Thursday, March 31, 2011
"ஜெ"வுக்கு ஜூன் 9 வரை நித்திய கண்டம் தேன்
ராகு தசை சந்திர புக்தி உபயத்தில் ஜூன் 9 வரை இழு பறி. அதுக்கு பிறவு ராகு தசையில செவ்வாய் புக்தி. செவ் 3 ஆமிடத்துல இருக்கிறதால அம்மா நெஞ்சுல வீரம் பொங்கும். ஒரு பிடி பிடிச்சுரனும்னு சீறி எழுவாய்ங்க. ஆனால் சகோதரஸ்தானத்துல நின்ன செவ்வாய்க்கு 6 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கிறதால உடன் பிறவா சகோதரியோ அ அம்மா நம்பின ஆரோ ஒரு சகோதரரோ "டபுள் கேம்" ஆடலாம். அ அவிகளோட அம்மாவுக்கு விரோதம் வந்து கழட்டியும் விடலாம். அப்படி விட்டா அந்த பிரிவு 29/Jun/2012 வரை தொடரும். அ அந்த டபுள் கேமுக்கு அம்மா பலியானாலும் ஆகலாம். இதெல்லாம் தேர்தலுக்கு பிறகு. Read More
Wednesday, March 30, 2011
அவன்-அவள்-அது
சிவசங்கரி எழுதின நாவல் ” ஒரு சிங்கம் முயலாகிறது” இதை சினிமாவா எடுத்தாய்ங்க ( சிவகுமார் ஸ்ரீப்ரியா)அந்த படத்தோட டைட்டில் இது. ஆனால் பாருங்க. இதுவும் “அவளை”தான் குறிக்குது. ‘
நம்ம மேட்டர்ல அவளோட லீலைகளை – நமக்கு காட்டின வேலைகளை எழுதினா ” ஹே.. இந்த ஆளு ரெம்பவே ஊத்தறான்யா”ன்னிருவிக. அவளோட சகவாசம்தான் இப்ப இந்த சுகவாசத்தை தந்திருக்குன்னு சப்ஜாடா நம்பறேன்.
அவளோட நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லே. இனி ஒருக்கா அப்படி ஒரு நிலைவந்தா நானே நிப்பேனானு சந்தேகம். அந்த அளவுக்கு ட்ராகுலா கணக்கா உறிஞ்சி எடுத்தாச்சு. ஆனால் அது ப்ளட் ட்ரான்ஸ்மிஷன் மாதிரின்னு இப்பத்தேன் புரியுது. தொடர்ந்து படிக்க

Tuesday, March 29, 2011
உஜிலாதேவியும் ஒரு பாவியும்
பொதுவுடமை ஒரு அழகான கனவா?ங்கற கேள்வியை எழுப்பி ஆமாங்கறாரு யோகி ஸ்ரீராமானந்த குரு . நாம பாவிங்கறதாலயோ என்னமோ அவரோட கருத்துல உடன்பாடு ஏற்படலை.
அலெக்ஸால 20 ஆயிரத்து சில்லறை ரேங்குக்குவந்த பிற்பாடும் சில்லறைத்தனமா எழுதக்கூடாதுனுட்டு பணிவா, பதவிசா இந்த பதிவை போடறேன்.
என்னையும் மீறி எதுனா வார்த்தைகள் எக்கு தப்பா வந்து விழுந்துட்டா சிம்மத்துக்கு வாக்குஸ்தானத்துல உள்ள சனியோட வேலைனு நினைச்சு மன்னிச்சு விட்டுரனும்.
//ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாகவே முடியாதா? அப்படி ஒரு சமூகம் உருவானால் நன்றாக இருக்குமே என்று பலர் விரும்புகிறார்கள் சிலர் அதற்காக முயற்சியும் செய்கிறார்கள் //
விரும்பறதென்னமோ நெஜம் தான். அதற்கான முயற்சியை கம்யூனிஸ்டுகளே விட்டாச்சுங்கறதுதான் உண்மை.
//சில விஷயங்களை சொல்வதினால் மன சங்கடம் ஏற்பட்டு விடும் என்பதற்காக சொல்லாமல் விடுவது பெரிய தவறுதல் ஆகும். //
அதுக்காக ஒரு தொலை தூர இலக்கை அடையவே முடியாதுனு சொல்லி இடுப்பொடிக்கனுமா?
//அரிஸ்டாடிலின் நூலை படித்தவர்கள் ஒரு விஷயத்தை நன்றாக அறிவார்கள்.//
நான் படிச்சதில்லை.ஆனா ரெண்டு பொஞ்சாதியிருந்து பெண்ணும் ஒரு பல் குறைவுனு எழுதின பார்ட்டினு தெரியும்
//இந்த உலகில் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் என்று இருவேறு சமூக கூறுகள் இருப்பதாகவும் அது உலகம் அழியும் வரை இருக்கும் என்றும் அவர் சொல்கிறார் //
உலகம் அழியத்துவங்கும் வரைனு சொல்லியிருந்தா பெட்டரா இருந்திருக்கும். ஜப்பான் சுனாமி வந்தப்ப ஏழைய மட்டுமா அடிச்சிக்கிட்டு பொச்சு/
// மனித சமுதாயம் தோன்றிய நாள் முதலாக வறுமையென்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும்//
அதுக்கான காரணங்கள் கூட தெரியும் ஆளூம் வர்கத்தின் சுரண்டல்.
//வலுவானவன், பலகீனர்களை சுரண்டுவதினாலேயே வறுமையிருக்கிறது என சொல்பவர்களும் உண்டு.
இவையெல்லாம் உண்மை தான். ஆனால் வறுமையை விரட்ட எடுத்துக் கொண்ட ஆயுத போராட்டங்களும் அகிம்ஸா போராட்டங்களும் இதுவரை வெற்றி பெறவேயில்லை.//
புல்லெட் வார் மட்டுமில்லை -பேலட் வார்ஸ் கூட ஜெயிச்சுருக்கு. உ.ம் பீகார்,குஜராத்.அகிம்சை போராட்டம் செயிக்கலின்னா 3ஜி ஸ்பெக்ட் ரம் மேல ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டி போட்டிருப்பாய்ங்களா? ஏதோ ஒரு மாதிரியா ஜெயிச்சுட்டுதான் வருது. ரஷ்யா ஜெயிச்சது. கார்ப்பசேவ் உலக மீடியா வெளிச்சத்துல மதி மயங்கி அதிகப்படியா திறந்து காட்டிட்டாரு. ஆப்படிச்சுட்டாய்ங்க.
//ஆண்டவன் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதனால்தான் தான் உலக இயக்கம் என்பது நடந்து கொண்டே இருக்கிறது. //
அப்ப காட்டுல இயக்கமே இல்லியா?வெறும் திரைக்கதை தானா? புலி மானை அடிக்கலாம். வயசான புலியை சின்ன வயசு புலி அடிக்கலாம். ஆனால் ஒரு பிடிக்கு தாங்காத பெரிய இடத்து முயல், புலி ஆன்ட்டியை தக்ஜம் பண்ணமுடியாதே.
//பொதுவாக நாம் வறுமை, செல்வம் என்பதை பணத்தோடு மட்டும் தான் பொறுத்தி பார்க்கிறோம். இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.//
பின்னே கோழிக்கறிக்கடையில எடை போட்ட மாதிரி எடை போடனுமா ? அல்லது ஜுவெல்லரில உரைச்சு பார்க்கிறாப்ல உரைச்சு பார்க்கனுமா?
//அறிவு, அறிவின்மை, திறமை, திறமையின்மை என்பவைகளும் ஏற்றத்தாழ்வுகள் தான். //
கரீட்டு தான் சாமி! ஆனால் இதுக்கும் சத்தில்லாத உணவு, விழிப்புணர்வில்லாத நெருங்கிய சொந்தத்திலான திருமணங்கள், ஜீன்ஸ் ,பயிற்சிக்கு வாய்ப்பின்மை இத்யாதி தானே காரணமா இருக்குது
இதெல்லாத்துக்கு அவுட்லைன்ல இருக்கிறது பொருளாதார ஏற்றத்தாழ்வுதானே. அதுக்கு காரணம் சுரண்டல் தானே.
//பணம் இல்லாதவனுக்கு கூட பணத்தை கொடுத்து செல்வந்தன் ஆக்கிவிடலாம். அறிவு இல்லாதவனுக்கும், திறமை இல்லாதவனுக்கும் எதை கொடுத்து சமப்படுத்த முடியும்?//
பணத்தை கொடுனு மானமுள்ளவன் கேட்கறதில்லை - ஆந்திராவுல சந்திரபாபு மாசாமாசம் உங்க பாங்க் அக்கவுண்ட்ல பணம் போடறோம்னு சொன்னாரு. ஆனாலும் செயிக்கலை. -பணத்தை சம்பாதிக்க உழைக்க தயார் - அதுக்கொரு வாய்ப்பை கொடுனு தானே மல்லாடறாய்ங்க - ஆனால் அவன் உழைச்சு சம்பாதிச்சதை கூட குப்பைகளையும் ,டாஸ்மாக்கையும் அவன் தலையில கட்டி கொள்ளையடிக்கிறது சுரண்டல் இல்லியா? அவன் ஏழ்மைக்கு இதெல்லாம் காரணமில்லியா?
பணம் இருந்தா அறிவு வேணம்னா வராம போயிரலாம். தெறமை யதேஷ்டமா வந்துருது. அஷ்ட தெலிவியும் வந்துருது. அறிவு நிதானமா வரட்டும் . அடுத்த தலைமுறையில வரட்டும் அட ஏழு தலைமுறை கழிச்சு வரட்டும். அவனுக்கு சமூகம் தரவேண்டிய வாய்ப்பு. அவனையும் சேர்த்துத்தான் சமூகம். அவனை செல்வந்தனாக்கலின்னா சமூகம் என்ற உடல்ல ஒரு விரலுக்கு ரத்தம் போகாம மாஞ்சா நூல்ல கட்டி வச்ச கணக்கா போயிரும்ல. நேரிடையாவோ மறைமுகமாகவோ இந்த சமுதாயம் அவனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணுதுல்லை. அதுக்கு உரிய நஷ்ட ஈட்டை வாய்ப்புங்கற வடிவத்துலயாவது தரனுமில்லியா?அப்படி தந்திருந்தா ஏன் பொதுவுடமை மலர்ந்திருக்காது?
//எனவே ஏற்றத் தாழ்வுகள் என்பது இயற்கையின் சமுதாய விதி, இதை மாற்றவே முடியாது. //
இயற்கையில ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மை இருக்கே தவிர - ஏற்றத்தாழ்வு இல்லே சாமி. உங்களை அம்பானி க்ரூப்ஸ் சேர்மனாக்கினா சமாளிக்கமாட்டிங்களா என்ன? அப்படியே ஏற்ற தாழ்வுங்கறது அல்லா விசயத்துலயும் கீட்டம். ஆனால் அது வாய்ப்புல இருக்கக்கூடாதுங்கறது தான் என் வாதம்.வாய்ப்பிருந்தும் அவன் டாஸ்மாக்ல மட்டையாகி கிடந்தா அவன் கருமம். ஆனால் அவனுக்கும் சேர்த்து ரோசிக்கிறதுதான் சமூகத்தொட தருமம். அதை வலியுறுத்தறதுதான் பொதுவுடமை.
//உலகம் சமநிலை பெற வேண்டும் என்பதுயெல்லாம் நல்ல எண்ணம் தான். ஆனால் அது சாத்தியப்படாது. //
சாமியோவ் சாமி ! இப்பமே இருட்டின பிறவு சம நிலை வந்துருது. பலான பார்ட்டிய ஊர் பேர் தெரியாத ஸ்டேஷன்ல ரயிலேத்தி விடலைன்னா ஏசி கோச்ல பயணம் போற தானைத்தலைவருங்களுக்கு கக்கா கூட வராதாம்
//இந்த உலகம் எப்பொழுது சமமாகயிருக்கிறது தெரியுமா? உறக்கத்தில் மட்டும் தான். உறக்கம் என்பது செயலற்ற நிலை//
மத்த நேரத்துலல்லாம் செயல்படறாய்ங்கனு சொல்றிங்களா? சனம் சொந்தமா எதையும் செய்ற காலம்லாம் போச்சு. இருக்கிறவனும் பார்க்கத்தான் செய்யறான். இல்லாதவனும் பார்க்கத்தான் செய்யறான். உறக்கம் மட்டுமில்லை - வாழ்க்கையே செயலற்ற நிலைக்கு மாறிப்போச்சு. - பார்க்கிறான் பார்க்கிறாங்கறது உலகக்கோப்பை போட்டியை மட்டுமில்லிங்க சாமி..
//அதாவது அழிவு மட்டும் தான் சமமானதே தவிர செயல் என்பது சமமாகவே இருக்காது.//
அழிவு கூட எப்படி சாமி சமமா வரும். அழிவு குறித்த பீதி வேணம்னா சமமா வரும்.
//ரஷ்யாவில் எல்லாவற்றையும் பொதுவுடமை ஆக்கிவிட்டால் வறுமை ஒழிந்து விடும் என கனவு கண்டார்கள். //
ஆங்.. வந்திங்களா மேட்டருக்கு. ரஷ்யாவுல இன்னா நடந்துதுன்னா முதலாளித்துவ செட் அப்ல முதலாளிகள் ப்ளே பண்ண ரோலை அங்கன அரசாங்கமே ப்ளே பண்ண ஆரம்பிச்சுருச்சு. மொதலாளியாச்சும் பரவால்லை. தொழிலாளியை சுரண்டி இன்னொரு ஃபேக்டரி கட்ட ஆரம்பிப்பான். ஆனா ரஷ்ய அரசு பெருமைக்கு பன்னி மேச்சு, அமெரிக்கா தோள் உசரத்துக்கு வரனும்னு எக்கி எக்கி தானம் தர்மம், போர், தளவாடம்னு வேட்டு விட்டுருச்சு.
//ஆனால் பொதுவுடமை ஆட்சியில் மக்கள் கண்டது என்ன. ஒரே ஒரு கோழி முட்டை வாங்க ரேஷன் கடை வரிசையில் எட்டு மணி நேரம் காத்து இருக்க வேண்டும்.//
ஆனால் முட்டை நாலணா எட்டணா இருந்திருக்கும் சாமி. இன்னைக்கு ஃபோன் பண்ணா கேன் தண்ணிய வீட்டு வாசல்ல கொண்டு இறக்கறான் .அதுக்கு விலை இருக்கில்லை. அதை முடி அவுக்கனும்ல.
//இந்த விதி பொதுமக்களுக்கு தானே தவிர அதிகாரிகளுக்கு அல்ல.//
க்யூவை சொல்றிங்களா? அட ராமராஜ்ஜியத்துலயே தபஸ் பண்ற சூத்திரனை போட்டுத்தள்ளச்சொல்லி ப்ரஷர் வரலிங்களா?
//ஜன நாயகத்தில் சுரண்டுபவன் பணக்காரன் ஆவான். சர்வதிகாரத்தில் சுரண்டுபவன் அதிகாரியாவான்.//
ஜன நாயகத்தில் சுரண்டியவன் திகார் ஜெயிலில் 7 கம்பளங்களுடன் இருப்பான். சர்வாதிகாரத்தில் சுரண்டுபவன் சுட்டுக்கொல்லப்படுவான்னும் சொல்லலாமே. ஆமா என்ன படக்குனு ட்ராக் மாறிட்டீங்க. பொது உடமை பத்தி தானே பேச்சு. ஓகோ உங்க அகராதில பொது உடைமைன்னா அது சர்வாதிகாரம்னு அர்த்தமா?
//இப்பொழுது சொல்லுங்கள் மாற்றவே முடியாத ஏற்றத் தாழ்வு விதியை உருவாக்கிய இறைவன் எப்படி கொடுமைகாரன் ஆவான். //
ஹய்யோ... ஹய்யோ ..இறைவன் மன்மோகன் சிங் மாதிரி. நாமதேன் சோனியாமாதிரி . அப்ப்போ சாயந்திர நேரத்துல டீக்கு கூப்பிட்டு க்ளாஸ் எடுத்தா எல்லாம் க்ளோஸ்
//யாருக்குமே பசியில்லை என்றால், எல்லோருக்குமே அறிவு இருக்கிறது என்றால் உலகத்தின் இயக்கம் எப்படி நடக்கும்.//
என்.டி.ஆர் ரெண்டு ரூபா அரிசி கொண்டுவர்ர வரை கிராமத்துல விவசாய கூலி தொழிலாளி நிலை நாய் மாதிரி. ஜூ ஜூன்னா நாயாச்சும் ஒரு செகண்டு ரோசிச்சுட்டு ஓடத்துவங்கும். வி.கூ. தொ க்கு அந்த ஆப்ஷன் கூட கிடையாது.
ரெட்டியாரோ ,நாயுடுவோ :க்கும்" னுட்டா நிலத்துல இறங்கிரனும். கூலி ,கீலில்லாம் பேச முடியாது. ரெண்டு ரூபா அரிசி வந்தப்பறம் தேன் கூலி எவ்ளோனு கேட்கிற நிலையே வந்தது.
பசியில்லைன்னா தான் உலக இயக்கம் பர்ஃபெக்டா நடக்கும். நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க.
அல்லாருக்கும் அறிவிருந்தா "இத்தீனி கல்வித்தந்தைகள்" தேவைப்படமாட்டாய்ங்க. விவசாயி வெள்ளாமையில வந்த காசு பணத்தை புள்ளை குட்டிங்க படிப்புக்காக அவிக இரும்பு பெட்டில சிறைவச்சுட்டு கும்பி காஞ்சு சாகாம வச்சு ஒழுங்கா "பொளப்பை"பார்ப்பான், புள்ளை குட்டிக்கும் பொளப்பை கத்துத்தருவான்.
//போட்டது போட்டபடி அப்படியே கிடக்கும்//
ஓகோ இத்தீனி நாளு ஆளு படை வச்சு பின்பக்கத்தை அசைக்காம இருந்தவுக வீட்டுக்கதைய சொல்றிங்க.. ஹூம் நாலாவது நாளே குனிஞ்ச்சு நிமிர ஆரம்பிச்சுருவாய்ங்க. என்.ஆர்.ஐ களை விஜாரிங்க அங்கன வேலைக்காரிக்கு என்ன சமபளம்னு
//பசிதான் முன்னேற்றத்தின் பாதை. //
இல்லே சாமி - இளைச்சவன் ஒரு பத்து நாள் பசியை நிறுத்தவோ ,சமாளிக்கவோ, சகிக்கவோ கத்துக்கிட்டிருந்தா பசியும் சுரண்டலும் பாரதி ராசா சினிமால ஹீரோ ஹீரோயின் மாதிரி நாட்டை விட்டே சோடியா போயிருக்கும். அவன் இன்னமும் பசிக்கு பயப்படறான். பசிங்கறது சோத்து பிரச்சினையோ, சத்து பிரச்சினையோ இல்லை. ( எத்தீனி பேருக்கு சத்தான உணவு கிடைக்குதுங்கறிங்க)
புறக்கணிக்கப்பட உணர்வு - தள்ளி வைக்கப்பட்டுவிட்டாற்போன்ற தாபம் - தான் பாபியோ என்ற குழப்பம் - ம்ரண சூரியனின் முதல் கிரணமோ என்ற உதறல் - ஆன்மாவின் கதறல்
அது இருக்கிறதாலதான் -அதை நினைச்சு டர்ராகிறதால தான் முன்னேற்றம் முக்காடு போட்டு அழுதுக்கிட்டு கிடக்கு.
//தாழ்வு தான் ஏற்றத்திற்கான படிக்கட்டு//
இது மாத்திரம் அட்சர லட்சம் சாமி .. எங்க தாழ்வு அவிக ஏற்றத்திற்கான படிக்கட்டு.
//எனவே பொதுவுடைமை என்பது எப்போதுமே மனிதர்களை தொடரும் அழகான கனவு//
மனிதர்களை தொடரும் கனவில்லை சாமி.. மனிதர்களின் மாசுகளையும் மீறி மனிதர்களை காதலிப்பவர்களின் கனவு. இதுல சுய நலமில்லை ( கனவு நனவாகும்போது கலந்துரலாம் அது வேற மேட்டர்) சுய நலமில்லேங்க்ற ஒரே ஒரு காரணத்தால ஒரு நாள் இல்லே ஒரு நாள் இந்த கனவு நனவாகும். அதுவரை பசித்த மூளைகளுக்கு சத்தான உணவும் ஆகும்.
வேண்டு கோள்:
உங்களை எழுத வச்ச அதே சக்திதான் இதையும் எழுதவச்சாப்ல இருக்கு. நான் இந்த மேட்டரை எழுதனும்னு சங்கல்பிச்சுத்தான் உங்களை பதிவே போட வச்சுதோ என்னமோ? நான் பேசிக்கிறேன். நீங்களூம் பேசிப்பாருங்க.
தயவு செய்து என்னை தப்பா நினைச்சுராதிங்க. தனிமனிதனா நான் ரெம்ப ஃப்ரெண்ட்லி. நேத்து கோவணத்தை உருவினவனை கூட வெறுக்கத்துணியாதவன். பேச்சு பேச்சா இருக்கனும் ஆமா சொல்ட்டன்.
மற்றபடி உங்கள் இதர கருத்துக்களில் பல எனக்கு பிடித்தவை .

பலான மேட்டரில் சில பிடிகளும் பிடிப்புகளும்
எச்சரிக்கை:
பிடின்னா பெண் யானைனு அர்த்தம். பேச்சு வழக்குல "பிடி"ன்னா கேட்ச் . பொருளை பிடிங்கறதுக்கும் பிடிதான். ஆளைப்பிடிங்கறதுக்கும் பிடிதான்.
ஆளைப்பிடிச்சு வேலைய முடினு சொல்றதுக்கும் "ஆளைப்பிடி"தான். நிலை தடுமாறிட்டிருக்கிற 'குடி"மகனை பிடிங்கறதுக்கும் பிடிதான்.
மல் யுத்தத்துல பிடிக்கு வேற அர்த்தம். பலான நேரத்து பிடி வேற.
எங்கயோ பிடிச்சிருக்குன்னா அது உடல் சாந்த புகார். உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னா அது மனம் சார்ந்த நிலை.
பிடிப்புங்கற வார்த்தைக்கும் பல அர்த்தம் இருக்கு.
"என்னமோப்பா வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லாம போயிருச்சு"
"பிடிப்பு போக கைக்கு எவ்ளதான் வருது?"
"பிடிப்பு இல்லாம எப்படிப்பா கடன் கொடுத்தே?"
உணர்வு மொழியாக்கம் செய்யப்படும்போது எப்படியெல்லாம் அர்த்தம் மா ( நா) றிப்போயிடும்ங்கறதுக்கு இதெல்லாம் உதாரணம் ( வினோத்ஜி கவனிக்கனும்)
Read more

Labels:
அவள்,
ஆன்மீகம்,
பிடிகள்,
பிடிப்புகள்,
ஜோதிடம்
Monday, March 28, 2011
அவள்
எவளுக்குள்ளயும் ஆணினம் அவளைத்தான் தேடுது. அவளைபத்தி சொன்னா பீலா விடறதா தோணும். லாலா போட்டு பினாத்தறதா தெரியும். மோகத்தை உண்டாக்குபவளும் அவளே மோகினி. பின் மோகத்திலிருந்து யோகத்துக்கு இழுத்து செல்பவளும் அவளே. யோகினி.
எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.
"அனாமிகா"ம்பாய்ங்க ( பேரில்லாதவள்) .அப்பாறம் பார்த்தா சஹஸ்ர நாம அர்ச்சனைம்பாய்ங்க. அவளே ஒரு புதிர். தர்கத்துக்கு எதிர்.
நம்ம ஈகோ ஒரு அல்பம். எதையெடுத்தாலும் லாஜிக் பார்க்கும். லாஜிக் பார்த்துதானே ஓட்டுப்போடறாய்ங்க. பின்ன ஏன் நம்ம ஆட்சியாளர்கள் எல்லாம் இப்படி இழவெடுக்கிறாய்ங்க.
முரண்பாடுகளின் மொத்த உருவம் அவள் .
ஒத்திசைவுகளின் பிறப்பிடமும் அவளே
Sunday, March 27, 2011
மனிதர்களை தேடி வரும் நிகழ்வுகள்
"போதுமென்ற மனமே பொன்செய் மருந்து". "இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு ஆசை படாதே", "ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்", பருகெடுதூ பாலு தாகடம் கன்னா கூர்ச்சுனி நீள்ளு தாகடம் மேலு ( ஓடிக்கிட்டே பால் குடிக்கிறத விட உட்கார்ந்துக்கிட்டு தண்ணி குடிக்கிறது மேலுனு அர்த்தம்) (டாஸ் மாக் சரக்கு இல்லிங்கண்ணா)
இதெல்லாம் கையாலாகாதவங்க பேச்சாயிருச்சு. சாமியாருங்க கூட அத்தனைக்கும் ஆசைப்படுனு சொல்ற காலமாகிப்போச்சு.
"ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்"னு புத்தர் என்ன டாஸ்மாக் கடைல போதையிலயா சொன்னார்.போதிமரத்து கீழே ஞானம் பெற்றுச்சொன்னார். உன் ஆசையே உன் துன்பங்களுக்கு காரணம்னு சொல்லலே. உன் ஆசையா என் ஆசையானு ஸ்பெஷலைஸ் பண்ணாம மொட்டையா உலக துன்பங்களுக்குன்னு ஆரம்பிக்கிறார்.
இதுல தான் சூட்சுமமிருக்கு. எவன் ஆசைப்பட்டாலும் அந்த ஆசை காத்துல வைரஸ் பரவின மாதிரி பரவுது.எவனாச்சும் நாலணா தலைவன் செத்தா ஜங்சன்ல லாரி டயரை கொளுத்திவிட்டா அட்மாஸ்ஃபியர் பாழாகற மாதிரி எவனுடைய மனசுல ஆசைங்கற பொறி விழுந்து அது கருக ஆரம்பிச்சாலும் நூஸ்ஃபியர் பாழாகுது. ( மனிதர்களின் எண்ணங்களால் உருவாகிற சூழல்)
இயற்கையை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா எவனும் எதுக்கும் ஆசைப்படமாட்டான். இயற்கைக்குன்னு ஒரு அஜெண்டா ( நிகழ்ச்சி நிரல்) இருக்கு. அதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அதை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது.
உயிரில்லாத பொருட்கள்(அப்படினு நாமதான் நினைக்கிறோம்) முழுசாவும், ,ஐந்தறிவுள்ள பிராணிகள் ஓரளவுக்கும் எப்படியோ அந்த அஜெண்டாவை புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ப நடந்துக்குதுங்க. இயற்கையோட நிகழ்ச்சி நிரலுக்கு முழு திருப்தியோட ஒத்துழைப்ப கொடுக்குதுங்க.
இந்த விதிப்படி பார்த்தா நாமெல்லாம் மண்ணாந்தைங்க.Read More

horo,
insidents,
search,
waves,
Young people
Saturday, March 26, 2011
குரு+குண்டலி :3 « Anubavajothidam.com
அண்ணே வணக்கம்ணே !
உங்கள் ஆன்மீக குரு என்ற பதிவை ஆரம்பிச்சு பாதியில விட்டு இடையில ராசிச்சக்கரம் வெர்சஸ் பிறவிச்சக்கரம்னு ஒரு பதிவை போட்டு தொலைச்சேன். இது போதாதுன்னு இன்னைக்கு குண்டலி விழித்தால்னு ஒரு பதிவு வேற.
மேலும் தொடர்ந்து படிக்க

Friday, March 25, 2011
ராசிச்சக்கரம் Vs பிறவிச்சக்கரம்
ராசி சக்கரத்துல 12 ராசிகளை கவனிச்சிருப்பிக. ஒன்னொன்னுத்துக்கு ஒரொரு சிம்பல் கொடுத்திருப்பாக.( இந்த சிம்பல்ஸை சூட்சும புத்தியோட பார்த்தாலே அந்த ராசிக்காரக சரித்திரத்தையே சொல்லிரலாம்) தங்களோட ராசிகளை தெரிஞ்சுக்கிட்டு கிளி ஜோசியர்கிட்டேருந்து இன்டர் நெட் வரை ராசிபலனை தெரிஞ்சிக்க தவிக்காத ஜன்மமே கிடயாது. இங்கே நான் சொல்லப்போறது ராசிபலனில்லே. பிறப்பின் ரகசியம். மறு பிறவிகளின் இருண்மையை. ஸ்ருஷ்டியின் ரகசியத்தை.மேலும் படிக்க
Thursday, March 24, 2011
ஆன்மீக குரு +பிறவிகள் : 2
"ஜடி வானை குரிசானு மீலோ காசிந்த மானவத்வான்னி மொலக்கெத்திஞ்ச லேக போயானு"ன்னுட்டு தெலுங்குல கவிதை எழுதின பார்ட்டி நானு,
பொருள்:
அடை மழையென பொழிந்தேன். உங்களில் கொஞ்சமே கொஞ்சம் மனிதத்தை முளைவிட செய்ய முடியாமல் போனது
ஆனால் பாருங்க. இன்னைக்கு இத்தீனி பேரு படிக்கிறிங்க.. ரோசிக்கிறிங்க. நன்றி பாஸ். ஒகே மேட்டருக்கு வந்துருவம்.
குருவை பத்தி ஓரளவு விளக்கியாச்சு. முற் பிறவியை கண்டுக்க ஒரு குன்ஸ் கொடுத்திருந்தேன்.( சனியை பின் ராசிக்கு நகர்த்தி பார்க்கிறது - அதே சனியை முன் நோக்கி நகர்த்தி பாருங்க இது உங்க அடுத்த பிறவியை பற்றி ஒரு ஐடியாவ தரும்னு சொல்லியிருந்தேன் ) மேலும் தொடர்ந்து படிக்க

Wednesday, March 23, 2011
உங்கள் குருவும் - முற்பிறவி ரகசியங்களும்
நம்ம ஜாதகப்படி நமக்கு குருவா வரக்கூடியவர் யாரா இருக்கக்கூடும்னு முன் கூட்டியே தெரிஞ்சுவச்சுக்கிட்டா எவ்ளோ நல்லாருக்கும். பாடாவதி பத்திரிக்கைகள்ள ஸ்பான்சர்ட் ஃபீச்சர்ஸை பார்த்து விளம்பரங்களை பார்த்து கல்கி கிட்டே போய் போதை ஊசி, நித்யானந்தா கிட்டே போய் "பலான ஆராய்ச்சி"க்கு உதவினு அல்லாடாம அசால்ட்டா ஆன்மீக கடல்ல குதிச்சுரலாமே.
நேத்து மரணம் என் ஆசான்ங்கற பதிவுல இந்த டீட்டெயிலை நாளைக்கு தரேனு சொல்லியிருந்தேன். அதுக்காகத்தேன் இந்த பதிவு.Read More

Tuesday, March 22, 2011
மரணம் என் ஆசான்
ஜாதகசக்கரத்துல ஒன்பதாவது இடம் அப்பவை மட்டுமில்லை. குருவை கூட காட்டுது. ஐ மீன் எப்படி ஃபிகரை கரெக்ட் பண்றதுனு கத்துக்கொடுத்த குருவை இல்லிங்கண்ணா. குருவை ஆசான் என்றும் சொல்றோம். ஆசான் என்ற இந்தி வார்த்தைக்கு ஈசினு அர்த்தம். கடினமான மேட்டரை எளிமையாக்கி தர்ரவுகளை ஆசான் என்று சொல்வது பொருத்தம் தானே. Read More
Monday, March 21, 2011
நவகிரகங்களிலிருந்து விடுதலை
விடுதலைன்னதும் ஞா வர்ரது நம்ம பாரதியாரும் -பெரியாரும்தான். பாரதியார் விதேசி அடிமைத்தனத்துலருந்து நாட்டு விடுதலைக்காக பாடினார். பெரியார் சுதேசி அடிமைத்தனத்துலருந்து பெரும்பான்மை மக்களோட விடுதலைக்காக பாட்டா பாடினாரு.
நம்ம பங்குக்கு இந்த விடுதலை கோஷத்தை எடுத்தாச்சு. இத்தினீ நாளு மன்சங்க எல்லாம் ஃபுட் பால் மாரி. நவ கிரகம் எல்லாம் ஃபுட் பால் ப்ளேயர் மாரி. அதுக எப்படி உதைச்சா அந்த பக்கம் போயி உழ வேண்டித்தானு சொல்லிக்கினு இர்ந்த முருகேசு கபால்னு இப்படி ஒரு பதிவை போடறாருன்னு கும் மாயிட்டிங்களா? மேலும் தொடர்ந்து படிக்க
Sunday, March 20, 2011
அனைவருக்கும் தனயோகம்
ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் . ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.
எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.Read More

Saturday, March 19, 2011
திமுக தேர்தல் அறிக்கை : ஒரு ஜோதிட ஆய்வு
அண்ணே வணக்கம்ணே,
நமக்கும் கலைஞருக்கும் வாய்க்கா தகராறு எதுவும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா அவரோட எமர்ஜென்சி எதிர்ப்பு, ஒரு காலத்து ஈழத்தமிழர் ஆதரவு நிலை மேட்டர்ல ஹீரோ ஒர்ஷிப்பே உண்டு.
அம்மா மேல நமக்கேதும் அன்பு,பண்பு,பாசம்லாம் கிடையாது . இன்னம் சொல்லப்போனா அவிக குழந்தைதனத்து மேல கடுப்பே உண்டு. Read More

Friday, March 18, 2011
உங்கள் ராசிப்படி உங்கள் மைனஸ் பாய்ண்ட்
"உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"னு கண்ணதாசன் எழுதி வச்சாரு. ஆனால் அவர் மட்டும் தன்னை அறிஞ்சுக்காமயே கடேசி காலத்துல அவாளோட ஊதுகுழலா மாறி போய் சேர்ந்துட்டாரு. நம்மை அறியறதுன்னா என்ன? நம்ம மைனஸ் பாய்ண்ட் என்ன? ப்ளஸ் பாய்ண்ட் என்ன? இந்த ரெண்டு டேட்டா இருந்தா மோதலாம்.
உலகம் எப்படின்னா உங்களுக்கு முன்னே உங்க மைனஸ் பாய்ண்ட் என்னனு கேட்ச் பண்ணி ஆப்பு வச்சிருது. உங்க ப்ளஸ் பாய்ண்ட் என்னன்னு அவிகளுக்கும் தெரியமாட்டேங்குது.. உங்களுக்கும் தெரியமாட்டேங்குது.Read More

Thursday, March 17, 2011
2012 பிப்.8 முதல் 24 வ. இலங்கையில் தமிழர் ஆட்சி?
1948+64 வருடங்கள் முடிந்தால் இலங்கையில் அதுவரை அடிமைப்பட்டு கிடந்தவர்கள் அதை ஆளும் வாய்ப்பை பெறலாம் என்பது என் ப்ரிலிமினரி ப்ரிடிக்சன். திடீர்னு என்ன இந்த மேட்டர்ல அக்கறைனு கேப்பிக.
என்னதான் இன்னொரு மானிலத்துல பிறந்து -அங்கனயே வளர்ந்தாலும் இனம் -மொழி இதெல்லாம் தமிழ் தானே. என்னதான் விட்டேத்தியா சோசியத்தை பத்தி பீசிக்கிட்டிருந்தாலும் உள்ளூற ஒரு ஃபீலிங் இருக்குங்கண்ணா.
இதுல வேற ஆரோ ஒரு சோசியர் 2011க்குள்ள இலங்கை அழியும்னு சொன்னதா தகவல்.இந்த கான்செப்ட்ல பதிவுலகத்துல நிறைய கச முசா நடக்கிறதை கேள்விப்பட்டு சரி நம்ம பங்குங்கு நாமும் கொஞ்சம் போல குழப்பி வைப்போமேன்னு தான் இந்த பதிவு. இன்னொரு நண்பர் ஏற்கெனவே இந்த சப்ஜெக்டுக்கு கர்சீஃப் போட்டு வச்சிருக்காரு.அவருக்காகவும் தான் இந்த பதிவு.
Wednesday, March 16, 2011
நவீன பரிகாரங்களுக்கு அடிப்படை
ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு சம்பிரதாய பரிகாரங்களின் மூலம் குறித்து கூறி இறுதியாக நவீன பரிகாரங்களின் அடிப்படையை விளக்குகிறேன்.
ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார். Read More
Tuesday, March 15, 2011
கேள்வியை தேடும் பதில்கள்
கேள்வியை தேடும் பதில்கள்
அண்ணே ,வணக்கம்ணே.
பதிவோட தலைப்பை பார்த்துட்டு நம்ம எதிர்கால முதல்வர் ஜெயலலிதா அம்மா சினி ஃபீல்டுல வாய்தா போயி கெடந்த நாள்ள எடுத்த " நதியை தேடி வந்த கடல் " மாதிரி டிஃபரண்டா கீதுபான்னு நினைக்கிறிங்கோ . அப்டித்தானே.
சமுத்திரம் மாதிரி ஸ்தூலமான மேட்டர்லாம் ரூட் மார்ரது கஸ்டம். ஆனால் கேள்வி பதில் எல்லாம் சூட்சுமமான மேட்டரு டிஃபரண்டா சொன்னா அரசியல் வாதி மாதிரி அதனோட நேச்சர், ரூட்டுல்லாம் எப்டி வேணா மாறும். மேலும் படிக்க

Monday, March 14, 2011
சோனியாவுக்கு ராகுல் ஜாதகமும் ஆப்பு
பீகார் மேட்டர்லயே ராகுல் டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இருந்தாலும் அதை ஜோதிட ரீதியாவும் உறுதிப்படுத்திக்கனுங்கற எண்ணத்துல தான் இந்த பதிவே . ஐயாவுது மிதுன லக்னம்,விருச்சிக ராசி. ஜாதகத்தை தூக்கி பக்கத்துல வைங்க. தாளி விருச்சிக ராசிங்கறதே அரசியலுக்கு ஒரு டி க்வாலிஃபிகேஷன் தேன். மக்கள் ஆதரவு பெறனும்னா சந்திர பலம் ரெம்ப முக்கியம். விருச்சிகத்துல தான் சந்திரன் நீசமாகறாரே. அப்பாறம் எங்கே சப்போர்ட்டு ? Read More
Sunday, March 13, 2011
சோனியா ஆட்டம் க்ளோஸ்
சோனியாவின் ஆட்டம் க்ளோஸ்!
வணக்கம்ணே.காங்கிரஸ் பீகார் தேர்தல்ல பல்பு வாங்கறதுக்கு முந்தியே ஆங்கிலம் தெலுங்கு தமிழ்னு மும்மொழில பதிவு போட்டுஅபாயச்சங்கு ஊதின பார்ட்டி நானு.இத்தனைக்கும் அப்ப ஜஸ்ட் நியூமராலஜிப்படியான ஆய்வுத்தேன்.
இப்ப நம்ம டவுசர் பாண்டி தகவலால அம்மாவோட முழு ஜாதகத்தை கண் முன்னாடி வச்சுக்கிட்டு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். ஆரோ ஒரு ஜோதிடத்திலகம் அம்மாவ ஆதி சக்தி ரேஞ்சுக்கு சொன்னதா ஒரு தகவல். (கமெண்ட்ல பாருங்க)
அம்மாவோட ஜாதக விவரம்: கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது ரிசபராசிங்க. லக்னாதிபதி உச்சம் - அக்காங் நம்ம கலைஞர் தாத்தா ஜாதகத்துல உள்ள அதே அம்சம்தேன். இங்கன ராகு சேர்ந்து தொலைச்சுட்டாரு.
லக்ன சனி:
இந்த அமைப்பு இளமையில் முதுமையை தரும். ஜாதகருக்கு மட்டுமில்லிங்கண்ணா ஜாதகரோட வாழ்க்கைத்துணைக்கும் முதுமைதேன் பரிசு. மேலும் கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளையும் தரும். ஒரு லேபரை கணவராக்கும் (ராஜீவ் காந்தி அந்த சமயம் ஏதோ ப்ரிக் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருனு ஞா)
இதுமட்டுமில்லிங்கண்ணா சீக்கிரமே வா.து யோட கதையை முடிச்சுரும். சனி பிதுர்களுக்கும்,ப்ரேதாத்மக்களுக்கும் காரகர். அதனால ஆ.காரர் சீக்கிரம் ப்ரேதாத்மா ஆயிரவும் வாய்ப்பிருக்கு. சனி கரும காரகன். அதாவது ஏழேழு தலைமுறைக்கு மிந்தி செய்த பாவம்,புண்ணியத்துக்கெல்லாம் கூட கூலி கொடுத்துருவாராம்ல.
இவருக்கு இவிக ஜாதகத்துல சப்தமாதபத்யமும் ,அஷ்டமாதிபத்யமும் ( கணவர் - சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் காட்டுமிடம் இது) கிடைச்சது. கணவர் கதை முற்றும்ங்கறதால இந்த சனி மேற்படி சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் வாட்டி வதக்குதோனு ஒரு சம்சயம். உ.ம் ஒய்.எஸ்.ஆர். வீல் சேர்ல கலைஞர்.
இவர் 3 ஐபார்க்கிறதால சகோதரத்துக்கும் பாதிப்புத்தேன் ( ஸ்பெக்ட்ரம் ஜில அவிகளையும் விஜாரிப்பாய்ங்களாமே) ஆனால் இவரு செமை தகிரியத்தையும் கொடுப்பாருங்கோ. ( சவுண்ட் பாக்ஸு அடி வாங்கவும் வாய்ப்பிருக்கு) ஏழை பார்த்த கதை (வதை) ஆல்ரெடி ஓடிருச்சு. பத்தை வேற பார்க்கிறாருங்கோ.
இதனால சட்டையில்லாதவன் ,கிழிஞ்ச சட்டை போட்டவன், லேபர், பிச்சைக்காரி பணம் கூட அம்மாவுக்கு வந்து சேர வாய்ப்பிருக்கு. ( மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டர் தெரியும்ல)
மரணம் -மரணம் தொடர்பான சொத்து ,சுகங்களுக்கெல்லாம் சனிதேன் இன் சார்ஜு. எட்டாமிடம் காரகம். அம்மாவுக்கு இன்னைக்குள்ள " வானளாவிய அதிகாரம்" உயில் மூலமாவும் /வாரிசு அடிப்படையிலயும் வந்ததுதேன்.
சந்திரன் உச்சம் தேன். (மனோகாரகன்) ஆனால் ராகு கூட சேர்ந்தாரே. இதனாலதான் கடல் தாண்டியும் "விவகாரங்கள்" நடத்தின மாதிரி கீது. ராசி ரிஷபங்கறதால அம்மாவுக்கும் தாத்தாபோல பணம்,குடும்பம்னா உசுரு.
அதுலயும் ஒரு லொள்ளை பாருங்க சர லக்னத்துக்கு லாபஸ்தானம்தேன் பாதகஸ்தானம் லக்னாதிபதியே இங்கன மாட்னாரு.உபரியா ராகுவோட சேர்க்கை. அம்மாவுக்கு " நெல்ல மனசுங்கோ".
ரெண்டுக்குடையோனும் ஆறுக்குடையோனும் சேர்ந்ததால குடும்ப கலகம் ( மேனகா காந்தி எபிசோட் தெரியும்ல) மேற்படி ரெண்டுக்குடையோன்( தன பாவாதிபதி) தூர தேசங்களை காட்டும் 9 ஆமிடத்தோனான குருவோட சேர்ந்தாருங்கோ. இதனாலதான் ஏதோ நோன்பு அதிரசம் கணக்கா சொந்த பந்தத்துக்கு எதையோ அனுப்பி வச்சுட்டதா சுப்பிரமணியம் ஸ்வாமி உளறி கொட்டறாரோ என்னமோ?
இந்த சேர்க்கை 4 ஆமிடத்துல நடந்தது. 4ங்கறது தாய் வீட்டை காட்டுமுங்கோ ( இத்.........தான மானாங்கறது)
ஏதோ சிறுவாடு பணம் தாய் வீட்டுக்கு போகுது.
அடுத்து பாருங்க 4 ஆமிடத்துக்கு இம்மாம் பில்டப் இருந்தாலும் அங்கன விரயாதிபதி சேர்ந்தாருங்கோ. பிச்சையெடுத்தான் பெருமாளு அத்த பிடுங்குச்சாம் அனுமாரு கணக்கா கைய விரிச்சுருவாய்ங்களோ என்னமோ ?
4ன்னா இதயம்ங்கண்ணா இந்த பாவாதிபதியோட விரயாதிபதி சேர்ந்ததால தான் இதயமே இல்லாம நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு தொட்டிலுக்கு முன்னாடி சவப்பெட்டிகள் தயாரானப்பல்லாம் வேடிக்கை பார்த்தாய்ங்களோ என்னமோ?
அஞ்சாமிடத்தை பாருங்க: எண்ணிக்கைய பார்த்தா ஹவுஸ் ஃபுல்லா தோணும். ஆனால் இங்கன விரயாதிபதியான புதன் ஒக்கார்ந்தாரு. அஞ்சுன்னா புத்தி விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா புள்ளை விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா பேர்புகழ் ,மன அமைதி விரயம்னா தெரியுமில்லை.
இதுமட்டுமில்லிங்கண்ணா மிச்சம் மீதி எதுனா பெட்டர் ரிசல்ட் இருந்தாலும் அதை ஒழிச்சுக்கட்ட இங்கன கேது ஒக்கார்ந்தாரு.
என்னதான் எதிரிகளை பத்தி சதா சிந்திச்சு வாழ்ந்தாலும் ( செவ்) சகோதரங்களை தாங்கி பிடிச்சாலும் ( புதன், செவ்) சுக போக ஆடம்பர வாழ்க்கைய நடத்தினாலும் (சுக்கிரன்) இந்த இடத்துல கேது உட்கார்ந்ததால கடாசில மிஞ்ச ப்போறது விரக்தி.
கேது தர்ர சாய்ஸ் ரெண்டுதேன். ஒன்னு பிச்சை எடுக்கனும் அ சன்னியாசியாகனும். பிச்சையே எடுத்தாலும் கிடைக்கனுமில்லை.
இது பூர்வ புண்ணியத்தை காட்டற இடம் . இங்கன கேது உட்கார்ந்ததால அடி விழ ஆரம்பிச்சா தாளி ஏழேழு ஜன்மத்து பாவமும் ஞா வந்து ஞானத்தை தேட ஆரம்பிச்சுரனும். அப்படிவிழும். மேலும் இது வாரிசை காட்டற இடம் (ராகுல்) இங்கன கேது உட்கார்ந்ததால தான இவருக்கு சதா சர்வ காலம் 180 டிகிரில - ஏழாவது வீட்ல இருந்து பார்வை செய்யும் ராகுவோட பேரே வாரிசுக்கு ஃபிக்ஸ் ஆச்சோ என்னமோ?
5+3 துணிச்சலான முடிவுகள் 10+3 துணிச்சலான செயல்கள் 5+12 : புத்தி யுக்தியெல்லாம் வீணாஆஆஆஆஆ போயிரனும். 5+4 சதா குடும்ப சிந்தனை ( தாய்வீடுங்கோ) 5+11 சதா லாபம் குறித்த ஆவல், 5+ கேது நிராசை,அவமானம்,அவப்பேர், விரக்தி.
இதாங்கண்ணா அம்மாவோட ஜாதக பலன். இப்பம் தசாபுக்தியை பார்ப்போம்.
சனி தசை சனிபுக்தி: ( 06/Sep/2001 => 09/Sep/2004 )
அட்டமாதிபதியான சனியோட சுயபுக்தி யோக பலனை தந்ததுன்னா தசை டப்பாஸுன்னு அர்த்தம்.
சனி தசை புத புக்தி (09/Sep/2004 => 18/May/2007 )
என்ன தான் விரயாதிபதியா இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்துல உட்கார்ந்ததால அதையெல்லாம் எக்ஸாஸ்ட் பண்ணி பலன் கொடுத்தாரு புதன். (ஃபிக்சட் டிப்பாசிட்டை உடைச்சு செலவழிச்ச மாதிரி)
சனி தசை கேது புக்தி (18/May/2007 => 27/Jun/2008 )
இவர் அஞ்சுல ஒக்கார்ந்தாலும் இவருக்கு 180 டிகிரிஸ்ல ஏழாமிடத்துல உள்ள ராகு லக்னாதிபதியோட சேர்ந்த பாவத்துக்கு ஒப்பேத்தினாரு.
சனி தசை சுக்கிர புக்தி (27/Jun/2008 => 27/Aug/2011 )
பாதகாதிபதியோட புக்தி. லக்னாதிபதியே இங்கனதான் ராகுவோட சேர்ந்து உட்கார்ந்தாரு பாதகாதிபதி+சுகஸ்தானாதிபதி+லாபஸ்தானாதிபதியான சுக்கிரனோட கேது சேர்ந்திருக்கிறதால டப்பா டான்ஸ் ஆடப்போறது நிச்சயம்.
இவிக மண வாழ்வை பத்தி ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. (சுக்கிரன்) அதுக்கு காரணம் சுக்கிரனோட கேது சேர்ந்த எஃபெக்ட் தேன். வேணம்னா குரு தசை சுக்கிர புக்தில அம்மாவோட நெலமை எப்படியிருந்ததுன்னு கூகுல்ல தேடிப்பாருங்க (17/Jul/1993 => 16/Mar/1996 ) அதே ரேஞ்சுதேன் இப்ப மறுபடி வரப்போகுது.
இன்னொரு சமாசாரம் பாஸ். சனி தசையில சூரிய புக்தி 27/Aug/2011 அன்று ஆரம்பமாகப்போகுது. இதனோட எஃபெக்ட் ஆறு மாசம் முன்னாடி இருக்கும்னு அனுபவம்.
சூரிய தசையில சனி புக்தியோ ,சனி தசையில சூரிய புக்தியோ வந்தா நாஸ்திதேன். சூரிய குரு சேர்க்கை பத்தி ஸ்லாகிச்சு எழுதியிருந்தேன். ( 2+9) ஆனால் அதே குருவுக்கு ரோகாதிபத்யமும் இருக்குதுங்கோ.வாக்குஸ்தானாதிபதி சத்ரு ரோக ருணஸ்தானாதிபதியோட சேர்ந்தா நம்ம சொற்களே விற்களா மாறி கற்களை மழையா பொழிவிக்குமுங்கோ
சத்தியமே உரைச்சாலும் அது எதிராளிக்கு உரைக்காதுங்கோ . இந்த பீரியட் 08/Aug/2012 வரை நடக்குதுங்கோ. அதனால அடிமேல அடிதேன்.
கோசாரம்:
ராசிய பார்த்தா ரிசபம். 9,10 க்கு அதிபதியான சனி அஞ்சுல. இதனால "சொத்து" சேரும். ஆனால் சனியாப்பட்டவர் அஞ்சுல உட்கார்ந்து பிள்ளைய உருப்படவிடாம செய்யறதோட அவரால ஜாதகரும் உருப்படாம செய்துருவாருங்க. பாவம் ராகுல்.
பொதுவா பார்த்தா ஆகா குரு 11லதானே இருக்காருனு நினைக்கலாம். ஆனால் குரு இவிக ராசிக்கு மரணத்தை தரவேண்டிய அட்டமாதிபதி நைனா.
ராகு கேது:
மே 16 முதல் இவிக ராசில கேதுவும் ( ஜாதகத்துல அஞ்சுல கேது) ஏழுல ராகுவும் வர்ராய்ங்க. இதனோட எஃபெக்ட் 3 மாசம் முன்னாடி ஐ மீன் ஃபிப்ரவரி 16 முதலே ஆரம்பமாயிரும். பலன்: தனிமரமாதல். இருட்டில் இருத்தல் .சூழ்ச்சிக்கு பலியாதல் .
( ஆருப்பா அங்கே விசிலடிக்கிறது...)

Saturday, March 12, 2011
ராத்திரிகள் வந்துவிட்டால்
நீங்க ஏறக்குறைய என் வயசு ஆசாமியா இருந்தா கமல் ரஜினி சேர்ந்து நடிச்ச இளமை ஊஞ்சலாடுகிறது படம் ஒங்களுக்கு கியாபகம் இருக்கும் ( ரஜினி ஸ்டைலுங்கோ).
சரி சின்னவயசா இருந்தாலும் நள்ளிரவு எஃப்.எம்ல கேட்டிருப்பிங்க. - ஏதோ ஒரு பாடாவதி சானல்ல அதுல அந்த படத்துல வர்ர "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்"ங்கற பாட்டை கேட்டிருப்பிங்க/பார்த்திருப்பிங்க.
கரீட்டா .அதே பாட்டுல "ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்"ங்கற வரியை எத்தீனி பேரு கவனிச்சிங்களோ தெரியாது. நான் கவனிச்சிருக்கேன். அந்த வரி தான் இன்னைக்கு லீட்.
அதென்ன ராத்திரிகள் வந்துட்டா சாத்திரங்கள் ஓடிப்போயிருங்கறாய்ங்க. அப்ப சாஸ்திரத்துக்கு ஆஃபா. அல்லது சாஸ்திரம்லாம் ஒரு ஷிப்டுதான் வேலை செய்யனுமா?
பகலுக்கும் ராத்திரிக்கும் என்ன வித்யாசம்?
பகல்ல சூரியனோட வெப்பத்தை கிரகிச்சுக்கிட்ட பூமி அதை மாலை முதல் வெளிவிட ஆரம்பிக்கும். ராத்திரிக்கு குளிர்ந்து போகும் (இதெல்லாம் அந்த காலத்து கணக்குங்கண்ணா. இப்பல்லாம் பால்காரன் ராத்திரி ஞாபகத்துல ஹாரனை அமுக்கிற நேரம்தான் குளிருது. எல்லாம் பொல்யூஷன்.
பகல்ல சூரியனோட ஆட்சி. இவர் ஆத்ம காரகர். சுயம் அ செல்ஃப் என்ற தன்னுணர்வுக்கு காரகர். அறிவு பூர்வமா ரோசிக்க வைப்பாரு.
ஒரு மாசத்துக்கு ஒரே ராசில சஞ்சரிக்க கூடியவர் (ஸ்திரம்) வருஷத்துல ஆடிமாசத்துல கடகத்துலயும், புரட்டாசி மாசத்துல துலாலயும் கொஞ்சம்போல தள்ளாடுவார் . எங்கயாச்சும் ராகு கேது கூட லிங்க் ஆனா, சனியோட லிங்க் ஆனா கொஞ்சம் போல தடுமாறுவார்.
மற்றபடி பர்ஃபெக்ட் ஜென்டில் மேன். இந்த சந்திரன் கீறாரு பாருங்க. லொள்ளு பிடிச்ச ஆசாமி. அரசியல் வாதி மாதிரி ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிப்புடுவாரு. மாசத்துல பாதி நா வளர்ச்சி,பாதி நாளு தளர்ச்சி.
இப்படியா கொத்த பார்ட்டியோட ஆட்சி ராத்திரில நடக்குது. மேலும் இவர் மனோகாரகர். முகம் விகாரமாயிருச்சுன்னா ஒரு வாரம் அட்மிட் ஆகி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கினு வெளிய வந்துரலாம். தாளி மனசு விகாரமாயிருச்சுன்னு வைங்க.. மாசக்கணக்குல கவுன்சிலிங் , அது இதுன்னு மன்னாடனும்.Read More
Friday, March 11, 2011
தனபாவம் Vs ஆயுள் பாவம் « Anubavajothidam.com
ஜாதகத்துல லக்னத்துக்கு ரெண்டாமிடத்தை தனபாவம்ங்கறாய்ங்க. எட்டாமிடத்தை ஆயுள் பாவங்கறாய்ங்க.
ரெண்டு வாயை காட்டுது எட்டு மர்மஸ்தானத்தை காட்டுது. ரெண்டு குடும்பத்தை காட்டுது எட்டு தீர்க்க முடியாத கடனை காட்டுது. ரெண்டு பேச்சை காட்டுது எட்டு கொலை,கொலை முயற்சி, சிறைப்படல் தற்கொலை,விபத்து இத்யாதியகாட்டுது.
எல்லா கிரகங்களுக்கும் 7 ஆமிடத்தை பார்க்கிற சக்தி உண்டு. ( அதாவது தன் அதிர்வுகளை செலுத்துதல்). ரெண்டுக்கு ஏழாமிடம்னா அது எட்டாமிடம். எட்டுக்கு ஏழாமிடம்னா அது ரெண்டாமிடம்.இப்ப லிங்க் புரியுதா? இல்லியா சரி மொதல்ல .....
தனபாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு:
தனபாவத்துல சுபகிரகம் இருந்தா ஜாதகருக்கு லீகலா, ப்ளஸ் மோரல் வேல்யூஸோட தன சேர்க்கை ஏற்படும். இவர் லக்னத்துக்கு எட்டை பார்த்தாலும் ஏதோ மருந்து மாயத்துல குணமாயிர்ர நோயா வரும். ஒரு வேளை பாபகிரகம் இருந்ததுனு வைங்க. இல்லீகலா இம்மாரல் வேஸ்ல பணம் வந்து கொட்டும். ஆனா அதே கிரகம் எட்டையும் பார்க்கிறதால பாப கிரகத்தோட காரகத்வத்துல உள்ள நோய்கள் வரும். பில்லு எகிறும், சனி செவ் சம்பந்தப்பட்டிருந்தா அறுவை சிகிச்சை ,அங்க ஹீனம் கூட ஏற்படலாம். இதான் தன பாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு.Read More
கிரக தோஷங்கள்: கொடுத்தா போகும்.. வாங்கினா கூடும்
கிரகதோஷம்னா குறிப்பிட்ட கிரகம் வீக்கா இருக்குனு அர்த்தம். கிரகம் வீக்கா இருந்தா அதனோட காரகத்வத்துல எல்லாம் நமக்கு நஷ்டம் வரும்.
இதை தவிர்க்க நாம அந்த பேட்டையிலயே என்டர் ஆகக்கூடாது. விவரம் தெரியாம ஆல்ரெடி அந்த ஃபீல்டுல மாட்டிக்கிட்டிங்க. வெளிய வந்துதானே ஆகனும்.
அப்ப அந்த ஃபீல்டுல எதிர்படக்கூடிய நஷ்டத்தை குறைக்க /அவாய்ட் பண்ண குறிப்பிட்ட கிரக காரகத்வம் கொண்ட பொருளை பிறருக்கு கொடுக்கனும். ( அல்லாத்தையும் எங்களுக்கே கொடுன்னு அவாள் சொல்வா. அதை நம்பாதிங்க)
எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரக காரகத்வம் கொண்ட குலத்தினருக்கு, தொழிலினருக்கு கொடுக்கலாம். ஸ்பீட் போஸ்ட் கணக்கா கிரகத்துக்கு மெசேஜ் போயிரும். வேலை நடக்கும். நான் கியாரண்டி. உதாரணமா சனி வீக்குன்னா தலித்துக்கு தரலாம், புதன் வீக்குன்னா ஒரு வைசியருக்கு தரலாம்.
சனி சரியில்லைன்னா ஐரன் ஸ்டில் ஆயில் தரலாம். புதன் சரியில்லின்னா ஸ்டேஷ்னரி,புக்ஸ்,பென் ட்ரைவ், கார்ட் ரீடர் தரலாம். Read More
Wednesday, March 9, 2011
முக ராசிங்கறது நெஜம்தானா? « Anubavajothidam.com
அகத்தின் அழகு முகத்தில் தெரியுங்கறாய்ங்க. "எம்.ஜி.ஆர் முகம் காட்டினால் ஆயிரம் ஓட்டுக்கள்"னு அண்ணாவே சொன்னாரு. தளபதின்னு அல்லாரும் தலையில தூக்கி வச்சு கொண்டாடற விஜயை பார்த்தா எனக்கு கடுக்கும்.
(மேட்டர் என்னடானா பார்க்க பையன் மாதிரியும் இருக்காது - ஆம்பளை மாதிரியும் இருக்காது -இதுவாச்சும் பரவால்ல பிரசாந்து பிரசாந்துன்னு ஒரு ஆக்டரு அவர் மூஞ்சி ஆம்பள மாதிரியும் இருக்காது பொம்பள மாதிரியும் இருக்காது.)
மேஷாதி மீனம் வரை 12 ராசியும் தெரியும் அதின்னாபா அது மொகராசின்னு நானும் நிறைய குழம்பியிருக்கேன்.
ஜாதகத்துல லக்னம் தேன் முகத்தை காட்டுது. அங்கன சுபகிரகம் சுபபலமா இருந்தா மொகம் அழகா இருக்கும். ( அரவிந்த் ஸ்வாமிய லேட்டஸ்டா பார்த்தியளா? அன்னைக்கு அழகா வச்சது எது இன்னைக்கு இப்படி ஆக்கினது எது?)
(லக்னத்துல சுபகிரகம் இருந்து) அழகா இருக்கிறவன்லாம் நல்லவனா? அதிர்ஷ்ட சாலியா? அப்படித்தேன் சாமுத்ரிகா லட்சணம் சொல்லுது. ப்ராக்டிக்கலா பார்க்கும்போது எவன் ஜாதகத்துலயும் எந்த கிரகமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்கிறதே கிடையாது. தேய்மானம், சேதாரம் ,செய்கூலி எல்லாம் போயி 60% நின்னா கிரேட்.அதுக்கே சனம் இந்த ஆட்டம் போட்டுருது. Read More..
Tuesday, March 8, 2011
விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும் !
அண்ணே வணக்கம்ணே,
2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற திகீர் கணிப்பை தரத்தான் இந்த பதிவை போடறேன்.ஏன் எதுக்கு எப்படினு நான் பண்ணப்போற ஆராய்ச்சில உங்கள்ள பாதி பேர் சோசியர்களாகவே மாறிடப்போறிங்க. விஷ் யு ஆல் தி பெஸ்ட்.
நேற்றைய சந்திராஷ்டமம் பற்றிய பதிவை 945 பேர் படிச்சிருக்கிங்க. நன்றி. ஜோதிஷ சாஸ்திரத்துல சந்திராஷ்டமம்லாம் ஜுஜுபி. பலான பலான மேட்டர் எல்லாம் எடுத்து விட்டா கஸ்டடில எடுத்து விஜாரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.
நமக்கு புகைப்பழக்கம் வேற இருக்கா..தூக்கி உள்ளாற வச்சுட்டு கை.எ போட்டா தான் சிகரட்டுன்னா படக்குனு கை.எ போட்டுத்தொலைச்சுருவமோன்னு தான் அடக்கி வாசிக்கிறேன். ஆனாலும் அதுக்காக நம்ம மம்மிய ஐ மீன் பாரத மாதாவை டீல்ல விட்டுர முடியாதே.
அதனாலதான் இந்த திகீர் பதிவு. தூக்கி உள்ள போட்டுட்டா ஏட்டுக்கு கையூட்டு கொடுத்து ஒரு கட்டு பூபால் பீடி மட்டும் அனுப்பி வச்சுட்டா போதும். (எத்தீனி பேரு ரெடி ..கைய தூக்குங்குண்ணா)
இதுக்கு ரெடியா இல்லாதவுகளும் சேர்த்து பதிவை தொடர்ந்து படிக்க இங்கன அழுத்துங்கண்ணா
Monday, March 7, 2011
உயிரையும் பறிக்கும் சந்திராஷ்டமம்
உங்க ராசிக்கு சந்திரன் எட்டுல சஞ்சரிக்கிற ரெண்டே கால் நாளைத்தான் சந்திராஷ்டமம்னு சொல்றாய்ங்க. சந்திரன் எட்டில் (அஷ்டமம்) இருத்தலே சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம்னா எல்லாருக்குமே உள்ளூற டர்ருதேன். ஒரு சிலருக்கு பல்பு வாங்கிய அனுபவமும் இருக்கலாம்.
என்ன ஏதுன்னு தெரியாட்டாலும் "அட விடுப்பா இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்"னு கழண்டுக்கறவுக நெம்பர் சாஸ்தியாயிருச்சு.
அவிக பயப்படறதுலயும் லாஜிக் இருக்கு. சந்திரன் மனோகாரகன். இவர் நல்ல இடத்துல இருந்தா கையில கால் காசு இல்லின்னாலு மனசுல ஒரு மிதப்பு இருக்கும். இவரே அஷ்டமத்துக்கு போயிட்டா ?
சூசைட் டெண்டன்சி உள்ளவன் தற்கொலையே கூட பண்ணிக்கிடலாம். தண்ணீர் டாங்கர்ல அடிபட்டு சாகலாம். ( சந்திரன் -ஜல காரகன்) . ஏற்கெனவே நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை உள்ளவுகளுக்கு இந்த தினங்கள்ள மேல கீழே ஆயிரலாம்.
அட ஒரு போர் போட்டு தண்ணி வரலின்னா வட்டம் தானே. குழாயடி சண்டையில எத்தனை பேருக்கு மண்டை உடைஞ்சிருக்கு -கொலை நடந்திருக்கு.
இப்படியா கொத்த சந்திரன் 8 லருந்தா மட்டும் தான் ஆபத்தா? ஆறுல இருக்கலாமா? ( சந்திரன் ஆறுல இருக்கறச்ச தமிழ் சினிமா ஹீரோ மாதிரி மனசாட்சி கிட்டேல்லாம் பேசவேண்டி வந்துரும் )
12ல இருந்தா பரவால்லையா? 7ல இருந்தா பரவால்லியா? பத்துல இருந்தா பரவால்லியா?
சந்திரனோட முக்கிய காரகங்கள் :இன்ஸ்டெபிலிட்டி, அன் செர்ட்டினிட்டி, எதிர்பாரா தன்மை, நகர்வு, தண்ணீர், மனம் ,நுரையீரல்,சிறு நீரகம். சந்திரன் மரணத்தை காட்டும் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் போது இவை பாதிக்கப்பட்டால் என்ன கதி?
பதிவை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க
Thursday, March 3, 2011
பங்காரு அடிகளார் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு?
பாவம் பங்காரு அடிகளார் ஊருக்கெல்லாம் அருள் வாக்கு சொல்ல அவருக்கு நாம அருள் வாக்கு சொல்ற மாதிரி ஆயிருச்சு. அவரோட 71 ஆவது பிறந்த நாளை பத்தி சில வரிகள் சொல்லிட்டு அப்பாறம் நீதிமன்ற அவமதிப்பு மேட்டருக்கு போகலாம். ( ஆக்கப்பொறுத்தவுக ஆற பொறுக்கனுமப்பு).
இவரோட பிறந்த தேதி 3/3/1941. எண் கணிதப்படி பிறப்பு எண்/உயிர் எண்ணும் 3 . கூட்டு எண்/ஸ்தூல எண்ணும் 3.இதுக்கு அதிபதி குரு. இப்ப 71 ஆவது வருஷத்துல அடியெடுத்து வச்சிருக்காரு. 7+1 என்றால் 8 . இதுக்கு அதிபதி சனி.
குரு சனி சேர்ந்தா குரு சண்டாள யோகம். குருன்னா கோர்ட்டு .சனின்னா பிரச்சினை. பாவம் பிறந்த நாள் விளம்பரத்துலயே இம்சை ஸ்டார்ட்.
வீ.இளங்கோ என்ற பாடலாசிரியர் ( இவரை உங்கள்ள ஆருக்குனா தெரியுங்களாண்ணா- ஒரு வேளை மேல்மருவத்தூர் சீரியல்/லோ பட்ஜெட் படத்துக்கு எழுதினவரோ?) அடிகளார் பிறந்த நாளைக்கு மாலை மலர்ல ஒரு விளம்பரம் கொடுத்திருக்காரு படத்தை பாருங்க.
மத்த பாயிண்டெல்லாம் "ஏதோ பிசினஸ் டல்லாயிருச்சு .. கேன்வாஸ் பண்றாய்ங்கனு வச்சிக்கலாம்" ஆனால் நான் ரவுண்ட் பண்ண வரிய பாருங்க..
நீதிபதிகள் உன்னை நாடிய பின் நீதியரசர்கள். அடங்கொய்யால. நீதிபதிகளை ஆரு நியமிக்கிறாய்ங்கனு கூட தெரியலை.விளம்பரம் கொடுத்த பார்ட்டி BE LLB படிச்சிருக்கு.
பாவம் நம்ம ராசாவுக்கு மேட்டர் தெரியாது போல. தெரிஞ்சிருந்தா அடிகளாரை நாடி நீதியரசராயிருப்பாரோ என்னமோ? அ நியாயத்துக்கு திஹார் ஜெயில்ல பப்பு யாதவ் அறை கிடைக்குமான்னு ஜொள்ளு விட்டுக்கினு கீறாரு.
என்னதான் விளம்பரம்னாலும் எந்த பிதற்றலையும் போட்டுர்ரதா ? இந்த பதிவு வேலையில்லாத ஒரு லாயர் கண்ணுல விழுந்து ஒரு மனுவை தட்டிவிட்டா அடிகளார் மேல நீதிமன்ற அவமதிப்பு கேஸ் பாயாதோ?
அட ..எப்படியும் நம்ம ஜாதகத்துல குரு உச்சம். தப்பித்தவறி ஆராச்சும் நீதிபதியோட மகன்/பேரன் ஆராச்சும் பார்த்து போட்டு கொடுத்துட்டா ஆப்புதான் மாப்பேய்..
Wednesday, March 2, 2011
ராத்திரி நேரத்து கலாச்சாரம் ..
புத்தரும் இதையே தான் சொன்னார் .நீங்கள் யார் என்று கேட்டபோது ...நான் அனாத்மா.அதாவது நான் என்று எதுவுமில்லை.அதாவது ஆத்மா என்று கூட எதுவுமில்லை.
சிவராத்திரி என்பது இந்து மதம் மட்டும் கொண்டாடும் விழாவாக உள்ளது .இது சரியானது அல்ல .
மதத்துக்கு இங்கு வேலையே இல்லை .
சிந்து சமவெளியை ஒட்டி தோன்றிய கலாசாரம்தான் இந்திய கலாசாரம்.
இந்திய தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.
உண்மையில் இந்திய கலாசாரத்தில் உள்ள அனைவரும் தன் விழிப்புணர்வை மேம்படுத்தி கொள்ள இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பு.
நீங்கள் மண்ணுக்கு அடையாளம் கொடுக்கலாம் .வரையறை செய்யலாம். (நிலம் ,தேசம் ,என் வீடு ,என் உடல் )
மண்(உடல் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் விலங்கு.
வெறும் நீர் (மனம் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..மனிதன் .
காற்றின் அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..லட்சிய வாதி , ..சாதனையாளன்,விஞ்ஞானி...etc
நெருப்பின் அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர்... விஜயகாந்த் :)) [பொதுநல வாதி,தியாகி]
ஆகாயத்தை அடையாளமாக கொண்டு வாழமுடியாது ..ஆகாயத்தை அடிமை படுத்த முடியாது ...
வேண்டுமானால் தன்னை ஆகாயத்தோடு (ஆதாயத்தோடு அல்ல :) ..அடையாள படுத்தி கொள்பவனை யோகி எனலாம்.
எல்லோருக்கும் ஒரே ஆகாயம் தான் ....
இந்த பிரபஞ்சத்தில் நெறைய சூரியன் இருக்கலாம் ....பூமி போல நெறைய உயிர் வாழும் கிரகங்கள் இருக்கலாம் ...
ஆனால் ஒரே ஆகாயம் தான் ...இதை ஒன்று என்று கூட சொல்ல முடியாது .மற்ற ஒன்று இருந்தால் தான் ஒன்று என்று வேறு படுத்த கூட முடியும் .
இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் .கடவுள் ஒரு குறிபிட்டவர்களுக்கு (மதம் ) மட்டும் சொந்தகாரர் இல்லை என்று .
இதை தான் இல்லாத ஒன்று ...சிவா என்று சொன்னார்கள் நம் இந்திய காலாச்சாரத்தில்..[ நமக்கு தெரிந்த கலாசாரம்....ராத்திரி நேரத்து கலாச்சாரம் ....I mean ஒருவனுக்கு ஒருத்தி ]
சிவராத்திரி அன்று சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்துக்கு நேர் 7ம் வீட்டிலும்(கும்பம் ) ,சந்திரன் தன் சொந்த வீடான கடகத்தில் இருந்து நேர் 7 ம் வீட்டிலும்(மகரம் ) இருக்கும்.[நன்றி :ஸ்வாமி ஓம்கார்]
மனம் (சந்திரன்) மெதுவாக நகர்ந்து ஆத்மா (சூரியனிடம் ) ஒடுங்குகிறது இந்த இரவு .
சிவராத்திரிக்கு அடுத்த நாள் அம்மாவாசை .
இது இந்த வருடம் 3-03-2011 இரவு நடக்கிறது .
இந்த இரவு நாம் தளர்வாக உடலை வைத்து கொண்டு மனதை கவனித்தபடி விழிப்புடன் இருந்தால் நல்லது.
கோவிலுக்கு செல்வது ஒரு விதத்தில் நல்லது .செல்லாமல் இருப்பது மிக நல்லது .
இதை நாம் காலியான இடம் ,மொட்டை மாடி போன்ற காற்றோட்டமான இடத்தில செய்வது மிக மிக நல்லது.
நாமும் விழிப்புணர்வு பெற ராத்திரி நேரத்து கலாச்சாரத்தை முயற்சிப்போம் :)
சிவ ராத்திரி தின வாழ்த்துக்கள் ...:)
Subscribe to:
Posts (Atom)