ரெண்டு டிஜிட் - ஜிமெயில் சொன்ன அதே நெம்பருதேங்கறது ஆதாரம் இதோ:
ஏழ்மை - அங்கீகாரமின்மை - எதிராளிகளின் அலட்சியம் - அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் தரும் கடுப்பு இதையெல்லாம் நான் அறியாதவனில்லை.
"ஆயிரம் பேருக்கு உங்க ப்ளாகை அறிமுகம் செய்ய"னுட்டு ஒரு பதிவு போட்டேன். அதுல ஜா.ரா 'தரமான ஆன்மீக தளங்களுக்கு வருகைகள் கிடைக்கறதில்லைனு புலம்பியிருந்தாரு.
இன்னொரு தாட்டி தன்னோட தபஸ் பலிச்சு நான்/ நம்ம சைட்டு என்னவோ ஆகிப்போச்சுங்கற ஃபீலிங்ல "சூனியம் வச்சுட்டாய்ங்களா"னு கூட கேட்டிருந்தார்.
அவர் சொந்த பேர்ல போட்ட கமெண்ட்ஸையே பாருங்க.பயங்கர காண்ட்ராடிக்சன் இருக்கும்.இரட்டை மனப்போக்கு தெரியும். இதுவும் ஒரு வகை அட்மைரேஷன் தான். ஹேட் அண்ட் லவ்.
ஒரு தடவைகமெண்ட் எல்லாம் போடலாம்ல பயம்மா இருக்குனு கமெண்ட்
போட்டாரு
அய்யருங்கள்ள ஆரோ ஒருத்தரு ஏன் இதை செய்திருக்ககூடாதுனு கேப்பிக. ஆனால் அவிக மென்டாலிட்டி என்னனு எனக்கு தெரியும்.
ஒரு கெட்டுப்போன ஐயரு கவிதை07ல ஒரு கமெண்ட் பொட்டிருந்தாரு. அதுல என்னெல்லாம் வசை மொழிகள் இருக்கோ அதைத்தான் ஜா.ரா உபயோகிச்சிக்கிட்டு இருக்காரு .அதை கூட இவரால சொந்தமா செய்ய முடியலியா ? அல்லது பிராமணாள் பாஷையில திட்டினா நாம சந்தேக வளையத்துலருந்து தப்பலாம்ங்கற எண்ணமா தெரியலை. (அந்தகமெண்ட் கூட பத்திரமா இருக்கு. நடுவர் குழு போலி கமெண்டுகளையும் - அந்த அய்யர் கமெண்டுகளையும் மேட்ச் பண்ணா மேட்டர் புரிஞ்சுரும் - நாகரீகம் கருதி அதை இங்கன போடலை)
ரெம்ப சைல்டிஷா பிஹேவ் பண்ணி க்ளூ மேல க்ளூ கொடுத்து மாட்டிக்கினாரு. " ஒரு தடவை இவரோட சொந்த பேரிலான கமெண்டுக்கு "வாங்க ஜா.ரா.. வசம்மா மாட்னிங்க"னு கூட வினோலாக்ஸ் கொடுத்தேன். திருந்தலியே.
அவரோட ஹிட்லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காய்ங்களோ அவிக பேரையெல்லாம் குறிப்பிட்டு அவிக தான்.இவிகதான்னு கமெண்ட்ஸ் வந்திருக்கு.
அந்தலிஸ்ட் மட்டும் இங்கே: டவுசர் பாண்டி, புரட்சிமணி ,மணி கண்டன், சுகுமார்ஜி . கட்ட கடைசியா அவ்சரம் -அர்ஜென்ட்னுட்டு ஃபோனை போட்டு தான் பண்ண சின்னத்தனமான வேலைக்கு மணிகண்டனை பலிகடா ஆக்கப்பார்த்தாரு.
இந்தியன்ல கமல் மாதிரி "உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுரா"னு நினைச்சுக்கிட்டேன். இப்பம் கூட மிஞ்சிப்போனது ஒன்னுமில்லை. அவர் மன்னாப்பு கேட்கனும் -மயிராப்பு கேட்கனும்னெல்லாம் டிமாண்ட் பண்ணலை .
அந்த டுபுக் அய்யர் ப்ளாகை டெலிட் பண்ணிட்டு -போலி பேர்ல கமெண்ட் போடற கெட்டப்பழக்கத்தை விட்டுட்டதா அவருக்கு நம்பகமான பார்ட்டிக்கிட்ட சொல்லிட்டு அதன் படி நடக்கனும். அந்த நம்பகமான பார்ட்டி கியாரண்டி கொடுத்த அடுத்த கணம் இந்த "பஞ்சாயத்து தொடர்பான எல்லா கன்டென்டையும் நீக்கிர்ரன்.
மறுபடி கோணல் புத்தியோட (கமெண்ட்ஸ் நின்னுட்டா தான் தான்னு ப்ரூவ் ஆயிரும்) கமெண்ட் மழை பொழிஞ்சது - தன்னோட ப்ளாக்ல டுபுக் /போலி பேர்ல உள்ள ஐடி/ஃபோட்டோஸ வச்சு திட்டி தீர்த்தது - அய்யர் தி கிரேட் (போலி) கிட்டே கெஞ்சினது இதெல்லாம் தான் இப்படி நான் பொங்கி எழக்காரணம்.
இன்னொரு மேட்டர் என்னடான்னா இவரு ஒரு நெட் ஒர்க் வச்சிருக்காரு அ ஊர் ஊரா சுத்தறாரு போல.(மொதலாவதுக்கே அதிக வாய்ப்பு) அல்லது ஊர்ப்பட்ட மெயில் ஐடிக்கள் கிரியேட் பண்ணி வச்சிருக்காரு. இவரோட பதிவுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்குதோ அதுல பாதியாச்சும்.
ஒரு தாட்டி " நான் உங்களுக்கு போடறேன் .எனக்கு போடுங்கனு " கூட கேட்டாரு. ஃபோட்டோஸ்? இவர் ஒரு மாஜி டிடிபி ஆப்பரேட்டர். அப்பம் இவர்கிட்டே வந்த ஃபோட்டோஸை வச்சு விளையாடலாமே.
(ங்கொய்யால நாங்க ஸ்டுடியோவே வச்சுருக்கம்டி.)
குறிப்பு: இந்த பதிவு 24 மணி நேரத்துக்கு மேல் இருக்காதுன்னு இப்பவும் நம்பறேன். திரு.ஜாரா நான் சொன்னதை செய்து இதோட இந்த விவகாரத்தை முடிச்சுக்குவாருனு இப்பவும் நம்பறேன். மனுசனுக்குள்ள இருக்கிற குட்னெஸை நம்பற ஆளு நானு. நம்பிக்கிட்டே இருப்பேன்.
Subscribe to:
Posts (Atom)