Saturday, July 9, 2011
ஆண் பெண் வித்யாசம் ; 7 ஆம் பாவம் தொடர்ச்சி
அண்ணே வணக்கம்ணே !
7ங்கறது கேதுவுக்குரிய எண். கேது ஞான காரகன். 7 மனைவியை காட்டும் பாவம். ஒரு ஆண் எதையாவது சாதிக்கிறான்னா அவன் மணவாழ்வு தோல்வியா இருக்கவே வாய்ப்பு அதிகம். ங்கொய்யால வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆண் பின்னாடியும் ஒரு பெண் இருக்கானு சொல்றாய்ங்க.
தாளி ஜெயிச்சுட்டா ஒருத்தி என்ன பசுமந்தை மாதிரி ஒரு கூட்டமே இருக்கும். ஆனால் அவன் ஜெயிக்கனும்னா அந்த பென்ணை தாண்டி வரனும். அப்படி தாண்டி வந்தபின்னாடி அவன் பின்னே அந்த பெண் இருப்பாளா இல்லையா? அதைத்தேன் அந்த மேதாவி "உள் குத்தா' சொல்லியிருக்காரு.
பெண் என்றால் பேயும் இரங்கும்னுவாய்ங்க. என்னருந்தாலும் ஒரே இனம்தானே அதான் இரங்குதுனு ஒரு ஃப்ரெண்ட் சொன்னாரு.சில நேரத்துல பேய் அவிகளுக்குள்ளாற இறங்கவும் செய்யுது. பலகீனம்தான் பாவங்களின் கங்கோத்ரி.
பெண் குழந்தைகளுக்கு சின்ன வயசுலருந்தே சத்தான உணவு கொடுத்து - நீ வேண்டாத விருந்தாளி - இந்த வீடு உனக்கு சாஸ்வதமில்லை - புருசனை முந்தியில முடிஞ்சுக்கோ அது இதுன்னு சீரழிக்காம இருந்தா உடல் உள்ள பலம் சேர்ந்தா இந்த இழவெல்லாம் இருக்கவே இருக்காது.
ஆனால் யதார்த்தத்துல பார்க்கும்போது பலகீனம் . தன்னை சுற்றி ஒரு வட்டம். சின்ன வட்டம். அந்த வட்டத்துல தன்னை ராணியாவோ /ராஜகுமாரியாவோ கற்பனை பண்ணிக்க வேண்டியது. கொஞ்ச நாளு லவர்/ஹஸ்பண்டும் ஒத்து ஊதுவாய்ங்க. மோஜு தீர்ர வரை அப்பாறம் .. லொள்ளுதேன்.
ஆணுக்கு ஞானத்தை தர்ரதை நமக்கு ஒன்னும் அப்ஜெக்சனில்லை. அப்படியா கொத்த பொம்பளைங்க டன் டன்னா ஞானம் கொடுத்தாலும் அஞ்ஞானத்துலதான் சுவர்கமிருக்குனு வாழற ஆண்கள் அனேகர்.
எங்க ஊர்ல ஒரு டாக்டர் பொஞ்சாதி ஒரே ட்ரைவரோட 3 தாட்டி ஒடிப்பொயிட்டா. அந்தாளு விட்டானா? ஊஹூம். தேடிப்பிடிச்சு கொண்டு வந்து தன் வாழ்க்கைய ஒரே ஒரு மிமீ கூட மாத்திக்காம அதே யந்திர வாழ்வை வாழ்ந்துக்கிட்டிருக்கான்.
சரி 7ன்னா கேது - கேதுன்னா அல்லல் அலைச்சல் ஞானம்லாம் வருது ஓகே.ஏழாம் பாவத்தை அனலைஸ் பண்ண ஆரம்பிச்சதும் 24 மணி நேரத்துல ரெண்டு தாட்டி கணிணிய ஃபார்மட் பண்னவேண்டி வந்துருச்சு. இது மட்டுமா? அவாஸ்தும் சதாய்க்குது. அழகி ப்ளஸ்ஸும் கலாய்க்குது. ஏவிஜி போட்டா அது சிஸ்டம் ஃபைல் எல்லாம் தூக்குது. போதாக்குறைக்கு நம்ம ஏரியால ஏதோ புதுசா மின் கம்பம் நட ஆரம்பிச்சானுவ தாளி காலை 9 மணிக்கு போனது சாயந்திரம் 5.30 க்குதேன் கரண்டே வந்தது.
அட இதுல நியூமராலஜி என்ன தட்டுக்கெடுதுங்கறிங்களா? சனி இப்பம் கன்னியிலருந்து (6 மாசம் முன் கூட்டி) துலாவை பார்க்கிறாரு. ராசிச்சக்கரத்துல துலாம் 7 தானே. 7ன்னா மனைவி தானே. கடந்த ஜூன் 21 லருந்து ஒரு 6 மாசம் டிசம்பர் 21லருந்து ஒரு ரெண்டரை வருசம் நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதில்லாம் வெட்டி மடியனும்போல.
நம்ம பதிவு அதை தடுத்து நிறுத்திரும்னு சனி பகவான் பயந்துக்கனாரா? அல்லது ங்கோத்தா வாக் ஸ்தானத்துல நான் இருக்கேன். என்னை மீறி போயிருவியானு கட்டைய போட்டாரா? தெரியலை. இதோட
களத்திர காரகன் சுக்கிரன். இவருதேன் நமக்கு பாதகாதிபதி.
என்ன இழவோ அல்லா(ரு)மா சேர்ந்து பயங்கர ஆப்பு. இன்னைக்கு பதிவு போடாததுக்கு போதுமா சால்ஜாப்பு.
இப்பம் மேட்டருக்கு வந்துருவம்.
ஒரு பையன் மொதல்ல தாய் -அடுத்து தகப்பன் -அடுத்து ஆசிரியனோட இன்டராக்ட் ஆகனும். இந்த ப்ராசஸ் கரீட்டா நடந்துட்டா - இந்த இன்டராக்ஷன் ப்ரொடக்டிவா அமைஞ்சுட்டா அடுத்து வர்ர காதலி /மனைவியோடவும் "சகலமும்" சல்லுனு முடிஞ்சுரும்.
தாயை காட்டும் நாலாவது இடம் , தந்தை/ ஆசிரியனை காட்டும் 9 ஆவது இடம் கம்ஃபர்ட்டபிளா அமைஞ்சா அடுத்து என்ட்ரி கொடுக்கற பெண்ணுக்கு லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்கும். இல்லின்னா இம்சைதேன்.
ஏற்கெனவே சொன்னபடி ஆம்பளைய பொருத்தவரை அவனோட திருமண முயற்சி எத்தீனி தாட்டி தோத்தாலும் புதுசா ஒரு லட்டு கிடைக்கும் அவ்ளதேன். ( அவன் தலை எழுத்து டென்டர் ஹார்ட்டடா இருந்து ஃபீல் பண்ணா அது அவனோட தனிப்பட்ட தலை எழுத்து.)
ஆனா பெண்ணை பொருத்தவரை ஒரே சான்ஸுதேன். ஜஸ்ட் மிஸ்ஸானா போதும் அவளை வச்சு சரோஜாதேவி கதைகளையே சமுதாயம் எழுதிரும்.
யதார்த்தம் இப்படி இருந்தாலும் ஜோதிட ரீதியா பார்க்கும் போது மணவாழ்வுல தோத்தா ஆணுக்கும் ஆப்புதேன்.
ஒரு குடும்பத்தில் ஆண்,பெண்கள் உரிய வயதில் திருமணமாகாமல் ஏங்குவது - காதல் திருமணம் செய்வது ( செய்து அவதிப்படறவுகளை மட்டும் இந்த கேட்டகிரில கொண்டுவாங்க) - ஓடிப்போவது - ரெண்டாம் தாரமாய் வாழ்க்கை படுவது -வயதில் மூத்த பெண்/இளைய ஆணை மணப்பது - மணவாழ்வில் பிரச்சினைகள் -பிரிவுகள் - இளம் வயதில் வாழ்க்கை துணையை இழத்தல் - வாரிசில்லாமல் போதல் - கள்ள உறவுகளுக்கு துணிதல் இப்படியெல்லாம் அதிகமாக கஷ்டப்பட அக்குடும்பத்து முன்னோர் (ஆண்கள்) பெண்ணினத்துக்கு செய்த துரோகமே காரணம்.
துரோகம் மீன்ஸ் கண்ணாலம் கட்டிக்கிறேனு கைவிடறது - கண்டவளை படுக்கப்போடறது - சின்ன வீடு வைக்கிறது -சின்ன வீடா வச்சுக்கிறது - பொஞ்சாதி கண் முன்னாடியே இன்னொரு "சேர்க்கைய"கொண்டு வர்ரது - பெண்களுக்கு கண்ணாலம் பண்ணும்போது மாப்பிள்ளைய பத்தி சரியா விஜாரிக்காம - அல்பாயுசு காரனுக்கு கட்டிக்கொடுத்துர்ரது எல்லாமே துரோகம்தேன்.
இதை ஜோதிட ரீதியாய் வெகு சுலபமாக நிரூபிக்க முடியும். கொய்யாமரத்துக்கு கொய்யாவே காய்க்கும். ஒரு வமிசாவழி கூட மரம் போன்றதே. சமஸ்கிருதத்தில் இதை வம்ச விருட்சம்(மரம்) என்றுதான் சொல்வார்கள். இப்படி பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படியாக வாழ்ந்த ஆண்களை கொண்ட வம்சத்தில் ஆண் வாரிசு இல்லாது போகும். காதல் திருமணங்கள் நடைபெறும். ஆண்களுக்கு அகால துர்மரணங்கள் சம்பவிக்கும். பெண்கள் இளவயதில் விதவையாவார்கள்.
நேரு குடும்பத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். நேரு அப்படியும் இப்படியுமாக வாழ்ந்தவர். அந்த காலத்தில் லேடி மவுண்ட் பேட்டனுக்கே ரூட் போட்டவர் என்று பேச்சு உண்டு. அவர் செய்த பாவம் அவருக்கு ஆண் வாரிசின்றி போனது. இந்திரா காதல் திருமணம் செய்து கொண்டார். சஞ்சய் ,ராஜீவ் காதல் திருமணம் செய்து கொண்ட் அகால+ துர் மரணமடைந்தனர். மேனகா, சோனியா சிறுவயதிலேயே விதவையானார்கள். தற்போது ராகுல் காந்தி கூட காதல் திருமணமே செய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஒரு குடும்பத்துல முன்னோர் (ஆண்கள்) பெண்ணினத்துக்கு துரோகம் செய்திருந்தால் அந்த குடும்பத்தில் பிறக்கும் ஆண், பெண்கள் , அக்குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண்கள் (மருமகள்கள்) ஜாதகங்களில் எல்லாம் சுக்கிரன் பலவீனப்படுதல், ஏழாமிடம் கெட்டிருத்தலை காணலாம். செவ் தோஷம்,சர்ப்ப தோஷம்லாம் சர்வ சாதாரணமா அமையும்.
மாதா,பிதா செய்தது மக்களுக்கு. இவற்றை ஜாதகத்துல எந்த கிரகம் கெட்டதுங்கறதை வ்ச்சு பிதுர் சாபம் - சுக்கிர சாபம் -சயன தோஷம் - புத்ர தோஷம் னுட்டு பல பேர்கள்ள குறிப்பிடறாய்ங்க.. இதற்கு பரிகாரமாகத்தான் ஏழை சோடிகளுக்கு திருமணம் சுமங்கலி பூஜை இத்யாதி செய்யப்படுகின்றன.
சயன தோஷம்னு ஒரு தோஷம். அஜால் குஜால் வேலைக்கு சமஸ்கிருதத்துல சய்யா சௌக்கியம்னு சொல்றாய்ங்க. சயனம் - படுக்கை ( உ.ம் அனந்த சயனம்) படுக்கை சுகத்துக்கு இப்படி ஒரு நாகரீகமான பேரு. 12 ஆமிடம் தேன் சயனசுகத்தை காட்டுதுங்கோ..
அங்கன பாபகிரகம் இருந்தா இவன் நெருங்கும்போது அவளுக்கு டைப்ரைட்டர் ரெட் ரிப்பன்ல ஓடிக்கிட்டிருக்கும். இவளுக்கு மதமதன்னு இருக்கிறச்ச அவன் டாரா கிழிஞ்சு தூங்கிக்கிட்டிருப்பான்.
டாக்டர் ஒய்.எஸ்.ஆர் விஷயத்தில் எடுத்துக்கொண்டால் அவரது தந்தை ஃபேக்ஷனிஸ்ட் என்று பெயர் எடுத்திருக்கலாம், அசைண்ட் பூமிகளை (அரசு எஸ்.சி.எஸ்.டி.க்கு ஒதுக்கிய நிலங்களை )பறித்திருக்கலாம். (அவற்றை கூட ஒய்.எஸ்.ஆர் தாம் முதல்வராக இருந்த போது அரசுக்கு ஒப்படைத்துவிட்டார். ) ஆனால் பெண்கள் விஷயத்தில் ஒய்.எஸ்.ஆரின் தந்தையாகட்டும், ஒய்.எஸ்.ஆராகட்டும் எவ்வித புகாருக்கும் கூட ஆளானதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமது ஆதரவாளர் இந்திரா ரெட்டி மறைவுக்கு பிறகு ஒய்.எஸ். ஆர் அவரது மனைவியான சபீதா இந்திரா ரெட்டியை " சேவிள்ள செல்லெம்மா" ( சேவிள்ளாவில் உள்ள தங்கை என்று பொருள்) என்று பாசம் காட்டினார். எந்த புது திட்டமானாலும் சபீதாவின் சேவிள்ளாவில் தான் அறிவிப்பது வழக்கம். தமது இரண்டாவது இன்னிங்ஸில் சபீதாவுவை உள்துறை மந்திரியாக்கி அழகு பார்த்தார். அதனால் தான் 60 வயது வரை நிறைவான வாழ்வை வாழ்ந்தார் ஒய்.எஸ்.ஆர். (ஆங்கில தேதிப்படி 2009 ஜூலை எட்டாம் தேதி சஷ்டியப்த பூர்த்தி/ செப்டம்பர் 2 ஆம் தேதிதான் ஏர் கிராஷ்)
சரிங்ணா டயாக்னசிஸுக்கே இந்த பதிவு சரியா போச்சு அடுத்த பதிவுல ட்ரீட்மெண்டை பத்தி பார்ப்போம்