Wednesday, December 9, 2009

பெரியார் பல்கலை பெயர் மாற்றுங்கள்


ஆந்திர மானிலமெங்கும் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுகளின் லட்சணம் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன். அதாங்க கடப்பா டிஸ்ட்ரிக்ட்ல ஒரு தெ.தேசம் தலைவர் வீட்ல ஜெராக்ஸ் மிஷினோட கூட்டு காப்பி. அது ஒருபக்கம்னா நிறைய பேர் மெயில் மூலமா பல தகவல்களை கொட்டியிருக்காங்க.
1.ஒவ்வொரு முறையும் தேர்வுகள் தள்ளித்தான் போகுமாம்.
2.ஒவ்வொரு முறையும் ஒரு தேர்வுக்காவது கேள்வித்தாள்கள் மிஸ் ஆவது, மாணவர்களின் கல்வியாண்டு வீணாவதும் சகஜமாம்
3.மேலும் தேர்வுகளின் போது விசிட் செய்யும் அப்சர்வர்களின் ஓட்டல்,லாட்ஜு செலவுகள் பல ஆண்டுகளாய் யூனிவர்சிட்டியால் தரப்படவில்லையாம்.
4.இது மட்டுமல்ல தேர்வுகள் நடைபெறும் கல்லூரிகளின் மெயின்டெனன்ஸ் கூட நாமம்தானாம்
5. இதையெல்லாம் ஸ்டடி சென்டர் காரர்களே பேர் செய்து வருகின்றனரா ? என்றால் இல்லை அவர்கள் மாணவர்களிடமிருந்து வசூலித்துவிடுகின்றனர்

6.மேற்படி செலவுகளை உரிய பில்களோடு சமர்ப்பித்தால் துணைவேந்தர் ஃபைனான்ஸ் டிப்பார்ட்மென்டை கேளுங்க என்கிறாராம். ஃபைனான்ஸ் டிபார்ட்மென்ட் டைரக்டரைகேளுங்கங்கிறாராம்

இந்த இழவில் நாசமாவது என்னவோ கல்வியின் தரம் தான். ஸ்டடி சென்டர்காரர்கள் "பாஸ் கியாரண்டி" என்று எச்சி உமிழ்ந்து சத்தியம் பண்ணாத குறையாய் ஆளைப்பிடிக்கிறார்கள் . தேர்வுகள் போதான செலவுகளை மாணவர்களிடம் வசூலித்து பிட் சப்ளை செய்கிறார்கள். ஏற்கெனவே பட்டம் என்பது பறக்க விடத்தான் என்றொரு நிலை இருக்கிறது . இதில் இந்த பஞ்சாயத்துக்கள் வேறு.

பெரியார் பெயரில் பல்கலை வைத்து இப்படி கூத்தடித்தால் போவதுபெரியார் மான‌ம்தானே . ஒன்று எல்லாத்தயும் சரி பண்ணுங்க இல்லே அந்த பேரையாவது தூக்கிருங்க.

பி.கு: பி.ஏ லிட்ரேச்சருக்கான பாடங்களை பிக் அப் பண்ணி வைத்திருக்கிறேன்.அவற்றை படித்தால் கண்ணீல் நீர் வழிகிறது, மானாவரி எழுத்துப்பிழைகள். பொருட் குற்றங்கள் .. வேண்டாண்டா சாமி