Showing posts with label அவள். Show all posts
Showing posts with label அவள். Show all posts

Friday, April 18, 2014

அவளுக்கு ஒரு கடிதம்

தாயே ஒரு தரம் எண்ணிப்பார்!
வேறு யார்தான் உன்னை மன்னிப்பார்
பாரதி முதலாய் பாரதத்திலே பாவலர்
வாழ்வை வதைத்திட்டய்
உயிருடன் அவரை புதைத்திட்டாய்
சுடர்மிகு அறிவு தந்திட்டாய்
இடர் பல வாழ்வில் கலந்திட்டாய்

வறுமையொன்றால் என் உயிரை
தாயே நீயும் குடிக்கின்றாய்.
வறுமை ஒழிக்க களம் புகுந்தால்.
வறுமை மேலெனும் நிலை தந்தாய்
பாட்டால் உன்னை பூசிக்கும்
நிலை தந்தாய் நான் மகிழ்கிறேன்.
உன்னையன்றி திக்காரு...
என் மதியில வந்து உட்காரு.

Sunday, August 21, 2011

அவன் அவள் அது :19


கடந்த பதிவில் ஒரு நிருபனை பற்றி சொல்லியிருந்தேன்.அவன் எந்த அளவுக்கு சாலாக்கான பேர்வழி, பவர் ஃபுல் பர்சன்னு ரெண்டு உதாரணங்கள் மூலமா சொன்னாத்தான் அவனோட மோதினது ஏறக்குறைய தற்கொலை முயற்சி மாதிரிங்கறது உங்களுக்கு புரியும்.

உதாரணம்:1

நம்ம ஊர்ல நம்ம சாதிக்குன்னு ஒரு சங்கம் உண்டு.( எல்லா ஊர்லயும் இதே செனேரியோல தான் சாதி சங்கங்கள் இருக்கும்னு சம்சயம்) சங்கம் பத்தி சொல்ல ஆரம்பிச்சா அகில உலக முதலியார் சங்கம் ஃபத்வா வெளியிடுமோ என்னவோ? ஆமாங்க ஏ.சி அண்ணன் எப்படி இருக்காரு. சத்தத்தையே காணோமே.
அந்த சங்கத்துல ஒரு ஃபுல்டைமர். ஃபைனான்சியலா ஷெட். பஜார்ல ஒரு லட்சம் அட்வான்ஸ், அஞ்சாயிரம் ரூவா வாடகை பெறுமானமுள்ள கடையை பிடிச்சுக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தாரு. அதை வேற ஒரு பார்ட்டி வாங்கிருச்சு. ( அந்த கடையோட இன்னம் நாலு க்டை சேர்த்து)

சங்கத்து ஃபுல்டைமர் உனக்கும் பெப்பே உங்க தாத்தனுக்கும் பெப்பேன்னு கோர்ட்டை வச்சுக்கிட்டு ஃபிலிம் காட்டிக்கினு இருந்தாரு. அப்பம் கேஸு நம்ம நிருபர் திலகம் டேபிளுக்கு போச்சு.

சங்கம் ஒன்னும் அந்த அளவுக்கு டம்மியில்லை. வெள்ளையும் சள்ளையுமா ஸ்டேஷன்ல போய் உட்கார்ந்து பேசற ரேஞ்சுதேன்.

நம்ம நிருபர் திலகம் என்ன பண்ணாரு தெரீமா.ஒரு மழை நாளா பார்த்து டி.எஸ்.பி ரேஞ்சுல அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பாடு பண்ணி டிப்பரை அனுப்பி ஃபுல்டைமரோட கடைய ச்சொம்மா எத்திவிட்டுட்டாரு.

சங்கம், சாதி சனம் தலைகீழ நின்னு என்னென்னமோ பண்ணாலும் நம்ம நிருபர் திலகம் தனி ஒரு ஆளா நின்னு மேனேஜ் பண்ணிட்டாரு.

உதாரணம் 2:

நிருபர் லேட்டஸ்டா வேலைக்கு சேர்ந்த ஆந்திரபிரபாவுலயும் விளம்பர பணத்தை இஷ்டாத்துக்கு வேட்டு விட்டுட்டாரு. பெரிய்ய அமவுண்டு.ஹைதராபாத்லருந்து ஏடிவிடி மேனேஜரும் -திருப்பதிலருந்து ஏடிவிடி ரிஜினல் மேனேஜரும் சித்தூர் வந்திருக்காய்ங்க.

நிருபருக்கு ஃபோன் பண்ணா மதியம் வரை இங்க இருக்கன் அங்க இருக்கன் ஃபிலிம் காட்டியிருக்கான். கடேசியில வீட்டுக்கு வந்துட்டன் வாங்கன்னுருக்கான்.

ரெண்டு மேனேஜரும் போயிருக்காய்ங்க. ஏதோ டைம் கொடுத்து வார்ன் பண்ணாப்ல இருக்கு. அவ்ளதேன். நம்மாளு நேர போயி என் பொஞ்சாதி கைய பிடிச்சு இழுத்துட்டாய்ங்கன்னு டி.எஸ்.பி கிட்டே கம்பெயிண்ட் பண்ணிட்டான். (2003) இந்த கேஸு இன்னிக்குவரை நடந்துக்கிட்டுதான் இருக்கு. நிருபர் திலகம் மட்டும் தன் பாவம் பழுத்து (புழுத்து) தலைமறைவா இருக்காரு. இத்தனைக்கு பிறகும் அதே பத்திரிக்கையில ஸ்டாஃபரா தொடரும்போதுதேன் நாம ஆருக்கு ஓட்டுப்போடனும் கமாண்ட் பண்ணான்.

நாம வெளிய வந்து ஆந்திரபிரபாவுக்கு அன்றைய நியூஸ் ஃபேக்ஸ் செய்து - நடந்த விஷயத்தை சுருக்கமா சொல்லி - என்னை ஆந்திரபிரபாவுக்கு கொண்டு வந்தது அந்தாளு -அவன் கெட் அவுட்டுன்னிட்டான் - அதனால நான் நிருபனா இல்லையான்னு டிசைட் பண்ணுங்கன்னுட்டு இன்னொரு ஃபேக்ஸும் கொடுத்தேன்.

அதே ஃபேக்ஸ் நெம்பர்ல மேனேஜர் லைனுக்கு வந்து " கொய்யால நீ தான் ரிப்போர்ட்டர். அவன் ரிப்போர்ட்டரா இல்லையான்னு நான் சித்தூர் வந்து டிசைட் பண்றேன்னுட்டாரு.

அப்போ ஆந்திரபிரபா நிதி நிலை ரெம்ப மோசம். (எக்ஸ்பிரஸ் க்ரூப்புலருந்து வெளிய வந்துருச்சு) மேனேஜர் சித்தூர் வந்தாரு. நம்ம ப்ளஸ் ( எழுத்துத்திறமை / கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்) மைனஸ்
( விளம்பர சேகரிப்பு ) எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு.. ...........

கொய்யால இனி இந்த ஆஃபீஸ் -பவர் -ஃபோன் எந்த மசுரும் தேவையில்லை. இதுக்கெல்லாம் ஆவற செலவை உனக்கு சம்பளமா தரேன்னுட்டு ஆஃபீஸ் ஃபர்னிச்சர்ஸ் - கம்ப்யூட்டர் எல்லாத்தையும் லாரி சர்வீஸ்ல திருப்பதிக்கு புக் பண்ணிட்டுத்தான் போனாரு.

நம்ம நிருபர்திலகம் என்ன பண்ணாரு தெரீமா? ஆஃபீஸ்ல தன்னோட(?) டேபிள் ட்ராயர்ல டைமண்ட்ஸ், கரன்சி , ஃபாரின் செல்ஃபோன்லாம் வச்சிருந்ததாவும் அதையெல்லாம் மேனேஜர் + ஏடிவிடி மேனேஜர்+ சித்தூர் முருகேசன் என்ற மூவர் ஆட்டைய பொட்டுட்டதாவும் சித்தூர் கிரைம் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் ஃபைல் செய்தாரு..

சி.ஐ .அனுப்பினதா ஒரு ஏட்டு நம்ம வீட்டுக்கு வந்து சி.ஐ.கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னதா இஷ்டத்துக்கு அலப்பறை பண்ணாரு.

இந்த சிச்சுவேஷன்ல ஆத்தா நமக்கு எப்படி துணை நின்னாங்கறதை அடுத்த பதிவுல சொல்றேன். -















Friday, August 19, 2011

அவன் அவள் அது: 17


இந்த தொடரை எழுத ஆரம்பிச்சதால ஆத்தாவுக்கும் நமக்கும் உள்ள கனெக்சன் தீட்டப்பட்டதா சொன்னேன். கனெக்சன் தீட்டப்பட்டுருச்சுங்கறதுக்கு ஆதாரம் இந்த லேட்டஸ்ட் சம்பவம்.

ஆத்தாவுக்காக நாம தெலுங்குல எழுதின கவிதைகளை வலை ஏற்ற ஜகத் சோம்பேறியும் - அந்த கால டைப்ரைட்டிங் ஹையர் பாஸ் கேஸுமான பார்ட்டிக்கு ஆப்பரேஷன் அம்ப பலுக்குவிற்காகவே ஒரு கம்ப்யூட்டரை கொடுத்துட்டு வந்ததா சொல்லியிருந்தேன்.

அவனும் நம்ம ஏஜ் க்ரூப்தான் இருந்தாலும் டிகிரி இன் கம்ப்ளீட்டாகி - அன் எம்ப்ளாய்டாவே துவங்கி - அப்பன் சொன்ன பொண்ணை கண்ணாலம் கட்டி அப்பன் கேர் ஆஃப்லயே சேஃப்டி ஜோன்லயே காலம் கழிக்கிறதால ஒரு வித மசபசப்பு உண்டு.

இவன் எந்த காலத்துக்கு அடிச்சு (கவிதைய சொன்னேங்க) நான் எந்த காலத்துக்கு வலை ஏத்தறதுன்னு பேதியாகி கிடந்தப்போ நம்மளோட இன்னொரு க்ளாஸ்மெட் கார்த்தி எனக்கும் கொஞ்சமா கொடுப்பான்னு அடிச்சுதரேன்னு சொன்னாரு. இதையும் கடந்த பதிவுல சொல்லியாச்சு.

இப்பம் அப்டேட் என்னடான்னா சிஸ்டத்தை கொண்டு வச்சுட்டு வந்த மறு நாளே அந்த மச மச ஒரு குண்டை தூக்கி போட்டான். குண்டு அவனோட வார்த்தைகளிலேயே

// என் பையன் அரசு கல்லூரியில ................. கோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருந்தான். நாங்க கவுன்சிலிங் போற அவசரத்துல இன்கம் சர்ட்டிஃபிகேட் வாங்க ட்ரை பண்ணோம்.

வருவாய்த்துறை பிரகஸ்பதிகள் என் பேரை போடாம என் பையன் பேரையே அடிச்சு விட்டுட்டாய்ங்க போல . நாங்களும் தூக்கிக்கினு போயிட்டம். ஆனால் கவுன்சிலிங்குக்கு இன்கம் சர்ட்டிஃபிக்கேட் எல்லாம் தேவையில்லைன்னு கல்லூரி சைட்ல சொல்லிட்டாய்ங்க.

ஆனா ..சீட் அல்லாட்மெண்ட்ல இன் கம் சர்ட்டிஃபிக்கேட் வைக்காததால அடிஷ்னலா ரூ.31 ஆயிரம் கட்டுரான்னிட்டு காயிதம் வந்துருச்சு.. //

சாதாரண / நார்மலான ஆட்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி( பணத்தை பத்தி சொல்லலை - பிரச்சினைய பத்தி சொல்றேன்) அடுத்து என்ன செய்யலாம்னு ரோசிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ஆனால் நம்மாளு கொலாப்ஸ் ஆயிட்டிருந்தான்.

ஏதோ ஒரு 3 ஆயிரம் குறையுதுப்பான்னா கொடுத்துரலாம்.ரூ.31 ஆயிரத்துக்கு எங்கே போவம்? கையறு நிலையயும் - நம்மால முடிஞ்ச யோசனைகளையும் சொல்லிட்டு வந்துட்டம்.இனி வலையேற்றமாவது மசுராவது .குடலேற்றம்தான்னு முடிவே பண்ணியாச்சு.

இருந்தாலும் மைண்டுல ஒரு நப்பாசை. ஆத்தா நினைச்சா இதெல்லாம் ஜுஜுபி. ஆனால் நினைக்கனுமே..

ரெண்டு நா கேப் கொடுத்துட்டு "ச்சொம்மா வேடிக்கை பார்ப்போம்'னு அவனை பார்க்க போயிருந்தேன். நாம கொடுத்த ரோசனையை செயல்படுத்தாம - எந்த பெரிய மன்சனோட ரெக்கமெண்டேஷனுமில்லாம இவிகளோட ஃபோன் நச்சரிப்புக்கு ரெஸ்பாண்ட் ஆகி - ஹ்யுமேனிட்டேரியன் கன்சிடரேஷன்ல காலேஜ் காரவுக ரூ.31 ஆயிரத்தை வஜா பண்ணிட்டாய்ங்களாம்.

பார்ட்டிக்கு ஒரே குஜிலி ." உன் ஆத்தாதான் அவன் மனசை மாத்தியிருக்கனும்.மொதல்ல இன்னா அலட்சியமா பேசினான் தெரியுமான்னு ஆரம்பிச்சு அந்த டெலிஃபோன் உரையாடல்களையெல்லாம் விவரிக்க ஆரம்பிக்க புல்லரிச்சு போயிட்டன்...




Wednesday, August 10, 2011

அவன் அவள் அது : 12


அடிக்கடி ஆத்தா பார்த்துப்பா -அம்பாள் பார்த்துப்பான்னு நாம ஃபிலிம் காட்டறதா சிலர்/பலர் நம்மை தப்பா நினைச்சிருப்பாய்ங்க. கொய்யால எவந்தான் அம்மன் பேரை சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சுப்பான்னு கடுப்பாகியிருப்பாய்ங்க .அவிகளுக்கெல்லாம் ஒரு க்ளேரிஃபிகேஷன் தந்தாப்லயும் இருக்கும் - நமக்கும் ஒரு மலரும் நினைவுகளா இருக்கட்டும்னு அவன் -அவள் -அது என்ற தலைப்பில் ஒரு தொடரை ஆரம்பிச்சோம். இடையில டீல்ல விட்டுட்டம். அப்பாறம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரெண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிச்சோம்.

இந்த அம்மன் பிசினஸ்ல தலை கொடுக்க முக்கியமான காரணம் அவளை நாட எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயமும் தேவையில்லைங்கற ரிலேக்சேஷன் தேன். நாமதேன் விதிகளுக்கு அடங்காத விதிவிலக்காச்சே.(எங்க பக்கத்துல அர்ரா கட்டைனு சொல்வாய்ங்க - ஆமா இதுக்கென்ன அருத்தம்?)

நாம ஒன்னும் இமய மலைக்கு போய் தபஸ் எல்லாம் பண்ணலை. நாம ஒன்னும் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு இல்லை. ஆனாலும் ஜா.ரா மாதிரி ஆட்களோட கம்பேர் பண்ணிக்கிட்டோ என்னவோ ஆத்தாவே நம்மை "சரி இப்படி ஒரு கேரக்டரும் இருக்கட்டும்"னு தன் சபையில சேர்த்துக்கிட்டா.

நம்ம யோகி சார் நம்ம அனுபவங்களை படிச்சுட்டு " பார்த்துங்க ..இதெல்லாம் எதுனா யட்சிணி வேலையா இருக்கப்போகுதுன்னு பேதிக்கு கொடுக்கிறாரு." நம்ம கையில சனி மேடு பள்ளத்துல இருந்தாலும் அதுல ஒரு சதுரக்குறியும் , புத்தி ரேகைக்கு கீழே நேஷ்னல் ஹைவே கணக்கா சனி ரேகையும் இருக்குதுங்ணா.

1967 ,ஆகஸ்ட் ,7 ஆம் தேதி காலை 6.10க்கு நாம பிறக்கிறோம்னா கரீட்டா நிமிசம் முந்தி அதாவது 6.09 க்கு பக்கத்து பெட்ல சந்தேகம் பிறந்துருச்சு. மேலும் நாம ராமகிருஷ்ண பரமஹம்சரோட வெறித்தனமான ஃபேன். ரிசர்வ் பேங்க் சேர்மனே செக் கொடுத்தா கூட பாஸ் ஆயிரும்லன்னு ஆரூடம் பார்க்கிற கேஸு. நம்ம ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு வளையம் வேற கீது. நம்ம ஜட்ஜிங் கரீட்டா இருக்கும். ( உணர்ச்சி வசப்படாம இருக்கிற வரை)

ரா.கி சொன்னாப்ல ஆரு சொன்னாலும் - ஆரு தந்தாலும் -அது காலணா கருத்தா இருந்தாலும் -காசா இருந்தாலும் அது செல்லுமா செலாவணியாகுமான்னு செக் பண்ணிட்டுத்தேன் ஆக்செப்ட் பண்ணுவம்.

இந்த காளியாத்தா ,மாரியாத்தா மாதிரி கேஸ்களே நம்மை பெருசா கவர்ரதில்லை . நம்ம ஊர்ல ஒரு பிரபலமான அம்மன் கோவில் இருக்கு. அங்கிட்டு போனா உள்ளாற போறது -கன்னத்துல போட்டுக்கறதுல்லாம் இருக்காது. கூட வந்தவுக போய்ட்டு வர்ரவரைக்கும் காம்பவுண்டுக்கு வெளிய இருந்து தம் போட்டுக்கிட்டே அந்த அம்மன் கிட்டே பேச்சு வார்த்தை நடத்துவம். அம்புட்டுதேன்.

நம்ம லட்சியத்தை ( 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம் -சிறப்பு ராணுவத்தை கொண்டு இந்திய நதிகளின் இணைப்பு) ஞா படுத்தினா ஆத்தாளே . வடிவேலும் ரேஞ்சுல " உஸ் .. உன்னை வச்சுக்கிட்டு என்னால முடி..யலடா..முடியலை" ன்னு பெருமூச்சு விடறாள். .யட்சிணி கிட்சிணியெல்லாம் நம்ம பக்கம் கூட திரும்பாது பாஸ். அலறி அடிச்சுக்கிட்டு ஓடிரும்.

சரி மேட்டருக்கு வருவம். ( இது மஸ்தா பேரு சொல்ற ஒழுங்கான தமிழ்ல இருக்கும்)

ஒவ்வொரு உயிருக்கும் பின்னால் ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. அதை உணர்வதும்,வளர்த்துக் கொள்வதும் சிலருக்கே சாத்தியமாகிறது.அந்த சிலரில் நானும் ஒருவன் என்று மிகுந்த தயக்கங்களுக்கு பிறகு தான் சொல்ல முடிகிறது.

விட்ட குறை தொட்ட குறை கணக்காக கடந்த பிறவிகளின் சாதனை காரணமாக தெய்வம் ஒரு சிலர் பின்னால் அலைகிறது. உங்க பேர்ல பெரிய அமவுண்டுக்கு ஒரு வங்கியில மெச்சூர்ட் எஃப்.டி இருக்குன்னு வைங்க. மெச்சூரிட்டி டேட்டுக்கு ஒரு வாரம் முந்தியே மேனேஜர் உங்க பின்னாடி அலைவாரு. முடிஞ்சவரை ரென்யூவல் பண்ண வைக்க. அல்லது வட்டியை ரெக்கரிங் டெப்பாசிட்டா மாத்த. ஆனால் தெய்வங்கள் இந்த விஷயத்துல ரெம்பவே ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட்.

தாங்கள் ஏதோ மனிதர்களுக்கு ` கடன் பட்டுவிட்டதை போல ஃபீலிங்கோட உங்க பின்னாடியே அலையும். நம்ம சனங்க அந்த தெய்வீக சக்தியை பிற்காலத்துல தலைக்கு தீம்பா முடியக்கூடிய காதல் வெற்றிக்காகவோ - நெக்லஸுக்காகவோ - ஃபாரின் சான்ஸுக்காகவோ உபயோகிச்சுர்ராய்ங்க.

இந்த ஆத்தா மேட்டரு நமக்கு ஒர்க் அவுட் ஆகவும் இது போன்ற காரணம்தான் இருக்கனும். இல்லாட்டி நம்மை மாதிரி பார்ட்டிக்கு ஆத்தா துணை நிக்கறதாவது.

துணைன்னா நமக்கு பாசிட்டிவா ஒர்க் அவுட் ஆறது பெருசா ஏதுமில்லைன்னாலும் நம்மை இன்சல்ட் பண்றவுகளுக்கு அவள் கொடுக்கிற தண்டை இருக்கே வேண்டான்டா சாமி..

என் இளைய நண்பர்களுள் ஒருவன். குடும்ப சொத்தான லாட்ஜு ஒன்றை நிர்வகித்து வந்தான் .அதில் சினிமா தியேட்டர் கவுண்டர் அளவில் ஒரு அறை உண்டு. அதில் காலாவதியான நாற்றம் பிடித்த மெத்தைகள்,தலையனைகளை போட்டு வைப்பது வழக்கம். அதில் என்னை பிராக்டீசு (ஜோதிட ஆலோசனை)செய்து கொள்ளும்படி கோரி வந்தான். நானும் ஒரு பலவீன கணத்தில் ஒப்பி ஆரம்பித்து விட்டேன்.

பையன் என்னவோ நல்லவந்தேன்.ஆனால் அவிக குடும்பத்தார் பார்வையில ஜீரோ. அந்த லாட்ஜு அவிக சொத்துக்கள்ளயே பனிஷ்மெண்ட் ஏரியா மாதிரி.

நாமளும் நம்மோட மணி ,மந்திர,வைத்திய சேகரங்களையெல்லாம் அவன்+ அவன் லாட்ஜு டெவலப்மெண்டுக்கு தத்தம் பண்ணிக்கிட்டுத்தான் இருந்தோம். அது ஒரு ரேஞ்சுக்கு வந்ததும் அவன் தந்தை அறையை (?) காலி செய்து விடும்படி கூறிவிட்டார். இ.நண்பனாலயும் பெரிதாய் அதை தடுக்க முடியலை.

ஞானிகள் நாயை போன்றவர்கள்போன்றவர்கள் என்று இன்று ஒரு தகவலில் கேட்டதாய் ஞாபகம். நாயை அடித்துக் கொண்டே இருந்தாலும் மறுபடி மறுபடி தேடி வருமாம் , ஒரேயடியாய் அடித்து விரட்டி விட்டால் மறுபடி அந்த பக்கம் திரும்பாதாம்.நான் ஞானியல்லாவிட்டாலும் ஞானியாக நடிப்பவன்.(நடிப்பும் ஒரு நாள் நிஜமாகிவிடும் வாரியார் சொன்ன சலவை தொழிலாளி கதை போல) நான் விலகி விட்டேன்.

சில தினங்களிலேயே அந்த இ.நண்பனின் 50 ஆயிரம் ரூபாய் வண்டியும்,அதை ஒட்டிச் சென்றவனும் காலி. இதையடுத்து சில பல தினங்களில் கிட்னாப்புக்கும் ஆளானான். அதெல்லாம் பெரிய கூத்து.

இப்போதும் நான் அவனையோ ,அவன் தந்தையையோ நீங்கள் வெ.பாக்கு கொடுத்து அழைத்து ,துப்பி அனுப்பியது நியாயமில்லை என்று கூறவில்லை.நியாயமா என்றும் கேட்கவில்லை.

நான் என்னவோ அந்த வெளியேற்றத்துக்கு பிறகு வாழ்வில் முதல் முறையாய் கு.பட்சம் உலகத்தின் பார்வையில் கவுரவமான வேலை பெற்று (வேறென்ன தினத்தந்தியில் நிருபர்) மாதம் ரூ.3000 சம்பளத்துல புது லைஃபை ஆரம்பிச்சுட்டேன்.

இதில் நண்பனின் தந்தைக்கு ஒரு இழவும் நஷ்டமில்லை. இதிலிருந்து நான் அறிந்து கொண்ட ரகசியம் பாவம் செய்பவனை விட அதை தடுக்காதவனுக்குத் தான் ஆத்தா உடனடி லாட்டரி போல் தண்டனை தருவாள் என்பதே)

இந்த தொடர்ல ஒவ்வொரு பதிவுலயும் ஆத்தாளின் அருள் வேட்டலுக்கான என் சாதனையையும் - அவள் அருளையும் பாலன்ஸ் பண்ணிக்கிட்டே வரேன். காரணம் .. இதையெல்லாம் படிச்சாவது நாலு பார்ட்டி சாதனையை ஆரம்பிச்சுராதாங்கற அல்ப்ப ஆசைதேன்.

Monday, August 8, 2011

அவன் அவள் அது : 11?


அண்ணே வணக்கம்ணே.. ஆத்தாவுக்கும் நமக்கும் எப்படி கனெக்சன் ஆச்சு - ஆத்தாளை நாம எப்படி அப்ரோச் பண்ணோம் -ஆத்தா நம்மை எப்படி அப்ரோச் பண்ணாள்?

நம்ம டீலிங் எப்படியிருந்தது -ஆத்தாவுக்கு நாம என்ன கொடுத்தோம் ஆத்தா நமக்கு என்னெல்லாம் கொடுத்தா கொடுத்துக்கிட்டிருக்காங்கறதை பத்தி ஒரு தொடர்பதிவு போட நினைச்சு ஆரம்பிச்சோம். அது ஏனோ எதுக்கோ எப்படியோ அப்படியே நின்னுப்போச்சு. ஆமை முட்டை வச்ச இடத்தை நினைச்சா அது பொரியுமாமே அதுமாதிரி ஆத்தா எங்கருந்தோ நம்மை ஆப்பரேட் பண்றாள். நாமளும் ஆடிக்கிட்டிருக்கோம்.

தொடரை எந்த லைன் அப்ல ஆரம்பிச்சோம்.எதுவரை வந்ததுனு கூட ஞா இல்லை. நாம என்ன வீக்லியில தொடரா எழுதறோம் சினாப்சிஸ் -வச்சுக்கிட்டு போன வாரம் என்ன எழுதினோம்னு பார்த்துக்கிட்டு எழுத .

பணம் காசு வர மந்திரம் கேட்டோம் - பீஜங்களின் தொகுப்பே தந்துட்டாய்ங்க. ஜெபிக்க ஆரம்பிச்சோம்.ஸ்தூலமா லெமன் - மஞ்ச தண்ணி (அப்பாறம் பட்டை லவுங்கம் சேர்ந்துக்கிச்சு)

உடுப்பி ஹோட்டல் சாப்பாடு கணக்கா இருக்கவேண்டிய சாப்பாட்ல தொடர்ந்து காரம் மஞ்ச தண்ணிய டேஸ்ட் பண்ணி பார்த்தா பயங்கர காரம். அப்பாறம் மஞ்ச தூள் ப்ராண்டை மாத்திட்டம்.

மஞ்ச தண்ணி வைக்க லேட்டானா ரத்த காயம் அ ருத்ர தாண்டவம். மேற்படி மந்திரத்துக்குரிய ஐ மீன் ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரிய அம்மன் பேரு புவனேஸ்வரி. முன் அனுமதியில்லாம இந்தம்மாவோட அந்தப்புரம் வ்ரை போய் தகவல் சொல்லும் அதிகாரம் படைச்சவுக ரெண்டு பேரு ஒருத்தர் ஆஞ்சனேயர். இன்னொருத்தர் கிளி முகம் கொண்ட ரிஷி (பேர் என்னங்கண்ணா? மறந்து போச்சு)

ஒரு நா ஒரு கிளி நம்ம போர்ஷனுக்குள்ள நுழைஞ்சுருச்சு.ஒரு 9 நாள் தங்கியிருந்துச்சு. நாம தியானம் பண்ணிக்கிட்டிருக்க ( ஐமீன் பீஜ ஜெபம்) பாம்பு வந்துருச்சு. எட்செட்ரா எல்லாம் சொல்லியிருப்பன்.

இந்த செனேரியோல நடந்த ஒரு சம்பவம் மட்டும் ரெம்ப த்ரில்லா இருக்கும். ஒரு இடைவெளிக்கப்புறம் இந்த தொடரை படிக்கிற உங்களுக்கும் ஒரு இன்வால்வ்மென்ட் வரும்.

அப்படியே நம்மை உரசிப்பார்க்கலாம்னு ஆருக்குனா எண்ணம் இருந்தா தயவு செய்து விட்டுரனும்னு தேன் அந்த சம்பவத்தை சொல்றேன். அனானி கமெண்ட் போடற பார்ட்டி என்னமோ அநியாயத்துக்கு "அவாளை" கோர்த்து விடுது.

அவாள்ளாம் ரெம்ப சென்சிட்டிவ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ங்கறாப்ல அவிக நம்மை உரசிப்பார்த்து மேட்டர் இன்னான்னு புரிஞ்சுக்கிட்டு ல்லாம் அபவுட் டர்ன் அடிச்சி பல காலம் ஆச்சு. மேலும் இழந்தவந்தேன் தலையில அடிச்சிக்கிட்டு அழுது கூப்பாடு போடுவானே தவிர அடிச்சுக்கிட்டு போனவன் கமுக்கமாதேன் இருப்பான்.இதை ஆருனா அந்த அனானிக்கு புரியறாப்ல சொல்லுங்க.

சரி சரி ஆத்தா மேட்டருக்கு வந்துர்ரன். வருசம் 2000 மாசம் ஜூனுக்கு பிறகான ஏதோ ஒரு மாசம். வாணியம்பாடியில அக்பர் கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு வந்துட்டம். தியாகய்யருக்கு உஞ்ச விருத்தி மாதிரி நமக்கு சோசியம். ஒரு நாளைக்கு அம்பதோஅறுவதோ கிடைச்சா போதும். ஒழுங்கு மரியாதையா கோட்டையில சேர்த்துட்டு நகர்வலம் ஆரம்பிச்சுருவம். நாட்டு நலன் நாடி சாக்ரடீஸ் கணக்கா இழுத்து வச்சு பேச ஆரம்பிச்சுருவம்.

அப்படி நகர்வலம் வரும்போது அங்கங்கே ஒவ்வொரு க்ரூப்ல டச் ஆயிருவம்.அப்படி ஒரு க்ரூப்ல டச் ஆன பார்ட்டியை பத்தி ஒரு அறிமுகம். நிறம் ரஜினிக்கு சாஸ்தி -வி.காந்துக்கு கம்மி. நடுத்தர உயரம். எப்பவும் இன்செர்ட் பண்ணின சட்டை. புதுசா சொந்த வீட்டை இடிச்சு கட்டவும் ஆரம்பிச்சிருந்தாப்ல. ஜாதகம்னா மிதுனலக்னம் 2 , 8 ல ராகு கேது.

எவனோ ஒரு கிரானைட் காரனுக்கு எதையோ சொல்லப்போக அது எக்குத்தப்பா ஒர்க் அவுட் ஆகி ஃபீஸு பத்தி கேட்டா ரூ500ல் ஆரம்பிச்சு பல ஆயிரம் வரை வாய்க்கு வந்ததை சொல்லுவாப்ல. நாம எதையும் கண்டுக்கறதில்லை. பயங்கர பீலா விடுவான்.இதுல நம்மையும் இழுத்துக்கறது "நாமல்லாம் நினைச்சா"ன்னு ஆரம்பிச்சு எதை எதையோ உளற வேண்டியது.

ஊரு விட்டு ஊருவந்த இளைப்பு களைப்பெல்லாம் தீர்ந்து க்ளாக் வைஸ் லைஃபுக்கு வந்துட்ட தைரியத்துல மார்க்கெட் சவுக்ல மாடியில லிஃப்ட் சைஸுல ஒரு ஆஃபீஸ் ரூம் ஒன்னு அமைய கடை விரிச்சுட்டம்.

அந்த சமயம் பார்த்து நம்ம கணிப்பு உண்மையாகி சி.எம் ஆன புரட்சி தலைவி ரெசிடென்ஸ்லருந்து ஒரு தேங்க்ஸ் கார்டு வந்தது. இந்த தகவல் தீயா பரவலின்னாலும் ஒரு மாதிரியா பரவிருச்சு. மேற்சொன்ன பார்ட்டி நம்ம ஆஃபீஸுக்கு வந்தான்.

வந்தவன் மொத நாள் ஒழுங்கு மரியாதையா ஜெ மேட்டர்ல சோசியம் பலிச்சதுக்கு வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிட்டான். ஆனா அடிக்கடி வர ஆரம்பிச்சவன் ஏதோ அவருதான் ஜெ ஜாதகத்தை கணிச்சு ஓரலா சொன்னாப்லயும் நாம ஏதோ படியெடுத்து அனுப்பினாப்லயும் உளறி கொட்ட ஆரம்பிச்சுட்டான்.

"கொய்யால ..மூடறா ரெண்டையும்" ங்கறதுக்கு ரெம்ப நேரம் பிடிக்காதுதான். ஆனால் அதென்னமோ ஒரு வித தயக்கம். எங்க பக்கத்துல மூ முலாஜானு சொல்வம்.அதை பார்த்து சகிச்சுக்கிட்டிருந்தன். போக போக அவன் வரவு பேச்செல்லாம் தலை மூசனையாயிருச்சு.

ஆத்தா என்னடி இது சோதனைன்னு புலம்பவே ஆரம்பிச்சுட்டன். ஆத்தா கொடுத்த தீர்ப்பு இருக்கே.யப்பா.. என்ன பிரச்சினையோ என்ன இழவோ விசாக பட்டினம் கடற்கரையில பிணமா ஒதுங்கினான் ஆசாமி.

ஏன்?ஏன்? ஏன்?னு பல ராத்திரி என்னை நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். உலக வாழ்க்கைங்கறது பத்து வட்டிக்கு வாங்கி செலவழிக்கிறாப்ல. ஆத்தா நேஷ்னலைஸ்ட் பேங்க் மாதிரி. குறைஞ்ச வட்டிக்கு ( என்ன கொஞ்சூண்டு பக்தி -விஸ்வாசம்) தர தான் காத்திருந்தும் -சனம் கொத்து பரோட்டா போடற பத்து வட்டிக்கே
அலை பாயறதை பார்த்து அரண்டு தன்னை அண்டினவுகளை தக்க வச்சுக்க தன் அருமை பெருமைய உணர்த்த எந்த ரேஞ்சுக்கு வேணா போயிர்ராங்கறது புரிஞ்சது.

இப்ப அனானி கமெண்ட் ஆசாமியையே எடுத்துக்கங்க. இப்பத்துக்கே ஆசனத்துலருந்து குடம் குடமா ரத்தம் கொட்டிக்கிட்டிருக்கும்.ஆனால் அந்த மன்சன் வீம்புக்காவ தன் சில்மிசத்தை தொடர்ந்துக்கிட்டே இருக்கான். இந்த கிராக்கியை எல்லாம் ஆஃப் பண்ணனும்னா விஜயகாந்த் மாதிரி ஆஃப் அடிக்கனுங்கற அவசியம் கூட இல்லை.ச்சொம்மா ஜுஜுபி.

கெட்டவனுக்கு நாம கெட்டவனாகி என்னத்த பண்ணிர முடியும்? ஆத்தா நினைச்சாள்னா வாய் வழியா கழியவும் -ஆசனம் வழியா திங்கவும் வச்சிருவா.அதையெல்லாம் நாம பண்ணனும்னா எத்தீனி ஆப்பரேஷன் பண்ணனும்.. அதெல்லாம் நடக்கிற கதையா? அதனாலதேன் ஃப்ரீயா உட்டாச்சு. நம்மால முடிஞ்ச எச்சரிக்கை எல்லாம் பண்ணியாச்சு. இனி நாம அம்பேல். தி பால் ஈஸ் இன் தி கோர்ட் ஆஃப் அம்பாள்.

Wednesday, March 30, 2011

அவன்-அவள்-அது

சிவசங்கரி எழுதின நாவல் ” ஒரு சிங்கம் முயலாகிறது” இதை சினிமாவா எடுத்தாய்ங்க ( சிவகுமார் ஸ்ரீப்ரியா)அந்த படத்தோட டைட்டில் இது. ஆனால் பாருங்க. இதுவும் “அவளை”தான் குறிக்குது. ‘

நம்ம மேட்டர்ல அவளோட லீலைகளை – நமக்கு காட்டின வேலைகளை எழுதினா ” ஹே.. இந்த ஆளு ரெம்பவே ஊத்தறான்யா”ன்னிருவிக. அவளோட சகவாசம்தான் இப்ப இந்த சுகவாசத்தை தந்திருக்குன்னு சப்ஜாடா நம்பறேன்.
அவளோட நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லே. இனி ஒருக்கா அப்படி ஒரு நிலைவந்தா நானே நிப்பேனானு சந்தேகம். அந்த அளவுக்கு ட்ராகுலா கணக்கா உறிஞ்சி எடுத்தாச்சு. ஆனால் அது ப்ளட் ட்ரான்ஸ்மிஷன் மாதிரின்னு இப்பத்தேன் புரியுது.  தொடர்ந்து படிக்க

Tuesday, March 29, 2011

பலான மேட்டரில் சில பிடிகளும் பிடிப்புகளும்

எச்சரிக்கை:
பிடின்னா பெண் யானைனு அர்த்தம். பேச்சு வழக்குல  "பிடி"ன்னா கேட்ச் .  பொருளை பிடிங்கறதுக்கும் பிடிதான். ஆளைப்பிடிங்கறதுக்கும் பிடிதான்.

ஆளைப்பிடிச்சு வேலைய முடினு சொல்றதுக்கும் "ஆளைப்பிடி"தான்.  நிலை தடுமாறிட்டிருக்கிற 'குடி"மகனை பிடிங்கறதுக்கும் பிடிதான்.

மல் யுத்தத்துல பிடிக்கு வேற அர்த்தம். பலான நேரத்து பிடி வேற.

எங்கயோ பிடிச்சிருக்குன்னா அது உடல் சாந்த  புகார். உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னா அது மனம் சார்ந்த நிலை.

பிடிப்புங்கற வார்த்தைக்கும் பல அர்த்தம் இருக்கு.

"என்னமோப்பா வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லாம போயிருச்சு"
"பிடிப்பு போக கைக்கு எவ்ளதான் வருது?"
"பிடிப்பு இல்லாம எப்படிப்பா கடன் கொடுத்தே?"

உணர்வு மொழியாக்கம் செய்யப்படும்போது எப்படியெல்லாம் அர்த்தம் மா ( நா) றிப்போயிடும்ங்கறதுக்கு இதெல்லாம் உதாரணம் (  வினோத்ஜி கவனிக்கனும்)
Read more

Monday, March 28, 2011

அவள்


எவளுக்குள்ளயும் ஆணினம்  அவளைத்தான் தேடுது. அவளைபத்தி சொன்னா பீலா விடறதா தோணும். லாலா போட்டு பினாத்தறதா தெரியும்.  மோகத்தை உண்டாக்குபவளும் அவளே மோகினி. பின் மோகத்திலிருந்து யோகத்துக்கு இழுத்து செல்பவளும் அவளே. யோகினி.

எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.

"அனாமிகா"ம்பாய்ங்க ( பேரில்லாதவள்) .அப்பாறம் பார்த்தா சஹஸ்ர நாம அர்ச்சனைம்பாய்ங்க. அவளே ஒரு புதிர். தர்கத்துக்கு எதிர்.

நம்ம ஈகோ ஒரு அல்பம். எதையெடுத்தாலும் லாஜிக் பார்க்கும். லாஜிக் பார்த்துதானே ஓட்டுப்போடறாய்ங்க. பின்ன ஏன் நம்ம ஆட்சியாளர்கள் எல்லாம் இப்படி இழவெடுக்கிறாய்ங்க.

முரண்பாடுகளின் மொத்த உருவம் அவள் .
ஒத்திசைவுகளின் பிறப்பிடமும் அவளே