Sunday, March 27, 2011

மனிதர்களை தேடி வரும் நிகழ்வுகள்

"போதுமென்ற மனமே பொன்செய் மருந்து". "இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு ஆசை படாதே", "ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்", பருகெடுதூ பாலு தாகடம் கன்னா கூர்ச்சுனி நீள்ளு தாகடம் மேலு  ( ஓடிக்கிட்டே பால் குடிக்கிறத விட உட்கார்ந்துக்கிட்டு தண்ணி குடிக்கிறது மேலுனு அர்த்தம்) (டாஸ் மாக் சரக்கு இல்லிங்கண்ணா)

இதெல்லாம் கையாலாகாதவங்க பேச்சாயிருச்சு. சாமியாருங்க கூட அத்தனைக்கும் ஆசைப்படுனு சொல்ற காலமாகிப்போச்சு.

"ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்"னு புத்தர் என்ன டாஸ்மாக் கடைல போதையிலயா சொன்னார்.போதிமரத்து கீழே ஞானம் பெற்றுச்சொன்னார். உன் ஆசையே உன் துன்பங்களுக்கு  காரணம்னு சொல்லலே. உன் ஆசையா என் ஆசையானு ஸ்பெஷலைஸ் பண்ணாம மொட்டையா உலக துன்பங்களுக்குன்னு ஆரம்பிக்கிறார்.

இதுல தான் சூட்சுமமிருக்கு. எவன் ஆசைப்பட்டாலும் அந்த ஆசை காத்துல வைரஸ் பரவின மாதிரி பரவுது.எவனாச்சும் நாலணா தலைவன் செத்தா ஜங்சன்ல  லாரி டயரை கொளுத்திவிட்டா அட்மாஸ்ஃபியர் பாழாகற மாதிரி எவனுடைய மனசுல ஆசைங்கற பொறி விழுந்து அது  கருக ஆரம்பிச்சாலும்  நூஸ்ஃபியர் பாழாகுது. ( மனிதர்களின் எண்ணங்களால் உருவாகிற சூழல்)

இயற்கையை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா எவனும் எதுக்கும் ஆசைப்படமாட்டான். இயற்கைக்குன்னு  ஒரு அஜெண்டா ( நிகழ்ச்சி நிரல்)  இருக்கு. அதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அதை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது.

உயிரில்லாத பொருட்கள்(அப்படினு நாமதான் நினைக்கிறோம்) முழுசாவும், ,ஐந்தறிவுள்ள பிராணிகள் ஓரளவுக்கும் எப்படியோ அந்த அஜெண்டாவை புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ப நடந்துக்குதுங்க. இயற்கையோட நிகழ்ச்சி நிரலுக்கு முழு திருப்தியோட  ஒத்துழைப்ப கொடுக்குதுங்க.

இந்த விதிப்படி பார்த்தா  நாமெல்லாம் மண்ணாந்தைங்க.Read More