துவாதச பாவங்கள்ள 10,11,12 தவிர மத்த பாவங்கள் எப்படி இருக்கனும் , அதுக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்புன்னு விலாவாரியா பார்த்தோம். இன்னம் ரெண்டு நாள்ள 10,11,12 பாவங்களை சூ காட்டி விட்டுர்ரன். அம்பேல்.
பத்தாம் பாவம்:
இங்கன ஒரு பாம்பாவது இருக்கனும் பாவியாவது இருக்கனும்பாய்ங்க.ஏன்னா இதான் தொழில்,உத்யோகத்தை காட்டற இடம்.இங்கன சுபகிரகம் இருக்கனும்னு ஏன் சொல்லலை?
வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா அதாவது எந்த தொழிலா இருந்தாலும் பார்ட்டிக்கு/க்ளையண்டுக்கு ரவூண்டு துரோகமாச்சும் பண்ணனும். இல்லாட்டி பணம் பண்ணமுடியாது. அதனாலதான் பாம்பாவது இருக்கனும் பாவியாவது இருக்கனும்ங்கறது.
மரணம் -மைதுனம்-தனம்ங்கற என் பதிவை படிக்காதவுகளுக்கு கில்மாவுக்கும் இந்த பாவத்துக்கும் என்ன தொடர்புன்னு கன்ஃப்யூஸ் ஆகலாம்.அவிக பழைய பதிவை தேடிப்பிடிச்சு படிச்சே ஆகனும்.
மனுஷனுக்குள்ள இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம்/வெளிப்பாடு நிலைத்தல். உருவாக்குதல்,பரவல். இதெல்லாம் சாத்தியமாகக்கூடிய தொழில்ல உள்ளவுகளுக்கு நாளடைவுல உடலுறவு விருப்பம் குறைஞ்சிக்கிட்டே போகும்.
எப்பயாச்சும் பெரிய காண்ட்ராக்ட் மிஸ் ஆனப்பயோ, பார்ட்னரோட தகராறு வந்தப்பயோ மனசு செக்ஸ் பக்கமா ஒதுங்கும். அல்லது சரீர காரணங்களுக்காக ஈடுபடலாம்.
மனசுக்கு பிடிக்காத,நிலைத்தல். உருவாக்குதல்,பரவல். இதெல்லாம் சாத்தியமே இல்லாத துறையில அடிமைத்தொழில்ல உள்ளவுகளுக்கு செக்ஸ் என்பது ஒரு அவுட்லெட்.
பாவி ஓகே. பாம்பு ஓகே. சுபகிரகமிருந்தா என்னனு கேப்பிக. சொல்றேன் வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா அதாவது எந்த தொழிலா இருந்தாலும் பார்ட்டிக்கு/க்ளையண்டுக்கு ரவூண்டு துரோகமாச்சும் பண்ணனும். இல்லாட்டி பணம் பண்ணமுடியாது அதனால பத்துல சுபகிரகம் உள்ள பார்ட்டி நாலு பெரிய மனுஷாளோட ஆதரவோட எம்.ஜி.ஆர் வேலைங்க,கோவில்,கும்பாபிஷேகம்னு செய்துக்கிட்டிருக்க வேண்டி வரலாம். அல்லது கலை,இலக்கியம்னுட்டு அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமரா பாரசைட்டா வாழவேண்டியதுதான்.
இப்படியா கொத்த ஃபீல்டுலயும் நிலைத்தல். உருவாக்குதல்,பரவல் இத்யாதிக்கு வாய்ப்பிருந்தா விருப்பம் குறைஞ்சிட்டே வரும். அது மனசுக்கு பிடிக்காததாவோ,சிக்கல் நிறைஞ்சதாவோ இருந்தா கொலை வெறி கிளம்பினா தற்கொலை எண்ணம் வந்தா செக்ஸ் பக்கமா பார்ட்டி ஒதுங்கியாகவேண்டியதுதான்.