Friday, July 15, 2011

உங்கள் சிம்மையும் ஹேக் பண்ணமுடியும் : அய்யர் தி கிரேட்


உங்கள் மெயில் அக்கவுண்ட் ,ப்ளாக்,சைட்டை மட்டும் இல்லே..உங்கள் சிம்மையும் ஹேக் பண்ணமுடியும் - உங்க சிம் உங்க மொபைல்லயே கிடக்கும். மொபைல் உங்க கிட்டேயே இருக்கும். ஆனால் ரிமொட்லயே உங்க சிம்மை ஹேக் பண்ணி ஆக்சஸ் ஆகி ஐ.எஸ்.டி கூட பண்ணமுடியும். அது எப்படி .. இந்த அட்டாக்ல இருந்து தப்ப என்ன பண்ணனும்ங்கற சமாசாரத்தை சொல்றதுக்கு முந்தி ஷார்ட்டா என்னை நான் அறிமுகப்படுத்திக்கிறேன்.

சித்தூர் முருகேசன் அண்ணனோட வலைப்பூ /வலைதளங்களுக்கு வருகை தரும் பலரும் அண்ணனை போலவே ( உங்க ஸ்டைலில் சொன்னா தலை) பிராமண துவேஷிகளா இருப்பேள். நான் பிராமணன் தான். ஆனால் ராமனோட கால் பட்டு உயிர்த்தெழுந்தாளாமே அகலிகை. அவளை போல எனக்குள்ள இருந்த உண்மையான பிராமணனை உங்க தலை தட்டி எழுப்பிட்டாரு.

எப்படின்னு மட்டும் கேட்டு வைக்காதிங்கோ. அது ப்யூர்லி பர்சனல். ஆரம்பிச்சுட்டான்யா அய்ய குசும்பைனு வையாதிங்கோ. விஷயத்தை உடைச்சுர்ரேன். சித்தூர் முருகேசனோட எழுத்துக்கள் எனக்குள்ள இருந்த சம்பிரதாய பத்தமான பிராமணனை கிள்ளி விட்டுட்டது.

என்னென்னத்தையோ எழுதி அவரை முடிஞ்சவரை டேமேஜ் பண்ணேன். உள்ளூருங்கறதால வீட்டுக்கு ஆளனுப்பி கூப்டு வச்சுக்கிட்டு அட்வைஸ் பண்ணினாரு. இன்னும் ரேங்கிக்கிட்டு இன்னும் காட்டமா எழுதினேன்.

இதுக்கிடையில என் தங்கைக்கு விவாகம் நிச்சயமாகி நல்ல படியா நடந்தது . என்ன ஆச்சுன்னே தெரியாது. சாந்தி முகூர்த்த அறையிலருந்து பித்துப்பிடிச்சாப்ல நேரா ரயில்வே ஸ்டேஷன் போய் ரயிலை பிடிச்சு ஊர் வந்து சேர்ந்துட்டா. பேயறைஞ்ச மாதிரி கிடக்கா. ஒரு வாய் தூத்தம் கூட பலவந்தமா புகட்டினாத்தான் உண்டு. .

இந்த சமாசாரத்தை கேள்விப்பட்டு தலை எங்க வீட்டுக்கு வந்து எங்க தாயார் தோப்பனாரோட பேசி கன்வின்ஸ் பண்ணி தங்கையை ஒரு சைக்கியாட்ரிஸ்டண்டை கூட்டிப்போக வச்சாரு. ஒரு மாதிரியா தேறினபிறகு அவளோட இதமா பேசி விஷயம் சேகரிச்சு அப்படி சைக்காலஜி இப்படி அஸ்ட்ராலஜி எல்லாத்தையும் பிரயோகிச்சு ஸ்டெடி ஆக்கிட்டாரு. இப்போ தங்கையோட புக்ககத்தாரோடவும் பேசிண்டிருக்கோம்.அவாளும் இறங்கி வர ஆரம்பிச்சுட்டா. சீக்கிரத்துல நல்லது நடக்கும்.

சொந்த கதை போதும் சொல்ல வந்த கதையை சொல்லும்யானு கூவாதேள் ..இதோ விஷயத்துக்கு வந்துட்டன்.

உன சிம்ல ஆக்செஸ் ஆகி சொந்த பந்தங்களுக்கு உங்க செலவுல ஐ.எஸ்.டி போட்டு பேசிட்டு தொலைஞ்சு போனா ஒழியுது கருமம்னு தலைமுழுகலாம்.

அப்படி செய்றவன் ஒரு தீவிரவாதியா இருந்தா? ஒரு கடத்தல் காரனா இருந்தா.. நாளைக்கு அவன் கழுத்துல போலீஸ்காரா சவுக்கம் போட்டு விசாரிக்கிறச்ச எந்தெந்த நெம்பர்லருந்து யார் கூடல்லாம் பேசினேன்னு போலீஸ்ல சொல்லித்தொலைச்சா?

அது சரி உங்க சிம்ல ஆக்செஸ் ஆக அந்த அப்ஷ்டுகள் என்ன பண்ணுவா தெரியுமோ..உங்க நெம்பருக்கு கால் பண்ணுவோ. நாங்க அந்த டிப்பார்ட்மென்ட் இந்த டிப்பார்ட்மென்டுன்னு அளந்து விடுவோ. விட்டுட்டு #90 அல்லது #09 அழுத்த சொல்லுவோ.. அழுத்திட்டேள்னு வைங்கோ ..உங்க சிம் இனி உங்களுக்கு சொந்தமில்லை.

இந்த ரிஸ்கை அவாய்ட் பண்ண நீங்க என்ன பண்ணனும்னா அந்த மாதிரி கால் வந்து அதை அழுத்து இதை அழுத்துன்னா போடா பொங்கின்னுரனும் எக்காரணத்தை கொண்டும் அழுத்தவே கூடாது. இதை நான் ஏதோ குருட்டாம்போக்குல சொல்றேனு நினைச்சுராதிங்கோ..

அரசு தொலை தொடர்பு நிறுவனமே எச்சரிக்கை பண்ணியிருக்கு. அதனோட ஸ்க்ரீன் ஷாட்டை கீழே தந்திருக்கேன் பாருங்கோ..

இன்னொரு சமாசாரம் அண்ணனை அதாங்க உங்க பாஷையில சொன்னா ஜோதிட ஓஷோ - வலையுலக மாத்ரு பூதம் முருகேசண்ணனை கலாய்ச்ச பிரம்மஹத்தியோட மெயில் ஐடி யாஹூ டாட் காம்ல கிரியேட் ஆகியிருக்கு. மெயில் ஐடியில மொத எழுத்து s கடைசி எழுத்து a . அந்த ஆசாமியோட மொபைல் ஏர்டெல் நெம்பரோட கடைசி 3 எண்கள் 62 .இதுவே போதும் மூக்கடியில வந்துட்டாய்ங்கனு அடங்கி போயிட்டா சரி. இல்லேன்னா டாம் டாம் போட்டுரவேண்டி வரும்..

வாய்ப்பளித்த முருகேசண்ணாவுக்கு நன்றி.