Showing posts with label அம்மன். Show all posts
Showing posts with label அம்மன். Show all posts

Friday, August 21, 2015

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் (26 -50)

அண்ணே வணக்கம்ணே !
ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் தொடருது .

26.திவ்யாயை
கொளந்தை ஆடினா திவ்யமா இருக்கும் – மாமி ! காஃபி திவ்யமா இருக்கு
இது அவா  ஒக்காபிலரி.இதுல திவ்யம் ங்கற வார்த்தைக்கு ” நல்லா இருக்கும்”ங்கற  நீர்த்து போன அருத்தம் தான் வருது. அமானுஷ சக்திகளுக்கு தெலுங்குல திவ்யசக்தின்னு சொல்வாய்ங்க. இங்கே திவ்யங்கற வார்த்தைக்கு “அதிசயம்”ங்கற அருத்தம் வருது.
ஆத்தாவே ஒரு அதிசயம் தானே. செயலும் அவளே , செயல்படுபவளும் அவளே, செய்யப்படும் வினையும் அவளே. லாஜிக் உதைக்குதுன்னாலே அது அதிசயம் தானே.

27.ஈஸ்வர்யை
ஓனர் ,தலைவின்னு சொல்லலாம். இந்த படைப்புக்கு ஓனர் அவள் தானே.. இன்னைக்கு செலாவணியில உள்ள தலைவியரோட லொள்ளை பார்க்கிறோம். அவிக இருப்புக்கும் வரவுக்கும்  சனம் கொடுக்கிற அலப்பறைய பார்க்கிறோம்.
வெந்ததை தின்னு விதி வந்தா சாகப்போற இந்த தலைவிகளுக்கே இம்மாம் பில்டப்புன்னா ஆத்தாளுக்கு எம்மாம் பில்டப் கொடுக்கனும்.
ஆனா ஆத்தா அப்படியில்லை. ஸ்தோத்திர பிரியைன்னு ஒரு நாமா இருந்தாலும் – தன்னை கழுவி கழுவி ஊத்தினாலும்  டென்சன் ஆறதில்லை, அவதூறு வழக்கு பாயறதில்லை, கைது பண்ணி ஜில்லா ஜில்லாவா சுத்தல்ல விடறதில்லை.
க.க ஊத்தறதை கூட நிந்தா ஸ்துதின்னு ஏத்துக்கிட்டு ஃபேவர் பண்ணிர்ரா. ( நம்ம மேட்டர்ல இதான் ஒர்க் அவுட் ஆச்சு. சீன் மாறிப்போச்சு.அன்னைக்கு பிடிச்ச சூடு ..இதோ  8  வருசமாகியும் ஆறவே இல்லை. வண்டி ஓடிக்கிட்டிருக்கு.

28 குண.த்ரய சம்யுக்தாயை :
தமோ..ரஜோ,சத்வ - இதை திரிகுணங்கள்னு சொல்வாய்ங்க. (திரி=3 ) சம்யுக்தா என்றால் அனைத்தையும் உள்ளடக்கி இருப்பவள்னு அருத்தம்.

29.கௌரி மாத்ரே..
மாத்ரே =அம்மா ,கௌரி ? கௌரிங்கற வார்த்தைக்கு”ப்ரைட்”னு அருத்தம் வருதுங்கோ. க்ளோ,க்ளோரிங்கற வார்த்தைக்கும் கௌரிங்கற வார்த்தைக்கு என்னா ஒத்துமை?
ஆனால் கௌரிங்கற வார்த்தையோட வேர் சொல் கிரியா இருக்கும்னு ஒரு ஹஞ்ச்.  இன்னொரு  நாமா கிரி ராஜ ஸ்துதாயைனு வருது. கிரிராஜனோட மகள் அல்லவா அவள். அப்பா பேரை வச்சு இன்னும் சில பேர் எல்லாம் உண்டு. ஹைமாவதி ,கிரிஜா

30.காயத்ரி மாத்ரே
தமிழ் க்யூப் டாட்காம் அடிச்சு பார்த்தா Mother of the Vedas , Goddess Saraswati னு வருது.காயத்ரி மந்திரத்தையும் மென்ஷன் பண்ணியிருக்காய்ங்க. காயத்ரின்னாலே அது ஏதோ அவாளோட பேடன்ட் ரைட் மாதிரி ஒரு ஃபீல் வரும். பிராமணாள்னா காயத்ரி மந்திரம் செபிச்சே ஆகனும். ஆனால் ஒரு முரண் என்னனா காயத்ரியை தந்தவனே ஒரு சத்திரியன், விஸ்வாமித்திர மகரிஷி .

31.கணேச ஜனன்யை
கணேசனுக்கு அம்மானு அருத்தம். கணேசன்ங்கற வார்த்தைக்கு கணங்களின் தலைவன்னு அருத்தம்.  பூத கணங்களின் தலைவன் சிவன் தானே. அது செரி அங்கயும் வாரிசு அரசியல் போல.

32.கிரி ராஜ ஸ்துதாயை
திருவிளையாடல் படம் பார்த்திருப்பிங்க. சாவித்திரியம்மா அப்பா பண்ற யாகத்துக்கு போறேன்னு அடம்பிடிப்பாய்ங்க.சிவாஜி வேணாம்னுவாரு. ஞா வருதா. அந்த அப்பா தான் கிரிராஜன். சாதாரணமா குழந்தை தான் பெத்தவுகளை துதிக்கும். இங்க அவள் என்ன வெறும் குழந்தையா? அத்தனை உயிர்களையும் பிரசவிக்கும் மகோதரி அல்லவா? ( மகா+உதரம் =மகோதரம் :பெரிய வயிறு கொண்டவள் -இதையே நெகட்டிவா பார்த்தா எல்லா உயிர்களையும் விழுங்கும் பெரு வயிறு படைத்தவள்னும் சொல்லலாம்). ஆகவே பெத்த தகப்பனே துதிக்கும் மகள் இவள் (தாய்)

33.ஹ்ரீங்கார பீஜாக்ஷர்யை
மொதல்ல பீஜம்னா என்ன? நேரடி அருத்தம் விதை . மந்திரம்ங்கறது செடின்னா -பீஜம்ங்கறது விதை . மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லைம்பாய்ங்க. மனசு செம்மையா இல்லாதவன் தானே ஆன்மீகம் அது இதுன்னு அல்லாடறம். அதனால மந்திரம் தேவை தான். மந்திரம் என்ன பண்ணும்னா .. மனசை செம்மையாக்கும்.
மனதுக்கு வியாதி வரும் (மேற்கத்திய சித்தாந்தம்) மனமே வியாதி (கிழக்கத்திய சித்தாந்தம்)  மனசுக்கு பின்னாடி இருக்கிற ஐட்டம் நமக்கு அவெய்லபிள் ஆகனும்னா மனசு ஒழியனும்.
மனசுன்னா என்ன?  நினைவுகளின் தொகுப்பு. அது எந்த வடிவத்துல இருக்கு? சொல்.சொல்வடிவத்துல இருக்கு. கொளந்தைங்க மைண்ட்ல வேணம்னா விஷுவலா இருக்கும். ஒரு கட்டத்துல விஷுவல் எல்லாம் ஃபணால் ஆகி வெறும் சொற்கள் தான்.
ஒரு ஆடியோ கேசட்ல என்னென்னமோ இழவெல்லாம் ரிக்கார்ட் ஆகியிருக்கு . அதை ஒழிக்கனும்னா ரெண்டு வழி . ஒன்னு ஏ.சி ரூமுக்குள்ள உட்கார்ந்து -சவுண்ட் ப்ரூஃப் - ரிக்கார்ட் +ப்ளே பட்டனை அழுத்திரனும். அதுக்கு வசதியில்லின்னா ? வேற எதையாவது பதிவு பண்ணிரனும். ஆனால்  அது ஒரே ஒரு எழுத்தாவோ -மிஞ்சிப்போனா ஒரு வரியாவோ இருக்கனும். அதுக்கு பெருசா அருத்தம்-உள்ளருத்தம்லாம் இருக்க கூடாது .அதையே மறுபடி மறுபடி ரிக்கார்ட் பண்ணிரனும். இந்த டெக்னிக் தான் மந்திரம். (ஒரு வரி)
பீஜம்ங்கறது பெரிய சப்ஜெக்ட். சமஸ்கிருதத்துல இருக்க கூடிய அம்பது எழுத்துக்களில் எந்த எழுத்துக்கு  மிந்தி "ம்" சேர்த்தாலும் அது பீஜம்.  உ.ம் GAM - இது கணபதி பீஜம்.
பீஜத்தை உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டுது. வாயும்-ஆசனமும் ஒரே குழாயின் ஆரம்பமும் முடிவுமா இருக்கு. மூலாதாரம் ஆசனத்துக்கு சற்று மேல இருக்குங்கறாய்ங்க. வினை-எதிர்வினை ஆக்சன்-ரியாக்சன்ங்கற விதிப்படி பீஜம் உச்சரிக்கப்படும் போது என்னமோ நடக்குது .மூலாதாரத்துல அதிர்வுகள் ஏற்படுது .இதனால    குண்டலி ஆக்டிவேட் ஆகுது .
இந்த விதிப்படி ஹ்ரீம்ங்கறது ஒரு பீஜம். (சூரியன் -கிட்ணரு-ஆத்தா இப்படி பலரையும் டார்கெட் பண்ற பீஜம் இது) .  நாமி -நாமா விதியை நம்ம முன்னுரைல படிச்சிருப்பிங்க. பெயருக்கே அந்த பவர்னா பீஜத்துக்கு? ஆகவே ஆத்தா இந்த பீஜமாவே இருக்காளாம்.
ஹ்ரீம் மாயா பீஜம். புவனேஸ்வரிக்கு உரிய பீஜம். இதன் பெசாலிட்டி செத்துப்போனதுக்கு உசுரு கொடுக்கிறது.மேலும் இந்த ப்ராசஸ் எப்படி நடந்ததுன்னு ஜெபிச்சவனுக்கே தெரியாதுன்னா சுத்து வட்டாரத்துல உள்ளவிகளுக்கு ? ஊஹூம்.ஒன்னமே புரியாது.கன்ஃபீஸ் ஆயிருவாய்ங்க.
கையில காலணா இல்லாம ஹ்ரீம்கார் பப்ளிகேஷன்ஸுன்னு ஆரம்பிச்சு ஒரே நேரத்துல 4 புஸ்தவம் போட்டு 419+419 செட் ஆஃப் புக்ஸ் வித்தம்னா -அதுவும் அந்த நேரம் மவளோட கண்ணால நேரம்  கடந்த 15 வருசமா இந்த பீஜத்தை ஜெபிச்சதோட மகிமை இதுன்னு புரிஞ்சுக்கோங்க.

34.ஹ்ரீம் மயீ தேவினே
ஹ்ரீம் = பீஜம் , மயீங்கற வார்த்தை  ……மயமா இருக்கிறவளேங்கற பொருளை கொடுக்குது. நாம லேசா பட்டைய போட்டு (விபூதிய சொன்னேன் பாஸ்) வெளிய வந்தாலே என்னப்பா “பக்தி மயமா “இருக்கேம்பாய்ங்க.
இங்கே இந்த மந்திர ஜெபம் பத்தி சின்ன க்ளேரிஃபிகேஷன்.  அந்த காலத்துல கை பம்பு இருக்கும். தண்ணிய மேல இழுக்கனும்னா மொதல்ல கொஞ்சம் தண்ணிய பம்புல விட்டு அடிப்பாய்ங்க. அதை போன்றது தான் நாம மேன்யுவலா ஜெபிக்கிறதும்.
ஆக்சுவலா மந்திர ஜெபம் நமக்குள்ளே ஏற்கெனவே நடந்துக்கிட்டிருக்கும் பாஸு.ஆனா நாமதேன் உணர்ரதில்லை .ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக்கை கேட்டுக்கிட்டிருக்கும் போது காற்றில் வரும் கீதம் செவிக்கு உறைக்குமா என்ன?
ஆக மேன்யுவலா மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிச்ச சில காலத்துல அந்த மந்திர ஜெபம் “தானா” நடக்கனும். காலாகாலத்துக்கும் நான் தான் “வலிந்து” ஜெபிக்கிறேன் என்றால் இத்தனை கால மந்திர ஜெபத்தின் போது  உங்க மனசு அங்க இல்லைனு அருத்தம்.

35.ஹேம பூஷித விக்ரஹாயை
தமிழ்ல இமயமலைங்கறம். ஆக்சுவல் உச்சரிப்பு ஹிமாலயம். ஹிமம் -ஹேமம்ங்கறதெல்லாம் ஒரே பொருளை தரும் சொற்கள். ஹிமம் =பனினு அருத்தம்.  பூஷணம் = அணி கலன். பனியை அணிந்திருப்பவளேனு அருத்தம்.  இங்கன விக்ரகம்னா சிலைனு புரிஞ்சுக்கப்படாது. விக்ரஹம்னா பாடி.
ஆத்தா ரெசிடன்ஸு இமயம்ங்கறாய்ங்கல்ல -இமயத்துல பனி தானே பாடி மேல படரும். அதனால ஹேம பூஷித விக்ரஹாயை.
சென்னையில வசிக்கிறவுக தூசியை அணிகலனா அணியலையா, காட்டன் மில்லுல பஞ்சை அணியலியா? அப்படித்தான் இதுவும்.

36.ஹூம்கார ஐங்கார ஸ்வரூபிண்யை
ஏற்கெனவே சொன்னேன். அம்பது எழுத்தும் ஆத்தாதா. அந்த எழுத்தோடு “ம்” சேர்ந்து உருவாகும் பீஜங்களும் ஆத்தாதா. இதுல ஹும் , ஐம் ஆகியவையும் பீஜங்களே. அந்த பீஜங்களின் வடிவானவளேன்னு அருத்தம்.
ஹும் – இது ரெம்ப பவர் ஃபுல்லுங்ணா.  நாம ஆருக்குனா ஆப்படிச்சு -அவனால எதுவும் பண்ண முடியாத சந்தர்ப்பமா இருந்து நம்மை – நாம செய்த துரோகத்தை நினைச்சுக்கறப்பல்லாம் அந்த சிந்தனையை உதற “ஹும்”னு பெருமூச்சு விடுவான்.
ஒரு கட்டத்துல என்னென்னமோ நடந்து குண்டலி எக்கு தப்பா ரெய்ஸ் ஆயிருச்சுன்னு வைங்க நம்ம  வம்சமே காலி.ஆகவே ஆருக்கும் துரோகம் பண்ணிராதிங்க. ஒரு துரோகம் பல பிறவிகளின் ஜப தபங்களை ஸ்வாஹா பண்ணிரும்.
மக்களுக்கு துரோகம் பண்ற அரசியல் வாதில்லாம் நல்லாதானே இருக்கான்னு எதிர்வாதம் பண்ணாதிங்க. கிட்டக்க போயி பார்த்தாதானே தெரியும்.
ஐம் சரஸ்வதி பீஜம். இன்னைக்கு நமக்கு தெரிஞ்ச  காலணா தெலுங்கை வச்சு இந்த சத  நாமாவளிக்கு பொருள் விளக்கம் தந்துக்கிட்டிருக்கம்னா இதுக்கு  காரணம் ஐங்கார பீஜ ஜெபம் தானு நினைக்கிறேன்.

37.ஜனன்யை
ஜனகன் =தந்தை ,ஜனனி =தாய் , நம் அன்னையரை பெற்ற அன்னைங்கறதால பாட்டின்னு சொல்லலாமுங்கோ. அதே சமயம்  நாம பண்ற அழிச்சாட்டியத்தை எல்லாம் பொருத்துக்கிட்டு இருக்கிறதால நாம அல்லாருக்குமே தாய் தான் அவள். தாயை தவிர வேறு ஆரால இவ்ள பொறுமையா இருக்க முடியும்.

38.ஜகத் காரிண்யை
ஜகம் = உலகம் ; காரிணி : காரணமானவள் சேர்த்து படிக்கும் போது உலகம் உருவாக- நிலைக்க காரணமானவள்.

39.ஜ்யோதிர்மயீ
ஜோதி வடிவானவள். கண்ட கண்ட சோப்பு,களிம்பு ,வாசனாதி திரவியங்களை போட்டு நம்ம பாடியோட நேச்சுரல் ஸ்மெல் காணாம போயிட்ட மாதிரி பளீர் வெளிச்சங்களை பார்த்து இருட்டின் வெளிச்சத்தை பார்க்க முடியாம ஆயிட்டம்.
ஹை டெசிபல்ஸ்ல சவுண்ட்ஸ் கேட்டு கேட்டு நம்ம பாடிக்குள்ள ஏற்படற சத்தங்களை கேட்க முடியாம ஆயிட்டம். கவனத்தை ஆக்னாவில் வைத்து ( நடு நெற்றி) தியானம் செய்யும் போது தேசலா ஒரு ஜோதி தெரியும். இதை வெளிக்கொணர கை பம்புல தண்ணி ஊத்தி அடிச்சாப்ல நெய் தீபம் ஏற்றி அதை தொடர்ந்து பார்த்து தியானிக்கும் முறையும் ஒன்று உண்டு. அந்த ஜோதி அவள் வடிவம் தான். ஆன்மீகத்துல புறவுலகில் நாம என்ன செய்தாலும் அதெல்லாம் நம்ம அக உலகில் உள்ளதை நினைவுப்படுத்தத்தான். உ.ம் மணியோசை ,பூவலங்காரம், நெய் தீபம் ,கற்பூர ஜோதி .
கண்ணதாசன் டப்பிங் தியேட்டருக்கு வந்ததும் ஊதுவத்தில்லாம் அணைச்சுர சொல்லுவாராம். “பொம்பள,பூ தவிர எல்லாமே அலர்ஜி ஆயிருச்சுப்பா”ம்பாராம். அப்பத்தேன் பாட்டு வரும்.
அதை போல மேற்படி ஜோதி சமாசாரம்லாம் ஒர்க் அவுட் ஆகனும்னா இருட்டை பழகிக்கோனம். உள்ளாற இருக்கிற வெளிச்சத்தை பரிச்சயம் பண்ணிக்க பார்க்கோனும்.

40.ஜ்வாலா முகே
ஜ்வாலா =ஜ்வாலை முகே =முகம். லேட்டஸ்டா மொகர புஸ்தவத்துல ஒரு மேட்டரை பார்த்தேன். நெருப்புக்கு நிழல் கிடையாதாம்.  நெருப்போட பெசாலிட்டி என்னன்னா அதை தலை கீழா பிடிச்சாலும் மே நோக்கி தான் எரியுமாம். யோகக்கனல் கூட்டிம்பாய்ங்க.  நெற்றிக்கண்ணில் இருந்து 6 பொறிகள் கிளம்பிருச்சும்பாய்ங்க. இதெல்லாம் உருவகங்கள் குண்டலி மே நோக்கி பாய இதெல்லாம் சாத்தியமே. யோகினியான ஆத்தா ஜ்வாலா முகியா இருக்கிறதுல ஆச்சரியம் என்ன?

41.காளிகாயை
நாம தமிழ்,தெலுங்குல தான் காளினு சொல்றம். சமஸ்கிருத்துல “காலி”  “காலி மா” .தமிழ்ல காலிங்கற வார்த்தைய வசவா உபயோகிக்கிறோம். காலிங்கற வார்த்தையின் வேர் சொல் “கால்” இதற்கு காலம், காலன் என்ற இரண்டு அருத்தம் வருது.
சூல் = கரு , சூலி = கருவுற்றவள், சூலம் =ஆயுதம், சூலி = சூலம் தாங்கியவள். இதை போல காலத்தை காலனை தரித்தவள், தாங்குபவள் காளி.
காலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள் காளி. ராமகிருஷ்ணர் காளி உபாசகர். “சாதகனின் சாதனையின் தீவிரத்தை பொருத்து  அவனது சூழல்,உற்றார் பெற்றோர் ஏன் அரசர்களின் மனம் கூட மாறும்”னு சொல்றாரு.
அடிக்கடி “ஹும்..கலிகாலம்” ” ஹும் கலி  முத்திப்போச்சுங்கறாய்ங்க. ஆனால் காளி நினைச்சா சாதகனை பொருத்தவரை கலியுகத்தை கூட திரேதாயுகமாவோ ,திரிஷாயுகமாவோ மாத்திர்ராள்.

42.காமாக்ஷ்யை
காம =விரும்பத்தக்க , க்ஷ/க்ஷி =கண்கள் உடையவன்/உடையவள்.விசாலாக்ஷி =அகலமான விழிகளை கொண்டவள் ,மீனாக்ஷி = மீனை போன்ற கண்களை கொண்டவள் .
வேணம்னா  தமிழ்ல காமாட்சின்னு தானே சொல்றம். அதனால காம+ஆட்சி = காமத்தை ஆட்சி செய்பவள்/காமத்தை கொண்டு ஆட்சி செய்பவள்னும் அடிச்சு விடலாம்.

43.கன்யகாயை
ஜஸ்ட் 7 பெயர்களுக்கு மிந்தி தான் ஜனன்யைனு படிச்சம். ஜனனி =தாய்.  ஒருத்தி தாயாகிறாள்னா தன் கன்னித்தன்மையை இழந்தாத்தான் தாயாக முடியும். ஆனால் கோடானு கோடி உயிர்களை பெற்ற ஜகத் ஜனனி அதெப்படி கன்னியா இருக்க முடியும்? கன்னியெனில் தாயாக முடியாது – தாய் எனில் கன்னியாக இருக்க முடியாது . என்ன ஒரு அழகான முரண். அரசியல்ல எதிரியை தூற்ற “முரண் பாடுகளின் மொத்த உருவம்”னு சொல்வாய்ங்க.
ஓஷோ சொல்லும் நொடிக்கு நொடி வாழ்தல் சாத்தியமானால் தாயானபின்னும் கன்னியாவே தொடரமுடியும். பல ஆன்டிங்க  இன்னமும் ஸ்டெல்லா மெரீஸ் கணக்கா கொஞ்சி கொஞ்சி பேசறதை பார்க்கிறிங்களா இல்லையா?
ஸ்ரீ தேவி ஆஃப்டர்  ஆல் மனிதப்பிறவி . ஒரு படத்துல என்டிஆருக்கு பேத்தியா நடிச்சு பிறவு அவருக்கே சோடியாவும் நடிச்சாய்ங்க.
நாகேஸ்வர்ராவுக்கு சோடியா நடிச்சதும் அதே ஸ்ரீ தேவி தான். பிறவு நாகார்ஜுனாவுக்கு சோடியா நடிச்சதும் அதே ஸ்ரீ தேவி தான்.
ஒரு மனிதப்பிறவிக்கே இது சாத்தியம்னா  அந்த ஸ்ரீதேவிக்கு பாட்டியை எல்லாம் படைச்ச ஆத்தாவுக்கு எது தான் அசாத்தியம்.  லூஸ்ல உடுங்க.
44.குமார ஜனன்யை
குமாரன்/குமரன் = முருகன் , முருகனை பெற்றவள்

45.காலாயை
கால்= காலம்/எமன் ( ஏற்கெனவே பார்த்திருக்கம்). மனிதனை மகானாக்கிறது காலம், மகானை குற்றவாளி கூண்டுல ஏத்தறது காலம். ராமராஜனை 10 வருசத்துக்கு புக் பண்ண வச்சது காலம். கலைஞரை 13 வருசம் வனவாசம் செய்ய வச்சது காலம். இப்பம் புரியுதா காலம் எவ்ளோ பவர் ஃபுல்னு. அந்த காலமாகவும் இருக்கிறது ஆத்தா தான்.

46.காலாதீதாயை
காலமாகவும் இருக்கிறா. காலனாகவும் இருக்கிறா. இவற்றிற்கு அதீதமானவளாவும் இருக்கா.

47.கர்ம ஃபல ப்ரதாயை
நம் செயல்களுக்கான பலனை தருபவள்.

48.காம கோடி பீடஸ்தாயை
காமம் =விருப்பம்;   கோடி விருப்பங்களை பீடமாய் கொண்டு வீற்றிருப்பவள். நம் ஒவ்வொரு விருப்பத்தின் மீதும் பீடமிட்டு அமர்ந்திருப்பவள் அவளே. விருப்பங்கள் உழைக்க தூண்டுகின்றன. கருமம் (வினை) செய்ய தூண்டுகின்றன.அதற்கான பலனை தருபவளும் அவளே. அதே சமயம்  விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நாம எடுக்கிற “ஸ்ட்ரெய்ன் “நம்  பூர்வ கருமங்களை  ஒழிக்கிறது. விருப்பத்தின் உருவில் நம்மை தூண்டி -பூர்வ கருமங்களை ஒழிக்கவும் அவளே உதவுகிறாள்.(பாசிட்டிவ் அப்ரோச் )

49.லலிதா பரமேஸ்வர்யை
நாம தமிழ்ல கலைகளை  நுண்கலைகள், மென் கலைகள்னு சொல்றமில்லையா அதை போல தெலுங்குல லலித களலுன்னு சொல்வாய்ங்க. லலிதம் ங்கற வார்த்தைக்கு மென்மையான,அழகான இப்படி அர்த்தம் சொல்லலாம்.
பரம =அல்ட்டிமேட்? முழுமையான (பரம திருப்தி -பரமானந்தம்) இகம்-பரம்ங்கற கோணத்துல பார்த்தா அவ்வுலக/இவ்வுலகத்துக்கு வெளியிலான , ஈஸ்வரி = தலைவி
ஆக மென்மையான பரலோக தலைவி?

50.லீலா வினோதின்யை
லீலா = ஒரு நோக்கமும் அற்ற செயல்? வினோதம் =புதுமை /பொழுது போக்கு . இந்த படைப்புக்கோ -படைப்பின் போக்கிற்கோ எதாவது நோக்கம் இருக்குனு நம்பறிங்களா? ஊஹூம். எல்லாமே ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் – போய்க்கிட்டே இருக்கு. பிறவிச்சக்கரத்தை பொருத்தவரை என்னை மாதிரி பார்ட்டிங்க.. எல்லாமே ஒரு பர்ஃபெக்சனை நோக்கி போயிட்டிருக்குன்னு சொல்றம். இந்த பிறவிச்சக்கரத்தின் இலக்கு முக்தின்னு சொல்றம்.
ஆனா  எது எப்பம் வேணம்னா யு டர்ன் எடுத்துக்கலாம்.சொல்லவே முடியாது. ஒரு ஃபேக்டரிய எடுத்துக்கங்க. ஒரு ப்ராடக்ட் ஃபினிஷ் ஆகனும்னா எத்தனையோ ஸ்டேஜை தாண்டவேண்டியிருக்கு. எங்கயோ ஒரு இடத்துல பல்பு வாங்கிட்டா மறுபடி அது ஸ்க்ராபுக்கு போயிருது. அடியை பிடிடா பரதப்பட்டான்னுஆயிருது.
இதெல்லாம் நமக்கு வேணம்னா  வேதனையா இருக்கலாம்,சாதனையா தோனலாம்.ஆனால் ஆத்தாவுக்கு? இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ஃபன். லீலா.வினோதம் தான்.

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் (அசலான கன்டென்ட்)

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல ஸ்ரீஅம்மன் சதா நாமவளி கன்டென்டை கொடுத்துர்ரன். அவசர அடியா ஜெபிக்க ஆரம்பிக்கிறதா இருந்தா சின்ன டிப் .

ஒவ்வொரு நாமத்துக்கு  முன்னும்  ஓம்  சேர்க்கவும் .. " ஓம் " என்னும்  பிரணவத்தை அடுத்து பிரபஞ்ச மாயையிளிருந்து வெளிப்படக் கோருவோர்  " ஹ்ரீம் " பீஜத்தையும் , அச்சத்தில் இருந்து வெளிப்படக் கோருவோர் க்லீம் பீஜத்தையும் -காதலில்,மணவாழ்வில்  ஒற்றுமை , செல்வம் கோருவோர் " ஸ்ரீம்" பீஜத்தையும் சேர்த்து ஜெபிக்கவும் . இறுதியில்  நம அல்லது  ஸ்வா ஹா உசிதம்  போல் சேர்த்து உச்சரிக்கவும் .


அம்பிகாபுர வாசின்யை   நம :
அன்ன பூர்ணேஸ்வர்யை   நம :
அகிலாண்டேஸ்வர்யை  நம :
அம்ருத் தாயை  நம :
ஆர்த்த ஜன  ரக்ஷின்யை  நம :
ஆத்யந்த சிவரூபாயை  நம :
அஷ்ட  ஐஸ்வர்ய ப்ரதாயின்யை  நம :
அபய வரத ஹஸ்தின்யை  நம :
அனாமிகாயை  நம :
அங்காள பரமேஸ்வர்யை  நம :
ஆனந்த மயே  நம :
ஆத்யந்த ரஹிதாயை  நம :
அருணாயை  நம :
பால பீட அதிரோஹின்யை  நம :
பகளா முக்கே  நம :
பில்வ வன ப்ரியாயை  நம :
புவனேஸ்வர்யை  நம :
பிந்து ஸ்வரூபின்யை  நம :
சண்டிகாயை  நம :
சாமுண்டேஸ்வர்யை  நம :
சந்த்ர மண்டல வாசின்யை  நம :
சதுர் சஷ்டி கலாத்மிகாயை  நம :
துர்காயை  நம :
தர்ம ரூபின்யை  நம :
தேவ்யை  நம :
திவ்யாயை  நம :
ஈஸ்வர்யை  நம :
குண த்ரய சம்யுக்தாயை  நம :
கௌரி மாத்ரே  நம :
காயத்ரி மாத்ரே  நம :
கணேச ஜனன்யை  நம :
கிரிராஜ ஸ்துதாயை  நம :
ஹ்ரீங்கார பீஜாக்ஷர்யை  நம :
ஹ்ரீம் மயீ தேவினே  நம :
ஹேம பூக்ஷித விக்ரஹாயை  நம :
ஹீங்கார ஐங்கார ஸ்வரூபின்யை  நம :
ஜனன்யை  நம :
ஜகத் காரிண்யை  நம :
ஜ்யோதிர்மயே  நம :
ஜ்வாலா முகே  நம :
காளிகாயை  நம :
காமாக்ஷ்யை  நம :
கன்யகாயை  நம :
குமார ஜனன்யை  நம :
காலாயை  நம :
காலாதீதாயை  நம :
கர்மஃபல ப்ராதையை  நம :
காம கோடி பீடஸ்தாயை  நம :
லலிதா பரமேஸ்வர்யை  நம :
லீலா விநோதின்யை  நம :
மார்கண்டேய வர ப்ராதையை  நம :
மஹா மாயா ஸ்வரூபின்யை ஸ்வாஹா:
மோஹின்யை  நம :
மீனாக்ஷ்யை  நம :
மஹோதர்யை  நம :
மணி த்வீப   பாலிகாயை  நம :
மஹிசாசுர மர்த்தின்யை  நம :
நித்யாயை  நம :
ஓம்கார ரூபின்யை ஸ்வாஹா:
பாசாங்குச தாரின்யை  நம :
பஞ்ச தசாக்ஷர்யை  நம :
பூர்ணாயை  நம :
பரமந்த்ர சேதின்யை  நம :
பர பல விமர்தின்யை   நம :
பரப்ரம்ஹ ஸ்வரூபின்யை ஸ்வாஹா:
ராஜ ராஜேஸ்வர்யை  நம :
சச்சிதானந்தா ஸ்வரூபின்யை ஸ்வாஹா:
சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை  நம :
சர்வ ஸ்வதந்த்ராயை  நம :
ஸ்ரீ  சக்ர வாசின்யை  நம :
ஸ்வயம் ப்ரகாசாயை    நம :
சுரபூஜிதாயை   நம :
சுந்தர்யை  நம :
சுக தாயின்யை  நம :
சனகாதி முனி ஸ்துதாயை  நம :
சிவானந்த சாகா ராயை  நம :
சிவ மானஸ ஹம்சின்யை  நம :
சகல சௌபாக்ய ப்ரதாயை  நம :
சர்வ ஜன வசங்கர்யை  நம :
ஸ்வ மந்த்ர பல ப்ரதாயை  நம :
சர்வாரிஷ்ட நாஸின்யை  நம :
சர்வ பாப ஹரின்யை  நம :
சர்வ சங்க்ஷோப பரிஹாராயை  நம :
சர்வ  ஸ்தம்பின்யை ஸ்வாஹா
சர்வ துக்க விமோசன்யை   நம :
சர்வ துஷ்ட பயங்கர்யை  நம :
த்ரி விக்ரம பத கிராந்தாயை   நம :
த்ரி கால ஞான ப்ரதாயை  நம :
துரிதா பஹாயை  நம :
தேஜோ ப்ரதாயை  நம :
வைஷ்ணவ்யை  நம :
விமலாயை  நம :
வித்யாயை  நம :
வாராஹி மாத்ரே  நம :
விசாலாக்ஷ்யை   நம :
விஜய  ப்ரதாயை  நம :
விஸ்வ ருபின்யை  நம :
விஜய சாமுண்டேஸ்வர்யை  நம :
யோகின்யை  நம :
யத்ன கார்ய சித்தி   ப்ரதாயை  நம :





ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ( விளக்கம்) : 1

அண்ணே வணக்கம்ணே !
எந்த வித அப்டேட்ஸும் இல்லாம தினசரி 400+ ஹிட்ஸ் கொடுக்கிற ப்ளாக் இது . ஆகவே தான் இந்த  தொடரை அனுபவஜோதிடம் சைட்ல போடாம இங்கே போடறேன்.

ஆக்சுவலா இது மின் நூலா வெளி வரப்போகுது. அதுக்கு மிந்தி 6  பதிவுகளா இதை இங்கே தர்ரன்.

மொதல்ல இதுக்கு நண்பர் திரு.சொக்கலிங்கம் ராம நாதன் தந்திருக்கிற முன்னுரைய பார்த்துரலாம்.

அடுத்த பதிவுல நம்ம முன்னுரை .கடைசி 4 பதிவுகள்ள தலா 25 நாமாக்களுக்கான விளக்கம் வரும்.ஓகேவா.

இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக,  தனயனாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும்.
பிள்ளையானவன் நன்றே செய்கினும், தீதே செய்திடினும் மாறாத தாய் அன்புக்கு; ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய  தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது.

சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு? இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர்.
சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள்.முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்ராணி என்று  பெயர் பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும், தீமையை அழிக்கும் போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும் பெயர் பெறுகிறாள்.

பக்தி  வழிபாட்டு முறையில்  " சதநாமாவளி " ...பெயரை சொல்லி வேண்டி / வழிபடும் முறை முக்கியமானது .நாமாவளியில் வரும் 100 நாமங்களும் சாட்சாத் வழிபடும் தெய்வத்தை  குறிப்பது .

மனிதர்களின் பெயர்களே மட்டுமே ஒருவரை பிரதிநிதித்துவ படுத்துகின்றன .  திருவள்ளுவர் குறித்த செவி வழிக்கதைகள் முதல் அவர் எழுதிய 1330 குறள்கள் வரை அவர் பெயர் ஒன்றே  பிரதி நிதித்துவ படுத்துகிறது .
சிம்பிள் ஆக சொல்லணும்னா ...ரோட்டில் போறோம்  / ஒரே கூட்டம் ..எவனோ .. டேய்  தம்பி ன்னா..!!!  யாரையோ  கூப் பிடுறாங்கன்னு  நாம் பாட்டுக்கு  போய்டுவோம்  / டேய்  சொக்கா ன்னு கூப்பிட்டா ..( நம்ம பேருங்க) யாரடா அது நம்மை  பேரு சொல்லி கூப் பிடுறாங்கன்னு டக்குன்னு   திரும்பி பார்ப்போம் .30 - 40 வருடம் பழக்க பட்ட நம் பெயருக்கே  இந்த பவர் என்றால்  அனாதியா -அதாவது ஆரம்பம்னு ஒன்னே இல்லாத -எப்பவுமே இருக்கிற   " அன்னையின்" நாமங்ககளுக்கு என்ன  பவர்  இருக்கும்ன்னு  எண்ணி பாருங்கள் ..

சில விசயங்களை  அனுபவித்தால் தான் அதன் அருமை தெரியும் . வாழ்வியல் / ஆன்மீக நியதிகளை   அனுபவ/ அறிவியல்  பூர்வமாக சிந்திப்பவர் அண்ணன்  சித்தூர் S .முருகேசன். அவர் வாழ்வில்  " ஆத்தா "   நிகழ்த்திய லீலைகளை  பல கட்டுரைகளாக  " அவன் .அவள்.அது " என்ற  தலைப்பில் தான் வலைப்பூவில்  பதிவிட்டுள்ளார் . இன்றைய கார்ப்பரேட்  கலியுகத்தில்  ஆன்மிகம்  வியாபார பொருள் ஆகி விட்டது . காசு இல்லை  என்றால் கடவுளை கூட பற்றி தெரிந்துகொள்ளமுடியாத  ஒரு கையறு நிலை இன்னைக்கு இருக்கு.

 ஆனால் தான் கண்ட  / அனுபவித்த " ஆத்தாவின் " லீலைகளை  அவள் பாதம் பற்றி அனைவரும்  நன்மை அடைய வேண்டும் என்ற நோக்கில் தனது கட்டுரைகளில் அவர் பதிவிட்டுள்ளார் . அந்த வரிசையில்  தனது பக்தி மார்க்கத்தில் "ஆத்தா " வை  தினமும் அவளது நாமங்களின் மூலம் தொழுவதற்கு அவர் தொகுத்த ஒரு தொகுப்பு " ஸ்ரீஅம்மன் சதநாமாவளி ".   இந்த வழிபாடு அவர் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை தான் " அவன் அவள்  அது"  வரிசை வலைபதிவுகளில் குறிப்பிட்டு உள்ளார் .

எந்த  ஒரு  விசயத்திலும் யதார்த்த / அனுபவ  ரீதியான  அணுகுமுறை கருத்துக்கள் , இவரது எழுத்துக்கள் மீதான ஆர்வத்தை  எனக்கு ஏற்படுத்தின .
" அவன் , அவள் , அது "  இந்த தலைப்பை முதலில் அவர் வலைபதிவில் பார்த்தபோது  எதோ கில்மா  மேட்டர் போல  தோணிச்சு .  அந்த விசயத்துக்கு  நானும் விதி விலக்கல்ல ... நாக்க தொங்க போட்டுகொண்டு படித்தேன்

....என்னுள் உள்ள / உலகத்தின்   " சக்தியை " உணர்ந்தேன் .
சின்ன வயசில் விளையாடுவது கூட  " சாமி" வைச்சு தான் . ஒரு சூட டப்பா பிள்ளையார் . கோவிலில் கூட அப்படி அபிசேகம் பண்ணி இருக்க மாட்டாங்க... அந்த பிள்ளையாருக்கு  அப்படி பண்ணி .... கொஞ்சம்  வாலிப  வயதில்  வீட்டுக்கு  எதிரில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரிக்கு வெள்ளி / செவ்வாயில்  நேரம் கிடைக்கையில்  எடுபிடி வேலை .... மனசுக்கு  கஷ்டம்னா  அருகில் உள்ள முகாம்பிகை கோவிலில் அம்மன் கிட்ட" எல்லாத்தையும் "மனசால்  சொல்லி வேண்டுவது ..   இப்படி தொடரும்  என் ஆன்மீக பயணத்தில்  " அம்மன் சதநாமாவளி"  ஏற்படுத்திய வாழ்வியல் தெளிவுகள்  இத்தொகுப்பு  உருவாக காரணமாக அமைந்தது .

" வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே"  -

என்று  அபிராமி அந்தாதியில் வரும் . எந்த  ஒரு நிகழ்விற்கும்  "அவள்" அருளே காரணம்.

படிக்கிறப்ப  வாத்தியார்களும் சரி / வீட்டிலும்  சரி  வெறுமனே  மனப்பாடம் பண்ணாம  புரிஞ்சு படி ... படி... ன்னு சொல்லுவாங்க .அது இந்த நாமாவளிகளுக்கும் பொருந்தும் .  நாமாவளிகளை இயந்திரத்தனமா சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது.பொருள் தெரிஞ்சு சொல்லுறப்ப  அது பற்றிய சிந்தனை எழும்  / சிந்தனையின் தொடர்ச்சி  அருள் நிலை அடைய செய்யும் .

அந்த  வகையில்  திரு .சித்தூர் முருகேசன்  தான்  தொகுத்த அன்னையின் நாமவளிக்கு  உரிய பொருள் விளக்கங்களை  அனுபவ ரீதியில்  எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் தன் வலைப்பூவில்  அளித்துள்ளார். அந்த வலைபதிவுகளின்  தொகுப்பே  இந்த  மின் நூல்.

பிறப்பு முதல்  / இறைநிலை வரை  அனைத்தையும் ஆட்கொண்டவள்  " சக்தி ". அம்மாவாக , அக்காவாக ,பாட்டியாக ,அக்காவாக ,தங்கையாக ,காதலியாக ,மனைவியாக நம் வாழ்வின்  ஓவ்வொரு பெண்ணின்  அம்சமும் " அவளே ".
சக்தியில்லைன்னா  சிவம்  இல்லைன்னு சொல்லுவாங்க ...எந்த ஒரு  நிலைக்கும்  " அவள் " அருள் அவசியம். அவள் அருளால்  அவள் அருள் வேண்டியே  இந்த மின்னூல் பகிர்வு.

" பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் " ன்னு சொல்லுவாங்க  ...நல்ல விசயங்களை  நாம மட்டும் அனுபவிச்சா போதுமா ...நான் மட்டும்  "ஆத்தாவின் " பிள்ளையில்லை ...நீங்களும் தானே ...அதனால்  தான் இந்த பகிர்தல் .

இந்த நூலை தொகுத்து வழங்க வாய்ப்பு அளித்த அண்ணன் .திரு .முருகேசன் அவர்களுக்கு நன்றி.

" அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே"

--- அம்மாவை  வணங்கி  அவள் அருள் பெறுவோம் .

அன்புடன்
சொக்கலிங்கம் இராமநாதன்

Friday, April 18, 2014

அவளுக்கு ஒரு கடிதம்

தாயே ஒரு தரம் எண்ணிப்பார்!
வேறு யார்தான் உன்னை மன்னிப்பார்
பாரதி முதலாய் பாரதத்திலே பாவலர்
வாழ்வை வதைத்திட்டய்
உயிருடன் அவரை புதைத்திட்டாய்
சுடர்மிகு அறிவு தந்திட்டாய்
இடர் பல வாழ்வில் கலந்திட்டாய்

வறுமையொன்றால் என் உயிரை
தாயே நீயும் குடிக்கின்றாய்.
வறுமை ஒழிக்க களம் புகுந்தால்.
வறுமை மேலெனும் நிலை தந்தாய்
பாட்டால் உன்னை பூசிக்கும்
நிலை தந்தாய் நான் மகிழ்கிறேன்.
உன்னையன்றி திக்காரு...
என் மதியில வந்து உட்காரு.

Tuesday, January 24, 2012

அண்ணே வணக்கம்ணே !

நம்ம சாக்தேய அனுபவங்களை மீண்டும் தொடரப்போறதா சொல்லியிருந்தேன்.( கணக்குக்கு இது 22 ஆவது சாப்டர்). இதுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தேன்.( ஜோதிடம் 360)

ஆத்தா தலைவிரி கோலமா சூலத்தை தூக்கிக்கிட்டு பி.டி உஷா ,ஷைனி ஆபிரகாம் கணக்கா ஓடிவர்ரதை கற்பனை பண்ணா நமக்கும் கொஞ்சம் போல உணர்ச்சி வருது.இல்லேங்கலை.ஆனால் நம்மை பொருத்தவரை அவள் சத்ய ரூபிணி,தர்ம ரூபிணி.

நாம சத்தியத்தை காத்திருந்தா - தருமத்தை பின்பற்றி நடந்தா அவள் பாட்டுக்கு விஜய்கிட்டே ஆட்டோகிராஃப் கேட்க துரத்தற டீன் ஏஜ் பெண் மாதிரி நம்மை ஃபாலோ பண்ணிக்குவாங்கறது நம்ம புரிதல்.

எத்தனையோ தியான முயற்சிகள் - ஜபங்களில் ஏற்படாத உணர்ச்சி ஒரு உதவாக்கரை மசாலா படம் பார்க்கிறச்ச ஏற்பட்டுது. குண்டலி விலைவாசி மாதிரி சர்ருனு ஏறி தலையில குடை ராட்டினம் கணக்கா சுத்துச்சு.

நீங்க தமிழ்ல அம்மன்ங்கற பேர்ல பார்த்திருப்பிங்க. தெலுங்குல அம்மோரு. க்ளைமாக்ஸ் பாட்டு ஃப்ளோர் டிக்கெட் தாய்குலத்தை டார்கெட் பண்ணி போட்ட பாட்டுதேன். ஆனால் அதுல ஒரே வரி.. நம்மை பாடாய் படுத்திருச்சு.

ஈரோயினை வில்லன் ஈரோவை சீரோவாக்கி ரேப்ப ட்ரை பண்றாரு.அப்பம் ஈரோயின் ஈரோவையும் தன் கற்பையும் காப்பாத்திக்க ஆத்தாவை கூப்பிடறாள்.அதேன் சிச்சுவேஷன்.

அதுல ஃப்ளோர் டிக்கெட் சனத்தை உசுப்பேத்தறாப்ல எத்தனையோ வரிகள். ஆனால் நம்மை பரவச நிலைக்கு கொண்டு போன வரிகள் " சண்டிவை ,துர்கவை"னுட்டு ஆரம்பமாகுது அந்த சரணத்தோட கடைசி வரியா " "சத்யமேவஜெயதேனனி சாட்டிம்பக்க ரா"ன்னுட்டு வரும்.

அந்த சரணம் என்னவோ ரொட்டீனாத்தான் ஆரம்பமாகுது. அந்த பில்டப் எல்லாம் நாம அறிஞ்சதுதேன். நம்ம பாடியோ -மைண்டோ பெருசா ரெஸ்பாண்ட் ஆகல்லை. ஆனால் அந்த கடைசி வரி இருக்கே.அங்கனதான் மண்டைக்குள்ள ஒரு "பிக் பாங்கே" நடந்தது.

அந்த வரிக்கு அருத்தம் " சத்தியம் தான் வெல்லும்னு இந்த சகத்துக்கு அறிவிக்க வா"


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.

என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.

ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.

கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.

1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி "ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது. கொய்யால.. நான் நாறிட்டா எனக்கு பின்னாடி எவனாச்சும் ஆத்தா - சீத்தான்னா சனம் நக்கலடிச்சே அவனை நோகடிச்சுருவாய்ங்க. நான் நாற கூடாதுங்கற வீம்பு வந்துருச்சு.

ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமயத்துல ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் -சமூகத்தின் பாராமுகமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு. அதற்கு முன்பு இருந்த க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.

என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன். அவன் எப்படியா கொத்த லக்காடின்னு கடந்த பதிவுல எழுதியிருந்தேன்.

ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

ஆரம்பத்துல அவனுக்கு சம்பளம் வர்ரச்ச நமக்கு சம்பளம் கொடுத்துருவான்னு ஒரு பிரமை. மாசத்துல மொதல் வாரம் வருவான். என்னமோ ஸ்கூப் கிடைச்சுட்டாப்ல அவசர அவசரமா புறப்படுவான். நாம பின் பளுவு.

நேர எங்க போவாங்கறிங்க? பார் அண்ட் ரெஸ்டாரண்ட் தேன். போனதும் அவனுக்கு ஆர்டர் பண்ணிக்குவான். நாம வாய்ல விரல் போட்டு பார்த்துக்கிட்டிருப்பன். குடிச்சு முடிச்சுட்டு மிச்சம் மீதி சேவரீஸை பார்சல் பண்ணி கொண்டுவரச்சொல்லி கோவில் பிரசாதம் கணக்கா நம்ம கிட்டே கொடுத்து "ஸவாமி ! இதை உங்க டாட்டருக்கு கொடுங்க"ம்பான்.

நாம அறிமுகம் செய்த யூனியன் சேர்மன் கிட்டே ரூ.5,000 க்கு இன்டென்ட் போட்டான். அவரு ரூ.2000 கொடுத்துட்டு நமக்கு இன்ஃபார்ம் பண்ணாரு. நம்மாளு எம்மாம் பெரிய லக்காடின்னு சுருங்க சொல்லி.. போனது போவட்டும். இனி கொடுக்காதேன்னேன்.

இப்படி ஒன்னு ரெண்டில்லை. ஆயிரம்.

சில மாசங்கள்ள பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து மேற்படி நிருபன். என‌க்கும் அவனுக்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து அதே ஃபேக்ஸ் நெம்பருக்கு போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு "முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ நிருபன் நான்+ பிரபா மேனேஜர்+ விளம்பர மேனேஜர் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.


அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் அந்த நிருபனுக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

மேற்படி நிருபன் என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.

"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன். ஒவ்வொரு எலக்சன்லயும் அந்தாளுக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். .சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். மேனேஜர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார்..

நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம். சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாஷ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 60 வயசு.. அப்போ 52 ஆ) .

தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு "ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா" என்று கேட்டார். உடனே முன்னேறி.."வந்திருக்கம் சார்!" என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது நிக் நேமை குறிப்பிட்டு "அவன் தானே" என்றார்.

அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் நிக் நேம் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.

" கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் ஸ்டேஷனுக்கு வர்ரது அவசியம்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்"

இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து."அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?""ஹெட் கான்ஸ்டபிள் சார்"உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார்.

" உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது" அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் நிருபன் திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அவன் திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது

இப்பம் இங்கே அழுத்தி மேற்படி பாடல் வரிகளை கேட்டுப்பாருங்க. ரெண்டாவது சரணம் துர்கவை ,சண்டிவைன்னு ஆரம்பமாகும்போது அலார்ட் ஆயிக்கங்க. கடைசி வரியில அந்த பரவச நிலை உங்களுக்கும் ஏற்பட்டுதுன்னா உங்களுக்கும் சத்தியம் குறித்த அனுபவம் இருக்குன்னு அருத்தம்.

அவன்-அவள்-அது : 22


அண்ணே வணக்கம்ணே !

நம்ம சாக்தேய அனுபவங்களை மீண்டும் தொடரப்போறதா சொல்லியிருந்தேன்.( கணக்குக்கு இது 22 ஆவது சாப்டர்). இதுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தேன்.( ஜோதிடம் 360)

ஆத்தா தலைவிரி கோலமா சூலத்தை தூக்கிக்கிட்டு பி.டி உஷா ,ஷைனி ஆபிரகாம் கணக்கா ஓடிவர்ரதை கற்பனை பண்ணா நமக்கும் கொஞ்சம் போல உணர்ச்சி வருது.இல்லேங்கலை.ஆனால் நம்மை பொருத்தவரை அவள் சத்ய ரூபிணி,தர்ம ரூபிணி.

நாம சத்தியத்தை காத்திருந்தா - தருமத்தை பின்பற்றி நடந்தா அவள் பாட்டுக்கு விஜய்கிட்டே ஆட்டோகிராஃப் கேட்க துரத்தற டீன் ஏஜ் பெண் மாதிரி நம்மை ஃபாலோ பண்ணிக்குவாங்கறது நம்ம புரிதல்.

எத்தனையோ தியான முயற்சிகள் - ஜபங்களில் ஏற்படாத உணர்ச்சி ஒரு உதவாக்கரை மசாலா படம் பார்க்கிறச்ச ஏற்பட்டுது. குண்டலி விலைவாசி மாதிரி சர்ருனு ஏறி தலையில குடை ராட்டினம் கணக்கா சுத்துச்சு.

நீங்க தமிழ்ல அம்மன்ங்கற பேர்ல பார்த்திருப்பிங்க. தெலுங்குல அம்மோரு. க்ளைமாக்ஸ் பாட்டு ஃப்ளோர் டிக்கெட் தாய்குலத்தை டார்கெட் பண்ணி போட்ட பாட்டுதேன். ஆனால் அதுல ஒரே வரி.. நம்மை பாடாய் படுத்திருச்சு.

ஈரோயினை வில்லன் ஈரோவை சீரோவாக்கி ரேப்ப ட்ரை பண்றாரு.அப்பம் ஈரோயின் ஈரோவையும் தன் கற்பையும் காப்பாத்திக்க ஆத்தாவை கூப்பிடறாள்.அதேன் சிச்சுவேஷன்.

அதுல ஃப்ளோர் டிக்கெட் சனத்தை உசுப்பேத்தறாப்ல எத்தனையோ வரிகள். ஆனால் நம்மை பரவச நிலைக்கு கொண்டு போன வரிகள் " சண்டிவை ,துர்கவை"னுட்டு ஆரம்பமாகுது அந்த சரணத்தோட கடைசி வரியா " "சத்யமேவஜெயதேனனி சாட்டிம்பக்க ரா"ன்னுட்டு வரும்.

அந்த சரணம் என்னவோ ரொட்டீனாத்தான் ஆரம்பமாகுது. அந்த பில்டப் எல்லாம் நாம அறிஞ்சதுதேன். நம்ம பாடியோ -மைண்டோ பெருசா ரெஸ்பாண்ட் ஆகல்லை. ஆனால் அந்த கடைசி வரி இருக்கே.அங்கனதான் மண்டைக்குள்ள ஒரு "பிக் பாங்கே" நடந்தது.

அந்த வரிக்கு அருத்தம் " சத்தியம் தான் வெல்லும்னு இந்த சகத்துக்கு அறிவிக்க வா"


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.

என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.

ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.

கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.

1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி "ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது. கொய்யால.. நான் நாறிட்டா எனக்கு பின்னாடி எவனாச்சும் ஆத்தா - சீத்தான்னா சனம் நக்கலடிச்சே அவனை நோகடிச்சுருவாய்ங்க. நான் நாற கூடாதுங்கற வீம்பு வந்துருச்சு.

ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமயத்துல ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் -சமூகத்தின் பாராமுகமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு. அதற்கு முன்பு இருந்த க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.

என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன். அவன் எப்படியா கொத்த லக்காடின்னு கடந்த பதிவுல எழுதியிருந்தேன்.

ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

ஆரம்பத்துல அவனுக்கு சம்பளம் வர்ரச்ச நமக்கு சம்பளம் கொடுத்துருவான்னு ஒரு பிரமை. மாசத்துல மொதல் வாரம் வருவான். என்னமோ ஸ்கூப் கிடைச்சுட்டாப்ல அவசர அவசரமா புறப்படுவான். நாம பின் பளுவு.

நேர எங்க போவாங்கறிங்க? பார் அண்ட் ரெஸ்டாரண்ட் தேன். போனதும் அவனுக்கு ஆர்டர் பண்ணிக்குவான். நாம வாய்ல விரல் போட்டு பார்த்துக்கிட்டிருப்பன். குடிச்சு முடிச்சுட்டு மிச்சம் மீதி சேவரீஸை பார்சல் பண்ணி கொண்டுவரச்சொல்லி கோவில் பிரசாதம் கணக்கா நம்ம கிட்டே கொடுத்து "ஸவாமி ! இதை உங்க டாட்டருக்கு கொடுங்க"ம்பான்.

நாம அறிமுகம் செய்த யூனியன் சேர்மன் கிட்டே ரூ.5,000 க்கு இன்டென்ட் போட்டான். அவரு ரூ.2000 கொடுத்துட்டு நமக்கு இன்ஃபார்ம் பண்ணாரு. நம்மாளு எம்மாம் பெரிய லக்காடின்னு சுருங்க சொல்லி.. போனது போவட்டும். இனி கொடுக்காதேன்னேன்.

இப்படி ஒன்னு ரெண்டில்லை. ஆயிரம்.

சில மாசங்கள்ள பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து மேற்படி நிருபன். என‌க்கும் அவனுக்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து அதே ஃபேக்ஸ் நெம்பருக்கு போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு "முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ நிருபன் நான்+ பிரபா மேனேஜர்+ விளம்பர மேனேஜர் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.


அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் அந்த நிருபனுக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

மேற்படி நிருபன் என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.

"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன். ஒவ்வொரு எலக்சன்லயும் அந்தாளுக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். .சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். மேனேஜர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார்..

நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம். சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாஷ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 60 வயசு.. அப்போ 52 ஆ) .

தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு "ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா" என்று கேட்டார். உடனே முன்னேறி.."வந்திருக்கம் சார்!" என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது நிக் நேமை குறிப்பிட்டு "அவன் தானே" என்றார்.

அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் நிக் நேம் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.

" கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் ஸ்டேஷனுக்கு வர்ரது அவசியம்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்"

இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து."அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?""ஹெட் கான்ஸ்டபிள் சார்"உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார்.

" உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது" அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் நிருபன் திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அவன் திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது

இப்பம் இங்கே அழுத்தி மேற்படி பாடல் வரிகளை கேட்டுப்பாருங்க. ரெண்டாவது சரணம் துர்கவை ,சண்டிவைன்னு ஆரம்பமாகும்போது அலார்ட் ஆயிக்கங்க. கடைசி வரியில அந்த பரவச நிலை உங்களுக்கும் ஏற்பட்டுதுன்னா உங்களுக்கும் சத்தியம் குறித்த அனுபவம் இருக்குன்னு அருத்தம்.

Monday, January 23, 2012

அம்மனின் வாகனம் ஆடு


அண்ணே வணக்கம்ணே !

பக்த சனங்க சைக்காலஜி என்னன்னா இவியளுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் சாமிய கண்ணில்லையா, கையில்லயா காலில்லியான்னு ஏகத்துக்கும் கிராஸ் பண்ணுவாய்ங்க.ஆனால் இவிகளுக்கு நல்லது நடக்கும் போது டீல்ல விட்டுருவாய்ங்க.

அது என்னமோ நாம தேன் விசித்திரமான கேரக்டராச்சே. பிரச்சினைன்னு வரும்போது "மட்டும்" ஜேஜிக்கு சோப்பு போடறது நமக்கு பிடிக்காது. சனங்களையும் இப்படித்தேன் டீல் பண்றோம். சோத்துக்கில்லாத நாள்ளயே ஆறு மாசத்துக்கு ஒருக்கா வசதி வந்தாலும் மொதல்ல ஃபுல் டாக் டைம் போட்டுக்கிட்டு "ஒன்னுமில்லை பாஸ்.. ச்சொம்மாதேன்.. டச்ல இருக்கனுமில்லையா"ன்னு பேசற கேஸு நாம.ஜேஜிகிட்டயா வேற மாதிரி நடப்போம்.

நம்ம அம்பறாத்துணியில கச்சாமுச்சான்னு அம்புகள் இருக்கு.பிரச்சினைன்னு வரும்போது அல்லாத்தையும் ஒன்னு பின்னாடி ஒன்னு விட்டுட்டு ..அம்புகள் தீர்ந்த பின்னாடி அம்பறாத்துணியை வீசி ,வில்லை எடுத்து வாத்யார் கணக்கா சுழற்றி அப்பயும் வேலைக்காகலின்னாதான் ஆத்தாளை கூப்டுவம். என்னதான் கேடு கெட்ட மன்ச ஜன்மம்னாலும் பெரியார் ,என்.டி.ஆர் ஊட்டிவிட்ட செல்ஃப் ரெஸ்பெக்ட்னு ஒன்னு இருக்கில்லை.

அப்பம்..ஆத்தாளும்.. சே பாவம் என்னைக்கும் கூப்டாத புள்ளை கூப்டுது. நெஜமாலுமே கிரிட்டிக்கல் போலன்னு பட்டுன்னு புலிமேலயோ ,சிங்கத்து மேலயோ ஏறி ஆஜராயிருவா. இந்த தாட்டி ஆட்டுமேல ஏறி வந்திருக்கா.

அஸ்கு புஸ்கு ஆத்தாளுக்கு ஆட்டுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா பெத்த அழகான புள்ளை முருகன். முருகனுக்கு ஆரம்பத்துல வாகனம் ஆடுதேன். மயில் எல்லாம் அப்பாறம் பேங்க்ல லோன் போட்டு வாங்கினது.

நம்ம வீட்ல ரெண்டு வண்டி ,ஒரு பழைய சைக்கிள் இருக்கு. ஜா.ரா @ சுந்து சித்தூர் பஸ் ஸ்டாண்ட்லருந்து ஃபோன் போடறாரு.

"அண்ணே.. முருகேசண்ணே .. எப்படி சித்தூர் வந்தேன்னே தெரியலை. ஏதோ ஒரு சக்தி சித்தூர் பஸ் ஸ்டாண்ட் வரை தள்ளிக்கிட்டு வந்துருச்சு.. உங்க வீட்டுக்கு வழி தெரியல்லை. பட படன்னு வருது.. கண்ணை இருட்டுது ..விளுந்துருவன் போல இருக்கு.. சீக்கிரம் வாங்கண்ணே"

இப்படி ஒரு ஃபோன் வந்ததும் .. நமக்குள்ள இருக்கிற முகமது (சல்) சீறி கிளம்பறாரு. ரெண்டு வண்டியையும் கிளப்ப பார்க்கிறோம். குளிருக்கு ஜா.ரா மூளை மாதிரி விறைச்சுக்கிடக்கு. அப்பம் என்ன பண்ணுவோம்.

படக்குன்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு கிளம்பிருவம். அப்படித்தேன் .. நம்ம சுந்து பண்ண அலப்பறையையும் - அதுக்கு நாம கொடுத்துக்கிட்டிருந்த கவுண்டர்களையும் பார்த்து கடுப்பான ஆத்தா ஷெட்ல மூலையில.. துணி போர்த்தி வச்சிருந்த முருகனோட வாகனமான ஆடு மேல ஏறி வந்துட்டா..
இப்பம் ஒத்துக்கிடறிங்களா? ஆத்தாவோட வாகனம் ஆடுன்னு.

அவன் அவள் அதுங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டிருந்தம். இப்பம் ஜோதிடம் 360 ஸ்க்ரிப்டை எத்தீனி தபா ட்ரிம் பண்ணி எத்தீனி தபா எடிட் பண்ணாலும் கண்ணைதான் கட்டுதே தவிர அது ஜா.ரா மாதிரியே கிடக்கு.

நம்ம முயற்சியெல்லாம் ஓவர். இனி ஆத்தா கண் பார்த்தாதான் வேலைக்காகும்னு தோனிருச்சு.அதனாலதேன் இந்த பதிவு.

அவன் அவள் அது தொடரோட கடந்த அத்யாயத்தை படிக்காதவுக இங்கன அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டுங்க. அப்பத்தேன் லிங்க் வரும்.

மேற்படி நிருபர் குல திலகத்தோட பெருமையையெல்லாம் படிச்சிங்கல்ல. இந்த கேரக்டரோட நமக்கு முட்டிக்கிச்சி.அப்பம் ஆத்தா எப்படி நம்மை சேஃப் பண்ணாள்னுட்டு அடுத்த பதிவுல சொல்றேன்.

ஆத்தா ஆடு மேல வந்தாள் சரி ..வந்து என்ன பண்ணாள்னு கேட்கிறவுகளுக்கு சுன்டரேசங்கற பேர்ல வந்து ஜா.ரா பண்ண அழிச்சாட்டியம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

மணி அண்ணனோட முத்துச்சிதறல்கள் வலைப்பூவுல இருந்து அண்ணன் மேஷ லக்னத்தை பத்தி மாங்கு மாங்குன்னு எளுதினதை இந்த ஜந்து எளுத்துக்கு எளுத்து காப்பி பண்ணி நம்ம சைட்ல பேஸ்ட் பண்ணிருச்சு. வசம்மா மாட்டி வாங்கி கட்டிக்கிட்டு காணாம போயிருச்சு. இதான் மேட்டர்.

இந்த சந்தர்ப்பம் வரும்னு நமக்கு எப்பமோ தெரியும். இருந்தாலும் இந்த சுந்தரேசன் ஜா.ராவா இல்லாம இருந்தா ஒரு புதிய திறமை வெளிச்சத்துக்கு வர்ரதை தடுத்த பாவம் வந்துருமேன்னு நூல் விட்டுட்டம்.

நம்ம போதைக்கு ( நியாய உணர்வு) மணி அண்ணன் ஊறுகாய் ஆயிட்டாரு. அதனால மணி அண்ணன் கிட்டே இந்த பதிவு மூலமா மன்னிப்பு கேட்டுக்கறோம்

Saturday, September 17, 2011

அம்மனுக்கும் வேசிக்கும் ஒற்றுமை



அம்மனுக்கும் ( நம்ம ஒக்காபிலரில ஆத்தா) வேசிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னன்னு சொல்றவுகளுக்கு என்ன கொடுக்கலாம்னு நீங்களே சொல்லுங்க. (ஆத்தா பல்பு கொடுத்துருவான்னு ஆருனா சொன்னா நம்பாதிங்க.

அதுசரி அனுபவஜோதிடத்துக்கும் வேசிக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக .சொல்றேன்.அதுக்கு இன்றைய ஆடியோ பதிவை கேட்டே ஆகனும். வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

Sunday, August 21, 2011

அவன் அவள் அது :19


கடந்த பதிவில் ஒரு நிருபனை பற்றி சொல்லியிருந்தேன்.அவன் எந்த அளவுக்கு சாலாக்கான பேர்வழி, பவர் ஃபுல் பர்சன்னு ரெண்டு உதாரணங்கள் மூலமா சொன்னாத்தான் அவனோட மோதினது ஏறக்குறைய தற்கொலை முயற்சி மாதிரிங்கறது உங்களுக்கு புரியும்.

உதாரணம்:1

நம்ம ஊர்ல நம்ம சாதிக்குன்னு ஒரு சங்கம் உண்டு.( எல்லா ஊர்லயும் இதே செனேரியோல தான் சாதி சங்கங்கள் இருக்கும்னு சம்சயம்) சங்கம் பத்தி சொல்ல ஆரம்பிச்சா அகில உலக முதலியார் சங்கம் ஃபத்வா வெளியிடுமோ என்னவோ? ஆமாங்க ஏ.சி அண்ணன் எப்படி இருக்காரு. சத்தத்தையே காணோமே.
அந்த சங்கத்துல ஒரு ஃபுல்டைமர். ஃபைனான்சியலா ஷெட். பஜார்ல ஒரு லட்சம் அட்வான்ஸ், அஞ்சாயிரம் ரூவா வாடகை பெறுமானமுள்ள கடையை பிடிச்சுக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தாரு. அதை வேற ஒரு பார்ட்டி வாங்கிருச்சு. ( அந்த கடையோட இன்னம் நாலு க்டை சேர்த்து)

சங்கத்து ஃபுல்டைமர் உனக்கும் பெப்பே உங்க தாத்தனுக்கும் பெப்பேன்னு கோர்ட்டை வச்சுக்கிட்டு ஃபிலிம் காட்டிக்கினு இருந்தாரு. அப்பம் கேஸு நம்ம நிருபர் திலகம் டேபிளுக்கு போச்சு.

சங்கம் ஒன்னும் அந்த அளவுக்கு டம்மியில்லை. வெள்ளையும் சள்ளையுமா ஸ்டேஷன்ல போய் உட்கார்ந்து பேசற ரேஞ்சுதேன்.

நம்ம நிருபர் திலகம் என்ன பண்ணாரு தெரீமா.ஒரு மழை நாளா பார்த்து டி.எஸ்.பி ரேஞ்சுல அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பாடு பண்ணி டிப்பரை அனுப்பி ஃபுல்டைமரோட கடைய ச்சொம்மா எத்திவிட்டுட்டாரு.

சங்கம், சாதி சனம் தலைகீழ நின்னு என்னென்னமோ பண்ணாலும் நம்ம நிருபர் திலகம் தனி ஒரு ஆளா நின்னு மேனேஜ் பண்ணிட்டாரு.

உதாரணம் 2:

நிருபர் லேட்டஸ்டா வேலைக்கு சேர்ந்த ஆந்திரபிரபாவுலயும் விளம்பர பணத்தை இஷ்டாத்துக்கு வேட்டு விட்டுட்டாரு. பெரிய்ய அமவுண்டு.ஹைதராபாத்லருந்து ஏடிவிடி மேனேஜரும் -திருப்பதிலருந்து ஏடிவிடி ரிஜினல் மேனேஜரும் சித்தூர் வந்திருக்காய்ங்க.

நிருபருக்கு ஃபோன் பண்ணா மதியம் வரை இங்க இருக்கன் அங்க இருக்கன் ஃபிலிம் காட்டியிருக்கான். கடேசியில வீட்டுக்கு வந்துட்டன் வாங்கன்னுருக்கான்.

ரெண்டு மேனேஜரும் போயிருக்காய்ங்க. ஏதோ டைம் கொடுத்து வார்ன் பண்ணாப்ல இருக்கு. அவ்ளதேன். நம்மாளு நேர போயி என் பொஞ்சாதி கைய பிடிச்சு இழுத்துட்டாய்ங்கன்னு டி.எஸ்.பி கிட்டே கம்பெயிண்ட் பண்ணிட்டான். (2003) இந்த கேஸு இன்னிக்குவரை நடந்துக்கிட்டுதான் இருக்கு. நிருபர் திலகம் மட்டும் தன் பாவம் பழுத்து (புழுத்து) தலைமறைவா இருக்காரு. இத்தனைக்கு பிறகும் அதே பத்திரிக்கையில ஸ்டாஃபரா தொடரும்போதுதேன் நாம ஆருக்கு ஓட்டுப்போடனும் கமாண்ட் பண்ணான்.

நாம வெளிய வந்து ஆந்திரபிரபாவுக்கு அன்றைய நியூஸ் ஃபேக்ஸ் செய்து - நடந்த விஷயத்தை சுருக்கமா சொல்லி - என்னை ஆந்திரபிரபாவுக்கு கொண்டு வந்தது அந்தாளு -அவன் கெட் அவுட்டுன்னிட்டான் - அதனால நான் நிருபனா இல்லையான்னு டிசைட் பண்ணுங்கன்னுட்டு இன்னொரு ஃபேக்ஸும் கொடுத்தேன்.

அதே ஃபேக்ஸ் நெம்பர்ல மேனேஜர் லைனுக்கு வந்து " கொய்யால நீ தான் ரிப்போர்ட்டர். அவன் ரிப்போர்ட்டரா இல்லையான்னு நான் சித்தூர் வந்து டிசைட் பண்றேன்னுட்டாரு.

அப்போ ஆந்திரபிரபா நிதி நிலை ரெம்ப மோசம். (எக்ஸ்பிரஸ் க்ரூப்புலருந்து வெளிய வந்துருச்சு) மேனேஜர் சித்தூர் வந்தாரு. நம்ம ப்ளஸ் ( எழுத்துத்திறமை / கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்) மைனஸ்
( விளம்பர சேகரிப்பு ) எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு.. ...........

கொய்யால இனி இந்த ஆஃபீஸ் -பவர் -ஃபோன் எந்த மசுரும் தேவையில்லை. இதுக்கெல்லாம் ஆவற செலவை உனக்கு சம்பளமா தரேன்னுட்டு ஆஃபீஸ் ஃபர்னிச்சர்ஸ் - கம்ப்யூட்டர் எல்லாத்தையும் லாரி சர்வீஸ்ல திருப்பதிக்கு புக் பண்ணிட்டுத்தான் போனாரு.

நம்ம நிருபர்திலகம் என்ன பண்ணாரு தெரீமா? ஆஃபீஸ்ல தன்னோட(?) டேபிள் ட்ராயர்ல டைமண்ட்ஸ், கரன்சி , ஃபாரின் செல்ஃபோன்லாம் வச்சிருந்ததாவும் அதையெல்லாம் மேனேஜர் + ஏடிவிடி மேனேஜர்+ சித்தூர் முருகேசன் என்ற மூவர் ஆட்டைய பொட்டுட்டதாவும் சித்தூர் கிரைம் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் ஃபைல் செய்தாரு..

சி.ஐ .அனுப்பினதா ஒரு ஏட்டு நம்ம வீட்டுக்கு வந்து சி.ஐ.கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னதா இஷ்டத்துக்கு அலப்பறை பண்ணாரு.

இந்த சிச்சுவேஷன்ல ஆத்தா நமக்கு எப்படி துணை நின்னாங்கறதை அடுத்த பதிவுல சொல்றேன். -















Saturday, August 20, 2011

அவன் அவள் அது : 18


அண்ணே வணக்கம்ணே !

இது ஏதோ என் சுயசரிதை மாதிரி போறதை தவிர்க்க முடியாது. ஏன்னா 23/12/2000 லருந்து ஆத்தாவோட இன்ஃப்ளுயன்ஸ் இல்லாத நாளே நம்ம லைஃப்ல கிடையாது. என்னதான் குரு உச்சம் ,யோக ஜாதகம்னு பீத்திக்கிட்டாலும் ஆத்தாவை அடுத்த பிற்பாடும் லேசா நிமிர்ந்து நிக்கவே 7 வருசம் பிடிச்சது. நம்ம ஆட்டம்லாம் 1967 முதல் 87 க்கே கதம்.

அதுக்கப்பாறம் நம்ம வாழ்க்கையில ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தையுமே இழந்ததைத்தான் பார்க்கமுடியும். இவ்ள எதுக்கு இன்னைக்கும் எதையாவது கடாசினாத்தான் வேறு எதாவது கைக்கு வருது. ஆனால் வருது. இதுவும் ஆத்தா போடற கிரேஸ் மார்க்காலதான் சாத்தியம்னு உறைக்குது.

அதனால ஆத்தாவை பத்தி சொல்ல ஆரம்பிச்சா என்னைப்பத்தியும் சொல்லியாகனும். என்னைப்பத்தி சொல்ல ஆரம்பிச்சா ஆத்தாவை பத்தி சொல்ல ஆரம்பிக்கனும். ( ஆரோ ரெண்டும் ஒன்னுதேன் சீக்கிரம் ஆரம்பிங்கறது கேட்குது)

ஏதோ ஒரு சாப்டர்ல பொஞ்சாதி ஊருக்கு பூட்ட கதைய சொன்னாப்ல ஞா. அங்கருந்து டூ இன் ஒன்னா இருக்கக்கூடிய ஒரு ரெசிடென்ஸை பிடிச்சம். ஐ மீன் பேச்சிலராவும் வாழமுடியும். ஒரு வேளை பொஞ்சாதி ஊர்லருந்து வந்துட்டா அப்படியே ஃபேமிலி லைஃபும் கன்டின்யூ பண்ணமுடியும்.

கடந்த பதிவுல சொன்னாப்ல ஒரு பிரபல தினசரியில அரைபக்க அளவுல செய்தி வந்த பிறவு நம்ம ரெப்புடேஷன் அதிகமாச்சு. அவனவன் பத்திரிக்கை ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி விலாசம் தெரிஞ்சுக்கிட்டு வர ஆரம்பிச்சான்.

அஃபிஷியல்ஸ், போலீஸ் பர்சனல் இப்படி வர்ஜியா வர்ஜியமில்லாம வந்து இன்டராக்ட் ஆக ஆரம்பிச்சாய்ங்க. இதுல நிருபர்களுக்கும் விதிவிலக்கு இல்லை. அப்படி வந்து கிராஸ் ஆன ஒரு நிருபரை பத்தி சொல்லியே ஆகனும்.

அவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் வேலை செய்ய வேண்டியது,லட்சக் கணக்கில் கையாட வேண்டியது பிறகு நிர்வாகத்தின் மீதே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியது , பின் மற்றொரு பத்திரிக்கையில் சேரவேண்டியது இது தான் அவன் வேலை. நம்மை சந்திச்சப்போ இண்டியன் எக்ஸ்பிரஸ் க்ரூப்லருந்து பிச்சிக்கிட்டு போயிட்ட ஆந்திரபிரபாவுல ஸ்டாஃபரா இருந்தான்.

தற்சமயம் ஆள் தலைமறைவா இருக்கான். கவுன்டர் கூட தரமுடியாது அதனால அடக்கி வாசிக்கிறேன். ஏதோ ஒரு கேஸ்ல ஹை கோர்ட் ஜட்ஜி முன்னாடி பேப்பர் கட்டிங்ஸ் வச்சாய்ங்களாம். அதுக்கு அவரு அம்பது ரூபா செலவழிச்சா பிட் நியூஸ், நூறு ரூபா செலவழிச்சா சிங்கிள் காலம் வரும். இந்த குப்பையை எல்லாம் எடுத்துட்டு ஆதாரங்கள் எதுனா இருந்தா கொண்டாங்கன்னாராம். இந்த நிலைக்கு மேற்படி நிருபர்கள் தான் காரணம்.

அந்த ஆசாமி ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் சித்தூர் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார - ஃபோன் அட்டெண்ட் பண்ண ஒரு உதவியாளர் தேவைன்னும் மாதா மாதம் சம்பளம் தானே கையிலருந்து கொடுப்பதாவும் சொன்னான். நமக்கு ஏற்கெனவே ஜர்னலிசத்துல சொறி ..ஆர்வம் அதிகம். ஆஃபரை ஒத்துக்கிட்டன்,

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌ ஆசாமிக்கும் என‌க்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பா ஆஃபிஸ்ல‌ருந்து போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றோம்னாரு .. மேனேஜ‌ர்.

நாம யாருக்கு எதிரா வீறு கொண்ட எழுந்தமோ அந்த ஆசாமி சாதாரண ஆளில்லை. ஜில்லா ஜில்லாவா போய் பழம் தின்னு கொட்டை போட்ட கேஸு.

கோடி ராமகிருஷ்ணாவோட "அம்மன் ' சினிமாவுல க்ளைமேக்ஸ்ல ஒரு பாட்டு வரும் . அதுல ஒரே ஒரு வரி 'சத்யமேவ ஜெயதேனனி லோகானிகி சாடிம்பரா .. கதலி ரா "னுட்டு வரும். அப்பம் ஏற்பட்ட சிலிர்ப்பு இருக்கே வர்ணிக்க வார்த்தையே கிடையாது.

"சத்தியம் ஜெய்க்கும்னு உலகத்துக்கு அறிவிக்க வா "ங்கறது இதனோட அர்த்தம். (மேற்படி பாட்டோட சிச்சுவேஷன் தெரியாதவுக இங்கே க்ளிக் பண்ணி க்ளிப்பிங் பாருங்க.பார்க்கிறதை விட இங்கே அழுத்தி கேளுங்க. குண்டலில ஒரு ஜெர்க் வரும் )


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ள (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். ஆனால் 1997முதல் அந்த நாள் வரை நான் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் அந்த எதிரியை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்தேன்.

அந்த சமயத்தில் என் கான்ஷியஸ் உச்சத்தில் இருந்தது என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த அந்த பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தில் .நடந்ததை சொன்னா " தபார்ரா நல்லாவே விடறான்யா ரீலு" ன்னுருவிங்க.

ஆனாலும் அடுத்த பதிவுல சொல்லத்தான் போறேன்.

Thursday, August 18, 2011

பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியம்




இந்த தொடர்ல பூஜ்ஜியத்துலருந்து புதுசா ஆரம்பிச்ச நமக்கு ஆத்தா எப்படி ஒரு ராஜ்ஜியத்தையே கொடுத்தாங்கற விஷயத்தை சுருக்கமாவாச்சும் சொல்லத்தான் போறேன். இது ஏதோ என் ஒருத்தனுக்கு கிடைச்ச அனுபவம்னு நினைக்காதிங்க. அவள் ஜகன் மாதா - ஜகத்ஜனனி - லோக மாதா அவளோட பார்வையில எல்லாரும் சமம்தான்.

அவள் பார்வையில போலி முருகேசன் கூட சமம் தான். அவரு இந்த மாதிரி போலி கமெண்ட் எல்லாம் போட்டு ஒரு அவுட்லெட்டை தேடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிருக்கும். அதனாலதேன் ஆத்தா அவருக்கு இப்படி ஒரு வடிகாலை ஏற்படுத்தி கொடுத்திருக்கா.

இந்த அவன் அவள் அது தொடரை படிச்சிக்கிட்டு வர்ரவுக என் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வச்சு நான் ஜெபிச்ச அதே மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிச்சா நான் பெற்ற அதே அனுபவங்கள் அதே அளவுக்கு அவிகளுக்கு கிடைக்காட்டாலும் அவிக சாதனைய பொறுத்து நிச்சயமா அவிக லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் வந்தே தீரும்னு உறுதி தர்ரேன்.

அந்த மந்திரம் கீழே:

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்

மொதல்ல பெற்றோரை , குல தெய்வத்தை ,இஷ்ட தெய்வத்தை ,உங்க குருவை வணங்கி அவிக அனுமதி வேண்டி பெற்று அதுக்கப்புறம் ஜெபத்தை ஆரம்பிங்க.ஆத்தாளோட மந்திரத்தை ஜெபிக்க ராகு காலம் எமகண்டம் இத்யாதி நிபந்தனையெல்லாம் கிடையாது. ஒரு குழந்தை தன் தாயை எந்த நிலையிலும் அழைக்கலாம். (கக்கா போயிட்டு கழுவாத நிலையிலயும்) . தைரியமா ஆரம்பிங்க. இந்த தொடர் முடியறதுக்குள்ளயே நீங்க , நானு ,நம்ம மானிலங்கள் , நம்ம நாடு எல்லாத்தோட தலையெழுத்தும் மாறிரனும். ஆரம்பிச்சுருவிங்கதானே.

இப்ப பூஜ்ஜியம் டு ராஜ்ஜியம் டெலிக்ராஃபிக் லாங்குவேஜ்ல - திடீர்னு மூடு கிளம்பினா ஒரே சம்பவத்தோடவே இந்த அத்யாயத்தை முடிச்சுரலாம் .ஆரும் கேட்கப்படாது.

நமக்கு மந்திரோபதேசம் செய்த பார்ட்டி - அவரோட க்ரூப் மற்றும் நமக்கு கேர் ஆஃபா இருந்த கடைக்காரர் ஒரு நாள் ஃபுட் மேட்டை உதறிப்போட சொன்னதும் நாம கழண்டுக்கிட்டதும் அல்லாருக்கும் ஞா இருக்கும்னு நினைக்கிறேன்.

நாம சோகமா நடந்து போயிக்கிட்டிருக்கம். அப்ப நம்ம ஏரியா தலைவரு ஒருத்தரு கிராஸ் ஆனாரு. இன்னா மேட்டருன்னா சனங்க அவரை இஷ்டத்துக்கு போட்டுக்கொடுத்து ஆப்படிச்சு புண்ணாக்கிட்டாய்ங்க போல . வலுக்கட்டாயமா கூட்டிட்டு போய் அவரோட பில்டிங்ல ஆஃபீஸுக்கு வென்யூ கொடுத்தாரு.(தயிருதேன் - நமக்கு ரெப்புட்டேஷன் அதிகரிச்ச பிற்பாடு நாமே நாமினலா ஒரு தொகைய வாடகையா கொடுக்க ஆரம்பிச்சம்)

அங்கருந்து நமக்கு ஒரு விலாசம் - ஸ்திரமான சோர்ஸ் ஆஃப் இன்கம்லாம் ஆரம்பிச்சது. அதே ஏரியாவுல லட்சத்து ரெண்டாயிரத்தோட என்ட்ரி கொடுத்து -கைப்பணத்தை இழந்து - பப்பு வேகாம வாலை சுருட்டி பாக்கெட்ல வச்சுக்கிட்டு திரும்பிட்டது 1998. இப்பம் ரீ என்ட்ட்ரி கொடுத்தது 2001 .

ஜெ தேங்க்ஸ் கார்டு அனுப்பினதும் இங்கனதான். வார்த்தா தெலுங்கு தினசரியில நம்மை பத்தி அரைப்பக்க செய்தி வெளி வந்ததும் இங்கனதான். நமம் சனங்க எந்த அளவுக்கு நொந்து போயிருக்காய்ங்கன்னா ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பத்தி அரைப்பக்கம் போட்ட செய்தியில அவிகளை கவர்ந்தது நாம ஜோதிடர்ங்கற தகவல்தேன்.விளைவு நம்ம ப்ராக்டிஸ் ஓஹோ.

ஆபிரகாம் லிங்கன் அடிமை ஒழிப்பு சட்டத்துல கையெழுத்து போடறதுக்கு மிந்தி அவரோட கைகளை குலுக்கியே ஒரு வழியாக்கிட்டாய்ங்களாம். ஏறக்குறைய நமக்கும் அதே நிலை. அப்பல்லாம் நமக்கு செல்ஃபோன் இத்யாதி கிடையாது. ஏரியா தலைவரோட கடைக்குத்தேன் கூப்டுவாய்ங்க.

பேப்பரை படிக்க வேண்டியது நேர நம்ம ஆஃபீஸுக்கு வந்துர வேண்டியது. அவிகளால நம்பவே முடியலை. நாம சாதாரணமா நினைச்சிருந்த பார்ட்டி இத்தனை பெரிய ஆளாங்கற ஆச்சரியம். ஒரு கட்டத்துல தள்ளு முள்ளே ஏற்பட்டுருச்சு. நமக்கு ஸ்தான பலத்தை ஏற்படுத்தி கொடுத்த ஏரியா தலைவருக்கே நம்மை கேட்ச் பண்ணமுடியாத நிலைமை. அவரு பார்த்து பார்த்து கடுப்பாகி "கொய்யால நகருங்கடா நகருங்கடான்னுட்டு சனத்தை தள்ளிக்கிட்டு வந்து ...கை குலுக்கி ..

" தபாருய்யா நீ ஊர்ல இருக்கிறவனுக்கெல்லாம் சோசியம் சொல்ற ஆளுதான்.. ஆனால் உனக்கு நான் சொல்றேன். ங்கோத்தா இன்னிலருந்து நீ தான்யா சீமான் "ன்னுட்டு போயிட்டாரு.

நாம எதிர்காலத்துல தேர்தல்ல கீர்தல்ல நின்னா புதுசா போஸ்டர் எல்லாம் டிசைன் பண்ண தேவையில்லை. மேற்படி க்ளிப்பைங்கை ஸ்கான் பண்ணி போட்டுட்டா போதும். எக்ஸ் பார்ட்டிக்கு டிப்பாசிட் கூட கிடைக்காது.

அந்த பத்திரிக்கை செய்தியை தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி உங்க பார்வைக்கு வைக்கத்தான் ஆசை. ரெம்ப கூச்சமா கீதுங்ணா .. அந்த அளவுக்கு புகழ்ச்சி.

இது எல்லாம் எப்படி சாத்தியமாச்சு? நாம ஜெபிச்சிக்கிட்டிருந்த மந்திரம் தான் அந்த பத்திரிக்கை காரவுகளை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுச்சா?ஆமாம்னு தான் நான் சொல்வேன்.

ஏன்னா நாம பாதிரியார் மாதிரி . ப்ரெட் ஹன்டிங் முடிஞ்சதுமே ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றிய பிரச்சாரத்தை ஆரம்பிச்சுருவம். இது நம்ம மாமூல் வாழ்க்கையில் ஒரு அங்கம். அப்படித்தான் சித்தூர் வார்த்தா ஆஃபீஸுக்கும் போனோம்.

அங்கன இருந்த ஸ்டாஃப் ரிப்போர்ட்டரும் ஒன்னும் பெருசா ரெஸ்பாண்ட் ஆகலை. நக்கலெல்லாம் அடிச்சாரு. "பொயப்ப பாருய்யா"ன்னு அட்வைஸ் எல்லாம் பண்ணாரு. ஆனால் அரைப்பக்க செய்தி. அவரோட மனசை மாத்தினது ஆரு? எது?

நம்ம சோசியத்தை பல வகையா பிரிக்கலாம். 1989 முதல் 1994 வரையிலான நம்ம சோசியம் ரெம்ப ரொட்டீன். அதாவது பஞ்சாங்கம் -ஜோதிட விதிகளையே பிடிச்சு தொங்கற சோசியம். -இது ஒரு கால கட்டம்.

1994 ல பிரம்மங்காருவோட படத்தை வச்சுக்கிட்டு சொல்ல ஆரம்பிச்ச சோசியம். நாம " அப்படி ஆச்சா' "இப்படி ஆச்சா"ன்னு கேப்பம். சோசியம் கேட்க வந்த பார்ட்டி "ஆமாம்" " ஆமாமாம்" னு கூவறச்ச அவனுக்கு எப்படி மெய் சிலிர்க்குமோ அப்படி நமக்கும் சிலிர்த்து போயிரும்.

1997 ல சம்பூர்ண சரணாகதி - அகிம்சைங்கற ரெண்டு ட்ராக்ல வண்டி ஓட ஆரம்பிச்சப்ப சொன்ன சோசியம் அது ஒரு டைப்பு. நேரம் கெட்டதா இருக்கும். ஜாதகம் உருப்படாத ஜாதகமா இருக்கும். இருந்தாலும் அவிக பொசிஷனை பார்த்து ஜாகத்துல உள்ள ஏதோ ஒரு சின்ன ப்ளஸ் பாய்ண்டை கேட்ச் பண்ணி அதை ஹைலைட் பண்ணி ஹோப் கொடுத்து - ஒரு சில பரிகாரங்கள் கொடுத்து இது வரைக்கும் செய்ங்க எல்லாத்துக்கும் மேல கடவுள் இருக்காருன்னு சொல்லி அனுப்ப ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சது ஒரு கட்டம்.

ஆத்தாவோட லைன் அப்ல சங்கல்ப்ப ஸ்லோகத்துல " மாதா தேஹி த்ரிகால ஞானம்"னு கேட்டதாலயோ என்னவோ .. நமக்கிருக்கிற ஒன்றரையணா ஜோதிட அறிவுக்கு 90 சதவீதம்லாம் ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சுருச்சு. ஐ மீன் ஜாதகப்படி நாம நடந்ததான்னு கேட்கிற விஷயங்கள் 90சதவீதம் நடந்தே இருக்கும்.

மேலும் ஆரு நம்மை தேடி வராய்ங்களோ அவிகளுக்கு சம்பந்தப்பட்டு மைண்டுல ஒரு மாண்டேஜ் ஷாட் ஏற்கெனவே ஓடியிருக்கும் .அட் லீஸ்ட் அவிக கொண்டுவர்ர ஜாதகத்துல இருக்கக்கூடிய ஒரு சில அம்சங்கள் மைண்ட்ல கிராஸ் ஆகியிருக்கும்.

இவ்வளவு ஏன் ஒரு தாட்டி ஒரு ஆசாமி தன்+ தன் பையனோட ஜாதகத்தை கொண்டு வந்திருந்தாரு. பையன் ஜாதகத்தை அவரோடதுன்னு நினைச்சு -அவரோட ஜாதகத்தை பையன் ஜாதகம்னு நினைச்சும் பலன் சொல்லி தொலைச்சுட்டன் . ரெண்டுமே 90% டேலி ஆயிருச்சு. நம்ம எதிர்கால கணிப்பும் பக்காவா மெட்டீரியலைஸ் ஆயிருச்சு.

இப்ப ஆன்லைன்ல சொல்ற ஜோசியம் எப்படி போகுதுன்னு நீங்கதேன் சொல்லனும்.


Tuesday, August 16, 2011

கில்மாவும் ஆன்மீகமும்


காமி கானி வாடு மோட்சகாமி காலேடு - இது தெலுங்கு பழமொழி. இதுக்கு " காமத்தை விரும்புபவனாய் இல்லாதவன் மோட்சத்தை விரும்புபவனாக முடியாதுன்னு அருத்தம். கில்மா ஒரு படப்பாடல்னா ஆன்மீகம் சூப்பர் ஹிட் இரவு காட்சி.

2000 டிசம்பர் 23 முதல் நாளிது வரையிலான என் ஆன்மீக அனுபவங்களை சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். அனுபவங்கள்னா இதுல கில்மாவும் அடக்கம் தானே.

அதை விட்டுட்டு எழுதினா இது எப்படி முழுமையான அனுபவமாகும். 1984 ( சம்மர் ஹாலிடேஸ்) முதல் 1986 ஜனவரி 1 வரை காஞ்ச மாடு கம்பங்கொல்லையில விழுந்த கணக்கா எக்கு தப்பா -தப்பு தப்பா - நிறைய தப்பு பண்ணாலும் - 1986 ல ஒரு 3 மாசம் பிரம்மச்சரியத்தை முயற்சி பண்ணாலும் -அது அசம்பவம்ங்கற ஞானோதயம் நடந்துட்டதால இந்த மேட்டர்ல ஒரு கன்க்ளூஷனுக்கு வந்தாச்சு.

ஓஷோ புக்ஸ் படிக்கிறதுக்கு மிந்தியே பிரம்மச்சரியத்துக்கும் - காமத்துக்கும் உள்ள சரியான லிங்கை புரிஞ்சிக்கிட்டாச்சு. நமக்குன்னு ஒரு விதியை ஏற்படுத்திக்கிட்டாச்சு. 1988 - 1989 லயே நமக்குள்ள ஒரு அவதானம் - நிதானம் ஏற்பட்டு போச்சு.

செக்ஸ் வித் ரெகுலர் இன்டர்வெல்ஸ் ஒன்னுதேன் பிரம்மச்சரியத்துக்கு உதவும்னு அனுபவப்பூர்வமா தெரிஞ்சுக்கிட்டம். 1991 நவம்பர்ல திருமணமும் நடந்தாச்சு. என்னதான் வாழ்க்கை போராட்டங்கள் இருந்தாலும் கில்மா மேட்டர்ல நவகிரகங்களால வேலை செய்யமுடியாம போயிருச்சு. இதுக்கு காரணம் சின்ன புரிதல்தான்.

2000 டிசம்பர் 23 ல பீஜாக்ஷர ஜெபம் ஆரம்பிக்கிறச்ச கில்மாங்கறது நம்ம லைஃப்ல இன்னொரு ட்ராக்ல பேர்லலா போயிட்டிருக்கும். உடல் ரீதியான தேவை ஏற்படும் போது அந்த ட்ராக்ல கிராஸ் ஆகி கில்மாவுடன் சின்ன கைகுலக்கல். அதுக்கப்பாறம் நம்ம லட்சிய பயணத்தை தொடர்ரதுன்னு ஒரு டிசிப்ளின் ஏற்பட்டு போச்சு.

மன ரீதியான வக்ரங்கள்,தூண்டுதல்கள் எல்லாம் எகிறிப்போயிருக்க இந்த கில்மா மேட்டர்ல மட்டும் ஒழுங்கு மரியாதை பாடியோட அஜெண்டா படி போக ஆரம்பிச்சிருந்தோம்.அதனால நம்ம தபஸ் எந்த வித இன்டரப்ஷனுமில்லாம பக்காவா கன்டின்யூ ஆச்சு.

2003 ஜூன்ல பொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு போன பிற்பாடு இந்த மேட்டர் எப்படி நம்மை எஃபெக்ட் பண்ணுச்சுங்கற விசயத்தை அப்பாறம் பார்ப்பொம்.

பிரம்மச்சரியம் தான் தியானத்தை தரும். தியானம் யோகத்தை தரும் .யோகம் முக்தியை தருங்கறது சனங்க வ்யூ. நம்மை பொருத்தவரை தியானம் -யோகம் இத்யாதி காரணமா ஜஸ்ட் ஏஸ் எ பை பிராடக்ட் பிரம்மச்சரியம் கை வரும்.

ஓஷோ மேட்டர்ல ஒரு சுவாரஸ்யம். மொதல் மொதலா ஓஷோவை பத்தி படிச்சப்ப /ஓஷோவை பற்றி யாரோ ஒரு ப்ரொஃபெஷ்னல் கன்டென்ட் ரைட்டர் எழுதினதை படிச்சதாலயோ என்னமோ மனசுக்கே வரலை.

ஆனால் காலக்கிரமத்துல ஓஷோவின் நேரடி பேச்சுக்களின் மொழிபெயர்ப்புகள் படிக்க கிடைச்ச பிற்பாடு லோக்பால் மசோதாவுக்கு பாராளுமன்ற ஒப்புதல் கிடைச்சா அன்னா ஹசாரே எப்படி துள்ளிக்குதிப்பாரோ அப்படி ஒரு மன நிலை நமக்கு ஏற்பட்டது.

கில்மாவை பொருத்தவரை ஓஷோ கிட்டே கத்துக்கிட்டதுன்னு பார்த்தா ரெம்ப குறைவுதான்.ஆனால் கில்மாவை பற்றிய என் பார்வைக்கு அங்கீகாரம் கிடைச்சதென்னவோ ஓஷோவின் பேச்சுக்களில் தான்.தியானம் - கடவுள் - படைப்பு இத்யாதி குறித்த விளக்கங்களை பொருத்தவரை ஒஷோ தான் நமக்கு சுப்ரீம்.

கில்மாவுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்புங்கற விஷயத்தை பற்றி ஏற்கெனவே திகட்ட் திகட்ட எழுதிட்டதாலயும் - சனம் நம்ம பழைய பதிவுகளை நோண்டி நுங்கெடுக்கிறாதாலயும் இந்த டச் போதும்னு நினைக்கிறேன்.

உபரியா ஒரு அனுபவத்தை இந்த பதிவின் மூலம் ஷேர் பண்ணிக்கிறேன்.

1997 நவம்பர்ல பூர்விக சொத்து செட்டில்மென்ட்ல ஒரு லட்சத்து ரெண்டாயிரம் வந்ததுல ரெண்டு வட்டிக்கு விட்டு நாறிப்போன கதையை ஏற்கெனவே சொல்லியிருப்பேன்.

அப்படி வாங்கிக்கிட்ட பார்ட்டி ஒருத்தனை வேட்டையாடிக்கிட்டிருந்த சமயம் . ஐ மீன் ஆள் காணவில்லை ரேஞ்சுக்கு போயிட்டான். அவிக ஏரியால முகாமிட்டு கேட்ச் பண்ணனும். ரோட்ல வெய்ட் பண்ண வேண்டியது. திடீர்னு ஏதோ ஒரு பிக்காலி "இன்னாபா இங்க வெய்ட் பண்றே.அவன் இப்பத்தான் வீட்டுக்குள்ள போனதை பார்த்தேன்"னு ஊத்திவிட்டதும்..மறுபடி அவன் வீட்டண்டை போக வேண்டியது.
ஏமாந்து மறுபடி ரோட்டுக்கு வரவேண்டியது இதே ரேஞ்சுல ஷட்டில்.

நிலைமையா ரெம்ப மோசம். அந்த பரதேசி 23 ரூவா கிட்டே தரனும். அதுல ஒரு 3 ஐ மட்டும் கொடுத்தாலே ஒரு 3 மாசத்துக்கு பிரச்சினை இல்லாம இருக்கலாம் போன்ற நிலை. இப்படி ரோட்டுக்கும் அவன் வீட்டுக்கும் அலைஞ்சுக்கிட்டு கிடக்கோம்.

அவிக வீடு உள்ள சந்துக்கு டர்ன் ஆறதுக்கு முந்தின தெருவுல ஒரு அம்மன் கோவில். கோட்டை கணக்கா பெரிய ரெட்டை கதவு. கதவுக்கு நேர கர்பகிருகம். லெஃப்ட் அண்ட் ரைட்ல க்ர்பகிருகத்தை வலம் வர்ரதுக்கு விசாலமான இடம்லாம் உண்டு.

கடேசியா அவன் வீட்டண்டை போகப்பொறேன்.ஹவுஸ் ஓனருக்கு வாடகை கொடுத்தே ஆகனும் . அந்த அளவுக்கு டார்ச்சர். அன்னைக்கு கொடுக்க முடியலின்னா மறுபடி எந்த தேதியில பணம் கைக்கு வருதோ கொடுத்துட்டு அன்னைக்கே வெக்கேட் பண்ணி ஆகனும். அந்த அளவுக்கு வலிக்க வச்சுட்டான். அதுக்கு அவனுக்கு என்ன நடந்ததுன்னு இன்னொரு அத்யாயத்துல சொல்றேன். (வெக்கேட் பண்றதுன்னா பேக்கிங் செலவு - புது வீட்டுக்கு அட்வான்ஸ் கூடும் -வாடகை கூடும் - விலாசம் மாறினா ப்ராக்டிஸ் அடிவாங்கும் இப்படி ப்ராக்டிக்கல் சிரமங்கள் தான்.மற்றபடி அட்டாச்மெண்ட் எல்லாம் ஒரு மசுரும் கிடையாது)

மேலும் அந்த வீடு டொமஸ்டிக் லைஃபை விட ஸ்பிரிச்சுவல் லைஃபுக்கு ரெம்ப பொருத்தமான வீடு . அந்த வீட்டிலான எங்க போர்ஷன்ல ஒவ்வொரு சதுர மி.மீலயும் நம்ம அதிர்வுகள் ஸ்டோர் ஆகியிருக்கு. வழக்கமான்னா ஒரு மணி நேர அவகாசத்துல வீடு காலிபண்ணக்கூடிய சாடிஸ்ட் கேஸு நாம.

ரோட்லருந்து சைக்கிளை மிதிச்சுக்கிட்டு அவன் வீடு இருக்கிற தெருவை நோக்கி போறேன். மனசு கனத்து கிடக்கு. ஆத்தா ஆத்தான்னு ஜொள்ளு விட்டோம். அந்த ஆத்தா கூட நல்ல சமயத்துல கை விட்டுர்ரா. இதான் கடைசி சான்ஸ் பார்ப்போம்னு பல எண்ணங்கள்.

திருப்பத்தின் போது ஒரு ரிஃப்லெக்ஸ் மாதிரி கண்ணு மேற்படி கோவிலை அரை குறையா பார்க்குது.
அப்பம் மேற்படி கோவில் -கர்பகிருகம் -இடது புற காலியிடம்லாம் டச் ஆகுது. அந்த காலியிடத்துல சப்பரத்துல அம்மன் சிலை ஒன்னு பக்காவா அலங்கரிக்கப்பட்டு இருக்கு ( நேரம் ; மதியம் 2 க்கு மேல இருக்கும்) ஆக்யுரேட்டா சொன்னா சமய புரம் மாரியம்மனோட வடிவம் -அலங்காரம்.

ங்கோத்தா .. இது ஆடிமாசம் இத்யாதி கூட கிடையாதே.. மே மாசம் அசலே கிடையாது. இந்த பார்ப்பானுங்களுக்கு வேற வேலையே கிடையாது. ஏரியால இருக்கிற சூத்திரங்களோட ஈகோவை தூண்டி விட்டு நல்லாவே கல்லா கட்டறானுவன்னு வஞ்சிக்கிட்டே பார்ட்டியோட வீட்டுக்கு போனேன்.

அவன் ரேஞ்சுக்கு பத்து பைசா பேராதுன்னு தெரியும். ஆனாலும் நமக்கு வேற சோர்ஸ் இல்லாத காரணத்தால தேன் இந்த வேட்டை. வீட்ல உள்ளவுக மாடியில இருக்கான்னு சொன்னாய்ங்க. நான் மாடிப்படி ஏறி போறேன். லுங்கி பனியன்ல இருக்கான்.

பார்ட்டி எக்கனாமிக்கலா நொந்து போயிருந்தாலும் (சின்னப்பையன்) ராசி சிம்மம். லக்னம் தனுசு.லக்னத்துலயே குரு. நம்மை பார்த்ததும் ஒன்னுமே பேசலை. எழுந்து போய் கோட் ஸ்டாண்ட்ல மாட்டியிருந்த பேண்ட்ல இருந்து கத்தையா நோட்டுகளை எடுத்தான். எல்லாம் நூறு ரூவா தாளு. ஒரே ஒரு தாளை தனக்கு வச்சிக்கிட்டு மொத்தத்தையும் கொடுத்துட்டு " தயவு செய்து நீ ஒன்னும் பேசாத .. கணக்கெல்லாம் அப்பாறம் பார்த்துக்கலாம்"னான். எண்ணிப்பார்த்தா கரீட்டா ரூ.3000 இருக்கு.

அப்பல்லாம் மணி சீக்ரெட்ஸ் நமக்கு தெரியாது. பிணத்துக்கு உசுரு வந்த ஃபீலிங் . எப்பம் வெளிய வந்தேன். எப்பம் சைக்கிள் லாக்கை திறந்தேன்.எப்பம் ஸ்டாண்டை தள்ளினேன்னு கூட தெரியாது. பாடி அவ்ள லேசா இருந்தது.

சந்து திரும்பும்போது ஆட்டோமெட்டிக்கா கண்ணு அம்மன் கோவில் பக்கம் திரும்புச்சு. கோவில் கதவு ஓகே.. கர்ப கிருகம் ஓகே. ரைட்ல வலம் வர இடம் ஓகே. லெஃப்ட்ல சப்பரம் ஓகே. ஆனால் சர்வாலங்கார பூஷிதையா காட்சி தந்த மாரியம்மன் மட்டும் ஆப்சென்ட்.

மண்டைக்குள்ள ஒரு ரங்கோலி .. நெஞ்சுக்குள்ள கிலி. " ஆத்தா"ன்னுட்டு தினத்தந்தி போஸ்டர் சைஸுல கத்தலாம் போல ஒரு உணர்வு.

(தொடரும்)





Saturday, August 13, 2011

வசிய மந்திரம்


அவன் அவள் அது :13


ஆத்தாளை அடுத்த பிற்பாடு 2000 டிசம்பர் 23 முதல் ஏற்பட்ட என் ஆன்மீக அனுபவங்களை ஒன்னு விடாம சொல்லனுங்கற உத்தேசத்தோட தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். எந்த மேட்டரா இருந்தாலும் க்ளைமாக்ஸ் கண்ணுக்கு தெரியற வரைதேன் ப்ரிப்பரேஷ்ன்லாம். அதுக்கப்பாறம் காட்டடிதேன்.
எந்த விதமான முன் தயாரிப்பும் இல்லாம ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுருவம்.

கில்மா மேட்டர் எழுதினப்பல்லாம் இந்த ஃபார்முலா நல்லா தான் போயிட்டிருந்தது . அவளை பத்தி எழுத ஆரம்பிச்சா எல்லாமே முரண்டு பிடிக்குது. இந்த ஃபார்ம் இல்லாத ஃபார்ம் தான் அவளுக்கு இஷ்டம் போல.அப்பத்தானே என்னை குழப்பின மாதிரி படிக்கிறவுகளையும் குழப்ப முடியும். சரி.. ஆத்தா விருப்பமே நம்ம விருப்பமும்.

ஆத்தாளுக்கு நாம கொடுக்கிற மாமூல் ரெம்ப சிம்பிள்.தினசரி ஒரு தம்ளர் மஞ்சள் நீர் வாரத்துக் கொருதரம் பத்து ரூவா பட்டை லவுங்கம். பத்து ரூவா எலுமிச்சம்பழம்.அம்புட்டுதேன். பட்டை லவுங்க சமாசாரம் சஸ்பென்ஸ்.

தினசரி வெளிய கிளம்பும் போது அந்த மஞ்சத்தண்ணியில ஒரு ஸ்பூன் விட்டுத்தேன் சந்தனம் உரைச்சு நெத்திக்கிட்டுக்கறது.

பூஜை ,புனஸ்காரம்லாம் ஒரு மண்ணும் கிடையாது.மைண்டுல ஒரு ட்ராக்கை ஆத்தாளுக்கு ஒதுக்கியாச்சு.அதும்பாட்டுக்கு ஓடிக்கினு இருக்கும்.அந்தாசா மாசத்துல ஒரு தினம் ரெம்ப சுஸ்தா இருந்தா க்ரூப் ஸ்டடி மாதிரி சகல தேவதா ஸ்தோத்திரத்துல ஆத்தாளுக்குன்னு நாம ஃப்ரேம் பண்ணி வச்சிருக்கிற சங்கல்ப்ப ஸ்லோகம் உட்பட ஒரு பாட்டம் சொல்லிருவம்.

எப்பயாச்சும் ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க கழுகு தளத்துலல்லாம் போய் போலி கமெண்டு போட்டா ம்னசு கொஞ்சம் சங்கடமாயிட்டா சத நாமாவளியை ஒரு தாட்டி சொல்லிருவம்.

சத நாமாவளி சொல்ற சந்தர்ப்பம் வர 3 மாசம் 6 மாசம் கூட ஆகும். எப்பயாச்சும் மனசு பஸ்டான லாரி ட்யூப் மாதிரி ஆயிட்டா ஊருக்கு வெளிய இருக்கிற அம்மன் கோவிலண்டை போய் காம்பவுண்டுக்கு வெளிய இருந்து தம் போட்டுக்கிட்டே கொஞ்ச நாழி சாட் பண்ணிட்டு வந்துருவம்.

இதுக்கே ஆத்தா நமக்கு என்னெல்லாம் கொடுத்திருக்கான்னு கணக்கெடுத்தா பயங்கர கில்ட்டி வருது. நாம வாழ்ந்த வீடுகளோட லட்சணங்களை சொன்னா வா.வெ.

கதவில்லாத வீடு ,கரண்டில்லாத வீடு ,கழிவறை இல்லாத வீடு ,குளியலறை இல்லாத வீடு , கூரையே இல்லாத வீடு,விலாசமில்லாத வீடு இப்படி ஒன்னிலை ..ஒன் டு ஃபைவ் வாடகை தரனும்னா ஒன்னாம் தேதிக்கு ஒரு வாரம் முந்தி வரை ஆயிரமாயிரமா வந்து போயிருக்கும். ஆனால் இனி எந்த கமிட்மெண்டும் இல்லை . வாடகை ஒன்னுதேனு நினைக்கும் போது லெச்சுமி அக்கா அவுட் ஆஃப் ஸ்டேஷன் ஆயிருவா.

ஆனால் ஆத்தாவுக்கு நம்ம ஹார்ட்ல இடம் கொடுத்ததுலருந்து நமக்குன்னு ஒரு இடம் சந்தில,மந்தியில நிக்காம நாலு பேரை போல "குட்டா" (ரகசியமா) வாழ்ந்துக்கிட்டிருக்கம். ஒரு வகையில ஜெ மந்திரி சபையில மந்திரி மாதிரி வச்சுக்கங்களேன். ஆத்தா ஒருத்திக்கு ஹார்ட் ஃபுல்லா ஹானஸ்டா இருந்துட்டா ஒரு பிரச்சினையும் கிடையாது.

பிரச்சினை வரும். ஆனால் அதுவும் நமக்கு ஜாக்பாட்டாவே முடியும். பழக்க தோஷத்துல (ஈகோ) சொல்யூஷனுக்கெல்லாம் ட்ரை பண்ணுவம். ஒரு ஸ்டேஜ்ல ரியலைஸ் ஆகி அப்படியே டீல்ல விட்டுர்ரது.டீல்ல விட்டதும் பிரச்சினை ஃபணால்.

ரெகுலர் பவர் கட்டு பத்தி சொன்னேனே.. அப்பம் காசிருக்கிற திமிர்ல யு.பி.எஸ் எல்லாம் வாங்கிட்டன்.படக்குன்னு ரியலைஸ் ஆகி ஸ்டுடியோவுக்கு கொடுத்துட்டன். அப்படி கொடுத்த நாள்லருந்து பவர் கட் சீசன் முடியறவரை என்.டி.ஆர் ரேஞ்சுதேன். விடியல்3 மணிக்கு விழிப்பு வந்துரும். பவர் கட்டாவது மசுராவது..

போன வாரம் வரை கூட மதியம் 1 முதல் 3 வரை தான் பவர் கட். அப்பாறம் அதை தூக்கிட்டானுவ. இன்னைக்கு (சனிக்கிழமை /ஆகஸ்ட் 13,2011) தாளி மெயின்டெய்னன்ஸுன்னு காலையிலருந்து மதியம் 2 வரை பவர் கட்டு. தகவல் தொழில் நுட்ப புரட்சின்னு அனத்தறாய்ங்க.மொதல்ல ஒழுங்கான மின்சாரத்தை கொடுங்கய்யா.அவிகளை சொல்லியும் புண்ணியமில்லை. கன்சம்ப்ஷன் நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே வருது.

கொய்யால வீடு கட்டறானுவ ஒரு சன்னல் கிடையாது ,வென்டிலேட்டர் கிடையாது, அப்படியே இருந்தாலும் சாக்கடை நாத்தம் தேன் வரும்.அல்லது சன்னல் வழியா கம்பி விட்டு திருடறாய்ங்க.என்ன பிழைப்பு இது நாய் பிழைப்பு.

இதையெல்லாம் சால்வ் பண்ணனும்னா பொது நல நோக்கோட செயல்படனும். தாளி .. கூட்டி/காட்டி கொடுத்து ஏர் கூலர் வாங்கறானே தவிர சென்ட்ரல் ஏசிக்கு ப்ளான் பண்றானே தவிர எங்கன கோட்டை விட்டோம்னு எவனும் ரோசிக்கமாட்டேங்கறான்.

அவளை பற்றி எழுத ஆரம்பிச்சாலே இப்படி கச்சா முச்சான்னு ட்ராக் மாறி பூடுது. அது சரி அகஸ்மாத்தா கூகுல்ல எதையோ தேடி இங்கன வந்தவுகஅவள்னா யாருனு கேப்பிக. சொல்றேன்.

அவள்னா அது உங்க அம்மா/எங்க அம்மா நம்ம அம்மாக்களை எல்லாம் பெத்த அம்மாலருந்து நம்ம எல்லாத்துக்கும் மூலமான ஒரு செல் அங்க ஜீவியான அமீபா வரை எல்லாத்தயும் இந்த ஒட்டு மொத்த இயற்கையையும் குறிக்கிற ஒரு சொல்.

அவள் முரண்பாடுகளின் மொத்த உருவம். குழப்பங்களின் கூடாரம். எவளுக்குள்ளயும் ஆணினம் அவளைத்தான் தேடுது. அவளைபத்தி செலாவணியில உள்ள நாமாவளியை சொன்னா பீலா விடறதா தோணும்.

ஆனா எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.

சூர்ய ப்ரகாசாயை நமஹாம்பாய்ங்க. படக்குனு சந்திரமண்டல வாசினிம்பாய்ங்க. மஹோதர்யைம்பாய்ங்க ( பெரிய வயிறு படைச்சவள் - இல்லாட்டி இத்தீனி ட்ரில்லியன் குட்டிகளை போட்டிருக்கமுடியாதே) டக்குனு நித்ய கன்னிம்பாய்ங்க.

ஸ்தோத்ர ப்ரியேன்னு சொன்னாலும் அவள் தான் . அதுக்காவ விமர்சனம் பண்ணா ஜெ மாதிரி கஞ்சா கேஸ்ல தூக்கி போட்டுரமாட்டா.நிந்தா ஸ்துதின்னாலும் அவளுக்கு பிரியம் தேன்.நான் எல்லாம் ரெம்ப பர்சனலா,வில்லங்கமால்லாம் கேள்வி கேட்டிருக்கேன்.

ஒரு தாட்டி பயங்கர கடுப்புல சத நாமாவளியை எதிர்க்க வச்சுக்கிட்டு அதுல ஒன்னு கூட பொருந்தாதுன்னு எஸ்டாப்ளிஷ் பண்ணி சுந்தர தெலுங்குல எழுதி தள்ளினேன்.அதுக்கப்பாறம் தேன் நம்ம வாழ்வில் பயங்கர ( ஐ மீன் பாசிட்டிவ்) திருப்பங்கள்.

மந்திரம் உபதேசிச்ச பார்ட்டி தான் சொன்ன பீஜாக்ஷர மாலையை வவ்ஷட்னு ஒரு லட்சம் தடவை , ஹும் பட் ஸ்வாஹான்னு ஒரு லட்சம் தடவை வஷக் வஷக்னு ஒரு லட்சம் தடவை சொல்லி முடிக்க சொன்னாப்ல.

நாமதேன் ஏடாகூட பார்ட்டியாச்சே. ஆரம்பத்துலருந்தே வஷக் வஷக்னு முடிக்க ஆரம்பிச்சோம். இதுக்கு வசியமாகுன்னு அர்த்தம் போல. இது ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்ச பிற்பாடு சாலையில நமக்கு முன்னே போறா ஆணோ பெண்ணோ நம்மை திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே போவாய்ங்க.சிலர் நம்ம பார்வை படற பகுதிகளை ( பின்னந்தலை /முதுகு) தடவி விட்டுக்குவாய்ங்க.

இது ஏதோ ஒர்க் அவுட் ஆறாப்ல இருக்குன்னு உறைச்சதும் இதை பிரயோகம் பண்ண ஆரம்பிச்சோம்..மொதல்ல சாமானியர்கள் மேல. அப்பாறம் விஐபிக்கள் மேல கடேசியில கொய்யால எல்லாத்துக்கும் மூல காரணம் காசு பணம்தானே அதை வசியம் பண்ணிட்டா பிரச்சினை ஓவரில்லையான்னு லெச்சுமிக்கே வச்சோம் டார்கெட்டு .அந்த அனுபவங்கள் அடுத்த பதிவுல


Thursday, August 11, 2011

விளக்கை அணைச்சு..


அண்ணே வணக்கம்ணே !
விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற தலைப்புல ஒரு பதிவு போட்டது ஞா இருக்கலாம். அன்னாஹசாரே ஜோக் பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விளக்கை அணைக்க சொல்லியிருக்காரு.

இதெல்லாம் ச்சொம்மா ட்ரெய்லர் மாதிரிதான். இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ தெரியலை. 2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கறது நம்ம கணிப்பு.இன்னம் ஒரு தாட்டி ரிவைஸ் பண்ண நினைக்கிறவுக இங்கே அழுத்துங்க.

சோனியா ஆட்டம் க்ளோஸுன்னு ஒரு பதிவு போட்டேன். சோனியாஜீக்கு செர்விக்கல் கான்சர்.கட்சி பொறுப்பு ராகுல் காந்திக்காம், இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ தெரியலை.

நிலத்துல கால்பாவாத சமாசாரமா பேசிக்கிட்டிருந்தா மூளை பஜ்னு ஆயிருது ( நன்றி:சுஜாதா) அதனால கொஞ்ச நாழி நாட்டு நடப்பை பத்தி டச் பண்ணுவம். அப்பாறம் அவன்-அவள் -அது .

அரசாங்கங்களோட முடிவை - நாட்டு நடப்பை பத்தி பேசாதவுக கிடையாது.ஏன்னா இதெல்லாம் நம்ம வாழ்க்கையை நேரிடையா பாதிக்ககூடிய விஷயங்கள். நம்ம இந்திய நாடு ஐ மீன் நடுவண் அரசு தன் ஆதரவு இலங்கை அரசுக்கா , புலிகளுக்காங்கற மேட்டர்ல எடுத்த முடிவு நம்ம வாழ்வை எப்படியெல்லாம் பாதிச்சுருச்சு - இனி பாதிக்கப்போவுதுன்னு ரோசிச்சு பார்த்தா கண்ணை கட்டுது.

இலங்கைக்கு கொட்டி கொடுத்தாச்சு காசு பணம் ,ராணுவ உதவி , 1லட்சத்து 20 ஆயிரம் உசுருங்களை அள்ளொ கொடுத்தாச்சு. ஆனால் இப்பம் அவன் சீனாவுக்கு தாணா போடறான்.அமெரிக்கா அவனுக்கு ஆனா (ஆப்பு) வைக்கறேன்னு கிளம்பிட்டான். இவனும் அவனும் முட்டிக்குவான்.( சீனா -அமெரிக்கா) . நம்ம ஆட்சியாளர்கள் அமெரிக்காவுக்கு சால்ரா போட்டே ஆகவேண்டிய கட்டாயம். பீஜிங், நியூயார்க் என்ன ஆகுதோ அது அப்பாறம்.மொதல் ஆப்பு சென்னைக்கும் இந்திய நகரங்களுக்கும் தேன். ஏன்னா இப்பம் சீனா பீஜிங்லருந்து எதையும் ஏவ தேவையில்லை. இலங்கையிலயே எல்லா ஏற்பாடும் இருக்காமே.இதுல பக்சே சீனப்பயணம் வேற. அந்தாளு போய் மூக்கை சிந்தி ..ஹும் இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ?


பேசிக்கலா நாம ட்ரீமர்தான். ஆனால் அப்பாவோட நேர்மை - அது பரிசா தந்த ஒரு சில ப்ராக்டிக்கல் டிஃபிகல்ட்டீஸ் - நாம செய்துக்கிட்ட காதல் திருமணம் - கட்டிக்காத்த தன்மானம் -ஈவு இரக்கம் இத்யாதி எல்லாம் நமக்கு செமர்த்தியா ஆப்படிச்சு கற்பனை தேர்ல பறந்துக்கிட்டிருந்த நம்மை இந்த பூமியில லேண்ட் ஆக வச்சுருச்சு.

இந்த காலத்து யூத்து மாதிரி ஸ்போர்ட்ஸ் பேஜ் , சினிமா பேஜை மட்டும் பார்க்காம எமர்ஜென்சி காலத்துலருந்தே நியூஸ் பேப்பருங்களை ஃபாலோ பண்ணிட்டு வந்ததால - ஒரு கட்டத்துல ஸ்தூல செய்தியை வச்சு பின்னணியை கெஸ் பண்ற கப்பாசிட்டி வந்துட்டதால மைக்ரோவையும்
மேக்ரோவையும் இணைக்க முடிஞ்சது.

மேலும் ஏதோ நம்ம லக்னாதிபதி லாட்ஜு வைத்தியர் மாதிரி சுற்றுப்பயணத்துலயே இருந்ததால "இத்தீனிக்கப்பாறமும்" இன்னம் நம்ம மனசுல முடிச்சுகள் விழாம எஸ்கேப் ஆயிக்கிட்டிருக்கோம். நாம சோசியம் சோசியம்னு எழுதறத படிச்சுட்டு நம்ம முருகேசண்ணன் பாவம் சோசியத்துல மூழ்கி இதான் உலகம்னு நினைச்சிட்டு இருக்காருன்னு ஆருனா நினைச்சா மிஸ்டேக். ஹிஸ்டாரிக்கல் மிஸ்டேக்.

நாம இந்த சமுதாயத்தோட இருட்டு பிரதேசங்களை எல்லாம் தரிசிச்சிருக்கோம். ங்கோத்தா வாழ்ந்தும் இருக்கோம். பை மிஸ்டேக் நமக்கு கொஞ்சூண்டு மூளையும் அனலடிக்கல் திங்கிங்கும் இருக்கிறதால -அதுக்கெல்லாம் ஆதி என்ன அந்தம் என்னன்னு ஒரு கணக்கு போட்டு வச்சிக்கிட்டோம். அதாங்க மைக்ரோ மேக்ரோ .

அந்த இருட்டு பிரதேசங்களையெல்லாம் வெளுக்க சூப்பர் ரின் கணக்கா தீர்வுகளும் வச்சிருக்கோம். இந்த ட்ரை க்ளீனிங் வேலைய ரெண்டு பாய்ண்ட்ல இருந்து ஆரம்பிக்க வேண்டி இருக்கு.டாப் டு பாட்டம் நாறிப்போயிருக்கு.

வெளுப்பு வேலைய டாப்லருந்து ஆரம்பிச்சு பாட்டம் வரனும்னாலும் லேட் ஆயிரும்.பாட்டம் டு டாப் வெளுக்கப்பார்த்தாலும் லேட் ஆயிரும்.அதனாலதேன் ஒரே சமயத்துல ரெண்டு பக்கமும் வெளுத்துக்கிட்டிருக்கோம்.

டாப்புன்னா அமெரிக்கா பாட்டம்னா நம்ம ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க.ஆன்மீக ரீதியில பார்த்தாலும் - க்ளோபலைசேஷன் கோணத்துல பார்த்தாலும் நாமெல்லாம் ஒரே படகுல தேன் பயணம் செய்துக்கிட்டிருக்கோம்.

நம்ம பயணத்தை நெம்பர் ஆஃப் ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. நம்ம பயணமே அழிவை நோக்கித்தேன். ஏதோ ஆரு செய்த புண்ணியமோ நம்மை ஆள்றவுக எண்ணங்கள் ஒரு சிலது உடனடியா நிறைவேற மாட்டேங்குது . அதெல்லாம் நிறைவேறியிருந்தா இந்தியா ஒரு பெரிய சுடுகாடா மாறியிருக்கும்.அதுலயும் ஏழை பாழை - எஸ்.டி. எஸ்.சி (தலித்)க்கு இடம் இருந்திருக்காது அது வேற விசயம்.

அல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கோம். சிறப்பு பொருளாதார மண்டலம்- அணு மின் நிலையங்கள் -துறைமுக விரிவாக்கங்கள் - இரும்பு தாது விவகாரம் -பாக்சைட் -கோதாவரி பேசின்ல எரிவாயு. இப்படி ஒன்னே இல்லை ரெண்டே இல்லை . நூத்து பதினெட்டு விசயங்களை கவனிச்சுக்கிட்டுதான் இருக்கோம்.

ஆனா சோசியத்தை பத்தியே எழுதிக்கிட்டு இருக்க ஒரு காரணம் இருக்கு. சோசியம் தேன் சனங்களுக்கு அவன் எப்பேர்ப்பட்ட புடுங்கியா இருந்தாலும் "மவனே .. உன் தனிப்பட்ட வாழ்விலான சுக துக்கம்லாம் நீ உழைச்சு/திருடி சேர்க்கற பணம், பதவி,அதிகாரத்துக்கு அப்பாற்பட்டும் வரக்கூடியதுன்னு சோசியம்தேன் ஆணித்தரமா சொல்லுது.

இந்த உலகத்துல பசி சுரண்டல் எல்லாம் இன்னம் தொடர ஸ்தூலமான காரணம் லட்சம் இருந்தாலும் மன்சனுக்கு அவனோட வாழ்க்கையை பற்றின இந்த சின்ன புரிதல் கூட இல்லாததேனு நம்பறேன்.

அமெரிக்காவ பாரு அமெரிக்காவ பாருன்னு அலட்டினானுங்க அங்கன நிலைமை என்ன? கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் வருவாய் 18 % அதிகரித்துள்ளது. உழைப்பாளர்களின் வருமானம் 12 % குறைந்துள்ளது.(தகவல்: தினமணி) இந்த வித்யாசம் தேன் எல்லா பிரச்சினைக்கும் ஆணிவேரு.

ஆத்தா கசப்புக்கும் கருணை காட்டறாள். ஆனால் அந்த ஆசாமி ரியலைஸ் ஆகனும். நாம இத்தீனி அட்டூழியம் செய்தும் தெய்வம் இன்னம் நம்மை உசுரோட விட்டுவச்சிருக்கு இதுக்கு என்ன காரணம்னு ரோசிக்கனும். செயல்படனும். இல்லாட்டி கக்கூஸ் போறப்ப மலக்குடலே பேசின்ல வந்து விழுந்து செத்துப்போயிருவான்.

காந்தி தாத்தா ஒரு மேட்டர் சொல்வாராம். எவனும் தன் ப்ராப்பர்ட்டிக்கு தான் தான் சொந்தக்காரன்னு நினைக்கக்கூடாதாம். தன் சொத்துக்கு தன்னை ஒரு ட்ரஸ்டியாத்தான் நினைக்கனுமாம். இப்படி ஒரு நினைப்பு இருந்தா ஏழை பணக்காரன் வித்யாசம்லாம் ஒடிப்போயிரும்.

பொது நலம் பொது நலம்னு அலட்டிக்கிட்டாய்ங்களே அதுவே பெரிய சுய நலம். ஆமாண்ணே.. சுய நலத்தோட செயல்படும்போது பாடி,மைண்ட்,நாலெட்ஜு எல்லாமே தேசலாத்தான் வேலை செய்யும். பொது நலத்தை நாடி செயல்பட ஆரம்பிச்சா மைண்டு எக்ஸ்ட்ரா ஹார்ட் டிஸ்க் போட்டு ராம் மாத்தி ஃபார்மெட் அடிச்ச கம்ப்யூட்டர் மாதிரி பறக்கும்.

டெக்னிக்கலா பார்த்தாலே பொது நலம் தேன் உண்மையான சுய நலம். நாம சுய நலத்தோடசெயல்படும் போது எல்லாமே சுருங்கி போயிருது. பொது நலம் கருதி ஃபீல்டுக்கு போறச்ச நம்ம பின்னாடி ஒரு சக்தி செயல்பட ஆரம்பிச்சுருது.

காந்தி எல்லாம் வக்கீலாவே தொடர்ந்திருந்தா வாய்தா வக்கீலாத்தான் குப்பை கொட்டியிருக்கனும்.பொஞ்சாதி 6 மாசத்துல விவாகரத்து பண்ணிட்டு போயிருக்கும்.

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டம். ஆத்தா ஆத்தான்னு புலம்பறது நாலு கை ,ஆயிரம் கண்ணு கொண்ட பார்ட்டிய் எப்படியாச்சும் காண்டாக்ட் பண்ணி தமிழக முதல்வர் பதவியை வரமா கேட்கறதுக்கு இல்லிங்ணா.( கலைஞரோட சொத்துப்பட்டியலை பார்த்திங்கல்ல)

ஆத்தா ஆத்தான்னு புலம்பிக்கிட்டு இருக்க காரணம் இந்த உலகம்ங்கற பஸ் ஸ்டாண்ட்ல மரணங்கற பஸ் வர்ரதுக்கு மிந்தி இதை வீடா நினைச்சு ஏமாந்துராத இருக்கத்தேன். பஸ் வர்ர வரை நம்மால முடிஞ்ச அளவு இந்த பஸ் ஸ்டாண்டை சுத்தப்படுத்திரனும்.

சக பயணிகள்ள பல பேரு இந்த பஸ் ஸ்டாண்டை நிரந்தர வாசஸ்தலம்னு நம்பி கடைக்கால் போட்டு சுவரெழுப்பிட்டானுவ. அவனுகளையும் கொஞ்சம் உசுப்பனும். இந்த அஜெண்டா அமலாகுதோ இல்லியோ ங்கொய்யால நாம ஏமாந்துரமாட்டம்.

பஸ் ஸ்டாண்டை வசிப்பிடமா கொள்ள மாட்டோம். அதுக்குத்தேன் ஆத்தா புலம்பல்.