Friday, July 1, 2011

காதலிச்சா செக்ஸ் பவர் அவுட்

காதல்ல எத்தனையோ வகை இருக்குன்னு பார்த்தோம். ஒவ்வொரு வகை காதலும் எப்படி செக்ஸ் பவரை அவுட் பண்ணும்னு விவரிக்க ஆரம்பிச்சா என்சைக்ளோபீடியா அளவுக்கு போயிரும். அதனால குத்து மதிப்பா பார்ப்பொம்.

மேலோட்டமா பார்க்கிறச்ச காதலும் செக்ஸும் அடுத்தடுத்த ஸ்டாப் மாதிரி தோணும். ஆனால் ரெண்டுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.

காதல் ஆன்மீகத்துக்கான குறுக்கு வழி . செக்ஸ் ஆன்மீகத்துக்கான சுற்றுவழி. காதல் வழியை பிடிச்சா குருடன் கூட ஆன்மீகத்தை ரீச் ஆயிரலாம். ஆனால் செக்ஸ் வழிய பிடிச்சா மீன் எண்னெய்லயே குளிச்சவன் கூட சுத்தி சுத்தி தான் வந்துக்கிட்டு இருப்பான்.

காதல் திடீர்னு  மனசுல சொரியும் பூமழை. . காமம் உடல்ல பூக்கும் காட்டமான வாசமுள்ள காட்டு  பூ. மனித மனதின் இதர வாசனைகள் அத்தனையையும் அமுக்கிப்போட்டு வேகமா பரவும் பூ.எவனில் பூத்ததோ அவனில் சுகந்தந்தையும் - சுற்றுச்சூழலில் நாற்றத்தையும் பரப்பும் விசித்திர மலர்.

காதல் பொழியும் பூமழை மனசுல உள்ள சகல கல்மிஷங்களையும் அடிச்சிக்கிட்டு போயிரும். அவனிலும் - அவனை சுற்றியும் இதமான வாசத்தை பரப்பும் மலர்.

யாரை உண்மையா காதலிக்கிறோமோ அவிக கிட்டே செக்ஸை கற்பனை கூட பண்ணிப்பார்க்கமுடியாது.  யாரிடம் காமம் கொள்கிறோமோ அவிக மேல இரக்கமோ - கருணையோ ஏற்படலாமே தவிர காதல் .. ஊஹூம் சான்ஸே இல்லை.

காதலுக்கு தேவை மனசு . காமத்துக்கு தேவை உடல்.

ஏற்கெனவே சொன்னபடி மனித மனம் காட்டுமிராண்டி காலத்துலருந்து தொடர்ந்து அப்டேட் ஆகி தில்லி அரசியல்ல கூட கில்லி ஆடற ரேஞ்சுக்கு வந்துருச்சு. அதனால மனித மனசுல சூப்பர் ரின் தூய காதல் உருவாகிறதெல்லாம் சொம்மா பேச்சு.

ஆனால் ஒரே கம்ப்யூட்டர்ல ரெண்டு யூசர்ஸ் -ரெண்டு செட்டிங்ஸ் இருக்கிறாப்ல இந்த மனசு தனக்குள்ள ரெண்டு விதமான எடிஷனையும் வச்சிருக்கு.

ஒன்னு ஆதிகாலத்து கையெழுத்து பிரதி - இன்னொன்னு லேட்டஸ் பள பளா எடிஷன். பயாலஜிப்படி காதல்ங்கறது லக்சரி. செக்ஸ்ங்கறது நெசசரி.

உண்மையா காதலிச்சா செக்ஸுக்கு நோ சான்ஸ். செக்ஸுக்கு காதலே தேவையில்லை. இந்த முரண்பாடு எல்லா வித  காதல்லயும் இருக்கும்.

அப்பம் ஒவ்வொருத்தனும் ரெண்டு குட்டிய கரெக்ட் பண்ணனும் ஒன்னு காதலுக்கு - இன்னொன்னு காமத்துக்கு.

அதே போல ஒவ்வொருத்தியும் ரெண்டு  ஆண்களை கரெக்ட் பண்ணனும் ஒன்னு காதலுக்கு -இன்னொன்னு காமத்துக்கு.

இந்த தியரிதான் கள்ள உறவுல ஒர்க் அவுட் ஆகுது. புருசனை பிடிக்காதவ மட்டும் வேலி தாண்டறதில்லை. கணவனை ரெம்ப பிடிச்சவ -  கணவன் மேல ரெம்ப ரெஸ்பெக்ட் வச்சிருக்கிறவ கூட வேலி தாண்டிர்ரா.

காதல்ல மட்டுமில்லை - திருமண உறவுகள்ளயும் இந்த முரண்பாடு இருக்கு. காதல் இருந்தா காமம் வராது .கிளி மாதிரி பொஞ்சாதி இருக்க குரங்கு மாதிரி வப்பாட்டி தேடறவன் சைக்காலஜியும் இதான்.

காதல் மனிதச்செயல் . காமம் மிருகச்செயல். மனிதன் பாதி மிருகம் பாதின்னு மன்சனோட மைண்ட் அல்லாடறதால தான் இங்கன உண்மையான காதலும் உருவாக மாட்டேங்குது - உண்மையான காமமும் கிளர்ந்தெழமாட்டேங்குது.

காதல் காதலா துவங்கும்போது மனசுல இருக்கிற சகல அடைசலையும் கடைசியோ கடைசிக்கு அடிச்சுட்டு போயி தேங்க வச்சுருது.

காதல் உருவாகறது மனசுல. மனசுங்கறது மாறிக்கிட்டே இருக்கிறது. சைக்காலஜிப்படி 4 நிமிசத்துக்கு ஒருக்கா மூட் மாறுது. ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா அடியோட மாறுது.

மனசு மாறும்போது காதலோட வீரியம்  குறையுது. எந்த உணர்வுமே மொத தடவை தாக்கும்போது அலை அலையா தாக்கும். அதே உணர்வு மறுபடி மறுபடி வரும்போது அலை ஓஞ்சு போய் "அப்படியா"ங்கற மாதிரி ஆயிருது.

இந்த படைப்புல எல்லாத்துக்கும் பாஸ் (Boss) இயற்கை . இயற்கை விதிகளுக்கு முரணா செல்லும்போது தான் மன்சன்  பல்பு வாங்கிர்ரான் .

காதல்,கண்ணாலங்கறதே இயற்கைக்கு விரோதமானது. அதனாலதான் காதல்/கண்ணாலத்துக்கு பிறகு  இயற்கையின் வரமான செக்ஸ் பவர் தேசலாயிருது.

அது எப்படிங்கறது அடுத்த பதிவுல விலாவாரியா பார்ப்போம்.