Thursday, July 21, 2011

மரணம் குறித்த பார்வை :ஆண் -பெண் வித்யாசம்


மரணம் என்னவோ .. ஆண்,பெண்ணை பொருத்தவரை ஒன்னுதேன். ஆனால் மரணம் குறித்த நினைவுகள் -அவை அவர்கள் மூளையில் ஏற்படு்த்தும் முடிச்சுக்கள் -அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சிகளை பொருத்தவரை ஆண்,பெண்ணுக்கிடையில் நிறையவே வித்யாசம் இருக்கு.

மரணங்கறது என்ன? குறுகலான சரீர எல்லைகளை கடந்து /தகர்த்து பரந்த இயற்கையோடு இரண்டற கலப்பது.

பெண் இயற்கையின் பிரதியா - நிதியா - பிரதி நிதியா இருக்கிறதாலயோ என்னமோ இந்த வித்தையில கை தேர்ந்தவளா இருக்கா.

ஒரு பெண் ஒரு ஃபங்சனுக்கு போனா - அது இவளோட பீரியட் டைமா இல்லாத பட்சத்துல - அவள்/இவள்ங்கற வித்யாசமில்லாம எதிர்படும் எல்லோருக்கும் ஒரு சிறு புன்னகையையாவது பரிசளிச்சுக்கிட்டே போவாள். ( இவள் புருசனை வச்சிருக்கிறவ/வச்சிருக்கிறதா சந்தேகமுள்ளவ உட்பட - சின்னவயசுல இவ மேல பாலியல் பலாத்காரம் ரேஞ்சுல செய்த கிழவனாருக்கு கூட இதே பரிசு )

பெண்கள் எந்த பொசிஷன்ல இருந்தாலும் அடிமைகள் தாங்கற கான்செப்டாலயோ என்னவோ பெண்கள் இடையில (அதுவும் ஃபங்சன்ஸ்ல) பெருசா வித்யாசங்கள் வெளிப்படுத்தப்படறதில்லை. ஆனால் ஆண்கள் அப்படியில்லை .. தன் குழு - அ தன் நண்பன் ரேஞ்சுலயே நின்னுர்ராய்ங்க.

பெண்களோட ரிலேஷன்ஸ் ஹிப்பாக்கிரடிக்கா இருந்தாலும் - நாடகமா இருந்தாலும் அவிக ஆல்வேஸ் ரஷிங் டுவார்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோ.

மரணமும் ஏறக்குறைய ரஷிங் டுவோர்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோங்கறதால மரணத்தை நேருக்கு நேரா சந்திக்க பயப்படறதில்லை.

ஆனால் ஆண் தான் மரணத்துக்கு ஆல்ட்டர்நேட்டிவ்ஸ் தேடிப்பறக்கறான். உ.ம் செக்ஸ், பணம்,பதவி,வன்முறை .

மரணங்கறது ஒரு சின்ன மாற்றம்தேன். இருப்பு நிலையில் மாற்றம். மேட்டரா உள்ளது பவரா மாறுது தட்ஸால்.

ஆண் ,பெண் இருவர் வாழ்விலும் மாற்றம் என்பது கட்டாயம். தாய் மடியிலருந்து -பாட்டி மடி - அப்பாறம் அப்பாவோட தோள் - பக்கத்து வீட்டு ஆன்டி - பள்ளி ஆசிரியை - கல்லூரி -வேலைன்னு மாறித்தான் ஆகனும்.

ஆண் குழந்தை ஒவ்வொரு மாற்றத்தையும் கண் மூடித்தனமா எதிர்க்கும். பெண் குழந்தை ரெசிப்டிவ். ஃப்ளெக்சிபிள். ஆண் குழந்தை ரெஜிட்டா இருக்கு.

ஆண் குழந்தை தன் சரீர பலத்தை வச்சு மாற்றத்தை எதிர்க்குது அது தன் சர்வைவலுக்கு தேவைன்னு போராடுது.

பெண் குழந்தை தன் சரீர பலகீனம் காரணமா மாற்றத்தை ஏத்துக்கறதே தன் சர்வைவலுக்கு நல்லதுன்னு நினைச்சு அஜீஸ் ஆயிருது.

ஸ்கூலுக்கு போக அடம்பிடிக்கிற குழந்தைகள்ள ஆண் குழந்தைகள் தான் அதிகம். அட இவ்ள எதுக்கு ஏழு கழுதை வயசாகி ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை எதிர்த்து கோர்ட்டுக்கு போற பார்ட்டிங்க இல்லையா என்ன?

வீட்டோட மாப்பிள்ளைகளை விரல் விட்டு எண்ணிரலாம். அதே போல புகுந்த வீட்ல செட் ஆகாம தவிக்கிற பெண்களையும் விரல் விட்டு எண்ணிரலாம்.

ம்ரணங்கறது ஒரு மாற்றம். பெண் அதை தன் பலகீனத்தின் காரணமா ஏத்துக்கிட்டு பலப்படறாள். ஆண் அதை எதிர்த்து பலகீனப்படறான்.

மாற்றம் விசித்திரமானது. அதை ஏத்துக்க தயாராயிட்டா அது ஒரு மாற்றம் அவ்ளதான். ஆனால் அதை எதிர்க்கும் போது அந்த மாற்றம் மரணத்தை விட கொடுமையா இருக்குது.

(ஜோதிட டிப்: சர ராசிக்காரவுக மாற்றத்துக்கு தயாரா இருப்பாய்ங்க -ஸ்திர ராசிக்காரவுக ஊஹூம்)

மன்சன்ல இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது வெளிப்பட்டே ஆகனும். வாய்ப்பிருந்தா செக்ஸ் பவராவே வெளிப்படுது - அதுக்கான வாய்ப்பில்லாத சந்தர்ப்பத்துல முதிர்ச்சி கொண்ட மனம் இருந்தா படைப்பாற்றலா வெளிப்படுது - முதிர்ச்சியற்ற மனம் வன்முறையா வெளிப்படுத்துது . இது உயிரியல் -மனோவியல் விதி.

மன முதிர்ச்சியை பொருத்தவரை பெண் குழந்தைக்கு அது சீக்கிரமே சித்திக்குது. 40 வயசு ஆணுக்குள்ள மனமுதிர்ச்சி 12 வயசு பெண்குழந்தைக்கு இருக்கிறதை எத்தனையோ தாட்டி நானே வாட்ச் பண்ணியிருக்கேன்.

இந்த மனமுதிர்ச்சிக்கு காரணம்? சரீர பலகீனமா இருக்கலாம் .. சர்வைவல் அவசியங்கள் அவளை சீக்கிரமா மெச்சூராக்குது. ஆண் இந்த விஷயத்துல துரதிர்ஷ்ட சாலி.

முதிச்சி பெற்ற மனம் செக்ஸ் பவரை கிரியேட்டிவ் பவரா வெளிப்படுத்துதுன்னு சொன்னேன். பெண்ணுக்கு உள்ள சரீர பலகீனம் , அவளுக்கு எதிரா உள்ள சமூக,பொருளாதார,அரசியல் அமைப்புகள் காரணமா அவளோட கிரியேட்டிவ் பவர் ஸ்தூலமா வெளிப்பட இயலாத ஒரு நிலை இருக்கு. அதனால அவளோட கிரியேட்டிவ் பவர் சூட்சுமமான வடிவத்துல வெளிப்படுது . அ சமூக,பொருளாதார ,அரசியல் அமைப்புகள் அனுமதித்த அளவில் மட்டுமே வெளிப்படுது.

இதனாலதான் பெண்ணுக்கு செக்ஸ் மேல ஆர்வம் ஏற்படறதில்லை. ( மனம் சார்ந்த் ஆர்வம் ) உடலை பொருத்தவரை அது புரட்சி செய்யலாம் அதுவேற சங்கதி - அதையும் அவள் தன் மனமுதிச்சியை கொண்டு மேனேஜ் பண்ணிர்ரா)

ஆனால் ஆணை பொருத்தவரை அவனோட படைப்பார்வம் ஸ்தூலமாவே படைக்க விரும்புது .( ஃபிசிக்கல் அண்ட் என்விரான்மென்டல் எபிலிட்டி) . பிரச்சினை என்னன்னா ஸ்தூலமான படைப்பில் தடைகளுக்கு நெம்பர் ஆஃப் சான்ஸஸ் இருக்கு. இந்த தடை அவன் மனதை செக்ஸ் அல்லது வன்முறைக்கு திருப்பி விட்டுருது.

மேலும் செக்ஸை பொருத்தவரை ஆணுக்கு அது அனுமதிக்கப்பட்டிருக்கு. ஹி மே பி மேரீட் ஆர் அன் மேரிட். வித் வைஃப் ஆர் அனதர் பர்சன். " ஒரு கால் கட்டு போட்டா சரியாயிரும் - இவள் சரியில்லை -அவனை சொல்லி என்ன? மாதிரி டயலாக்ஸ் எல்லாம் கேட்டிருப்பிங்க.

இதனால ஆணோட செக்ஸ் பவர் செக்ஸாவே செலவழிஞ்சு போயிருது - மிச்சம் மீதி இருந்தா அதையும் அவன் ஸ்தூலமான படைப்புக்கே திருப்பி விடறான்.

பெண்ணை பொருத்தவரை 45 வயசு கிழவியாவே ஆயிட்டாலும் அச்சம், நாணம்,மடம் அது என்னாது பயிர்ப்புல்லாம் மெயின்டெய்ன் பண்ணவேண்டி இருக்கு. அதனால அவளோட படைப்பு சக்தி மனம் சார்ந்து ,மனவெளியில் இயங்குது. அங்கே தங்கு தடையில்லாம..

"காற்றுக்கென்ன வேலி - கடலுக்கென்ன மூடி -கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது" ரேஞ்சுல அவிக கிரியேட்டிவ் பவர் வேலை செய்யுது. ( சிலர் அந்த மன வெளி படைப்புக்கு உயிர் கொடுக்க நினைக்கும்போது கணவன் - வீடு - ஊர் -உலகம் அதிர்ச்சியில் நொறுங்கி போகுது.

பெண்ணுக்கு இயற்கை கொடுத்த இன்னொரு வரம் ப்ரக்னன்சி. படைப்பின் உச்சம் இது. (இதுக்கப்பறம் பெண்ணுக்கு ஏற்பட உடல்,மன சிதைவுகள் அவளுக்கு செக்ஸ் மீது இருந்த ஓரளவு ஆர்வத்தையும் ஆஃப் பண்ணிர்ரதால - அதை ஒரு ஆயுதமா வச்சு பேரம் பேசற அவலமும் நடக்குது.

ஆணை பொருத்தவரை ஒவ்வொரு உடலுறவிலும் உச்சத்தை தொடுகிறான். குட்டி மரணத்தை தரிசிக்கிறான்.அனுபவிக்கிறான். மரணத்தோட சின்ன அறிமுகமாச்சும் இருக்கு. அதனால டிப் ஆஃப் தி ஐஸ் பர்க் மாதிரி மரணம் அவனை கவருது.

அதனாலதேன் ஆண்களை பொருத்தவரை லைஃப்ல ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கு. ஆனால் பெண்ணுக்கு அந்த பாக்கியமில்லை.

அதனால அவளுக்கு மரணத்தை மரணமா சந்திக்கிறதே பிடிச்சிருக்கு. ம்ரணத்தோட நிழல்களுக்கு அவள் பெருசா அதிர்ந்து போறதில்லை. இருட்டு /ஏழ்மை/தனிமை/ நிராகரிப்பு

அதனாலதேன் பெண்கள் பார்ஷியலா சாகனும்னு வேகமா ட்ரைவ் பண்றதில்லை /ஆயுதத்தை தூக்கிட்டு அலையறதில்லை - இன்னும் என்னென்னமோ இல்லை.

பெண் செக்ஸுக்கு இன்னொரு மாற்றான படைப்பின் உச்சத்துல இருக்கிறதால அவள் மரணத்தின் நிழல்கள்ள / தவணை மரணங்கள்ள திருப்தி அடையறதில்லை. அவளோட அடிமனசு மரணத்தையே எதிர்பார்க்குது.

புருசன் காரன் லேசா ரெண்டு தட்டு தட்டினா உடனே "கொல்லு ..கொன்னுருன்னு ஹிஸ்டீரிக்கா அலற இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.


மரணத்தின் நிழல்கள் அவளுக்கு திருப்தியையோ பயத்தையோ தர்ரதில்லை. ஆனால் மரணமே அவளை நெருங்கும்போது அதுவும் ஒரு மாற்றம்ங்கற முதிர்ச்சியோட ஏத்துக்க தயாராயிர்ரா. எத்தனையோ பெண்கள் தங்களுக்கு வந்த உயிர்கொல்லியான வியாதிகளை கூட ஜஸ்ட் லைக் தட் ஏத்துக்கிட்டு புருசனுக்கு கூட சொல்லிக்காம செத்துப்போயிர்ராய்ங்க.

மேலுக்கு பார்க்கும் போது ஆண்கள் மரணத்துக்காக ஆலா பறக்கிறதா தோனும்.

பெண்கள் மரணத்தை கனவிலும் நினைக்காதவர்கள் போல தோனும்.

மேட்டர் இன்னாடான்னா ஆண் செக்ஸில் தன் மரண தாகத்தை தீர்த்துக்கறான். அவனுக்கு உள்ள மரண தாகம் குளிர்காலத்து தாகம்.

பெண்ணுக்கு செக்ஸ்ல மரண தாகம் தீரும் வாய்ப்பு மறுக்கப்படுது அவளுக்கு உள்ள மரண தாகம் நெஜமாலுமே கோடை காலத்து மரண தாகம்..