ஆம் ஆண் இனம் பெண் இனம் போல் மனைவிகள் என்று ஒரு இனமும் இருக்கிறது. (யாரேனும் சகோதிரிகள் கணவர்கள் என்று ஒரு இனம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டால் நலம். இன்றேல் நானே போடுகிறேன் தங்கள் சார்பாக)
இந்த பதிவை நான் போடுவதால் / நான் அனுபவமே முக்கியம் என்று அடிக்கடி சொல்வதால் நானும் மனைவியால் பாதிக்கப்பட்டவன் தான் என்று கணக்கு போட்டால் நீங்க தேறிட்டிங்கனு அர்த்தம்.
ஆனால் இந்த 42 வயதுக்கும் வெளிச்சத்துக்கு வராததற்கு 100 சதவீதம் மனைவியே காரணம் என்றால் அது ஜல்லி. கர்ணன் சாவுக்கு எத்தனை காரணங்களோ அத்தனை காரணங்கள் இதற்குண்டு.
திறமைகளை இப்படியாவது வெளிச்சம் போடும் வாய்ப்புமின்றி, ஒளித்து வைத்துக்கொண்டு ப்ருஹன்னளை கணக்காய் வாழவும் முடியாது, அங்கீகாரமும் கிட்டாது, விட்டுஒழித்து வாழும் சத்வ குணமுமின்றி , ஜால்ரா போடவும் முடியாது, பொய்யாய் வாழ முடியாது உண்மைகளை போட்டு உடைத்தபடி அவ்வப்போது வறுமையை வரவேற்று உபசரித்தவன் நான். இந்த நிலையில் எந்த பெண் காந்தி அவதாரம் எடுக்காமலிருப்பாள்.
சரி விசயத்துக்கு வருவோம். மனைவிகள் என்ற இனத்தின் சைக்காலஜியை இந்தபதிவில் பார்ப்போம். பெண் உடலளவில் வீக். இயற்கை கோட்பாட்டின் படி இந்த வீக்னெஸ் மென்டலாக பேலன்ஸ் ஆகிறது. பெண் மென்டலா ஸ்ட்ராங்தான்.
பெண் அன்பு மயமானவள். ஆக்கிரமிக்கப்பட விரும்புபவள். பாதுகாப்பற்ற தன்மையை அடிக்கடி உணர்பவள். அவளுக்கு நிகழ்காலம் முக்கியம்.( பானை நிறைய அரிசி இருக்கா, சொந்த வீடு இருக்கா, கரெண்ட் பில், டிஷ் பில் கட்டியாச்சா) தன் வேர்கள் முக்கியம் (அப்பா, அம்மா, ஆயா , தாத்தா, அண்ணன் தம்பி)
அப்பாவுக்கு ஜுரம்னு தெரிஞ்சா இவுகளுக்கு தலைவலி வந்துரும், தம்பி வேலை செய்யற இடத்துல பணம் கையாடிட்டானு தெரிஞ்சா டீலாயிருவாக. அதே மாதிரி பாத்ரூம் குழாய், சாக்கடையில தண்ணிபோகுதா, பக்கத்து ப்ளாட், பக்கத்து வீட்டு , பக்கத்து போர்ஷன் குடும்பத்துடன் தன் நிலையை ஒப்பிட்டு பார்த்துக்குவாக. மாற்றத்தை எதிர்ப்பாங்க. இது மனோபலம் குறைந்தவர்களின் சைக்காலஜி. பெண்கள் மேக்கப் இத்யாதி மீது கவனம் செலுத்தக்கூட இதுதான் காரணம். இளமைய தக்க வச்சுக்க விரும்புவாங்க, முதுமைய விரும்ப மாட்டாங்க. கணவன் மாரின் அலையல் புத்தி தெரிஞ்சிருக்கிறதால் அவன் எங்கே மேய போயிருவானோனு பயப்படுவாங்க. அவன் (அதான் நாம தலீவா) எதுக்கு முக்கியத்துவம் தரானு அவிகளுக்கு தெரியும் (செக்ஸ்) அதனால் ஃபிட்னெசை காப்பாத்திக்க பார்ப்பாங்க.
இதுக்கு பொருளாதார, சமூக காரணங்களும் இருக்கு. ஆணுக்கு ஒருவயசுக்கு மேல வயசாகறதே இல்லே. 40 வயசு வரைக்கும் கூட கிரிக்கெட் ஸ்கோர் கேட்பான். சின்ன குட்டிகளுக்கு ஜோக் சொல்வான் ( அவிக அங்கிள்னு கூப்டாலும்) 40 க்கு மேல வயசானதை ஒத்துக்கிட்டு வேட்டிக்கு மாறிருவான். அதுக்கப்புறம் வயசாவறதே கிடையாது. (ஒழுங்கான வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு மட்டும் தான் இந்த ரூலு. சுய இன்பம், தம்மு, லாலா, மசாலா, பான், பான் பராக் னு தாளிச்சவன் எல்லாம் கதை கந்தல்தான்) ஒருவேளை துரதிர்ஷ்டவசாமா 60 க்கு மேல வாழ்ந்தா லொள்ளுதான்.இதெல்லாம் பெண்களோட ஃபிசிக்கல் வீக்னெஸ் அவுக சைக்காலஜி மேல காட்டற இம்பேக்ட்.
கணவனோட சைக்காலஜி என்ன ? அவன் ஃபிசிக்கலா ஸ்ட்ராங். ஸோ எதிர்காலத்து மேல /தன் சக்தி மேல/ திறமை மேல நம்பிக்கை வச்சு நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தறான். எதிர்காலத்தை கனவுகாண்றான். அதுக்கு நிகழ்காலத்தை பலிகொடுக்கவும் துணியறான். அவன் அதிகாரம் செலுத்தவே விரும்புறான். மாற்றத்துக்கு தயாரா இருப்பான்.அவனுக்கு தன் அருகாமை மனிதர்கள் பற்றிய அச்சமில்லை. தூரத்துல இருக்கிற மானில தலை நகர் அரசியல், தில்லி அரசியல் மேல ஆர்வம்காட்றான். இதெல்லாம் அவளுக்கு எரிச்சலை ஊட்டுது.
(To be continued