Saturday, July 2, 2011

நாங்களும் கடிப்போம்ல

1. மார்க்கெட்ல மீன் விப்பாங்க. மீன்ல மார்க்கெட் விப்பாங்களா?

2.கேமரா இல்லாம மேன் வேலை செய்யமுடியும். மேன் இல்லாம கேமரா வேலை செய்யுமா?

3. ஃபிகருக்கு கால் போட்டா லைன் கிடைக்கும். ஃபிகர் மேல கால் போட்டா?

4. ஒரு வாளியில நீர் நிரப்பவே முடியாது அது எந்த வாளி ? குற்றவாளி  ...

5. டிவில கலர் வரும். கலர்ல டிவி வருமா?


ஜோக்ஸ்:

மந்திரி 1 : அரசர் ஏன் போர்களத்துலருந்து இன்னும் ஏன் (புறமுதுகிட்டு) ஓட ஆரம்பிக்கலை?
மந்திரி 2: எதிரி நாட்டு அரசன்  சீர் அப் கேர்ள்ஸை  ஏற்பாடு பண்ணி தொலைச்சிட்டானே !

மந்திரி:1  : எதிரி நாட்டு அரசன் போர்களத்துலருந்து தலை தெறிக்க ஓடறாரே ஏன்/
மந்திரி2  : நம்ம ராஜா போர் களத்துல வச்சிருக்கிற  அரசியோட ஆளுயர கட் அவுட்டை  பார்த்துட்டாராம்

அவர்:  யோவ் கோழி பிடிக்க ஃபயர் இஞ்சினுக்கு ஏன்யா ஃபோன் பண்ணே?
இவர்:   அது நெருப்பு கோழியாச்சே

அவன்: குக்கருக்கும் அரசு அதிகாரிக்கும் என்ன ஒற்றுமை?
இவன்:  குக்கர் "வெயிட்" போட்டா வேலை செய்யும் .அதிகாரி "வெயிட்டா " கவனிச்சா தான் வேலை செய்வார்

அரசு வக்கீல்; ஏன் உன் மனைவியை கொன்றாய்?
குற்றவாளி; உங்களை மாதிரி கேள்விகள் கேட்டதால..