4.சக்தியை உறிஞ்சும் பெண்ணுறுப்பு:
ஆணும், பெண்ணும் ஒரே நேரத்தில் உச்சம் பெறும்போது(இதை காம சாஸ்திரம் சமரதம் என்கிறது) பெண்ணுறுப்பு ஆணுறுப்பை பிடித்து விடுவது போன்ற உணர்வு ஏற்படும். இதை சில அதி மேதாவிகள் அது சக்தியை உறிஞ்சுகிறது என்பர். இது தவறான கருத்தாகும். ஆணுக்கு வீரியம் வெளியேறும்போது இன்னும் வெளியேறாதா என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் விந்து பையில் உள்ள அளவு விந்துதான் வெளியேறும்
5.வெற்றி எண்ணிக்கைகளை பொருத்ததே:
நிறைய ஆண்கள் செக்ஸில் வெற்றி என்பது எத்தனை முறை செய்தோம் என்பதை பொறுத்தது என்று எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். நீங்கள் ஒருவருக்கு விருந்தளிக்க எண்ணினால் காய் கறி,ஸ்வீட்,அப்பளம், ஐஸ்க்ரீம், சாம்பார், ரசம், மோர் பீடா எல்லாவற்றையும் ஒன் சிட்டிங்கில் தான் பரிமாறுவீர்கள். ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு தடவை இலைபோடமாட்டீர்கள் அல்லவா. எண்ணிக்கைகளை அதிகரிப்பது ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு தடவை இலை போடுவது போன்றதே. இன்னொரு வகையில் சொன்னால் குக்கரில் அரிசிவேக வைக்கும்போது மத்தியில் கேஸ் தீர்ந்து போய் அது அணைந்து விட்டால் மாற்று சிலிண்டரை பொருத்தி வேக வைப்பதற்கு முன் அந்த அரிசி/சோறு நாறிப்போகும்
6.பகல் நேர உறவு
இது ஆயுளை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. பிள்ளை பெற வேண்டி கொள்ளும் உடலுறவுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம். ஆடி மாதம் திருமணம் கூடாது என்பதுகூட பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகம் நல்லதாக இராது போக வாய்ப்புள்ள காரணத்தால் தான். இன்று நாமிருவர் நமக்கொருவர் என்ற நிலை வந்துவிட்ட நிலையில் இதை பின்பற்ற தேவையில்லை. ஆனால் சாப்பாட்டுக்கு பின் /உடனே என்பதை விட சாப்பாட்டுக்கு முன் முடித்து கொள்வது நல்லது. மேலும் ஒரு குட்டித்தூக்கம் போடவோ அ அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக நேரம் இருக்கும்போதோ மட்டும் ஈடுபடுவது நல்லது. தாயாக வாய்ப்பிருக்கும் நிலையில் பகல் நேர உடலுறவை தவிர்ப்பது நல்லதே
7.வாய் வழி புணர்ச்சி வேசிகளுடன் மட்டுமே:
இதுவும் தவறான கருத்தே. பெண் உச்சம் பெற உதவுவது க்ளிட்டோரிஸ் மீதான தூண்டுதலே. இது ஆணுறுப்பால் முழுக்க முடியாத வேலை. இதற்கு விரல்கள்/மூக்கு/உதடுகள் இத்யாதியை பயன்படுத்துவதை விட நாக்கை உபயோகிப்பது நல்லதே. பெண்கள் நோக்கில் பலர் மாதவிலக்கு நேரங்களில் உடலுறவை விரும்புவதில்லை. அவர்களுக்கு தம் கணவனின் திருப்தி முக்கியமாய் இருக்கும் பட்சத்தில், கரை கடந்த காதலிருக்கும் பட்சத்தில் , கணவனின் உறுப்பில் எவ்வித இன்ஃபெக்ஷனோ, அசுத்தமோ இல்லாத பட்சத்தில் வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடலாம். அதே போல் விரைப்பின்மை பிரச்சினையால் கணவன் தடுமாறும்போதும் இதை உபயோகித்துக்கொள்ளலாம். அதே சமயம் துரித ஸ்கலித கணவன்மார்கள் இதை பின்பற்ற கூடாது. தன் துணையின் உணர்வுகளை தூண்ட இம்முறையை உபயோகித்துக்கொள்ளலாம்.
(சுத்தம் என்ற நோக்கில் டெட்டால் இத்யாதி உபயோகிச்சுராதிங்கண்ணா.. வெ போயிரும் )
உடலுறவுக்கு பின் குளியல்:
அந்தகாலத்தில் இன்டெர்னெட், ப்ரிண்ட் மீடியா, பேப்பர் எல்லாம் கிடையாது. அதனால் சின்ன சின்ன ஓலை நறுக்குகளில் கவிதையாக எழுத வேண்டி வந்தது. ஆரோக்கிய சூத்திரங்களை கூட லட்சுமிகரம், தரித்திரம் என்று எழுதி வைத்தனர். கால,தேச,வர்த்தமானங்களை பொருத்து பின்பற்ற வேண்டிய விசயங்கள் இவை. டைஃபாயிட் இருக்கும்போது, ஊட்டியில் இருக்கும்போது, தண்ணீரே இல்லாதபோது, குளிர் காலத்தில் வென்னீர் இல்லாதபோது என்ன செய்ய ? இதெல்லாம் அவரவர் சூழலை பொருத்தவை. அதே நேரத்தில் உறவுக்கு பின் இன உறுப்புகளை தண்ணீரால் (சோப்பால் அல்ல) சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டியது கட்டாயம்.
இது இரவு நேர உறவுகளுக்கு , ஓய்வு நாளிலான உறவுக்கு ஓகே. சப்போஸ் கோவிலுக்கு போறிங்க, ஜோசியர்கிட்டே போறிங்க, இல்லே ஒர் புது முயற்சி தொடர்பா போகப்போறிங்க. அப்போ குளிச்சுட்டு போனா நல்லது. இதை கூட ஏன் சொல்றேன்னா "அய்யோ குளிக்காம போறோமே"ங்கற கில்டி இருக்ககூடாதேனுதான். மேலும் சந்திரன் ஜல காரகன் மட்டுமில்லே. மனோகாரகன் கூட. கோபமாவோ, வருத்தமாவோ இருக்கும்போது ஒரு குளியல் போட்டு பாருங்க (அதுலயும் வென்னீர் டபுள் ஓகே) உடனே ரிலீஃப் கிடைக்கும். கம்ப்யூட்டர்ல ரிசெட் பட்டனை அழுத்தினமாதிரி.