Showing posts with label sakthi. Show all posts
Showing posts with label sakthi. Show all posts

Friday, August 26, 2011

நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சுங்கோ..


அவன் -அவள்-அது : 22
அண்ணே !
இந்த தொடரை எழுதும்போது என்னடா இது எல்லாம் பழைய சம்பவமா எழுதிக்கிட்டிருக்கம். சனம் ஆருன்னா ஒன்னோட ஆத்தா இப்பம் என்னடா கிழிச்சான்னு கேட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு குறுகுறு இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் ஆத்தாவோட திருவிளையாடல் ஆரம்பமாயிருச்சுங்கோ... நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சு..

என்னடா இது எல்லாம் புலம்பலா இருக்குமோன்னு பக்கத்தை மூடிராதிங்க. பால பாடம் இன்னைக்கும் தொடருது. இங்கே அழுத்தி படிங்க.

கருத்து கந்தசாமி கணக்கா சமகால நேஷ்னல் டெவலப்மெண்ட்ஸ் பத்தியும் ஒரு ஐட்டம் தட்டி விட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிங்க

இனி அவன் அவள் அது ..................


கடந்த பதிவு ஒன்றில் ஆத்தாளுக்காவ தெலுங்குல நான் எழுதின தெலுங்கு கவிதைகளை வலையேற்ற ஒரு ஜகத் சோம்பேறிக்கு பிளாக் அண்ட் வைட் மானிட்டரோட ஒரு கம்ப்யூட்டரை கொடுத்துட்டு வந்தது ஞா இருக்கலாம்.

இன் கம் சர்ட்டிஃபிகேட் வைக்காததால காலேஜ்ல அவன் பையனுக்கு ரூ.31 ஆயிரம் அடிஷ்னலா கட்டவேண்டி வந்துருச்சு. அதை சாக்கா வச்சு வலையேற்றத்தை அவாய்ட் பண்ணிக்கிட்டு வந்தான். ஆத்தா அருளால காலேஜ் கண்டம் மலையேறிப்போச்சு.

இது நடந்து ஒரு வாரம் போல ஆனாலும் பார்ட்டி வலையேற்றத்தை கண்டுக்கற மாதிரி இல்லை. இத்தனைக்கும் அவனுக்கு எத்தனையோ ஆசையெல்லாம் காட்டினேன். மாசத்துக்கு இவ்ளன்னு காசுதரேன். எலக்ட்ரிசிட்டி போர்ட் ஆஃபீஸுக்கு போற வழியில தான் அவனோட மருந்து கடை . தாளி ஒரு டாட் மேட்ரிக்ஸ் ப்ரிண்டர் வாங்கித்தரேன். ஒரு மனு அடிச்சு கொடுத்தாலும் இருபது ரூபா வரும் இப்படி நிறைய.

ஆனால் பார்ட்டி எதையும் கண்டு்க்கலை. நேத்து ராத்திரி கடை பூட்டை உடைச்சு எல்லாத்தையும் வாரிக்கினு பூட்டானுங்களாம் ( நம்ம கம்ப்யூட்டர் உட்பட)

இதை எப்படி புரிஞ்சிக்கிறது புரியலை. காலையில 7 மணி அளவுல ஃபோன் வந்தது. இப்பம் 11.10 இதுவரை நாம என்ன ஏதுன்னு கண்டுக்கலை. இந்த சம்பவம் ஏன் நடந்தது? வலையேற்றத்தை நிரந்தரமா முடக்கவா? அது ஆத்தாளால கூட முடியாத வேலை.

வாழ்க்கையில லட்சியம்னு ஒன்னை வச்சுக்கிட்டு அதை தவிர மத்த எல்லாத்தையும் திராட்டுல விட்டுட்டு ஃபைட் பண்றவுக மேட்டர்ல கிரகங்கள் தோத்துப்போயிரனும்னு ஆத்தாளே ஒரு சாபம் விட்டு வச்சிருக்காளாமே தெரிமா?

இந்த சம்பவத்தால அசமஞ்சமா இருந்தா நம்மாளோட மைண்ட் உசுப்பப்பட்டு / இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் / கில்ட்டியால முழு வேகத்துல வலையேற்றம் நடக்குமோ?

அல்லது இதையே ஒரு சாக்கா வச்சு திராட்டுல விட்டுருவானோ? நமக்கு கம்ப்யூட்டர் திருடு போனதை பற்றி எள்ளளவும் கவலையில்லை.

எதுனா பூட்சின்னா கர்மம் தொலைஞ்சதுனு நினைக்கிற சாடிஸ்ட் நாம. எதுனா வந்தாதேன் பயப்படுவோம். இதும்பின்னாடி எந்த கருமம் வந்திருக்கோன்னு சிந்திப்பம்.


Wednesday, August 24, 2011

அவன் அவள் அது :20


கடந்த பதிவுல ஜகஜ்ஜால புரட்டனான ஒரு ரிப்போர்ட்டரோட மோத வேண்டி வந்தப்போ ஆத்தா எப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணினாங்கறதை சொல்றதா சொல்லியிருந்தேன். அப்பம் ஸ்டேட்ல சந்திரபாபுவோட உச்சா பெட்ரோலை விட வேகமா எரிஞ்சுக்கிட்டிருந்தது. அடுத்தும் சந்திரபாபு தான் சி.எம்னுட்டு 3 புதுப்பணக்காரவுக காசை தண்ணியா இறைச்சுக்கிட்டிருந்தாய்ங்க. அவிக கிட்ட அதிகமா குளிர்காய்ஞ்சது நிருபருங்கதேன். அவிகளுக்கு (பு.ப) ஸ்டேஷன்லயும் நல்ல வாய்ஸு.

அந்த நேரம் நம்ம தொகுதி எம்.எல்.ஏ ஆளுங்கட்சியோட பழிவாங்கலுக்கு டார்கெட் ஆகி இருந்தாரு. ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்தானே. இந்த தெலுங்கு தேசம் ஸ்கூலை பத்தி நமக்கு நல்லாவே அனுபவம். தாளி என்.டி.ஆர் ஃபேன் என்ற முறையில என்.டி.ஆர் காலத்துலருந்து உழைச்சிருக்கம்ல. கடேசியா 1999 தேர்தல் வரை ( சந்திரபாபு என்.டி.ஆருக்கு ஆப்படிச்ச பிற்காடும் கூட) தேர்தல் வேலையில எல்லாம் பார்ட்டிசிப்பேட் செய்திருக்கம். அவனுக (ஐ மீன் லோக்கல்) பவிசு நமக்கு நல்லா தெரியும்.

நம்ம எக்ஸ்பார்ட்டி போய் ஒரு ஆளை பிடிக்க நாமளும் அதே கட்சியில இன்னொரு ஆளை பிடிக்க குடுமிப்பிடியாயிரும்னு ஆந்திரபிரபா மேனேஜருக்கு நாம எம்.எல்.ஏ வை பார்க்கலாம்னு சஜஸ்ட் பண்ணேன். அவரு நீயே எதுனா சானலை பிடின்னாரு. ( நாம அவரு 3 தாட்டி ஜெயிச்சு ஹேட்ரிக் அடிச்சப்பல்லாம் அவருக்கு விரோதமாதான் வேலை செய்திருக்கம்)

எந்த சானலை பிடிக்கிற்துன்னு தலையை பிடிச்சுக்கிட்டம். முன்னாள் தி.தி.தே சேர்மன் பூமண கருணாகர் ரெட்டி (இப்பம் ஜகனோட முக்கிய தளபதிகள்ள ஒருத்தரு) ஞா வந்தாரு.

அவருக்கும் நமக்கும் என்ன லின்குன்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா ஒவ்வொரு வேலையா செய்தா. வஷக் வஷக்னு ஜெபிச்சதுல ஆராரையோ வசியமாக்கி வச்சுட்டா. நம்மை பத்தி வார்த்தால செய்தி வந்ததை படிச்சுட்டு தன்னோட சர்க்கிள்ள நம்மை ரெம்ப ஸ்லாகிச்சு பேசினதா தகவல்.

அப்பம் நமக்கு ஆ.இ.2000 தவிர வேற வேலையே கிடையாது. உடனே டைரக்டரில அவரோட நெம்பரை பிடிச்சு பேசினம். அவரும் ரெம்பவே ஆர்வம் காட்டினாரா ஃபோன் தொடர்பு அப்படியே கன்டின்யூ ஆயிருச்சு.

நீங்க எங்க எம்.எல்.ஏவுக்கு சொல்லுங்கன்னு கேட்டா நல்லாவா இருக்கும்.அதனால பொதுவா மேட்டரை சொன்னம். அவரு " அவ்ளதானே நான் பாபுவுக்கு (எங்க தொகுதி எம்.எல்.ஏ) ஃபோன் போட்டு சொல்றேன்
நீங்க போயி அவரை பாருங்கன்னுட்டு ஃபோனை வச்சுட்டாரு.

எம்.எல்.ஏவை பொருத்தவரை அவரோட கட்சி பவர்ல இல்லைதான். ஆனால் ஆளுங்கட்சி டுபுக்குங்களை நம்பறதை விட இவரை நம்பினா நம்பினோர் கைவிடப்படார். அவரோட கேரக்டர் இது.

ஒடனே திருப்பதிக்கு ஃபோன் போட்டு மேனேஜர் அண்ட் கோவை வரச்சொன்னேன். ச்சொம்மா பார்த்தோம். அவரு " சி.ஐ கிட்டே போங்க என்னை பார்த்ததா சொல்லுங்க. தேவைப்பட்டா ஃபோன் போடுங்க நானே வர்ரேன்" னாரு அவ்ளதேன். அதுக்குள்ள தகவல் தீயா பரவ.. மறுபடி ஸ்டேஷன்ல இருந்து ஆளு. சுதி இறங்கிப்போயி " ஃப்ரீயா இருக்கிறப்ப ஒரு அஞ்சு நிமிஷம் சி.ஐ சாரை பார்த்துட்டு வந்துருங்க சார்"

நம்மை பேசவிட்டா போறாதோ வாத்தியார் படம் மாதிரி " எங் வகக்கை நானே வாகாடுகிறேன்"னுட்டு கிழிச்சு ஆறப்போட்டுர மாட்டோமா? போட்டுட்டம். சி.ஐ சுஸ்தாயிட்டாரு. நம்ம மேனேஜர் " எக்ஸ் பார்ட்டிய திருப்பதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு ஜாயின் பண்றதா இருந்தா பண்ணட்டும் சித்தூர்ல டிஸ்டர்ப் பண்ணா சிவியர் ஆக்சன் எடுப்பம்"னு சி.ஐக்கு சொல்ட்டாரு.

யுத்தம் தானே க்ஷத்திரிய தர்மம். அது முடிஞ்சதுமே நம்ம வேலை ஓவர். வெற்றியை அனுபவிக்க எங்கருந்தோ ஒரு பார்ப்பான் வந்துருவான் தானே. அப்படி திருப்பதி ஏடிவிடி பார்ப்பான் புத்தூர் பார்ப்பான் ஒருத்தனை ஸ்டாஃபரா ரெக்கமண்ட் பண்ண நாம வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதாயிருச்சு. அது வேற கதை.

நாம மட்டும் தெலுங்கு தேச க்ரூப்ல போய் வாய வச்சிருந்தம் தாளி ஊறப்போட்டே நாறடிச்சிருப்பானுவ.இது நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட்.

எம்.எல்.ஏவோட இன்டர் ஆக்ட் ஆக தடையா இருந்தா 15 வருச கம்யூனிகேஷன் கேப் /அல்லது ஒரு தயக்கம் தூளாகிருச்சு. இன்னைக்கு ஜஸ்ட் எம்.எல்.ஏவோட அடிப்பொடிகளுக்காகவே லோக்கல்ல பத்திரிக்கை அதுவும் மல்ட்டிகலர் ந்டத்திக்கிட்டிருக்கம். அதுவும் வெற்றிகரமா.

அடுத்த வாரம் வினாயகர் சதுர்த்தி கம் ரம்ஜான் ஸ்பெஷலும் ரிலீஸ் ஆகப்போகுது. மல்ட்டி கலராக்கி ஒரு வருஷம் கம்ப்ளீட் ஆயிருச்சு. பத்திரிக்கை நடத்தி போன்டியானவுக எத்தீனி பேரு கீறாய்ங்கன்னு உங்களுக்கே தெரியும்.

ஆத்தா மனசு வச்சா பத்திரிக்கை நடத்தி கூட காசு பார்க்கலாமுங்கோ.


Wednesday, September 22, 2010

அவள்

அண்ணே வணக்கம்ணே, எத்தனையோ தொடர்கள் ..எல்லாம் அரைகுறை. இருந்தாலும் என்ன இதோ இன்னொரு தொடர். இதுல அவளுடனான , 2000 டிசம்பர் 23 முதலான என் அனுபவங்களை சொல்ல உத்தேசம். அவள்னா யாருனு கேப்பிக.



எவளுக்குள்ளயும் ஆணினம்  அவளைத்தான் தேடுது. அவளைபத்தி சொன்னா பீலா விடறதா தோணும். எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.



சூர்ய ப்ரகாசாயை நமஹாம்பாய்ங்க. படக்குனு சந்திரமண்டல வாசினிம்பாய்ங்க. மஹோதர்யைம்பாய்ங்க ( பெரிய வயிறு படைச்சவள் - இல்லாட்டி இத்தீனி ட்ரில்லியன் குட்டிகளை போட்டிருக்கமுடியாதே) டக்குனு நித்ய கன்னிம்பாய்ங்க.



அவளுக்கு ஷண்மதப்ரியேன்னு ஒரு பேருண்டு . ஷண் என்றால் 6 ன்னு அர்த்தம். ஷண்முகன் - ஆறுமுகன். அதை போல ஆறு மதங்கள் உண்டு. ஆறுமதங்களும் பரஸ்பரம் வெட்டுப்பழி,குத்துப்பழின்னு அலைஞ்சாலும் அந்த ஆறு மதங்களும் கொண்டாடற தெய்வம் அவள். அவளை முன்னிலைப்படுத்தும் மதத்துக்கு சாக்தேயம்னு பேரு.



ஏ.பி நாகராஜன், தேவர் மாதிரி பார்ட்டிங்க எத்தீனி படம் எடுத்திருந்தாலும் 2000 டிசம்பர் 23 வரை நமக்கு சாக்தேயத்துல ஆர்வம் ஏற்படலை. அவனருளாலே அவன் தாள் வணங்கி கணக்கா ஜோதிஷம் கத்துக்கிட்ட புதுசுல ( 1990) நம்ம ஜாதகத்துல சிவசக்தி யோகம் இருக்கிறதா படிச்சதுல லெட்டர் பேட்,கவர்ல யெல்லாம் சிவ சக்திகள் சைட் ஃபோஸ்ல இருக்கிற படத்தை லோகோ கணக்கா உபயோகிச்சது உண்டு. என்னோட ஆதர்ச தலைமையகத்துக்கு சிவசக்தி நகர்னு பேரை கூட கனவு கண்டதுண்டு. ஆனால் அதெல்லாம் ஜஸ்ட் சினிமா ஸ்லைடு மாதிரி. படம் என்னவோ 2000 டிசம்பர் 23 க்கு அப்பாறம் தான் துவங்குச்சு. அதுக்கு முந்தி சின்ன ட்ரெய்லர்.



வாணியம்பாடில அக்பர் கவுசரோட பத்திரிக்கைல உதவி ஆசியரா குப்பை கொட்டிக்கிட்டிருந்த காலத்துல ஒரு முஸ்லீம் நண்பர் அறிமுகமானார். அவர் தனக்கு மந்திர தந்திரங்கள்ள கமாண்ட் இருக்கிறதா சொல்வாரு. ஆவிகள்,செய்வினை பத்தியெல்லாம் எங்களுக்குள்ளாற நீண்ட விவாதங்கள் நடக்கும் . ஒரு நா நான் அவரை ரெம்ப கடுப்படிச்சிட்டாப்ல இருக்கு. அவர் நீங்க ரூமுக்கு போங்க நான் ஒரு ஐட்டத்தை அனுப்பறேன். அது என்ன பண்ணுச்சுன்னு நாளைக்கு சொல்லுங்கன்னாரு.



நான் ரூமுக்கு வந்துட்டன். மதிய நேரம் தான். அந்த ரூம் கதவுக்கு உள் தாப்பா கிடையாது. பாட் லாக் தான். குறுக்கால ஒரு ஸ்க்ரூ ட்ரைவரை விட்டுட்டு படுத்து படிச்சிக்கிட்டிருந்தேன். திடீர்னு யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. விதி விதிர்த்து போச்சு. உள்ளுக்குள்ள டர்ராகிட்டேன்.



இருந்தாலும் பெரியார் எழுத்தையெல்லாம் படிச்ச பார்ட்டி .ராம பக்தன், வீராஞ்சனேயரோ சிஷ்யன் இந்த பிரமைக்கெல்லாம் பயந்துரலாமா அது இதுன்னு என்னை நானே தேத்திக்கிட்டு ராம நாமம்லாம் சொல்லிட்டு இந்த பக்கம் திரும்பி படுத்தேன். மறுபடி யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. நம்முது கல்லு குடல்ங்கறதால ஒன்னுமாகலை .இல்லைன்னா நிச்சயம் பேதியாயிருக்கும்.



ஒடனெ எந்திரிச்சு சட்டைய போட்டுக்கிட்டு பாயை தேடிப்போனேன். "இன்னா பாய் நீங்க.. நானேதோ விளையாட்டுக்கு பேசினா இப்படி டர்ராக்கிட்டிங்களே"ன்னு புலம்பினேன்.



அவரு யாரோ பேய்ங்க் கஸ்டை அனுப்பிட்டு ஃபோன்ல கேட்கிறாப்ல " என்னதான் பண்ணுச்சு சொல்லுங்க"ன்னாரு. நான் மேட்டரை சொன்னேன்.



உ.வசப்பட்டுட்டாரா. அப்படியா தோள்ள தட்டுச்சா தோள்ல தட்டுச்சானு மறுபடி மறுபடி கேள்வி. நான், "அய்யோ விஷயத்தை ஓப்பன் பண்ணுங்க பாய்!"னுட்டு துடிச்சேன்.



அதுக்கு அவரு " முருகேசன்! நீங்க எந்த பாதையில பயணிக்க பிறந்திங்களோ அதுக்கான பாதை சித்தமாயிருச்சு. நீங்க புறப்பட வேண்டியதுதான்"னாரு.



அவர் சொன்னதைப்போலவே திமிர் காரணமா கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு ஊர் வந்தேன்.



அதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையின் முதல் பாகம் ( லலிதா டீச்சர் செய்த வஸ்திராபரணம்ங்கற தலைப்புல கொஞ்சமா சூ காட்டியிருக்கேன் .படிச்சு பாருங்க) அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டான இரண்டாவது பாகம். ரெண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னனு அப்ஜெக்டிவ் டைப் ஆன்சராவாச்சும் சொல்லியாகனும்.



முக்கியமா இரண்டாவது பாகத்துல இருந்து ஒரே ஒரு எப்பிசோடை யாச்சும் , சுருக்கமாவாச்சும் சொன்னாத்தான் அந்த வாழ்க்கையோட அவலம் , என் ஜப,தபங்களுக்கான உந்துதல் , என் சாதனையை மெச்சி ஆத்தா கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கை (ரெண்டுத்துக்கும் உள்ள வித்யாசம்) இதெல்லாம் உங்களுக்கு புரியும்.



மனைவி முழுகாம இருக்கா. நிறை மாசம். ஜூன்ல பிரசவம் நடக்கப்போவுது. மே மாசம் கங்கையம்மன் திருவிழா நடக்குது. அதுக்கு ஒரு வாரம் முன்னே இருந்து பயங்கர நெருக்கடி.



ஷீரடி பாபா ரேஞ்சுல இமேஜ் இருக்கிறதால பீடி சிகரட்டுக்கு பஞ்சமில்லைதான். நாம தன்மான சிங்க மில்லையா. கை மாத்து,கடன் எல்லாத்துக்கும் நமக்கு நாமே ஒரு சீலிங் வச்சிருப்பம். அது தாண்டிட்டா தாளி உயிரே போனாலும் அந்த ஜோலிக்கு போக மாட்டோம். அந்த மாதிரி ஒரு நிலை. திருவிழா கத்திரிலதான் நடக்கும். ஜோசியத்தொழிலுகு அன் சீசன். ஒரே ஒரு டீக்கடைல சீலிங் முடியலை. அதனால அங்கன போய் ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதும் மதியம் மறுபடி ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதுமா இருந்தது. மறுபடி ராத்திரிக்கும் அதே ப்ராசஸ்.



கர்பமா இருந்தப்போ பொஞ்சாதிக்கு போதுமான நியூட் ரிஷன் இல்லாமத்தான் என் மகள் மண்ணாந்தையாயிட்டாளோன்னும் ஒரு சம்சயம் உண்டு. ( அகடமிக்ல மட்டும்தான் தொத்தல். அவளும் இப்போ அடோப் ஃபோட்டோஷாப்ல புலியாகி என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறது வேற விஷயம்)



ஒரு வார கொலைப்பட்டினிக்கப்பாறம் தூரத்து சொந்தமான மாமனுக்கு ரத்ததானம் கொடுத்ததும் இதை கேள்விப்பட்டு எங்கப்பன் "அடடே நாம நினைச்ச ரேஞ்சுல நம்ம பையன் அராத்துல்ல போலிருக்கேன்னு வந்து பேட்ச் அப் ஆனதும் வேற கதை.



இந்த ஒரு வார கதைய வச்சு இப்படியேத்தான் வாழ்ந்தாராக்கும் நினைச்சுராதிங்க. நம்முது கடகலக்னமாச்சா ஏறினா ரயில்,இறங்கினா ஜெயிலுன்னு தாளிச்சிக்கிட்டிருந்தமில்லை. உடுப்பில சர்வருக்கு கொடுத்த டிப் பணத்துல சாப்பாட்டை முடிச்சதும் உண்டு. உடுப்பில ஒரு குடும்பம் சாப்பிட்டா ஆகிற பில்லை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து ஒரு வாரத்துக்கு பிச்சையெடுக்காதேனு சொன்னதும் உண்டு.



கவுசர் வேலைய நம்பி என் பொஞ்சாதி ஐ நூறு ரூபா வாடகைல வீட்டை பிடிச்சு வச்சிருந்தாளா.. நான் பாட்டுக்கு வேலைய விட்டுட்டு ஊரை பார்க்க வந்துட்டனா .. ஊர்ல இல்லாததால தொழில் வேற படுத்துப்போயிருந்ததா எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற நிலை.



அப்பத்தான் ஒரு க்ரூப் டச் ஆச்சு. அந்த க்ரூப்போட செனேரியோவை விவரிச்சன்னா மூட நம்பிக்கைய பரப்பறான்னு வேட்டியை உருவிருவிங்க. அவிக உலகம் மந்திரத்துல மாங்கா விழற உலகம். ஆவிகள்,தேவதைகள் மார்னிங் வாக் பண்ற உலகம்.



அந்த க்ரூப்ல ஒரு பார்ட்டிய மெல்ல ஓரம் கட்டி ஏம்பா என்னென்னமோ பேசறிங்க. பைசா புரள்ற மாதிரி எதுனா மந்திரம் ஒன்னு சொல்லிகொடுங்களேன்னேன். அந்த ஆளும் எதையோ சொன்னான். எழுதிக்கிட்டேன்.



இதுல ரகசியம் என்ன? அந்த மந்திரம் இதான் :



ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்



நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான பீஜங்கள் தான். என்.டி.ஆர் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்தாரு. அந்த இன்ஸ்பிரேசன்ல பிரம்மங்காரு தொடர்பான புத்தகங்கள் எல்லாம் நிறைய படிச்சேன் . அவரு ஒரு மூல மந்திரம் உபதேசிச்சிருக்காரு.



அந்த மூலமந்திரம் இதான்:

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய ப்ரம்ஹனே நமஹ



இதை ஏற்கெனவே சில லட்சமாச்சும் ஜெபிச்சிருப்பேன். ( இதெல்லாம் இப்ப எடிட் பண்ணி சொல்லிட்டிருக்கிற விஷயம். அந்த சமயம் இதெல்லாம் ப்ளாங்கா இருந்திருக்கும்)



மந்திரத்தை ஒரு பிடி பிடிச்சேன். அப்பத்துல ஜோசியம் தான் முழு நேரத்தோழில். அதோட டைமிங் ரெம்ப குறைச்சல்.ஊர் ஊரா தேசாந்திரம் போயிட்டு வந்ததால க்ளையண்ட்ஸும் குறைச்சல். அதனால 1986 ல ராம நாமத்தை ஒரு பிடி பிடிச்சாப்ல மேற்படி மந்திரத்தை விடாம ஜெபிச்சிட்டிருந்தேன்.



எப்படியோ மந்திரம் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. அம்மனுக்கு சம்பந்தப்பட்டு நம்ம லைஃப்ல நடந்த மேட்டர் எல்லாம் மாண்டேஜ் ஷாட்ஸ் கணக்கா மைண்ட்ல மின்ன ஆரம்பிச்சுது.



அந்த ஆளு ஏதும் சாங்கியம் சம்பிரதாயம்லாம் சொல்லலை. நானா சிலது ஏற்படுத்திக்கிட்டேன். சிலது காலப்போக்குல சேர்ந்துக்குச்சு. மந்திரம், மந்திரத்துக்குரிய மகராசி, எல்லா (ரு) மா சேர்ந்து என்னெல்லாம் நடத்தி வச்சாய்ங்கனு வரப்போற பதிவுகள்ள விவரிக்கிறேன். ஒரு ஆன்மீக பயணத்துக்கு தயாராயிருங்க. உடு ஜூட்

Tuesday, June 22, 2010

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"

தாயே !
நீ யாது செய்தாலும் அது  என் லட்சியப்பயணத்தை முடித்துவைக்கவே என்பதை நான் அறிவேன்.குறைந்த பட்சம் என் வாழ்க்கை பயணத்தையாவது முடித்து வைக்கத்தான் உன் நயன அசைவில் கோள்களை இயக்குகிறாய்.மரணத்துக்கு நான் அஞ்சுவதாயில்லை. மேலும் வரவேற்கவே செய்கிறேன்.

எப்படியும் மரியாதைக்குரிய வாழ்வை நான் வாழவில்லை. சமூக பார்வையில் மட்டுமல்ல. என் பார்வையிலும் தான்.

எனவேதான் என்  மரணமேனும் மரியாதைக்குரியதாய் அமைய வேண்டுமென்று துடிக்கிறேன்.

மகா வெடிப்பு காரணமாக உருவாகி அந்த வெப்பத்தால் ஒரு புறம் விரிவடைந்தபடி மறுபுறம் சுருங்கியபடி இருக்கும் இந்த விஸ்வத்தில் , இந்த படைப்பின் ஆரம்பத்தில் ஒரு மின்னல் பாய்ந்ததில் முதல் உயிர் தோன்றியதாய் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மின்னல் உன் மூக்குத்தியிலிருந்து பிறந்து வந்ததாய்  நான் கற்பித்துக்கொள்வதில் விஞ்ஞானிகளுக்கோ ,விஞ்ஞானத்துக்கோ என்ன வலி.? எங்கே வலி?

உன் வலி(மை)  நானறிவேன். என் நலி(வு) நீயறிவாய். உன் அருட்கரம் என் பின்னிருந்து ஆசி கூற நான்  நீ அமரும் புலி.  உன் கரம் ஓய்ந்தால் உளமெங்கும் கிலி. சத்துவம் கற்பித்தாய். தத்துவம் உணர்த்திவிட்டாய். இனி என்ன? வாழவேண்டும். நான் வெறுமனே பிழைத்திருந்த காலத்திலேயே,அறம் பிழைத்திருந்த காலத்திலேயே வெற்று பிழைப்புக்கு எதிரி நான். வாழ்விக்க வேண்டும். பூவுலகை. வாய்ப்பிருந்தால் வானுலகை.

மல மூத்ர தாரியான இவ்வுடலில் கமலம் மலரவும் , என் விழி நீர் உலரவும் உனை விட்டால் வேறு வழியில்லை. நாளிதுவரை நான் சுமக்காத பழியில்லை. எனைகண்டு மூடாத விழியில்லை.

அம்மா என்றுனை சரண் புகுந்தேன். முரண்களை விட்டு நகர்ந்தேன். அரண்களை தாண்டி தாயே உனை நாடி வந்தேன். பல்லவி பாடி வந்தேன்.

என் வாக்கில் அமர்ந்தாய். என்னை என் போக்கில் விட்டாய். சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹா..

நான் வெறுமனே காசு பணம் கிட்டும் என்று மந்திரம் கேட்டேன். நீ அவன் மனம் நின்று யாவும் பெற்றிட விதைச்சொல் தந்தாய். உன்னருளாலே உன் அருள் நாடி உன் அருளாலே மந்திர பெற்றும் செபித்தேன்.

ஓம்:

பிரணவ ஜெபம் செய்வித்து இறந்திருந்த எனக்குள் பிராணனை பிரதிஷ்டை செய்தாய். 

ஐம்:
ஞானப்பெட்டகத்தை காட்டுவித்து ,பூட்டெல்லாம் திறப்பித்து கொள்ளையிட உத்தரவு தந்தாய். என்னில் சச்சரவெல்லாம் சமாதியாக மயான அமைதிக்கே அச்சாரம் கொடுத்தாய். அதில் ஆதிசிவனை ஆட வைத்தாய். என்னை பாட வைத்தாய்.

ஹ்ரீம்:
உலகமெனும் நாடகமேடையை ஒரு மாயத்திரை மூடியிருக்க நிஜத்தை அதன் நிர்வாணத்தை தரிசிக்க முடியாது தவித்திருந்தேன். அம்மாயத்திரையை விலக்கியதோடு   என் மேல் மாயத்திரை ஒன்றை இறக்கி வைத்தாய். உலகத்தை  என் வியூகம் அறியாது விலகி நிற்க  வைத்தாய். கூட்டுப்புழுவென கிடந்த என்னை  ஒரு கூட்டில் சிறைவைத்து வண்ணத்து பூச்சியாய் வளரச்செய்தாய்.

க்லீம்:
நிதம் நிதம் உருமாறி, என் உள்ளத்தை சரமாரியால் தவிக்கச்செய்த நட்பும்,உறவும் என்னைக்கண்டு அஞ்சிடச்செய்தாய்.

ஸ்ரீம்:
சேராதிருப்பது கல்வியும் செல்வமும் என்ற சொலவடைக்கு சோர்வு வர என் மேல் காசும்  காதல் கொள்வித்தாய்.

நீ அம்மை. நானுன் கை பொம்மை. ஆட்டுவித்தல் நின் செயல். நல் வழி (கா)கூட்டுவித்தல் நின் கருணை.

ஓம் சக்தி

உனக்கென்ன..நித்ய யவ்வனம்..

உனக்கென்ன? அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்..!
என்னைப்பார் உன் அகத்துக்காரன் போலே
விடமருந்தியே வாழ்கிறேன்.
அவனுக்காச்சும்  அது தொண்டைக்குள் இறங்குவதை
தடுக்க  நீ  இருந்தாய்.
நான் இங்கிவர் பழிசொல் அருந்தி தவிக்கையில்
ஓடோடி வந்து நீ  தடுக்க    நானென்ன சிவனா?
நீதான் என் அகத்துக்காரியா? கோடானு கோடி
பிள்ளைகளில் ஒருவன் தானே

இத்துணை கோடி கோடி பிள்ளைகள் பெற்றும்
தீராத காமம் கொண்டு கணவனை பிரியாதிருக்கும் உனக்கு
காமாட்சி என்ற சொல்லாட்சி சாலப் பொருத்தமே

உனக்கென்ன? அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்..!

என்னைப்பார் ஒவ்வொரு நாளும்
விலகிப்போகும் இளமை.
துரத்தி வரும் மரணம்.

சக்தியின் பிறப்பிடம்  நீ
இருப்பிடம் நீ
நானோ சக்தி நின் ஆணை இதுவென்றறியும் முன்னே
சகலமும் இழந்து
அநீதி கண்டும் பொங்கவியலா
அசக்தனாய் இருக்கிறேன்.

மாதா உனை குறித்த மருமமெல்லாம்
மறு பரிசீலனை செய்தே
தருமத்தின் வடிவென்று வரித்தேன்
நீயோ வான் மேகமென உருமாறி
உன் மேல் சொல்மாரி பெய்த என் மேல் மக்கள்
அமில மழை தூவ அனுமதிக்கிறாய்.

உனக்கென்ன? அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்..!

என்னைப்பார் நித்ய கண்டம்.. அற்பாயுசு.
கீழ் வானமாய் வெளுக்கும் தலை..
தொட்டாற்சிணுங்கியென சுருங்கும் தோல்

என் கூட்டால் உனக்கு அமுதனைய அந்தாதி கிட்டும்.
உன் கூட்டால் எனக்கு கிட்டியதென்ன?
என் கருமம் தொலைக்க நீ தந்த வறுமையும், சிறுமையும் தானே

வறுமை தொலைக்க முனைந்து
வெறுமை வாட்டுகிறது.

உனக்கென்ன? அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்..!

(தொடரும்