Tuesday, March 30, 2010

மணியம்மையை அறைந்த பெரியார்


என்.டி.ஆர் கூட தம் மனைவியை அடித்திருக்கிறார். இதை அவரே (மனைவி) சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார்.

அட இவ்வளவு ஏன் பெண்கள் சுதந்திரத்துக்காகவும், சம உரிமைக்காகவும் சமர் புரிந்த பெரியார் கூட மனைவியை அடித்திருக்கிறார்

எப்படியும் சனங்க பொங்கி எழுந்துருவாங்க. எப்போ? ஏன்? எப்படிங்கற விஷயம் அடுத்த பதிவில்

இந்த உலகத்திலேயே மனைவியை அடிக்காதவங்க ரெண்டு பேர்தான் .ஒருத்தன் பிறக்கவே இல்லை. இன்னொருத்தனுக்கு கல்யாணமே ஆகலை.

என்னைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர் மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் ரியலி ஹி ஈஸ் கிரேட். கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட சம்பவம் உண்மையிலேயே நடந்திருந்தாலும் ஹி ஈஸ் கிரேட் தான்.

ஒரு முறை கற்பனை செய்துகொள்ளுங்கள் எம்.ஜி.ஆரை புரட்சி தலைவர் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடியபோது கலைஞர் வகையறா ஏகத்துக்கு கிண்டலடித்தது உண்டு. ஆனால் இன்று திரும்பி பாருங்கள் அவர் வாழ்க்கையே ஒரு புரட்சிதான்.


ஆமாம்!
ஏதோஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாட வந்த ஒரு நடிகையை தனியறையில் விசேஷ நடனம் ஆடச்சொல்லி இரண்டு முது பெரும் தலைவர்கள் ரசித்ததாகவும் (அதில் ஒருவர் மூப் படைந்து போய் சேர்ந்து விட்டார். இன்னொருவரும் மூப் படைந்து நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். இதற்கு பழி வாங்கவே அந்த நடிகை ஆக்டிவ் பாலிடிக்ஸில் தூள் பறத்தினார் என்று ஒரு ஸ்கூப் உண்டு இது எந்தளவு நிஜம் தெரியாது.

உண்மையில் நான் மனிதர்களிலான சூரிய சந்திர குணாம்சங்களை விவரிக்கவே மேற்படி பதிவை போட்டேன். அதென்னவோ பாவம் எம்.ஜி.ஆர் விஷயம் குறுக்கிட்டுவிட்டது. இருக்கட்டும். அதை தொடாமலிருந்திருந்தால் இத்தனை பேர் படித்திருக்கவே மாட்டார்கள். உனக்கு 22 எனக்கு 32 தொடர் படுத்தே விட்டது. மேற்படி பதிவு ஆக்சுவலி மேற்படி தொடரின் அத்யாய முயற்சிதான். ஓகே நான் சூரிய சந்திர மனிதர்களை பற்றி தனிப்பதிவு போடுவதாய் சொல்லியிருந்தேன் அல்லவா. அந்த விவரங்களை கீழே கொடுத்துள்ளேன் படியுங்கள். ஆதரவு தொடர்ந்தால் இந்த விஷயத்தை ஆழமாக ஆராயலாம். இல்லேன்னா ஜானகியை பின்னெயிடுத்த எம்.ஜி.ஆர் மாதிரி நிறைய ஸ்கூப் கைவசமிருக்குங்கண்ணா

.. Now Go Ahead with the Speacial feauture !

உனக்கு 22 எனக்கு 32 (OR) சூரிய சந்திர குணாம்சங்கள்.




வீட்டுக்கு வந்து ஜகன் கிட்டே பேசினதை எல்லாம் மாயாகிட்டே சொன்னேன். மாயா, "ஏய் நெஜமாவா சொல்றே. நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக ஊருக்கே வீட்டை கட்டி கொடுத்தும் தங்களுக்கு சொந்த வீடு இல்லாம இருக்கிற கட்டிட தொழிலாளிகளுக்கு சொந்த வீட்டை தவணைல தர்ர மாதிரி இவ்ளோ பெரிய ப்ராஜக்டா? அதுலயும் போட்ட முதலுக்கு ஜஸ்ட் பாங்க் வட்டி கட்டுப்படியானா போதும்னு முடிவு பண்ணியா? "ன்னு மறுபடி மறுபடி கேட்டாள்.

நான் மார்புக்கு குறுக்கே கை கட்டிக்கிட்டு "யெஸ்"னேன். மாயா சட்டுனு என்னை இழுத்து அணைச்சிக்கிட்டு கன்னத்துல முத்தமிட்டாள்.

"ஏய் என்ன இது ?"

" நீ எனக்கு ஒரு பரிசு கொடுத்தே .. நான் அதுக்கு நன்றி சொன்னேன்"

"ஓஹோ .. நான் அப்படி நினைக்கல. நான் என்னவோ ஐடியல் ஹி அது இதுன்னு உன்னைவிட்டு விலகியே வந்துட்டாப்ல ஒரு ஃபீலிங். உனக்கு எப்படியாவது நெருக்கமாகனும்னு துடிச்சிக்கிட்டிருந்தேன். நீ நேத்து பேசினப்ப உன் தொலைதூர பார்வை, அதுல மிதந்த கனவு , தொனிச்ச சின்சியாரிட்டி இதெல்லாம் என்னை அசைச்சுருச்சு. இந்த ஒரு ப்ராஜக்டை மெட்டீரியலைஸ் பண்ணா போதும் மாயா குட்டி நாய் குட்டியா காலண்டை விழுந்து கிடப்பானு ஒரு நெனப்பு. அதனாலதான் கமிட் ஆனேன்"

"ச்சீய்.. உனக்கேண்டா இப்படி ஒரு நினைப்பு.. வந்தது.. நான் உன்னை இந்த நாட்டுக்கே ராசாவாக்கி பார்க்கனும்னு கனவு கண்டவள். ராசாவானா நீ என்னை விட்டு எந்தளவுக்கு விலகிப்போவேனு தெரியாதா எனக்கு?"

"அது கரெக்டுதான் கண்ணு ஆனால் நடுவுல ஒரு தடவை நான் என்.டி.ஆர் தோல்விக்கான காரணங்களை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தப்ப உனக்கு எதுக்கு இதெல்லாம்னு சொன்ன மாதிரி ஞா"

"அதுக்கு தான் பழைய தமிழ் சினிமா மாதிரி நீளமா வசனம் பேசி என்.டி.ஆர் என் வாழ்க்கைல குறுக்கிடலன்னா தெலுங்கு இல்லே. தெலுங்கு இல்லேன்னா உன்னோட காதல் இல்லேனு எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டயே"

"அப்போ நீ என்னவோ பதுங்கின மாதிரி இருந்ததே தவிர என் ப்ராஜக்ட்ல உனக்கேதும் இன்ஸ்பிரேஷன் இருந்ததா தெரியலியே?"

"அப்போ ஜஸ்ட் ஒரு தலைவனோட தேர்தல் தோல்விக்கு இந்தளவுக்கு ரியாக்ட் ஆகனுமா? இவன் ஓவர் ரியாக்ட் பண்றானு ஒரு மேம்போக்கான எண்ணம் உள்ளூற இருந்தது நிஜம்தான். ஆனால் என்.டி.ஆர் டெத் ஆனபிறகு பிரபலங்கள் அவரை பத்தி யும், அவருடனான தங்களோட அனுபவங்கள் பத்தியும் பேசினதை எல்லாம் டி.வில பார்த்துக்கிட்டிருந்தப்போதான் தெரிஞ்சது.. ரியல்லி ஹி ஈஸ் எ லெஜண்ட். மேலும் நீ ஜோஸ்ய புஸ்தகங்களை ஆராய்ச்சிபண்றப்ப மெயின்டெய்ன் பண்ண குறிப்பு நோட்டை பார்த்தேன். அதுல எவ்ரி மேன் ஈஸ் எ ப்லேனட்னு ஒரு சித்தாந்தத்தையும் என்.டி.ஆர் சூரியன், நீ சந்திரன் ங்கற உன் கஸ்ஸிங்கையும் படிச்சேன்"

"மொத்தத்துல நீ என் அலமாரிய குடையற வேலைய விடலே. இரு இரு பெரிய பூட்டா போட்டுர்ரன்"

"முதல்ல ஒழுங்கா உன் பேன்டுக்கு ஜிப் போட்டு பழகு .அப்புறம் அலமாரிக்கு பூட்டு"

"ச்சீ இதை முதல்லயே சொல்ல கூடாது"னு செல்லமா கோவிச்சுக்கிட்டு ஜிப் போட்டேன்.

மாயா, லேசா ஸ்மைல் பண்ணிக்கிட்டே மறுபடி என்னை கிட்டே இழுத்து "நீ இந்த நாட்டுக்கே ராசாவானாலும் சரி நான் இல்லாம உன்னால குப்பை கொட்ட முடியாது. அட்லீஸ்ட் நீ ஜிப் போட மறந்துட்டா ஞா படுத்த ஆள் வேணுமில்லியா?"ன்னாள்.

"அப்போ நீயும் என்.டி.ஆர் கேரக்டர்ல இம்ப்ரெஸ் ஆயிட்டே"

" நோ கண்ணா ! இன்னும் எத்தனை யுகம் போனாலும் ஆம்பளைங்களால பொம்பள மனச புரிஞ்சிக்க முடியாது. பொம்பளைக்கு எங்கயோ இருக்கிற சூரியன் , எங்கயோ இருக்கிற என்.டி.ஆர் எல்லாம் முக்கியமில்லை. அவளுக்கு மை மேன் னு சொல்லிக்க, அவளை காதலிக்க ஒரு மேன் வேணும். யாரோ சூரியன்னு தெரிஞ்சிக்கிட்டதுக்கு நான் கன்வின்ஸ் ஆகலை. அந்த சூரியனோட ஒளிய வாங்கி இதமா பிரதிபலிக்கக்கூடிய சந்திரன் நீனு தெரிஞ்ச பிறகு கன்வின்ஸ் ஆயிட்டன்."

"த பார்ரா! பொம்பளையோட இந்த சைக்காலஜிக்கு காரணம் என்ன தெரியுமா? ஷி ஈஸ் வீக். பலவீனமே பாபங்களின் கங்கோத்ரினு விவேகானந்தர் சொல்றாரு"

"இருந்துட்டு போட்டுமே. எல்லாருமே என்.டி.ஆரா இருந்துட்டா போதாது. அது மாதிரி கேரக்டரை அட்மைர் பண்றதுக்கு உன்னை மாதிரி பெண்மை குணங்கள் கொண்ட கேரக்டரும் தேவை. நீ மட்டும் இருந்துட்டா போதாது. உன்னை அட்மைர் பண்ண என் மாதிரி ஒரு பொம்பளையும் தேவை. அப்போதான் லைஃப்ல மெலோ ட்ராமா இருக்கும். வாழ்க்கைன்னா முரண்பாடுகளோட கலெக்சன் தான். முரண்பாடுகள் இல்லேன்னா மனித வாழ்க்கையே போர்டம் ஆயிரும்"

"மாயா குட்டி இப்போ பைல இருந்து பூனை குட்டி வெளிய வந்துருச்சு. உன்னோட நம்பிக்கை என்னடான்னா சூரியன் மேற்கு திசைல மறைஞ்சுட்டான். இப்போ நம்மாளு சந்திரன் மாதிரி உதிப்பான்னு முடிவு கட்டிட்டயா? அந்த பப்பெல்லாம் வேகாது. லோக்கல்ல ஒரு சூரியன் இருக்கான். அதான் ஜகன் சார். அவருக்கு ஒரு சூரியன் இருக்கார் அது ஒய்.எஸ்.ஆர்.

சூரியன் இல்லேன்னா சந்திரனால ஒரு மயிரும் பிடுங்க முடியாது. சந்திரன் தன் ஓளியில சில அல்லிமலர்களை பூக்க வைக்க முடியும், ஜஸ்ட் ஒரு இன்ஸ்பிரேஷனை தர முடியும். ஆனால் சூரியன் அப்படி கிடையாது சோலார் பவர், விட்டமின் டி, விட்டமின் ஈ, கிருமிகளை நாசம் பண்ணும், தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க உதவும். சூரியன் இல்லேன்னா பொழப்பே நாறிப்போயிரும். சூரியன் இருக்கிற வரை தான் சந்திரனுக்கு மரியாதை.

வேணம்னா ராமகிருஷ்ணரோட மறைவுக்கு பிறகு சாரதா அம்மையார் ஏத்துக்கிட்ட ரோலை ஏத்துக்கிட்டு இன்னொரு சூரியன் உதயமாற வரைக்கும் மக்களுக்கு ஆறுதல் தரமுடியும் தட்ஸால்"

"ஏய்.. இப்பத்தான் உன் அந்தரங்கமே எனக்கு புரியுது"

"அடடா.. என்ன நீ இப்படி கலாய்க்கிறே. இப்பத்தான் ஜிப் போடலன்னு சொன்னேன் .போட்டாச்சு. உள்ளாற டெண்டெக்ஸ் வேற இருக்கு. அதை மீறி அந்தரங்கம் தெரியுதுன்னா கலாய்ப்புதானே"

"அப்போ நான் சரியான பாயிண்டை பிடிச்சிட்டேனு அர்த்தம். உனக்கு என்.டி.ஆர் மேல இருக்கிற அட்மைரேஷனை விட சந்திரபாபு மேல இருக்கிற அட்மைரேஷன் தான் அதிகம்.. இரு இரு..........உணர்ச்சிவசப்படாதே. ஆக்சுவலா நீயும் சந்திரபாபுவோட கேரக்டர்தான். ஆனால் அதுக்கு மாறா என்.டி.ஆரை அட்மைர் பண்றே.இது ஆப்போசிட் போல்ஸ் அட் ராக்ட் ஈச் அதர் பிரின்ஸிபிள் படி சாத்தியம் தான். உனக்கும் யாரோ ஒருத்தரோட நேம் அண்ட் ஃபேமை உபயோகிச்சிக்கனும். யாரோ போட்ட பாதைய லேசா மராமத்து பண்ணிக்கிட்டு போயிரனும்னு ஒரு எண்ணம் இருக்கு. ஆனால் அவங்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க கூடாதுங்கற மோரலும் இருக்கு. அவிக இல்லன்னா உன் பப்பு வேகாதுங்கற ப்ராக்டிக்காலிட்டி, இன்செக்யூரிட்டியும் இருக்கு"

நான் எழுந்து நின்னு படபடனு கை தட்டினேன். " கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்ங்கற மாதிரி தூள் கிளப்பிட்டே மாயா ! ஓப்பனா சொன்னா நான் சகட்டு மேனிக்கு படிச்சு கிழிச்சு மாசக்கணக்கா அனலைஸ் பண்ணிக்கிட்டிருந்த விஷயத்தை படார்னு போட்டு உடைச்சே. யுவார் கிரேட்"

" எதிராளிய, அதுவும் மனைவிய க்ரேட்டுனு சொல்ற மனப்பக்குவம் இருக்கிற ஆண்தான் கிரேட். இப்போ சொல்லு.. என்.டி.ஆர் இல்லே. ஐ மீன் சூரியன் மேற்கு திசைல மறைஞ்சுட்டான். மிச்சமிருக்கிறது சந்திரன். சந்திரனா நீ என்ன பண்ணப்போறே"

" நான் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே. ஒய்.எஸ்.ஆர். என்.டி.ஆர் கிட்டே இருந்த குண நலன்ல 70 சதவீதம் இவர்கிட்டே இருக்கு. இன்னும் சொல்லப்போனா என்.டி.ஆர் தன் பெயர் புகழுக்கு பங்கம் வர்ர மாதிரியிருந்தா தன்னையே நம்பினவங்களை கூட கழட்டிவிட்டுருவாரு.ஆனால் ஒய்.எஸ்.ஆர் அப்படியில்லே. அவர் ஆக்டர்,இவர் டாக்டர். அவர் ஸ்டேட்பார்ட்டி, இவர் சென்ட்ரல் பார்ட்டி இப்படி சின்ன சின்ன வித்யாசங்கள் தான் இருக்கு. என்.டி.ஆர் எல்லா விஷயத்திலும் ஸ்ட்ரெயிட் ஃபார்வோர்ட். ஆனால் ஒய்.எஸ்,ஆர் கில்லாடி. மாறிப்போன காலத்துக்கு என்.டி.ஆர் ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகாது. 1984ல பாஸ்கர்ராவ் எபிசோடுக்கும், 1994 சந்திரபாபு எபிசோடுக்கும் வித்யாசம் பார்த்தாலே தெரியும் காலம் மாறிப்போச்சு. சனத்துல நியாய உணர்வு குறைஞ்சிபோச்சு. ரெபல் ஆகிற தத்துவம் குறைஞ்சி போச்சு. இன்னைக்கு ஒய்.எஸ்.ஆர் தான் கரெக்ட். ஒரு தேசீய கட்சில ஆஃப்டர் ஆல் ஒரு பி.சி.சி. ( மானில கட்சி தலைவர்) சி.எல்.பி (சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்) லீடரோட இம்பாக்ட் பெரிசா இருக்க வாய்ப்பே இல்லை. ஆனா ஹி ஈஸ் டூயிங் பெட்டர். "

"அப்போ சாரதா அம்மையார் ரோலை ப்ளே பண்ண போறே. இன்னொரு விவேகானந்தர் அதாவது ஒய்.எஸ்.ஆர் வர வரைக்கும் "

"யெஸ். "

"ஒய்.எஸ்.ஆருக்கு அப்புறம்?"

"அவரோட சன் ஜகன் மோகன் ரெட்டி இருக்காரு . யங்க் சாப். சார்மிங் பர்சனாலிட்டி"

"அவருக்கு அப்புறம்?"

"அப்போ பார்க்கலாம்"

"ஏய் மொத்தத்துல நீ சந்திரபாபுவா மாறிட கூடாதுனு ரொம்ப கேர் எடுத்துக்கறே அப்படித்தானே.. ஆமா சந்திரபாபுன்னா உனக்கேன் இத்தனை வெறுப்பு?"