Saturday, December 12, 2009

ஜோதிடமும் செக்ஸும்

ஜோதிடம் நம் எதிர்காலத்தை கூறுகிறது. எதிர்காலம் என்றால் அதில் நமது செக்ஸ் லைஃபும் அடக்கம் தானே. திறமையான ஜோதிடரால் ஜாதகரின் செக்ஸ் லைஃபையும் அனலைஸ் செய்ய முடியும். லக்னம் முதலான‌ ஏழாம் பாவம், ( மனைவி, காதலியரை காட்டுமிடம்), 12 ஆம் பாவம் நித்திரை , தாம்பத்ய வாழ்வை காட்டுமிடம். சுக்கிரன் நின்ற ராசி,அவருடன் சேர்ந்த கிரகங்கள் (இவர் தான் ஆண்களில் இன உறுப்புகள், வீரிய உற்பத்தி, செக்ஸ் உணர்வு, செயல்பாடுகளுக்கு பொறுப்பானவர்) , சுக்கிரன் நின்ற ராசியாதிபதி நின்ற ராசி வாங்கிய சாரம், இவர்கள் பாவச்சக்கரத்தில் நின்ற இடம் போன்ற அம்சங்களை ஆய்ந்து பலன் சொல்லலாம். ஜாதகர் சுய இன்பம் காண்பவரா, கள்ள உறவு பார்ட்டியா, பொருந்தா காமம் கொண்டவரா, மிருகங்களை புணர்பவரா, ஓரல் செக்ஸா, ஓரின சேர்க்கையாளரா, கற்பழிப்புக்கு துணிபவரா போன்ற எல்லா விஷயங்களையும் ஒரு ஜோதிட‌ரால் கணித்து கூற முடியும்.

ஜோதிடத்துக்கும் செக்ஸுக்கும் உள்ள தொடர்பு, அவரவர் ஜாதகம் கொண்டு அவரவ‌ர் செக்ஸ் லைஃபை அறிவது எப்படி போன்ற விஷயங்களை அறியும் முன் ஜோதிடத்தில் ஏபிசிடி போன்ற சில அடிப்படை விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆண்களின் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று பெண் ராசிகளிலேயே நிற்பது, பெண்களின் ஜாதகங்களில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று ஆண் ராசிகளிலேயே நிற்பது, நபும்சக கிரகங்கள் பலம் பெற்று நபும்சக ராசிகளில் நிற்பது போன்ற அம்சங்களால் தான் திரு நங்கைகள் தோன்றுகின்றனர்.
பெண் மேல் முறை இத்யாதி புதுமைகளும் தோன்றுகின்றன.

இப்போது சில அடிப்படை விஷயங்களை பார்ப்போம்:

செக்ஸ் லைஃபுக்கு காரகம் வகிக்கும் சுக்கிரன் 3,7,10 ராசிகளில் நின்று 30 வயதுக்கு முன்பே சுக்கிர தசை வந்துவிட்டால் அந்த ஜாதகர் இருபுறமும் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி போல் அவரது செக்ஸ் பவர் காலியாகிவிடுகிறது.

அதே போல் செவ்வாய் என்பவர் ரத்தத்துக்கு காரகர், சிறப்பாக ஜாதகருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வெள்ளை அணுக்களுக்கு காரகர் . செவ்வாய் பலம் இல்லாவிட்டால் ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் ஊரில் எந்த நோய் பரவினாலும் இவருக்கு தொற்றும். உடல் நலம், உடலுறவு நாட்டம் இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால் நாஸ்தி ஆகிவிடுகிறது.

நிற்க ஜோதிடம் என்பது கடல். உப்பளத்தில் கடல் நீரை தேக்கி உப்பு தயாரிப்பார்களே அதுபோல் ஒவ்வொரு ஜோதிடரும் அந்த கடல் நீரை கொஞ்சம் போல் தேக்கி அது தான் ஜோதிடம் என்று நம்புவதும், நம்ப வைப்பதுமாய் இருக்கிறார்கள். முழு நேர ஜோதிடர்களின் நிலையே இது. மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ் என்ற நினைப்பில் கண்ட துறையிலும் நுழைந்து வெளிவரும் என் நிலையை தனியே விவரிக்க வேண்டிய அவசியமில்லை.



மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே வித்யாசம் அவர்களில் பலருக்கு ஜோதிடத்தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை. "அட நேரம் என்னப்பா நேரம் பணம் இருந்தா எல்லா நேரமும் நல்ல நேரம்தான்" எனும் ஜோதிடர்கள் கூட உண்டு. ஆனால் என்னை பொருத்தவரை ஜோதிடத்தை நூற்றுக்கு நூறு நம்புகிறேன். தினம் தினம் அதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.

எந்த கிரக நிலையில் பெண் ஓடிப்போகிறாள், நடுத்தெருவில் நிற்பாள், வயிற்றில் வாங்கி வருவாள்

எந்த கிரக நிலையில் பையன் ஒரு மசாலா தோசைக்காக உடுப்பி ஹோட்டலை வாங்குவான் ( நன்றி சுஜாதா)

எந்த கிரக நிலையில் வீரியம் நீர்க்கும், ஸ்வப்ன ஸ்கலிதமாகும், துரிதஸ்கலிதமாகும் , எந்த கிரக நிலையில் பெண் காஞ்சானாகி அலையும் இத்யாதியெல்லாம் ஜஸ்ட் லைக் தட் உதிர்ப்பது நம் ஸ்டைல்.

மேலும் அவர்கள் தாம் கற்றதே ஜோதிடம் , கிரந்தங்களில் உள்ளதே ஜோதிடம் என்று தேங்கிவிட்டனர். நானோ மாற்றத்துக்கு உட்படாத கலையே இல்லை என்பதால் மாறிவரும் வாழ்வின் போக்கு, சமூக நிலைகளை கருத்தில் கொண்டு ஜாதகங்களை அணுகிவருகிறேன். அவர்கள் அஞ்சி அஞ்சி , தவணையில் கூட சொல்லாததை நான் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையுடன் போட்டு உடைப்பவன். இந்த மெய்கீர்த்திகள் ஒரு புறம் என்றால் ஜோதிடம் என்பது மனித வாழ்வுடன் தொடர்புள்ளது. மனித வாழ்வு தொடர்புறாத விசயமே கிடையாது என்பது தெரிந்ததே. எனக்கு செக்ஸாலஜி, சைக்காலஜி, ஹ்யூமன் பிஹேவியர் உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் ஆர்வமிருப்பதால் அனைத்து கோணங்களிலும் சிந்தித்து பலன் சொல்வது என் பலம்.கூடுமானவரை சித்தாந்த ஜோதிடத்தின் சாரத்தை அலட்சியப்படுத்தாது அதன் விதிகளை விட்டுக்கொடுக்காது விஞ்ஞான கண்ணோட்டத்துடன் இந்த பதிவை போடுகிறேன்.

ஒரு கிரகம் இன்னபலன் தான் தரும் என்ற உத்திரவாதமில்லை. அது எந்தெந்த விதத்தில் உங்களை பாதிக்க கூடும் என்பதை முடிந்தவரை ஒரு ஆப்ஷனையும் விடாமல் கணித்துவிட்டால் ஜோதிடம் பொய்க்க வாய்ப்பே இல்லை.

ஃப்ளாஷ் ! ப்ளாஷ் !

எந்த பெண் எங்கே வயதுக்கு வருவாள் என்பது கூட ஜோதிடத்தில் தெரியும் .
(விவரம் அடுத்த பதிவில்)

அலட்சியம் காரணமாகவோ , மித மிஞ்சிய தன்னம்பிக்கை காரணமாகவோ ஏதோ ஒரு ஆப்ஷனை ஜோதிடர் விட்டிருக்கலாம். அதுவே எதிர்காலத்தில் நடந்தும் விடலாம். உடனே நீங்கள் ஜோதிடமே டுபாகூர் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை

ஜோதிடம் பொய்த்தால் அது ஜோதிடர்களின் சிறுமை

என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஜாதகம் என்றால்:

ஜாதகம் என்பது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி யை போன்றதாகும். ஒவ்வொரு சேனலும் உங்க‌ள் வாழ்வின் ஒவ்வொரு கோணத்தை/ஒவ்வொரு அங்கத்தை காட்டும்.ஜாதக சக்கரத்தில் 12 பெட்டிகள் உள்ளனவல்லவா? ல என்று குறிப்பிடப்பட்டுள்ள பெட்டி தான் லக்னம். மொத்தம் 12 கட்டங்கள் உள்ளன. இவற்றை பாவங்கள் என்கிறோம். மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. ( சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு , சனி, புதன் ,கேது ,சுக்கிரன் ) ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பாவத்துக்கு ஆதிபத்யம் பெற்றுள்ளன.

சூரியன் ‍சிம்மத்துக்கு, சந்திரன் கடகத்துக்கு, செவ்வாய் மேஷ விருச்சிகங்களுக்கு, குரு தனுசு மீனங்களுக்கு, சனி மகர கும்ப ராசிகளுக்கு, புதன் மிதுன ,கன்னி ராசிகளுக்கு, சுக்கிரன் ரிஷப, துலா ராசிகளுக்கு ஆதிபத்யம் வகிக்கின்றனர்.
ஒவ்வொரு லக்னத்துக்கும் மேற்படி கிரகங்களுக்கும் உள்ள உறவை பொருத்து, தாம் நின்ற பாவத்தை பொருத்து, தம்முடன் சேர்ந்த கிரகங்களை பொருத்து கிரகங்கள் பலன் தருகின்றன.

க‌ட‌வுளின் ம‌ந்திரி ச‌பை:
ந‌வ‌கிர‌க‌ங்க‌ள் க‌ட‌வுளின் ம‌ந்திரிச‌பையில் ம‌ந்திரிக‌ளை போன்ற‌வையாகும். பிர‌த‌ம‌ர் ம‌ந்திரிக‌ளுக்கு இலாகா பிரித்து கொடுப்ப‌து போல் க‌ட‌வுள் பூமியில் உள்ள‌ எல்லா விஷ‌ய‌த்தையும் 9 ஆக‌ பிரித்து அவ‌ற்றின் மீதான‌ அதிகார‌த்தை ஒவ்வொரு கிர‌க‌த்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிர‌க‌ம் த‌ங்க‌ள் ஜாத‌க‌த்தில் ந‌ல்ல‌ நிலையில் இருந்தால் அத‌ன் இலாகாவில் உங்க‌ளை அடித்துக் கொள்ள‌ ஆளிருக்காது. அதே கிர‌க‌ம் கெட்டிருந்தால் அத‌ன் இலாகாவில் நாய‌டிதான்.

12 சேன‌ல்க‌ள்:

ஜாத‌க‌த்தில் 12 சேன‌ல்க‌ள் உள்ள‌தாக‌ சொன்னேன். அவ‌ற்றில் தெரிய‌க் கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளை இப்போது பார்ப்போம்.

முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்

2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்

3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்

4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்

5.ஆவது சேனல்:

பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு

6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு

7.ஆவது சேனல்:

நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்

8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்

9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.

10ஆவ‌து சேன‌ல்:

வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்

11.ஆவ‌து சேன‌ல்:

மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.

12ஆவ‌து சேன‌ல்:

தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

































இது கூடுமானவரை பழைய சம்பிரதாயஙளை விட்டு விடாது,அதே சமயம் விஞ்ஞான கண்ணோட்டத்துடன் ஜாதகப் பலன் களை தர உதவும் மாதிரி படிவமாகும். இதனை எல்லா ஜோதிடர்களும் பயன் படுத்திக்கொள்ளலாம்.

முன்னுரை:

பொதுவாக ஜாதகபலன் கள் எழுதும் ஜோதிடர்கள் நட்சத்திரபலன் ராசி பலன்,லக்ன பலன் என்று பொது பலன் எழுதுவர். இவையெல்லாம் இந்த கணிணி யுகத்தில் சின்ன தேடலிலே கிடைத்து விட கூடியனவாகும்.மேலும் எல்லா பஞ்சாங்கங்க‌ளிலும் கிடைக்கக் கூடியவையே. மேலும் இவை பொதுப் பலன் களாகும். ஒவ்வொரு ஜாதகருக்கும் நடந்தே ஆக வேண்டிய அவசியமில்லை.

எனவே தேவையான இடத்தில் தேவையான அளவு ஆங்காங்கே கொடுக்கப் படும்.

ஜாதகம் என்றால்:

ஜாதகம் என்பது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி யை போன்றதாகும். ஒவ்வொரு சேனலும் உங்க‌ள் வாழ்வின் ஒவ்வொரு கோணத்தை காட்டும். இதில் 12 பெட்டிகள் உள்ளனவல்லவா? முதல் பெட்டி தான் லக்னம். மொத்தம் 12 லக்னங்க‌ள் உள்ளன. 9 கிரகஙள் உள்ளன. ஒவ்வொரு லக்னத்துக்கும் நல்லதை செய்யும் கிரகங்க‌ளும் உள்ளன ,கெட்டது செய்யும் கிரகங்க‌ளும் உள்ளன.

க‌ட‌வுளின் ம‌ந்திரி ச‌பை:

ந‌வ‌கிர‌க‌ங்க‌ள் க‌ட‌வுளின் ம‌ந்திரிச‌பையில் ம‌ந்திரிக‌ளை போன்ற‌வையாகும். பிர‌த‌ம‌ர் ம‌ந்திரிக‌ளுக்கு இலாகா பிரித்து கொடுப்ப‌து போல் க‌ட‌வுள் பூமியில் உள்ள‌ எல்லா விஷ‌ய‌த்தையும் 9 ஆக‌ பிரித்து அவ‌ற்றின் மீதான‌ அதிகார‌த்தை ஒவ்வொரு கிர‌க‌த்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிர‌க‌ம் த‌ங்க‌ள் ஜாத‌க‌த்தில் ந‌ல்ல‌ நிலையில் இருந்தால் அத‌ன் இலாகாவில் உங்க‌ளை அடித்துக் கொள்ள‌ ஆளிருக்காது. அதே கிர‌க‌ம் கெட்டிருந்தால் அத‌ன் இலாகாவில் நாய‌டிதான்.



ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான‌ முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:





ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க‌ வேண்டுமானால் வ‌ருட‌க்க‌ண‌க்கில் இழுக்கும். என‌வே நான் குறிப்பிட்ட‌ ஜாத‌ருக்கு செவ்வாய் தொட‌ர்பான‌ வியாதிக‌ள் உள்ள‌தா (பி.பி,ப்ள‌ட் ஷுக‌ர்,க‌ட்டிக‌ள்,க‌ண்க‌ள் சிவ‌த்த‌ல்,அதீத‌ சூட்டால் வ‌ரும் வ‌யிற்று வ‌லி), செவ்வாய் கெட்டால் இருக்க‌க்கூடிய‌ குண‌ந‌ல‌ன் க‌ள் உள்ள‌ன‌வா?(கோப‌ம்,அடி த‌டி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வ‌கையில் ஆர்வ‌ம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்ப‌டுத்த‌ கூடிய‌ விப‌த்துக‌ள்,தீ விப‌த்துக‌ள்,அங்க‌ ஹீன‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தா என்று கேட்ட‌றிகிறேன். இவை ந‌ட‌ந்திருந்தால் செவ்வாய் தோஷ‌ம் இருப்ப‌தாக‌ நிர்ண‌யிக்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் க‌ட்டுக்குள் இருந்தால் தோஷ‌ ப‌ரிகார‌த்துக்கு கார‌ண‌மான‌ கிர‌க‌ம் ப‌ல‌மாய் உள்ள‌தாய் முடிவு செய்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருவ‌தாய் ஜாத‌க‌ர் கூறினால் அவ‌ர் ஜாத‌க‌ம் க‌டுமையான‌ செவ்வாய் தோஷ‌ ஜாத‌க‌ம் என்று நிர்ண‌யிக்கிறேன். இத‌னால் தான் என் முறைக்கு அனுப‌வ‌ ஜோதிட‌ம் என்று பெய‌ர் சூட்டியுள்ளேன்.



12 சேன‌ல்க‌ள்:

ஜாத‌க‌த்தில் 12 சேன‌ல்க‌ள் உள்ள‌தாக‌ சொன்னேன். அவ‌ற்றில் தெரிய‌க் கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளை இப்போது பார்ப்போம்.

முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்

2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்

3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில் பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்

4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்

5.ஆவது சேனல்:

பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு

6.ஆவது சேனல்:

வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு

7.ஆவது சேனல்:

நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்

8.ஆவது சேனல்:

வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்

9.ஆவ‌து சேன‌ல்:

த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.

10ஆவ‌து சேன‌ல்:

வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:

மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:

தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.