Saturday, December 19, 2009

தெலுங்கானாவும் பலான ஜோக்கும்

தெலுங்கானாவும் பலான ஜோக்கும்


முதல்ல பலான ஜோக். ஒரு விமானம் ரிப்பேராகி பாலைவனத்துல இறங்கிருச்சு. அதுல ஒருத்தன் பயங்கர ஜொள்ளு பார்ட்டி. "அது" இல்லாம தூக்கமே வராது.என்னடா பண்றதுனு போய்க்கிட்டே இருந்தானா ஒரு பெண் ஒட்டகம் தென்பட்டது. சரி இன்னைக்கு இத வச்சே அட்ஜஸ்ட் ஆகிரலாம்னு கிட்டே போனான். அது எழுந்து நின்னுருச்சு. என்னா செய்றதுனு பார்த்தான். அதான் பாலைவனமாச்சே. ஒட்டகம் பின்னாடி ஏறி நிற்க வசதியா மணலை குமிச்சு அது மேல ஏறினான். ஒட்டகம் முன்னுக்கு நகர்ந்துருச்சி. நள்ளிரவு வரைக்கும் இதே சீன் தான். இதை தேவலோகத்துல இருந்து இந்திரன் பார்த்தான்.

அடடா என்னே இவன் கொள்கை (?) பற்று இவனல்லோ ஜொள் திலகம்னு ரம்பையை கூப்டு" த பாரு! உடனே அங்கே போ அவனுக்கு என்ன வேணுமோ செய்" என்றான். ரம்பை பாலைவனத்தில் இறங்கினாள். நம்மாளு மணலை குமிச்சி குமிச்சி கண்ணு கட்டி கிடந்தாலும் மணலை குமிக்கிறத விடலை. ரம்பை வந்ததையே அவன் கண்டுக்கலை. ரம்பை அவனை தொட்டு "மானிடனே உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள். நம்மாளு "ஒட்டகம் முன்னுக்கு நகர்ந்துராம பார்த்துக்க" என்றானே பார்க்கலாம்

* * *

தெலுங்கானா பற்றி பல பதிவர்கள் எழுதியிருந்தாலும் ஆந்திர தமிழன் என்ற வகையில் உள்ளபடி ஒரு பதிவு போடவேண்டியது என் கடமை என்பதால் தான் இந்த சுருக் பதிவு

நம்மவர் டுமீல் விடுவது போல் (கல் தோன்றி மண் தோன்றா காலத்தே) ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு சரித்திரம் இருக்கிறது. அது போல் தெலங்கானா பகுதிக்கு உள்ளது. இந்தியா சுதந்திரம் அடையும் தருணத்தில் தெலுங்கானா நிஜாம் ஆட்சியில் தனி நாடாக இருந்தது. நிஜாம் படையப்பா ரஜினி மாதிரி "என் வழி தனி வழி என்று பந்தா காட்ட அன்றைய மத்திய உள்துறை மந்திரி பட்டேல் ஃபோர்ஸ் அனுப்பி இந்தியாவோட சேர்த்துட்டார். நேரு ரெஜிம்ல மொழி வாரி மானிலங்கள் பிரிக்கப்பட்டபோது தெலுங்கானாவுக்கு தனி முதல்வர் ஆனால் அவர் பாவம் டம்மீ பீஸு மாதிரி இருக்கு (இன்றைய சுய நல புழுக்களுடன் ஒப்பிடும்போது) அவர் தன் பதவியை ராஜினாமா செய்து தெலுங்கு பேசுறவக ஒரே மானிலமா இருக்கனும்னு சம்மதிச்சார்.

அப்போ தெலங்கானாவுக்கு ஹைதராபாத் தலை நகரம். ஆந்திராவுக்கு கர்னூல். பெரியவக கூடிப்பேசி கர்னூலுக்கான தலை நகர ஹோதாவை தியாகம் பண்ணி ஒரே மானிலமாக்கிட்டாங்க.

என்னதான் இருந்தாலும் ஒட்டு போட்ட பார்ட் ஆச்சே. மேலும் அரசியல்ல வேலையில்லாத பார்ட்டிகளுக்கு, வேலை போன பார்ட்டிகளுக்கு வேலை அந்த பகுதி மக்களை தூண்டி விடறதுதான். உ.ம் சென்னா ரெட்டி. இவருக்கு காங்கிரஸ் தில்லி தலைமையுடன் பத்திக்கிச்சு. உடனே தனி தெலிங்கானான்னு புலி வேஷம் போட்டார். இந்திரா அம்மையார் வாங்க ரெட்டி நீங்கதான் சி.எம் என்றழைத்ததும் தெலுங்கானாவை தூக்கி உடைப்பில் போட்டு முதல்வராயிட்டார்.

1969 லிருந்து தெலுங்கானா போராட்டம் இருக்குனு சொல்றாங்க. இருந்தாலும் கன்டின்யுட்டி இருக்காது. மேலும் அந்த காலத்துல மீடியா இந்த அளவுக்கு கிடையாது. தகவல் தொடர்பும் கிடையாது. என்.டி.ஆர் வந்தார் அரசியலில் புது சக்திகள் முக்கியமாய் யுவ சக்தி வெள்ளமென புகுந்தது. அவர் வரவு மீடியாவுக்கு நன்றாக தீனி போட்டது. அரசியல் புதுமுகங்கள் என்.டி.ஆரின் ராபின் ஹுட் தனமான ( இடது சாரி சிந்தனைன்னெல்லாம் சொல்ல முடியாது) அணுகுமுறைக்கு மயங்கி கிடந்தனர். என்.டி.ஆரும் என்னென்னமோ பண்ணார் மானிலத்து மாவட்டங்களை தாலுக்கா என்ற அளவிலிருந்து மண்டலம் என்ற சிறுபகுதிகளாக பிரித்தார். இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி , விவசாயிக்கு 250 ரூ க்கு அன்லிமிட்டட் பவர் சப்ளை இத்யாதி காரணங்களால் விவசாயம் செழித்தது. அரசியல் அதிகாரம் புதிய வர்கங்களுக்கு பரவலானது. நிர்வாகம் நெருங்கி வந்தது. இந்த கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்தான் கே.சி.ஆர். என்.டி.ஆர் மீதான ஈர்ப்பில் வந்தவர் இவர். இவர் தன் மகனுக்கு என்.டி.ஆர் பெயரை தான் வைத்திருக்கிறார்

சந்திரபாபு என்.டி.ஆர் முதுகில் குத்தி முதல்வராக பெரிதும் உதவியவர் கே.சி.ஆர். 1999 ல் பாபு மீண்டும் முதல்வரானார். (அவர் வென்றது பாஜக கூட்டினால் கிடைத்த கூடுதலான 2 சதவீதம் ஓட்டால் தான்.ஆனால் அவர் தான் கூட தலைவனாகிவிட்டதாய் மயங்கி ஆட்டத்த துவங்கிட்டார்) கே.சி.ஆரை ஓரங்கட்டினார். கே.சி.ஆர் தெலுங்கான சரித்திர படி வேலை போனதுமே தெலங்கானா போராட்டத்தை துவக்கிவிட்டார்.
என்.டி.ஆருக்கு சினிமா கவர்ச்சி எல்லைகள் தாண்டிய ஆளுமையை கொடுத்திருந்தது. ஒய்.எஸ் .ஆர் "சொன்னா செய்துருவாருய்யா இந்த ஆளு" என்ற குட் வில் காரணமாய் ஆளுமையை விஸ்தரித்து கொண்டார். இவர்கள் இருந்தவரை தனி தெலுங்கானா கோரிக்கை குற்றுயிரும் குலையுயிருமாய் தான் கிடந்தது.
என்.டி.ஆர் நல திட்டங்கள் மழை கணக்காய் ஆறுதல் தர ஒய்.எஸ்.ஆர் சகல துறைகளிலும் தூள் பரத்தினார். பாவம் கே.சி.ஆரும், அவரது டி.ஆர்,எஸ் கட்சியும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் தேய்ந்தே போயின. இத்தனைக்கும் 2004 தேர்தல்களில் டி.ஆர்.எஸ் கூட்டுடன் தான் ஜெயித்தார் ஒய்.எஸ்.ஆர்.ஆனால் தேர்தல் அறிக்கையில் மட்டும் "அனைவரின் ஒப்புதல் பெற்று தெலுங்கானா தருவோம் " என்று தான் குறிப்பிட்டார் ஒய்.எஸ்.ஆர். பாபு இதற்கு எதிர்ப்பு என்பதால் பிரச்சினையில்லாது காலம் ஓடிவிட்டது.

மேலும் அவர் தெலிங்கானா ராஷ்டிர சமிதியை மட்டுமல்லாது (பிளவுகளை ஊக்குவிப்பது மூலம்) தெலுங்கானா வாதத்தையே வலுவிழக்க செய்தார். ( லட்சத்து 20 ஆயிரம் கோடி செலவில் துவங்கிய அணைகளில் லயன்ஸ் ஷேர் தெலங்கானாவுக்கு ஒதுக்கினார்)

சப்பை பார்ட்டியான ரோசய்யா சி.எம்.ஆனதும், அவர் உச்சா போக கூட தில்லியை அனுமதி கேட்கும் நிலையில் இருப்பதையும் பார்த்த தண்ணீர் பாம்பான கேசிஆர் ராஜ நாகமாகி சீற ஆரம்பித்தார். இதில் காங்கிரஸ் கட்சிக்குள் ஜகன் கோஷ்டி, தில்லி கோஷ்டி என்று இரண்டு கோஷ்டிகள் வேறு.

கேசிஆர் பயங்கர தண்ணியடி கேஸு. பகல் 12 மேல தான் அவருக்கு விடியும். தி டீர் திடீர்னு காணாம போயிருவாரு. 2004 எலக்ஷனுக்கு முந்தியே பலமுறை கட்சி பிளவு முக்கியஸ்தர்கள் ராஜினாமா என்று கதை கந்தல். தேர்தலில் சீட்டுகள் பெரிதும் குறைந்து போனது. ஹைதராபாத் கார்ப்போரேட் எலக்ஷனில் போட்டியிடக்கூட முடியாத நிலை. எனவே எடுத்தார் உண்ணாவிரத அஸ்திரம். கடந்த காலத்திலேயே ஆந்திராபவனில் உண்ணாவிரத நாடகம் போட்டு கக்கூஸில் தயிர் சோறு சாப்பிட்டு மாட்டிக்கொண்ட கேணப்பார்ட்டி இது.

கே.சி.ஆரை போ ராஜா உண்ணாவிரதம் தானே இரு போ என்று சூ காட்டியிருந்தால் ரெண்டாம் நாளே யாரெனும் தாசில்தார் உறுதி மொழி பேரில் லைம் ஜூஸ் அடித்திருப்பார். இந்த தண்ணீ பாம்பை பார்த்து பயந்து ஆந்திர அரசு ஓவர் ஆக்ஷன் செய்ய , மாணவர்கள் களத்தில் குதிக்க, இங்குள்ள காங்கிரஸ் கிழவாடிகள் சோனியாவுக்கு சுக பேதி மருந்து கொடுக்க சிதம்பரம் அறிக்கை விட மானிலமே பற்றிக்கொண்டது.

இப்போ என்னடான்னா சட்டசபைல தீர்மானம் போட்டு அனுப்பினாதான் தெலுங்கானானு தில்லி தலைக சப்ப கட்டு கட்டராகளாம். இப்போ ரெண்டு பக்கமும் பத்திக்கிச்சு


இதான் கதை