Sunday, July 17, 2011
ஆண் பெண் வித்யாசம்; 8 ஆம் பாவம் (தொடர்ச்சி)
ஜாதகத்துல எட்டாம் பாவம் அடிமைத்தனததை காட்டுது. அந்த அடிமைத்தனத்தால பல நன்மைகள் கிடைக்குதுன்னு சொல்லியிருந்தேன். ஆணும் ஏதோ ஒருவகையில அடிமையாத்தான் இருக்கான். ஆனால் அவனோட அடிமைத்தனத்துக்கு பிரதிபலன் கிடைக்குது. பெண்ணோட அடிமைத்தனத்துக்கு கிடைக்கும் பிரதி பலன் என்ன? இந்த உலக உருண்டையத்தனை பெரிய பூஜ்ஜியம். அதனால பெண்ணோட ஜாதகத்துல எட்டாமிடம் சுபபலமா இருந்தா கண்ணாலமாகுது அவள் அடிமையாகிறாள். அடிமையானதுக்கு . அவளுக்கு ஒரு மசுரும் கிடைக்கறதில்லை. இதனாலதேன் தாய்குலத்துக்கு ஆயுள் சாஸ்தி. (கம்பேரிட்டிவ்லி)
அவள் அடிமையா இருக்கிறதால எட்டாமிடம் கெட்டால் ஏற்படக்கூடிய பல தீயபலன் அவாய்ட் ஆயிருது. சுதந்திரம்னு இறங்கினாத்தேன் எட்டாம் பாவத்தோட இதர காரகத்வமெல்லாம் ஆப்பு வைக்குது . உ.ம் சீட்டுப்போட்டா /ஐ.பி போட வேண்டி வருது / தலைமறைவாகவேண்டி வருது/காவல் நிலையம் -கோர்ட்டுனு அல்லாட வேண்டி வருது. சுதந்திரம்னு ட்ராஃபிக்ல டூ வீலர்ல பறந்தா உயிர் ஆக்சிடென்ட் நடக்குது. சுதந்திரம்னு ஆளை மாத்தினா அரிவாள் வெட்டு கிடைக்குது. தன்னைத்தான் கேள்வி கேட்டுக்கிட்டா தற்கொலை பண்ண வேண்டி வருது . புருசனை கேள்வி கேட்டா அவன் கொலை பண்ணிர்ரான். இன்னும் கட்டற்ற சுதந்திரம்னு காண்டொம் யூஸ் பண்ணாம திரிஞ்சா இன உறுப்புல நெருப்பு வச்ச கணக்கா எரியற வியாதியெல்லாம் வந்துருது.
இப்ப ஒடனே என் நெம்பரை டயல் பண்ணி "என்னண்ணே சொல்ல வர்ரிங்க? பெண் அடிமையாவே இருந்துட்டா சேஃப். சுதந்திரம்னு கேட்டா ஆஃப்ங்கறிங்களா? "னு கேட்க போறிங்க. அப்டித்தானே?
கூல்! கூல் ! ஹ்யூமன் லைஃப்ல - வாழ்க்கை சக்கரத்துல - இயற்கையோட சட்ட திட்டங்கள்ள ஒரு வினோத விதி இருக்கு. அதுக்கு ரிவர்ஸ் எஃபெக்டுனு பேரு. (ஓஷோ இதுக்கு சிம்பிளா சின்னவயசுல சிறுவர்கள் சிறுவர்களையும் /சிறுமிகள் சிறுமிகளையும் மட்டுமே விரும்பறதை உதாரணமா சொல்வாரு)
பெண் மட்டுமல்ல எந்த உயிரும் விரும்புவது சுதந்திரத்தை தேன். ஏன்னா அதனோட உண்மையான இறுதியான வடிவம் ஆன்மா. அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆத்தாளை " சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹா"ன்னு போற்றிப்பாடறாய்ங்க.
நாமெல்லாம் அவளோட பிள்ளைகள். தாயை போல பிள்ளைங்கறதை அனானி கமெண்ட் போடறதுல தான் ப்ரூவ் பண்றோம் அது வேற விஷயம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? ( அனாவசியமா இதுல கலைஞர் -கனிமொழியை போட்டு குழப்பிக்காதிங்க) ஆத்தா சர்வ ஸ்வதந்த்ரின்னா நாமளும் சர்வ சுதந்திரர்களாதானே இருக்கனும். ஏன் இப்படி அடிமைப்பட்டு போனோம்.
பாய்ண்ட் நெம்பர் ஒன் இந்த பாடி. பேபி லைட் மேல கவுத்து போட்ட கோழிக்கூடை மாதிரி கிடக்கு. அடுத்து நம்மளோட பிரமைகள். .
எட்டாமிடம் மரணத்தை காட்டுமிடம். மரணம் விசித்திரமானது . ஒரு வகையில நம்மை கவரவும் செய்யுது.
அதனாலதேன் லவ் பண்றோம். ( லவ்வரோட மாமன் மிலிட்டரி பார்ட்டியா இருந்து பொட்டுன்னு சுட்டுருவானே) இன்னொரு வகையில டர்ராக்கவும் செய்யுது..தூக்குப்போட்டு தற்கொலை செய்துகிட்டவுக கழுத்துல ஒன்னுக்கு மேல தூக்குக் கயிறோட அடையாளம் இருக்கும். ஏன்னா கடைசி நொடியில வாழனுங்கற எண்ணம் வந்திருக்கும். இவன் அதை விலக்க ட்ரை பண்ணியிருப்பான்.
நம்ம டோட்டல் லைஃபையும் மரணம்தேன் வழி நடத்துது. ஒன்னு மரணம் குறித்த அச்சம். இன்னொன்னு மரணத்தின் மீதான கவர்ச்சி. எப்படி பார்த்தாலும் மரணம்தான் " எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்"ன்னு ஒவ்வொருத்தர் லைஃப்லயும் சோலோவா பாடுது.
கொய்யால மரணம்னா என்ன? நான் இல்லாத உலகம் . உனக்கு இந்த உலகத்தை முழுசா தெரியாது. உலகத்துக்கு ? உன்னை தெரியவே தெரியாது. சாவை சிந்திக்கிறது வேற ..சந்திக்க துணியறது வேற சந்திக்கிறது வேற.
சந்திக்க துடிக்கிறது - கச்சாமுச்சான்னு டர்ராகி ஒதகாத மேட்டரையெல்லாம் - இருட்டு -தனிமை -ஏழ்மை - நிராகரிப்பு - மரணத்தோட முடிச்சு போட்டு அதோட எல்லாம் போராடி என்னைக்கோ வர்ர சாவை இன்னைக்கே வெத்தலைபாக்கு வச்சு கூப்பிடறது வேற.
இந்த மாரி மரணத்துக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துட்டு தெனாலி கமல் மாதிரி பயம் பயம் பயம் அதுலயும் மரண பயம். மரணத்துக்கும் நம்ம பயத்துக்கும் என்ன சம்பந்தம்னே தெரியாத பயம்.
பயம் பலவீனத்தை தருது .பலவீனம் பிரமைகளை அதிகரிக்குது. சத்தியத்தை மறைக்குது. மன்சன் ஜஸ்ட் மரணத்துக்கு மட்டும் பயந்தா கூட இந்த அளவுக்கு நாறியிருக்க மாட்டான். அல்லாரும் ஆடு,மாடு மாதிரி இலை தழைய தின்னுக்கிட்டு ராம் தேவ்பாபா மாதிரி யோகா பண்ணிக்கிட்டு லுல்லாவை ச்சூ ச்சூ போறதுக்கு மட்டும் உபயோகப்படுத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருந்திருப்போம்.
இருட்டு -தனிமை -ஏழ்மை - நிராகரிப்பு -தூரம் -பள்ளம் -திறந்தவெளி - இப்படி ஒன்னுதானில்லை சகலத்துக்கும் மரணத்தோட ஒரு முடிச்சை போட்டு பயந்து சாகிறோம். இந்த மரணத்தோட நிழல்களோட மோதி மோதி சாகிறோம் ( முன் கூட்டி)
குழந்தைக்கு குண்டலி ஆக்னால இருக்குமாம். அது ஆணையிடற பொசிஷன்ல இருக்கும். அது ஆருக்கும் அடிமையில்லை. அது அழ ஆரம்பிச்ச பிறவு தாவுத் இப்ரஹீமே ஃபோன் லைன்ல வந்து "மூச்" னுட்டு ஹை டெசிபல்ஸ்ல கத்தினாலும் அதும்பாட்டுக்கு கத்திக்கினே தான் கடக்கும்.
( பேச/பாட முடிஞ்சா - நான் ஆணையிட்டால்னு ஆரம்பிச்சு டி.எம்.எஸ் மாதிரி சோலோ கூட பாடும். ஆனால் ஸ்டெப் பை ஸ்டெப் சுதந்திரத்தை இழந்துருது. விட்ட குறை தொட்ட குறையா எதுனா வெளிப்புற தூண்டுதல் ஏற்பட்டாலன்றி தின்னு -கழிஞ்சு - மிஞ்சிப்போனா கெட்டகாரியம் பண்ணியே அழிஞ்சு போயிருது.
இப்படி சுதந்திரம்ங்கறது ஆண்குழந்தைக்கு மட்டுமில்லை -பெண்ணுக்கும் பை பர்த் தரப்படுது. அம்மா ஊட்ல அம்மாக்காரி எதுனா நச் அடிச்சா அப்பங்காரன் " அடச்சீ.. அது போற இடத்துல எப்படி இருக்குமோ என்னமோ .. இங்கன கூட ச்சொம்மா கடுப்படிச்சுக்கிட்டு"ன்னு சப்போர்ட் பண்ணுவான்.
அப்பன் காரன் எதுக்குனா சீறிப்பாய்ஞ்சா அம்மாக்காரி " யோவ்.. கைய அடக்கு அது வளர்ந்து அடுத்த வீட்ல வாழப்போற பொண்ணு"ன்னுட்டு ப்ரேக் போடுவாள்.
ஆனால் மனித மனம் விசித்திரமானது அது நிகழ்காலத்தை மதிக்கிறதே இல்லை. எதிர்காலத்தை தேன் கனவு காணுது .அல்லது கடந்த கால நினைவுகள்ள மூழ்கிப்போகுது.
பெண் இயற்கை அவளுக்குள் விதைத்திருக்கும் பொறுப்பின் உந்துதலாலோ பருவம் தரும் துடிப்பாலோ முகம் தெரியாத ஒருத்தனை கனவு காண ஆரம்பிக்கிறாள்.
கனவுக்கு பட்ஜெட் பிரச்சினைல்லாம் கிடையாதே. அந்த கனவு தரும் மதர்மதர்ப்பில் தாய் வீட்டை வெறுக்க ஆரம்பிச்சுர்ரா. எப்பதான் இங்கனருந்து ஒழிவேனோன்னு முனுமுனுக்க ஆரம்பிச்சுர்ரா.
எதையுமே இழந்த பிற்பாடுதேன் அதனோட அருமை தெரியுது. அருமை தெரிஞ்சு அதை பொத்தி வச்சுக்கலாம்னு பார்க்கிற நேரத்துல அது திரும்பி வர்ரதே இல்லை.
அப்படித்தேன் பெண் தாய் வீட்டை இழந்துர்ரா. சரி ஒழிஞ்சு போவட்டும் புகுந்த வீட்லயாவது இது நான் கனவு கண்ட சொர்கம்னு அஜீஸ் ஆயிர்ராளான்னா இல்லை. அக்கரைக்கு இக்கரை பச்சை மாதிரி இப்பம் தாய் வீட்டு சுக போகங்களை (?) எண்ணி ஏங்கறா.
இந்த சிச்சுவேஷனுக்கு நான் ஒரு ஜோக் எழுதினேன்.
மனைவி: எங்க வீடு கோவில் மாதிரிங்க
கணவன்: அப்ப தெருத்திண்ணையில கிடக்கிற உங்கப்பன் பிச்சைக்காரனா?
ஆன்மா கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆனால் நாம ஆன்ம வடிவுல இருந்தப்ப உடல் என்ற சிறையை வேண்டி தவம் இருக்கோம். கொய்யால உடலோட இருக்கும்போது ஆஸ்ட்ரோ ட்ராவல் - காத்துல பறக்கறதுனு ஜல்லியடிக்கிறோம். இதெல்லாம் தேவையா?
இந்த எட்டாம் பாவத்துக்கும் அது தர்ர அடிமைத்தனத்துக்கும் ஒரு வேட்டு வைக்க வழியே இல்லையா? முக்கியமா தாய்க்குலம் - சனத்தொகையில சரி பாதி - அடிமைகளா இருந்தா - எப்படா எஜமானனுக்கு பெரலிசிஸ் ஸ்ட்ரோக் வரும் -எப்படா இவன் ஐ.பி போடுவான்னு புரட்சி பண்ண காத்துக்கிட்டிருந்தா -அந்த குடும்பம் என்ன ஆறது ? அந்த குடும்பத்து பிள்ளைகள் நாளைக்கு ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் ஆனா எப்டி? எல்லாத்தையும் அடுத்த பதிவுல பார்ப்போம்.