Tuesday, December 22, 2009

தேவையற்ற ரோமங்களின் தேவை

செக்ஸ் கேள்வி பதில்
தேவையற்ற இடங்களில் ரோமங்களை நீக்குவது எப்படி?

தேவையற்ற இடங்கள் என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம். மனிதனின் அறிவு கல்வியாளர்கள், ஆசிரியர்களால் புகட்டப்பட்ட ஒன்று, மனம் பெற்றோர், சமுதாயத்தால் புகட்டப்பட்ட ஒன்று. அவை இயற்கையிலிருந்து எப்போதோ விலகிவிட்டன. நீங்கள் உங்கள் உடலை செயற்கை அறிவு கொண்டு என்னதான் நவீனப்படுத்தினாலும், என்னதான் ட்யூன் செய்தாலும் அது இன்னும் தன் இயற்கை தத்துவத்தை முழுக்க விட்டுவிடவில்லை.ஆம் மனிதனின் அறிவு, மனம், ஆகியவற்றைவிட அவன் உடன் ரொம்பவே புத்திசாலி. இதற்கு காரணம் அது இயற்கையுடன் 100 சதம் இல்லாவிட்டாலும் 60 சதமாவது தன் தொடர்பை தொடர்கிறது. தாயின் மணிவயிற்றில் உங்கள் செயற்கை சாதனங்களுக்கு தூரமாக, ஒலி,ஒளியலைகளுக்கு தூரமாக 10 மாதம் இருந்தது. வானம் பொழிகிறது பூமி விளைகிறது. விளைந்ததை உடல் ஏற்கிறது. மேலும் மனித உடலை அதில் 70 சதவீதமாக உள்ள தண்ணீர் சந்திரனுடன்  இடையறாத தொடர்பை தொடர வைக்கிறது

ஆரம்பகாலத்தில் மனிதனுக்கு உடலெங்கும் ரோமக்காடே இருந்தது.இதன் உத்தேசம் குளிர் ,கோடையிலிருந்து காப்பது என்பது மேலோட்டமான  வெளிப்படையான காரணம். ஆனால் அவை அண்ட வெளியிலிருந்து , நட்சத்திரங்கள், கிரகங்களிலிருந்து வெளியாகும் தேவையான அதிர்வுகளை உள்வாங்கும், தேவையற்ற அதிர்வுகளை தடுக்கும் சாதனங்க‌ளாக கூட இருக்கலாமே.வானமே கூரையாய் , பூமியே வீடாய்  வாழ்ந்த காலத்திலும் மனிதனில் நோய் எதிர்ப்பு சக்தி பக்காவாக இருந்தது . எவ்வித சைக்காலஜிகல் பிரச்சினைகளும் கிடையாது. முக்கியமாய் தற்கொலைகள் கிடையாது  என்பதை எண்ணிப்பாருங்கள். மனிதன் குகைகளில் வசித்தாலும் மேஜர் டைம் காடுகளில் சுற்றித்திரிந்தான். குகையிலும் குளிர் நடுக்கியது.

சஞ்சாரியாய் இருந்த அவன் எப்போது ஸ்திரவாசம் மேற்கொண்டானோ எப்போது  வீடுகட்டி வசிக்க ஆரம்பித்தானோ அப்போதே மனித உடலுக்கும் இயற்கைக்குமான தொடர்பு இளைக்க ஆரம்பித்தது. ரோம அடர்த்தி குறைய ஆரம்பித்தது. இப்போது நீங்கள் தேவையற்ற இடங்கள் என்று குறிப்பிடும் இடங்களில் உள்ள ரோமங்கள் கூட ஏதோ அவசியம் கருதி இயற்கையால் தரப்பட்ட கொடைகள் தாம். கக்கம், தொடை சந்திப்புகளில் உள்ள ரோமம் ஸ்பாஞ் போல் இருந்து உராய்வை அதனால் ஏற்படும் வெப்பத்தை குறைக்கின்றன. மேலும் அவ்விடத்தில் சுரக்கும் வியர்வையில் அதன் வாசத்தில் செக்ஸுக்கான தூண்டுதல் இருக்கிறது. நேரம் கடந்த பின் அங்கு கிருமிகள் குடி புகுவது வேறு விஷயம். ஒரு குளியல் போதும் அவ‌ற்றை துரத்த. ஜன்ய பாகங்களில் உள்ள ரோமங்களின் முக்கியத்துவம் உயிரியல் சார்ந்ததுமட்டுமல்ல. அவற்றில் மிஸ்டிசம் இருக்கிறது. என்னதான் சமூகம், மதம், அரசு அனைத்தும் செக்ஸை 99.9 சதவீதம் தடை செய்திருந்தாலும் காமக்கிளர்ச்சி தோன்ற, அது தோன்றிய போது இதர சமாச்சாரங்கள் எல்லாம் ப்ளர்ராக தோன்ற காரணம் இந்த ரோமங்களில் கூட இருக்கலாம்.

ஆப்ரிக்க காடுகளாய் இருந்தால் சென்சார் அதிகாரியாக கத்திரி போடலாமே தவிர உதவாக்கரை அரசியல்வாதிகள் மாதிரி ப்ளேடு போடுவது நல்லதல்ல. கண்ட கண்ட களிம்புகளையும், திரவங்களையும் உபயோகிப்பது அதை விட ஆபத்து.

இந்நிலையில் லேசர் சிகிச்சை இத்யாதியெல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்குவதே. சாதாரண ஐம்பது பைசா ஷாம்பு பற்றி ஒரு விளக்கம். இதன் மூலப்பொருள் சோப் ஆயில். இதை மெக்கானிக் ஷெட்களில் மெக்கானிக்குகள் க்ரீஸ் கறை, டீசல் நாற்றம் போக  கை கழுவ உபயோகித்து வந்தார்கள். எவனோ ஒரு அதி மேதாவி இதில் நிறம், வாசனை பொருட்கள் சேர்த்து நம்மை ஞானிகளாக்க முடிவு செய்தான் ( தலையில் சொட்டை விழுந்தால் ஞானியாம்ல) புற உபயோகத்துக்கான ஹேர் டை கூட சில பேருக்கு உயிருக்கே உலையாகிவிடும்போது இந்த மயிர் நீக்கி க்ரீம்கள் பெண்களின் இன உறுப்பின் அமைப்பால் உட்புகவும் வாய்ப்பிருக்கிறது . மாதவிலக்கு காலங்களில் கத்திரி போட்டு மேற்படி களிம்பு, திரவம், லேசர்களுக்கு தடா போடுவது நல்லது என்பது என் கருத்து.