பாவம் பங்காரு அடிகளார் ஊருக்கெல்லாம் அருள் வாக்கு சொல்ல அவருக்கு நாம அருள் வாக்கு சொல்ற மாதிரி ஆயிருச்சு. அவரோட 71 ஆவது பிறந்த நாளை பத்தி சில வரிகள் சொல்லிட்டு அப்பாறம் நீதிமன்ற அவமதிப்பு மேட்டருக்கு போகலாம். ( ஆக்கப்பொறுத்தவுக ஆற பொறுக்கனுமப்பு).
இவரோட பிறந்த தேதி 3/3/1941. எண் கணிதப்படி பிறப்பு எண்/உயிர் எண்ணும் 3 . கூட்டு எண்/ஸ்தூல எண்ணும் 3.இதுக்கு அதிபதி குரு. இப்ப 71 ஆவது வருஷத்துல அடியெடுத்து வச்சிருக்காரு. 7+1 என்றால் 8 . இதுக்கு அதிபதி சனி.
குரு சனி சேர்ந்தா குரு சண்டாள யோகம். குருன்னா கோர்ட்டு .சனின்னா பிரச்சினை. பாவம் பிறந்த நாள் விளம்பரத்துலயே இம்சை ஸ்டார்ட்.
வீ.இளங்கோ என்ற பாடலாசிரியர் ( இவரை உங்கள்ள ஆருக்குனா தெரியுங்களாண்ணா- ஒரு வேளை மேல்மருவத்தூர் சீரியல்/லோ பட்ஜெட் படத்துக்கு எழுதினவரோ?) அடிகளார் பிறந்த நாளைக்கு மாலை மலர்ல ஒரு விளம்பரம் கொடுத்திருக்காரு படத்தை பாருங்க.
மத்த பாயிண்டெல்லாம் "ஏதோ பிசினஸ் டல்லாயிருச்சு .. கேன்வாஸ் பண்றாய்ங்கனு வச்சிக்கலாம்" ஆனால் நான் ரவுண்ட் பண்ண வரிய பாருங்க..
நீதிபதிகள் உன்னை நாடிய பின் நீதியரசர்கள். அடங்கொய்யால. நீதிபதிகளை ஆரு நியமிக்கிறாய்ங்கனு கூட தெரியலை.விளம்பரம் கொடுத்த பார்ட்டி BE LLB படிச்சிருக்கு.
பாவம் நம்ம ராசாவுக்கு மேட்டர் தெரியாது போல. தெரிஞ்சிருந்தா அடிகளாரை நாடி நீதியரசராயிருப்பாரோ என்னமோ? அ நியாயத்துக்கு திஹார் ஜெயில்ல பப்பு யாதவ் அறை கிடைக்குமான்னு ஜொள்ளு விட்டுக்கினு கீறாரு.
என்னதான் விளம்பரம்னாலும் எந்த பிதற்றலையும் போட்டுர்ரதா ? இந்த பதிவு வேலையில்லாத ஒரு லாயர் கண்ணுல விழுந்து ஒரு மனுவை தட்டிவிட்டா அடிகளார் மேல நீதிமன்ற அவமதிப்பு கேஸ் பாயாதோ?
அட ..எப்படியும் நம்ம ஜாதகத்துல குரு உச்சம். தப்பித்தவறி ஆராச்சும் நீதிபதியோட மகன்/பேரன் ஆராச்சும் பார்த்து போட்டு கொடுத்துட்டா ஆப்புதான் மாப்பேய்..