Thursday, December 31, 2009

ஒரு பலான உரையாடல்

"ஸ்வாமி! உங்க ப்ளாக் பார்த்தேன்"
"நல்லதும்மா"
"என்ன நல்லதும்மா ? அசிங்க அசிங்கமா எழுதிவச்சிருக்கிங்க"
" உங்க அப்பா அம்மா அசிங்கம் பண்ணாம நீங்க பிறந்திங்களா ? இல்லை எங்க அப்பா அசிங்கம் பண்ணாம நான் பிறந்துட்டனா? "
"அவங்க வீட்ல,பெட் ரூம்ல செய்தாங்க , விளக்கை அணைச்சுட்டு"
" நான் என்ன பட்டப்பகல்ல பார்க்லயா செய்ய சொல்லியிருக்கேன்?"
" உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன் ஸ்வாமி !"
"அதனால நீங்க சொல்ற படி நான் பதிவுகள் எழுதனுங்கறிங்களா ?"
"அய்யோ ! என் உத்தேசம் அது இல்லே !"
"உத்தேசம் எதுவா இருந்தாலும் கான்செப்ட் அதானே. "
" நீங்க ஏன் தப்பாவே புரிஞ்சிக்கிறிங்க ?"
"இல்லம்மா நான் உங்க பிரச்சினைகளை சரியா புரிஞ்சிக்கிட்டேன். அதை நான் ஓப்பன் ப்ளாக்ல எழுதறதுதான் உங்க பிரச்சினை"
" நானும் இது மாதிரி ஒரு பிரச்சினைக்காக வந்து உங்க கிட்டே சஜஷன் வாங்கி பயனடைஞ்சவதான். அதை மறக்கல .ஆனால் இப்படி பகிரங்கமா ?"
" ஏம்மா ! உன் அம்மா ஏற்கெனவே என் க்ளையண்ட். அதனால உனக்கு பிரச்சினைன்ன உடனே நேரே எங்கிட்ட அழைச்சுட்டு வந்துட்டாங்க . இல்லேன்னா என்னாயிருக்கும் ? குடலேற்றம் தெரியாம கோடி பணம் செலவழிச்ச கதையா ஆயிட்டிருக்காது"
"என்ன சாமி நீங்க சொல்றது? என் அம்மாவும் உங்க க்ளையண்டா ?"
" ஆமா தாயி ! உங்க அம்மா ச்சும்மா கண்ட விரதம்னு இருந்துக்கிட்டு உன் அப்பா அம்மா இடையிலே "அது" ஏறக்குறைய நடக்காமயே போயிருச்சு. பக்கத்துல லாண்டரி வச்சு இருந்த ஆளு பொம்பிளைங்களுக்கு சுளுக்கு புடிச்சா மந்திரம் போடுவான். அப்படி வர்ர கேஸ்கள்ள எது காஞ்சி கிடக்குதோ அதை கை வச்சுர்ரது வழக்கம் . உங்கப்பாவுக்கு அந்தாளோட ஸ்னேகம் ஏற்பட்டு போச்சு. அவன் எவளையோ கன்வின்ஸ் பண்ணி "அதுக்கு" அரேஞ்ச் பண்ணியிருக்கான். உங்க அப்பா பாவம் ப்ரின்ஸ்பிள் மேன். அவருக்கு கில்ட்டினாலயோ என்னவோ ட்ரை பண்ணி ஃபெயில் ஆன மாதிரி இருக்கு. அன்னைலருந்து ஏற்கெனவே இருந்த குடிப்பழக்கம் ஓவராயிருச்சு. உங்கம்மா அலறி யடிச்சுக்கிட்டு அதை எவ்ளதான் கண்ட்ரோல் பண்ண பார்தாலும் லாண்டரி காரன் ரகசியாமா டோர் டெலிவரியே கொடுக்க ஆரம்பிச்சுட்டான். உங்க அப்பா தண்ணீயா? கன்னியா ? ன்னிட்டு மனசுக்குள்ள பட்டிமன்றம் நடத்த தொழில்ல பயங்கர நஷ்டம். அப்பதான் உங்கம்மா ஜாதக நோட்டை எடுத்துக்கிட்டு வந்தாங்க"

" நீங்க என்ன சஜஸ்ட் பண்ணீங்க ?"
" ஒரு பேஷண்டை பத்தி இன்னொரு பேஷண்டுக்கு சொல்லகூடாது அது அம்மா பெண்ணாவே இருந்தாலும்"

"ச்சும்மா சொல்லுங்க சாமி ! "
" நீ காசு கொடுத்தா கூட சொல்லமுடியாது தாயி. சரி போவட்டும் நீ பிரச்சினைனு வந்தப்ப நான் என்ன சஜஸ்ட் பண்ணேன் சொல்லு பார்க்கலாம்"

"எதுக்கு அந்த அசிங்கமெல்லாம் இப்ப கேட்கிறிங்க"

"பார்த்தியா அடுத்தவங்களுக்கு கொடுத்த சஜஷன் , கவுன்சிலிங்க் மட்டும் நீங்க கேட்கணும். ஆனால் உங்க பிரச்சினை, உங்களுக்கு கொடுத்த சஜஷன், கவுன்சிலிங்க் மட்டும் யாருக்கும் தெரியக்கூடாது. இப்படியே எல்லாரும் நினைக்கிறதாலதான் - எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்-ன்னிட்டு பப்ளிக் ப்ளாக்ல எழுதிக்கிட்டுருக்கேன். சரி .. உனக்கென்ன உன் தாயோட பிரச்சினை என்ன ? அதுக்கு நான் கொடுத்த சஜஷன் என்னனு தெரிஞ்சுக்கனும் அவ்ளதானே. சொல்லிட்டா போவுது. ஏன் சொல்றேனு கடைசில சொல்றேன்"

"உங்கம்மா பிறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலனு உனக்கு தெரியும். அந்த கிராமத்துல இவங்க பக்கத்து வீட்ல ஒருத்தனுக்கு புதுசா கல்யாணமாகியிருக்கு. அவன் சரியான் காஞ்சான் போலிருக்கு. வேலை வெட்டி எல்லாத்தயும் விட்டுட்டு வீட்டோடவே இருந்திட்டிருக்கான். ஒரு வருஷத்துல திவால் நிலைக்கு வந்துட்டான். இத பார்த்துட்டு அக்கம்பக்கத்துக்காரவுக - செக்ஸ்ங்கறது என்னவோ அசிங்கம் மாதிரியும் அதுல தொடர்ந்து ஈடுபட்டா தரித்திரம், ஏழையாயிருவாங்கங்கற மாதிரியும் பேசிக்கிட்டிருந்திருக்காங்க . இந்த கான்செப்ட் உங்கம்மா மைண்டல நல்லாவே பதிவாகியிருந்திருக்கு. எல்லா ஆம்பளையும் கல்யாணமான 90 நாள் எப்படி தேன் குடிச்ச நரி மாதிரி இருப்பானோ அதே மென்டல் ஸ்டேட் நாற்பது வயசுல ஒரு தரம் ரிப்பீட் ஆகும். நம்ம நாட்ல ஆண், பெண்ணுக்கு இடையில் 5 முதல் 10 வயசு வித்யாசம் இருக்கும்படியா கல்யாணம் பண்றதால இந்த மென்டல் ஸ்டேட் (மெனோஃபஸுக்கு முன்னாடி) பெண்ணுக்கும் வரும் என்ன .. அஞ்சு அ பத்துவருசம் லேட்டா . இதை பெண்கள் புரிஞ்சிக்கிட்டு "தொலையுது போனு" அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா பிரச்சினையிருக்காது. அதை விட்டுட்டு "இந்த வயசுல என்ன இழவு இதுனு" மக்கர் பண்ணா பிரச்சினைதான். உங்கப்பா கேஸை யே எடுத்துக்க அவர் ஏதோ ஆர்த்தடாக்ஸ் ஃபேமிலலருந்து வந்தவர் ஸோ லாண்டரிகாரர் அரேஞ்ச் பண்ண பெண்ணோட அவரால செக்ஸ் செய்ய முடியாம லிக்கருக்கு டைவர்ட் ஆனாரு. சப்போஸ் அவர் அந்த அஃபேர்ல மாட்டியிருந்தா ? என்னாயிருக்கும் . அந்த பொம்பளையும் மேரீட். உங்கம்மாவோட மைண்ட்லதான் நல்லா ரிக்கார்ட் ஆகியிருக்கே அதெல்லாம அசிங்கம் குடும்பம் சீக்கிரமா திவாலாயிரும் அது இதுனு உடனே இந்தம்மா விரத நாடகம் போட ஆரம்பிச்சுட்டாங்க அது அடல்ட்ரிக்கு டைவர்ட் ஆக இருந்து ஏதோ லிக்கரோட நின்னு போச்சு"

"நீங்க என்ன சஜஸ்ட் பண்ணிங்க?"

" நீங்க என் ப்ளாக்ல எதெல்லாம் அசிங்கம்னிங்களோ அதோட சாரத்த 15 நிமிசத்துல சொன்னேன்"

"இப்போ ஒரு தடவை சொன்னா தான் என்ன சாமி"

"இனி யார்க்கும் தனித்தனியா சொல்ற மாதிரியில்லே .எல்லோரும் ப்ளாக்ல படிச்சுக்க வேண்டியதுதான்"

"சாமி ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக "

"என்னம்மா இது அனியாயமா இருக்கு ப்ளாக்ல வச்சா திட்டறிங்க அசிங்கம்ன்றிங்க . நேர்ல வந்து வக்கணையா கேட்கனும்னு அடம் பிடிக்கிறிங்க அதெல்லாம் சொல்லமுடியாது. சுருக்கமா சொல்றேன். இந்த உலகத்துல எதை வேணம்னா பொய்யின்னு ஸ்தாபிச்சுரலாம். தவிர்க்கலாம். இல்லாமயும் வாழ்ந்துரலாம். பிறப்பு, இறப்பு இது ரெண்டுக்கிடைல செக்ஸை மட்டும் பொய்யினு யாரும் ஸ்தாபிக்கமுடியாது. தவிர்க்க முடியாது. சிவலிங்கத்தோட வடிவமே என்ன ? பெண் குறிக்குள்ள புதைஞ்சிருக்கிற ஆண்குறிதானே அஸ்கலித பிரம்மச்சாரினு ஆஞ்சனேயரை சொல்றோம். அவரோட வியர்வையே விந்துவா மாறி மச்ச கந்திய கர்பமாக்கிருச்சு. அது இதுனு ப்ரோ செக்ஸா 15 நிமிஷம் பேசி அதைவிட முக்கியமான வேலையே உலகத்துல கிடையாது. பிற வேலைகளை ஒருத்தன் செய்தா அவனுக்கு செக்ஸ் கிடைக்காம அ கிடைக்காத தருணத்துல அ அதுக்கான சக்தி இல்லாத தருணத்துல தான் செய்றான். அவன் என்ன செய்தாலும் சப் கான்ஷியாஸா அவனுக்குள்ள ஓடறது செக்ஸ் தானு சொன்னேன்"

" சாமி .. உங்களுக்கு அரசியல்ல நல்ல சேன்ஸிருக்கு சாமி"

"என்னை ஏன்மா அந்த சாக்கடைல தள்ளிவிடறிங்க"

"எனக்கு ஒரு பிரச்சினைனு வந்தப்போ செக்ஸுங்கறதே மகா பாவம், தவணல சாவு. அது இதுனு சொல்லி விரதமெல்லாம் சஜஸ்ட் பண்ணிங்க"

"எம்மாடி.. உன்னுது லவ் மேரேஜு. உன் வீட்டுக்காரன் அப்போ அன் எம்ப்ளாயிட். நீயும் ஹவுஸ் வைஃப். உன் ஜாதகப்படி உனக்கு கவர்ன்மென்ட் ஜாப் வர்ர நேரம் அது. கல்யாணமாகி 3 மாசம் ஆன பின்னாடியும் 24 மணி நேரம் வீட்டுக்குள்ள கட்டிக்கிட்டு படுத்துட்டிருந்திங்க அதனாலதான் தோசைய திருப்பி போட்டேன். நீ விரதம் அது இதுனு டைவர்ட் ஆனதாலதான் உன் வீ.காரன் வேலை வெட்டினு தேடப்போயிட்டான். நீயும் ரெண்டு பரீட்சை எழுதி ஜாப்ல சேர்ந்தே"

"மொத்தத்துல செக்ஸ் நல்லதா? கெட்டதா ?"

" அய்யருங்க பாஷைல சொன்னா அது கால தேச வர்த்தமானங்களை பொருத்தது. தமிழ்ல சொன்னா இடம்,பொருள்,ஏவல் , உடல்,உள்ள நலனை பொருத்தது."

"சாமி எனக்கொரு சந்தேகம் .. எங்கம்மாவுக்கு என்ன பிரச்சினை, அதுக்கு நீங்க என்ன தீர்வை கொடுத்திங்கனு சொல்லவே மாட்டேன்னிங்க அப்புறம் எப்படி சொல்ட்டிங்க?"

"நாளைக்கு ப்ளாகை பார்"

"அய்யய்யோ ப்ளாக்ல எழுதப்போறிங்களா?"
"இது நல்ல ஐடியாவா இருக்கே."
"அய்யய்யோ வேணாம் சாமி .. எழுதினாலும் பேரை கீரை எழுதிர போறிங்க"
"இல்ல தாயி.. என்னுது தகப்பன் ஸ்தானம் . என் மகளுக்கு என்ன செய்வனோ அதை தான் உனக்கும் செய்வேன். என் மகளுக்கு எதை செய்யமாட்டேனோ அதை கட்டாயம் செய்யமாட்டேன்"
" தேங்க்யூ ஸ்வாமி ! நானும் ரொட்டீன் தாய்குலமா அசிங்க கிசிங்கம்னு பேசிட்டேன் "
"யம்மாடி ! நீங்க ரொடீனா ,ஹிப்பாக்ரடிக்கா இருந்தாதானே நான் புரட்சி பண்ணமுடியும். சரி சரி நேரமாச்சு நீ கிளம்பு"