Monday, July 4, 2011

ஆண் பெண் வித்யாசம் : 5 ஆம் பாவம்

அண்ணே வணக்கம்ணே ! ஆண்,பெண் வித்யாசம்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டது ஞா இருக்கலாம். அதை தொடர உத்தேசம். தொடர்ந்து எழுதறதுல ஒரு சிக்கல் இருக்கு. ஒன்னு சுட்டுர்ராய்ங்க. ரெண்டு நமக்கே போரடிச்சுருது.

ஒரு காலத்துல நம்மை சம்பந்தா சம்பந்தம் இல்லாம கிழிச்சுக்கிட்டிருந்த ஸ்ரீனிவாச அய்யங்கார் ( நம்ம ஊருதேன்) இப்பம் நன்றிக்கடன்ல தத்தளிக்கிறாரு.  தன்னால ஏற்பட்ட டேமேஜுக்கு பரிகாரம் தேடியே தீருவேங்கறாரு.

சில பிக்காலிங்க அய்யரோட அய்யர் தி கிரேட் ப்ளாக்லருந்து அவர் நம்மை அர்ச்சித்ததை   காப்பி பேஸ்ட் பண்ணி பரப்பிக்கிட்டிருக்காய்ங்க.

நம்ம லட்சிய திட்டமான ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி வல்லரசு கனவுகள் ங்கற தலைப்புல கழுகுல ஒரு பதிவை போட்டிருந்தோம். அந்த பதிவுலயும் இந்த காப்பி பெஸ்ட் கஸ்மாலங்க என்ட்ரி கொடுத்திருக்கு. அய்யர் ரெம்ப நொந்து போயிருக்காரு.
கழுகு காரவுகளுக்கு கமெண்ட் போட்டு காப்பி பேஸ்ட் ஒள்ளார ஓளிங்களோட கமெண்டை நீக்க சொல்லி கேட்டிருக்காரு. ஆனால் அவிக இன்னைக்கு ராத்திரி 9.40 வரை நீக்கக்காணோம்.

அதுக்காவ நம்ம ப்ளாக்ல அய்யரை விட்டா நம்மை கல்கி அவதாரம் கணக்கா புகழ்ந்து தள்ளிருவாரு.அதனால அடக்கி வச்சிருக்கேன். சனம் எப்படி சொன்னா அப்படி செய்யலாம்னு உத்தேசம்.

ஓகே தொடர்பதிவுக்கு போயிரலாம்.

ஜாதகத்துல ஆண்பெண் வித்யாசம்னா அது ஆயுள் ஸ்தானம் - சுகஸ்தானத்துக்கு மட்டும் தேன்னு நினைச்சிருப்பிங்க. ஆனால் 12 பாவங்களை பொருத்தும் ஆண் பெண் ஜாதகங்களுக்கு வித்யாசமிருக்கு. அதை வலியுறுத்தித்தேன் இந்த தொடர். தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க.


ஏற்கெனவே மொதல் 4 பாவங்களை பற்றி எழுதியாச்சு. படிக்காதவுக வசதிக்காக சுட்டிகள் இங்கே.

ஆண் பெண் வித்யாசம்: பாவம் 1
ஆண் பெண் வித்யாசம்: பாவம்
ஆண் பெண் வித்யாசம்: பாவம் 3
ஆண் பெண் வித்யாசம்: பாவம் 4

இந்த வரிசையில் இன்று 5 ஆம் பாவத்தை பார்க்கலாம். உடுங்க  ஜூட்

பொதுவாக ஐந்தாம் பாவம் புத்தி  பிள்ளைகள்,பூர்வ புண்ணியம் , மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,
தியானம், ஆகியவற்றை காட்டும்.

இதில் ஒவ்வொன்றையும் பற்றி ஆராய்வோம்.இந்த  ஒவ்வொரு விஷயத்திலும் ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம் இருக்குது. இதனால லாபம் என்ன நஷ்டம் என்னனு பார்த்துருவம்.

அதுக்கு முந்தி ஒரு சின்ன தர்க்கம். ஒவ்வொரு பாவமும் ஒரு வீடு மாதிரி. அந்தந்த பாவங்கள் பலம் பெறவும் , பல்கீனமடையவும் ஆயிரத்தெட்டு விதிகள் உள்ளன.

என் அனுபவத்தில் எந்த ஒரு ஜாதகத்துலயும் எந்த பாவமும் -எந்த கிரகமும் 100 சதம் சுபபலமாய் இருந்ததே இல்லை.

என்னதான் சக்தி வாய்ந்த ஃபோக்கஸ் லைட்டை ஆன் பண்ணாலும் அதும் பின்னாடியே அதனோட நிழல் விழறாப்ல - இருட்டடிச்சுர்ராப்ல கிரகம் அ பாவம் முழுபலம் பெறும்போது அதனோட சைட் எஃபெக்டா  சில தீய பலன்களும் ஏற்பட்டுருது.

உ.ம் : நம்ம ஜாதகத்துல கடகத்துல (லக்னமே இதான்)  குரு உச்சம். இவர் பஞ்சமாதிபதியா உச்சம் பெற்றது நல்லதுதேன். அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதச்சொரிவுக்கு இதான் காரணம். இது ப்ளஸ்.

ஆனால் இவரே ரோகாதிபத்யமும் பெற்றுள்ளதால் ஏக் தம் ஹெவி சி.எம் க்கு எதிராவே  கோர்ட்டுக்கு போகவேண்டியதாயிருச்சு. இது மைனஸ்.

கூடிய சீக்கிரம் இந்த ஆன்லைன் கன்சல்ட்டன்சியை விட்டு தொலைச்சு க்ஷேத்திராடனம் ( அதாங்க அகில இந்திய சுற்றுப்பயணம்) துவங்கலின்னா உட்கார்ந்து உட்கார்ந்து வெயிட் போட்டு - ஹார்ட் வீக் ஆகி ஹார்ட் அட்டாக் கூட வரலாம். இது மைனஸ்.

புத்திர காரகனான குரு புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் ஆண் வாரிசு இல்லாம போயிருச்சு. (மேல் சேவனிசத்தோட ரோசிச்சா இதுவும் மைனஸ் தேன் - ஆனால் எங்கம்மவே உசுரோட இருந்திருந்தா கூட இந்த ரேஞ்சுக்கு நம்ம கவனிச்சிக்கிட்டிருக்கமாட்டாய்ங்க. அப்பனுக்கு அப்பனா - ஆத்தாளுக்கு ஆத்தாளா கவனிச்சிக்கிற மகள் நிச்சயமா பூர்வ ஜன்ம புண்ணியம்தேன்.

ஆக எந்த பாவமானாலும் அது தரும் எல்லா நற்பலனையும் ஆரும் அனுபவிச்சுரமுடியாதுங்கறது இயற்கையின் குரூரமான விதி. தர்கம். இப்ப மேட்டருக்கு போயிருவம்.


1.புத்தி :
ஒரு காலத்துல பெண்கல்வி இல்லை. (இப்பயும் சமூக ,பொருளாதார பின்னடைவு /விழிப்புணர்வு இல்லாத காரணத்தால   நொண்டியடிச்சுக்கிட்டுதான் இருக்கு -படிக்கலாம் -ஆனால் அது சம்பந்தப்பட்ட வேலைக்கு போக கூடாது -போனாலும் கண்ணாலத்துக்கப்பாற் விட்டுரனும் ) அதனால ஐந்தாம் பாவத்தோட சுப பலம் எல்லாம் பெண்களை "மக்களை பெற்ற மகராசி"யாக்கிக்கிட்டிருந்தது.

இப்பம் இன்ஃபெர்ட்டிலிட்டி அதிகரிக்க பெண் கல்வியும் ஒரு காரணம்னு நான் சொன்னா பாப் வச்ச ஆன்டிங்க சாணி கரைச்சு நம்ம தலையில  ஊத்திருவாய்ங்க.

நம்ம கான்செப்ட் என்னன்னா கல்வி பெறும் தகுதி ( ஐ மீன் ஜோதிட ரீதியிலான கிரக பலம் -பாவ பலம்)  இருந்து படிச்சா கல்வியும் கிடைக்கும் - குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

போதுமான பலம் இல்லாம  கல்வியை பெறும்போது டெபிட் கார்டா இருக்கவேண்டிய ஜாதகம் கிரெடிட் கார்டா மாறிருது. குழந்தை பாக்கியத்துக்கு ஆப்பு வச்சிருது.

லாஜிக்கலா பார்க்கும் பெண்  கல்வி பரவியதால் கு.க ஒர்க் அவுட் ஆச்சு. குழந்தைகள் மேட்டர்ல செலவாக வேண்டிய கிரக பலம் /பாவ பலம் நிலுவை வைக்கப்பட்டதால் புத்தி விகசித்தது - வாரிசுகள் சிறப்புற்றனர்.

என்ன ஒரு சோகம்னா இன்னமும் கு.கன்னா அதை பெண் தான் செய்துக்கனும்னு ஒரு எழுதப்படாத வியாதி இருக்கு அது வேற விஷயம். ( நிச்சயம் மாற்றப்பட வேண்டிய விஷயம்)

2.பிள்ளைகள்:

ஜாதகியின் புத்தி விகசிச்சா பிள்ளைகள் /பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் பின்னடைவு ஏற்பட்டுருது. இன்னைக்கு "கைச்செலவுக்கு" கிரைம் பண்ற யூத்தோட  தாய்மார் எல்லாம் டிகிரிக்கு மேலத்தான் படிச்சிருக்காய்ங்க.

(மறுபடி சொல்றேன். குறிப்பிட்ட பாவம்/கிரகம் முழு பலத்தோட இருந்தா எல்லா அம்சங்களும் பெட்டராவே இருக்கும். பற்றாக்குறை இருந்தாத்தான் இந்த மாதிரி இழவெடுத்துருது.

3.பூர்வ புண்ணியம்:
பெண்ணடிமை இல்லாத காலம் வேத காலம்னு ஜல்லியடிப்பாய்ங்க. அதெல்லாம் விதி விலக்குகளா இருக்கலாமே தவிர பெண் காலா காலத்துக்கும் , யுகம் யுகமா , அனைத்து கல்பங்களிலும் அடிமையாகவே இருக்கிறாள்.

பெண் வீக்கர் செக்ஸ். யுக யுகமாக அடிமைத்தனம் அவளது செல்களுக்கு பாய்ச்சப்பட்டிருக்கிறது. சதா அபத்திர பாவத்தில் இருப்பவள். அவள் என்ன செய்தாலும் ,எத்தனை செய்தாலும்  கருமம் அவளை அண்டுவதில்லை.

அவளை அந்த கருமத்திற்கு , பாவத்திற்கு துரத்திய ஆணின்  கணக்குக்கே அந்த கருமம் மாற்றலாகிவிடுகிறது.

எனவே பூர்வ புண்ணியத்தை பொருத்த வரையில் பெண் அதிர்ஷ்ட சாலிதான். சில பெண்கள் தமக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று வானமே இடிந்து விழுந்துவிட்டாற்போல கலங்குகின்றனர்.

உண்மை என்னவென்றால் அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடாதிருக்க, துரதிர்ஷ்டம் துரத்தி வராதிருக்க  அவர்களது பூர்வ புண்ணியம் செய்த லீலை சந்தானமின்மை.


4.மன நிம்மதி:

ஒரே கூரையின் கீழ் வசித்த படி - ஒரே கட்டிலை -ஒரே உணவை  பகிர்ந்து  வாழ்ந்தாலும் புருசன் உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டருக்கெல்லாம் டென்ஷனாகிக் கொண்டிருக்க பொஞ்சாதி மட்டும் கூலா இருக்கிறதை பார்த்திருப்பிங்க.

புருசங்காரன் பத்துவருசத்துக்கப்பாறம் நடக்கப்போறதை  நினைச்சு பேதியாகிக்கிட்டிருக்க பொஞ்சாதி பத்து மணி சீரியல்ல காஞ்சனாவோட கர்பத்துக்கு ஆரு காரணம்னு ரோச்சிக்கிட்டிருக்கிறதை பார்த்திருப்பிங்க.

இது எப்படி சாத்தியம்?

பெண்ணா பிறந்ததுமே  அட  தாயின் கருவில் அவளது பால் நிர்ணயிக்க பட்டதுமே அதிர்ஷ்டம் அவளை கை விட்டுருதுங்ணா . ங்கொய்யால லேபர் வார்டுல ஆரம்பிச்சு சுடுகாடு வரைக்கு பாராபட்சம் தானே. அவமரியாதை தானே.

என்னடா பொட்டை குட்டி தான் பொறந்திருக்கு இதுக்கு போயி பட்டை சாக்லெட்டா கேட்கிற தாய்குலம் இருக்காய்ங்க

இதனால அஞ்சாம் பாவத்து தோஷம் - பெருமளவு கழிஞ்சு போயிருதுங்ணா. அடுத்து புத்திக்கும் - நிம்மதிக்கும் உறவு இருக்கு.

புத்தி உள்ளவன் என்னைக்குமே நிம்மதியா இருக்க முடியாது. ( கல்வி அறிவு வேறு -புத்தி வேறு)  மேலும் பெண் வீக்கர் செக்ஸுங்கறதால  தன்னை உடனடியா  பாதிக்ககூடிய சின்ன விஷயங்களை தவிர  பெரிய விஷயங்களை - பத்து இருபது வருஷங்களுக்கு அப்பாறம் தனனி பாதிக்கக்கூடிய விஷயங்களை  எல்லாம் போட்டு குழப்பிக்கிறதில்லை.

புருசன் லஞ்சம் வாங்கினாலும் - கடத்தல் பண்ணாலும் - ஆக்கிரமிப்பு பண்ணாலும் ,கூட்டி கொடுத்தாலும் -காட்டி கொடுத்தாலும் - தாளி பொதுப்பணத்தை  கொள்ளையே  அடிச்சாலும் பெண் கண்டுக்கறதில்லை.
இன்னம் நிறைய கேஸ்ல பெண்ணே என்கரேஜ் பண்றா. ங்கோத்தா பெரிய மயிரு மாதிரி அடக்கி ஆள்றே இல்லை. மவனே உனக்கு ஆப்பு வரனும்னா நீ இந்த தப்பை பண்ணாத்தானேடானு வெயிட் அண்ட் சீ பண்ற தாய்குலம்லாம் கூட இருக்காய்ங்க.

5.பெயர்,புகழ்:
99.99 பெண்களுக்கு பெயர் புகழ் ( சில சமயம் அவப்பேர் கூட)  வயா ஹஸ்பெண்ட் தான் வருது. நேரிடையா பெயர் புகழ் கிடைத்தவுக கூட  அவற்றை எவனோ ஒரு ஆணுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்துர்ராய்ங்க.

6.அதிர்ஷ்டம்:
நம்ம நாட்ல நிறைய பெண்களுக்கு அதிர்ஷ்டம்ங்கறதே மறு நாள் அவிக உசுரோட எந்திரிப்பாய்ங்களா மாட்டாய்ங்களாங்கற மேட்டர்லதான் தேவைப்படுது.

எனக்கு தெரிஞ்சு மண்ணெண்ணெய் ,கேஸ் விலையெல்லாம் ஏத்தினது பெண்களோட உசுரை காப்பத்தத்தான்னு சோனியா அம்மா சொன்னா அதை கேள்வி கேட்காம நம்பற மன நிலையிலதான் பெண்கள் இருக்காய்ங்க.

7.தியானம்:

ஏற்கெனவே சொன்னபடி பெண் வீக்கர் செக்ஸ் என்பதால் தொலை தூர - எதிர்கால விஷயங்களில் அவளுக்கு பெரிதாக ஆர்வமிருப்பதில்லை. அவிக நோக்கம்லாம் "ஏதோ இதே போல காலம் ஓடிப்போச்சுன்னா போதும்" ங்கறது தேன்.

அதனாலதான் கோவில்கள்ள பெண்கள் கூட்டம் அம்முது. ஆன்மீகத்துல மேலோட்டமான -ஸ்வீட் நத்திங்ஸுக்கு ஆதரவே தாய்குலம் தேன்.

தியானங்கறது மரணம். கோவில்ங்கறது கொண்டாட்டம்.ஏற்கெனவே ஜீவனற்ற மரணம் ஒத்த வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டிருக்கிற பெண்கள் மரணத்தை விரும்புவாய்ங்களா? நெவர்..

ஐந்தாம் பாவத்தோட ப்ளூ ப்ரிண்ட் இது. இதை வாஸ்துப்படி எப்படி கட்டிக்கிட்டா நல்லதுனு அடுத்த பதிவுல பார்ப்போம்.