Wednesday, December 16, 2009

செக்ஸ் குறித்த புரிதலின்றி

திருமதி ஜெயசீலன் அவர்களுக்கு,
தாங்கள் என்னை மனதில் வைத்தே //அய்யா வாங்க,அம்மா வாங்க, பின்னூட்டமிடுங்க என பதிவுலக பிச்சையெடுக்கிறார்கள்.//இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது. தாங்கள் பொத்தாம் பொதுவாக ( நாலாந்தர பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதிய ரேஞ்சில் பொத்தாம் பொதுவாக பண்பாடு அது இது என்று ) போட்ட மறுமொழிக்கு எனது தாய்மை நிறை பதிலை டெக்னிக்கல் பிரச்சினையால் போஸ்ட் செய்ய முடியாத நிலையில் கவுரவமளித்து எனது வலைப்பூவில் வெளியிட்டேன். தாங்கள் ரொம்ப க்ளாசாக விரைவில் பதிலளிக்கிறேன் என்று சொல்லி அம்பேலாகி விட்டீர்கள். நானும் கண்டு கொள்ளவில்லை.

இத்தனை நாட்கள் கழித்து ஏன் இப்படி ஒரு பதிவு.

எனது நன்னோக்கங்களை எல்லாம் மறந்து அ மறைத்து ஓகே ஓகே
கு.ப தங்கள் பதிவின் சுட்டியையாவது எனக்கு தந்திருக்கலாம்.
நான் என்ன ஓம்கார் ஸ்வாமிகளா ? மறுமொழி போட்டவுடனேயே படக்கென்று நீக்கிவிட .

தங்களுக்கு என் கருத்துகளில் அBஜெக்சனிருந்தால் ஒரு மறுமொழி தட்டியிருக்கலாம். என் தாய் நான் இன்டர் படிக்கும்போதே யூட்ரசில் கேன்சர் வந்து இறந்துவிட்டார். அதிலிருந்து எனக்குள் ஒரு சங்கல்பம். இனி அனைத்து பெண்களையும் தாயாய் பாவிக்கவேண்டும். எந்த இளைஞனும் தாயை பிரிந்து தாயை தேடி (ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்) கண்டவள் பின்னால் போய் அல்லாட கூடாது. கடமை ஒன்று :அவன் தாயை நோய்களிலிருந்து காக்க வேண்டும். அவள் ஆயுளை கூட்ட முயற்சிக்க வேண்டும் கடமை 2: அந்த இளைஞன் செக்ஸ் குறித்த புரிதலின்றி பெண்ணில் தாயை காணாது தாய் ஒத்த வயதுள்ள தாயிலும் பெண்ணையே காணும் காட்டுமிராண்டிதனத்தை ஒழிக்க வேண்டும்.

மேலும் என் அசலான் உத்தேசம் இளைய தலைமுறையை ஆன்மீகத்துக்கு கடத்துவதே/ இந்த செக்ஸ் கல்வி எல்லாம் ஷுகர் கோட்டட் மெடிசின் தான்

என்னமோ விடுங்க.. இது மாதிரி எதிர்ப்பை பெண்ணின காவலர்களாய்
வேஷம்கட்டி ஆடும் ஆண்களிடமிருந்து பெற்றே அனுபவம்.

தாய்குலம் இப்படி காய்வது இதுவே முதல் முறை. எனவே தான் சற்றே
ஒரு மி.மி சுருங்கியது நெற்றி.

//சரி போனா போகுது என மனசுக்கு தோணினதை பின்னூட்டமாக்கினால். மறுநாள் sidebar-ல் விமர்ச்சன பின்னூட்டம்.//
.மறு மொழிக்கான மறுமொழியை என் விமர்சனம்னு நினைக்கிறிங்க. அதை சைட் பார்ல போட வேண்டி வந்ததுக்கு காரணம் என் பதில் அளவு அதிகமாக இருந்ததால் கமெண்ட் பகுதியில் போஸ்ட் ஆகாததே !/

//குப்பை பதிவுகளுக்கு //

நீங்க குப்பைன்னு நினைக்கிறிங்க. நிறைய பேரு உரம்னு நினைக்கிறாங்க போல. ஒரு வேளை குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிச்சுர்ராங்களோ

//இவர்தான் பல Usernames -ல் ஓட்டளிகிறாரோ!//

அரசியல்ல நல்ல எதிர்காலமிருக்குங்க. தூள் பண்ணுங்க

வாழிய !

பி.கு:நானும் நீங்கள் காட்டிய வழியில் தனிப்பதிவு போடுகிறேன். என்ன நீங்க ஊரை சொன்னாலும் பேரை சொல்லாதேனு போட்டிங்க . உங்க கருத்தை பத்து பேரு படிச்சிருவாகளா .. நான் பிழைக்க தெரியாத முட்டாள் நானும் ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி சி.டி.டிவிடி வித்துக்கறத விட்டுட்டு இப்படி "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் .. இங்கு நான் வாழ யார் பாடுவார்"ன்னிட்டு மல்லாடறேன். அதான் பேரைச்சொல்லி தங்கள் பதிவின் சுட்டியையும் கொடுத்துபோடறேன்

http://sirusaralkal.blogspot.com/2009/12/blog-post.html