Thursday, July 14, 2011

திருவிளையாடலில் பெண்ணடிமை கருத்துக்கள்



இந்த ஆதர்ச திரைப்படத்துல தமிழ் கடவுளுக்கே கவுன்சிலிங் கொடுக்கும் அவ்வையார் கேரக்டரை தவிர எல்லா இடத்துலயும் மேல் சேவனிசம் இந்தியாவுல ஊழல் கணக்கா தாண்டவமாடுது. அவ்வை பாவம் எவ்ள செவ்வையா கவுன்சிலிங் கொடுத்தாலும் முருகன் கிட்டே பருப்பு வேகலை ஊஹூம்.(பருப்பு வேகலைங்கறதுல எத்தனாம் பெரிய சரோஜாதேவித்தனம் இருக்கு தெரீமா ஆருக்குனா தெரீமா -சமீபத்துல சாரு சாட்ல கூட இந்த பிரஸ்தாபம் வந்தாப்ல இருக்கு.

1.ஆத்தா பாவம் .. சினிமா ஆரம்பிக்கிற கட்டத்துல சிவனாரே சக்தியில்லையேல் சிவமில்லைனு ஸ்தாபிச்சிருந்தாலும் படியில பூவெல்லாம் போட்டு பூஜையே பண்றாள்.

2.முருகன் கோவிச்சுக்கிட்டு போறாருன்னதும் சிவாஜி ஒரு தாட்டிதேன் தந்திர காட்சியில படக்குனு வந்து நின்னு நில்லுங்கறாரு. பாவம் சாவித்திரியம்மாதேன் .. மகளுக்கு அம்மாக்காரி அட்வைஸ் பண்ற ரேஞ்சுல (ஆம்பளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பான் - நாமதான் அஜீஸ்பண்ணிக்கிட்டு போகனும் ..வகையறா) அட்வைஸ் பண்றாய்ங்க.

3.மீனவரா வர்ர கதையில குட்டியா ஒரு ரேப்புக்கே ட்ரை பண்ற ரேஞ்சுல இருக்கு சிவனாரோட முயற்சிகள்.
மீனவர் தலைவனா வர்ர தாத்தாவும் - மீனவர்களை "சுறா" கொன்னு போடறதை பத்தி பேசற பேச்சும் நம்ம தாத்தாவையும் - சாவித்திரியம்மாவோட பேச்சு ஜெயலலிதாவையும் ஞா படுத்துது.

4.ஹேம நாத பாகவதர் எபிசோட்ல பரவால்லை. பாணபத்திரர் ஐ.சி ல புலம்ப ( தாழ்வு மனப்பான்மை) அவரோட மனைவி தெளிவா பேசறாய்ங்க.

5.பாகவதர் ஈகோயிஸ்டாவே இருந்தாலும் ரெம்ப சீக்கிரம் ரியலைஸ் ஆகிறாரு. ஸ்போர்ட்டிவா இருக்காரு. தோத்ததா எழுதியே கொடுத்துர்ராரே.. பாகவதருக்கு எதிரா சிவனுக்கு கொம்பு சீவ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோன்னு நேட்டிவிட்டி இஷ்யூவை கொண்டுவர்ரது அக்வார்டா இருக்கு. இசை தனி உலகம். அதுக்கு ஜியாகிரஃபிக்கல் லேண்ட் மார்க் - ஜூரிஸ்டிக்சன் எல்லாம் ஏது?

4. கடவுள் விறகு வெட்டியா வந்து ஆடறாராம். கன்னி பெண்ணை நக்கல் அடிக்கிறாரு (தளதளக்கும் மேனிய பார் பூவும் பொட்டுமா) - ஹவுஸ் வைஃபை கிண்டலடிக்கிறாரு ( எந்த நாளும் இவளுக்கிங்கே கர்ப வேசமா?) கொசுறுக்கு ஏரியா குட்டி ஒன்னு ஜொள்ளுதாம். கூடவே வந்துர்ரன்னுதாம். மிஸ்டர் ஷிவா போனா போகுதுன்னுட்டு ஆல்ரெடி எனக்கு ரெண்டுன்னுட்டு கழண்டுக்கறாராம்.

5.மேலும் தருமியா வர்ர நாகேஷ் சிவாஜி பாட்டை சபைக்கு கொண்டு போக நக்கீரர் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லைன்னு வாதடறாரு. சிவாஜியோ இருக்குங்கற மாதிரி பாட்டு எழுதியிருக்காரு. பயாலஜிக்கலா பார்த்தா எஞ்ஜைம்ஸ் காரணமா இயற்கை வாசம் இருக்கத்தான் செய்யும். நம்ம நாசிகள் பெட் ரோல் /டீசல் வாசத்துல மரத்து கிடக்கு.

நமக்கு இன்னைய தேதிக்கு இந்த பாய்ண்டையெல்லாம் படிச்சா என்ன தோணுது. தூத்தேரி படமா எடுத்துக்கிறானுங்க?

பெண் குறித்த இன்றைய நம் கருத்துக்கள் கூட நாளை எதிர்காலத்தில் தூத்தேரி எனப்படலாம். எனவே அப்டேட் பண்ணிக்கங்க.. இல்லினா அவுட் டேட்டட் ஆயிருவிக.