பலான கதைகள்
இந்த 42 வயசுக்கு நான் எத்தீனி பலான கதைக பார்த்திருப்பேன், கேட்டிருப்பேன். நடத்தியிருப்பேன் அத்தீனி கதையையும் இந்த தலைப்புல் சொன்னா ச்சும்மா கும்முனு இருக்காது. கதைல நீதி சொல்லக்கூடாதுனு ஒரு ரூல் இருக்கு. ரூல் இருக்கிறதே அதை மீறத்தானே. ஸோ ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நீதி நிச்சயம். கொன்னா பாவம் தின்னாப்போச்சும்பாங்களே அதை போல பலான கதை சொன்ன பாவம் ஒரு நீதியை சொன்னா போவும்னு ஒரு நப்பாசை. இந்து நேசன்னு ஒரு புத்தகம் அதுல இப்படிதான் கதை முழுக்க அஜால் குஜால் வேலைகள் நடக்கும் (முக்கியமா ஒரு பிராமண குடும்பம் இருக்கும் ) கடைசில தப்பு (?) பண்ணவன் ஒன்னு கொலையாவான் இல்லேன்னா ஜெயிலுக்கு போயிருவான், ராஜேஷ்குமார் நாவல் மாதிரி. சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை மாதிரி இப்போ சுஜாதா ஸ்டைல்ல (ஏன் எதற்கு எப்படி) கேள்வி பதில் கூட எழுதுறாருங்கோவ். ஒரு தமாஸு தெரீமா. ஈ நாடு பத்திரிக்கை மொழி பெயர்ப்பு சிறுகதைகளுக்காகவே 'விப்புலா"னு ஒரு புஸ்தவம் போடுது. அதுக்கு ரா.குமார் கிட்டே பர்மிஷன் வாங்கி அவரோட கதை ஒன்னை ட்ரான்ஸ்லேட் பண்ணி அனுப்பினேன். முடிவு என்ன? "பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்" இவனெல்லாம் பெஸ்ட் செல்லர்.
சரி பலான கதைக்கு வருவோம். பலான ங்கற வார்த்தைய எப்போ யூஸ் பண்ணுவோம் ? ஒரு வார்த்தைய பகிரங்கமா சொல்லமுடியாத சந்தர்ப்பத்துல பலாந்து பலாந்து ம்போம். செக்ஸ் என்ற வார்த்தைய கூட பகிரங்கமா சொல்ல முடியாத இந்த சமுதாயத்துலதான் தினத்தந்தி முழுக்க கள்ளக்காதலன் வெட்டிக்கொலை , கள்ளக்காதலன் துணையுடன் கணவன் தூக்கில் போட்டு சாவு செய்திகள் வர்ரது. இதான் ஹிப்பாக்ரஸி. இதே காரணத்தாலதான் ஆன்டியை மடக்குவது எப்படிங்கற பதிவும் மேட் பாப்புலர். ஆன்டின்னா என்ன? அந்த இனத்து மேல எதுக்கு இத்தனை ஈர்ப்புங்கறத இந்த பதிவுல பார்ப்போம்.
ஆன்டின்னா வயசுல பெரிய பெண். 14 வயசு பையனுக்கு 24 வயசு பெண் ஆன்டி. அவளுக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற சட்டமில்லை. முதிர்கன்னியாகவும் இருக்கலாம். அல்லது திருமணமாகி கணவனின் வியர்வை, சிகரட், மது , வாயு நாற்றங்கள் தெரிந்து போன கட்டம். ஒன்றோ இரண்டோ பெற்றும் இருக்கலாம். இவளையும் ஆன்டி என்று தான் கூறுகிறார்கள்
முதல்ல முதிர் கன்னிய பார்ப்போம். ஏற்கெனவே நான் சொன்னபடி பெண்ணுக்கு செக்ஸ் என்பது இரண்டாம் பட்சம். செக்ஸ்தான் முக்கியம் என்று பெண்கள் வாழ்ந்திருந்தால் ஃபேமிலி கோர்ட்டெல்லாம் 365 நாள், 24 மணி நேரம் வேலை செய்யனும். மேன்ஷன் ஹவுசெல்லாம் ஹவுஸ் ஃபுல். எல்லாம் கைல பிடிச்சிக்கிட்டு தான் ( கேஸ்கட்டுங்க) அலைஞ்சிருக்கனும். செக்ஸ் தான் முக்கியம்னா ஒரு வைப்ரேட்டர் எல்லா ஆண்களையும் மண்ணை கவ்வ வச்சுரும்.
ஆண் குழந்தை வளர்ந்து மணந்து ஒரு குழந்தையை பெற்ற பிறகே தந்தையக பரிணாமம் எய்துகிறது.பெண் குழந்தையோ பிறக்கும்போதே தாயாக பிறக்கிறது. அதற்கு தேவை அன்பு. மேலும் அவள் இயற்கையின் பிரதி, பிரதி நிதி. அவள் (அடி மனம்)மனம் இயற்கை வழி பயணிக்கிறது. இயற்கை உயிர்களுக்கு தந்திருக்கும் முழு முதற் கடமை மற்றொரு உயிரை தாங்குதல். நீங்களே ஒரு தரம் எண்ணிப்பாருங்கள். அந்த முதிர் கன்னி எதிர்பார்த்ததோ அன்பை. அவளுக்கு கிடைப்பதோ நிராகரிப்பு, கல்யாண மார்க்கெட்டில் மட்டுமல்ல வீட்டிலும். இயற்கையின் ப்ரேரணைகள் ஒரு புறம்,இயற்கையோடு இணைந்த உயிராக இயற்கையின் கடமையை நிறைவேற்றுவதற்கான துடிப்பு ஒருபுறம். (பெண்களின் மாதவிலக்கு சக்கரத்துக்கும் அவர்கள் ஜாதகத்தில் நிலவின் இருப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு)
இயற்கை எந்த அளவுக்கு கருணையுள்ளதோ அந்த அளவுக்கு இரக்கமற்றதும் கூட. அதன் நோக்கம் இனப்பெருக்கம் ஒன்றே.உடலுறவுக்கோ, இனப்பெருக்கத்துக்கோ வழியில்லை எனும்போது தன் கொடைகளை (ஆண்மை/பெண்மை) சுருக்கிக்கொள்கிறது. அந்த பெண்ணுக்கு இயற்கை அளித்த கொடைகள் திருப்பி வாங்கப்படும் கட்டத்திலும் அவளது அடிமனம் இயற்கை தனக்கு விதித்த கடமையை நிறைவேற்றவே துடிக்கிறது. அவளுக்கு உடலுறவை விட கரு தாங்குலில் தான் ஆர்வம் இருக்கும். கருவை தாங்குவதாயின் அவள் கழுத்தில் தாலி ஏற வேண்டும்.
உன்னால் அவள் கழுத்துக்கு தாலி தர முடிந்தால் மடக்கு, மணந்து கொள். வயதி மூத்த பெண்ணை விரும்புவதன் பின்னணியிலும் மனோதத்துவம் இருக்கிறது. ஆண் குழந்தை தன் தாயை விரும்புகிறது , பெண் குழந்தை தன் தந்தையை விரும்புகிறது. (எதிர்பால் கவர்ச்சி) பெண் குழந்தைக்கோ தாயின் அணைப்பு, அருகாமை தொடர்கிறது (பருவம் அடைந்த பிறகும்). ஆண் குழந்தைக்கோ இது மறுக்கப்படுகிறது. ( தத்.. என்னடா இது எருமைமாடு மாதிரி வந்து விழறே ஆம்பளையா லட்சணமா இர்ரா : தாய்)
எனவே வயதில் மூத்த பெண்ணை விரும்புவது தாயை மீண்டும் அடைவதற்காகவே. இதில் தவறேதுமில்லை. ஆனால் இந்த க்ளோஸ்ட் சொஸைட்டியில் இந்த சமூகத்தை எதிர்த்து அவளோட இணையமுடியுமா ? வுடு ஜூட். இல்லையா ச்சும்மா ஜொள் விட்டா போதும்..ஏமாந்தா முடிச்சுரனும்னு ஒரு எண்ணம் வருதா ? அடுத்த பத்தியை புடி படி
(ஆன்டிக்களில் மற்றொரு வகையான இளம் தாய்மார்களை பற்றி விவரித்தால் அது ஒரு தனிப்பதிவே ஆகிவிடும் எனவே தற்போதைக்கு அம்பேல்)
பெண்கள் சிலருக்கு டிஸ்சார்ஜ் ஆஃப் வைட் இருக்கும். இதுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆக்சுவலா இது உடலுறவுல ஆணுறுப்பு ஈஸியா உள்ளாற போய் இயங்க உதவும் ஒரு உயவு பொருள். ஆன்டி ஆன்டினு ஜொள்றிங்களே அவளுகளுக்கு அந்த பார்ட்டே காஞ்சி கிடக்கும். மேலும் மெனோஃபஸை நெருங்கறதால செக்ஸ் மேல மிதமிஞ்சிய ஆர்வம் அதேசமயம் எரிச்சல் (மனசுல ப்ளஸ் ஆணுறுப்பு நுழையும்போது உறுப்புலயும்)இருக்கும். காம எண்ணங்கள் ஏற்படும்போது மேற்படி திரவம் கூடுதலா சுரக்கும்னு சொல்றாங்க. இது நிறமற்றதாக , வாசனை அற்றதாக இருக்கும். ஆனால் பத்தாயிரம் ரூபா கொடுத்து பட்டுப்புடவை வாங்கறவ கூட பத்து ரூபா கொடுத்து பேட் வாங்கமாட்டா.
சுத்தம் சோறு போடுங்கறாங்கல்ல. அதே சுத்தம்தான் டிஸ்சார்ஜ் ஆஃப் வைட்டை கூட தடுக்கும். ஆனால் நிறைய பெண்கள் சிறு நீர் கழித்த பிறகு உறுப்பை சுத்தம் செய்வதில்லை. ஆண் கதை வேறு அது பைப் வச்ச பானையாச்சா /அதுலயும் சுன்னத் பண்ணியிருந்தா பிரச்சினையே இல்லை. குளிக்கறச்ச ஒரு தரம் கழுவிட்டா போச்சு. ஆனால் பெண்கள் கதை வேறு. யூரெத்ரா (சிறு நீர் வெளியேறும் துளை) வெஜினா( உடலுறவுக்கான துவாரம்) எல்லாம் ஒரே ரவுண்ட்ல இருக்கிறதால் சிறு நீர் வெளியேறும்போது உறுப்புல யூரியா இத்யாதி உப்புகள் படிய வாய்ப்பிருக்கு.
ஆண்களாவது பரவாயில்லே நாய் மாதிரி நன்றி இல்லாட்டாலும் விளக்கு கம்பத்தை கூட உபயோகிச்சுரலாம். பெண்கள் ? அவர்களுக்கு தண்ணீர் வேண்டும், மறைவு வேண்டும். அரசியல் வாதிகள் ஓட்டுக்கேட்டு வரும்போது தவலை, ரவிக்கை பிட்டு, மூக்குத்தி இத்யாதி வாங்கிகிட்டு ஓட்டு போட்டுர்ராங்களே தவிர எங்களூக்கு கடை கண்ணிக்கு போகும்போது பாத்ரூம் வசதி வேணம்னு கேட்க மாட்டாங்க.
தண்ணி சாப்டாதானே சிறு நீர் வருதுனு வெளியே புறப்படும்போது தண்ணீயே குடிக்கமாட்டாங்க.இதனால் அஜீரணம், மலச்சிக்கல் , உறுப்பில் தொற்று இத்யாதி ஏற்படுகிறது. இந்த சுகாதார குறைபாடுகளாலும் மேற்சொன்ன டிஸ்சார்ஜ் ஆஃப் வைட் ஏற்படுகிறது. மேலும் லோ பேட்டரி உள்ள போது இருந்த சக்தியும் படக்கென்று தீர்ந்து போவது போல் ஜெனரல் வீக்னெசாலும் இது ஏற்படுகிறது. அணைய போற விளக்கு சுடர் விட்டு பிரகாசிக்கிறாப்ல மெனோஃபஸ் சமயத்ல அந்த உணர்வு அதிகமா ஏற்படும்.
இது போன்ற காரணங்களால் நிறமற்று, க்ளிசரின் கணக்காய் நீர்த்து, வாசமற்று இருக்க வேண்டிய வைட் அடர் மஞ்சள் நிறமாக சளிகணக்காய் வெளியேறும். துர் நாற்றம் வீசும். இது வெளியேறுவது அவர்களுக்கே தெரியும். படக்கென்று பாத்ரூம் சென்று சுத்தப்படுத்திக்கொண்டு வருவார்கள்.
இது மட்டுமல்ல ஜெனரல் பாடி வீக்னெஸ், சைக்கலாஜிக்கல் காம்ப்ளெக்ஸ்கள் காரணமாய்ம, இயற்கையின் கருணையற்ற தன்மையால் ( நீதான் பெத்துக்கபோறதில்லை இல்லையா உனக்கெதுக்கு மென்ஸ்ட்ருவேஷன்) மென்ஸ்ட்ருவல் சைக்கிள் தாறுமாறாகிறது. இதன் காரணமாய் கருப்பையில் கேன்சர் வரவும் வாய்ப்பிருக்கிறது.
இந்த பெண்ணை ஆன்டி என்ற ஒரே வார்த்தையில் கேவலம் செக்ஸ் சிம்பலாக பார்ப்பது என்ன நியாயம் ? அவள் பிறக்கும்போதே தாய். உன் அன்னையை நினைவுறுத்தும் அன்னை ? அன்னையாக துடிக்கும் அன்னை. உனக்கு துணிவிருந்தால் சக்தியிருந்தால் கணவனாகி தாயாக்கு.
அது இல்லையா நீயே மகனாகி அவளை தாயாக்கு !