Wednesday, November 17, 2010

பணம் பணம் பணம் : 2

பணத்தை புரிஞ்சிக்கிட்டா பணத்தை சம்பாதிக்கலாம் அ தத் .. இந்த மயித்துக்குத்தான் சம்பாதிக்கிறாய்ங்களானு விட்டுரலாம்.

இதுக்காகத்தான் இந்த தொடர்பதிவு.  பணம் பற்றிய டாக்டரேட் பட்டத்துக்குரிய என் தியரிய பதிவின் இறுதியில் தந்திருக்கேன். பொறுமையிருந்தா படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க..

ஓகே இப்ப பணம் குறித்த என் புரிதல் தொடர்கிறது..


13.பணம் கடவுளை கூட உயர்ந்தது. ஏன்னா கடவுளை பார்க்க முடியாது. பணத்தை கொண்டு கடவுளை கூட வாங்க (ட்ரை பண்ண)லாம்.

14.கடன் வாங்கினா அதுக்கு கட்டவேண்டியது வெறும் வட்டி மட்டுமில்லை..  நம்ம சுதந்திரத்தையும்தான். ஏழுமலையான் மட்டும் குபேரன் கிட்டே கடன் வாங்காம இருந்திருந்தா தாளி நம்ம உதவாக்கரை பிரார்த்தனையையெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலை வந்திருக்குமா?

15.பணம் நெருப்பு மாதிரி .ரெம்ப எட்ட நின்னா வறுமை குளிர் வாடும். ரெம்ப நெருங்கி நின்னா  பொசுங்கிருவம்.

16.எதையாவது சாதிக்க பணம் சம்பாதிச்சா புரிஞ்சிக்கலாம். சம்பாதிக்கறதுக்காகவே சம்பாதிச்சா ?

17.பணம் எப்படிப்பட்ட குரூபியையும் அழகனா /அழகியா மாத்தக்கூடிய ப்யூட்டிஷியன்


18.பணமிருந்தா வெளி மன்சாளுங்க நெருக்கமாவாய்ங்களோ என்னமோ சொந்த மன்சாள் மட்டும் தூரமாயிருவாய்ங்க. ( அப்படி நெருங்கியிருந்தான்னா அது போக்கத்த நாயினு அர்த்தம் ஏதோ ஒரு நா கடிச்சு வைக்கும்)

18.பணம் மூளைய கொண்டு யோசிக்கிற திறமைய தரும். ஆனால் இதயத்தை கொண்டு யோசிக்கிற மனிதாபிமானத்தை மண்ணாக்கிரும்.

19.பணம் இருக்கும்போதும், தொடர்ச்சிய வர்ரப்பயும் அது  குறித்த சிந்தனையே இருக்காது. அது குறித்த சிந்தனை இருக்கும் வரை பணம் வராது.

20.மனிதன் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மரணத்துக்கு முடிச்சிட்டு யோசிக்கிறான் ( நினைவிலி மனதில்) உ.ம் இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,ஏழ்மை,பசி,முதுமை .  இதெல்லாம் மரணத்தின் நிழல்கள். இதையெலாம் செயிக்கத்தான் பணம் தேடறான்.  மரணத்தின்  நிழல்களுடனான யுத்தத்துல வேணம்னா  பணம் கொஞ்சம் போல  தைரியத்தை தரலாம். ஆனால் அது மரணம் பற்றின அச்சத்தைதான் அதிகரிக்குது. அதை எதிர்காலம் குறித்த சிந்தனையா மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு புது புது  எல் ஐ சி பாலிசியா போடறோம்

21.எல்லார்க்கிட்டயும் பணம் இருக்கு. சிலர் கிட்ட பணமா இல்லை. ஆனால் பணமா மாத்தக்கூடிய எத்தனையோ சமாசாரம் ஒவ்வொரு மன்சன் கிட்டயும் இருக்கு. அதை ஐடென்டிஃபை பண்ணிக்கிட்ட ஏழை பணக்காரன் ஆகிறான்.

22.பணம் பலர் விஷயத்தில் தலை முடியெல்லாம் கொட்டிப்போன பின் கிடைக்கு சீப்பாய் இருக்கிறது

23.பணம் ஜஸ்ட்  ஒரு கருவி. அதை நாமதான் உபயோகிக்கனும். சனம் பணத்தின் கையில கருவியாயிர்ரதுதான் சோகம்.

24. நீங்க பணம் சம்பாதிக்கனும்னா உங்களை சுத்தி இருக்கிறவன்லாம் சம்பாதிச்சிட்டிருக்கனும். கு.ப சம்பாதிக்கனுங்கற துடிப்புல இருக்கனும்


எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு  செல்  அங்கஜீவி - அது கொழுத்து  செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங் எர்ரார் காரணமா புது ஜீவராசிகள்- குரங்கு குரங்குலருந்து மனிதன் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்தச்ச காலம் , தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது  -  ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு - ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு  மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

எல்லாம் கரீட்டுதான். ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு ஃபோபியா ஹ்யூமன் மைண்ட்ல இருக்கு(ங்கறது என் நம்பிக்கை)

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க  செக்ஸுக்கு சரண்டர் ஆயிர்ராய்ங்க.  மன்சங்களோட எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னாடி இருக்கிறது செக்ஸ் தான். செக்ஸுக்கு பின்னாடி இருக்கிறது கொலை+தற்கொலை வெறி.


ஆனால் பாருங்க நம்ம மதம்,பண்பாடு,கலாசாரம் எல்லாமே செக்ஸை ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. 

வாய்க்கால்ல ஓடற தண்ணிய தடை பண்ணா அது தேங்கற மாதிரியே தேங்கி எங்கே கரை பலகீனமா இருக்கோ அங்கே உடைச்சிக்கிட்டு பாஞ்சுரும். 

அதே மாதிரி மனித மனம் செக்ஸ் தடை பண்ணப்பட்டிருக்கறதால அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேடி பிடிச்சுக்குச்சு. அதான் பணம்.

செக்ஸ்ல கிடைக்கிறதெல்லாம்  பணத்துலயும் கிடைக்குது. உபரியா செக்ஸும் கிடைக்குது. அதனாலதான் சனம் பணம் பணம்னு  லோ லோனு அலையுது

குழந்தைக்கு தாய் முலைக்காம்பு மறுக்கப்பட்டா - சூப்பான் -சூப்பான் மறுக்கப்பட்டா  விரல் போட்டுக்கற மாதிரிதான் இதெல்லாம். 

அடங்கொய்யால முலைக்காம்புலயாச்சும் பால் கிடைக்கும், சூப்பான் மேலயாச்சும் சாக்ரின் பூச்சிருக்கும் எச்சில் பட்டா கொஞ்சமேனும் இனிப்பா இருக்கும். விரல்ல என்னங்கடா கீது?

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல்  பல்லுயிரா  மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள்  டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால்  அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்னா.. பணம் பணம்னு அலைஞ்சு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரம் பை.தனமா இல்லே?