Showing posts with label Future. Show all posts
Showing posts with label Future. Show all posts

Tuesday, July 26, 2011

கலைஞர் இதயம் மீண்டும் இனிக்கும் :"ஜெ"வுக்கு ஆப்பு?


ஆமங்கண்ணா . மாறன் அண்ட் கோ மறுபடி வந்து கோவுர்த்துக்கிட்டப்ப 'இதயம் இனித்தது. கண்கள் பனித்தன"ன்னுசொன்னாரே அதே சீக்வென்ஸ் வந்துருச்சு. ஒருத்தரோட லாபம் இன்னொருத்தருக்கு நஷ்டமா முடியறது -ஒருத்தரோட ஆனந்தம் இன்னொருத்தருக்கு துக்கமா முடியறதுதேன் வாழ்க்கை.

கடகலக்ன காரவுகளுக்கு ரகசிய டார்ச்சர் கொடுக்கவே ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு பார்ட்டி ஆஜராயிரும். ஆனால் கடகம் ஜல தத்துவமாச்சே. "கடலுக்கென்ன மூடி"னுட்டு பொங்கி எழுந்துட்டா எல்லா கச்சாடாவும் அடிச்சிக்கிட்டு போயிரும்.

இதே கான்செப்ட் தேன் தாத்தா லைஃப்லயும் நடக்குது போல (கடக லக்னம்) . பிள்ளைகள்/பொஞ்சாதி/துணைவி ,( ஏன்யா நான் கரெக்டா பேசறனா/) சோனியா,தயா, ராசா அல்லாரும் மாறி மாறி ஆளுக்கொரு பக்கம் இழுக்க பழகிட்டாய்ங்க.

நம்ம ஜா.ரா வும் இவன் நாம போடற 'உவேக்' கமெண்டையெல்லாம் முருகேசன் ரகசியமா வச்சுப்பாங்கற தகிரியத்துல ரெம்ப ஓவரா போயிட்டாரு. அதேன் மொத்தத்தையும் அப்ரூவ் பண்ணிட்டன். கருப்பு ஆடு ஜா.ராதாங்கறதுக்கு ஆயிரம் ஆதாரம் இந்த கமென்ட்ஸ்லயே கிடைக்கும். என்ன கொஞ்சம் போல மூக்கை பொத்திக்கிடனும் தட்ஸால். நாறும்.

இன்னா.............ஆது கலைஞர் இதயம் மீண்டும் இனிக்குமா எப்டின்னு மொதல்ல சொல்லுப்பாம்பிங்க சொல்றேன்.அதுக்குத்தேன் இந்த பதிவு.

சட்டமன்ற தேர்தல்ல தாத்தாவுக்கு ஓய்வு கிடைக்கப்போவுதுன்னு சொன்ன இந்த வாய்தேன் இதையும் சொல்லுது. நாம ஏடிஎம் கவுண்டர் மாதிரி செருகின அட்டையில பேலன்ஸ் சொல்றோம். அம்புட்டுதேன். நமக்கு அவிக இவிகனு வித்யாசம்லாம் கிடையாது.

ஜா.ராவுதும் நம்முதும் ஒரே கேரக்டரு. இரட்டைதன்மை. ஒரு மன நிலையில ஜெ தான் ஆதிபராசக்தின்னு தோனும். இன்னொரு மன நிலையில ச்சே தாத்தா பாவம்யான்னு தோனும்.

ஆனால் நாம டுபுக் ப்ளாக் வச்சி - அனானி பதிவு -அனானி கமெண்டெல்லாம் போடறதில்லை.அப்பப்போ என்ன தோனுதோ அதை அப்படியே போட்டு உடைச்சுர்ரம்.

என்ன? மொக்கை போதுமா? பதிவுக்கு போயிரலாமா/

இந்த பதிவுக்கு நான் ரோசிச்ச இன்ன பிற தலைப்புகள்: (ரூம் போட்டெல்லாம் ரொசிக்கிலிங்கண்ணா-ஜஸ்ட் ஸ்பார்க் ஆனதுதேன்)

1.கலைஞர் தாத்தாவுக்கு நல்ல நேரம் பொறந்துருச்சுடோய்

2.அம்மா வெற்றி ச்சும்மா போகப்போகுதா?

3." கனி " மொழி சென்னையில ஒலிக்கப்போவுது

4. அம்மா கண்ணும் தாத்தா விரலும்

இதெல்லாம் கோசார கணக்கை அடிப்படையா கொண்டதுதேன். நான் நம்பி உபயோகிக்கும் தெலுங்கு பஞ்சாங்கப்படி 2011 நவம்பர் 17 அன்று சனிப்பெயர்ச்சி நடக்க போகிறது. தாத்தாவுது ரிஷபராசி.

கடந்த கன்னி சனி:
இது 2011 நவம்பர் 17 வரை நடக்கனும். 9/10க்கு அதிபதி அஞ்சுல இருந்த காலம் வரை நெல்லாவே "தொழில்" நடத்தி நெல்லாவே சொத்து சேர்த்தாரு. ஆனால் அஞ்சுல சனிங்கற கான்செப்ட்ல அவமானமும் நடந்தது (அஞ்சு பேர் புகழை காட்டும் இடம்) கனிமொழியும் திகார் (அஞ்சு புத்ர ஸ்தானம்) தயா நிதி மாறனும் அதே ரூட்ல ( புத்ர பவுத்ரர்கள் -பேரன் கள் எல்லாம் ஒரே கேட்டகிரிங்கோ) புத்தி மந்தமா போய் (அஞ்சு புத்தி ஸ்தானம்) 1 லட்சத்து 76 ஆயிரம் கொடிக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் ஈழத்தமிழர்களை பலி கொடுத்தாச்சு.

ஆனா சனி ராசி மாறுவதற்கு 6 மாசம் முன்னாடியே அடுத்த ராசியோட பலனை தருவாருன்னு ஒரு விதி இருக்கு. அதாவது அஞ்சுல சனியே 6 ல சனியா வேலை செய்வாரு.

இந்த எஃபெக்டு மே 17 ஆம் தேதியே ஆரம்பிச்சிருச்சு. சனி இவிகளுக்கு 9 -10 க்கு அதிபதி. 9 ஆம் பாவம் தொலைதூர கார்டியனை காட்டும் (சோனியா) அதனால தேன் சோனியா அம்மா பிள்ளைய பயங்கரமா கிள்ளி விட ஆரம்பிச்சிட்டாங்க. தாத்தாவும் நான் மாத்தேன் அழ மாத்தேன்னுட்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருந்தாரு புரச்சி தலைவி எப்பம் சமச்சீர் கல்வி மேட்டர்ல வாய வச்சாய்ங்களோ அங்கனயே தாத்தாவுக்கு அடுத்துவரும் துலா சனி:எஃபெக்ட் ஆரம்பமாயிருச்சு போல.

9 ங்கறது சொத்துக்கள்,சேமிப்பு,முதலீடுகளை காட்டுமிடம் இதுங்க மேலல்லாம் வம்பு வழக்கு வரனும். வந்துக்கிட்டே இருக்கு.

பத்தாம் பாவம் செய்தொழிலை காட்டுமிடம். இவர் 6 ஐ பார்க்கிறதால "விவகாரம் பண்றதும் -எதிராளி கண்ல விரலை விட்டு ஆட்டறதும்தேன் வேலை. வல்லடி பண்ணனும். எதிராளிக்கு தூக்கமில்லாம பண்ணனும். ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா இதெல்லாம் முதல்ல ரிவர்ஸ்ல நடக்கும். அப்பறமாத்தேன் இருக்கு மெயின் பிலிம்..

6 ல சனி வந்தா சத்ரு நாசம் - ரோக நிவர்த்தி - ருண விமுக்தி நடக்கனும். இதனோட எஃபெக்டா தான் சினியுக் கடனா(?) கொடுத்த 214 கோடியை செட்டில் பண்ணாப்ல இருக்கு. ரோகம் இனி வராது போல (சின்னதா) அம்மா கதி என்ன ஆகப்போகுதோ? கர்னாடக கோர்ட்டு விவகாரம் வேற இதோ அதோங்குது. தாத்தாவோட ராசிக்கு 6 ல வந்த சனி அம்மா வெற்றிய ச்சொம்மா ஆக்கிருவாரா என்னனு பொறுத்திருந்துதேன் பார்க்கனும்.

எச்சரிக்கை:1
ஆனால் இதுல இன்னொரு பயங்கரமும் இருக்குங்ணா அம்மாவுக்கு 3 ல சனி /தாத்தாவுக்கு 6 ல சனி. அம்மா பயப்படமாட்டாய்ங்க. தாத்தா விடமாட்டாரு. தமிழகம் ரண களமாகப்போகுது.

எச்சரிக்கை;2

எங்க ஊர்ல என்.டி.ஆருக்கு அவரோட ராசிக்கு 5 ல சனி வந்தப்பதேன் பிள்ளை கணக்கா இருக்கவேண்டிய சந்திரபாபு ஆப்படிச்சிட்டாரு. அப்பம் நான் உணர்ச்சி வசப்பட்டு சனி 6 ஐ பார்க்கிற தேதிய குறிப்பிட்டு
" இன்ன தேதிக்கு அப்பாறம் உங்களுக்கு எதிரியே கிடையாது தலை"னுட்டு டெலிகிராம் கொடுத்தேன்.

ஆனால் அன்ன தேதிக்கு அப்பாறம் தலீவரு டிக்கெட் வாங்கிட்டாரு. அவரை ஈஸ்ட்மென் கலர்ல திட்டிக்கிட்டிருந்த தலைங்க எல்லாம் என்.டி.ஆர் மரணத்துக்கு அப்பாறம் அவதார புருசனு புகழ்ந்து தள்ளினாய்ங்க.

இந்த மாதிரி தாத்தா மேட்டர்ல நடக்காதுன்னு எப்படி உறுதி தரமுடியும்?

விவகார ஜெயம்:

சமச்சீர் கல்வி மேட்டரை ஏற்கெனவே சொல்ட்டன். அடுத்த மேட்டர் ராசா . நேத்து ராசா போட்ட குண்டுக்கு சோனியா - சிதம்பரத்தார் மற்றும் மன்மோகனார் அரண்டு கிடக்காய்ங்க. தாத்தா பார்கெயினிங் பொசிஷன்ல இருந்து டிமாண்டிங் பொசிஷனுக்கு வன்ட்டாருங்கோ.

ஆனால் நல்லதுல ஒரு கெட்டது மாதிரி குரு அஷ்டமாதிபதியா மறைஞ்சு நன்மை செய்ய பார்த்தாலும் -அவர் புத்ர காரகன் என்பதால் கனி திகாருக்கு போக பிரிவு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி குரு வக்கிரமாறதால -முந்தா நாள் ராசா விட்ட அலப்பறைக்கு சோனியா கும்பல் அரண்டு கிடக்கிறதால கனி ஆகஸ்ட் 30 க்கு அப்பாறம் வெளிய வந்துரலாமுங்கோ.

Friday, May 6, 2011

ஒபாமா இனி உனக்கு ஆப்பும்மா

உஜிலா தேவி என்னடான்னா இண்டியன் மெடிசினை முஸ்லீம் ஆட்சியாளர்கள் ஒழிச்சுக்கட்டிட்டாய்ங்கன்னு பிலாக்கணம் பாடிக்கிட்டிருக்காரு. நாம என்னடான்னா ஒசாமா நம் காலத்து நாயகன்னுட்டு  ஓ போடறோம்.

இன்னா பண்றது நைனா இன்னாதான் அக்வார்டா இருந்தாலும் நெஜம் நெஜம்னு ஒன்னு கீதுல்லியா. அமெரிக்காவை கிழிக்க ஒரு பெரிய கூட்டமே கீது. அமெரிக்காவுக்கு பாரதமாதாவை கூட்டிக்கொடுக்க ஒரு கூட்டமே காத்துக்கினு கீது ( இன்னாது கா -கூ -ட்டிக்கொடுத்தாச்சுங்கறிங்களா? ஓஹோ அணு ஒப்பந்தம் பத்தியா அது சரி)

ஆனால் பாருங்க இப்ப அமெரிக்க ஆயுத கம்பெனிங்க கமிஷன்லாம் தர்ரதில்லையாம் அதனால நம்ம நாடு பிரான்ஸ் நாட்டு விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்காம். ( அமெரிக்க கம்பெனியோட இருந்த ஒப்பந்தத்தை ரத்து பண்ணி - ஆயிரம் தான் இருந்தாலும் பைசா மே பரமாத்மா கீறாருப்பா.)

ஒசாமாவ போட்டு தள்ளிட்டாய்ங்க. அதுவும் பாக்கோட அனுமதி இல்லாம  பாக் டெரிட்டரில  நுழைஞ்சு. பாக் உதவியோட செய்து - பத்தினி வேஷம் போட்டிருந்தாலும் ஓரளவுக்கு டைஜஸ்டபிள். ஆனால் பாக் அரசுக்கு தெரியாதுங்கறாய்ங்களே இது மட்டும் நெஜமா இருந்தா? பகீருங்குதுப்பா.

இதை முன்னுதாரணமா காட்டி சீனாக்காரன்  தலாய்லாமா இந்தியாவுல இருக்கிறப்ப தூக்கிட்டா இன்னாபா பண்றது? "எங்கெங்கு காணினும் சக்தியடா"ங்கறாப்ல உலகத்துல எங்கன பார்த்தாலும் பதவி வெறிதேன் தலைவிரிச்சு ஆடுது.

ஒபாமா விழுந்து கிடக்கிறதை ( இமேஜை சொன்னேங்க) தூக்கி நிறுத்த ஒசாமாவ போட்டு தள்ளிட்டாரு. இது இத்தோட போச்சா? ஆலமரம் சாயறப்பவே என்னென்னவோ நடந்து போச்சு ( ராஜிவ் காந்தி படுகொலைய சொல்றேன்)  இது இன்னா மரம்னு எதிர்காலம் சொல்லும்.

இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பிறவு  அமெரிக்க அரசு ஒசாமாவை  இதோ பிடிச்சுட்டோம் அதோ பிடிச்சுட்டோம்னு சீன் போட்டுக்கிட்டிருந்தப்ப ஜஸ்ட் ஒசாமாவோட பேரை நம்ம Astro Nemo Namology படி அனலைஸ் பண்ணி  குறைஞ்ச பட்சம் 7 வருசத்துக்கு உங்களால பிடிக்க முடியாது - அந்தாளு நிழலுக்கு பிறந்தவன் - நிழல் மாதிரி - லங் கேன்சர் வரலாம் அது இதுன்னு சென்னைல இருக்கிற அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கு கூரியர் மூலமா தெரிவிச்சேன்.( கன்சோலன்ட் ஆஃபீஸா?)

ஒசாமாவை ஏன்  ந.கா.நாயகன்னு சொல்றேனு இந்த பதிவை முழுக்க படிச்சா புரியும்.

ஒருபக்கம் இமேஜ் பிக் அப் ஆயிருச்சுங்கற சந்தோசம் இருந்தாலும் - ரெண்டாவது தபா கூட ஜனாதிபதி ஆயிரலாங்கற குஜிலி ஒரு பக்கம் இருந்தாலும் தேன் கூட்டை கலைச்சுட்டமோங்கற ஃபீலிங் ஒபாவாவுக்கு இருக்கும்.

இந்த சிட்சுவேஷன்ல ஒபாமா நம்ம கிட்டே வந்து ஐடியா கேட்டா எப்டி இருக்கும்னு கற்பனை குதிரைய தட்டிவிட்டேன்.


ஒபாமா: வணக்கம் மிஸ்டர் முருகேசன்! ஒரு காலத்துல..எப்படியோ இருந்த நாங்க  நேத்துவரை  எப்படியோ ஆயிட்டிருந்தம். இந்த ஒசாமாவை போட்டுத்தள்ளி இப்போ கொஞ்சம் ஆறுதலா இருக்கு.

முருகேசன்: மொதல்ல இந்த ஹிப்பாக்ரசிலருந்து வெளிய வாங்கசார். என்னைக்குமே நீங்க புலியில்லை. சொம்மா புலி தலைய மூஞ்சிக்கு வச்சி பூச்சி காட்டிக்கிட்டிருந்திங்க. ஒசாமா அதை தட்டிவிட்டுட்டாரு..

லேட்டஸ்ட்ல இருந்து பார்ப்போம்.  பொருளாதாரம்னா.. அரசாங்கத்துலருந்து , குடிமக்கள் வரை ஆட்டை தூக்கி மாட்ல போட்டு ,மாட்டை தூக்கி ஆட்ல போட்டு எல்லாமே கடன்ல ஓடிக்கிட்டிருந்தது. முதல்ல் வீட்டுக்கு ஒரு கார்னிங்க, அப்புறம் அவுட்டிங் போக ஒரு கார், ஆஃபீஸ் போக ஒரு கார்னிங்க. அப்புறம் ஆத்துக்காரிக்கு ஒரு காரு, ஆத்துக்காரருக்கு ஒரு காருன்னிங்க. உங்க பெட் ரோல் உற்பத்தின்னு பார்த்தா காலணா கூட கிடையாது. கன்சம்ப்ஷன்ல மட்டும் ஒன்னே முக்காலணா..

ஒபாமா: என்னப்பா நீ .. நான் ஏதோ பிரச்சினைய சொல்லி ஐடியா கேட்கலாம்னு வந்தா குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறே..

முருகேசன்: ஒபாமா சார் ! ஒரு பொம்பள வந்து  கரும்பு தோட்டத்துல பலானவன், கத்திரித்தோட்டத்துல பலானவன்னு , பலாந்து பலாந்து நடந்ததுனு  சொல்லி சொல்யூஷன் கேட்டால் சொல்லலாம். நீங்க ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி வயிறு மட்டும் வீங்கியிருக்குன்னு பேசினா என்ன பண்றது அதான் கேஸ் ஹிஸ்டரிய எடுத்து விட்டேன்

ஒபாமா:இங்கே கேமரா கீமரா இல்லேல்லியா?

முருகேசன்: நான் ஹோமோ கிடையாது. உங்களை பத்தியும் அப்படி இப்படி கேள்வி பட்டதில்லை. திடீர்னு ஏன் கேமராவ பத்தி கேட்கிறிங்க.

ஒபாமா:(மனதுக்குள்) என்னடா இது  ..........காட்டி புண்ணாக்கிக்கிட்ட கதையா  ஆயிருச்சு (வெளியே) சரிப்பா  மேட்டருக்கு வாப்பா. எப்படியோ ஒசாமா போட்டு தள்ளிட்டம். இப்பம் பார்த்தா நூறு ஒசாமா வந்துருவாய்ங்க போல இருக்கு. சுண்டைக்காய் இலங்கை கூட சீனா கிட்டே குலாவுது. பாக்கை பாரு கொட்டி கொடுத்தும் - அவிகளை வெட்டி விட்டுத்தேன் ஒசாமாவ போட்டுத்தள்ள முடிஞ்சது பொருளாதாரமா டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு. ஒசாமா ஃபீவர் ஒரு வாரம் தான் தாங்கும். எலக்சனுக்கு இன்னம் நாளிருக்கே.

முருகேசன்: நீங்க பேசறத பார்த்தா என்னமோ ஒருகாலத்துல பிக் ஃபைவே உங்க பாக்கெட்லருந்த மாதிரி அர்த்தம் வருது

( பிக் 5 ன்னா அஞ்சு பெரிய நாடுங்கண்ணா. அமெரிக்கா,பிரிட்டன்,ஃப்ரான்ஸு,சீனா, ரஷ்யா .இவிகளுக்கு ஐ நா சபையோட பாதுகாப்பு சபைல  நிரந்தர மெம்பர்ஷிப் உண்டு. வீட்டோ பவர் உண்டு. அதாவது ஐ. நா சபை எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் போடாங்கோத்தான்னிரலாம். தீர்மானம் ஃபணாலாயிரும். என்னதான் ரஷ்யா துண்டு துண்டா போயிட்டாலும் இன்னைக்கும் இந்த ஹோதாவ கொடுத்துதான் வச்சிருக்காய்ங்க)

ஒபாமா: நொந்து வந்தவனை இப்ப.......டி நோகடிக்கிறியேப்பா..

முருகேசன்:சரி சரி.. இப்போ முதல் கோணை முத்தும் கோணைன்னுவாங்களே அப்படி முதல் கோணைலருந்து திருத்தம் சொல்ல நான் தயார் . திருத்திக்க நீங்க தயாரா..?

ஒபாமா:சொல்லுப்பா ஏதோ ஒன்னு செய்யனும். எங்க ஊரு பேங்க் காரனெல்லாம் மானாவாரியா ஹவுசிங் லோனை கொடுத்துட்டு லோன் திரும்பாம , வீடுகளை ஜப்தி பண்ணி அதை ஏலம் விட்டா மார்க்கெட்ல அதை வாங்க நாதியில்லாம அவனவன் கார்லயே வாழ்ந்துக்கிட்டிருக்காம்பா..

முருகேசன்: நாம யார்கிட்டே டீல் பண்றமோ அவிக கேரக்டரை புரிஞ்சி கிட்டு டீல் பண்ணனும். உங்காளுங்களை நரிக்குறவங்க கணக்கா தயார் பண்ணது நீங்க. யூஸ் அண்ட் த்ரோ. கல்சரை கொண்டு வந்தது நீங்க. இந்த கல்ச்சர்ல வளர்ந்தவன் சொந்த வீடு கட்ட நினைப்பானா? இல்லே நீங்க தான் புது புது  விளம்பர யுக்திகளை வச்சு பெருமாளையே லட்டு வாங்க வைக்கிறவக ஆச்சே.  எங்காளுங்க அங்கே  மானாவரியா வந்து சேர்ந்ததால அவிகள பார்த்து, உங்க விளம்பரங்களை பார்த்து  வாங்கி தொலைச்சிருப்பாய்ங்க. திருப்பி கட்டற காலம் வந்தப்ப கீதை ஞா வந்திருக்கும். தத் இதென்னடா பரதர்மத்துல மாட்டிக்கிட்டோம் ஆயிரம் தான் இருந்தாலும் சுதர்மம் தான் பெட்டர்னு கை தூக்கிட்டிருப்பாய்ங்க.

ஒபாமா: யப்பா படம் வரைஞ்சு பாகம் குறிக்கிறியேப்பா.

முருகேசன்:இதுமட்டுமில்லிங்கண்ணா. தனியார் மயம், தனியார் மயம்னு கண்டதையும் தனியார் மயமாக்கினிங்க.கார் விற்பனைய கூட்ட பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட்டை வீக் பண்ணமாதிரி , மருத்துவம்,குடி நீர் சப்ளை ,சுத்தம்,சுகாதாரம், இன்ஷ்யூரன்ஸுன்னு சகலத்தையும் தனியார் மயமாக்கினிங்க.மக்களோட காஸ்ட் ஆஃப் லிவிங் ஏறிக்கிட்டே போச்சு.

மக்களோட தேவை கூடிக்கிட்டே போச்சு. அந்த தேவையோட நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆனைப்பசிக்கு சோளப்பொறி கணக்காயிருச்சு. உங்க சனங்க சைக்காலஜியே மாறிப்போச்சு. நீ என்னவேணா பண்ணிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆவது கார் வந்தே ஆகனும்னு ஃபிக்ஸ் ஆயிட்டாய்ங்க.

தனியார் மயம் தனியார் மயம்னு   யுத்த தளவாட உற்பத்தியை கூட தனியார் மயமாக்கிட்டிங்க. வியாபாரிக்கு எப்பவு தன் உற்பத்தி ,தன் லாபம்தான் முக்கியம். பிள்ளை  செத்தாலும் பரவால்லை மருமகள் தாலியறுக்கனும்ங்கற நேச்சர் தான் அவிகளுக்குண்டு. இங்கே டெலிகாம் கம்பெனிங்க எப்படி யாரு மந்திரியா இருக்கனும்னு கமாண்ட் பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்களோ அப்படியே அமெரிக்கா எந்த யுத்தத்தை ஆரம்பிக்கனும்னு அவிக டிசைட் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க

ஒபாமா: கரெக்டு தான் கரெக்டுதான்

முருகேசன்:அது மட்டுமில்லிங்கண்ணா யுத்ததளவாட உற்பத்தி நிறுவனங்கள் யுத்தத்துக்காக தார் குச்சி போட கன்ஸ் ட்ரக்சன் கம்பெனிங்க யுத்தத்தால  எரிஞ்ச  நாடுகள்ள புனர் நிர்மாண காண்ட்ராக்டு கிடைக்கும்னு  இருந்தாய்ங்க.

ஒபாமா: நேர்ல பார்த்த மாதிரி சொல்றியேப்பா

முருகேசன்:அந்த அளவுக்கு உலகமெல்லாம் நாறிப்போச்சுங்கண்ணா உங்க கதை

ஒபாமா:ஆமா ஏதோ முத கோணை முற்றும் கோணைனு ஆரம்பிச்சே..

முருகேசன்:ஆங்   மண்ணின் மைந்தர்களான ரெட் இண்டியன்ஸை மொக்கை பண்ணி தானே  நீங்க அரியணை ஏறினிங்க. அந்த பாவம் சொம்மா விடுமா? இன்னைக்கு ஸ்ரீ லங்கால ராஜ பக்சே பவிசா  ஆண்டுரலாம்னு அத்தினி லட்சம் மக்களை கொன்னு குவிச்சாரு. ஆணடுருவாருங்கறிங்க. இல்லை. இல்லிங்கண்ணா முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும். எளியவனை வலியவனடிச்சா வலையவனை தெய்வம் அடிக்கும்

ஒபாமா: இப்ப என்ன அமெரிக்காவை ரெட் இண்டியன்ஸுக்கு ஒப்படைச்சுட்டு எங்களை ஓடிப்போக சொல்றியா?

முருகேசன்:ஒபாமாண்ணே, சனத்துக்கு இன்னிக்கு நேத்தா ஐடியா தரேன். தாளி கடப்பாறைய முழுங்கினவனுக்கு சுக்கு கசாயத்தை ரெக்கமண்ட் பண்ணாத்தான் மறுபடி வரான் . நான் என்ன செய்யட்டும். ஓஞ்சு போவட்டும். அவிகளையும் உங்காளுங்களுக்கு சமமா நடத்துமய்யா.

ஒபாமா: ஓகே நெக்ஸ்ட்?

முருகேசன்: இந்த இஸ்ரேல் கதைய எடுத்துக்க. காட்டுத்தீக்கு நடுவுல கட்டி கற்பூரம் மாதிரி இந்த விச பரீட்சை தேவையானு ஒரு செகண்ட் ரோசிச்சிருந்தா.. முஸ்லீம் நாடுகளோட விரோதம் வந்திருக்குமா?

ஒபாமா:இப்ப என்னத்தான் சொல்றேப்பா இஸ்ரேலை மாத்திர சொல்றியா?

முருகேசன்:இல்லிங்கண்ணா அவிகளுக்கு கட் அண்ட் ரைட்டா சொல்லிரு. தபாருப்பா நாங்களே கெட்டு நொந்து கிடக்கோம். ஒரு காலத்துல ஏதோ அகங்காரத்துல பண்ண வேலை இது. நீங்க அக்கம் பக்கம் அனுசரிச்சிக்கிட்டு போங்கனு சொல்லிருங்க. இதை பத்தி எவ்ளோ செலவாச்சு, எத்தனை நாடு விரோதமாச்சு, எத்தனை யுத்தம் நடந்துச்சு செப்டம்பர் 11 சம்பவத்துக்கு இஸ்ரேல் சமாசாரம் எந்த அளவுக்கு காரணம்னு  ஒரு வெள்ளை அறிக்கை கூட விடுங்க தப்பில்லே.

ஒபாமா: ரொம்ப கவுரதை குறைச்சலா இருக்குமேப்பா.

முருகேசன்: இதானே வேணாங்கறது. கவுரதை பார்த்திருந்தா சுடுகாட்ல இருக்கிற வெட்டியான் கணக்கா  போர் கருவிகள் விக்கனும் யுத்தம் நடக்கனும் சனம் சாகனும் ரீ கன்ஸ்ட் ரக்சன் காண்ட் ராக்ட் வரனும்னு  ஸ்கெச் போட்டு பிடுங்கி தின்ன பிணம் கிடைக்குமான்னு காத்திருந்த  நரி மாதிரி வாழ்ந்ததை விட கவுரதை குறைச்சலா இது?

இத்தனை நாள் நீங்க விடாத உலக  அமைதி கோசமா? என்ன அப்போ அதுல உண்மையில்லை. இப்போ நவ துவாரத்துலயும் காத்து போயி வந்துக்கிட்டிருக்கிறதால  தலைக்கு ஏறியிருந்த அகங்காரம் இறங்கி வந்திருக்கிறதால அதுல உணர்ச்சியும் இருக்கும், உண்மையும் இருக்கும் அதை தொடர்ந்து ஆக்சனும் இருக்கும்.

ஒபாமா:சரிப்பா அடுத்ததா என்ன நடவடிக்கை எடுக்கனும்?

முருகேசன்: அணு ஆயுத ஒழிப்புன்னு ஒரு கோசம் உங்க கொடவுன்ல இருக்கில்லை. அதையும் தூசு தட்டி எடுத்து ஃபா லோ பண்ணுங்க. அணுமின்சாரம் தயாரிக்கிறதே  தற்கொலை பண்ணிக்கிற மாதிரி.இதுல அணு ஆயுதம்லாம் கொலைகாரனுவ பண்ற வேலை அண்ணாத்தை

ஒபாமா: நெக்ஸ்ட்?

முருகேசன்: ஈராக்ல அத்தினி ஆயிரம் அணு ஆயுதம் இருக்கு இத்தினி ஆயிரம் கிருமி ஆயுதமிருக்குனு பூந்து அடி அடினு அடிச்சிங்க. என்னத்த பிடிச்சிங்க? ஒரு ம...ருமில்லை. எங்காளுங்க சென்ட் ரல்  ஹோம் டிப்பார்ட்மெண்ட்ல அய்யர் பசங்க  பேச்சை கேட்டுக்கிட்டு தமிழ் ஈழத்துல வரதராஜனுக்கு முடி சூட்னாப்பல இல்லாம ஈராக்ல இருக்கிறதுலயே ஜூரி எவனோ அவனை ச்சூ காட்டிட்டு ராணுவத்தை வாபஸ் வாங்கிரு ராசா?  ஈரானுக்கு டகுலு விடறதுக்கு மிந்தி தபாரு எங்க கிட்டே இத்தனை அணு ஆயுதம் இருக்கு. இதுல இத்தினி ஆயுதத்தை அழிச்சுர்ரம்னு ஆரம்பி. இப்போ ஐ . நா வை வெத்து மிரட்டல் மிரட்டறாப்ல இல்லாம தர்மமா நடந்துக்கிட்டு உன் பின்னாடி தர்மத்தை  வச்சி ஐ.நா வுக்கு அழுத்தம் கொடு. எல்லாபயலும் வழிக்கு வரான்.

ஒபாமா:இந்த ஒசாமா அல்கொய்தா மேட்டரு ?

முருகேசன்: அந்த பார்ட்டிய ஊட்டி ஊட்டி வளர்த்து ரஷ்யா காரன் மேல விட்டதே நீங்க தானே பார்ட்டி.வளர்த்த கடா முட்ட வந்தாப்ல முட்டிட்டான். இப்ப அவனை நீங்க போட்டுட்டிங்க

ஒபாமா: தீர்வை சொல்லுப்பா..ரொம்பவே நொந்து போயிருக்கம்.

முருகேசன்:ஒசாமாவோட சாவுக்கப்பறமும் இத்தனை பீதி பேதியாக்க  பேஸ் என்ன அவிக மதம் அழிஞ்சுருமோ, அவிக கலாசாரம் காலாவதியாயிருமோனு நீங்க க்ரியேட் பண்ண டெர்ரர்தான்.

இஸ்லாம்ல எத்தனையோ நல்ல அம்சங்கள் இருக்கு. அதையெல்லாம் போற்றி பாடுங்க. முடிஞ்சதை அமல் படுத்துங்க. பெட் ரோல் தாகத்தால இஸ்லாம் நாடுகளோட  ரத்தம் குடிக்கிற குடிகேடித்தனத்துக்கு குட்பை சொல்லுங்க.

ஆல்ட்டர்னேட்டிவ் பவர், ஃப்யூயலுக்கு ஆராய்ச்சியை முடுக்கி விடுங்க . எங்க ராமர் பிள்ளை டகுல் வேலையையெல்லாம் விட்டுட்டு பாவம் இப்போ  நிஜமாவே ஏதோ வச்சிருக்கிற மாதிரி இருக்கு. அதை ட்ரை பண்ணி பாருங்க.

ஒபாமா:சரிப்பா  எங்க சனம் வளர்ச்சி வளர்ச்சிங்கறாய்ங்களே..

முருகேசன்:எங்க நாட்ல நித்யானந்தா, கல்கி மட்டுமில்லே இன்னைக்கும் உண்மையான சாமியாருங்க இருக்காய்ங்க. அவிக கைல கால்ல விழுந்து உங்க நாட்டுக்கு கூட்டிப்போய் ஆன்மீகத்தை போதிக்க சொல்லுங்க. போதுமென்ற மனமே பொன்செய் மருந்து.

ஒபாமா:சரிப்பா ஆயுத வியாபாரம் கூடாதுன்னிட்ட. வேற ஏதாவது ப்ராஜக்ட்ல பணத்தை போட்டாத்தானே

முருகேசன்:ஏன் எங்க நாட்டு நதிகளோட இணைப்பு மேல இன்வெஸ்ட் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி பாக்கிஸ்தானுக்கு ஸ்ட் ரிக்ட் வார்னிங்க் கொடுங்க.. பொழப்பை பார்க்க சொல்லி. விட்டா அவிக  நாட்லயும் இந்த நதி இணைப்பு வேலை ஏதாச்சும் இருந்தா இன்வெஸ்ட் பண்ணுங்க..

ஒபாமா: தேங்க்யூப்பா.. இன்னைக்கே இந்த நிமிசமே வேலைய ஆரம்பிச்சுர்ரன்

முருகேசன்:அடிச்சு தூள் கிளப்புங்க. கார்ப்பசேவ் மாதிரி படக்குனு புலி மேலருந்து இறங்கிராதிங்க.. புலி மேல சவாரி பண்ணிக்கிட்டே ஏதாச்சும் வாகா கிளை கிடைச்சா படக்குனு பிடிச்சிக்கிட்டு காலை தூக்கி மேல போட்டுக்கிட்டு புலியை உஸ்கோ உஸ்கோன்னிருங்க

ஒபாமா: சூப்பர்மா.. ஊருக்கு போய் செக் அனுப்பி வைக்கிறேன்.

முருகேசன்:அதெல்லாம் எதுக்கு தலை .. நான் சொன்னதை எல்லாம் அப்ளை பண்ணு உலகமே உருப்படும். அதுக்கு மிஞ்சின புண்ணியம் என்ன இருக்கு..

ஒபாமா:வித்யாசமான ஆளுப்பா..

முருகேசன்:அதனால தான் வித்யாசமா யோசிச்சு வித்யாசமான ஐடியா எல்லாம் கொடுத்திருக்கன். பை தி பை இந்த ஐடியாவை எல்லாம் அப்ளை பண்ணனும். இல்லேனு வை " ஒபாமா இனி உனக்கு ஆப்பும்மா"

அது எப்போ எப்படின்னு உன் ஜாதகத்தை நோண்டி நொங்கெடுத்து  அப்பாறமா சொல்றேன்.


Sunday, March 13, 2011

சோனியா ஆட்டம் க்ளோஸ்

சோனியாவின் ஆட்டம் க்ளோஸ்!
வணக்கம்ணே.காங்கிரஸ் பீகார் தேர்தல்ல பல்பு வாங்கறதுக்கு முந்தியே ஆங்கிலம் தெலுங்கு தமிழ்னு மும்மொழில பதிவு போட்டுஅபாயச்சங்கு ஊதின பார்ட்டி நானு.இத்தனைக்கும் அப்ப ஜஸ்ட் நியூமராலஜிப்படியான ஆய்வுத்தேன்.

இப்ப நம்ம டவுசர் பாண்டி தகவலால அம்மாவோட முழு ஜாதகத்தை கண் முன்னாடி வச்சுக்கிட்டு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். ஆரோ ஒரு ஜோதிடத்திலகம் அம்மாவ ஆதி சக்தி ரேஞ்சுக்கு சொன்னதா ஒரு தகவல். (கமெண்ட்ல பாருங்க)

அம்மாவோட ஜாதக விவரம்: கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது  ரிசபராசிங்க. லக்னாதிபதி உச்சம் - அக்காங் நம்ம கலைஞர் தாத்தா ஜாதகத்துல உள்ள அதே அம்சம்தேன். இங்கன ராகு சேர்ந்து தொலைச்சுட்டாரு.

லக்ன சனி:
இந்த அமைப்பு இளமையில் முதுமையை தரும். ஜாதகருக்கு மட்டுமில்லிங்கண்ணா ஜாதகரோட வாழ்க்கைத்துணைக்கும் முதுமைதேன் பரிசு. மேலும் கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளையும் தரும். ஒரு லேபரை கணவராக்கும் (ராஜீவ் காந்தி அந்த சமயம் ஏதோ ப்ரிக் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருனு ஞா)

இதுமட்டுமில்லிங்கண்ணா சீக்கிரமே வா.து யோட கதையை முடிச்சுரும். சனி பிதுர்களுக்கும்,ப்ரேதாத்மக்களுக்கும் காரகர். அதனால ஆ.காரர் சீக்கிரம் ப்ரேதாத்மா ஆயிரவும் வாய்ப்பிருக்கு. சனி கரும காரகன். அதாவது ஏழேழு தலைமுறைக்கு மிந்தி செய்த பாவம்,புண்ணியத்துக்கெல்லாம் கூட கூலி கொடுத்துருவாராம்ல.

இவருக்கு இவிக ஜாதகத்துல சப்தமாதபத்யமும் ,அஷ்டமாதிபத்யமும்  ( கணவர் - சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள்  எல்லாரையும் காட்டுமிடம் இது) கிடைச்சது. கணவர் கதை முற்றும்ங்கறதால இந்த சனி மேற்படி  சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள்  எல்லாரையும் வாட்டி வதக்குதோனு ஒரு சம்சயம். உ.ம் ஒய்.எஸ்.ஆர். வீல் சேர்ல கலைஞர்.

இவர்  3 ஐபார்க்கிறதால சகோதரத்துக்கும் பாதிப்புத்தேன் ( ஸ்பெக்ட்ரம் ஜில அவிகளையும் விஜாரிப்பாய்ங்களாமே) ஆனால் இவரு செமை தகிரியத்தையும் கொடுப்பாருங்கோ. ( சவுண்ட் பாக்ஸு அடி வாங்கவும் வாய்ப்பிருக்கு) ஏழை பார்த்த கதை (வதை) ஆல்ரெடி ஓடிருச்சு. பத்தை வேற பார்க்கிறாருங்கோ.

இதனால சட்டையில்லாதவன் ,கிழிஞ்ச சட்டை போட்டவன், லேபர், பிச்சைக்காரி பணம் கூட அம்மாவுக்கு வந்து சேர வாய்ப்பிருக்கு. ( மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டர் தெரியும்ல)

மரணம் -மரணம் தொடர்பான சொத்து ,சுகங்களுக்கெல்லாம் சனிதேன் இன் சார்ஜு. எட்டாமிடம் காரகம். அம்மாவுக்கு  இன்னைக்குள்ள " வானளாவிய அதிகாரம்"  உயில் மூலமாவும் /வாரிசு அடிப்படையிலயும் வந்ததுதேன்.

சந்திரன் உச்சம் தேன். (மனோகாரகன்) ஆனால் ராகு கூட சேர்ந்தாரே. இதனாலதான் கடல் தாண்டியும் "விவகாரங்கள்" நடத்தின மாதிரி கீது. ராசி ரிஷபங்கறதால அம்மாவுக்கும் தாத்தாபோல பணம்,குடும்பம்னா உசுரு.

அதுலயும் ஒரு லொள்ளை பாருங்க சர லக்னத்துக்கு லாபஸ்தானம்தேன் பாதகஸ்தானம் லக்னாதிபதியே இங்கன மாட்னாரு.உபரியா ராகுவோட சேர்க்கை. அம்மாவுக்கு " நெல்ல மனசுங்கோ".

ரெண்டுக்குடையோனும் ஆறுக்குடையோனும் சேர்ந்ததால குடும்ப கலகம் ( மேனகா காந்தி எபிசோட் தெரியும்ல) மேற்படி ரெண்டுக்குடையோன்( தன பாவாதிபதி)  தூர தேசங்களை காட்டும் 9 ஆமிடத்தோனான குருவோட சேர்ந்தாருங்கோ. இதனாலதான்  ஏதோ  நோன்பு அதிரசம்  கணக்கா சொந்த பந்தத்துக்கு எதையோ அனுப்பி வச்சுட்டதா சுப்பிரமணியம் ஸ்வாமி உளறி கொட்டறாரோ என்னமோ?

இந்த சேர்க்கை 4 ஆமிடத்துல நடந்தது. 4ங்கறது தாய் வீட்டை காட்டுமுங்கோ ( இத்.........தான மானாங்கறது)
ஏதோ சிறுவாடு பணம் தாய் வீட்டுக்கு போகுது.

அடுத்து பாருங்க 4 ஆமிடத்துக்கு இம்மாம் பில்டப் இருந்தாலும் அங்கன விரயாதிபதி சேர்ந்தாருங்கோ. பிச்சையெடுத்தான் பெருமாளு அத்த பிடுங்குச்சாம் அனுமாரு கணக்கா கைய விரிச்சுருவாய்ங்களோ என்னமோ ?

4ன்னா இதயம்ங்கண்ணா இந்த பாவாதிபதியோட விரயாதிபதி சேர்ந்ததால தான் இதயமே இல்லாம நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு தொட்டிலுக்கு முன்னாடி சவப்பெட்டிகள் தயாரானப்பல்லாம் வேடிக்கை பார்த்தாய்ங்களோ என்னமோ?

அஞ்சாமிடத்தை பாருங்க: எண்ணிக்கைய பார்த்தா ஹவுஸ் ஃபுல்லா தோணும். ஆனால் இங்கன விரயாதிபதியான புதன் ஒக்கார்ந்தாரு. அஞ்சுன்னா புத்தி விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா புள்ளை விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா பேர்புகழ் ,மன அமைதி விரயம்னா தெரியுமில்லை.

இதுமட்டுமில்லிங்கண்ணா மிச்சம் மீதி எதுனா பெட்டர் ரிசல்ட் இருந்தாலும் அதை ஒழிச்சுக்கட்ட இங்கன கேது ஒக்கார்ந்தாரு.

என்னதான் எதிரிகளை பத்தி சதா சிந்திச்சு வாழ்ந்தாலும் ( செவ்)  சகோதரங்களை தாங்கி பிடிச்சாலும் ( புதன், செவ்) சுக போக ஆடம்பர வாழ்க்கைய நடத்தினாலும் (சுக்கிரன்)  இந்த இடத்துல கேது உட்கார்ந்ததால கடாசில மிஞ்ச ப்போறது விரக்தி.

கேது தர்ர சாய்ஸ் ரெண்டுதேன். ஒன்னு பிச்சை எடுக்கனும் அ சன்னியாசியாகனும். பிச்சையே எடுத்தாலும் கிடைக்கனுமில்லை.

இது பூர்வ புண்ணியத்தை காட்டற இடம் . இங்கன கேது உட்கார்ந்ததால அடி விழ ஆரம்பிச்சா தாளி ஏழேழு ஜன்மத்து பாவமும் ஞா வந்து ஞானத்தை தேட ஆரம்பிச்சுரனும். அப்படிவிழும். மேலும் இது வாரிசை காட்டற இடம் (ராகுல்) இங்கன கேது உட்கார்ந்ததால  தான இவருக்கு சதா சர்வ காலம் 180 டிகிரில - ஏழாவது வீட்ல இருந்து பார்வை செய்யும் ராகுவோட பேரே வாரிசுக்கு ஃபிக்ஸ் ஆச்சோ என்னமோ?

5+3 துணிச்சலான முடிவுகள் 10+3 துணிச்சலான செயல்கள் 5+12 : புத்தி யுக்தியெல்லாம் வீணாஆஆஆஆஆ போயிரனும். 5+4 சதா குடும்ப சிந்தனை ( தாய்வீடுங்கோ) 5+11 சதா லாபம் குறித்த ஆவல், 5+ கேது நிராசை,அவமானம்,அவப்பேர், விரக்தி.

இதாங்கண்ணா அம்மாவோட ஜாதக பலன். இப்பம் தசாபுக்தியை பார்ப்போம்.

சனி தசை சனிபுக்தி: ( 06/Sep/2001  => 09/Sep/2004  )
அட்டமாதிபதியான சனியோட சுயபுக்தி யோக பலனை தந்ததுன்னா தசை டப்பாஸுன்னு அர்த்தம்.

சனி தசை புத புக்தி (09/Sep/2004  => 18/May/2007 )
என்ன தான் விரயாதிபதியா இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்துல உட்கார்ந்ததால அதையெல்லாம் எக்ஸாஸ்ட் பண்ணி பலன் கொடுத்தாரு புதன். (ஃபிக்சட் டிப்பாசிட்டை உடைச்சு செலவழிச்ச மாதிரி)

சனி தசை கேது புக்தி (18/May/2007  => 27/Jun/2008 )
இவர் அஞ்சுல ஒக்கார்ந்தாலும் இவருக்கு 180 டிகிரிஸ்ல ஏழாமிடத்துல உள்ள ராகு லக்னாதிபதியோட சேர்ந்த பாவத்துக்கு ஒப்பேத்தினாரு.

சனி தசை சுக்கிர  புக்தி (27/Jun/2008  => 27/Aug/2011 )
பாதகாதிபதியோட புக்தி. லக்னாதிபதியே இங்கனதான் ராகுவோட சேர்ந்து  உட்கார்ந்தாரு பாதகாதிபதி+சுகஸ்தானாதிபதி+லாபஸ்தானாதிபதியான சுக்கிரனோட கேது சேர்ந்திருக்கிறதால  டப்பா டான்ஸ் ஆடப்போறது நிச்சயம்.

இவிக மண வாழ்வை பத்தி ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. (சுக்கிரன்) அதுக்கு காரணம்  சுக்கிரனோட கேது சேர்ந்த எஃபெக்ட் தேன். வேணம்னா குரு தசை சுக்கிர புக்தில அம்மாவோட நெலமை எப்படியிருந்ததுன்னு கூகுல்ல தேடிப்பாருங்க (17/Jul/1993  => 16/Mar/1996 ) அதே ரேஞ்சுதேன் இப்ப மறுபடி வரப்போகுது.

இன்னொரு சமாசாரம் பாஸ். சனி தசையில சூரிய புக்தி 27/Aug/2011 அன்று ஆரம்பமாகப்போகுது. இதனோட எஃபெக்ட் ஆறு மாசம் முன்னாடி இருக்கும்னு அனுபவம்.

சூரிய தசையில சனி புக்தியோ ,சனி தசையில  சூரிய புக்தியோ வந்தா நாஸ்திதேன். சூரிய குரு சேர்க்கை பத்தி ஸ்லாகிச்சு எழுதியிருந்தேன். ( 2+9) ஆனால் அதே குருவுக்கு ரோகாதிபத்யமும் இருக்குதுங்கோ.வாக்குஸ்தானாதிபதி  சத்ரு ரோக ருணஸ்தானாதிபதியோட சேர்ந்தா  நம்ம சொற்களே விற்களா மாறி கற்களை மழையா பொழிவிக்குமுங்கோ

சத்தியமே உரைச்சாலும் அது எதிராளிக்கு உரைக்காதுங்கோ . இந்த பீரியட் 08/Aug/2012 வரை நடக்குதுங்கோ. அதனால அடிமேல அடிதேன்.

கோசாரம்:
ராசிய பார்த்தா ரிசபம். 9,10 க்கு அதிபதியான சனி அஞ்சுல. இதனால "சொத்து" சேரும். ஆனால் சனியாப்பட்டவர் அஞ்சுல உட்கார்ந்து பிள்ளைய உருப்படவிடாம செய்யறதோட அவரால ஜாதகரும் உருப்படாம செய்துருவாருங்க. பாவம் ராகுல்.

பொதுவா பார்த்தா ஆகா குரு 11லதானே இருக்காருனு நினைக்கலாம். ஆனால் குரு இவிக ராசிக்கு மரணத்தை தரவேண்டிய அட்டமாதிபதி நைனா.

ராகு கேது:
மே 16 முதல் இவிக ராசில கேதுவும் ( ஜாதகத்துல அஞ்சுல கேது) ஏழுல ராகுவும் வர்ராய்ங்க. இதனோட எஃபெக்ட் 3 மாசம் முன்னாடி ஐ மீன் ஃபிப்ரவரி 16 முதலே ஆரம்பமாயிரும். பலன்: தனிமரமாதல். இருட்டில் இருத்தல் .சூழ்ச்சிக்கு பலியாதல் .

( ஆருப்பா அங்கே விசிலடிக்கிறது...)

Tuesday, April 13, 2010

ஆகஸ்ட் 17 வரை சோதனைகாலம்

என்னடா இது புதுக்கரடினு சலிச்சுக்காதிங்கண்ணே. இந்திய திரு நாட்டோட சுதந்திரத்துக்கு கச்சாடாவா முகூர்த்தம் ஃபிக்ஸ் பண்ணி  நாட்டுக்கும், ந‌மக்கும் சேர்த்து பார்ப்பாரவுக வச்ச ஆப்பை இந்த பதிவுல  படிங்க‌

திடீர்னு நேத்து பாதிராத்திரி நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்ச நேரத்தை வச்சு ஜாதகம் கணிச்சு பார்த்தேன். ஏற்கெனவே பலரும் கணிச்சதுதான். நானும் பலதடவை ஜாதகம் போட்டு பார்த்ததுண்டுதான். என்ன அப்பல்லாம் எதிர்கால கணிப்புகள் பற்றிய அறிவிப்பு . டீக்கடையோட முடிஞ்சுரும். இப்போ வலையுலக கதவுகளை தட்டுது அதான் வித்யாசம்.

கையோட கையா  வான் மழை பொழியட்டும் தலைப்புல ஒரு கவிதை, உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயம் கூட போட்டிருக்கேன். அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா.

1992 லருந்து 6 மாசத்துக்கு ஒரு தரம் ரத்த தானம் பண்ணிட்டிருந்தேன். 2003லனு நினைக்கிறேன் ரத்தத்துல அதேதோ ஐட்டம் பெண்களுக்கு இருக்கிற ரேஞ்சுல தான் இருக்கு. இனி கொடுக்காதப்பான்னிட்டாங்க. இருந்தாலும் டூ இயர் ஒன்ஸ் கொடுத்துக்கிட்டிருக்கேன். இன்னைக்கு தமிழ் புத்தாண்டு தினமான இன்னைக்கு ரத்ததானம் கொடுக்க போனா எடை போட்டு பார்த்துட்டு 70 கிலோன்னிட்டாங்க. ( இதுக்கு முன்னாடி ஜஸ்ட் 48 இருந்தேங்க. )

சரி சரி மொக்கை போதும். இந்திய திரு நாட்டோட எதிர்காலத்தையும், நாட்டுக்கும், ந‌மக்கும் சேர்த்து பார்ப்பாரவுக வச்ச ஆப்பையும் படிங்க‌
ஜோதிஷ சாஸ்திரம் தோன்றி, வளர்ந்ததும் உலகெல்லாம் பரவினதும் இங்கிருந்துதான். ஆனால் பாருங்க அந்த கலைய தங்களோட ஆசனத்துலயே செருகி வச்சிருந்த பார்ட்டிங்க குறைஞ்ச பட்சம் சுதந்திரம் வாங்கவாவது நல்ல நேரமா பார்த்து சொல்லாம  சதி பண்ணியிருக்கானுவ.
நம்ம  நாட்டுக்கு சுதந்திரம் வாங்க மேற்படி பா.சதிகாரனுக ஃபிக்ஸ் பண்ண முகூர்த்தத்தை பாருங்க. லக்னம் ரிஷப லக்னம். (இது ஸ்திர லக்னம்ங்கறதால முன்னேற்றம் ஆமை வேகத்துல தான் நடக்கும்) 1-7 ல ராகு கேது. எல்லா கிரகமும் ராகு,கேதுக்கிடையில சிக்கியிருக்காய்ங்க. இத காலசர்ப்பதோசம்னுவாங்க. இந்த கிரகஸ்திதில குழந்தை பிறந்தா 45 வயசு வரை ஷெட்தான். ஒரு மயிரு டெவலப்மென்டும் இருக்காது.
1-7ல ராகு,கேது இருந்தா மாஃபியா, முக்கியமா ட்ரக் மாஃபியா, சினிமா, லிக்கர் லாபி, போலி மருந்துகளால எல்லாம் மக்கள்  கடுமையா பாதிக்கப்படுவாங்க. எவனை இந்த நாடு நண்பனு நினைச்சு நெருங்குதோ அது ஷெட் ஆயிரும் . உ.ம் ரஷ்யா. இல்லேன்னா ஆப்பு வச்சிரும். உ.ம் சீனா.  இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் எல்லாம் ராகு,கேது ஆதிக்கத்துக்குட்பட்டவைதான். இதனாலதான் லட்சக்கணக்கான விவசாயி பூச்சி மருந்து குடிச்சி தற்கொலை செய்துகிட்டாங்க. செய்துக்கறாங்க. இதர மொழி,இதர மதங்களையும் காட்டற கிரகங்கள் ராகு,கேது இவிக தீமை செய்யற நிலைல இருக்கிறதாலதான் அவனவன் மொழிபேராலயும், மதங்களின் பேராலும் அடிச்சிக்கிட்டு சாகறான். வைரல் ஃபீவர், கிருமிகள் பரவறதுக்கும் ராகு,கேதுதான் காரணம்.
இந்த வயித்தெரிச்சலை ஒதுக்கிவச்சிட்டு லக்னாதிபதியாவது பலமா இருக்கானானு பார்த்தா சுக்கிரன் சூரியனோட சேர்ந்துருக்கார்.  இந்தியா ஒவ்வொரு  நண்பனையா இழந்துக்கிட்டே வருங்கறத தான் இது காட்டுது.சூரியன் மலைபிரதேசங்களை காட்டற கிரகம். அந்த நாள் முதல் முந்தா நேத்து க்ரீன் ஹன்ட்ல  80 பேர் வரை ஜவான்கள் தீவிரவாதிகளால்  கொல்லப்பட்டது வரை எல்லாமே சூரியனோட எஃபெக்டு தான் ( மேற்படி மலை பிரதேசங்களை அங்கே  இருக்கிற பாக்சைட்டை தோண்டி எடுக்க மல்ட்டி நேஷ்னல் கம்பெனீஸுக்கு தாரை வார்க்கத்தான் இந்த க்ரீன் ஹன்ட் ஆப்பரேஷனுன்னு தகவல்.
ஆண்கள் ஆண்மை இழக்கவும்,பெண்கள் பெண்மை குணங்களை இழந்து அதன் மூலமா தாய்மை குணத்தை  இழக்கவும் (மாயாவதி போடற ஆட்டத்தை பார்க்கிறிங்கள்ள)  காரணம் கூட சுக்கிர சூரிய சேர்க்கைதான். இவ்ள ஏன் சார்  கல்யாணம் காட்சி இல்லாமே இத்தினி லட்சம் ஆண்,பெண் தனிமைல தவிக்க, ஃபேமிலி கோர்ட்,மஹிளா ஸ்டேஷன் எல்லாம் நிரம்பி வழிய கூட இந்த சுக்கிர சூரிய சேர்க்கைதான் காரணம்.
லக்னாதிபதி சுக்கிரன் பெண்கிரகமா இருந்தாலும், அவர் சூரியனோட சேர்ந்ததால தனிமைல வாழற பெண்கள்தான் ஆட்சியை பிடிப்பாங்க. தனிமை இன் செக்யூரிட்டிய தான் தரும். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்சுவல் டிசைர் வன்முறையதான் தூண்டும்.
யுத்தகாரகனான செவ்வாய் 2ல இருந்து அஞ்சு, எட்டு ,ஒன்பதை  பார்க்கிறார். அஞ்சை பார்த்தா டென்சன், எட்டை பார்த்தா யுத்தம், உள்  நாட்டு கலவரம், ஒன்பதை பார்த்தா டபுள் தண்ட ராணுவ செலவு. செவ்வாய் சகோதர காரகன். அதனாலதான் சகோதர தேசமான பாக்கிஸ்தானோட முட்டிக்கிட்டு சாகறோம்.
மூனாவது இடத்தை பாருங்க. லக்னத்துக்கு யோகத்தை தர வேண்டிய புதன்,சனி,சுக்கிரன் எல்லாம் சேர்ந்திருக்காய்ங்க. என்ன புண்ணியம்? இவிகளோட சந்திரனும் சேர்ந்திருக்காரு. இன்ஸ்டெபிலிட்டிக்கு காரகனே சந்திரன் தான். ஏறினா ரயிலு,இறங்கினா ஜெயிலு. சந்திர சேகர் காலத்துல கஜானால இருந்த தங்கத்தையெல்லாம் கொண்டு போய் அடகுவைக்கிற ஸ்டேஜ் கூட வந்துருச்சு தெரியுமில்லே. சந்திரனோட எஃபெக்ட் எந்த அளவுக்கு இருக்கும்னு தெரிஞ்சிக்கனும்னா  27/May/1957 => 26/Dec/1958  , 23/Jul/1972 => 23/Dec/1973   27/May/1984 => 27/Dec/1984 ,23/Oct/1993 => 23/Jun/1995 காலகட்டங்கள்ள என்ன நடந்தது எப்படி இருந்ததுன்னு நினைச்சு பாருங்க. இந்த பீரியட் எல்லாம் பல்வேறு தசைகள்ள சந்திர புக்தி  நடந்த கால கட்டம். இதே மாதிரி காலகட்டம் எதிர்காலத்துலயும் வருது. டேக் கேருங்கோவ் !
23/Jun/2015 22/Jun/2025 (பத்து வருஷம் தலை ! டப்பா டான்ஸ் ஆடிர போவுது)
ஆக நாட்டோட சுபிட்சம், கொள்கை, ஆட்சி,அதிகாரம், சொத்து, தொழில் முன்னேற்றம்,ரெவின்யூ இன் கம், உள் நாட்டு ஒற்றுமை, தலைவர்களோட பேச்சுக்கு உலக அரங்குல மதிப்பு, நாட்டின் பெயர், புகழ் எல்லாமே நிலையற்றதா இருக்கும்.
இதோட ஒழிஞ்சா பரவால்ல. இந்த க்ரூப்ல சூரியன் வேற சேர்ந்திருக்காரு. சூரியன் சேர்ந்ததால சனி,சுக்கிரன்,சந்திரர்களோட பலமெல்லாம் காலி. மிச்சம் மீதி இருக்கிறது புதன் தான். புதன் யாரு? ஜஸ்ட் வியாபாரகாரகன். தகவல்,தொழில் நுட்பம், மீடியா இதுக்கெல்லாம் புதன் தான் காரகன். இப்போ நாட்டை ஆள்றது வியாபாரிங்கதானே.
கட்சிகளுக்கும்,எம்.பிங்களுக்கும் கார்ப்போரேட் கம்பெனீஸ்  எலக்சன் ஃபண்ட் கொடுக்கறாங்க. இவிக அந்த கம்பெனிகளுக்கு லைசன் ஆஃபீசர்ஸ் மாதிரி தானே பிஹேவ் பண்றாய்ங்க. புதன் வேசிகளூக்கு கூட காரகத்வம் வகிக்கிறார். திவாரி மாதிரி இன்னம் எத்தனை கவர்னர்,எத்தனை சி.எம் இருக்கானோ யாருக்கு தெரியும்? இப்ப சொல்லுங்க நாட்டை ஆள்றது வேசிகளா இருக்க கூடுமா கூடாதா?
ஐயருங்க இத்தினி சதி பண்ணி, இந்த மாதிரி ஒரு கேடு கெட்ட நேரத்துல முகூர்த்தம் வச்சி நம்மை அழிச்சுர பார்த்தாலும் அவிகளையும் மீறி ஒரு தூளான அமைப்பு  மாட்டிக்கிச்சு அதான் எட்டுக்கு அதிபதி 6 ல உட்கார்ந்தது. இந்த அமைப்பு மட்டும் இல்லாம இருந்திருந்தா கதை கந்தல்தான். எட்டுன்னா அழிவு, மரணத்தை காட்டற பாவம். ஆறுங்கறது கடனை,எதிரிகளை காட்டற ,வழக்கு விவகாரங்களை காட்டற பாவம் .எட்டுக்கதிபதியான குரு 6 ல உட்கார்ந்தாதால இந்தியாவோட கடனெல்லாம் ஒழியும், எதிரிங்க எல்லாம் அழிஞ்சு போயிருவாய்ங்க.
இது எப்போ நடக்கும்னு கேட்கலாம். இது ஏற்கெனவே கூட நடந்திருக்கலாம். அந்த கால கட்டங்களை பாருங்க.
06/Jul/1977 => 12/Oct/1979
10/Jun/1986 => 16/May/1987
23/Aug/1999 => 22/Apr/2002 .இந்த நேரம் எதிர்காலத்துல 10/Jul/2011 => முதல் 28/Apr/2012 வரை வருது. அப்ப பாருங்க எப்படி கடன் தீருது. எதிரிங்க எப்படி ஒழியறாங்கனு.
சரிப்பா தலைப்புல ஏதோ சோதனைகாலம்னுட்டு இப்படி ஜல்லியடிக்கிறியேங்கறிங்களா அந்த காலகட்டம்  11/Apr/2010 =>ல துவங்கி  17/Aug/2010 வரை நடக்க போவுது.  இது மாதிரி காலகட்டம் பாஸ்ட்ல எப்போ வந்ததுனு கீழே தரேன். மேட்ச் பண்ணி பாருங்க. 26/Dec/1958 => 04/Feb/1960  ,23/Dec/1973 => 19/Dec/1974 27/Dec/1984 => 23/May/1985 .
மேலும் மே4 முதல் ஜூலை 23க்குள்ள மறுபடி தங்கத்தை அடகுவச்சாலும் வப்பானுங்கோ.. ஜூலை 23ல இருந்து டிசம்பர் வரைக்கும் பொருளாதாரம் அப்படியே அந்த காலத்து ஜெயமாலினி வயிறு மாதிரி குலுங்க போவுதுங்கோவ்.

Wednesday, April 7, 2010

ஜோதிடம் ஒரு விஞ்ஞானம்

அண்ணே ,வணக்கம்னே ,
இன்னைக்கு "உனக்கு 22 எனக்கு 32" தொடர்கதை யோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் போட்டிருக்கேன் . அதை படிக்க இங்கே அழுத்துங்க‌ 

ஜோதிடக்கலையின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நம்பிக்கைக்கான அடித்தளம் அவரவரது சொந்த அனுபவம் என்றால் நான் இதை வரவேற்கிறேன்.யதார்த்த  நிலை அப்படியில்லையோ என்று தோன்றுகிறது.

காரணம் ஜோதிடம் என்பதை ஜோதிடர்களாகட்டும், ஜோதிட ஆர்வலர்களாகட்டும் ஜோதிடத்தை நம்பிக்கை சார்ந்த ஒன்றாகவே பார்க்கிறார்கள். ஜோதிடம் ஒரு விஞ்ஞானம். அது வெறுமனே நம்புபவர்களுக்கு மட்டுமானதல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்கானது. இதை ஒட்டு மனித குல  மேன்மைக்கு பயன்படுத்த வேண்டுமானால் ஜோதிடர்களாகட்டும், ஜோதிட ஆர்வலர்களாகட்டும் ஜோதிடத்தை விஞ்ஞான நோக்குடன் அணுக  கற்கவேண்டும்.

ஜோதிடரை கேட்டால் "என்னமோங்க யார் விஷயத்துல எப்படி நடக்குதோ நடக்கலையோ என்னை பொருத்தவரை  நான் சொன்னதெல்லாம் நடக்குது" என்று சொல்லும் நிலைதான் உள்ளது.

ஜோதிட ஆர்வலரை கேட்டால் " எனக்கு யார் மேலயும் நம்பிக்கையில்லைங்க பலானவர் சொன்னாதான் எனக்கு நடக்கு என்று சொல்லும் நிலையுள்ளது.

இவை ஜோதிடத்தின் விஞ்ஞான தன்மையை கடுமையாக பாதிக்கின்றன. ஜோதிடர்கள் ஜோதிட நிபுணதுவத்தை தம் தனி நபர் சொத்தாக பாவிப்பதும், ரகசியமாய் வைப்பதும் கூட இதற்கு ஒரு காரணம்.

ஜாதகசக்கரத்தில் இன்ன கிரகம் இன்ன இடத்திலிருந்தால் இந்த பலன் என்று அனேக ஜோதிஷ கிரந்தங்கள் கூறுகின்றன. இவற்றை ஜஸ்ட் மனப்பாடம் செய்து அப்படியே வாந்தி பண்ணும்   நிலைதான் உள்ளது.

எங்கோ ஆகாய வெளியில் பல கோடி மைல் தூரத்தில் உள்ள கிரகங்கள் மனிதனை எப்படி பாதிக்கின்றன ? என்று கேள்வி கேட்டால் எத்தனை ஜோதிடர்களால் பதில் சொல்ல முடியும் என்பது கேள்விக்குறியே.

மனித உடல்,மனம்,மூளை மீதான கிரகங்களின்  பாதிப்பு உண்மையேயானாலும்  ரிஷிகள் ,மகரிஷிகளேயானாலும் சரி என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எழுதி வைத்த பலன் அப்படியே நடக்கும் என்பதற்கு என்ன கியாரண்டி.அவிக முட்டாளுங்கனு சொல்ல வரலை.

அவிக பலன் எழுதின காலத்துக்கும், இந்த காலத்துக்கும் எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கு. அப்போ மன்னராட்சி, இப்போ மக்களாட்சி, அப்போ மாட்டுவண்டி,குதிரை வண்டிதான் வாகனம். மண் ரோடு. சனத்தொகை கம்மி. ட்ராஃபிக் கம்மி. இன்னைக்கு சிக்ஸ் ட்ராக் ரோடிருக்கு, லட்ச ரூபால இருந்து கோடி ரூபா வரை விலையுள்ள கார்கள் இருக்கு. இப்ப கூட இது பைக்குன்னா பைக்கில்ல, காருன்னா காரில்லைனு ஒரு விசித்திரமான வாகனத்தை விட்டிருக்காங்க.

அப்போ சனம் சூரியன் உதிக்கறப்பவே தாங்களும்  விழிச்சு , வேலை வெட்டினு பார்த்து சூரியன் அஸ்தமிக்கிறப்பவே வீட்டை போய் சேர்ந்து முடங்கிக்கிட்டிருந்தாங்க. கூட்டுக்குடும்பம் இருந்தது. விவசாயம்தான் முக்கிய தொழிலா இருந்தது. சொந்தம்,பந்தம்ங்கற அட்டாச்மென்டெல்லாம் பக்காவா இருந்தது. பொம்பள பசங்க 17 ,18 வயசுல மெச்யூர் ஆகிட்டிருந்தாங்க. பத்து வயசுலயே கல்யாணம் நடந்து கிட்டிருந்தது.காத்து,தண்ணி, எரி பொருள் எல்லாமே ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல கிடைச்சிட்டிருந்தது. அப்பல்லாம் பண்டிகை காலத்துல தான் அரிசி சோறு. இப்போ 365 நாளும் அதுவே .

அப்போ டீ,காஃபி கிடையாது. இப்போ அது இல்லன்னா ஆயே வராது. அப்போ படிப்புன்னா இலக்கணம்,இலக்கியம் தான் படிப்பு. இப்போ ?இப்படி தனி மனிதவாழ்வு மட்டுமில்லே, வானும்,மண்ணும்,கடல் காற்றும் ஏன் தாய்பால் கூட மாறியிருக்கு.

மேற்படி ரிஷிகள்,மகரிஷிகள் எழுதிவச்ச பலன்களை  இன்னைக்கும் ஈயடிச்சான் காப்பி மாதிரி சொல்லிக்கிட்டிருந்தா வேலைக்காகுமா? இந்த கோணத்துல யாராவது யோசிச்சதுண்டா?

ஜோதிஷம் உண்மைன்னா, அது ஒரு விஞ்ஞானம்னா  எந்த ஜோதிடர் யாருக்கு  பலன் சொன்னாலும் அது நடக்கனுமில்லயா? ஜோதிடர்கள் தாங்கள் சொல்லி நடந்த விஷயங்களை மட்டும் தினசரிகளில் விளம்பரமாக கொடுத்து பந்தா பண்ணுகிறார்களே தவிர தாம் பலன் சொல்லி நடக்காமல் போன  சந்தர்ப்பங்களை மட்டும் வசதியாய் மறந்து போகிறார்கள்.

நான் இந்த துறைக்குள் அடியெடுத்து வைத்தது வெறுமனே சுய நலம் கருதிதான். ஒரே ஆசாமி, பிளாட்ஃபாரத்து ஆசாமி சொன்ன பலன்  ஆக்யுரேட்டாய் நடந்துவிடவே என் ஈகோ மரண அடி வாங்கியது. அதன் பின் அதே ஆசாமியை அணுகியும் அவரால் சரியாய்  பலன் சொல்ல முடியாமல் போயிற்று. அடுத்தடுத்து நான் அணுகிய நபர்களும் ரொம்பவே அந்தாசா பலன் சொல்லவும்தான் நானே களத்துல குதிச்சேன்.என் எதிர்காலத்தை நான் முழுக்க  அறியவே ஜோதிஷம் கற்றேன்.

எத்தனை ஜோசியர்களுக்கு ஜோசியத்து மேல நம்பிக்கையிருக்கோ எனக்கு தெரியாது. ஆனால் நான் நம்பறேன். பாருங்க நான் நம்பிக்கைங்கற வார்த்தைய உபயோகிக்கிறேன்.  நம்பிக்கை என்ற வார்த்தையே அது தர்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பது மாதிரி தொனிக்கிறது. 

1989 முதல் என்னை அணுகிய ஆர்வலர்களுக்கு நான் என்ன சொன்னேன் என்ன நடந்தது. எத்தனை சதவீதம் சக்ஸஸ் ஆச்சு, எத்தனை சதவீதம் ஃபெயில் ஆச்சுங்கற தகவல் ஸ்தூலமா இல்லாட்டியும் ஒரு குன்சா ஞா இருக்கு. ரஜினி ஸ்டைல்ல சொன்னா கியாபகம் இருக்கு. ஆனால் இது ஆராய்ச்சிக்கு உதவாதுதான் .

இருந்தாலும் ஆயிரம் பேரை கொன்னா அரைவைத்தியங்கற மாதிரி பல பலன்கள்  தவறினாலும் அது ஏன் தவறிப்போச்சுனு விடாப்பிடியா  ஆராய்ச்சி பண்ற ஈகோ, பிடிவாதம்,சின்சியாரிட்டி இருந்ததால  அனுபவ ஜோதிடம் னு தனியா ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கேன்.

அனுபவ ஜோதிடத்தோட சாரம் என்னடான்னா ஜாதக சக்கரத்துல ஒரு கிரகம் நின்னிருக்கிறதை பார்த்ததுமே படபடனு பலனை சொல்லிர்ரதுல்ல. முதல்ல ஒன்னு ரெண்டு பாயிண்டை சொல்லி அது நடந்திருக்கா தெரிஞ்சிக்கனும். ஒரு வேளை நடக்கலன்னா ஏன் நடக்கலை அந்த கிரகஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்றமாதிரி வேற ஏதானா அம்சமிருக்கா பார்க்கனும். உ.ம் கிரக பாதசாரம், பாவச்சக்கரத்துல பலம் பெற்றுள்ளது

இப்படி ஒவ்வொரு கிரகத்தையும், ஒவ்வொரு பாவத்தையும் செக் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம்தான் பலன் சொல்லனும்.

லக்னம்னா அது ஜாதகரோட உடல், மனம்,புத்தியை காட்டுது. லக்னத்துல நின்ன கிரகம்  ஜாதகரோட உடல் மேல வேலை செய்யலாம், மனசு மேல  வேலை செய்யலாம். இல்லே புத்தி மேல வேலை செய்யலாம். இத்தனை ஆப்ஷன் இருக்கு. லக்னத்துல சனியிருக்காருனு வைங்க . சனி பாடி மேல வேலை செய்தா பார்ட்டி கருப்பா இருக்கலாம், கால் ஊனமா இருக்கலாம். இரும்பு ,ஆயில் தொடர்பான வேலை செய்யலாம். ஒரு வேளை மனசு மேல வேலை செய்யறதா இருந்தா மனுஷன் கஞ்ச பிசினாறியா இருப்பார். கூலிக்கு மாரடிக்கிற் பார்ட்டியா இருக்கலாம். புத்தி மேல வேலை செய்தா ட்ராப் அவுட்டா இருக்கலாம். ( ஒரு வேளை சனி யோகத்தை தரக்கூடிய ஜாதகமா இருந்து , சனி பலம் பெற்றிருந்தா இந்த பலன் தலை கீழா மாறும்)

ஆக கிரக பலன் நீங்கள் கருப்பா, சிவப்பா,  மணமானவரா இல்லையா? மணமாகாவிட்டால் பலான பெண்களை அணுகுபவரா இல்லையா? அப்பா அம்மாவை வைத்து போஷிப்பவரா இல்லையா? நல்லது கெட்டதுக்காவது  அக்கா,மாமா, அண்ணா,தம்பிகளை கூப்பிடறவரா இல்லையா? வேலைக்காரவுங்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்கிறவரா இல்லையா இப்படி பல அம்சங்களை பொருத்து மாறிவிடுகின்றன.

எனவே  கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீயபலன்களும் அனைத்தும் நடந்துவிடுவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை குறித்து 1989 முதல் ஆராய்ந்து வருகிறேன்.அவ்வப்போது பதிவுகளும் போட்டு வருகிறேன்.  இந்த முயற்சி தொடரும்.


எனவே  ஜாதகத்தை  பார்த்து ஜோதிடர் கூறும் பலன்கள் 100 சதம் ஏற்கெனவே நடந்திருக்க வேண்டும் என்ற அவஸ்யமில்லை. நீங்கள் அவரை அணுகும் சமயம் நடக்காத பலன்கள் எதிர்காலத்தில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.


ஆகவே ஜோதிடர் கூறும் பலன் 60 சதவீதம் நடந்தாலே அவர்  சூப்பர் ஜோதிடர் என்பதை மனதில் வைத்து பலனை படிக்கவும் .

முக்கிய விஷயம் என்னவென்றால் ஜோதிஷம் வேதத்துல ஒரு பாகம்னு பம்மாத்து பண்ணி, அதை தங்கள் இனத்துக்கு மட்டுமே உரிமையானதாக்கிக்கிட்டு ஆர்வமிருக்கோ இல்லையோ, தகுதி இருக்கோ இல்லையோ ஜோதிஷத்தை தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுக்கொடுத்தபடி , பிராமணர்களில் பலர் இல்லாத பொல்லாத சீக்ரஸி  மெயிண்டெயின் பண்ணதால  இந்த விஞ்ஞானம் தலைமுறைக்கு தலைமுறை ஹோல்சேலா எக்சேஞ்ச் ஆகாம, பார்ஷியாலிட்டி காரணமா பார்ஷியலா தான் எக்ஸ்சேஞ்ச் ஆச்சு. இப்போ நாங்க சொல்ற ஜோசியமெல்லாம் ஜோசியமே இல்லனு கூட சொல்லலாம்.

என்ன செய்ய அவிக அன்னிய படையெடுப்பு சமயத்துல அன்னியர்கள் பூட்ஸை நக்கி, பர பாஷை கத்துக்கிட்டு துபாஷிகளா மாறி கிச்சன் கேபினட்டா தயாராய்ட்டாய்ங்க.ராஜ சேவைக்கே அங்கிதமாயிட்டாய்ங்க.

வேதங்களை போலவே   ஜோதிஷத்தையும்  குப்பைல போட்டுட்டாங்க. என்னை மாதிரி சூத்திர பசங்க அதை பொறுக்கி எடுத்து ஸார்ட் அவுட் பண்ணி ஏதோ கதை பண்ணிக்கிட்டிருக்கம். ஹூம் .. நம்ம சனம் கொடுத்து வச்சது அவ்ளதான்.

இப்பவும் சான்ஸ் இருக்கு ஐபிஎல், அது இதுனு அலையற இளைஞர் கூட்டம் இந்த தலைமுறைல மிச்சமிருக்கிற ஜோதிஷ (விஞ்)  ஞானத்தையாவது  பாதுகாக்க முயற்சி பண்ணனும். அடுத்த தலைமுறைக்கு இதை சிந்தாம சிதறாம எக்சேஞ்ச் பண்ண நான் காத்திருக்கேன்.