அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவுக நம்ம ப்ளாக்/சைட்டை படிக்கிறாய்ங்கன்னா இந்த வெற்றிக்கு பின்னாடி எத்தனையோ அம்சங்கள் இருக்கு. அதுல முக்கியமானது சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் தரும் யோசனைகள்.
பேச்சுத்தமிழ்ல எழுத சொன்ன ஈழத்து சொந்தத்துலருந்து - இன்னைக்கு அதிரடி ப்ராஜக்டுக்கே யோசனை தந்திருக்கிற திரு.இஸ்மாயில் அவர்கள் வரை எத்தனையோ நல்ல உள்ளங்கள் இந்த வெற்றிக்கு பின்னாடி இருக்காய்ங்க. அவிகளுக்கெல்லாம் நன்றி நன்றி நன்றி.
இஸ்மாயில் அவர்கள் முன் வைத்திருக்கும் யோசனை என் ஒருவனால் அமல் படுத்திவிட முடிந்த ஒன்றல்ல. அதனால ஒரு கடிதம் பதிவாகிறது ; இஸ்மாயில் ங்கற பதிவை படிச்சு உங்க கருத்தை தெரிவிங்க ப்ளீஸ் !
உலகத்துல எந்த ஜாதகத்துலயும் - எந்த கிரகம் - எந்த பாவமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்காது. கிரகங்களோட பாவங்களை பலத்தை பொருத்து அவற்றின் ஜூரிஸ்டிக்சன்ல நமக்கு அத்யாவசியமானதை மட்டும் பொறுக்கிக்கிட்டு மத்ததை விட்டுத்தொலைச்சுட்டா பிரச்சினை கிடையாது.
இதை இன்னொரு உதாரணத்தின் மூலம் சொன்னா கிரக பலம் என்பது பவர் . பவர் கட் வந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது. பவர் சப்ளை கரீட்டா இருந்தா ஒன்னும் பண்ண தேவை இல்லை. லோ ஓல்ட்டேஜ் இருந்தா?
மன்சன் தன் அறிவை உபயோகிச்சு தேவையில்லாத பல்பு ஃபேன் மோட்டர்களை நிறுத்திட்டு - சந்தர்ப்பத்தை பொறுத்து கிச்சன்/டைனிங் டேபிள்/ஹால்/பெட் ரூம்ல உள்ள பல்பை மட்டும் போட்டுக்கிட்டு அஜீஸ் பண்ணனும்.
அல்லாத்தையும் ஆன் பண்ணி தொலைச்சா பல்புங்க ஃப்யூஸ் போயிரலாம் -மோட்டர்கள்ள வைண்டிங்க பஸ்மமாயிரலாம், டிவி பிக்சர் ட்யூப் எகிறலாம்.
இதே தியரிதான் கிரகங்கள்/பாவங்கள் விஷயத்திலும் ஒர்க் அவுட் ஆகுது.
ஆண்களை பொருத்தவரை எது முக்கியம் எது முக்கியமில்லைன்னு டிசைட் பண்ற நிலை இருக்கு. ஆனால் தாய்குலத்தை பொருத்தவரை அவிக "அந்த நாள் முதல் இந்த நாள் வரை " அடிமைகளா இருக்கிறதால அவிகளுக்கு ச்சூஸ் பண்ணிக்கிற ஆப்ஷனே இல்லாம இருக்கு.
இது ஒரு இழவுன்னா பெண்ணுரிமைங்கற பேரால அவிகளை ரெண்டு பக்கமும் கொளுத்தப்பட்ட மெழுகுவர்த்தியாவேற ஆக்கிட்டாய்ங்க.
தற்சமயத்துக்கு அடுத்த தலைமுறைக்காச்சும் ஒரு விழிப்புணர்வை ஊட்டத்தேன் இந்த தொடரையே ஆரம்பிச்சோம்.
( இதை படிக்கிற தாய்க்குலம் அப்படியே டின்ல அடைச்சு - தங்களோட வாரிசுகளுக்காச்சும் ஊட்டனும்னு கேட்டுக்கறேன்)
பொதுவாக ஐந்தாம் பாவம் புத்தி பிள்ளைகள்,பூர்வ புண்ணியம் , மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,
தியானம், ஆகியவற்றை காட்டும்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.
கடந்த பதிவுல சொன்ன காரணங்களால பெண்கள் வாழ்க்கையில தியானங்கறது . கடேசி ஸ்டாப்பா கீது. தாய்க்குலம் தியானத்துக்கு மொத ப்ரிஃபரன்ஸ் கொடுத்து சினன் வயசுலருந்தே இதை பழக ஆரம்பிச்சுட்டாய்ங்கன்னா ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல வாழ்க்கைங்கற பலாப்பழத்தை பிய்க்கிறதுக்கு மிந்தி தியானங்கற விளக்கெண்ணெயை பூசிக்கனும்.
தியானம்னா என்ன? வசதியான பொசிஷன்ல உட்கார்ந்து எண்ணங்களை வாட்ச் பண்றதுதேன். அப்படி வாட்ச் பண்ணும்போது எண்ணங்களின் எண்ணிக்கையும் -அவை மாறும் வேகமும் குறைஞ்சுக்கிட்டே வரும். அப்பம் இரண்டு எண்ணங்களுக்கு இடையிலான இடைவெளியை கவனிக்கனும்.
நாளடைவுல இந்த இடைவெளி ஜாக்கெட்டுக்கும் - லோஹிப்புக்கும் இடையிலான இடைவெளி பொல அதிகரிக்கும்.
(இன்னைக்கு ஆண்,பெண்களுக்கு தொப்பை விழுக முக்கிய காரணம் லோ ஹிப் சாரியும் -லோ ஹிப் பாண்டும் தான்னு நம்ம ஊரு பாட்டி சொல்லுது)
எண்ணங்கள் உருவாகிறது நம்ம ஈகோவாலதேன். ஈகோ தான் இந்த படைப்புலருந்து நம்மை கட் பண்ணுது. நாம இயற்கையின் பிரிக்க முடியாத ஒரு பாகம்னு உணர முடிஞ்சுட்டா சிந்தனைக்கு தேவையே இருக்காது.
சிந்தனைகள் தான் செயலுக்கு அடிப்படை . இயற்கையின் இணைப்பு கிட்டாத மூளையின் சிந்தனைகள் எல்லாமே சீக்கா தான் இருக்கும். ( சீக்கு = நோய் பிடித்த) சிந்தனைங்கறது எதிர்கால செயல்களுக்கான ரஃப் ஒர்க். சிந்தனைக்கு அடிப்படை கடந்த கால அனுபவங்கள். கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஜெயமாலினிக்கும் - நமீதாவுக்கும் உள்ள அளவு வித்யாசம் இருக்கும். பப்பு வேகாது. மேலும் சிந்தனை யதார்த்தத்துலருந்து தப்பத்தேன் தூண்டும். எதிர்கொள்ள உதவாது. (அக்கணம்)
பச்சையா சொல்றேன். இப்ப ஒரு தாய். அவிக தன் புருசனை முந்தானையில முடிய என்னென்னமோ டெக்னிக்கையெல்லாம் யூஸ் பண்ணியிருப்பாள். அதே டெக்னிக்கை மகன் மேட்டர்ல யூஸ் பண்ண முடியுமா?
அதனால தாய்குலத்துக்கு / ஐமீன் தாய்குலம் மூலமா அடுத்த தலைமுறைக்கு நான் தர்ர சஜஷன் என்னடான்னா.. தியானம் பண்ணுங்க.
சப்பணமிட்டு உட்காருங்க. கைகளை முழங்கால் மேல வைங்க. இங்கன ஒரு வட்டம் ஏற்படுது. இல்லாட்டி உங்க உள்ளங்கால் -உள்ளங்கை வழியா உங்க ஜீவ சக்தி வீணாகிட்டு இருக்கு. அதுக்கு ஒரு 15 நிமிசத்துக்காவது ஸ்டாப் சொல்லுங்க
எலக்ட்ரிக் ஒயரை பார்த்திருப்பிங்க. அதுல மின்சாரம் நீள வாக்குல பாஸ் ஆகுது. மிக குறைஞ்ச அளவு பவர் . அதனால பல்பு எரியுது
ஆனால் ஃபேன்ல பாயும்பொது மட்டும் பேயா சுத்துது எப்படி? அதுக்குள்ளாற வைண்டிங் இருக்கு. வைண்டிங்னா செம்பு கம்பி சுற்றப்பட்டிருக்கும்.
அந்த கம்பி வழியா மின்சாரம் வட்டவடிவத்துல - தொடர் வட்டமா பாய்வதால சக்தி ஏற்படுது.அந்த சக்தியால மோட்டர் பேய் வேகத்துல சுத்துது. அதுல பொருத்தப்பட்ட இறக்கை காற்றை அள்ளி வீசுது. அதுல பொருத்தப்பட்ட ப்ளேடு கண்டதையும் அரைச்சு தள்ளுது. எலக்ட்ரிக் பைக்ல வண்டியை முன்னுக்கு பாய செய்யுது.
ஒரே மின்சாரம் நீள வாக்குல பாயும் போது மிதமான சக்தி . வட்டவடிவுல பாயும் பொது அளப்பரிய சக்தி. நீங்க சப்பணமிட்டு அமர்ந்து , உள்ளங்கைகளை முழங்கால் மேல வைக்கும் போது ஒரு வட்டம் உருவாகுது .உங்களுக்குள்ள இருக்கிற மிக குறைந்த சக்தி வட்டவடிவத்துல பாய ஆரம்பிக்குது.
கண்ணை மூடுங்க. ( மன்சனோட ஜீவ சக்தியில பாதி கண்கள் வழியாத்தேன் செலவழிஞ்சுருது). அந்த சக்தியும் சேவ் ஆகட்டும். கண்ணை லேசா மூடனும்.
முதலிரவு அறையோட கதவு மாதிரி படார்னு சாத்தக்கூடாது. புருசனை ஆஃபீசுக்கு வழியனுப்பிட்டு அவர் வண்டி ஸ்டார்ட் ஆகி தெருமுனை வ்ரை போன பிறகு லேசா சாத்துவிங்களே அப்படி சாத்தனும்.
முதுகெலும்பை லேசா நிமிர்த்தி வைங்க ( அட்டென்ஷன்லாம் வேணாம் -அப்பாறம் முதுகுவலி வந்து தொலைச்சா நாம பொறுப்பு கடியாதுங்கொ) முதுகெலும்புல எத்தனையோ அற்புதங்கள் இருக்கு. அதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா பக்கத்தை மூடிட்டு போயிருவிக.
இப்பம் உங்க பார்வையை மூக்கு நுனியில வைங்க. லேசா - அப்பம் ஆட்டோமெட்டிக்கா உங்க பார்வை இரண்டு கண்களுக்கும் இடையில் பதியும் .
இப்பம் சிந்தனைகளை கவனிங்க. சிந்தனைகளுக்கிடையிலான இடைவெளியை கவனிங்க. இதை தொடர்ந்து செய்தா விட்டலச்சார்யா படம்லாம் உங்க அனுபவங்கள் கிட்டே பிச்சை வாங்கும். இது கூட முக்கியம் கிடையாது.
சிந்தனைகள் கொஞ்சம் போல குறைஞ்சு இடைவெளிகள் கொஞ்சம் போல அதிகரிக்க ஆரம்பிச்ச பிறவு க்ளீன் ஸ்லேட்டா ரோசிக்க ஆரம்பிங்க.
மேற்சொன்ன ஐந்தாம் பாவ காரகங்களான புத்தி, பிள்ளைகள்,பூர்வ புண்ணியம் , மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம் இதுல எது முக்கியம்? எல்லாமே வேணம்னா வேலைக்காகாது.
ஏதாவது ஒன்னை பெறனும்னா ஒன்னை விட்டுக்கொடுத்துத்தான் ஆகனும். உங்க வாழ்க்கை சூழல் குடும்ப நிலை , சமூக சூழல் ,பொருளாதார சூழலை பொருத்து முடிவெடுங்க.
வாழ்க்கையில எதுக்காகவும் இழந்துரக்கூடாத விஷயம் சுதந்திரம். சுதந்திரத்துக்காக எதை வேணம்னா இழந்துரலாம்.
அடிமைகளா இருக்கிறதுல ஒரு லாபமும் இருக்கு. அது என்னன்னா கிரகங்கள் முடிவெடுப்பவர்களைதான் பாதிக்கும். முக்கியமா சனி அடிமைகளை சீண்டறதே இல்லை. ( சீந்தறதில்லைனு சொல்லனும். ஏன்னா கழிவறை -சாக்கடை -ஆசன வாய் இத்யாதிக்கு காரகம் வகிக்கும் நீச கிரகமான சனிக்கே அடிமைகள்னா அவ்ள அருவறுப்பு.
ஓகே பெஸ்ட் ஆஃப் லக்..