Tuesday, July 12, 2011

7 ஆம் பாவம் : சில ரகசியங்கள்



அண்ணே வணக்கம்ணே ..

தொடர்பதிவுல ஒரு புது ட்ரெண்டை கொண்டு வர ப்ளான் பண்ணி அதை இன்னைக்கே அப்ளை பண்றேன். உங்க கருத்தை பதிவு பண்ணுங்க. நேற்றைய பதிவை படிச்சு கமெண்ட் போட்டவுகளுக்கெல்லாம் - நமகு கிடைச்ச மாதிரியே பெரியாரின் அருள் கிட்ட வாழ்த்துக்கள்.

அதென்னா புது ட்ரெண்டுன்னு கேப்பிக சொல்றேன். பெரியவுக என்ன சொன்னாய்ங்க? பல குட்டிய கணக்கு பண்ணி கோட்டை விடறதை விட ஒரே குட்டியை ஒழுங்கா கணக்கு பண்ணுன்னு சொன்னாய்ங்க.

ஹி ஹி ..அகல உழுவதை விட ஆழ உழுவது நல்லதுங்கற பழமொழிக்கு நம்ம இன்டர் ப்ரிட்டேஷன் இது.

பதிவு போடும் போது - அதுவும் நம்மை மாதிரி கொம்பு முளைச்ச பார்ட்டி போடும்போது - (தனக்கு) தெரிஞ்ச மேட்டருதானேன்னு அனுமார் இலங்கைக்கு தாவின கணக்கா தாவிட்டே போயிருவம். இதுல ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் பண்ணத்தெரியாத பார்ட்டிங்க மந்திரி பதவி போன மாறன் மாதிரி மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு நிப்பாய்ங்க.

அதனால நேத்து பதிவுலயே விட்டுப்போன விஷயங்களையெல்லாம் சேர்த்து குஷ்பு - நமீதா ரேஞ்சுக்கு ஆக்கி மீள் பதிவா போடறேங்ணா.


//மத்த 11 பாவங்களை விட்டுத்தள்ளுங்க. தாளி 7 ஆம் பாவம் ஒன்னு கரீட்டா இருந்தா போதும் தூள் பண்ணிரலாம்//னு சொல்லியிருந்தேன். எப்டி?எப்டி?னு ரஜினிகாந்த் மாதிரி கேட்கிற பார்டிங்களுக்கு என் பதில்:

7 ல நிக்கிற கிரகம் லக்னத்தையும் பார்க்கும். 7 மனைவியை காட்டற இடம் .லக்னம் உங்களை காட்டற இடம். எல்லாகிரகங்களுக்கும் 7 ஆம் பார்வை உண்டு.

பாலகுமாரன் " ஒவ்வொரு வீட்டிலும் அதன் ஒவ்வொரு அங்குலத்துலயும் குடும்பத்தலைவன் தெரிவான்"னு சொன்னதா ஞா.

இன்ஃப்ளுயன்ஸுங்கறது ம்யூச்சுவல். பக்தனுக்கு கடவுள் எவ்ளோ முக்கியமோ கடவுளுக்கு பக்தன் அம்மாம் முக்கியம். பக்தன் இல்லின்னா பகவானுக்கு என்ன் பெருமை . பக்தாளே இல்லேன்னா கடவுளுக்கும் கலைஞருக்கும் வித்யாசமே இருக்காது.

தாத்தா அறிவாலயத்துல டைம் பாஸ் பண்ணிக்கிறாப்ல கடவுள் ஆலயத்துல ஆஸ் கிங் ஜாக்குன்னிட்டு கிடக்கவேண்டியதுதான்.

நம்ம பாய்ண்ட் என்னன்னா புருசன் பொஞ்சாதிய எந்தளவு இன்ஃப்ளுயன்ஸ் பண்றானோ அந்த அளவுக்கு பொஞ்சாதி கூட புருசனை இன்ஃப்ளுயன்ஸ் பண்றா.

லக்னத்துல உள்ள கிரகம் ஏழை பார்க்குது . ஏழுல உள்ள கிரகம் லக்னத்தை பார்க்குது. ஆத்துக்காரரு கோவக்காரருன்னா அதுல ஆத்துக்காரிக்கும் பங்கிருக்குங்கோ.

சொந்த பலம் இல்லேன்னாலும் வி.காந்த் அண்ட் கோ எதிர்கட்சியாயிருச்சு. காரணம் அ.தி.மு.க வோட கூட்டு. அந்த மாதிரி சொந்த ஜாதகத்துல சரக்கு இல்லின்னாலும் -வந்தவள் ஜாதகத்துல மசாலா இருந்தா ஒர்க் அவுட் ஆகும்.

தாய்குலத்துக்கு கம்ப்யூட்டர் பாஷையில சொன்னா சிஸ்டத்துல இல்லாத சாஃப்ட்வேரை பென் ட்ரைவ்ல இருந்து காப்பி பண்ணி இன்ஸ்டால் பண்ற மாதிரிதேன்.

கல்யாணமாகி பத்துவருசமான சோடிகளை பாருங்க ( ஆறு மாசம் ஆத்தா வீடு - ஆறு மாசம் மாமியா வீடு கேசு மாணாம் பாஸ்)

என்னதான் ஃபிசிக்கலா வித்யாசங்கள் இருந்தாலும் அவிக பேச்சு, பாடி லேங்குவேஜ் , முக பாவங்கள்ள ஒருவித ஒற்றுமை தெரியும். இதுக்கு காரணம் 1 -7 ஆம் பாவங்களுக்கிடையிலான ஒத்திசைவுதான்.


இந்த 7 ஆம் பாவ மேட்டர்ல கிரக நிலை எப்படி இருந்தா அனுகூலம் ? எப்படி இருந்தா பிரதி கூலம்னு கேப்பிகன்னு ஆரம்பிச்சு திராட்டுல விட்டுட்டன்.

7ங்கறது கேந்திர ஸ்தானம் அதனால பாவிகளுக்குத்தேன் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸுன்னு ஜோதிட விதி சொல்லுது.

இது மேல் சேவனிசமா? பொம்பளை ஏற்கெனவெ செக்ஸுவலா பவர் ஃபுல். இதுல அங்கன சுபகிரகம் வேற நின்னு அவளை "மகிமைப்படுத்தினா" புருசன் காஃபி ஃப்ளாஸ்க் சுமக்கவேண்டியதுதாங்கற எண்ணமா? அல்லது இதர இல்லற கடமைகளை அலட்சியப்படுத்திட்டா ராத்திரி போட்ட தாழ்ப்பாளை திறக்கவே மாட்டாய்ங்களோங்கற பயமா தெரியலை. 7 ஆவது இடத்துல பாவிக்குத்தேன் ப்ரிஃஃபரன்ஸ் தருது சோசியம். செகண்ட் ப்ரிஃபரன்ஸ்தான் சுபருக்கு.

இங்கன துஸ்தானாதிபதிகள் இருந்தா (6 -8 -12 ) கதை கந்தலாயிரும். 6 க்கு அதிபதி இருந்தா அந்த தம்பதிக்கு சத்ரு -ரோக -ருண உபாதைகள் ஏற்படும். எட்டுக்கதிபதி இருந்தா டிக்கெட்டு அ சிறை வாசம் அ ஐபி போட்டுருவாய்ங்க அ நிரந்தர பிரிவு.

விரயாதிபதி இருந்தா இவரு அவளை கண்டுக்கிடவே மாட்டாரு. அந்த மகராசிக்குள்ள நல்ல ஜீன் இருந்தா கொடுத்துவச்சது இவ்ளதான்னு வாழ்ந்து முடிச்சுரும். இல்லாட்டி டாக்டர் மனைவி ட்ரைவருடன் ஓட்டம் - ஆடிட்டர் மனைவி சமையல்காரனுடன் ஓட்டம்" னு தந்தியில செய்தி வந்துரும்.