Tuesday, July 19, 2011

ஆண் பெண் வித்யாசம்: பாவம் 8 பகுதி: 4


எட்டாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்களுக்கிடையிலான வித்யாசங்களை திகட்டும் அளவுக்கு பார்த்தாச்சு. ஆணோ பெண்ணோ எட்டாம் பாவம் தொடர்பான தீயபலனை குறைத்துக்கொள்ள என்னெல்லாம் செய்யலாம்னு இந்த பதிவுல பார்ப்போம் ?

எட்டாம் பாவம் கெட்டா என்னெல்லாம் நடக்கும்? பெண் சீக்கிரம் விதவையாவாள் (இது பொது விதிங்கண்ணா - நம்ம அனுபவத்துல நாம கண்டது என்னன்னா இது ஹார்ட்ஃபுல்லா கணவனே வாழ்க்கைன்னு வாழற ஹவுஸ் வைஃபுக்கு மட்டும்தேன் ஒர்க் அவுட் ஆகுது )

மற்றபடி ஆண் பெண்கள் இருபாலாருமே எட்டாம் பாவம் கெட்டால் ஆயுள் பங்கம் , தீராக்கடன், மஞ்ச கடிதாசு தருதல் , விபத்து ,வீண் பழி விழுதல் ,சிறைப்படுதல் ,தீர்க ரோகங்கள், தீராக்கடன், உயிரச்சம் தரும் எதிரிகள்,அடிமையாதல்,அறுவை சிகிச்சை ,கொலை முயற்சி , தனிமைப்பட்டு போதல், நிராகரிக்கப்படுதல் , மர்ம ஸ்தானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இலக்காயிருவாய்ங்க. எட்டுங்கறது மறைவு ஸ்தானம் அதனால மரணத்துல மர்மம் கூட நிலவலாம்.

இந்த பட்டியல்ல உள்ள எல்லா தீய பலனையும் தவிர்க்க முடியாதுங்னா. நாம வந்து எலக்ட் ரிக்கல் இஞ்சினீர் மாதிரி. எவ்ளோ கரண்ட் கீது. அதை எப்படி எதுக்கு உபயோகிக்கலாம்னு மட்டும் தேன் சொல்லுவம்.

புதுசா பவர் வேணம்னா புதுசா பவர் கிடைக்கனும். அப்பம் நம்ம புரட்சி தலைவி மாதிரி மன்மோகனாருக்கு உபரி மின்சாரம் கேட்டு ப்ரஷர் கொடுக்கலாம். உபரி மின்சாரம் கிடைக்கனும்னா அதுக்கு கச்சா முச்சான்னு வழி இருக்கு.

இப்பம் நம்மையே எடுத்துககங்க.ராசிக்கு ரெண்டுல சனி .ஆனால் நாளிதுவரை அடி உதை வாங்காம பதிவு போட்டுக்கிட்டே தான் இருக்கோம்.

நமக்கு உபரி பவர் எப்படி கிடைச்சதுங்கற சீக்ரெட்டை போட்டு உடைக்கத்தேன் அவன் அவள் அதுன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சோம். ஆனால் நம்மாளூங்கள்ளயே அனானி /போலி கமெண்ட் போடற பார்ட்டி இருக்கு - அது இருக்கிற பவரையே என்ன பண்றதுனு தெரியாம தவிக்குது. இதுக்கெல்லாம் உபரி பவர் கொடுத்து எதுக்கு சனத்தை இம்சை பண்றதுன்னு ஆத்தா நம்மை ஆஃப் பண்ணிட்டா.

பவர் போனதும் ஜெனரேட்டர் ஆன் பண்ற பார்ட்டி நாம இல்லை. ஆத்தா சொன்னா கேட்டுக்கனும்னு விட்டுட்டம். சில மாதங்களுக்கு மிந்தி நல்ல கோடையில இந்த ஈபி காரவுக லந்து தாங்க முடியாம இர்ரிட்டேட் ஆகி யுபிஎஸ் ஏற்பாடு பண்ணிட்டன். ஒரு வாரம்தேன். படக்குனு ரியலைஸ் ஆகி அதை நம்ம பாப்பா வேலை செய்யற ஃபோட்டோ ஸ்டுடியோவுக்கு கொடுத்தனுப்பிட்டன்.

அடிஷ்னல் பவர் -சோலார் பவர் - சைக்கிக் பவர் பத்தியெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். இப்பம் பவர் மேனேஜ்மென்ட் மட்டும்தேன்.

மேற்சொன்ன தீயபலன்ல எதையெல்லாம் உங்களால தாங்கிக்கமுடியும் -எதை தாங்கவே முடியாதுன்னு ரெண்டு பிரிவா பிரிச்சு ஒரு லிஸ்ட் பிரிப்பேர் பண்ணிக்கங்க.

தாங்கிக்கமுடியாத ஐட்டங்களை தவிர்க்க தாங்கக்கூடிய ஐட்டங்களை நீங்களே வாலன்டியரா ஒபே பண்ணுங்க.

உ.ம் சிறை வாசத்தை தவிர்க்கனுமா? உங்க அறையே சிறையாகட்டும்.

ஆனால் நான் மட்டும் இந்த பதிவுல எல்லா தீயபலன் களையும் தவிர்க்க பரிகாரங்களை தந்துர்ரன். எல்லாத்தையும் கலந்து கட்டியா பண்ணா பெருசா பலன் கிடைக்காது. குவாலிட்டி ஏறனும்னா குவான்டிட்டிய குறைச்சுத்தேன் ஆகனும். பாக்கெட் தயிர்ல பக்கெட் மோர் வருமா பாஸ்? .

அல்ட்டிமேட் சொல்யூஷன்:

உதிரி உதிரியா அதுக்கு இதுக்குன்னு தனித்தனியே பரிகாரம் செய்து அல்லாடாம எதுனா சுருக்கமான குறுக்குவழி இருக்கான்னு கேப்பிக. சொல்றேன்.

எட்டாமிடத்து தோஷம் மேக்சிமம் என்ன செய்துரும்? மரணத்தை தரும். மரணத்தை தவிர்க்க ஒரே வழி மரணமடைஞ்சுரனும்.

ம ...........ர..................ண...............மா?

ம்ரணத்துல எத்தனையோ வகை இருக்கு தெரியுமோ? எக்கனாமிக்கல்,சோஷியல்,பொலிட்டிக்கல், சைக்கலாஜிக்கல்னுட்டு பல வகை மரணங்கள் இருக்கு. .

மேலும் உங்க மரணத்தால என்ன நடந்துரப்போகுது? நீங்க பதிவ்ரா இருந்தா அடுத்த பதிவு வெளிவராது அம்புட்டுதேன்.

அதை நீங்க உசுரோட இருக்கிறப்பயே செய்து தொலைச்சா பதிவரா நீங்க செத்துப்போயிட்டிங்க தானே? மரணம்னா நீங்க இருக்கமாட்டிங்க தட்ஸால் . நீங்கன்னா ஆரு? உங்க ஈகோ.

இந்த பூமி உருண்டை மேல பூமத்திய ரேகை ,கடக ரேகை அதுஇதுன்னு கோடெல்லாம் இருக்கும். அது இயற்கையிலயே உள்ள கோடா ? இல்லை . புவியியல் நிபுணர்கள் தங்கள் வசதிக்காக போட்ட கோடு.
உங்க ஈகோவும் இதே இழவுதேன்.

ஈகோன்னா என்ன? தன்னை மையமா கொண்டு இந்த படைப்பை பார்க்கிறது. இந்த படைப்புக்கு மையம் எது? எதுவா வேணா இருக்கலாம். ஆனால் நீங்களோ நானோ சைட் மெம்பர்ஸ் மட்டும்தான் கமெண்ட் போடனும்னு என்னை செட்டிங்சை மாத்த வச்ச அந்த அராத்தோ மட்டும் இல்லை.

அந்த அராத்து தன்னை மையமாவே வச்சு ரோசிக்குது. நானும் ஆன்மீகம் எழுதறேன். இந்த பயலும் எழுதறான் ( அடியேன்) ஆனால் நான் எழுதறத 40 பேர் படிக்கமாட்டேங்கறான். இந்த பயல் எழுதினா ஆயிரத்து சில்லரை பேர் படிக்கிறாய்ங்களே..

நான் கைக்காசை மாசம் எண்பது ரூபா செலவழிச்சு பிரவுஸ் பண்றேன். இந்த பயல் கொத்து கொத்தா ஜாதகம் பார்த்து பைசா பார்த்து பிராட்பேண்ட் வச்சுட்டு தாளிக்கிறானே.

பிரச்சினை எங்க வருது? தன்னை மையமா வச்சு யோசிக்கிறப்பதேன். பேசிக்கலா நான் வாசகன் . நான் எழுதவந்ததே எனக்கான எழுத்து கிடைககாம போனதாலதான்.

நான் இன்னைக்கு எழுதற மேட்டரை ஒரு ஜானகிராமனோ, தனிக்காட்டு ராசாவொ எழுதிக்கிட்டிருந்தா நான் பேசாம படிச்சுட்டு ஓட்டுப்போட்டுட்டு போயிருப்பேன்.

நான் யாரோ ஒருத்தரு மையமா இருந்துட்டு போகட்டும்னு தான் பார்க்கேன். எங்க ஸ்டேட்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்ல அணைகள் கட்ட ஆரம்பிச்சாரு. ஒட்னே நான் ஆ.இ 2000 ஐ ஏறக்கட்டி வச்சுட்டு மைக்கும் கையுமா அலைஞ்சேன்.

இப்பம் சூட்சுமம் புரியுதுங்களா? இந்த படைப்புக்கு நாம மையம் கிடையாது. அப்படி மையம்னு நினைச்சு வாழ்ந்தா நிறைய ஏமாற்றங்களை தாங்க வேண்டி வரும். நானும் எட்டாம்பு படிக்கிற காலத்துல இருந்து டிகிரி செகண்ட் இயர் வரை அப்படி ஒரு பிரமையில தான் வாழ்ந்தேன்.

யாதார்த்தம் படக்குனு என்ட்ரி கொடுத்து பளார்னு ஒரு அறைவிட்டுது. ரோசிக்க ஆரம்பிச்சுட்டன். கவனிக்க ஆரம்பிச்சுட்டன். அதனோட பலன் தான் இந்த பதிவுகள்.

நான் யார்? இந்த படைப்பின் ஒரு அங்கம். பிரிக்கவே முடியாத அங்கம். இரண்டற கலந்துவிட்ட ஒரு அங்கம். இந்த இயற்கைக்கு எங்கே எது நடந்தாலும் அது என்னையும் பாதிக்கும். உ.ம் அல்மட்டி டேம்ல தண்ணி திறந்து விட்டாய்ங்கன்னா அது தத்தி தத்தி எங்க ஊர் என்.டி.ஆர் நீர் தேக்கம் வரை வரும். தெலுங்கு கங்கை கால்வாய் வழியா சென்னைக்கும் வரும்.

இன்னும் ஒரு படி மேல போனா எனக்கு என்ன நடந்தாலும் /எனக்குள்ளே என்ன நடந்தாலும் இந்த இயற்கையும் அதனால மெருகூட்டப்படும் அ மொக்கையாகும்.

இப்படி ஒரு மன நிலை ( ஜஸ்ட் ஃபீடட் நாலெட்ஜா இல்லாம - உரிய அவதானிப்பு -ஆராய்ச்சி - அனுபவத்தோட ) ஒரு மன்சனுக்கு ஏற்பட்டுருச்சுன்னா எட்டாம் பாவம் என்ன? எந்த பாவமும் ஒன்னும் பண்ணமுடியாது.

மரணம் உங்களை பாதிக்காம இருக்கனும்னா மரணத்தோட கை குலுக்கிரனும். மரணம்னா உடல் ரீதியான மரணமாவே இருக்கனுங்கற அவசியமில்லை. நீங்க உங்க ஆன்மாவாவே நினைச்சு பில்டப் பண்ணி வச்சிருக்கிற ஈகோவோட மரணம் கூட போதுமானது.

ஒரு வேளை நீங்களும் என்னாட்டம் மென்மையான மனம் கொண்டவரா இருந்தா ஒரு பிரிவு கூட மரணம் தேன். ஒரு நிராகரிப்பு கூட மரணம்தேன்.

ஒவ்வொரு பிரிவையும்/ நிராகரிப்பையும் டாலரேட் பண்ணிக்கிட்டு -உங்களை நீங்க ம்ராமத்து பண்ணிக்கிட்டு மீண்டு வர்ரிங்க பாருங்க அது உங்களோட மறு பிறவி. உங்க மரணம் ஏற்கெனவே நடந்தி போச்சு . எட்டாம் பாவத்து தோஷம் ஃபணால். நீங்க புதுசா பிறந்துருவிங்க. உங்க ஆயுள் இரட்டிப்பாகும். உங்கள்ள இருந்த மலினத்துல ஒரு 10% ஆச்சும் எரிக்கப்பட்டிருக்கும்.

அப்படியல்லாது எருமைத்தோலோட , மூக்கடியில வந்துட்டானேங்கற பதைப்பு கூட இல்லாம தொடர்ந்து அனானி கமெண்ட் போடற பிக்காலிங்க எத்தீனி தாட்டி உடல் ரீதியாவே செத்து மறுபடி மறுபடி பிறந்து வந்தாலும் அந்த பிறப்பும் ஒரு மரணம்தேன்.

இயற்கை அவனை பார்த்து வடிவேலு கணக்கா " இவன் அவனா"ன்னு ஐடென்டிஃபை பண்ணிரும்.

(தொடரும்)